புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை


   
   

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jul 31, 2010 4:34 am

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.



நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 12:32 am

EROS அமைப்பின் தலைவர் சங்கர் ராஜு பிரபாகரனை சந்தித்தார். லெபனானில் பயிற்சி. தங்குமிடம், உணவு இலவசம். ஒரு இலட்சம் செலவாகும். வருகிறீர்களா? என கேட்டார் சங்கர். பிரபாகரன் உமா மகேசுவரனையும் விஜயேந்திரனையும் அனுப்பி வைத்தார். பயிற்சி கொடுப்பது PLO அமைப்பு என்பதால், உபயோகமாக இருக்கும் என பிரபாகரன் நினைத்தார்.

போன வேகத்தில், இருவரும் திரும்பி வந்தனர். ஒரு புண்ணாக்கும் சொல்லித்தரவில்லை. பணமும் நேரமும் தான் வீண் என்றனர். பிரபாகரனால் பண விரயத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிரமப்பட்டு சேகரித்த
பணம். ஒரு இலட்ச ரூபாய். அப்போது மிகப் பெரிய அளவு. சங்கர் ராஜுவை தொடர்பு கொண்டார். அவர்கள் தங்கி இருந்த சமயம் தவிர மீதமுள்ள பணத்தை திருப்பித் தா எனக் கேட்டார். மாட்டேன் என்றது EROS.

இது போதாதென்று, மேலும் பிரபாகரனை ஆத்திரமூட்டும் செய்தி வந்து சேர்ந்தது. உமா மகேசுவரனுக்கும், ஊர்மிளாவுக்கும் காதல். இல்லை. அதற்க்கும் மேல். கல்யாணம் தான் ஆகவில்லையே தவிர கணவன் மனைவி போல் தான் இருவரும் வாழ்ந்தனர். உமா மகேசுவரன் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். ஊர்மிளா தன் கணவனை இழந்த ஓர் கைம்பெண். பிரபாகரன் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றார். ஊர்மிளாவா? நமது செய்திகளை வெளியிட உதவும் பெண்தானே? அவரைக் கொண்டுவந்ததும் உமா மகேசுவரன் தானே. அவரை எவ்வளவு பெரிய இடத்தில் வைத்திருந்தேன்? புதிதாக வந்தவருக்கு பெரிய பதவியா என என் காதுபட கூறியவர்களை புறந்தள்ளி அவரை வரவேற்றேனே. அதற்கு அவர் செய்யும் நன்றியா இது?

உமா மகேசுவரனை கூப்பிட்டு விசாரித்தார். ஊர்மிளாவா? காதலா? அப்படி ஏதும் எங்களுக்கிடையில் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். “பொய். இரண்டாவது தடவை தவறு செய்கிறாய் நண்பா. நான் தீர விசாரிக்காமல் சந்தேகிக்க மாட்டேன். நீங்கள் இருவரும் இரவை பயன்படுத்தி காட்டுப்பகுதியில் செய்யும் சல்லாபங்களை பல போராளிகள் பார்த்துள்ளனர். நீ ஊர்மிளாவை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இயக்கத்தை விட்டு வெளியேறிவிடு. எங்களுக்கு தவறான முன்னுதாரணம் தேவையில்லை.”

இலண்டனில் இருந்து அழைப்பு வந்தது. உமா மகேசுவரனுக்காக பரிந்துரை. விடுங்கள் பிரபாகரன். உமா என்ன இராஜ துரோகமா செய்துவிட்டார்? காதல் தானே. ஆன்ரன் பாலசிங்கம் தன் மனைவியை அழைத்துக் கொண்டு இலண்டனிலிருந்து வந்து சேர்ந்தார். அப்போது தான் முதன்முறையாக பிரபாகரனை சந்திக்கிறார். பாலா அண்ணனின் கையை இறுக்கமாக பற்றி குழுக்கினார், பிரபாகரன்.

சே குவேரா பற்றியும், மா சே துங் பற்றியும் விவாதித்தனர். பின் பாலசிங்கம் அவர்கள் உமாவின் விவகாரத்தை ஆரம்பித்தார். பிரபாகரன் திட்டவட்டமாக கூறிவிட்டார். “நான் காதலை எதிர்ப்பதில்லை. அது அனைத்து உயிரினத்துக்கும் வருவது தான். மனிதன் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால், காதல் பெயரால் சல்லாபிப்பதைத் தான் எதிர்க்கிறேன். அவர்களை வைத்திருந்தால், மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும். அது இந்த இயக்கத்தின் கட்டுக்கோப்பை அழித்துவிடும்.”

1980ம் ஆண்டு உமா மகேசுவரன் நீக்கப்பட்டார். இயக்கத்தில் முதல் பிளவு. உமா மகேசுவரனின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு எதிராக செயல்பட்டனர். பிரபாகரன் மீது உமா மகேசுவரன் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். LTTE யில் சனநாயகமே இல்லை. எல்லா முடிவுகளையும் பிரபாகரனே எடுக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆமாம் போடுவது மட்டுமே எங்களது பணி. சுருக்கமாக சொல்வதானால், அவர் ஒரு சர்வாதிகாரி.

”பிரபாகரன் இதனை எல்லாம் மறுக்கவில்லை. நான் சர்வாதிகாரி தான். நான் தான் முடிவுகளை எடுப்பேன். சம்மதிப்பவர்கள் மட்டும் இயக்கத்தில் இருந்தால் போதுமானது”. என்றார் பிரபாகரன்.

வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் மத்திய கமிட்டி அடுத்தடுத்து சந்தித்துத் கொண்டது. பேசாமல் LTTEயை மக்கள் இயக்கமாக மாற்றிவிடலாமா? என்றார் ஒருவர். சரி. நான் வருகிறேன். பிரபாகரன் வெளியேறினார். தலைமையிலிருந்து. கமிட்டியிலிருந்து. LTTEயிலிருந்து.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 12:36 am

தமிழ்நாட்டில் ஒரு பயிற்சி முகாமை அமைக்க வேண்டும் என தங்கதுரையும் குட்டிமணியும் கேட்டவுடன் சம்மதித்தார் பிரபாகரன். மதுரைக்கு சென்று அங்கே ஒரு பயிற்சி முகாமை ஆரம்பித்தார். ஆயுத பயிற்சிகளும் அளித்தார். யாரோ ஒரு பிரிவு, ஏதோ ஒரு படைக்கு பயிற்சி அளித்து என்ன செய்ய போகிறேன்? என் படை, என் இயக்கம், என் வீரர்கள், என் மக்கள். எப்போது ஆரம்பிக்கப்போகிறேன்?

தனது நண்பர்களை தேடி அலைந்தார் பிரபாகரன். செல்லக்கிளி, கிட்டு, பேபி சுப்பிரமணி, ராகவன். ஒவ்வொருவரையும் சந்தித்து, நட்பை புதிப்பித்துக் கொண்டார். கிட்டுவின் உதவியுடன் கைத்துப்பாக்கியும் ரைஃபிலும் வாங்கிக் கொண்டார்.

ஆயுதங்கள் கிடைப்பதற்க்குள் உயிர் போய் வந்தது. பணம் வேண்டும். தக்க ஆட்கள் கிடைக்க வேண்டும். நம்பகமானவர்களாக அமைய வேண்டும். எல்லாம், முடிந்தபிறகு, கருவிகள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். பிரபாகரன் சலித்துப்போனார்.

”இனி நாம் ஆயுதங்கள் வாங்க வேண்டாம். நம் எதிரிகளின் ஆயுதங்களை பரிமுதல் செய்து பயன்படுத்துவோம்”.
என்றார் பிரபாகரன்


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 12:42 am

சாலை ஓரமாக நின்றுக் கொண்டு நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார் செட்டி பாலசிங்கம். அருகில் வந்து நிற்கும் சைக்கிளை அப்போது தான் கவனித்தார். உடல் நடுங்க, தன் பாக்கெட்டில் கைவிட்டு, துப்பாக்கியை எடுப்பதற்குள், அவனின் மார்புக்கு தோட்டாக்களை பரிசளித்தார் பிரபாகரன். செட்டி, போலீஸ் உளவாளி. காட்டிக் கொடுத்த முதல் துரோகி.

பிரபாகரன் தனது எல்.டி.டி.ஈ.யை மீள் கட்டுமானம் செய்துக் கொண்டிருந்த அதே நேரம், உமா மகேசுவரனும் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பித்தார். People’s Liberation organisation Of Tamil Eelam(PLOTE).
மார்ச் 1981-ல் இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய வங்கிக் கொள்ளை குட்டிமணியால் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகான 30 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் காட்டிலும், ஜெயவர்தனேவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம். முந்தைய ஆறு ஆட்சியாளர்கள் காலத்தில் நடந்த கொலைகளை விட, ஜெயவர்தனே காலத்தில் நடந்த கொலைகள் எண்ணிலடங்கா. போர்த்துகீசிய காலம் தொட்டு தொடர்ந்து நூறு ஆண்டுகளில் அழிக்கப்பட்ட கோயில்களை விட இவரின் காலத்தில் அழிக்கப்பட்ட கோயில்கள் அதிகம்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிகரம் வைத்தாற் போல், யாழ்ப்பாண நூலகத்தை சின்னாபின்னமாக்கி மகிழ்ந்தார். இது நடந்தது சூலை 1,1981-ல். விலை மதிப்பில்லாத 90,000 அரிய தமிழ்ப் புத்தகங்கள் தீயில் கருகிப்போயின. தமிழர்களுக்கு இனியும் சிங்களவருடன் இணைந்து வாழ இயலாது என திட்டவட்டமாக எடுத்துக் கூறிய நிகழ்ச்சி அது. தமிழர்களின் இன பற்றையும், தமிழ் உணர்வையும் வெகுவாக வெளிக்கொணர்ந்தது இந்த சம்பவம்.

சூலை 6ம் தேதி வேதாரணியத்தை நோக்கி படகில் சென்றுக் கொண்டிருந்தார் பிரபாகரன். தமிழர்களின் கலாச்சார தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாண நூலகம் கற்குவியலாக மாறியிருந்தது. தொன்மையான புத்தகங்களை தீயிலிட்டு கொளுத்த மனம் யாருக்காவது வருமா? நூல்களை அழித்துவிட்டால், அறிவு அழிந்து விடுமா?

ஜெயவர்தனே, தயாராக இரு.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 12:57 am

ஆகஸ்ட் 21,1981-ம் தேதி, சென்னையிலிருந்து தமிழின விரோத பத்திரிக்கையான தி இந்து வெளியிட்ட செய்தி இது.

‘கடந்த 15 நாட்களாக தமிழர்களைத் தேடி தேடி அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான எஸ்டேட்(தேயிலை) தொழிலாளர்கள்(இந்திய தமிழர்கள்) பாம்புகளும், விஷ பூச்சிகளும் நிறைந்த காட்டுப் பகுதிகள் வழியாக தப்பித்து வெளியேறுகின்றனர். குழந்தைகளையும் மூட்டை முடிச்சுகளையும் சுமந்து கொண்டு வரும் அந்த அகதிகளைப் பார்ப்பதற்க்கே பரிதாபமாக இருக்கிறது’.

சென்னை வளசரவாக்கத்தில், ஆன்ரன் பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கத்துடன் பிரபாகரன் தங்கியிருந்தார். பேபி சுப்பிரமணி, ரகு, ராகவன், சங்கர் உள்ளிட்ட இயக்கத்தினரும் அங்கேயே தங்கியிருந்தனர். உமா மகேசுவரனும் சென்னையில் தான் இருந்தார். தன் நண்பர் கண்ணனுடன் பாண்டி பஜாரில் ஓர் உணவகத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பிரபாகரன் அவரை பார்த்துவிட்டார்.

கண்ணன் உமாவை எச்சரிக்க, உமா தன் கைத்துப்பாக்கியை எடுப்பதற்குள், பிரபாகரன் சுட்டுவிட்டார். ஆனால், உமாவை அல்ல. கண்ணனை. ஆறு குண்டுகள் காலில் பாய்ந்திருந்தன. பிரபாகரனும் ராகவனும் ஓட ஆரம்பித்தனர். அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. கைத்துப்பாக்கி சென்னைக்கே புதிதான சமயம் அது. அதனால், பாண்டிபஜார் காவலர்கள் உடனே சம்பவ இடத்துக்கு சென்றனர். பிரபாகரனும் ராகவனும் அவர்களுக்கு அதிக சிரமம் தரவில்லை. அவர்கள் ஓடிக் கொண்டிருந்ததே பாண்டி பஜார் காவல் நிலையத்தை நோக்கித்தான். உமா மகேசுவரனும் கைது செய்யப்பட்டார்.

அவர்களை அமுக்கி பிடித்தது போலீஸ். அவர்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டனர். கரிகாலன் என்றார் பிரபாகரன். முகுந்தன் என்றார் உமா மகேசுவரன். எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே உங்கள் ஆவணங்கள்? விசாரணை தீவிரமானதும் விடை கிடைத்தது. பயந்து பின் வாங்கியது காவல்துறை. பிரபாகரனா? இவரா?

இலங்கை அரசுக்கு தகவல் சென்றது. ஜெயவர்தனே மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். அவர்களை இங்கே அனுப்புங்கள். பத்து இலட்சம் ரூபாய் தருகிறேன் என்றார். தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனை தொடர்பு கொண்டது காவல்துறை. என்ன செய்யலாம்? உத்தரவிடுங்கள்.

பசங்ககிட்ட பார்த்து நடந்துக்கோங்க என்றார் எம்.ஜி.ஆர்.


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 17, 2010 4:53 pm

வழிப்போக்கன் wrote:கட்டுரையை ஒரே திரியில் கொடுத்திடின் படிப்பது இலகுவாக இருக்கும் நண்பரே, நடத்துனர்கள் உதவிட வேண்டுகின்றேன்.

நடந்த வண்ணம் உள்ளது அன்பு அண்ணா இன்று முடியும் நன்றி

அன்புடன்
அப்புகுட்டி. நன்றி



தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 7 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 8:13 pm

இதை எப்படி செய்தீர்கள்?

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 8:23 pm

தமிழகம் முதல் தில்லி வரை உஷ்ணம் கூடியது. இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பிரபாகரனையும் அவரின் கூட்டாளிகளையும் என்ன செய்யப்போகிறது? 1973-ல் அப்போதைய முதல்வராக இருந்த இனத்துரோகி கருணாநிதி குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தான். ஆனால் எம்.ஜி.ஆர். எச்சரிக்கையுடன் செயல்பட விரும்பினார்.

பிரபாகரனை தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். அதைவிட, சிங்களர்கள் தமிழர்கள் மீது நடத்தும் வன்கொடுமைகளை அவர்கள் நன்கு அறிவார்கள். பிரபாகரனை விடுவிக்க வேண்டும் என்னும் கருத்து வலுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேடி சென்னை வந்தார். எதிர்கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்து உதவி நாடினார். கருணாநிதி இந்திராவை சந்தித்தார். பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் இலங்கையிடம் ஒப்படைத்தால், அவர்கள் நிச்சயம் கொல்லப்படுவார்கள், தமிழகத்தில் ஒரு உள்நாட்டு கலவரமே உருவாகும். ஆகவே நாம் யோசித்து செயல்படவேண்டும் என்றார்.

தமிழ்நாட்டின் அத்தனை பிரபலங்களையும் ஓடி ஓடிச் சந்தித்தார் பேபி சுப்பிரமணியம். பிரபாகரனை விடுவிக்காவிட்டால், எல்.ஐ.சி. மாடியிலிருந்து குதித்துவிடுவதாக கிட்டுவும் அவரது தோழர்களும் போராடினார்கள். பழ.நெடுமாறன் ஐயா, பட்டிணப்பாக்கத்துக்கு சென்று பிரபாகரனை சந்தித்து வந்தார். அப்போது அவர், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர். தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிப்பவர். பேபி சுப்பிரமணி இவரை நாடிச் சென்றதுக்கு இதுவே காரணம்.

இந்த இடத்தை நீங்கள் உற்று நோக்க வேண்டும். இந்திரா ஏன் புலிகளுக்கு உதவினார், ஆனால் பங்களாதேசுக்கு படைகளை அனுப்பி தனி நாடு அமைத்து கொடுத்ததைப் போல ஈழம் அமைய அவர் ஏன் உதவவில்லை என நன்கு புரியும். இந்திராவின் சூழ்ச்சி புரியும். இருவரையும் விடுவித்துவிடும் நிலைக்கு வந்து சேர்ந்தார் பிரதமர் இந்திரா காந்தி. காரணம்,

1) ஜெயவர்தனே அமெரிக்காவின் பக்கம் சாய்ந்துக் கொண்டிருந்தது.

2) திருகோணமலையில், அமெரிக்க படைகளுக்கு இடமளிக்க ஒப்புக் கொண்டிருந்தார் என ஒரு கேள்வி. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால் விடும் செயல்

3) இந்திரகாந்தி சோவியத்தின் ஆதரவாளராக இருந்த நேரமது. சோவியத்தின் எதிரி அமெரிக்கா. அந்நிலையில் இந்தியாவின் எதிரி அமெரிக்கா. இலங்கை, அமெரிக்காவின் பக்கம் சாயும் பட்சத்தில், இலங்கையும் இந்தியாவின் எதிரியே.

4) இசுரேல், பாக்கித்தான், சீனா மீது ஜெயவர்தனே தனி கவனம் செலுத்தினார்.
ஜெயவர்தனே அரசு பலவீனமடைய வேண்டுமானால் போராளி இயக்கங்களை வளர்த்துவிடுவது தான் ஒரே வழி. ஆனால் இந்திராவும் ஆரிய ஆதிக்கத்தின் வழி வந்தவராதலால், தமிழருக்கு தனி நாடு அமைய உதவவில்லை. மேலும் இந்தியாவிற்கு, தமிழ் ஈழம் மட்டுமே பாதுகாப்பு என சிறு பிள்ளைக்கும் தெரியக்கூடிய விடயத்தை அவர் புரிந்துக்கொள்ளவில்லை.

வழக்கு விசாரணைக்கு வந்தது. இருவருக்கும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். உமா மகேசுவரன், பெருஞ்சித்திரன் என்னும் தன் நண்பரின் இல்லத்தில் சென்னையில் தங்கிக் கொண்டார். பிரபாகரன், பழ.நெடுமாறன் ஐயாவுடன் திருச்சியில் தங்கினார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 8:29 pm

அமிர்தலிங்கம் சென்னை வந்தார். பிரபாகரன் அவரைப் பார்க்கச் சென்றார். அவர் சென்னை வந்ததற்கு ஒரே காரணம், உமா மகேசுவரனையும் பிரபாகரனையும் ஒன்று சேர்ப்பது. பிரபாகரனை உமா மகேசுவரனிடம் அழைத்துப் போனார். ஆனால் இருவரும் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இருவரும் ஒரு ஒப்பந்தத்திக்கு இசைந்தனர். பிரபாகரன் உமா மகேசுவரனை கொல்லமாட்டேன் என்றார். இனி, எல்.டி.டி.ஈ. யின் தலைமைக்கு சொந்தம் கொண்டாட மாட்டேன் என உமா உறுதியளித்தார். மற்றபடி எந்த ஒட்டும் உறவும் இல்லை.

மொத்தம் ஏழு மாதங்கள், நெடுமாறன் ஐயாவுடம் பிரபாகரன் தங்கியிருந்தார். ஆனால், திடீரென்று ஒரு நாள் காணாமல் போனார். அவர் எங்கே போயிருப்பார் என அனைவருக்கும் தெரியுமாதலால் யாரும் அவரைத் தேடவில்லை.

ஒக்ரோபர் 1982. சங்கர் அவர்கள் பதுங்கியிருந்த வீட்டை இராணுவம் சுற்றி வளைத்தது. கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இவரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. பீறிட்டுவரும் குறுதியை அழுத்தியவாறு மூன்று கிலோமீட்டர் ஓடினார். மறைவிடத்தை அடைந்து, தன் நண்பர்களிடம் தனது துப்பாக்கியை ஒப்படைத்தார். “நான் எதிரியிடம் பிடிபடவில்லை. எனது ஆயுதத்தையும் இழக்கவில்லை.”. அவரை அள்ளி தோணியில் போட்டுக் கொண்டு, தமிழகத்துக்கு வந்தனர். பின் மதுரைக்குக் கொண்டு சென்றனர். ஒரு பயிற்சி முகாமைப் பார்க்க வந்த பிரபாகரன், சங்கரின் கைகோர்த்து, “இப்போதுதான் முதன்முறையாக எனது இயக்கத்தைச் செர்ந்த ஒருவர் இறப்பதை என் கண்ணில் காண்கிறேன்.”
இருபத்து இரண்டே வயது சங்கருக்கு. முதல் களபலி சங்கருடையது. சங்கரின் மரணத்தை அப்போது யாருக்கும் தெரிவிக்க முடியவில்லை. வெறும் 30 போரைக் கொண்ட ஓர் இயக்கம் எல்.டி.டி.ஈ. ஆகவே அவர்கள் காத்திருந்தார்கள். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சத்தியநாதன் என்கிற சங்கரின் மறைவு தினம்(நவம்பர் 27) மாவீரர் தினமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ் கலாச்சாரத்தை நன்கறிந்திருந்த பிரபாகரன், நடுகல் வழிபாட்டு முறைக்கு உயிரூட்டினார். களபலியான வீரர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. வணக்கத்துக்கும் வழிபாட்டுக்கும் உரிய உயர்ந்த நபர்களாக அவர்கள் கொண்டாடப்பட்டார்கள்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 9:14 pm

அப்பு விட்ட பணியை கலை அண்ணன் முடித்துவிட்டான்..

நான் இன்னுமித்தொடரை வாசிக்க வில்லை. விரைவில் அனைத்தையும் வாசித்து கருத்திடுவேன்..

நண்பர் நிசாந்தனுக்கு,

இனியுள்ள தொடரினையும் இங்கேயே தொடருங்கள். போஸ்ட் தலைப்பில் மட்டும் வரிசை எண்ணைக் குறிப்பிடுங்கள்.

நன்றி நிசாந்தன்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 11:35 pm

என்னை மன்னிக்கவேண்டும். இந்த தொகுப்பில் தொடர்ந்து எழுதினால், சிலருக்கு வரும் சந்தேகங்களை என்னால் நிவர்த்தி செய்ய இயலாது. அதனால் தான் தனித் தனி பிரசூரமாக சமர்பிக்கிறேன். நான் இந்தக் கட்டுரையை வெறும் ஒரு பதிவாக இங்கு ஏற்றவில்லை. இன்றும் தமிழ் இனத்திலேயே விடுதலைப் புலிகளை தீவிரவாதிகலாக பார்ப்பவர்கள் ஏனையோர் உள்ளனர். அவர்களுக்கு உண்மையை விளக்க வேண்டியது நமது கடமை. அதற்காக தான் இந்தப் பதிவு. ஆகையால், ஒரே திரியில் கீழ் எழுதும்பொழுது இது சாத்தியமாகாது. மேலும், மற்றவர் மறுமொழி எழுதும் பொழுது தொடரின் தொடர்ச்சி பாதிக்கப்படும். என்னை மன்னிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக