புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் விண்டோஸ் விஸ்தா


   
   

Page 1 of 2 1, 2  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 11:35 pm

மேற்கண்ணோட்டம்

Windows Vista –விற்கான Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு (LIP), Windows –இல் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளுக்குக் குறிப்பிட்ட அளவு மொழிபெயர்ப்பைத் தருகிறது. LIP –ஐ நிறுவிய பின், வழிகாட்டிகள், உரையாடல் பெட்டிகள், மெனுக்கள், உதவி மற்றும் ஆதரவுத் தலைப்புகள், இவற்றோடு பயனர் இடைமுகத்தில் உள்ள பிற பகுதிகளில் இருக்கும் உரை LIP மொழியில் தெரியும். மொழிபெயர்க்கப்படாத உரை, Windows Vista –வின் அடித்தள மொழியில் இருக்கும்.. உதாரணமாக, நீங்கள் Windows Vista -வின் ஸ்பானிஷ் மொழிப் பதிப்பை வாங்கிவிட்டு காட்டலன் மொழிக்கான LIP -ஐ நிறுவியிருந்தால் சில பகுதிகளின் உரை ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். நீங்கள் பல LIP –களை நிறுவலாம். இதன் மூலம் கணினியின் ஒவ்வொரு பயனரும் தான் விரும்பும் மொழியில் பயனர் இடைமுகத்தைப் பார்க்கலாம்.

இயங்குதள தேவைகள்

Supported Operating Systems: Windows Vista

• Microsoft Windows Vista
• பின்வரும் மொழி(களில்) பயனர் இடைமுகம்: ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ருஷ்ய மொழி, செர்பியன் (லத்தீன்), க்ரோஷியன், நார்வீஜியன் (Bokmål)
• பதிவிறக்கம் செய்ய 4.63 Mb காலி இடம்
• அமைவுக்கு 15 Mb காலி இடம்

ஆதரிக்கப்படும் தளங்கள்: LIPகள் Windows Vista –வின் 32 பிட் பதிப்புகளில் மட்டுமே இயங்கும். அவற்றை Windows –இன் முந்தைய பதிப்புகளிலோ Windows Vista –வின் 64 பிட் பதிப்புகளிலோ நிறுவ முடியாது.

தகவலிறக்கம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 11:36 pm

Windows Vista –விற்கான மொழி இடைமுகத் தொகுப்பு

Windows Vista –விற்கு மொழி இடைமுகத் தொகுப்பு ஒன்றை நிறுவுவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நிறுவலுக்கு முந்தைய தகவலையும் பொதுவான தகவலையும் இந்த ஆவணம் தருகிறது.


Windows Vista –விற்கான மொழி இடைமுகத் தொகுப்பு பற்றி



Windows Vista –விற்கான இந்த மொழி இடைமுகத் தொகுப்பு (LIP), Windows –இல் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளுக்குக் குறிப்பிட்ட அளவு மொழிபெயர்ப்பைத் தருகிறது. LIP –ஐ நிறுவிய பின், வழிகாட்டிகள், உரையாடல் பெட்டிகள், மெனுக்கள், உதவி மற்றும் ஆதரவுத் தலைப்புகள், இவற்றோடு பயனர் இடைமுகத்தில் உள்ள பிற பகுதிகளில் இருக்கும் உரை LIP மொழியில் தெரியும். மொழிபெயர்க்கப்படாத உரை, Windows Vista –வின் அடித்தள மொழியில் இருக்கும்.. உதாரணமாக, நீங்கள் Windows Vista -வின் ஸ்பானிஷ் மொழிப் பதிப்பை வாங்கியிருந்தால் சில பகுதிகளின் உரை ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். நீங்கள் பல LIP –களை நிறுவலாம். இதன் மூலம் கணினியின் ஒவ்வொரு பயனரும் தான் விரும்பும் மொழியில் பயனர் இடைமுகத்தைப் பார்க்கலாம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 11:37 pm

LIP –ஐ நிறுவுவதற்கு முன்

● நீங்கள் LIP -ஐ நிறுவ விரும்பும் கணினி, Windows Vista –வின் செயற்படுத்தப்பட்ட பதிப்பு ஒன்றில் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் Windows நகல் நேர்மையானதா என செயற்படுத்தல் உறுதிப்படுத்துகிறது. Microsoft மென்பொருள் உரிம விதிமுறைகள் அனுமதிக்கும் எண்ணிக்கையை விட அதிக கணினிகளில் அது நிறுவப்படாமல் இருக்கிறதா என்பதையும் அது உறுதிப்படுத்துகிறது.
● நீங்கள் நிறுவும் LIP, Windows Vista –வின் அடித்தள மொழியால் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, நீங்கள் Windows Vista –வின் ஸ்பானிஷ் மொழிப் பதிப்பை வாங்கியிருந்தால், குறிப்பிட்ட சில, LIP –களை மட்டுமே அந்தப் பதிப்பில் நிறுவ முடியும். நீங்கள் நிறுவும் LIP –க்கான முன்தேவைகளைப் பற்றிய விவரங்கள் LIP கோப்புகளைக் கொண்ட Microsoft வலைத்தளத்தில் தரப்பட்டிருக்கும்.


LIP –ஐ நிறுவுதல்

● LIP –ஐ நிறுவுவதற்கு நீங்கள் நிர்வாகியாக உள்நுழைய வேண்டும். நிறுவும்போது மற்ற எல்லாப் பயனர்களும் வெளியேறியிருக்கிறார்களா என்று நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
● அமைவு நிரல், நிறுவுவதன் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு வழிகாட்டும்; பிறகு வெளியேறும்படி உங்களைச் செயலழைக்கும். நீங்கள் மீண்டும் உள்நுழைந்து காட்சி மொழியை LIP மொழியாக மாற்றினால், Windows நீங்கள் நிறுவிய மொழியில் தெரியும்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 11:43 pm

ஆதரிக்கப்படும் தளங்கள்

LIPகள் Windows Vista –வின் 32 பிட் பதிப்புகளில் மட்டுமே இயங்கும். அவற்றை Windows –இன் முந்தைய பதிப்புகளிலோ Windows Vista –வின் 64 பிட் பதிப்புகளிலோ நிறுவ முடியாது.

நிறுவலுக்குப் பின் செய்ய வேண்டியவை

Windows –ஐ LIP மொழியில் தெரியவைக்க, நீங்கள் காட்சி மொழியைப் பின்வரும் வழிமுறைகள் மூலம் மாற்ற வேண்டும்:

1. தொடக்கம் பொத்தானை கிளிக் செய்து கட்டுப்பாட்டுப் பலகம் என்பதை கிளிக் செய்யவும். பிறகு கடிகாரம், மொழி மற்றும் வட்டாரம் என்பதை கிளிக் செய்து வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் என்பதை கிளிக் செய்யவும்.

2. விசைப்பலகைகள் மற்றும் மொழிகள் தாவலை கிளிக் செய்யவும்.

3. காட்சி மொழி என்பதற்குக் கீழ், பட்டியலிலிருந்து ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து சரி என்பதை கிளிக் செய்யவும்.

ஒரு LIP நிறுவப்பட்டதும் அது கணினியில் உள்ள எல்லாப் பயனர் கணக்குகளுக்கும் கிடைக்கும். மற்ற பயனர்கள் தங்கள் கணக்கில் உள்நுழைந்து மேற்கண்ட செயல்முறையைப் பின்பற்றித் தங்கள் காட்சி மொழியை மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் காட்சி மொழியை மாற்றும்போது அது உங்கள் பயனர் கணக்கிற்கு மட்டுமே மாறுகிறது. அது வரவேற்புத் திரையில் (நீங்கள் Windows –இல் உள்நுழையப் பயன்படுத்தும் திரை) மாறுவதில்லை. வரவேற்புத் திரையில் காட்சி மொழியை மாற்ற, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 11:45 pm

1. தொடக்கம் பொத்தானை கிளிக் செய்து கட்டுப்பாட்டுப் பலகம் என்பதை கிளிக் செய்யவும். பிறகு கடிகாரம், மொழி மற்றும் வட்டாரம் என்பதை கிளிக் செய்து வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் என்பதை கிளிக் செய்யவும்.

2. நிர்வாகம் என்ற தாவலை கிளிக் செய்து, ஒதுக்கப்பட்ட கணக்குகளுக்கு நகலெடு என்பதை கிளிக் செய்யவும். நிர்வாகிக்கான கடவுச்சொல்லை அளிக்கும்படி அல்லது உறுதிசெய்யும்படி கேட்கப்பட்டால், கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும் அல்லது உறுதிசெய்யவும்.

3. முறைமைக் கணக்குகள் (அக முறைமை, அகச் சேவை மற்றும் பிணையச் சேவை) என்ற தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.

பயனர் இடைமுகத்தின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பகுதிகள் LIP மொழியில் தெரியும். பயனர் இடைமுகத்தின் சில பகுதிகள் அடித்தள மொழியிலேயே இருக்கும். உதாரணமாக, நிகழ்வுக் காட்டி, MMC இணைநிரல்கள் போன்ற நிர்வாகக் கருவிகள்.

Windows –இன் சில பகுதிகளில் தலைப்பிற்கான இணைப்பு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும், ஆனால் வழிகாட்டியின் முக்கியத் தகவல் உரை அடித்தள மொழியிலேயே இருக்கும். இது ஒரு LIP வழக்கமாகச் செயல்படும் முறைதான். உதாரணமாக, வரவேற்பு மையத்தில் இருக்கும் Windows எளிய இடமாற்றம், ஆன்லைன் செல் ஆகியவற்றுக்கான இணைப்புகள் இப்படி இருக்கும்.

LIP மொழிக்காக உருவாக்கப்பட்ட யூனிகோட் அல்லாத நிரல்களில் படிக்க முடியாத எழுத்துக்குறிகள் தெரியலாம். இந்த நிரல்களுக்குப் பயனர் இடைமுகக் காட்சியை LIP மொழிக்கு மாற்ற, நீங்கள் முறைமை இடத் தகவலை மாற்ற வேண்டும். நிறுவல் வழிகாட்டியின் கடைசிப் பக்கத்தில் உள்ள மாற்றங்களை முறைமைக் கணக்குகளுக்குப் பயன்படுத்து என்ற தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுத்து, அல்லது பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி முறைமை இடத் தகவலை மாற்றலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 11:46 pm

1. தொடக்கம் பொத்தானை கிளிக் செய்து கட்டுப்பாட்டுப் பலகம் என்பதை கிளிக் செய்யவும். பிறகு கடிகாரம், மொழி மற்றும் வட்டாரம் என்பதை கிளிக் செய்து வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் என்பதை கிளிக் செய்யவும்.

2. நிர்வாகம் என்ற தாவலை கிளிக் செய்து, பிறகு யூனிகோட் அல்லாத நிரல்களுக்கான மொழி (முறைமை இடம்) என்பதன் கீழ் முறைமை இடத்தை மாற்று என்பதை கிளிக் செய்யவும். நிர்வாகிக்கான கடவுச்சொல்லை அளிக்கும்படி அல்லது உறுதிசெய்யும்படி கேட்கப்பட்டால், கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும் அல்லது உறுதிசெய்யவும்.

3. மொழியைத் தேர்ந்தெடுத்து சரி என்பதை கிளிக் செய்யவும்.

4. மாற்றங்கள் செயலுக்கு வர நீங்கள் உங்கள் கணினியை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும்.

5. உங்கள் கணினியை மீண்டும் தொடங்க, இப்போது மீண்டும் தொடங்கு என்பதை கிளிக் செய்யவும்.


Internet Explorer காண்பிக்கும் சில பக்கங்களில், படிக்க முடியாத எழுத்துக்குறிகள் இருக்கலாம். LIP நிறுவல் Internet Explorer மொழியை மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். வலைப்பக்கங்களை LIP மொழியில் சரியாகத் தெரியவைக்க, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி Internet Explorer –இல் அந்த மொழியைச் சேர்க்க வேண்டும்:

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 11:47 pm

1. தொடக்கம் பொத்தானை கிளிக் செய்து Internet Explorer என்பதை கிளிக் செய்யவும்.

2. கருவிகள் பொத்தானை கிளிக் செய்து இணைய விருப்பங்கள் என்பதை கிளிக் செய்யவும்.

3. பொது என்ற தாவலை கிளிக் செய்து மொழிகள் என்பதை கிளிக் செய்யவும்.

4. மொழி விருப்பம் என்ற உரையாடல் பெட்டியில் சேர் என்பதை கிளிக் செய்யவும்.

5. மொழியைச் சேர் என்ற உரையாடல் பெட்டியில், பட்டியலிலிருந்து ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து சரி என்பதை கிளிக் செய்யவும்.

தெரிந்த பிரச்சினைகள்

தற்போது இந்த LIP –இல் தெரிந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 11:48 pm

LIP –ஐ நிறுவல்நீக்குதல்

நீங்கள் LIP –களை நிறுவல்நீக்கலாம் அல்லது அவற்றைக் கணினியில் வைத்திருக்கலாம், ஆனால்.காட்சி மொழியை மீண்டும் அடித்தள மொழிக்கு மாற்றவும்.

ஒரு LIP –ஐ நிறுவல்நீக்க, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

1. தொடக்கம் பொத்தானை கிளிக் செய்து கட்டுப்பாட்டுப் பலகம் என்பதை கிளிக் செய்யவும். பிறகு கடிகாரம், மொழி மற்றும் வட்டாரம் என்பதை கிளிக் செய்து வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் என்பதை கிளிக் செய்யவும்.

2. விசைப்பலகைகள் மற்றும் மொழிகள் தாவலை கிளிக் செய்யவும்.

3. காட்சி மொழி என்பதற்குக் கீழ், மொழிகளை நிறுவு/நிறுவல்நீக்கு, என்பதை கிளிக் செய்து பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும். நிர்வாகிக்கான கடவுச்சொல்லை அளிக்கும்படி அல்லது உறுதிசெய்யும்படி கேட்கப்பட்டால், கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும் அல்லது உறுதிசெய்யவும்.

காட்சி மொழியை மீண்டும் அடித்தள மொழிக்கு மாற்ற, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

1. தொடக்கம் பொத்தானை கிளிக் செய்து கட்டுப்பாட்டுப் பலகம் என்பதை கிளிக் செய்யவும். பிறகு கடிகாரம், மொழி மற்றும் வட்டாரம் என்பதை கிளிக் செய்து வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் என்பதை கிளிக் செய்யவும்.

2. விசைப்பலகைகள் மற்றும் மொழிகள் தாவலை கிளிக் செய்யவும்.

3. காட்சி மொழி என்பதற்குக் கீழ், பட்டியலிலிருந்து ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து சரி என்பதை கிளிக் செய்யவும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 11:50 pm

பதிப்புரிமை


இந்த ஆவணத்தில் உள்ள URL, இணைய வலைத்தள இணைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தகவலும் முன்னறிவிப்பின்றி மாற்றப்படுவதற்குரியது. இது தகவலுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது.. இந்த ஆவணத்தைப் பயன்படுத்துவதால் அல்லது பயன்படுத்துவதன் விளைவுகளால் ஏற்படக்கூடிய அபாயங்கள் முழுவதும் பயனரைச் சார்ந்தவை. Microsoft Corporation வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்த வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. வேறு விதமாகக் குறிப்பிடப்படாத பட்சத்தில், இதில் சித்தரிக்கப்படும் உதாரண நிறுவனங்கள், அமைப்புகள், தயாரிப்புகள், களப் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், லோகோக்கள், மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள் ஆகியவை கற்பனையானவை; எந்த நிஜ நிறுவனம், அமைப்பு, தயாரிப்பு, களப் பெயர், மின்னஞ்சல் முகவரி, லோகோ, மனிதர், இடம் அல்லது நிகழ்வைப் பற்றியும் குறிப்பிடுவது நோக்கமல்ல அல்லது அவை நிஜம் எனப் புரிந்துகொள்ளப்படக் கூடாது.

பொருந்தும் அனைத்துப் பதிப்புரிமைச் சட்டங்களையும் பின்பற்றுவது பயனரின் பொறுப்பே. பதிப்புரிமைப்படி வழங்கப்படும் உரிமைகளைக் குறைக்காமல், இந்த ஆவணத்தின் எந்த ஒரு பகுதியும் Microsoft Corporation –இன் வெளிப்படையான எழுத்துமூல அனுமதி இன்றி நகலெடுக்கப்படவோ, தரவு எடுக்கும் அமைப்பு ஒன்றில் வைக்கப்படவோ புகுத்தப்படவோ, எந்த வடிவத்திலும் அல்லது எம்முறையிலும் (மின்னணுவழியாக, இயந்திர அமைப்பு மூலம், நிழற்பட நகலெடுத்தல் மூலம், பதிவுசெய்தல் மூலம், அல்லது வேறு வழிகளில்), அல்லது எந்த நோக்கத்திற்காகவும், பரிமாற்றப்படவோ கூடாது.

இந்த ஆவணத்தின் கருப்பொருள் தொடர்பாக Microsoft –க்குக் காப்புரிமைகள், காப்புரிமை விண்ணப்பங்கள், வணிகமுத்திரைகள், பதிப்புரிமைகள், அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகள் இருக்கக்கூடும். Microsoft மென்பொருள் உரிம விதிமுறைகளில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாத பட்சத்தில், இந்த ஆவணத்தை உங்களுக்கு வழங்குவதன் மூலம் உங்களுக்கு இந்தக் காப்புரிமைகள், வணிகமுத்திரைகள், பதிப்புரிமைகள், அல்லது பிற அறிவுசார் சொத்துகளுக்கு உரிமம் வழங்கப்படவில்லை.

© 2006 Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Microsoft, Internet Explorer, Windows Vista ஆகியவை அமெரிக்கா மற்றும்/அல்லது பிற நாடுகள் அல்லது வட்டாரங்களில் Microsoft Corporation –இன் வணிகமுத்திரைகள் அல்லது பதிவுசெய்யப்பட்ட வணிகமுத்திரைகள்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள நிஜ நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளின் பெயர்கள் அவ்வவற்றின் உரிமையாளர்களின் வணிகமுத்திரைகளாக இருக்கக்கூடும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 12:32 am

தமிழில் விண்டோஸ் விஸ்தா Vista_10

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக