புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
423 Posts - 48%
heezulia
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பூலித்தேவன்  - Page 2 Poll_c10பூலித்தேவன்  - Page 2 Poll_m10பூலித்தேவன்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூலித்தேவன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 05, 2010 11:54 pm

First topic message reminder :

பூலித்தேவன்

பூலித்தேவன்  - Page 2 POOLI+DEVAN


வாழ்த்து பா

"பூலிநாட்டை ஆண்டு வெள்ளையனுக்கு
நெல் கட்டேன் என்று உரைத்தாய்
சந்தனம் மணம் உடைத்து
மாமழையும் நீருடைத்து
நீல்கடலும் உப்புடைத்து பூலிதேவா
உன் வீரம் எம் தேவருடைத்து "


முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!! சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.


இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.இவ்வாறு பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வமசத்தினர் மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான். திருநெவேலிச் சீமையில் தான் பெரும்பாலும் தமிழர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும் பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும் அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால் ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகினார்கள்.இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.1-9-1715 ல் மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், ‘காத்தப்ப பூலித்தேவர்’ என்பதாகும் ‘பூலித்தேவர்’ என்றும் ‘புலித்தேவர்’ என்றும் அழைக்கலாயினர் பூலித்தேவர் பிறந்த பொழுது அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத் தேவரின் நல்லாட்சிதான். அவருடைய ஆட்சி நல்ல முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு பூலித்தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.சித்திரபுத்திரத் தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள் போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தயில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னுடைய முன்னோர் பற்றிய வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில் இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும் பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில் இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும் அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது.

இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு.இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர் பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன் என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது. அவரைப் பற்றிய ஒரு நாட்டு பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண் தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளையாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.

பூலித்தேவருக்கு பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச் சேர்ந்த இலவந்தூர் , ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச் சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான் வந்து கால் நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன் மூலம் பூலித்தேவருக்கு கூறப்பட்டது. உடனே அவர் தளபதியான சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப் பளைக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.உடனே 150 வீர்களுடன்ட புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத் தாக்குவதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை கனிசமாக் குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கண்டு மேலும் பலர் களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர் இறுதியில் வெற்றிகரமாக கால்டைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர் முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால்நடைகளைக் கவர்ந்து செல்வதுதான்.போரில் வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின் எல்லைக் கருகில் சென்று விட்டதால் எதிரிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது.ஆனாலும் மனம் தளராது போராடி பல பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால் களத்தில் அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அதையும் பொருட்படுத்தாமல் அவர் போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.மாவீரன் பூலிதேவருக்குத்தான்ஒரு வீரனின் மதிப்பும் அவனுடைய இழப்பையும் உணரமுடியும் . அந்த வீரத்தளபதியின் நினைவாக பூலித்தேவர் வீரக்கல் நட்டு பெருமைப்படுத்தனார். பூலிதேவரின் இளம் வயது போர் வெற்றி அவருக்கு போர்க்கள நுணுக்கங்களில் மேலும் முதிர்ச்சியைக் கொடுத்தது.மதுரையில் விசயரங்க சொக்கநாத நாயக்கர் (1704-1731) ஆட்சிக்காலத்தில் மதுரையின் வட பகுதியில் புலி ஒன்று பதுங்கியிருந்தது. அவ்வழியாகப் போவோரையிம், வருவோரையும் கொன்று கொண்டிருந்தது. எவராலும் அடக்க இயலாது போன அந்தப் புலியை அடக்கு வோருக்கு தகுந்த சனமானம் வழங்கப்படும் என்று அனைத்துப் பாளையக்காரர்களுக்கும் ஓலை அனுப்பபட்பட்டது. இச்செய்தியை அறிந்தவுடன் பூலித்தேவர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். சிங்கம் போல் நடை நடந்து வரும் காலடி ஓசையைக் கேட்டவுடன் புலியனது பூலித்தேவர் மீது பாய்ந்தது.



பூலித்தேவன்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 12:44 am

முதல்தடவை அவனைத் தூக்கில்போட்டு அவன் சாகவில்லை. இரண்டாவது முறையும் அதேமுறையில் தூக்கில் போட்டார்கள் அவன் சாகவில்லை. மூன்றாவது முறை இரும்புக் குண்டுகளைக் காலில்கட்டி தூக்கில் போட்டார்கள் அப்பொழுது இறந்தான். அவன் உடம்பைத் துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் புதைத்தார்கள். அப்படிப்பட்ட கம்மந்தான் கான்சாகிப் தோற்றது யாரிடம் என்று சொன்னால் மாமன்னர் பூலித்தேவனிடத்தில். அந்த யுத்தத்தை பூலித்தேவர் நடத்தியதே ஈடில்லா சாகசமாகும். இப்போரில் கான்சாகிப்பின் பீரங்கிகள் வாசுதேவநல்லூர் கோட்டையை தகர்த்தெறிய பன்முறை முயன்றன - தோற்றன - கடைசியில் வாசுதேவநல்லூர் முற்றுகை ஆரம்பமாயிற்று. இதில் இருமுனைத் தாக்குதலை பூலித்தேவர் நடத்தினார்.

நெற்கட்டும் செவலிலிருந்து வந்த கும்பினிப் படையை வாசுதேவநல்லூர் கோட்டைக்கு எதிர்ப்புறத்தில் இருந்து பூலித்தேவர் தாக்கினார். கோட்டைக்குள் இருந்த வீரமறவர்கள் கும்பினிப் படையைத் தாக்கினார்கள். இருதரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம். இறுதியில் பூலித்தேவர் வென்றார். கான்சாகிப் தோற்றுப்பின் வாங்கினான்.

1759 ஆம் ஆண்டு தோற்று ஓடிய கான்சாகிப் மீண்டும் இரண்டாவது முறையாக 12 மாதம் கழித்து 1760 ஆம் ஆண்டு அதே டிசம்பர் மாதம் வந்தான். இந்துÞதானத்தில் பிரிட்டிக்ஷ் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு என்ற புத்தகத்தை ராபர்ட் ஓர்ம் எழுதினார். முதல் பதிப்பு 1764 இல் வெளிவந்தது. பூலித்தேவரின் வாசுதேவநல்லூர் போர்க்களங்களுக்கு இந்நூலே மூலஆதாரம். இந்நூல் மூன்று வால்யூம்களைக் (தொகுப்புகள்) கொண்டது. மொத்தம் 1291 பக்கங்களை உடையது. தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில் இந்த நூல் உள்ளது. இந்நூலின் முதல் தொகுப்பில் 15 இடங்களிலும் இரண்டாம் தொகுப்பில் 12 இடங்களிலும் பூலித்தேவர் பற்றியும், மூன்றாம் தொகுப்பில் 3 இடங்களிலும் பூலித்தேவன் கோட்டை குறித்தும் செய்திகள் உள்ளன.

இரண்டாம் முறையாக கான்சாகிப் 1760 டிசம்பர் 12 இல் திருநெல்வேலியில் இருந்து பெரும்படையுடன் வந்து நெல்கட்டும் செவலில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் முகாம் போட்டான் 1760 டிசம்பர் 20 இல் போர் தொடங்கியது. வீரமறவர்கள் நூறுபேர் மடிந்தார்கள். பூலித்தேவரே இம்முறையும் வென்றார். கான்சாகிப் தோற்றான்.

மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மேமாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன், பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற்றார். வாசுதேவநல்லூர் கோட்டை, பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன. கான்சாகிப்பும் பின்னர் வெள்ளையரை எதிர்த்து மதுரையில் தளம் அமைத்தான். வீரத்தில் சிம்மமான பூலித்தேவர் ஆலய வழிபாட்டில் சிறந்து கோவில் திருப்பணிகள் பலவற்றை செய்தார்.

அவர் கட்டிய ஆலயங்கள் பலப்பல. சங்கரன்கோவில் கோவிலுக்கு சபாபதி மண்டபம் கட்டியவர் பூலித்தேவன்தான். அங்கே தெப்பக்குளம் வெட்டியவர் பூலித்தேவன். கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் ஆலயத்துக்கு முன்மண்டபம் கட்டியவர் பூலித்தேவன். அந்த ஆலயத்துக்குத் திருத்தேர் செய்தவர் பூலித்தேவன். வெள்ளி ஆசனங்களை அமைத்தவர் பூலித்தேவன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலஸ்தானத்து அம்மனுக்கு தங்க நகைகள், வைர அட்டிகைகள் செய்துவைத்தவர் பூலித்தேவன். இங்கே பக்கத்தில் இருக்கக்கூடிய தாருகாபுரத்தில் 16 கால் மண்டபத்தைக் கட்டி அன்னதானம் செய்தவர் பூலித்தேவன். அதுமட்டுமல்ல, சீவலப்பேரி மருகால் தலையில் பூலுடையார் கோவில் மண்டபம் கட்டியவர் பூலித்தேவன். அங்கே நெல்லையில் வாகையம்மன் கோவிலை கட்டிவைத்தவர் பூலித்தேவன்.

இத்தனைக் கோவில்களையும் கட்டி - இத்தனைத் திருப்பணிகளையும் செய்து மக்களை அரவணைத்து மக்கள் வாழ்வு செழிப்பதற்கு பாடுபட்டு அனைவரையும் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டதனால்தான் நான் இந்தக் கருத்தை வலியுறுத்தவிரும்புகிறேன். எந்த மாபூஸ்கான் ஆர்க்காடு நவாப்பின் தம்பி எதிர்த்து வந்தானோ அவன் பூலித்தேவனிடத்தில் வந்து நான் உங்கள் நண்பனாக அரண்மனையில் இருக்கிறேன் என்றான். அவர் ஏற்றுக் கொண்டார். இந்த அரண்மனையில் நீண்டநாட்களாக மாபூஸ்கான் இருந்தான்.

இதெல்லாம் சரித்திரம் தோழர்களே, நான் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டேன். இதை நான் பேசுகிறபோது ஒலிநாடாவில் ஒளிநாடாவில் பதிவுசெய்யப்படும் என்ற உணர்வோடு பேசுகிறேன். இந்தப்பேச்சு ஒரு வரலாற்றுச் சுவடாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசுகிறேன். ஏனென்றால் ஏராளமான தம்பிகள், இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். இந்தத் தம்பிகளின் உள்ளத்தில் வீரஉணர்ச்சியும், மானஉணர்ச்சியும் அவர்கள் உள்ளங்களில் பொங்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கின்ற தம்பிகள் இடத்தில் உன்னுடைய பாட்டன், முப்பாட்டன் எல்லாம் போராடி இருப்பான் பூலித்தேவன் படையில். அவன் எல்லாம் வாளெடுத்து இருப்பான். அவன் எல்லாம் பீரங்கிக்கு எதிரே போய்நின்று இருப்பான். அவர்களுடைய பேரப்பிள்ளைகள்தான் நீங்கள். அந்த உணர்ச்சியைப் பெறவேண்டும் என்பதற்காக நான் இதைப்பேசுகிறேன்.

காரணம், பிரெஞ்சு நாட்டுத் தளபதி டியூப்ளே. அவன் மிகப்பெரிய தளபதி இராபர்ட் கிளைவ்வோடு போரிட்டவன். சந்தர்ப்பவசத்தால் தோற்றுப்போனவன். பாண்டிச்சேரியைக் கைப்பற்றியவன். அந்தப் பாண்டிச்சேரியை பிரெஞ்சின் காலனியாக்கிய டியூப்ளேயின் மொழிபெயர்ப்பாளர்தான் துபாஸ் ஆனந்தரங்கம்பிள்ளை. அவர் நாட்குறிப்பு எழுதியிருக்கிறார்.

ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி. சரித்திரப் புகழ்பெற்ற டைரி. எப்பொழுது 1736 செப்டம்பர் 6 இல் தொடங்க 1761 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வரை டைரி எழுதி இருக்கிறார். அந்த டைரி ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. அந்த டைரியில் அவர் 11 பாகங்கள். 11 ஆவது பாகத்தில் மன்னர் பூலித்தேவரைப்பற்றி எழுதுகிறார். அப்பொழுது சொல்கிறார். இவரது பண்பாட்டை மாபூஸ்கான் என்பவன் மன்னர் அரண்மனையில் இருந்து அவன் விடைபெற்றுப் போகிறபோது அவனது பட்டுச் சட்டையும், பொன்னாபரணங்களையும் அவனுடைய கைவசம் இருந்த பொன்னையும், பொருளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டுப்போனான்.

இதை இங்கேயிருந்து அனுப்பிவைக்கிறார் பூலித்தேவன். அவர் இதை எழுதுகிறார். ஒரு தேதியைக் குறிப்பிட்டு 1757 ஆம் ஆண்டில் டிசம்பர் 21 தேதியைக் குறிப்பிட்டு பூலித்தேவன் அரண்மனையில் இருந்து பொன்னும் பொருளும் பட்டாடைகளும் திருவண்ணாமலை கம்மந்தானிடம் ஒப்படைக்கப் பட்டது என்று செய்தி கிடைத்திருக்கிறது என்று டைரியில் எழுதுகிறார். விலைமதிப்பற்ற பொருள்கள் அனைத்தையும் பத்திரமாக அனுப்பி வைத்தார் பூலித்தேவர் என்பது அவரது நேர்மை நாணயத்துக்கு வரலாற்றுச் சான்றாகும்.

அப்படிப்பட்ட வீரமும், தீரமும் நிறைந்த மன்னன் பூலித்தேவன் படையில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலாடி போராடிய வரலாற்றை இங்கே சொல்வது மிகவும் அவசியமாகும்.

அந்தப்போர் மிகஉக்கிரமானபோர். வாசுதேவநல்லூர் போரில் கம்மந்தான் கான்சாகிப் வந்து போர்தொடுத்துத் தோற்றானே அந்தப்போரில், இரண்டாம் போரில் வெண்ணிக்காலாடி பிரதான தளபதி. இன்று இம்மேடையில் சேதுராமனுக்குப் பக்கத்தில் என் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர் செல்வத்துக்குப் பக்கத்தில், தம்பி சரவணனுக்குப் பக்கத்தில், செந்தூர் பாண்டியனுக்குப் பக்கத்தில், என் அருமைத்தம்பி தேவேந்திரகுல சமூகத்துப் பிள்ளை டாக்டர் சதன் திருமலைக்குமார் உட்கார்ந்து இருக்கிறார்.

நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும். அன்றைக்கு வெண்ணிக்காலாடி. மருத்துவர் சதன் திருமலைக்குமாருக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன். அவன் எங்கே இருக்கிறான்? அவன் பூலித்தேவன் படையில் பிரதான தளபதி. போர் நடக்கிறது. கம்மந்தான் கான்சாகிப் கால்பிடரியில் அடிபட ஓடுகிறான். அவனது படைதோற்று ஓடுகிறது. வெற்றிமேல் வெற்றிவருகிறது.

வெள்ளைக்காரன் எழுதுகிறான். 18 அடி நீளமுள்ள ஈட்டியை வாசுதேவநல்லூர் மறவர்கள் பயன்படுத்தினார்கள். நெற்கட்டுஞ்செவல் மறவர்கள் பயன்படுத்தினார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 18 அடி நீளமுள்ள ஈட்டியை எப்படி அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று எனக்கே வியப்பாக உள்ளது. இங்கே இருக்கின்ற மக்கள் ஒவ்வொருவரும் எந்த நேரத்திலும் கையில் வாளும், வளைதடியும், கேடயமும் பக்கத்தில் வைத்திருப்பார்கள் என்று எழுதுகிறான் வெள்ளைக்காரன்.

அந்தப்போரில் தோற்று ஓடுகின்றவர்களை விரட்டிச்சென்று வெற்றிபெற்றுவந்தான் வெண்ணிக் காலாடி. அந்த வெண்ணிக்காலாடியின் வயிற்றில் பாய்ந்த ஆயுதம் வயிற்றைக் கிழித்து குடல் வெளியேவந்து விட்டது. குடல் வெளியே வந்தவுடன் அந்தப் பெருவீரன் தலையிலேயே கட்டி இருந்த தலைப்பாகையை எடுத்து அந்தக் குடலை உள்ளேதள்ளிவிட்டு இரத்தம் பெருக்கெடுக்கின்ற இடத்தில் அந்த தலைப்பாகையைவைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு திரும்பவும் சண்டை செய்கிறான்.

சண்டை செய்து வெற்றிச் செய்தியோடுதான் வந்து மன்னர் பூலித்தேவனிடம் கீழே விழுகிறார். இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பூலித்தேவர் எப்படி இலாமிய முடேமியாவை எடுத்துமடியில் போட்டாரோ அதேபோல இந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் பிறந்த வெண்ணிக்காலாடியை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு கண்ணீர் பெருக்க பூலித்தேவன் அழுகிறார். அப்பொழுது அந்தத் தலைப்பாகை முழுக்க இரத்தத்தில் நனைந்து பூலித்தேவனின் உடம்பெல்லாம் இரத்தம் பாய்கிறது.



பூலித்தேவன்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 12:45 am

அந்தக் காட்சியில் அவர் தன்னுடைய வேதனை எல்லாம் கொட்டி ஒருபிள்ளையை இழக்கின்ற தகப்பனைப்போல அழுகிறார். அந்த இரத்தம் அவரது உடம்பில், கைகளில் பட்டது. அன்புக்கு உரியவர்களே, வளரும் பிள்ளைகளே, வாலிபச் சிங்கங்களே, நான் இதைச் சொல்லக்காரணம், ஒரு இலட்சியத்துக்காக ஆயுதம் ஏந்தலாம். ஒரு உன்னதமான இலட்சியத்துக்கு - ஒரு நாட்டின் விடுதலைக்கு - ஒரு இனத்தின் விடுதலைக்கு - ஆயுதம் ஏந்தலாம்.

ஆனால், சொந்த சகோதரர்களாக வாழவேண்டிய நாம், பகையை - மற்றவர்கள் பாராட்டினாலும் நாம் பாராட்ட வேண்டாம். இது உங்கள் சகோதரனாகிய வைகோவின் தாழ்மையான வேண்டுகோள். உங்களைப்போன்ற தம்பிகளை உயிராக நேசிக்கின்ற ஒரு அண்ணனின் வேண்டுகோள். பகை மற்றவர்கள் பாராட்டினாலும் நாம் பாராட்ட வேண்டாம் அந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்.

ஏன் என்றால் அன்றைக்கு வெண்ணிக்காலாடி உடம்பில் இருந்து இரத்தம் பூலித் தேவனின் உடம்பில் பாய்ந்தது. அதேபோலத்தான் ஒண்டிவீரன் அருந்ததியர் குலத்தில் பிறந்தவன். அவன் ஒற்றர்படைக்குத் தலைவன். பூலித்தேவன் ஒற்றர் படையும் வைத்திருந்தார். அப்பொழுதுதான் தகவல் வருகிறது. தென்மலையில் வெள்ளைக்காரன் முகாம் அமைத்து இருக்கிறான். தென்மலை முகாமில் இருந்து கும்பினிப் படைத்தலைவன் சவால்விடுகிறான். அவனுக்குத் தகவல் சொல்கிறார். இந்தத் தென்மலை முகாமுக்குள் எவனாவது நுழைந்து எங்கள் பட்டத்துக் குதிரையைக் கொண்டுபோய்விட்டால் நாங்கள் தோற்றதாக ஒத்துக் கொண்டு போய்விடுவதாக சவால் விடுகிறான்.

இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின் காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுது பக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்து வருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்றி வருகிறேன் என்று இவன் கும்பினியாரிடம் போகிறான். தந்திரமாகப் போகிறான். நயமாகப் பேசுகிறான். அங்கு சிலவேலைகளைச் செய்கிறான். அந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறார்கள். தக்க நேரம் பார்த்தான். பட்டத்து குதிரை கட்டப்பட்டு இருக்கிற இடத்தில் இருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்தான். குதிரையைக்கொண்டு அமாவாசை இருட்டில் இரவோடு இரவாக கொண்டுவந்துவிடலாம் நெற்கட்டுஞ்செவலுக்கு என்று கொண்டுவருகிற போது குதிரை மிரண்டுவிட்டது.

குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார்கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டுவிட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக்குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறியைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக்கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடுவோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்குகிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.

அவன் கையில்தான் முளையை அடிக்கிறார்கள். அவன் உள்ளங்கையைத் துளைத்துக் கொண்டு அந்த முளை இறங்குகிறது. அந்தக்கூரிய முளை உள்ளே நுழைகிறது கூச்சல் போடவில்லை. அலறவில்லை. சத்தம் போடவில்லை. இவையெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூடிய காட்சியா? அவன் கையைத் துளைத்துப் போகிறது. அவன் முனகவில்லை. அங்கே இருக்கின்றவர்களுக்கு அவன் உள்ளே இருப்பது தெரியவில்லை. போய்விட்டார்கள். அதன்பிறகு, ஒண்டிவீரன் எழுந்து துளைக்கப்பட்ட கையோடு இன்னொரு கையால் முளையைத் தூக்கிவிட்டு எறிந்துவிட்டு கயிற்றை எடுத்து குதிரையையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்துவிட்டான் ஒண்டிவீரன்.

இந்தக் கை சிதறியிருப்பதைக் கண்டு பதறியவராக மன்னர் பூலித்தேவன் என்ன நேர்ந்தது என்று கேட்கிறபோது, என் கரம் போனால் என்ன, மன்னா உங்கள் மனதில் எளியவனுக்கு ஒரு இடம் இருக்கிறதே! அது ஆயிரம்கோடி தங்கத்தைவிட உயர்ந்தது அல்லவா என்றான். பெயருக்குப் பொருத்தமாக ஒண்டிவீரன் ஒண்டியாக சென்று சாதித்துவிட்டு வந்திருக்கிறான். அவன் அருந்ததியர் குலத்தில் பிறந்தவன்.

இப்படி அனைவரையும் அரவணைத்து யுத்தகளத்தில் நின்று சாகசங்கள் புரிந்தவர்தான் பூலித்தேவர்.
ஆறு ஆண்டுகள் கழிந்தன. 1767 ஆம் ஆண்டு மீண்டும் போர் - கடைசிப் போர். டொனல்டு காம்பெல் பெரும் பீரங்கிகளோடு வந்தான். அப்பொழுது அவன் சொல்கிறான். அந்தச் சண்டையில்தான் அனந்த நாராயணன் துரோகத்தால் பூலித்தேவர் தோற்றதாக சரித்திரம் சொல்கிறது. காம்பெல் எழுதுகிறான். நினைத்தேப் பார்க்கமுடியாது. பீரங்கிகளின் குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. கோட்டைத் தகரவில்லை. கோட்டையின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்தன.

ஆனால், அந்த மறவர்கள் அந்த ஓட்டைகளை அடைப்பதற்கு அவர்கள் பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைத்தார்கள் என்று எழுதுகிறான். இந்த வீரத்தை எங்கும் பார்த்தது இல்லை. மறவர்கள் சிலரின் உடலைப் பீரங்கிகுண்டுகள் துண்டு துண்டாகவும் சின்னாபின்னமாகவும் சிதறவைத்தன. குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. பக்கத்தில் நிற்பவன் செத்து விழுகிறான். அதைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த இடத்தின் சிதிலமான பகுதிகளை செப்பனிடுவதில் பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைப்பதிலே உறுதியாக இருக்கக்கூடிய வீரர்களை இந்த உலகத்தில் எங்கே பார்க்க முடியும். வாசுதேவநல்லூரில் தான் பார்க்க முடிந்தது என்று எழுதுகிறான்.

இந்தத் திருநெல்வேலி சரித்திரத்தை மிக முறையாக எழுதியவர் திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம் எழுதிய இன்றைக்கு இடையன்குடியில் அடக்கம் செய்யப்பட்டு கல்லறையில் துயிலும் கால்டு வெல். திருநெல்வேலி சரித்திரம் எழுதி இருக்கிறார். அதில் பூலித்தேவனைப் பற்றிச் சொல்கிறார். “இந்த மேற்கத்திய பாளையக்காரர்கள் மத்தியில் உயர்ந்த இடத்துக்கு வந்தவர்தான் பூலித்தேவன். அவர் படைபலம் குறைவாக இருந்தாலும் பண்பால், வீரத்தால், திறமையால் அவருடைய ஆளுமைக்கு உட்பட்ட இடத்தைவிட செல்வாக்கும் புகழும் பெற்றார்” என்று எழுதுகிறார்.

இதற்குப்பின்னர் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர். அவர் இறைவனைப்பாடிய பாடல்கூட இருக்கிறது. பூலித்தேவன் பாடிய பாடல்கூட இருக்கிறது. அருமையான பாடல். சிவனை நினைத்துப் பாடிய பாடல்.

இதோ அந்தப் பாடலைச் சொல்கிறேன்.

பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே
புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாலிச வினையே - சிக்கி
உழறும் அடியேன் தன்னை
ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி
எனைக்காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே
இறைவனே போற்றி போற்றி


அதற்குப்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அருட்பெருஞ்சோதி மறைந்ததைப்போல சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில்லை. நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

அன்புக்கு உரியவர்களே, இதைப்பேசக்கூடிய தகுதி அடியேனுக்கு உண்டு என்பதற்குக் காரணம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி கழுகுமலைக்குத் தெற்கே இருக்கின்ற சிதம்பரபுரம் என்கின்ற மறவர் சீமையில் தென்னாட்டில் முதன்முதலாக பூலித்தேவருக்கு சிலை அமைத்தவன் இந்த வைகோ. நானும், என் தம்பியும் சொந்தச் செலவில் மண்டபம் கட்டினோம். நானும், என் தம்பி ரவிச்சந்திரனும் சேர்ந்து பூலித்தேவருக்கும், பசும்பொன் தேவர் திருமகனுக்கும் இரண்டு சிலைகளை எழுப்பினோம். மண்டபம் அமைத்து தமிழ்நாட்டில் முதல் சிலை அமைத்தவன் இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கக்கூடிய வைகோ.

அந்த மண்டபத்திறப்பு விழா மாலையில் நடைபெற்றது. அந்த மண்டபத்தைத் திறந்து வைத்துவிட்டு அந்த இரவோடு இரவாக நான் சென்னைக்குச் சென்றேன். அந்த இரவில்தான் என்னுடைய தம்பி விடுதலைப்புலிகளை வீட்டில் வைத்திருக்கிறான் என்று அதே இரவில்தான் கைது செய்யப்பட்டான். நான் இதை இங்கே நினைவூட்டுவதற்குக் காரணம் எந்த வீரத்தை மதிக்கிறோமோ மண்ணின் மானம்காக்க அந்தப் பூலித்தேவரின் வடிவமாகத்தான் நான் ஈழத்துப் பிள்ளைகளைப் பார்க்கிறேன். ஈழத்துப் போர்க்களங்களைப் பார்க்கிறேன்.

இந்தப் பூலித்தேவனின் வழியில்தான் ஈழத்தின் விடுதலைப்புலிகளைப் பார்க்கிறேன். இதைச் சொல்லக்காரணம், மானஉணர்ச்சியும், வீரஉணர்ச்சியும் படைகண்டு அஞ்சாது படை பெருக்கத்தைக் கண்டு அஞ்சாது உயிரைப்பற்றிக் கவலைப்படாது நாட்டின் விடுதலைக்கு முதலாவது அடிமை விலங்கை உடைப்பதற்கு சம்மட்டி ஏந்திய முதல் மன்னன் இந்தியாவிலேயே 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்றும் முதல் சுதந்திரப்போர் என்றும் அழைக்கப்படுவதற்கு நூறு ஆண்டுக்கு முன்னரே போர்புரிந்து வெற்றிகளைக் குவித்தவன்தான் பூலித்தேவர்.

அதன்பின்னர் கொடுமையிலும் கொடுமை என்னவென்று தெரியுமா? மீண்டும் அங்கே ஒரு புதுக்கோட்டை கட்டப்பட்டது. ஒரு கோட்டை அழிந்தபோது பூலித்தேவன் மன்னர் இன்னொரு கோட்டை எழுப்பினார். அதற்குப்பெயர் புதுக்கோட்டை. அந்த புதுக்கோட்டையும் தகர்க்கப்பட்டபோது மன்னர் பூலித்தேவனின் மனைவி கயற்கண்ணி அம்மையாரும், அவரது மூத்தமகள் கோமதிமுத்து தலைவச்சியும், ஆண் பிள்ளைகளில் மூத்தவனாகிய சித்திரகுப்த தேவனும், இரண்டாவது பிள்ளையாகிய சிவஞான பாண்டியனும், பாதுகாப்பாக இருக்கட்டும் என்று மறவர் மக்கள் பனையூருக்குப் பக்கத்தில் காட்டுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.

துரோகிகள் அடையாளம் காட்டி அவர்கள் இருந்த பகுதிக்கு தீ வைத்தார்கள். மன்னர் பூலித்தேவனின் மனைவி கயற்கண்ணி அம்மையார் தீயில் கருகி இறந்தாள். அந்த இடத்தில் அவர்களைப் பாதுகாத்த கொத்தாளித் தேவரும், இன்னொருவரும் பாய்ந்து சென்று இவர்களைப் பாதுகாக்க முனைந்தார்கள். புதுக்கோட்டை சண்டையைப்பற்றிய நாட்டுப்புறப் பாடல் இருக்கிறது. நான் படித்து இருக்கிறேன். அந்த நாட்டுப்புறப்பாடலில் ஒரு செய்தி.

இந்தச் சம்பவம் நடந்த உடன் சின்னப்பிள்ளையாக இருந்த சித்திரகுப்தத் தேவனை வெள்ளைக்காரன் அழித்துவிடுவான் என்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பாஞ்சாலங்குறிச்சி அரண்மனைக்குக் கொண்டு சென்று வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டிய கட்டபொம்முதுரை அவன் அரண்மனையில் வைத்து பாதுகாத்து வளர்த்ததாக புதுக்கோட்டை நாட்டுப்புறப்பாடல் செய்தி சொல்கிறது.

ஆகவேதான், மன்னர் பூலித்தேவன் போர்க்களம் அமைத்து அந்த வீரப்போர்கள் நடந்த அதற்குப்பிறகு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப்பிறகு பாஞ்சாலங்குறிச்சி போர் நிகழ்கிறது. ஆனால், இந்தப் பிள்ளையையும் பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வந்த செய்தியும் இருக்கிறது. ஆகவே, இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் இந்த உணர்வுகளை சொல்வதற்குக் காரணம், அன்புக்குரிய இளைஞர்களே, நாட்டின் விடுதலைக்காக வீரப்போர் புரிந்த மன்னர்கள் நம் மண்ணைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெருமை இந்தியாவில் வேறு எவனுக்கும் கிடையாது.

இந்த மண் வீரம் நிறைந்த மண். மானம் நிறைந்த மண். இந்த மன்னனின் புகழைப் பாடுவது அப்படிப்பட்ட மன்னருக்குப் புகழ் நிலைநாட்டப்பட வேண்டும். சமூகஒற்றுமையை நிலைநாட்டுவோம். மதநல்லிணக்கத்தை பாதுகாத்தவர் பூலித்தேவர்.

வாசுதேவநல்லூரில் அல்லா தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. காரணம் என்னவென்று தெரியுமா? மாபூஸ்கான் இருந்தபோது இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு என்று பள்ளிவாசலை அமைத்துத்தந்தவர் பூலித்தேவர். வாசுதேவநல்லூரிலும் சரி, நெற்கட்டுஞ்செவலிலும் சரி. வழிபடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் பூலித்தேவன். அவரது படையில் பக்கத்தில் பீர்முகமது சாயுபு இருந்தார். மதநல்லிணக்கமும், சகோதரத்துவமும் இருந்த அந்தப் பண்பாட்டை நிலைநாட்டிய மாமன்னர் புகழ்பாடுவதற்கு இந்த இயற்கையும் ஒத்துழைத்து, மழைக்கும் விடுமுறை கொடுத்து மனம்போல இந்த விழா நடைபெறுவதற்கு ஒத்துழைத்த இயற்கைக்கு நன்றிதெரிவிக்கிறேன்.

வாழ்க மன்னர் பூலித்தேவர் புகழ்!

வைகோ இவ்வாறு உரையாற்றினார்.



பூலித்தேவன்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 08, 2010 12:58 pm

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் சாதிய காழ்ப்புணர்ச்சியில் இதை நம்மவர்கள் முன்னிறுத்தவில்லை இனியாவது விழிக்க வேண்டும் அந்நிய தேசமான கேரளா பழசி ராஜா முதல் போராளி என சித்தரித்து திரைப்படம் எடுத்தது அதில் நம் சரத் குமாரும் அற்புதமாக நடித்திருந்தார் ஆனால் பூலித்தேவன் தான் முதல் போராளி என ஒரு சொல் கூட கூறவில்லை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக