புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
251 Posts - 52%
heezulia
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
18 Posts - 4%
prajai
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
5 Posts - 1%
Barushree
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_m10தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை


   
   
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Wed Sep 29, 2010 2:21 pm

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை உடனடியாக மூட, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்தில், தாமிர உருக்காலை துவங்க ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. முதல்கட்டமாக, தினசரி 234 டன் தாமிரம், 638 டன் சல்ப்யூரிக் ஆசிட் தயாரிக்கும் திறனில் இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 1995ம் ஆண்டு முதலில் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 1995ம் ஆண்டு மே மாதம் ஒப்புதல் வழங்கியது.

இதைனையடுத்து, 1995ம் ஆண்டு மே மாதம் மாசு கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் வழங்கியது. தாமிர உருக்காலை துவங்குவதற்கு அப்போது பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கிய ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை, தூத்துக்குடி சி.ஐ.டி.யு., மாவட்ட குழுவின் செயலர் கனகராஜ், இந்திய கம்யூ., மாவட்டச் செயலர் மோஹன்ராஜ் ஆகியோர்மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மாசு, உடல் நலத்துக்கு தீங்கு விளையும் என்பதை பற்றி பொருட்படுத்தாமல், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளன. முதலில் குஜராத், கோவா மாநிலங்களில் துவங்குவதாக இருந்தது. இம்மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரிக்கு மாற்றப்பட்டது. ஆலை துவங்க அம்மாநில அரசு முதலில் அனுமதி வழங்கியது. அதன்பின், ரத்தினகிரி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இந்த ஆலைக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டும், வழங்கப்பட்ட உரிமத்தை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்தது.

தூத்துக்குடி ஒரு கடலோரப் பகுதி. மன்னார் வளைகுடா பகுதியில் வருகிறது. கடல் தாவரங்கள் இங்கு அதிகம் காணப்படுகிறது. இதன் அருகில் 21 தீவுகள் உள்ளன. தேசிய கடல் பூங்காவாக இப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள பெரிய தொழிற்சாலைகள் வெளியேற்றும் சல்பர் டை ஆக்சைடு மூலம், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் இந்த தொழிற்சாலை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும், மத்திய, மாநில அரசுகள் அவசரகதியில் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில், சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையின் நடவடிக்கைகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்' என கூறப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் அடங்கிய,டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் வி.பிரகாஷ், வக்கீல்கள் எஸ்.கிருஷ்ணசாமி, ரமா தேவி பி.வி.எஸ்.கிரிதர் ஆஜராகினர்.

ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 25 கி.மீ., தூரத்துக்கு அப்பால் தொழிற்சாலை அமைய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நீரி) அறிக்கையின்படி, மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள நான்கு தீவுகளின் அருகில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது. தொழிற்சாலைக்கும், நான்கு தீவுகளுக்கும் இடையே ஆறு, ஏழு, 15 கி.மீ., தூரம் தான் உள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் தான் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், விதிகள் மீறப்பட்டுள்ளன.

இதற்கு அனுமதி வழங்குவதற்கு முன், மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வு அறிக்கை போதுமானதாக இல்லை. ஒரு மாத அளவிலான புள்ளி விவரங்கள் தான் உள்ளன. இந்த அறிக்கையின்படி, மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன. இதில் இருந்து, மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் மனதை செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஆலையை நிறுவியதன் மூலம், இதை மத்திய அரசு நிராகரிக்க இந்தக் காரணமே போதும். இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டதில் அதிகாரிகள் அவசரம் காட்டியிருப்பது, "நீரி'யின் அறிக்கையில் இருந்து தெரிகிறது.

தாமிர உருக்காலைக்கு மற்ற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் போது, பொதுமக்களை காப்பதில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனத்துடன், எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பொதுமக்கள் கருத்து கேட்பு எதையும் அதிகாரிகள் நடத்தவில்லை. பொதுமக்களின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக, சட்டப்படி நடத்த வேண்டிய கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தாமல் அதிகாரிகள் விட்டு விட்டனர். இதை எங்களால் பாராட்ட முடியவில்லை. இந்த தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுகளில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆர்சனிக், புளோரைடு அடங்கியுள்ளது என, "நீரி'யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொழிற்சாலை அமைந்துள்ள இடமே, கடுமையாக மாசுபட்டுள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மாதிரியிலும் புளோரைடு, ஆர்சனிக், காப்பர், குரோம் உள்ளது. சட்ட விதிமுறைகளை புறக்கணித்து இத்தொழிற்சாலை துவங்கப்பட்டதை காட்டுவதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தும், அதை மறுக்கும் விதத்தில் சரியான ஆதாரங்களை தொழிற்சாலை தரப்பில் தாக்கல் செய்யவில்லை.

தரமான வாழ்க்கையை வாழ ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதற்கு இடையூறு ஏற்படும் விதத்திலோ, ஆபத்தை விளைக்கும் வகையிலோ, சட்டத்தை மீறி யாரும் செயல்பட்டால், அதை கடுமையாக கருதி, அந்த மனிதனின் உரிமையை பாதுகாக்க வேண்டும். குடிமக்களின் சுகாதாரம், உடல் நலத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் அரசுக்கு பொறுப்பு உள்ளது. தண்ணீர், காற்றில் மாசு ஏற்படுத்துவதை கோர்ட்டுகள் எளிதில் எடுத்துக் கொள்ளாது. ஆறுகள், ஓடைகள், மற்றும் நீர் நிலைகளில் விஷக் கழிவுகளை வெளியேற்றி, பொதுமக்களின் சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிப்பவர்களை கடுமையாக அணுக வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, காற்றில் விஷத்தன்மை வாய்ந்த கழிவை ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியேற்றுவதன் மூலம், அந்தப் பகுதியைச் சுற்றி வாழ்பவர்களுக்கு கடும் விளைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே, மாசு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை இப்போதாவது நிறுத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் நடவடிக்கையால், அந்தப் பகுதியில் மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் உடல்நலம், பாதுகாப்பிலும் விளைவை ஏற்படுத்தும். இதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், இந்த தொழிற்சாலை இயங்கினால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்பதால், இந்த முடிவை எடுக்கிறோம்.

தொழிலாளர்களை நிர்கதியில் விட நாங்கள் விரும்பவில்லை. எனவே, வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அமைப்புகளில் தொழிலாளர்களின் கல்வித் தகுதி, அனுபவத்தை கருத்தில் கொண்டு வேலை கிடைக்க மாவட்ட கலெக்டர், அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை உடனடியாக மூடும்படி உத்தரவிடப்படுகிறது. தொழில் தகராறு சட்டப்படி, ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற தொழிலாளர்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக