புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
42 Posts - 38%
heezulia
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
38 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
4 Posts - 4%
Guna.D
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
1 Post - 1%
mruthun
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
113 Posts - 45%
ayyasamy ram
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
87 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_m10ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Oct 01, 2010 3:50 pm

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Aurangzeb

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத்
தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம்
மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து
சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை
வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத்
திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில்
சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப்
பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு.
வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை
கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட
சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க
ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு
உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும்
பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு
உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும்
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர
இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின்
நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங்
இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா,
அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள்
இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393
மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை
வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ
இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை.
ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது
எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக்
கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார்.
உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின்
ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால்
மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த
குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய
ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால்,
வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத
போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி
வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை
தடைப்படுத்தவில்லை.
ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம்
உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர்.
இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன்,
சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி
ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என
அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும்,
முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள்
வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற
அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப்
புரியும். அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு
உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை
நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப்.
விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார்
உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக
அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று
மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால்
ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின்
கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும்
என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து
குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது''
என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர்
கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல்
ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம்
வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது.
''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள்
ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று
கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின்
தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர்
ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி
வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை
ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள்
கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற
கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள்
கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில்
நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர்.
ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை.
இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த
அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது
விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும்
வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள
சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள
சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில்
முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம்
நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது,
மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு
துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த
இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி
விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு
நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி
மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில்
இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில
கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர்
(Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மத
சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு,
பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு
போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை
துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும்
பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு
வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப்
பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல்
விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

நன்றி நவாஸ்...!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 3:59 pm

நல்ல பதிவு ..... நன்றி தோழரே ....

முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்தவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் (1657 - 1707)

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 01, 2010 4:01 pm

///ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை
துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும்
பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?
///

சிந்திக்க வேண்டிய அருமையான கேள்வி! அருமையான பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மாஸ்டர்!

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 01, 2010 4:16 pm

தவறான தகவல்கள் பரப்புவர்களுக்கு சரியான பதிலடி...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Oct 01, 2010 5:13 pm

கார்த்திக் wrote:நல்ல பதிவு ..... நன்றி தோழரே ....

முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்தவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் (1657 - 1707)

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு இன்னும் வரும்
இந்திய வரலாறுகள் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 01, 2010 5:27 pm

நிச்சயமாக நான் அறிந்தவரை அவுரங்கசிப் சிறந்த மனிதர் ,,,அவர் அரசராக இருந்தும் கூட மக்கள் பணத்தை தனக்கு உபயோகப் படுத்தாத உத்தமர் ,,
தன்னுடைய செலவுக்கு அவரே உழைத்து பெற்றார் ,,,,

குரான் எழுதியும் ,முசல்லா தயாரித்தும் தன்னுடைய வாழ்வினைக் கழித்த மனிதர் ,,,,,,,
அவர் உண்மையான முஸ்லிமாக இருந்ததால்தான் பிற சமுதயாதினரையும் மதித்து ஆட்சி நடத்தியா மாமன்னர்

உண்மையான தகவலை பதிவிட்டதற்கு என்னுடைய நன்றிகள் மாஸ்டர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 01, 2010 9:44 pm

நல்ல பதிவு.. ! இப்போதெல்லாம் பழைய அரசர்களை இழிவுபடுத்தும் நாசகார வேலைகள் நடைபெறுகின்றன. மதவிஷமிகள் செய்யும் இந்த நச்சுவேலைக்கு மக்கள் பலியாகக்கூடாது.!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Oct 01, 2010 11:04 pm

சரியான நேரத்தில் சரியான பகிர்வு... அரிய தகவல்கள்...இதுவரை நான் படிக்காத தகவல்கள் இவை....

அன்பு நன்றிகள் தோழரே பகிர்ந்தமைக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 11:09 pm

இந்த தகவல் களஞ்சியம் பலரின் ஞானக் கண்களைத் திறந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

omar.a.latif@gmail.com
omar.a.latif@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 04/10/2010

Postomar.a.latif@gmail.com Tue Oct 05, 2010 10:48 am

அருமையான கட்டுரை , இன்னும் உண்மைகள் வெளிவரட்டும் , பகைமை அழியட்டும் .

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக