புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_m10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_m10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_m10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_m10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10 
21 Posts - 5%
prajai
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_m10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_m10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_m10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_m10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_m10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10 
7 Posts - 2%
mruthun
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_m10டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 9 Oct 2010 - 11:55

சென்னை : தமிழக டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. புதிய டி.ஜி.பி., நியமிக்கும் வரை, பதவியில் லத்திகா சரண் தொடரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், டி.ஜி.பி., நடராஜ் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை, தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடராஜ் மனு தாக்கல் செய்தார்.அதில், "எனது சீனியாரிட்டியை புறக்கணித்து விட்டு, டி.ஜி.பி.,யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகள், டி.ஜி.பி., நியமனத்தில் பின்பற்றப்படவில்லை. எனவே, லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளை பின்பற்றி, டி.ஜி.பி.,யை தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. டி.ஜி.பி., நடராஜ் சார்பில் சீனியர் வக்கீல் சோமயாஜி, வக்கீல் என்.எஸ்.நந்தகுமார் ஆஜராகினர்.

"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஆவணங்களை பரிசீலிக்கும் போது, டி.ஜி.பி., நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது வெளிப்படுகிறது. பெயர் தெரியாத அதிகாரி தயாரித்த குறிப்புகளைத் தவிர, சம்பந்தப்பட்ட அதிகாரியின் சாதக, பாதக அம்சங்களை பரிசீலனை செய்ததை சுட்டிக்காட்டும் அளவுக்கு, கோப்பில் எதுவும் இல்லை.முறையான தேர்வு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன என்பதை இந்தக் கோப்பு வெளிப்படுத்தவில்லை. மற்றவர்களை விட லத்திகா சரணுக்கு முன்னுரிமை வழங்கி தேர்வு செய்ததற்கான காரணம் எதையும் கோப்பில் தெரிவிக்கவில்லை. லத்திகா சரணை தேர்வு செய்யும் போது, தகுதியுள்ள மற்ற அதிகாரிகளின் சர்வீஸ் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை.சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவில்லை. டி.ஜி.பி., நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

டி.ஜி.பி., விஜயகுமார் அயல் பணிக்கு சென்றுள்ளார். இதனால் அவர் ஏற்கனவே பணியாற்றிய துறையில் உள்ள உரிமை தொடர்ந்து இருக்கும். அடிப்படையில் எந்தத் துறையில் இருந்து சென்றாரோ, அந்தத் துறைக்கான சலுகைகளை பெற அவருக்கு உரிமை உள்ளது. எனவே, பதவி உயர்வு மற்றும் சலுகைகள் அவருக்கு தொடரும். டி.ஜி.பி., பதவிக்கு அவரை பரிசீலித்திருக்க வேண்டும். தற்போது டி.ஜி.பி., அந்தஸ்தில் விஜயகுமார் உள்ளார். 2008ம் ஆண்டு செப்டம்பர் முதல் டி.ஜி.பி.,யாக மனுதாரருக்கு இணையாகவும், லத்திகா சரணை விட சீனியாரிட்டியிலும் உள்ளார். இவரது பெயரை, டி.ஜி.பி.,க்கு பரிசீலித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், இந்த முகாந்திரத்தின்படியே லத்திகா சரணை டி.ஜி.பி.,யாக நியமித்ததை ரத்து செய்யலாம்.டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமித்தது செல்லும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கருத்தில் கொள்ளாமல், மனதை செலுத்தாமல் தீர்ப்பாயம் இப்படி உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரச்னையை தீர்ப்பாயம் முறையாக அணுக தவறி விட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. லத்திகா சரணை டி.ஜி.பி.,யாக நியமித்து பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படவில்லை என எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு, கடமை எங்களுக்கு உள்ளது. பொதுநலன் கருதி டி.ஜி.பி., பதவியை காலியாக வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை.

* டி.ஜி.பி., ரேங்கில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகள் பெயரை, அவர்களின் பணி ஆவணங்களுடன் மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.,) தமிழக தலைமைச் செயலர் அனுப்ப வேண்டும். பட்டியலை தயாரிக்குமாறு கேட்டு இதை அனுப்ப வேண்டும். வரும் 26ம் தேதிக்குள் யு.பி.எஸ்.சி.,க்கு கிடைத்து விட்டதா என்பதை தலைமைச் செயலர் உறுதி செய்ய வேண்டும்.
* தமிழக அரசு அனுப்பிய பெயர்கள், விவரங்களில் விளக்கம் பெற யு.பி.எஸ்.சி., கருதினால், அதை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் தனியாக ஒருவரை நியமித்து அவர் மூலம் நவம்பர் 12ம் தேதிக்குள் தெளிவுபடுத்த வேண்டும்.
* சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பட்டியலை தயாரித்து, அதை நவம்பர் 26ம் தேதிக்குள் தமிழக தலைமைச் செயலருக்கு யு.பி.எஸ்.சி., அனுப்ப வேண்டும்.
* அதை தலைமைச் செயலர் பெற்ற உடன், அந்தப் பட்டியலில் உள்ள அதிகாரிகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து, டிசம்பர் 7ம் தேதிக்குள் டி.ஜி.பி.,யாக நியமிக்க வேண்டும்.
* அதுவரை டி.ஜி.பி.,யாக பணியாற்ற லத்திகா சரணை அனுமதிக்க வேண்டும். கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை டிசம்பர் 14ம் தேதி தலைமைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசு முடிவு : "டி.ஜி.பி., நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளை கொஞ்சமும் வழுவாமல் தமிழக அரசு பின்பற்றியுள்ளது. ஐகோர்ட் தீர்ப்பின் நகலைப் பெற்று, சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக டி.ஜி.பி., நியமனம் குறித்த தமிழக அரசின் விளக்கம்:தமிழக டி.ஜி.பி., நியமனத்தை பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளையே, தமிழக அரசு பின்பற்றியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, இப்பதவிக்கான நியமனம் ஒரு தேர்வு நியமனம். இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யும் போது, அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றும் டி.ஜி.பி., அந்தஸ்தில் இருந்த அனைத்து அலுவலர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு, அவர்களது பணித்திறன், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில டி.ஜி.பி., தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நியமனம் தேர்வு நியமனம் என்பதால், பணி மூப்பு அடிப்படையில் மட்டும் செய்யப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள டி.ஜி.பி., பதவியிடங்களுக்கு பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) ஏற்று செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இருந்த போதிலும் அதை நடைமுறைப்படுத்த யு.பி.எஸ்.சி., மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை கோரியுள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் இது குறித்து உரிய உத்தரவுகள் எதையும் இதுவரை பிறப்பிக்கவில்லை.இந்த விவரங்களை யு.பி.எஸ்.சி., சென்னை ஐகோர்ட்டிலும் தனது பதில் உறுதி ஆவணத்திலும் சுட்டிக் காட்டியுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசும் இரு முறை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த விவரத்தையும் தமிழக அரசின் தலைமை வக்கீல் சென்னை ஐகோர்ட்டின் கவனத்திற்கு, வழக்கின் போது கொண்டு வந்துள்ளார். யு.பி.எஸ்.சி., பட்டியல் தயாரிக்க இயலாத சூழலில், தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் பணியாற்றிய அனைத்து டி.ஜி.பி.,க்களும் கருதப்பட்டு, லத்திகா சரண் தமிழக அரசால், டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.எனவே, சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளைக் கொஞ்சமும் வழுவாமல் தமிழக அரசு பின்பற்றியுள்ளது என்பது தெளிவு. சென்னை ஐகோர்ட்டின் முழுத்தீர்ப்பின் நகலைப் பெற்று, வாசகங்களை நன்கு ஆராய்ந்து, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.

நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 9 Oct 2010 - 12:24

முதலில் விஜயக்குமார் பெயரைத்தான் டிஜிபி பதவிக்கு பரிசீலித்திருக்க வேண்டும். ஆனால் டிஜிபி நியமனம் தொடர்பான ஆவணங்களை பார்க்கும்போது, சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது. டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் மற்ற அதிகாரிகளின் சாதக, பாதகங்களை பரிசீலித்தார்களா என்பதற்கான எந்த அடையாளமும் அதற்கான கோப்பில் காணப்படவில்லை. முறையான தேர்வு நடந்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் இந்த கோப்புகளில் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் .

மேலும் டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் செயலையும் அது விமர்சித்துள்ளது.

டிஜிபி நியமனம் தொடர்பாக தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணிகளுக்கான டிஜிபி நடராஜ் தொடர்ந்த வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்குப் பி்ன்னடைவாக கருதப்படும் இந்த தீர்ப்பின் முழு விவரம்...

டிஜிபி நியமனம் தொடர்பான ஆவணங்களை பார்க்கும்போது, சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது. டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் மற்ற அதிகாரிகளின் சாதக, பாதகங்களை பரிசீலித்தார்களா என்பதற்கான எந்த அடையாளமும் அதற்கான கோப்பில் காணப்படவில்லை. முறையான தேர்வு நடந்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் இந்த கோப்புகளில் பார்க்க முடியவில்லை

அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை:

பெயர் தெரியாத அதிகாரி தயாரித்த குறிப்புகளைத் தவிர, சம்பந்தப்பட்ட அதிகாரியின் சாதக, பாதக அம்சங்களை பரிசீலனை செய்ததை சுட்டிக்காட்டும் அளவுக்கு, கோப்பில் எதுவும் இல்லை. முறையான தேர்வு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன என்பதை இந்தக் கோப்பு வெளிப்படுத்தவில்லை.

மற்றவர்களை விட லத்திகா சரணுக்கு முன்னுரிமை வழங்கி தேர்வு செய்ததற்கான காரணம் எதையும் கோப்பில் தெரிவிக்கவில்லை. லத்திகா சரணை தேர்வு செய்யும் போது, தகுதியுள்ள மற்ற அதிகாரிகளின் சர்வீஸ் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை.

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகள் மிகவும் உன்னிப்பாக பின்பற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தலைமைச் செயலாளர் அவற்றை ஒட்டுமொத்தமாக பின்பற்றவில்லை. இந்த பணிநியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகளை பின்பற்றுவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

விஜயக்குமார் பெயரை பரிசீலித்திருக்க வேண்டும்:

கே.விஜயகுமாரை பொறுத்தவரை, அவர் தமிழகத்தை விட்டு வேறு பணிகளுக்கு சென்றிருந்தாலும் அவரது உரிமை தொடர்ந்து தாய்ப்பணியிடமான தமிழகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் பணியிட மாற்றம், பதவி உயர்வு, பணி மூப்பு போன்றவற்றில் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு அவருக்கு முழு தகுதியும், உரிமையும் உள்ளது. எனவே அவரது பெயரையும் அரசு பரிசீலித்து இருக்க வேண்டும்.

கே.விஜயகுமார், மாநில அரசு பணிக்கு 1975-ம் ஆண்டு வந்தார். 9.9.08 முதல் அவர் டி.ஜி.பி.யாக உள்ளார். தற்போதுள்ள அவரது பணி நிலை நடராஜூக்கு சமமாக உள்ளது. மேலும் லத்திகா சரணின் பணிநிலைக்கு மேலாகவும் உள்ளது. எனவே கே.விஜயகுமார் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இவரது பெயரை, டி.ஜி.பி. பதவிக்கு பரிசீலித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், இந்த முகாந்திரத்தின்படியே லத்திகா சரணை டி.ஜி.பி.,யாக நியமித்ததை ரத்து செய்யலாம். டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமித்தது செல்லும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தீர்ப்பாயத்திற்குக் கண்டனம் :

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கருத்தில் கொள்ளாமல், மனதை செலுத்தாமல் தீர்ப்பாயம் இப்படி உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரச்னையை தீர்ப்பாயம் முறையாக அணுக தவறி விட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. லத்திகா சரணை டி.ஜி.பி.,யாக நியமித்து பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படவில்லை என எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு, கடமை எங்களுக்கு உள்ளது.

எனவே லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமனம் செய்து 8.1.10 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவும், அதற்கு சாதகமாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகின்றன.

சுப்ரீம் கோர்ட் வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற தகவல் இந்த கோர்ட்டுக்கு கிடைத்ததும், தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து அந்த உத்தரவுகளை தடம்புரளாமல் பின்பற்ற செய்ய வேண்டியது எங்களது கடமை மற்றும் பொறுப்பு என்று உணர்ந்தோம்.

எனவே கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம்.

- டி.ஜி.பி. ரேங்கில் இருக்கும் அனைத்து தகுதியுள்ள அதிகாரிகளின் பெயர் பட்டியலை தலைமைச் செயலாளர் தயாரிக்க வேண்டும். (இந்த தேதியில் எச்.ஏ.ஜி.+ரூ.75 ஆயிரம்-ரூ80 ஆயிரம் என்ற சம்பள விகிதத்தில் உள்ளவர்கள்). அவர்களது அனைத்து பணி ஆவணங்களையும் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுதொடர்பான பெயர்ப் பட்டியலை தயாரிக்கும்படி யு.பி.எஸ்.சி.யை தலைமைச் செயலாளர் கேட்டுக் கொள்ள வேண்டும். அனைத்து தகவல்களும் 26-ந் தேதிக்குள் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்.

- யு.பி.எஸ்.சி.க்கு மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அவற்றை தலைமைச்செயலாளர் வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் (12.11.10க்கு முன்பு) சிறப்பு தூதுவர் மூலம் இந்த பணிகளை முடிக்க வேண்டும்.

- அதன் பிறகு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள வழிமுறைகளின்படி ï.பி.எஸ்.சி. ஒரு பட்டியலை தயாரிக்க வேண்டும். அதை 26.11.10க்குள் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

- அதிலிருந்து ஒருவரை டி.ஜி.பி.யாக தலைமைச்செயலாளர் தேர்வு செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் 7.12.10-க்குள் முடிக்கப்பட வேண்டும்.

- அதுவரை லத்திகா சரண் டி.ஜி.பி.யாக பதவி வகிக்க அனுமதிக்கப்படுகிறார்.

- இந்த உத்தரவுகள் அனைத்தும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளனவா என்பதுபற்றி 14.12.10 அன்று உயர்நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

- இந்த விவகாரத்தில் எந்தவித கருத்தையும் தெரிவிக்க கோர்ட் முன் வரவில்லை என்று நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக