புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
20 Posts - 65%
heezulia
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
62 Posts - 63%
heezulia
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிக்கவில்லை!


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Wed Sep 22, 2010 4:20 pm

இங்கிலாந்து நாட்டிலிப்போ
வெந்துதகிக்கும் வெய்யில்
பிடிக்கவில்லை!

இங்கிதமறிந்து பழகமறுக்கும்
நண்பர்கள் சுயநலநட்பு
பிடிக்கவில்லை!

அங்கொன்றும் இங்கொன்றும்
விதமாய்நடிக்கும் உறவுகள்
பிடிக்கவில்லை!

பங்கம்தரும் விதமான இரகசியங்களை
பகிரங்கமாக்குவது
பிடிக்கவில்லை!

பணம்வந்ததும் பழையதை
மறக்கும் பாமரர்செயல்
பிடிக்கவில்லை!

மணந்தரும் மலர்களின் திறமைகளை
மெச்சமறுப்பது
பிடிக்கவில்லை!

மதந்தரும் மகிமைகளை
ஊடகமாக்கும் உன்மத்தரைப்
பிடிக்கவில்லை!

சினந்தரும் வதந்தியால் சீர்பெற்றநல்வாழ்வுகள்
சின்னாபின்னமாவது
பிடிக்கவில்லை!

யார்கெட்டால் என்னநான் வாழ்ந்தால்
போதுமென்ற சிந்தைகள்
பிடிக்கவில்லை!

பெயர்கெட்டால் என்னவிப்போ?
எப்படியும் வாழ்வோம்
என்பதும் பிடிக்கவில்லை!

பார்கெட்டால் என்னபதவிதான் பெரிது
என்றவர் போக்கும்
பிடிக்கவில்லை!

ஆர்கெட்டால் என்னஆம்பிளை நானெனும்
ஆடவரையும்
பிடிக்கவில்லை!

திறமைகள், கடும்முயற்சிகள்
கணக்கிலெடுக்காமற் போவது
பிடிக்கவில்லை!

புலமைகள் சிலபொழுதுகளில்
களவெடுக்கப் படுவதும்
பிடிக்கவில்லை!

தலைமைகள் தந்தவறுகளை
தம்கீழார் தலைகளிற் சுமத்துதல்
பிடிக்கவில்லை!

நிலைமைகளறிந்து தம்பெற்றோருடன்
ஒத்துநடவாத சிறார்களையும்
பிடிக்கவில்லை!

செய்யாத தவறுக்குத் தண்டனை
பெறும் கோழைகளைப்
பிடிக்கவில்லை!

செய்யாத தவறை
செய்ததாய் நிறுவும் சீற்றமும்
பிடிக்கவில்லை!

பெய்யாத மழைமுகிலாய்
சொல்லாத காதல்களும்
பிடிக்கவில்லை!

கொய்யாத மலராய்
கூரையைப் பார்க்கும் குமர்கள்மூச்சும்
பிடிக்கவில்லை!

சுற்றிவளைத்து சொன்னதையே
சொல்லும் சிலர்கதைகள்
பிடிக்கவில்லை!

மெச்சிவதைத்து காரியம் ஆற்றுவிக்கும்
கயமைகள்
பிடிக்கவில்லை!

தட்டிக்கழித்து கடமைகளை
தாமதமாக்குபவர்களைப்
பிடிக்கவில்லை!

நீட்டிநிமிர்ந்து நிதமும்நித்திரையில்
நேரம்போக்குபவர்களை
பிடிக்கவில்லை!

சொல்வதொன்று
செய்வதொன்று செய்பவர்களைப்
பிடிக்கவில்லை!

கொள்கையென்று இல்லாத
மனிதசகவாசமுந்தான்
பிடிக்கவில்லை!

கல்கவென்று தன்குழந்தைகளை
வழிநடத்தா பெற்றோரைப்
பிடிக்கவில்லை!

வெல்வதென்று
நோக்கமில்லாப் போட்டியாளர்களைப்
பிடிக்கவில்லை!

கட்டியவள் கண்கலங்க
சூதாட்டம் ஆடுமாண்வர்க்கம்
பிடிக்கவில்லை!

வெட்டியென
வீண்பொழுது போக்கும் எவரையுமே
பிடிக்கவில்லை!

பட்டியெனக் கிளர்ந்துபோய்
பச்சையாய்ப் பேசும்வாலிபர்களைப்
பிடிக்கவில்லை!

சிமிட்டிப்பேசி சமிக்ஞை கொடுத்துச்
சீரழிக்கும் சிங்காரிகளைப்
பிடிக்கவில்லை!

பெற்றவர்கள் முதுமையை
உணராத மகவுகள் தன்னைப்
பிடிக்கவில்லை!

கற்றவர்கள் மத்தியில் கனதியாய்ப்
பேசுமற்றவர் தரம்
பிடிக்கவில்லை!

கெட்டவர் சகவாசம் கூடாதெனும்
சொல்கேட்கா பிள்ளைகள்
பிடிக்கவில்லை!

பட்டவர் அனுபவங்கள் பாடங்கள்!
புத்தி தெளியாதவர்களைப்
பிடிக்கவில்லை!

நாமுந்தப்பு செய்யக்கூடும்
எனவெண்ணமறுக்கும் மாந்தரைப்
பிடிக்கவில்லை!

நாளுந்தப்புச் செய்து
மன்னிப்புக் கேட்கும் பாங்கும்
பிடிக்கவில்லை!

கோளுந்தப்புச் செய்யும்
தொடர்ந்த வினைத்திறனால்! நம்பாதவர்
பிடிக்கவில்லை!

நானுந்தப்புச் செய்து
நயம்பத் தோன்றியதோ? இக்கவிதை!
யாருக்குப் பிடிக்கவில்லை?

==============================
நிலா லண்டன்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Sep 22, 2010 4:39 pm

என்ன நிலா... நிலாவை போல் மிகவும் பெரிதான கவிதையை வடித்துவிட்டீர்கள்...

படிக்க பிடிச்சிருக்கு.... ஆனால் முழுமையாக இன்னும் படிக்கவில்லை....

மீண்டும் வாசித்து விட்டு பிறகு மறுமொழி இடுகின்றேன்.

வெளியில் சொல்லிக்க முடியாத, மனதுக்கு பிடிக்காத பலவிசயத்தை அழகாக படம் பிடித்து சொல்லி இருக்கீங்க... வாழ்த்துகள்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Wed Sep 22, 2010 4:42 pm

நான் உருவத்தில் பெரியவள் என்று உலகத்துக்கே சொல்ல வேண்டுமா வாசன்?

என்றாலும் நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 22, 2010 4:43 pm

பிடிக்கவில்லை என்று சொல்லும் உங்கள் கவிதை மிகப்பிடிதிருக்கிறது தோழி ,,,,,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Wed Sep 22, 2010 4:46 pm

நன்றி ரபீக் நண்பா!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Sep 22, 2010 4:48 pm

தகிக்கும் வெயில், இங்கிதமில்லத நட்பு, நடிக்கும் உறவுகள், ரகசியங்களை அம்பலமாக்குவது, அர்த்தராத்திரில் குடைப்பிடிப்பது, மதவெறியர்களை, வீண் வதந்திகள், தன் நலம் மட்டுமே பார்த்துக்கொள்வது, கெட்டப்பெயரோடு சீரழிந்து வாழ்வது, பதவி பிரியர்களை, இப்படி போய்க்கொண்டே இருக்கிறது....

ஒரு வரி ஒரே ஒரு வரி கூட பிடிக்காமல் இருக்கவில்லை.... அத்தனை வரிகளும் எனக்கு பிடிக்காமல் இருக்கவில்லை... இன்றைய நிலையை எல்லோரின் மனதை புடம் போட்டு காண்பித்துவிட்டது உங்களின் இந்த கவிதை..

பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று நீங்கள் அலறினாலும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா இந்த கவிதை...

அன்பு வாழ்த்துக்கள் நிலா....





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிடிக்கவில்லை! 47
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 22, 2010 4:48 pm

கவிதை மிகவும் பிடிதிருக்கிறது...
அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Wed Sep 22, 2010 4:55 pm

மஞ்சுபாஷிணி wrote:தகிக்கும் வெயில், இங்கிதமில்லத நட்பு, நடிக்கும் உறவுகள், ரகசியங்களை அம்பலமாக்குவது, அர்த்தராத்திரில் குடைப்பிடிப்பது, மதவெறியர்களை, வீண் வதந்திகள், தன் நலம் மட்டுமே பார்த்துக்கொள்வது, கெட்டப்பெயரோடு சீரழிந்து வாழ்வது, பதவி பிரியர்களை, இப்படி போய்க்கொண்டே இருக்கிறது....

ஒரு வரி ஒரே ஒரு வரி கூட பிடிக்காமல் இருக்கவில்லை.... அத்தனை வரிகளும் எனக்கு பிடிக்காமல் இருக்கவில்லை... இன்றைய நிலையை எல்லோரின் மனதை புடம் போட்டு காண்பித்துவிட்டது உங்களின் இந்த கவிதை..

பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று நீங்கள் அலறினாலும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா இந்த கவிதை...

அன்பு வாழ்த்துக்கள் நிலா....

நன்றி மஞ்சு!

இது எப்போதோ எழுதியது,..எழுத எழுத வார்த்தைகள் வந்து விழுந்தன. அப்போது! பகிர்வதில் நிறைவு!



nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Wed Sep 22, 2010 4:56 pm

bhuvi wrote:கவிதை மிகவும் பிடிதிருக்கிறது...
அன்பு மலர்

நன்றி புவி

மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Wed Sep 22, 2010 5:37 pm

srinihasan wrote:என்ன நிலா... நிலாவை போல் மிகவும் பெரிதான கவிதையை வடித்துவிட்டீர்கள்...

படிக்க பிடிச்சிருக்கு.... ஆனால் முழுமையாக இன்னும் படிக்கவில்லை....

மீண்டும் வாசித்து விட்டு பிறகு மறுமொழி இடுகின்றேன்.

வெளியில் சொல்லிக்க முடியாத, மனதுக்கு பிடிக்காத பலவிசயத்தை அழகாக படம் பிடித்து சொல்லி இருக்கீங்க... வாழ்த்துகள்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக