புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10 
11 Posts - 4%
prajai
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10 
9 Posts - 4%
Jenila
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10 
4 Posts - 2%
Rutu
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10 
2 Posts - 1%
jairam
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு)


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 12:50 pm

எனது கவிதைகள் மரபுக்கவிதையின் தோற்றம் இருந்தாலும் விதிகளுக்கு உட்பட்டதாக இருப்பதில்லை. இதுவும் அப்படித்தான். சில நாட்களுக்கு முன் எழுதியது இதைச் சில பகுதிகளாக்கி வைத்திருக்கிறேன். சேர்ந்து வாருங்கள். சில பகுதிகளாகத் தொடரும். ஒரே இழையில்


1. ஓர் காலையில்..

காரிருள் கூந்தல் கலைந்து புவிமுகம்
மூடிக்கிடந்ததனால்
போயினவே அழகென்றே நிலமகள்
வாரிகுழல் முடிக்க
பேரழகு பெரும் வானத் தெருவினில்
பேர்புகழாய் பரவ
காண மனதினில் ஆசை கொண்டு கதிர்
வண்ணரத மெடுத்தான்

முற்றம்வளர்ந்த நல்மோகன மல்லிகை
கட்டவிழ்ந்து மலர
சட்டென நின்றுதன் செட்டை அடித்துஓர்
சங்கதி சேவல் சொல்ல
வெற்றுமணல்பதி பாதமதில் பசும்
புற்கள் பன்னீர் தெளிக்க
கச்சல் சுவைவேம்பில் குச்சி முறித்துப்
பல்லிட்டுக்குறு நடந்தேன்

வெற்றுமணல்தனில் வீழ்ந்திருந்த தென்றல்
தொட்டு உதிர்த்துவைத்த
செத்தல் சருகினில் கால்பதிய அது
சட்டென்று நூறுடைய
கட்டைவேலி தென்னங் காணியருகிலோர்
ஊற்றுக்குள மிருக்கும்
தோட்டக் தரையினை நோக்கி நடந்திட்டேன்
சூழ் இருள்போக முன்னே

சற்றுநடந்து நான் வெட்ட வெளிவரச்
சம்பவம் ஒன்று கண்டேன்
சுற்றிக் கமுகும்நல் மாதுளைத் தோட்டமும்
உள்ளதொரு திசையில்
பற்றி எரிகின்ற தீப்பந்து போலொன்று
பக்கம் எழும்பக் கண்டேன்.
சுற்றி எவரும்கண் தூரமில்லை தனி
யாகத்தீ ஆடக்கண்டேன்

கொள்ளிவால் பேயொன்று கொல்ல வருகுது
ஐயோ என்றே அலறி
வள்ளிமுருகனே நல்லூர்வாழ் வேலனே வா
எனைக்காக்க என்றேன்
வள்ளியும் இல்லை கந்தனுமில்லை நீ
வா என்ற வேலனில்லை
எல்லா உலகமும் எம் வசமானது
என்றச ரீரி கேட்டேன்

யாரது என்று திரும்பி நின்றேன் ஒரு
ஆளோ அரவமில்லை
நேரில் வருவது விட்டொரு கோழைநீ
எங்கிருந்து மொழிந்தாய்
நேரில் வருவது எங்கள் குணமல்ல
நேர்மை நீதியறியோம்
பாரில் இழைத்திடும் பாதகம் ஒன்றேநாம்
பண்ணும் செயலதென்றான்

ஏது பெயர் உனக்கென்ன குறை நீ
எண்ணுவதென்ன என்று
காதுமட்டும் கேட்ட தாழ்குரல் நோக்கி என்
கேள்வியைப் பாயவிட்டேன்
பேய்உலகாளும் பேரரசன் என்னை
யாரென்று கேட்டு விட்டாய்
ஆவி எடுத்துந்தன் மெய்கிழித் துக்குடல்
மாலை கொள்வேனடா பார்

என்றகுரல் நோக்கி ஆகா நானொன்றும்
சின்னக் குழந்தையல்ல
எங்கோ மறைந்துநின் றென்பெயர் பேய்என்றால்
நம்பநான் மூடனல்ல
என்றதும் தீயொளி மீண்டும்எழுந்தென்னை
தீய்ப்பது போலசைந்து
மண்ணில் விழுந்துமறைய எழுந்தது
மாய உருவமொன்று

(தொடரும்...)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 12:54 pm

2 . பேயின் கோபம்

கன்னக்கரிய முகம், வெளி வந்திட்ட
பல்லிரண்டு கண்கள் செந்நிறமாம்.
என்னபெரிய வயிறதுவோஅதை ஏது
சொல்வேன் ஒரு வார்த்தையில்லை
சொன்னது கேட்டேன் பிசாசுகளின்நல்ல
உன்னதமான பெருந்தலைவா
உன்னையடைவதில் என்னபயன் இந்த
ஊருமுலகமும் பெற்றதென்றேன்

அண்டம் பிளந்தது போற்திறந்து வாய்
அத்தனை சொத்தைப்பல்லும் தெரிய
கொட்டி குலுங்கி சிரித்திட்ட போதினில்
சித்தம் கலங்கி சிலிர்த்தடா
வெட்டி இடிமின்னல்தானிடிக்க மேளம்
தட்டுவதுபோல தான்சிரித்து
பட்டிதொட்டியெங்கும் என்புகழேஇவன்
பண்ணியதா இதோ பாராய் என்றான்.

சின்னவனே இந்த மண்ணின் உரிமையை
தேவர்கள் போரினில் வென்றுவிட்டோம்
அன்னியனே இனி என்னையல்லால் இங்கு
யாரும் உனக்கென இல்லையடா
என்னை வணங்கிடு என்புகழ்பாடிடு
உன்னைஉயரத்தில் தூக்கி வைப்பேன்- இனி
நன்மைக்கும் நீதிக்கும் உண்மைக்கு பேர்சொன்னால்
உன்னுடல்நாராக பிய்த்தெறிவேன்

நீதி இழிந்தது பாருலகில் கடு
நீசம் மலிந்தது எம் செயலால்
ஆளும் அரசுகள் யாவுமுலகில்
அநீதி புரிந்து சிறந்தனவே
மூழும் கலகங்கள் போரெழுந்து நல்ல
நெஞ்சம் படைத்தோரை கொன்றனவே
ஆளுவதெல்லாம் பசாசுகள் என்னுடை
ஆணைப்படி செய்யும் கோரங்களே

பாவி மனிதர்கள் செத்துவிட்டார் மகா
காந்திகண்ட அகிம்சையெல்லாம்
போயினவே. நல்ல நீதிவழி சொல்லி
போரில் தருமத்தைப் பார்த்து நின்றீர்
மோதி இரத்தம் குடிப்பதற்கு ஒரு
பேயைக் கொண்டுவந்து உள் நிறுத்தி
நீதி உரிமை என்றோரைத், தமிழரை,
நிர்கதியாக்கி அழித்துவிட்டேன்

அண்ணன் சகோதரர் என்று சொல்லி,
வந்துஆபத்தில் எம்முயிர் காத்திடுவார்
என்று நினத்தீர் நம்பியதை நான்
என்னசெய்தேன் அதைக் காணு என்றான்
நற்றமிழன் எந்தன் சொற்படியே சென்று
கச்சிதமாக நடந்துகொண்டார்
பட்டம் பதவிகள் அள்ளி யிறைத்தவர்
பக்கம் இருக்கிறேன் பாரு என்றான்

பட்டி சிவப்பினில் தோளணியும்
ஒரு பாதகனும் செந்நீரெடுத்து
கொட்டி குளித்து மகிழ்வுடனே போரைக்
கொண்டு நடத்தும் குழுவினரும்
திட்டமிட்டு அவர் செய்வதற்கு துணை
போகும் தமிழர் உடன்பிறப்பும்
அத்தனை பேரும் என் ஆட்களன்றோ
அறிவற்றவனேசொல்லக் கேளு என்றான்

சொல்லச்சொல்ல என் அங்கம் துடித்தது
சூடெழுந்து மனம் வேகியது
நில்லு உனைக்கணம் கொன்றுவிட்டே
இடம் நீங்குவேனென்று சூளுரைத்தேன்
உன்னை கொல்லுகிறேன் பாரடா என்றவன்
என்னை நோக்கி அசைந்திருக்க
எங்கிருந்தோ ஒரு பாடல் எழுந்து வந்
தெம்மைச்சிலையென ஆக்கியது

( தொடரும்)


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 4:58 pm

3. எங்கிருந்தோ கேட்ட பாடல்


மின்னல டிக்குது மேகம் குவியுது
மாரி பொழியுதடா
மேதினி எங்கணும்காரிருள்போலொரு
மாயை கவியுதடா
கன்னம் கருத்தவோர் காட்டுவிலங்கினம்
நாட்டில்புகுந்ததுபோல்
காணும்மனிதரின் பேய்மனங்கள்
விலங்காக மருகுதடா

முன்னமிருந்தவை போய்விடவே ஒரு
மூச்சு எழுந்ததட்டா
மீறி ஒருவெறி ஆசைகொண்டே பகை
மேகம் குவிந்ததடா
மன்னவர் என்று மணிமுடிகொண்டவர்
மானிடர் இல்லையடா
தன்னது என்றுசுயநலத் தோடவர்
என்னவும் செய்வாரடா

நல்லநெறி கொண்ட ஆட்சிகள் கையில்
நடுநிலை இல்லையடா
நாடு பிடித்திடும் ஆசைவெறி கொண்டு
நர்த்த்ன மாடுதடா
கள்ளரும் பேய்களும் கன்னி வெறியரும்
முன்னிலை யானரடா
கட்சியமைத்தொரு கண்ணியம் பேசிடும்
காவலனா னாரடா

விந்தைநடக்குது வஞ்சகர் வந்தொரு
பந்தியில் முன்னிருக்க
வெள்ளைமனம் கொண்ட வீரருக்கோ
வெகுநஞ் சுணவானதடா
சந்தியெங்கு முள்ள சந்நிதி கோவிலில்
சாமி குழம்புதடா
சாத்திரமின்றியே சாமிபெயர்மாற்றி
தோத்திரம் கேட்குதடா

செந்தமிழ் கூறிய சாலைகள் எங்கணும்
வன்மொழி காணுதடா
வந்தவர் பூமியில் தந்தனா பாடியே
சொந்தம் கொண்டானரடா
சந்தனம் பூசியும் கந்தனை வேண்டியும்
காவடி தூக்குதடா
சந்தையில் பந்தியில் சாலையில் வண்டியில்
எம்மொழி தேயுதடா

அன்னை விளையாடி ஆசைத்தமிழ்பேசி
துள்ளியமண்ணிலின்று
என்னையழித்தவர் இச்சை கொண்டேவந்து
எல்லையமைத்தாரடா
முன்னை இருந்தவர் எம்மவர் என்றொரு
முற்றிய பொய்யுரைத்து
மூடியமண்ணினுள் தேடிஎடுத்துநம்
மூதையர் என்குதடா

ஈழத்தமிழினம் கொல்ல நினைத்திட
எல்லோர்மனங்களிலும்
இட்டவிஷமென்ன எத்தனை நாடுகள்
யுத்தமெடுத்ததடா
ஆழப் பகைகொண்ட நாடுகள் தம்மிடை
பேதமைவிட்டதடா
அத்தனையும் இதழ்புன்னகைத்தே தமிழ்
சொத்தை அழித்ததடா

வித்தைநடக்குது வீடு எல்லாம்
சுடுகாடென ஆகுதாடா
வீதியில் பேய்களும் கூடிக்குழுமியே
வெற்றி யென்றாடுதடா
சத்தமின்றி ஒரு சாட்சியின்றி தமிழ்
செத்து ஒழியுதடா
சாரமின்றி தமிழ் ஈழம்விற்கும்சதி
எம்முள் நடக்குதடா

இந்தநிலைமாற எம்மவரேஇரு
கண்கள் விழித்திடுவீர்
வந்தவிடியலில்வாழத் துடிதிடும்
சொந்தங்கள் காத்திடுவீர்
சிந்தனைகெட்டுச் சிரசிழந்தே பேய்கள்
வந்திட வாசல்வைத்தால்
அந்தோகதி இனிஆளப்பிறந்தமண்
அன்னியமாகிவிடும்

(தொடரும்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 7:48 pm

///அண்ணன் சகோதரர் என்று சொல்லி,
வந்துஆபத்தில் எம்முயிர் காத்திடுவார்
என்று நினத்தீர் நம்பியதை நான்
என்னசெய்தேன் அதைக் காணு என்றான்
நற்றமிழன் எந்தன் சொற்படியே சென்று
கச்சிதமாக நடந்துகொண்டார்
பட்டம் பதவிகள் அள்ளி யிறைத்தவர்
பக்கம் இருக்கிறேன் பாரு என்றான்///

தன் இனம் அழிவதைவிடப் பதவி பெரிதென மண்டியிட்ட மானங்கெட்டவர்களுக்கு சரியான சவுக்கடி..! தொடருங்கள் அண்ணா!



இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 7:52 pm

///சத்தமின்றி ஒரு சாட்சியின்றி தமிழ்
செத்து ஒழியுதடா
சாரமின்றி தமிழ் ஈழம்விற்கும்சதி
எம்முள் நடக்குதடா

இந்தநிலைமாற எம்மவரேஇரு
கண்கள் விழித்திடுவீர்
வந்தவிடியலில்வாழத் துடிதிடும்
சொந்தங்கள் காத்திடுவீர்///

தன் இனமும் மொழியும் அழிந்து வருவதைக் கண்டும், பொங்கியெழாமல் தூங்கி வழியும், இலவச இனமே விழித்தெழு!



இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 8:31 pm

நன்றி தங்களுக்கு தொடர்கிறேன்..

4 . மீண்டும் அபாயம்


பாடலொலித்ததிசை தனிலேகொள்ளிப்
பாளம் போலுமிரு கண்வெறித்து
கூடமுறுகித் திரிந்த உதடுகள்
கோணிக் கடித்திடக் கோபம்கொண்டான்
ஆடல் முடித்தவ னானந்தமாகத் தன்
ஆவி விடுத்திடச் செய்குவன்பார்
நாடும்மனையும்நற் பெண்டிரும் வேண்டிய
நல்லவன் பூமியில் இல்லைநீபார்

என்று சினந்தனன் எத்தன்பிசாசுகட்
கேற்ற தலைவன் முன் வானெழுந்து
நன்றுஎனைமறந் தங்கோர் திசைதனை
நாடிப்பறந்து மறைந்துசென்றான்
கொன்றனனோ குறுகினனோ ஏதும்
சென்றதிசை நடந்தேதறியேன்
தென்ற லலைத்திட துள்ளுமலைகொண்ட
தண்குளம் நோக்கி நடைபயின்றேன்

பொங்கி வழிந்திடும் நீர்நிறைந்த
சிறுபொய்கையில் தாமரை பூத்துநிற்க
திங்கள் முகமெனும் தேன்மலரில் துள்ளும்
சேயிழையார் விழிபோல் கயலும்
நங்கை மலர்கரம் போல்நளினம் கொண்டே
நாட்டிய மாடிடும் வெண்ணலையும்
தங்கும்குளத்திடை தண்மை உடல்பட
தத்திநடந்தேன் தனிமையிலே

பங்கயம்போலும் பனிமுகத்தை நீரில்
பாவை யொருத்தியும் பார்த்தகதை
எங்கோபடித்தது எண்ணம் எடுத்திட
என்முக மெப்படி என்றுகண்டேன்
தெங்கின் பழத்தைஒர் தேரிடைவைத்து
திரிந்ததுபோல் முகமோஇருக்க
அங்குஇருவிழி ஆந்தமுழியென
ஆடுவதுகண்டுபுன்னகைத்தேன்

சிந்தை கொண்டசினம்சென்றுகரைந்திட
சேர்த்துஇருகரம் மொண்டுநீரை
எந்தன்முகமிடை ஏந்திநனைத்திட
எண்ண அவன்உரு வந்ததடா
விந்தை அந்நீரினில் பிம்பம்தெரிந்திட
விண்ணில் அவன்முகம் உள்ளதென்று
முந்திவிழுந்து முகம் திருப்ப அந்த
மோசப் பிசாசினைக் கண்டுநின்றேன்

உந்தனைக்கொல்ல மறந்திடுவேனோ
உத்தமனாக உயர்ந்தவனோ
சந்தமின்றி இசைதானுமின்றி வரும்
சுந்தர நாட்டியம் போல்குதித்தான்
செந்தழல் வீசிட அந்தரவானிலே
மந்திரமா யவன் ஆடிநின்று
என்தலை கொய்திட ஏகுகையில் எங்கோ
இன்னொருகீதம் ஒலித்தடா

(தொடரும்)

மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Sat Sep 18, 2010 9:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Sep 20, 2010 9:51 pm

5 . இன்னொரு திசையில் எழுந்தபாடல்


கொட்டியடி மேளம் கூவி எழுந்திடு
தட்டடா கைகளிங்கு
பட்டவினைபோதும் பற்றியெழுந்தது
நெஞ்சில் பெருந்தீயென்று
சுட்டவன்கொன்றவன் சுற்றித்திரிகிறான்
வெட்டவெளியிலின்று
சொல்லு சுதந்திரம்கேட்டவன் வாழ்வதோ
கூட்டில் குருவிஎன்று

வெட்டிக்குருதியைக் கொட்டச் சிரித்தவன்
பட்டுத் துணியுடுத்து
கட்டிமாடிமனை காசு,பணமென
கன்னியர் சூழ நின்று
பட்டம்பதவியைப் பார்த்திடநாமுமோ
குட்டக்குட்டக் குனிந்து
சட்டியில் ஊற்றிய கஞ்சியை ஏந்திட
வெட்கமோ இல்லைச்சொல்லு

தட்டியெழுப்பிடு நீதிதேவன்தனை
தூங்குவதேனோ என்று
கொட்டாவி விட்டுமே கூனிக்கிடந்தது
இத்துடன் போதுமென்று
குட்டகுட்டக் குனிந்துவிட்டேனினிக்
குப்புற வீழ்வேனென்று
எட்டஇருந்துபோதும் எமக்கொரு
உற்றநீதி சொல்லென்று

வட்டக்குளநீரில் வாரிக்கல்லைஎறி
சுற்றும் அலைகளங்கு
விட்டு இருந்திட நீரலை தூங்கிடும்
வையகம்போல இன்று
எட்டுதிசையிலும் எங்கள் நீதியெங்கே
கத்து குழறு நின்று
சட்டக்கதவுகள் சற்றுதிறந்திடும்
தட்டநம் கைகள் கொண்டு

வெஞ்சமர் விட்டால் விடிவு வருமென
சொன்னவ ரெங்கேயின்று
கஞ்சர்கயவரை நம்பிஉலகமும்
கைவிட்ட தெம்மையன்று
கொஞ்சிக்குலவிடும் சிங்களமும் தமிழ்
ஒன்றாயிருங்கள் என்று
கூறியவர்தம்மை கூப்பிட்டுகேளடா
எங்கே நடக்குதென்று

கன்னி உடலைக் கதறக்கிழித்தவன்
கட்டிலில் தூங்குகிறான்
காக்கநினைத்தவன் யாக்கைவிடுத்துமே
காற்றினில் நீந்துகிறான்
வன்னியழித்திட வந்தபடைமுழு
மண்ணு மழிக்குமென்றோம்
வாயிலடித்து வயிற்றிலே குத்தி
வா எம்மை காக்க என்றோம்

வெந்தபுண்ணில்சுடு வேலினைப் பாய்ச்சியே
வேடிக்கை பார்த்தவரின்
வீட்டுகதவினைத் தட்டுவோம் இங்குதான்
விட்ட பிழைகள் என்று
கந்தலுடுத்துமோர் கண்ணியம் காத்தவர்
எங்கள் தமிழர் என்று
கட்டிய `ரை`யுடன் கோட்டுமணிந்தவர்
சத்தியம் கெட்டாரென்று

சேற்றையள்ளி நறுஞ்சந்தணம் பூசென்று
சொன்னவர் கையிலின்று
நாற்றமெடுத்திட மூக்கைப் பொத்துகையில்
நாம்விடக் கூடாதங்கு
காற்றில் எழுந்திடக் கத்திக் கதறியே
கூத்திடு நீதிகேட்டு
ஈற்றில் வருவது எங்களீழம் என்று
மாற்றி எழுதச்சொல்லு

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Sep 20, 2010 9:55 pm


6 . விடியாமல் விடிந்தது

கண்கள் உருட்டி கடும் சினம் கொண்டிட
பல்லு நெறு நெறுத்து
புல்லன் பிசாசுகள் பேய்த்தலைவன் கோபம்
பொங்க திரும்பி நின்றான்
பாரடா உந்தன் மேனிகருக நான்
தீயிட்டு கொல்லுகிறேன்
சேரடா வானம் நீஇப் பூவுலகில் வாழ
இல்லையென் றாக்குகிறேன்

உண்மை நீதி தர்மம் நல்ஒழுக்கம் கொண்டோர்
கிவ்வுலகில்லையடா
பெண் கெடுத்துச் சிறுபிள்ளை கொன்று பலர்
சொத்தை களவெடுத்தும்
பொய்சொல்லி உற்றவர் வாழ்வு கெடுத்தும்
இப்பூமியில்வாழ்வுதன்னில்
பேயாட்டம் ஆடும் மனிதர் மட்டும் இந்த
பூமியில் வாழ்ந்திடலாம்

நன்மை நீதியென்று பேசமுன்னர் அவன்
நாக்கை அறுத்துவிட்டு
கண்கள் பிடுங்கி ஓர் நெஞ்சம் கிழித்துப் பின்
கழுத்தில் தூக்கிடுவேன்
நல்லவனை இங்கு விட்டு வைத்தால்
இந்த நாடு திருந்திவிடும்
கொல்லுகிறேன் இதோ பாரென்று கூவிக்
கொல்லஓர் வாளெடுத்தான்

சொல்ல முடியாத வேதனையும் சினம்
பொங்கி எழுந்துவர
துள்ளி எழுந்து உதை கொடுத்தேன் என்ன
கண்டது பேய்க்கனவா
பெண்குரல் கேட்டு விழி திறந்தேன் முன்னே
நின்றது என் துணைவி
பொல்லாக் கனவது என்றேன் அவளொரு
புன்னகைதான் உதிர்த்தாள்

(முடிந்தது)



avatar
Guest
Guest

PostGuest Mon Sep 20, 2010 10:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக