புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
120 Posts - 76%
heezulia
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
285 Posts - 77%
heezulia
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
நாட்டுப்புறவியல் - Page 2 I_vote_lcapநாட்டுப்புறவியல் - Page 2 I_voting_barநாட்டுப்புறவியல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புறவியல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 9:37 pm

First topic message reminder :

முன்னுரை

மக்களின் படைப்புகளைக் கொண்டு மக்களைப் படிக்கும் துறை நாட்டுப்புறவியல். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றைச் செயல்படுத்தும் துறை. கலை, இலக்கியம், சமயம், மொழி, சமூகம், வரலாறு, பண்பாடு உள்ளிட்ட பலதுறை ஆய்வுகளுக்குப் பங்களித்து அவற்றை முழுமைப்படுத்தும் துறை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறவியல் துறையை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இத்துறைக்கான விளக்கங்களையும், வரையறைகளையும், பரப்பையும் முதலில் அறிந்து கொள்வது இன்றியமையாதது. எனவே, இப்பாடப்பகுதியில் நாட்டுப்புறவியல் என்பதற்கான விளக்கங்களும் வரையறைகளும் முதலில் சுட்டப்படுகின்றன. தொடர்ந்து இத்துறையின் வகைப்பாடு குறித்தும், பரப்பு குறித்தும் விளக்கப்படுகிறது. இத்துறை பற்றி மேன்மேலும் அறிவுபெறும் வகையில் இத்துறை சார்ந்த சில கலைச்சொற்களுக்கான பொருள் வரையறையும் கூறப்படுகின்றது.


நாட்டுப்புறவியல் - விளக்கமும் வரையறையும்


நாட்டுப்புறவியல் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் ஒருவருக்கு ‘நாட்டுப்புறவியல்’ என்னும் பெயரின் பொருள் என்ன என்பதை விளங்கிக் கொள்வதே முதல்படியாக அமைகின்றது. இத்துறை முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது என்ன பொருள் தந்தது? இன்று இது எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகின்றது? என்பவற்றைத் தெரிந்து கொள்ளுதல் தேவையானது.


நாட்டுப்புறவியல் என்பது பண்பாடு பற்றியது; உலகளாவிய தன்மை கொண்டது; என்றும் நிலைத்து நிற்கக் கூடியது; அழியாதது; மாற்றம் பெறாதது என்று இத்துறையில் முதற்படி எடுத்து வைக்கும் ஆர்வலர்களாகிய நீங்கள் எண்ணக் கூடும். நாட்டுப்புறவியல் பண்பாடு பற்றியது எனும் கருத்தும் உலகளாவியது எனும் கருத்தும் உண்மையென்றாலும் தொடர்ந்து வரும் கருத்துகள் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியவையல்ல. காலம், இடம், சூழல் ஆகியவை மாற மாற எந்தவொரு கருத்தும் வரையறையும் மாற்றம் பெறும். நாட்டுப்புறவியல் என்பதன் பொருளைத் தருவதிலும், கோட்பாட்டு ரீதியாக அதனை விரிவுபடுத்தி விளக்குவதிலும் அறிவியல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், பண்பாட்டுச் சூழல்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் (Motivation) ஆகியவை இடை நுழைகின்றன. ஆகவே பல்வேறுபட்ட விளக்கங்கள் நம்முன் வந்து நிற்கின்றன. இங்கு Folklore எனும் பதத்தை விளங்கிக் கொண்டு அதற்கான வரையறைகளைக் கண்டறிவோம்.


நாட்டுப்புறவியல் - சொல் அறிமுகம்


“Folklore” என்னும் பதத்தை 1846ல் வில்லியம் ஜான் தாம்ஸ் (Willam John Thoms) என்பவர் உருவாக்கினார். ஆனால் இதற்கு முன்பாக அந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே (1812) கிரீம் சகோதரர்களால் (Grimm Brothers) ஜெர்மனியில் நாட்டுப்புற வழக்காறுகள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவர்கள் நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள், வாக்குகள் (Sayings), பெயர்கள், மரபுத்தொடர்கள் போன்றவற்றை ஜெர்மானியக் குடியானவர்களிடமிருந்து சேகரித்தனர். இவை கடந்தகாலப் பண்பாட்டின் எச்சங்களாகக் கருதப்பட்டன.


இங்கிலாந்தில் பழைய கட்டடங்கள், பழைய சட்டம் குறித்த ஆவணங்கள், பழைய கலைப் பொருட்கள், கதைகள், பாடல்கள், பழக்க வழக்கங்கள் போன்ற பழம் மரபுகளை ஆராயும் போக்கு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. இந்தப் பழம் வடிவங்கள் ‘Popular Antiquities’ எனப்பட்டன. வில்லியம் ஜான் தாம்ஸ் இந்தப் பதத்திற்குப் பதிலாக ஆங்கிலோ சாக்சன் மொழியில் ‘Folklore’ எனும் சொற்றொடரை உருவாக்கிப் பயன்படுத்திய பின்னர், கிரீம் சகோதரர்களின் பழம் மரபுகள் பற்றிய ஆய்வுமுறைக்கு ‘Folklore’ எனும் பதம் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டது.

இவ்வாறாக, கிராமங்களில் உள்ள குடியானவர்களிடம் புழங்கிவரும் பழம் மரபுகளைப் பற்றிய ஆய்வைக் குறிப்பதற்கு ‘Folklore’ எனும் பதம் பயன்பாட்டிற்கு வந்தது. எனினும் இந்தப்பதம் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படவில்லை. அந்தந்த நாடுகளின் பண்பாட்டின் தனித்தன்மைகளுக்கேற்ப வெவ்வேறு பதங்கள் பயன்படுத்தப்பட்டன. ஜெர்மனியில் ‘Volkskunde’ என்றும் ஸ்வீடனில் ‘Folkminne’ என்றும் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மொழிப் பண்பாட்டினரும் ஒவ்வொரு பதத்தைப் பயன்படுத்தினர். வங்காளத்தினர் ‘Loksahitya’ என்றும் கன்னடர்களும் தெலுங்கர்களும் ‘Janapada’ என்றும் வடமொழியினர் ‘Lokvaita’ மற்றும் ‘Lokyana’ என்றும் தமிழர்கள் ‘நாட்டுப்புறவியல்’ மற்றும் ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்றும் குறிப்பிட்டனர்.


நாட்டுப்புறவியல் வரையறை


ஒரே நாட்டில் கூட ‘Folklore’ என்ற பதத்தை வரையறுக்கும்போது அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து காணப்படவில்லை. அறிஞர்கள் பலவிதமான வரையறைகளைப் பயன்படுத்தினர். எனவே நாட்டுப்புறவியல் என்பதற்கு ஒரே வரையறை இருப்பதாகக் கொள்ள முடியாது. வில்லியம் ஜான் தாம்ஸ் முதன்முதலில் நாட்டுப்புறவியல் என்று பேசும்போது பழக்க வழக்கங்கள், நடத்தை முறைகள், சடங்குகள், மூடப் பழக்க வழக்கங்கள், கதைப்பாடல்கள், பழமொழிகள் போன்றவற்றையே குறித்தார். இவருடைய வரையறை பெரும்பாலும் விளக்கவுரையை அடிப்படையாகக் கொண்டது.


பண்பாட்டு மானிடவியலும், இ.பி. டைலர் (E.B. Tylor) மற்றும் அவருடைய மாணவர்களால் பின்பற்றப்பட்ட பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் பெரும்மாற்றங்கள் நிகழக் காரணமாக இருந்தன. பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டினர் மனித நாகரிக வரலாறு என்பது விலங்காண்டிநிலை, காட்டாண்டிநிலை போன்ற நிலைகளைக் கடந்து வந்துள்ளதாகக் கருதினர். இதற்கு, இன்னும் வழக்கத்தில் இருக்கும் கடந்தகாலப் பண்பாட்டின் எச்சங்களைச் சான்றாகக் கூறினர். நாட்டுப்புறவியல் என்பது மனித குலத்தின் புராதன காலச் சிந்தனை, நம்பிக்கை போன்ற அமைப்புகளின் எச்சங்களாகும் எனக் கருதப்பட்டது. நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் வழக்காறுகளின் தோற்றங்களுக்கு அளிக்கப்படும் விளக்கங்களைப் போலப் பரிணாமவியல் புதிய மேலதிகமான கோட்பாட்டு விளக்கங்களையும் மாதிரிகளையும் தந்தது. இவ்வாறாக நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது ஒரு வரலாற்று அறிவியலாக வரையறுக்கப்பட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:38 pm

தற்காலத்திய ஆய்வுப்பரப்பு


ஒரு மக்கள் குழுவின் நடத்தைகளை மிக உன்னிப்பாக அலசி ஆராய்வதற்கு நாட்டுப்புறவியல் உதவுகின்றது. ஒரு குழுவின் வழக்காறுகள் அக்குழுவின் குறிப்பிட்ட மன அமைப்பைப் பிரதிபலிக்கும் புறவெளிப்பாடுகள் ஆகும். ஒரு குழுவினரின் மன அமைப்புக்கள் பல வகையான வழக்காறுகளாக எப்படி, எவ்வாறு உருமாறுகின்றன? என்பன பற்றி ஆராய்வது நாட்டுப்புறவியல் ஆய்வின் முக்கியமான நோக்கமாகும். இந்த மன அமைப்பு அக்குழுவிற்குப் புறத்தே இருக்கும் இயற்கை, சமூகச் சூழலாலேயே உருவாக்கப்படுகின்றது.

எனவே நாட்டுப்புறவியல் ஆய்வானது புதிய தர்க்கங்களுக்கும், மன அமைப்புக்கும் இடையிலான உறவைக் காண்பதாக அமைகின்றது. நாட்டுப்புறவியல், வழக்காறுகளை அடிப்படையில் ஒரு ‘சமூக நடத்தை’ என வலியுறுத்துகின்றது. சான்றாக, நீராவியில் உணவை வேக வைத்தல் என்பது திராவிடர்களிடையே பெரும்பான்மையும் காணப்படக் கூடிய ஒரு முறையாகும். ஈரப்பசையுள்ள காற்று, ஒப்பீட்டளவில் அதிக வெப்பம் போன்ற குறிப்பிட்ட தட்ப வெப்பச் சூழ்நிலையில் வாழும் இனத்திற்கு அந்த இயற்கைத் தட்ப வெப்ப நிலையிலமைந்த சமைத்தல் நுட்பம் கை கூடுகின்றது. நீராவி என்பது தண்ணீரை உள்ளடக்கியது என்ற போதிலும் அதிக வெப்பத்தையும் கொண்டது. வளமை பற்றிய கருத்தமைவு கொண்ட திராவிட இனம் இத்தகைய உணவுத் தொழில் நுட்பத்தால் உருவாக்கும் புட்டு, இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைத் தனது மரபான உணவாகக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு சமூகத்தையும் இயற்கையையும் இணைத்து ஆராயும் முறையாக நாட்டுப்புறவியல் இருக்கின்றது எனக் கூறலாம்.


ஒவ்வொரு சமூகமும் தங்களது சமூக அடையாளம், அது ஒட்டு மொத்தச் சமூகத் தளத்துக்குள் வகிக்கும் இடம், இயற்கை, பிரபஞ்சவியல், தோற்றம் பற்றிய தெளிவான கருத்துகளைக் கொண்டுள்ளது. இதுவே உலகக் கண்ணோட்டம் ஆகும். (Alan Dundes; 1975, 226) ஒரு மீனவர் கடலை நோக்குகின்ற விதமும் ஒரு பனையேறி அதனை நோக்குகின்ற விதமும் வேறுபடுகின்றன. மீனவர் கடலை நோக்குகின்ற விதத்திலேயே பனையேறி நோக்குவார் என்று கூற முடியாது. சாவு பற்றிய செவ்வியல் கருத்தாக்கத்திலிருந்து (Classical Concept) ஒரு மீனவரின் கருத்தாக்கம் மாறுபடும். உலகத் தோற்றம் குறித்து வெவ்வேறு குழுக்கள் வெவ்வேறு விதமான கதைகளைக் கொண்டிருக்கும். உலகக் கண்ணோட்டங்கள் நாட்டுப்புறவியலுக்குள் குறிப்பாகப் புராணங்கள், சடங்குகளுக்குள் புதைந்திருக்கும். இத்தகைய உலகக் கண்ணோட்டம் பற்றிய ஆய்வாக நாட்டுப்புறவியல் இருக்கின்றது.


நவீன நாட்டுப்புறவியல் சிந்தனைகள் மக்களிடம் உள்ள வழக்காறுகளிலிருந்து அவற்றைத் தோற்றுவித்த மனஅமைப்பைக் கண்டறிய முற்படுகின்றன. இதன்மூலம் சமூக, இயற்கைக் காரணிகளைக் கண்டறியவும் நாட்டுப்புறவியல் முற்படுகின்றது. மக்களது மனஅமைப்பின் மாதிரிப் படிவமே (Outline) வழக்காறுகள் ஆகும். ஒரு நாடு, நாட்டுப்புற வழக்காறுகள் மூலமாக அதன் இயற்கை மக்களோடு கொள்ளும் தொடர்பையும், உறவையும், அவற்றின் கூறுகளான மன அமைப்புகளையும் வெளிப்படுத்துகின்றது. இதுபோன்று ஒரு குறிப்பிட்ட இன மக்களது வழக்காற்றைப் படிப்பதன் மூலம் அவர்களது பொதுவான நடத்தை முறைகளை அறிந்து கொள்ள முடியும்.

ஜெர்மன் நாட்டின் முக்கியமான பண்பாக Anal Erotic Complex அமைந்திருக்கின்றது என ஆலன் டண்டிஸ் (1989) விளக்கியுள்ளார். இவ்வாறான ஆய்வுகள் மூலம் ஒரு நாட்டின் பொதுப் புத்தியை அறிந்து கொள்ளலாம். மேலும், அந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள சில இயல்புகளை அறியவும் அவற்றை விலக்கவும் இயலும்.


இவ்வாறாக நாட்டுப்புறவியலானது பழைய பண்பாட்டு மரபுகளைப் பற்றிய ஆய்வாகத் தொடங்கி, பின்னர் வாய்மொழி மரபு பற்றிய ஆய்வாகச் சுருங்கி, அதன் பின்னர்ச் சமூகத்தில் மரபு வழியாகக் கருதப்படும் அனைத்தையும் வழக்காறு எனக் கொண்டு ஆராயும் ஆய்வுப் புலமாக வளர்ந்தது. கிராமப்புறங்களில் காணப்படுபவையே நாட்டுப்புற வழக்காறுகள் என எண்ணிய காலம் மறைந்து நகர்சார் வழக்காறுகளும் நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் முக்கியத்துவம் பெற்றன. வெறும் பனுவல்களின் அழகுணர்ச்சியை மட்டுமே ஆராய்ந்த நாட்டுப்புறவியல் இன்று மக்கள் குழுவின் நடத்தைகளை மிக உன்னிப்பாக அலசி ஆராய்வதற்குப் பயன்படுகின்றது. நாட்டுப்புறவியல் பெற்ற இந்த வளர்ச்சியானது, மக்களைப் பற்றிய ஆய்வில் முதலிடம் பெறும் கல்விப்புலமாக இதை உயர்த்தியுள்ளது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:43 pm

நாட்டுப்புறவியல் கலைச்சொற்கள்


நாட்டுப் புறவியலானது உலகம் முழுவதிலும் பரவியுள்ள ஒரு கல்விப் புலமாகும். இந்தக் கல்வியானது மக்களைப் பற்றியும் அவர்களது பண்பாட்டைப் பற்றியும் படிப்பது ஆகையால் மொழி இக்கல்வியின் மிக முக்கியக் கருவி (Tool)ஆகும். அந்தந்தப் பண்பாட்டைப் பற்றிய ஆய்வுகள் அவரவர் மொழியிலேயே செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை உலகளவில் ஒருங்கிணைக்கும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. எனவே நாட்டுப்புறவியல் ஆய்வுகள் பற்றிய இந்த நிமிட அறிவைப் பெற ஆங்கிலத்தில் நாம் தேர்ச்சியுடையவர்களாக ஆக வேண்டியதுள்ளது. அவ்வாறு ஆங்கிலத்தில் நாம் பெற்ற துறை தொடர்பான அறிவை நமது தாய்மொழிக்குக் கொண்டுவரும்போது சில ஆங்கிலக் கலைச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை நமது பண்பாட்டிற்கேற்பக் கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய கலைச் சொற்கள் நமக்கு இத்துறை தொடர்பான உலகளாவிய அறிவைப் பெற உதவும்.


இங்கு நாட்டுப்புறவியலில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களில் சிலவும் அவற்றிற்கான தமிழ்ச் சொற்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.


Folk - நாட்டுப்புறமக்கள், மக்கள் குழு

Lore - வழக்காறு

Folklore - நாட்டுப்புற வழக்காறு, நாட்டுப்புறவியல்

Folkloristics - நாட்டுப்புறவியல்

Folk Literature - நாட்டுப்புற இலக்கியம்

Folk Song - நாட்டுப்புறப் பாடல்

Folk Art - நாட்டுப்புறக் கலை

Folk Belief - நாட்டுப்புற நம்பிக்கைகள்

Folklorism - நாட்டுப்புற வழக்காற்றியம்

Fakelore - போலி நாட்டுப்புறவியல்

Folk Life - நாட்டுப்புற மக்கள் வாழ்வு

Folk Culture - நாட்டுப்புற மக்கள் பண்பாடு

Folklorology - நாட்டுப்புறவியல்

Applied Folklore - பயன்பாட்டு நாட்டுப்புறவியல்

Popular Antiquities - பழமரபு இலக்கியங்கள்

Popular Literature - மக்கள் இலக்கியம்

Oral Tradition - வாய்மொழி மரபு

Oral Literature - வாய்மொழி இலக்கியம்

Mythology - தொன்மவியல்

Regional Ethnology - வட்டார இனவியல்

Applied Cultural Science - பயன்பாட்டு, பண்பாட்டு அறிவியல்

Narratives - எடுத்துரைப்புகள்

Text - பனுவல்

Texture - இழைவு அமைப்பு, இழைவுக் கூறு

Structure - அமைப்பு

Behavioural Science - நடத்தை சார் அறிவியல்

Symbolic Behaviour - குறியீட்டு நடத்தைகள்

Archetype - மூலப்பழவடிவம்


இவை போன்ற கலைச்சொற்களை மொழியாக்கம் செய்வது இத்துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். மேற்காட்டப் பெற்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகப் பல தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. சான்றாக Folk என்பதற்கு ‘நாட்டார்’ என்றும் Folklore என்பதற்கு ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்றும் வழங்கப்படுவதைக் கூறலாம். இந்தத் தாளுக்குரிய பாடங்களில் மேற்காட்டப் பெற்ற கலைச்சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:44 pm

தொகுப்புரை


1846 இல் வில்லியம் ஜான் தாம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட ‘Folklore’ என்னும் சொல் நாட்டுப்புறவியல் ஆய்வில் ஏற்பட்ட பல்வேறு வளர்ச்சி நிலைகளின் போதும் வெவ்வேறு விதமான பொருளைத் தந்தது எனக் கண்டீர்கள். தற்போது ‘Folklore’ என்பது ஏதாவது ஒரு பொதுமைப் பண்பைக் கொண்ட ஒரு குழுவினருக்கிடையேயான பல்வேறு வழக்காறுகளையும் அவற்றை ஆய்வு செய்யும் துறையையும் குறிக்கும் சொல்லாக உள்ளது என்பதைப் புரிந்துக் கொண்டீர்கள்.


நாட்டுப்புற மக்களிடம் உள்ள வழக்காறுகளை வாய்மொழி வழக்காறுகள். சமூகப் பழக்க வழக்கங்கள், பொருள்சார் பண்பாடு, நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் என நான்கு வகையாக வகைப்படுத்தி ஆய்வு செய்து வந்தனர். தற்போது ஆய்வுகளின் வளர்ச்சியில் பல நுண்ணிய வகைப்பாடுகள் தோன்றியுள்ளமையை அறிந்தீர்கள்.


பண்பாட்டின் எச்சங்களைப் படிக்கும் ஒரு கல்வியாக இருந்த நாட்டுப்புறவியல் இன்று பண்பாட்டின் அனைத்து அம்சங்களையும் கற்றுணர உதவும் ஒரு கல்வியாக விரிந்துள்ளது.

மூலம்: [You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 15, 2010 7:49 am

அழகான தமிழ் கட்டுரை பதிந்த சிவா அண்ணாக்கு நன்றி.... இப்போ தொலைந்து போன நாட்டுப்புறவியல் கல்வியை பற்றிய விளக்கத்திற்கு நன்றி அண்ணா... நன்றி அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 28, 2015 6:38 pm

சிவா............

நம்ம ஈகரை எல்லாவற்றிலும் முதல்தான். நாட்டுப்புறவீயலுக்கு இவ்வளவு பெரிய, ஆழமான கட்டுரை வலைத்தளத்தில் கிடைக்கல. சமுக வலைத்தளம் நம்ம ஈகரை வலைத்தளம்தான் சிவா. நன்றி



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக