புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
157 Posts - 79%
heezulia
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
1 Post - 1%
prajai
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
1 Post - 1%
Pampu
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
322 Posts - 78%
heezulia
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
8 Posts - 2%
prajai
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
3 Posts - 1%
Barushree
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_m10'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சாண்டோ சின்னப்பத்தேவர்'


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 2:53 pm

இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு 'சாண்டோ சின்னப்பத்தேவர்' என்ற பெயர் அவ்வளவாகப் பரிச்சயமாக இராது. ஆனால் 'தேவர் ஃபிலிம்ஸ்' என்று சொன்னால் ஓரளவுக்குத் தெரிந்திருப்பார்கள். அந்தக் காலத்தில் மிருகங்களை வைத்துப்படம் எடுத்தவர் என்று அறிந்திருப்பார்கள். அவருடைய படங்களில் வெற்றிபெற்றவை அதிகம். தாயார் செண்டிமெண்ட் படங்களும் எம்ஜீயாரை வைத்து எடுத்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் நிறைய இருக்கும். ஆனால் அந்தக் காட்சிகளுக்காக உண்மையிலேயே பயிற்சி பெறுவார்கள். அக்காலத்து நடிகர்கள் பலருக்கு உண்மையிலேயே சிலம்பச்சண்டை போன்றவை தெரிந்திருந்தது.

தேவருக்கும் அவையெல்லாம் நன்கு தெரியும். சின்னப்ப தேவருக்குப் பட்டப்பெயராக 'சாண்டோ' என்ற பெயர் > அமைந்திருக்கிறது. சின்னப்பத்தேவர் ஒரு உடற்கலை வல்லுனர். நல்ல உடற்கட்டு உள்ளவர். அவர் எடுக்கும் படங்களில் சிறிய வேடங்களிலும் அடிவாங்கும் வில்லன் வேடங்களிலும் நடிப்பார். மதுரைவீரன் படத்தில் சங்கிலிக் கருப்பனாக மிகக் குறைவான நேரமே வருவார். ஆனால் அவருடைய உருவம் அப்படியே மனதில் நிற்கிறது.

பெரிய வள்ளல். பெரிய முருக பக்தர். மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர். அவரால் உதவிசெய்யப்பட்டவர்கள் அனேகர். ஆனால் கறாரான ஆசாமி. பழனியில் தேர் செய்துவிட்டிருக்கிறார். ரத்னகிரி போன்ற பல முருகன் ஸ்தலங்களும் அவரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. குன்றக்குடி வைத்தியநாதன், திருமுருக கிருபாநந்த வாரியார், மதுரை சோமசுந்தரம் முதலியவர்களை சினிமாவில் நடிக்கவைத்தவர். மருதமலை மாமணியே முருகையா பாட்டில், >'தேவரின் குலம் காக்கும் வேலையா, ஐயா' என்பதில் வரும் 'தேவர்' என்னும் சொல்லால் விண்ணுலக தேவர் மட்டுமன்றி சின்னப்பத்தேவரும் குறிப்பிடப்படுகிறார்.

பரமநாஸ்திகரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவை ஆஸ்திகராக நடிக்கவைத்த பெருமையும் அவருக்கு உண்டு. இந்த 'சாண்டோ' என்ற சொல் இன்னும் பலருக்கு அடைமொழியாக விளங்கியது.

எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்! :
‘அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?’

‘எம்.ஜி.ஆர்.’

‘நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?’

‘ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?’ – கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. ‘அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்.’

தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், ‘வரேங்க’ என்றபடி காரில் ஏறினார். எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது.

அதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர், நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ‘அல்லா மீது ஆணையாக’ என்ற வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா ஏ.எல். நாராயணனை வற்யுறுத்தினார்.

முதலாளி டி.ஆர்.எஸ், ‘டயலாக் என்ன இருக்கோ, அதையே பேசு ராமச்சந்திரா’ என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார்.

எம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். ‘ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ’ என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் ÷ பாலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

குற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை நம்பினார். 1956 - எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார்.
'சாண்டோ சின்னப்பத்தேவர்'  Picture-049

எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம் நல்லபடியாகவே தயாராகி விட்டது. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர்.


‘அண்ணே! உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா? பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பி ச்சாப் பரவாயில்லயா?’

‘காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா?’ – எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா?’

‘பயமா, எனக்கா?’

‘இல்லண்ணே ஒரு பேச்சுக்கு…’

தேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா? எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய வார்த்தைகள்தானா? என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்?

தேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ என்கிற பிடிவாதமும் மிரட்டலும் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.

‘அண்ணே…’

‘என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க’ - எம்.ஜி.ஆர். சொன்னார்.

‘தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்.’ – தேவர் சூடானார்.

‘புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல.’
தேவர் அமைதியாக வெளியேறி விட்டார்.

தேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம் ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின் தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை.

எம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். ‘அடுத்த ரிலீஸ் எப்ப அண்ணே?’ என்றார் ஜாலியாக.

‘பார்க்கலாம்’ தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

‘மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார் கிட்டப் போய் நிக்குறது?’

எம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை. தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர். வீறுகொண்டு எழுந்தார். ‘யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொரு வன் குரல் கொடுக்கலாம்?’ விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு.

அலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார்.

சக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார்.

‘காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார். ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்.’
எம்.ஜி.ஆர். அடங்கி விட்டார்......................
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, வியந்த, படித்து மகிழ்ந்த (எடிட் செய்த) புத்தகம் இது. சாண்டோ சின்னப்பா தேவர். சினிமாவையும் சிவமைந்தனையும் வெறித்தனமாக நேசித்த ஒரு மாறுபட்ட மனிதரின் வாழ்க்கை வரலாறு.


சினிமாவுக்குள் தேவர் எப்படி நுழைந்தார்? ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் நட்பு எப்படி இருந்தது? ஏன் முறிந்தது? மீண்டும் எப்படித் துளிர்த்தது? எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுப்பதற்குள்ளாகவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடிந்து போயிருக்கிறார்கள். தேவரால் மட்டும் எப்படி தொடர்ந்து இத்தனை படங்களைக் கொடுக்க முடிந்தது? ஒரே இனத்தைச் சார்ந்தவர் என்றாலும் தேவர் ஏன் சிவாஜியை வைத்து படம் எடுக்கவில்லை? எம்.ஜி.ஆரையும் முருகனையும் மட்டுமே நம்பி படம் எடுத்த தேவர், திடீரென மிருகங்களை நம்ப ஆரம்பித்தது ஏன்? மொழியே தெரியாமல், பாலிவுட்டிலும் நுழைந்து தேவர் கலக்கியது எப்படி? இவை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

பூஜை போட்டு மூன்றே அமாவாசையில் படம் முடியவேண்டும். அடுத்த பௌர்ணமியில் படம் ரிலீஸ் ஆக வேண்டும். இதுதான் தேவரின் கணக்கு. யாருக்காகவும் எதற்காகவும் தொழிலில் சுணக்கம் வருவதை தேவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை, அது எம்.ஜி.ஆராகவே இருந்தாலு ம்கூட. கோலிவுட்டின் இடிஅமீன் இதுவே அவருக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர்.

தேவர் பற்றியும் புத்தகம் பற்றியும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நீ ங்கள் புத்தகத்தை வாசித்து அனுபவிக்கும் சுகத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

தேவரது வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட சுவாரசியங்கள். புத்தகத்தை எழுதியிருக்கும் நண்பர் பா. தீனதயாளனின் நடை அதை அதிசுவாரசியமாக்கியிருக்கிறது. புத்தகத்தைப் படிக்கும்போது நமக்கு தேவரது வசவுகளையும் பாசத்தையும் அனுபவித்துக் கொண்டே தேவர் பிலிம்ஸில் வேலை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. தேவரது வாழ்க்கையோடு அரைநூற்றாண்டு கால கோடம்பாக்கத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துக் கொடுத்திருக்கிறார் தீனத யாளன்.

கிழக்கில் வெளியாகியிருக்கும் சினிமா கலைஞர்கள் குறித்த புத்தகங்களிலேயே மிகச் சிறந்ததாக நான் குறிப்பிடுவது இந்தப் புத்தகத்தைத்தான்.


நன்றி : முகில் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக