புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுப்புறவியல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
முன்னுரை
மக்களின் படைப்புகளைக் கொண்டு மக்களைப் படிக்கும் துறை நாட்டுப்புறவியல். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றைச் செயல்படுத்தும் துறை. கலை, இலக்கியம், சமயம், மொழி, சமூகம், வரலாறு, பண்பாடு உள்ளிட்ட பலதுறை ஆய்வுகளுக்குப் பங்களித்து அவற்றை முழுமைப்படுத்தும் துறை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறவியல் துறையை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இத்துறைக்கான விளக்கங்களையும், வரையறைகளையும், பரப்பையும் முதலில் அறிந்து கொள்வது இன்றியமையாதது. எனவே, இப்பாடப்பகுதியில் நாட்டுப்புறவியல் என்பதற்கான விளக்கங்களும் வரையறைகளும் முதலில் சுட்டப்படுகின்றன. தொடர்ந்து இத்துறையின் வகைப்பாடு குறித்தும், பரப்பு குறித்தும் விளக்கப்படுகிறது. இத்துறை பற்றி மேன்மேலும் அறிவுபெறும் வகையில் இத்துறை சார்ந்த சில கலைச்சொற்களுக்கான பொருள் வரையறையும் கூறப்படுகின்றது.
நாட்டுப்புறவியல் - விளக்கமும் வரையறையும்
நாட்டுப்புறவியல் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் ஒருவருக்கு ‘நாட்டுப்புறவியல்’ என்னும் பெயரின் பொருள் என்ன என்பதை விளங்கிக் கொள்வதே முதல்படியாக அமைகின்றது. இத்துறை முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது என்ன பொருள் தந்தது? இன்று இது எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகின்றது? என்பவற்றைத் தெரிந்து கொள்ளுதல் தேவையானது.
நாட்டுப்புறவியல் என்பது பண்பாடு பற்றியது; உலகளாவிய தன்மை கொண்டது; என்றும் நிலைத்து நிற்கக் கூடியது; அழியாதது; மாற்றம் பெறாதது என்று இத்துறையில் முதற்படி எடுத்து வைக்கும் ஆர்வலர்களாகிய நீங்கள் எண்ணக் கூடும். நாட்டுப்புறவியல் பண்பாடு பற்றியது எனும் கருத்தும் உலகளாவியது எனும் கருத்தும் உண்மையென்றாலும் தொடர்ந்து வரும் கருத்துகள் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியவையல்ல. காலம், இடம், சூழல் ஆகியவை மாற மாற எந்தவொரு கருத்தும் வரையறையும் மாற்றம் பெறும். நாட்டுப்புறவியல் என்பதன் பொருளைத் தருவதிலும், கோட்பாட்டு ரீதியாக அதனை விரிவுபடுத்தி விளக்குவதிலும் அறிவியல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், பண்பாட்டுச் சூழல்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் (Motivation) ஆகியவை இடை நுழைகின்றன. ஆகவே பல்வேறுபட்ட விளக்கங்கள் நம்முன் வந்து நிற்கின்றன. இங்கு Folklore எனும் பதத்தை விளங்கிக் கொண்டு அதற்கான வரையறைகளைக் கண்டறிவோம்.
நாட்டுப்புறவியல் - சொல் அறிமுகம்
“Folklore” என்னும் பதத்தை 1846ல் வில்லியம் ஜான் தாம்ஸ் (Willam John Thoms) என்பவர் உருவாக்கினார். ஆனால் இதற்கு முன்பாக அந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே (1812) கிரீம் சகோதரர்களால் (Grimm Brothers) ஜெர்மனியில் நாட்டுப்புற வழக்காறுகள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவர்கள் நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள், வாக்குகள் (Sayings), பெயர்கள், மரபுத்தொடர்கள் போன்றவற்றை ஜெர்மானியக் குடியானவர்களிடமிருந்து சேகரித்தனர். இவை கடந்தகாலப் பண்பாட்டின் எச்சங்களாகக் கருதப்பட்டன.
இங்கிலாந்தில் பழைய கட்டடங்கள், பழைய சட்டம் குறித்த ஆவணங்கள், பழைய கலைப் பொருட்கள், கதைகள், பாடல்கள், பழக்க வழக்கங்கள் போன்ற பழம் மரபுகளை ஆராயும் போக்கு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. இந்தப் பழம் வடிவங்கள் ‘Popular Antiquities’ எனப்பட்டன. வில்லியம் ஜான் தாம்ஸ் இந்தப் பதத்திற்குப் பதிலாக ஆங்கிலோ சாக்சன் மொழியில் ‘Folklore’ எனும் சொற்றொடரை உருவாக்கிப் பயன்படுத்திய பின்னர், கிரீம் சகோதரர்களின் பழம் மரபுகள் பற்றிய ஆய்வுமுறைக்கு ‘Folklore’ எனும் பதம் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டது.
இவ்வாறாக, கிராமங்களில் உள்ள குடியானவர்களிடம் புழங்கிவரும் பழம் மரபுகளைப் பற்றிய ஆய்வைக் குறிப்பதற்கு ‘Folklore’ எனும் பதம் பயன்பாட்டிற்கு வந்தது. எனினும் இந்தப்பதம் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படவில்லை. அந்தந்த நாடுகளின் பண்பாட்டின் தனித்தன்மைகளுக்கேற்ப வெவ்வேறு பதங்கள் பயன்படுத்தப்பட்டன. ஜெர்மனியில் ‘Volkskunde’ என்றும் ஸ்வீடனில் ‘Folkminne’ என்றும் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மொழிப் பண்பாட்டினரும் ஒவ்வொரு பதத்தைப் பயன்படுத்தினர். வங்காளத்தினர் ‘Loksahitya’ என்றும் கன்னடர்களும் தெலுங்கர்களும் ‘Janapada’ என்றும் வடமொழியினர் ‘Lokvaita’ மற்றும் ‘Lokyana’ என்றும் தமிழர்கள் ‘நாட்டுப்புறவியல்’ மற்றும் ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்றும் குறிப்பிட்டனர்.
நாட்டுப்புறவியல் வரையறை
ஒரே நாட்டில் கூட ‘Folklore’ என்ற பதத்தை வரையறுக்கும்போது அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து காணப்படவில்லை. அறிஞர்கள் பலவிதமான வரையறைகளைப் பயன்படுத்தினர். எனவே நாட்டுப்புறவியல் என்பதற்கு ஒரே வரையறை இருப்பதாகக் கொள்ள முடியாது. வில்லியம் ஜான் தாம்ஸ் முதன்முதலில் நாட்டுப்புறவியல் என்று பேசும்போது பழக்க வழக்கங்கள், நடத்தை முறைகள், சடங்குகள், மூடப் பழக்க வழக்கங்கள், கதைப்பாடல்கள், பழமொழிகள் போன்றவற்றையே குறித்தார். இவருடைய வரையறை பெரும்பாலும் விளக்கவுரையை அடிப்படையாகக் கொண்டது.
பண்பாட்டு மானிடவியலும், இ.பி. டைலர் (E.B. Tylor) மற்றும் அவருடைய மாணவர்களால் பின்பற்றப்பட்ட பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் பெரும்மாற்றங்கள் நிகழக் காரணமாக இருந்தன. பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டினர் மனித நாகரிக வரலாறு என்பது விலங்காண்டிநிலை, காட்டாண்டிநிலை போன்ற நிலைகளைக் கடந்து வந்துள்ளதாகக் கருதினர். இதற்கு, இன்னும் வழக்கத்தில் இருக்கும் கடந்தகாலப் பண்பாட்டின் எச்சங்களைச் சான்றாகக் கூறினர். நாட்டுப்புறவியல் என்பது மனித குலத்தின் புராதன காலச் சிந்தனை, நம்பிக்கை போன்ற அமைப்புகளின் எச்சங்களாகும் எனக் கருதப்பட்டது. நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் வழக்காறுகளின் தோற்றங்களுக்கு அளிக்கப்படும் விளக்கங்களைப் போலப் பரிணாமவியல் புதிய மேலதிகமான கோட்பாட்டு விளக்கங்களையும் மாதிரிகளையும் தந்தது. இவ்வாறாக நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது ஒரு வரலாற்று அறிவியலாக வரையறுக்கப்பட்டது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அமெரிக்கர்களின் முயற்சி
ஆங்கிலேய நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களின் பணியைத் தொடர்ந்து 1888ல் ‘அமெரிக்க நாட்டுப்புறவியல் கழகம்’ (American Folklore Society) தொடங்கப்பட்டது. இதே காலகட்டத்தில் ‘அமெரிக்க நாட்டுப்புறவியல் இதழ்’ (Journal Of American Folklore) ஒன்றும் தொடங்கப்பட்டது. இதன் முதல் ஆசிரியரான வில்லியம் வெல்ஸ் நியூவெல் (William Wells Newwell) இது பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார். ‘அமெரிக்காவில் விரைவாக மறைந்து கொண்டிருக்கும் ஆங்கில வழக்காறுகளின் எச்ச வடிவங்கள், பிரெஞ்சு, கனடா, மெக்சிகோ நாட்டு வழக்காறுகளின் எச்சங்கள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நீக்ரோக்களின் வழக்காறுகள், வட அமெரிக்க இந்தியப் பழங்குடிகளின் தொன்மங்கள், கதைகள் போன்றவற்றையும் அமெரிக்க நாட்டுப்புறவியல் மீட்டு அவற்றைச் சேகரித்து ஆவணப்படுத்தும் முகமாகவே ‘அமெரிக்க நாட்டுப்புறவியல் இதழ்’ தொடங்கப்பட்டது' (எஸ்.டி. லூர்து, ச. பிலவேந்திரன், 2003;15)
நியூவெல்லின் இந்தக் கூற்று நீண்ட வரலாற்றின் பழைய பண்பாட்டு மரபுகளைப் பற்றிப் படிப்பதே நாட்டுப்புறவியல் என்னும் அமெரிக்க ஆங்கிலேய ஆய்வாளர்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. நியூவெல் அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பற்றி ஆராயும்போது ஒரு புதிய கோட்பாட்டுச் சிக்கலை எதிர்கொண்டார். அதுவரை விலங்காண்டி (Savage Past) நிலைப் பண்பாட்டிலிருந்து இன்று மீந்திருக்கும் எச்சங்களே நாட்டுப்புற வடிவங்கள் என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பார்த்தால் விலங்காண்டி நிலையிலேயே இருப்பதாகக் கருதப்பட்ட அமெரிக்க இந்தியப் பழங்குடிகளிடம் நாட்டுப்புற வழக்காறுகள் இல்லை எனக் கொள்ள வேண்டியிருந்தது. இது தவறு என உணர்ந்த நியூவெல் 1890 ஆம் ஆண்டு எழுதிய ‘நாட்டுப்புறவியல் ஆய்வு’ எனும் கட்டுரையில் ‘Folklore’ என்பதற்கு மறுவரையறையைக் கொடுத்தார். இதன்படி ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எழுதும் முறையைப் பயன்படுத்தாமல் வாய் மொழியாகவும், நம்பிக்கைகள் வழியாகவும் பரப்பப்படுவதே நாட்டுப்புற வழக்காறுகள் ஆகும் என வரையறுத்தார்.
இதற்கு முந்தைய வரையறைகள் வழக்காறு என்பதை மிகப் பழங்காலத்தியது என்று மட்டுமே அனுமானித்தன. ஆனால் நியூவெல்லின் இந்த வரையறை வழக்காற்றை ‘மரபு வழியானது’ என்றும் ‘ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குப் பரப்பப்படுவது’ என்றும் கூறியது. இந்த வரையறை, நாட்டுப்புற வழக்காறுகள் என்பன கடந்த காலத்தோடு தொடர்புடையவைதான் எனினும் அவை மிகப் பழங்காலத்தியவை அல்ல என உணர்த்தியது.
ஐரோப்பிய மனப்பாங்கிற்குள் இருந்து கொண்டு சிந்தித்த அமெரிக்க ஆய்வாளர்களுக்கு நாட்டுப்புறவியல் பற்றிய மிகச் சரியான கருத்தைப் பெறுவது இயலாது எனும் எண்ணம் வலுப்பெற்ற போது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு நாட்டுப்புற வடிவங்கள் பற்றிய மறுவரையறை தேவைப்பட்டது. ‘நாட்டுப்புற வடிவங்கள் பழைய பண்பாட்டின் எச்சம்’ என்னும் கருத்தும் ‘மீதியான (relic) பண்டம்’ என்கிற கருத்தும் மாற்றம் பெற்று அவை ‘வாய்மொழி மரபு சார்ந்தவை’ எனும் கருத்து வலுப்பெற்றது.
நாளடைவில் அமெரிக்க நாட்டுப்புறவியல் ஆய்வு மானிடவியலாளர்களாலும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களாலும் கல்விப்புலம் சார்ந்த துறையாக மாற்றப்பட்டது. நாட்டுப்புறவியலை மானிடவியலாளர்கள் இலக்கியம் என்றும் இலக்கியவாதிகள் பண்பாடு என்றும் வரையறை செய்தனர். மரியா லீச் (Maria Leach) என்பவர் நாட்டுப்புறவியலுக்கான அகராதி ஒன்றைத் தயார் செய்து அதில் நாட்டுப்புறவியலுக்கான 21 வரையறைகளைத் தொகுத்தளித்தார். நாட்டுப்புறவியலுக்கு இவ்வாறு 21 வரையறைகளைக் கொடுத்தது ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே ஃபிரான்சிஸ்லீ உட்லி (Francis Lee Utley) என்பவர் இந்த 21 வரையறைகளிலும் தரப்பட்ட முக்கியமான சொற்றொடர்களை எடுத்துக் கொண்டு அவை தந்த அர்த்தங்களைக் கொண்டு ஒரு செயல்திறம் மிக்க வரையறையைத் (An Operational Definition) தர முயன்றார். இவர் நாட்டுப்புற வழக்காறு என்பது ‘வாய்மொழியாகப் பரப்பப்படும் இலக்கியம்’ என்னும் முடிவுக்கு வந்தார். பழக்க வழக்கம், மூடப்பழக்கம், மூட நம்பிக்கைகள் என்பன போன்றவற்றை உதறிவிட்டு ‘வாய்மொழியாகப் பரப்பப்படுவது’ என்னும் பொருளில் ‘வாய்மொழி இலக்கியம்’ என நாட்டுப்புற வழக்காற்றை வரையறை செய்தார்.
நாட்டுப்புற வழக்காறு என்பது வாய்மொழியாகப் பரப்பப்படும் இலக்கியம் என்னும் வரையறை வேறு சில மானிடவியலாளர்களையும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களையும் சங்கடப்படுத்தியது. எல்லாப் பண்பாடுகளுமே எழுதப்படாததாகவும் வாய்மொழியாகப் பரப்பப்பட்டு வருவதாகவும் இருப்பதால் நாட்டுப்புறவியல் பற்றிய கருத்தாக்கமும் பண்பாடு பற்றிய கருத்தாக்கமும் வேறுபடுத்த முடியாதவையாக இருந்தன. எனவே நாட்டுப்புறவியலைப் பண்பாட்டின் ஒரு பகுதி என வரையறுத்தனர். அவர்கள் நாட்டுப்புற வழக்காறுகளைப் பண்பாட்டின் ஒரு பகுதி என்றே கருதினர். தனித்த ஒன்றாகக் கருதவில்லை. ஆனால் நாட்டுப்புற மக்கள் வாழ்வு (Folklife) என்பதனை ஆராய்ந்தவர்கள் நாட்டுப்புற வழக்காறுகள் முழுமையும் பண்பாடு என்றே கருதினர்.
மானிடவியல் துறையைச் சார்ந்த நாட்டுப்புறவியல் அறிஞரான வில்லியம் பாஸ்கம் (William Bascom) என்பவர் நாட்டுப்புறவியலை ‘அழகியல் சார்ந்த வாய்மொழிக்கலை’ என வரையறை செய்தார். இந்த வரையறை தற்காலக் கருத்துகளையும் உட்கொண்டு ஒரு புலத்திற்கான அடிப்படையை நோக்கி அமைந்திருந்த போதிலும் இது முழு மனதோடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் இந்த வரையறை நம்பிக்கை, பழக்க வழக்கம், மருத்துவம் போன்ற கலைவடிவம் சாராத வழக்காறுகள் பற்றியும் நடனம், இசை, கைவினைப் பொருள் போன்ற கலைநயம் சார்ந்த வழக்காறுகள் பற்றியும் கவனத்தில் கொள்ளவில்லை.

நாட்டுப்புற மக்கள் - ஆலன் டண்டிஸின் விளக்கம்
ஆலன் டண்டிஸ் (Alan Dundes) என்னும் அமெரிக்க நாட்டுப்புறவியல் அறிஞர் 1965இல் நாட்டுப்புறவியல் என்பதற்கு ஒரு புதிய வரையறையைக் கொடுத்தார். இவர் ‘Folklore’ என்ற சொற்றொடரை ‘Folk’ என்றும் ‘Lore’ என்றும் இரண்டாகப் பிரித்து அதை வரையறை செய்ய முயன்றார்.
Folk என்போர் யார்?
Folk என்போர் யார் என்பதற்கான விளக்கம் கூறமுனைந்த இவர், முதலில் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆய்வாளர்கள் இச்சொல்லுக்குத் தந்த விளக்கங்களைக் கூறுபடுத்திப் பின்வருமாறு காட்டுகின்றார்.
Savage or Primitive
Folk or Peasant
Civilized or Elite
Pre or Non-literate
Illiterate Literate
Rural Urban
Lower Stratum Upper Stratum
மேற்கண்ட விளக்கத்தின்படி Folk என்பது காட்டுமிராண்டி நிலையிலுள்ள நாகரிக முதிர்ச்சியற்ற மக்களுக்கும் நாகரிகமடைந்துள்ள அல்லது கல்வியறிவு பெற்ற மக்களுக்கும் இடைப்பட்டவர்களைக் குறிக்கிறது. கல்விநிலை, வாழுமிடம், வாழும்நிலை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு Folk என்போர் கல்வியறிவற்றவர் ( Illiterate ) கிராமத்தில் வாழ்பவர் (Rural), தாழ்ந்த சமூக நிலையில் உள்ளவர் (Lower Stratum) என்று குறிப்பிடப்பட்டனர். Folk என்பதற்கான இந்த விளக்கம் இன்றுங்கூட ஆய்வாளர்களிடம் செல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது.
இந்த விளக்கத்தின் குறைபாடுகளை டண்டிஸ் விரிவாக எடுத்துக் கூறுகின்றார். இந்த விளக்கம் நாகரிக வளர்ச்சியற்ற மக்களை ஒதுக்கி விடுவதைப் போலவே நகர்ப்புற மக்களையும் நீக்கிவிடுகிறது என்பதையும் சுட்டுகின்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் விளக்கத்தை நாம் அப்படியே எடுத்துக் கொண்டால் காலப்போக்கில் இந்தச் சமூக அறிவியல் துறை வளர்ச்சி குன்றி மறைந்து விடும் என்கிறார். எனவே, Folk என்பதற்கு அவர் ஒரு புதிய விளக்கத்தைப் பின்வருமாறு கூறுகிறார்:
‘Folk’ என்ற சொல் குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு பொதுவான பண்பைக் (காரணக்கூறு, இயல்பு, Factor) கொண்ட எந்த ஒரு குழுவையும் குறிப்பிடலாம். இணைக்கும் காரணக்கூறு எது என்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அது ஒரு பொதுவான தொழிலாக, மொழியாக, சமயமாக இருக்கலாம். ஆனால் எந்தவொரு காரணத்தையாவது அடிப்படைப் பண்பாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு குழு தனக்குச் சொந்தமானது என்று சொல்லிக் கொள்ளக்கூடிய சில மரபுகளைக் கொண்டிருப்பது முக்கியமாகும். கோட்பாட்டளவில் ஒரு குழு என்பது குறைந்த பட்சம் இருவரையாவது கொண்டிருக்க வேண்டும். ஆனால், பொதுவாகப் பெரும்பாலான குழுக்கள் பலரை உள்ளடக்கியிருக்கும். ஒரு குழுவின் உறுப்பினர் ஒருவர் தம் குழுவில் ஏனைய உறுப்பினர் எல்லோரையும் அறிந்திருக்க முடியாது. ஆனால், அக்குழுவினருக்குரிய மரபுக்கூறுகளை அவர் அறிந்திருப்பார். அதாவது அந்தக் குழுவினருள் அவரும் ஒருவர் என்பதை அக்குழுவினருக்கு உணர்த்தும் அடையாள மரபுகளை அவர் உணர்ந்திருப்பார் (Dundes, Alan/ 1978:7 தமிழில், லூர்து, தே. 1986:12)
இந்த விளக்கத்தின்படி ஒரு குழு என்பது ஒரு நாட்டளவிற்குப் பெரியதாகவும் இருக்கலாம்; ஒரு குடும்பம் அளவுக்குச் சிறியதாகவும் இருக்கலாம். நாடு (இந்தியா, அமெரிக்கா), நிலம் (மலை, கடல், காடு), மொழி (தமிழ், மலையாளம்), வாழிடம் (கிராமம், நகரம்), தொழில் (விவசாயி, ஆசிரியர், ஆலைத் தொழிலாளி), சங்கம் (மாதர் சங்கம், முதியோர் சங்கம், தொழிற் சங்கம்), குடும்பம், சாதி, கல்வி போன்றவற்றின் அடிப்படையில் இக்குழு தோன்றலாம். புதிய குழுக்கள் தோன்றும்போது புதிய புதிய நாட்டுப்புற வழக்காறுகள் தோன்றும். எனவே இந்த விளக்கத்திற்கு உச்ச வரையறை ஏதுமில்லை. கால வளர்ச்சிக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய வகையில் இந்த விளக்கம் அமைந்துள்ளது.
‘Folk’ என்ற சொல்லுக்கு ‘ஒரு குறிப்பிட்ட குழு அல்லது பிரிவைச் சேர்ந்த மக்கள்’ என்று கூறப்படும் (அகராதிப் பொருளை விரிவுபடுத்தியதைப் போல அமைந்துள்ள) டண்டிஸின் விளக்கம், நாட்டுப்புறவியல் கல்வித்துறையின் எதிர்காலத்தையும் சிந்தித்துத் தரப்பட்டுள்ளது. அத்துடன் நமது நாடு உட்பட எந்த நாட்டிற்கும் பொருந்தக் கூடியதாகவும் உள்ளது.
குழு என்பதைப் பற்றிய ஒரு சிறு விளக்கத்தை இந்த இடத்தில் காண வேண்டியுள்ளது. ஒரு சாதியைச் சேர்ந்தவர்களை ஒரு குழு என்று கொள்ளும்போது அந்த சாதியைச் சேர்ந்தவரைச் சாதிக் குழுவின் உறுப்பினராகக் காண்கிறோம். அவரே ஓர் ஆசிரியராக இருப்பின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராக இருப்பார். இப்படி ஒருவரே பல குழுக்களிலும் அங்கம் வகிப்பதைத் தவிர்க்க இயலாது. அடுத்ததாக, ஒரு சாதியை ஒரு குழு என்று கொண்டால் அக்குழுவினுள் பல உட்குழுக்கள் காணப்படும்.
படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வெவ்வேறிடங்களில் வாழ்பவர் என்றிவ்வாறு பலவற்றைக் கூறலாம். எந்த ஒரு குழுவையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போது ஆய்வாளர்கள் இவற்றைப் பற்றி எல்லாம் நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும். செயல்பட்டால் Folk என்பதற்கு டண்டிஸ் தந்துள்ள விளக்கம் பயனுடையதாக அமையும். இனி அடுத்த வினாவிற்கு செல்லலாம்.

‘வழக்காறு’ எது?
படைக்கப்படுவனவற்றுள் எதனை நாம் Lore என்று கொள்ளலாம்? முதலில், எவற்றையெல்லாம் நாம் வழக்காறாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம் எனப் பார்ப்போம். ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று ஒரு குழுவில் பல்வேறு படித்தரங்களைக் காணலாம். இவர்கள் பல்வேறு கலை இலக்கியங்களைப் படைக்கிறார்கள். அவை அனைத்தையும் நாம் வழக்காறுகள் என்று கூறுவதில்லை. சான்றாக, ஒரு படைப்பாளி ஒரு சாதிக்குழுவைச் சேர்ந்தவர்; அக்குழுவை நாம் ஆராயும் போது அவர் படைத்துத் தந்த கவிதையை நாம் வழக்காறு என்று கொள்வதில்லை. அதே நேரத்தில் அவர் பாட்டன் பாட்டியிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ காலங்காலமாக வழங்கி வரும் ஒரு பாடலைப் பாடினார் என்று வைத்துக் கொள்வோம். அல்லது பழமொழி, விடுகதை, கதை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் முதலியவற்றைக் கூறினார் என்று கொள்வோம். அத்தகைய பாடலை அல்லது பிறவற்றை நாம் வழக்காறு என்கிறோம். நமக்குப் பாடிக் காட்டியவர் படிப்பாளியா இல்லையா என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் கிராமத்தில் வாழ்கிறாரா நகரத்தில் வாழ்கிறாரா என்றும் கருதிப் பார்க்கவில்லை. அவர் பாடிய பாடலின் தன்மைகளைக் கருதி நாம் வழக்காறா இல்லையா என்பதை நிர்ணயம் செய்கிறோம்.
இவ்வாறே அவர் கூறும் பழமொழி, புதிர், கதை,பேச்சில் இடம் பெறும் மரபுத் தொடர்கள், கூறக் கூடிய அல்லது கடைப்பிடிக்கக் கூடிய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நோன்பு முறைகள் வழிபாடுகள் போன்றவற்றையும் நாம் வழக்காறு என்று கொள்கிறோம்.
மேலும் மக்களிடம் காணப்படும் கோலம், மரபுவழி மர மற்றும் சுதைச் சிற்பங்கள், மரபுவழியில் செய்யப்பட்டுவரும் கைத்தொழில்கள், பயிர்த் தொழில்கள், கூத்து, கரகம் போன்ற நிகழ்த்து கலைகள், மருத்துவம், வானிலையியல் போன்றவற்றையும் நாம் வழக்காறு என்று கொள்கிறோம். இவற்றுள் வாய்மொழியாகக் கேட்டு மட்டுமல்லாமல் கண் வழியாகப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வழக்காறுகளும் உள்ளன.
இனி வேறு சில நிலைகளைக் காணலாம். கையெழுத்துப்பிரதி அல்லது ஓலைச் சுவடியில் ஒரு பாடலைக் காண்கிறோம். அதில் எழுதியவர் பெயர், ஊர் முதலியன குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் அதிலுள்ள பாடல் மக்களிடம் வாய்மொழியாகப் பரவி வழக்கத்திலுள்ளது எனத் தெரிகின்றது. இதனையும் நாம் வழக்காறு என்று கொள்கிறோம். இங்கு எழுதி வைக்கப்பட்ட நிலை, எழுதியவர் பெயர் முதலியன முக்கியத்துவம் பெறவில்லை. ‘வாய்மொழியாகப் பரவி வழக்கத்திலுள்ளது’ என்பதும் பிற கூறுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
வேறொரு சுவடியில் ஒரு பாடலைக் காண்கிறோம். அப்பாடலின் பல பாடங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அப்பாடல் முன்னர் வழக்கத்திலிருந்தது. தற்போது இல்லை. இங்கு வாய்மொழியாகப் பரவி ‘வழக்கத்தில் இருத்தல்’ என்பதும் அடிபட்டுப் போகிறது. சுண்ணாம்பு இடிக்கும்போது பாடப்பட்ட பாடல் அந்நிலையை அடைந்துள்ளது. ஏற்றப் பாடல் அந்நிலையை அடைந்து கொண்டிருக்கின்றது. ஒப்பாரிப் பாடல் கூட அந்நிலையை அடைந்துவிடும். ஆயினும் அதனை நாம் வழக்காறு என்று கொள்கிறோம்.
நாம் களப்பணிக்குச் செல்லும்போது பலர் அப்போதே பாடலை இயற்றிப் பாடுகின்றனர். கூத்து மேடைகளிலோ வயல்களிலோ சொந்தமாக இயற்றிப் பாடிய பாடல்களையும் பாடிக் காட்டுகின்றனர். பாடலின் இறுதியில் தங்கள் பெயர்களையும் பாடிக் காட்டுகின்றனர். பாடலின் இறுதியில் தங்கள் பெயர்களையும் சேர்த்து இன்னார் பாடிய பாடல் இது என்றும் பாடுகின்றனர். அவர்களுள் சிலர் படிப்பறிவு இல்லாதவர்களாகவும் சிலர் படிப்பறிவு உடையவர்களாகவும் உள்ளனர். படிப்பறிவு உடைய சிலர் தங்கள் பாடலை எழுதி வைத்திருப்பதைக் காண முடிகின்றது. இத்தகைய பாடல்கள் மரபு வழியாக வரும் பாடலமைப்பைப் பின்பற்றியவை. குறிப்பிட்ட குழுவால் ஏற்றுக் கொள்ளப்படுபவை. ஆற்றலுள்ள பாடகனாக இருந்தால் வடிவம், இசை முதலியன புதிதாகப் படைக்கப்படவும் கூடும். (தேசிங்கு கதைப்பாடல் இசை தனித்து விளங்குவதைக் கூறலாம்) இவ்வாறு புதிதாகத் தோன்றிய பாடல்களையும் நாம் வழக்காறு என்றே கொள்கிறோம். இங்குக் ‘கூட்டுப் படைப்பு’ என்பதும் ‘வழிவழியாகப் பாடப்பட்டு வருவது’ என்பதும் அடிபட்டுப் போகின்றன. அதே நேரத்தில் இத்தகைய பாடல்கள் ‘கூட்டுப் படைப்புகளாக மாறும் ஆற்றல் வாய்ந்தவையாகவும் வாய்வழியாகப் பரவிச் செல்லும் ஆற்றல் உடையவையாகவும் இருக்கும்’ என்பதில் ஐயமில்லை.
மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்ப்போம். 'வழக்காறு' என்பதை எவ்வாறு முடிவு செய்வது?
கூறுபவர் படித்தவரா படிக்காதவரா, கிராமத்தில் வாழ்பவரா நகரத்தில் வாழ்பவரா என்பதைப் பற்றிக்கவலைப்படத் தேவையில்லை.
நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலியன கூட்டுப் படைப்புகளாக இருந்தாலும்கூட எப்போதும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. கூட்டுப் படைப்புகளாக மாறக் கூடிய தனிநபர் படைப்புகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே.
படைப்பவரின் பெயர் தெரிவதால் அதனை வழக்காறு என்று கொள்ள முடியாது என்பதல்ல.
அச்சில் வருவது, வழக்கத்தில் இருக்க வேண்டியது, வாய்மொழியாகப் பரவுவது, வழிவழியாகக் கூறப்பட்டு மரபுவழிப்படுவது. இவையெல்லாம் வழக்காறு எவை என்பதை நிர்ணயிப்பதற்கு முழுமையாகத் துணை செய்யவில்லை. அதே நேரத்தில் வழக்காறு எவை என்பதை முடிவு செய்ய இவையும் துணை புரியக்கூடும் என்ற அளவில் மட்டுமே இவற்றின் முக்கியத்துவத்தை ஏற்கலாம்.
வேறு எவற்றைக் கொண்டு ‘வழக்காறு’ எவை என்பதை நிர்ணயிக்க முடியும்?
வழங்கப்படும் சூழல் (Context). பனுவல் (Text), அதன் இழைவுக் கூறு (Texture) ஆகியவற்றைக் கொண்டுதான் நாம் வழக்காறு எது என்பதை நிர்ணயிக்க முடியும். இவற்றுள் ஒன்று தவறினாலும் ஒன்று துணை செய்யும். உதாரணமாகத் தொழிற் பாடலை எடுத்துக் கொள்ளலாம். தொழில் செய்யும் சூழலில் தொழில் செய்வோர் பாரதியார் பாடலொன்றைப் பாடுவதாகக் கொள்வோம். ஓரளவு படித்தோர் தொழிற் களங்களில் பணி செய்வதைக் காண்கிறோம். எனவே இது நிகழக் கூடியதே. வழங்கப்படும் சூழலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் இது தொழிற் பாடல்தான். இது போன்ற சந்தர்ப்பத்தில் அதன் பனுவலும், இழைவுக் கூறும் தாம் இது தொழிற் பாடல் அல்ல என்பதை அறிந்து கொள்ளத் துணைபுரியும். ஆனால் தாலாட்டு, ஒப்பாரி போன்றவற்றுக்கு அமைப்பியல் ஆய்வு மேற்கொண்டு அவற்றின் அமைப்புகளை பா.ரா. சுப்பிரமணியம் கண்டறிந்தது போலப் பிற இலக்கிய வகைகள், நம்பிக்கைகள், நிகழ்த்து கலைகள் போன்றவற்றுக்கும் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால்தான் இது போன்ற முடிவுக்கு வர இயலும். அவ்வாறு செய்யும்வரை வழங்கப்படும் சமூகச் சூழலை நம்புவதைத் தவிர்க்க இயலாது. அவ்வாறு வழக்காறுகளின் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர அவற்றையே இறுதியான வரையறையாகக் கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டுப்புற வழக்காறுகள் சூழலுக்கேற்ப மாறும் தன்மையுடையன. கள ஆய்வின் போது நமக்குக் கிடைக்கும் பொருள் ஒரு பாடலாயின் அது வழக்காறா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இசையும் துணையாக இருக்கும் என்பதையும் இங்குச் சுட்ட வேண்டும்.

‘வழக்காறு’ பற்றி டண்டிஸின் கூற்றுகள்
‘வழக்காறு’ என்பதை டண்டிஸ் விளக்க முற்படும்பொழுது வழக்காறுகளை வகைப்படுத்திய ஒரு பட்டியலைத் தந்து இதுவே தொடக்கநிலை ஆய்வாளர்களுக்குப் பெரிதும் உதவும் என்று குறிப்பிடுகின்றார். இந்தப் பட்டியல் நீளமானது. எனினும் இது ஒரு ‘மாதிரி வடிவமே’ என்று கூறுகின்றார்.
புராணங்கள், பழமரபுக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், பழமொழிகள், விடுகதைகள், இன்னிசை உச்சாடனங்கள், நையாண்டிகள், சாபங்கள், சபதங்கள், வசவுகள், எதிர் உரைத்தல் (Retorts), இடித்துரைகள் (Taunts), பாராட்டுகள், நாப்புரட்டுகள், வரவேற்புரைகள், விடைபெறும் வாய்பாடுகள் போன்றவை ‘வழக்காறுகள்’ என்பதனுள் அடங்கும். மேலும், ஆடைகள், நடனம், நாடகம், கலை, நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கை, மருத்துவம், இசை, பாடல்கள், குறுமொழிகள் (Slang), உவமைகள் (Similies), உருவகங்கள், பட்டப்பெயர்கள், இடப்பெயர்கள் போன்றவையும் இதனுள் அடங்கும்.
வாய்மொழிக் காப்பியங்களிலிருந்து கையெழுத்துப் புத்தகக் கவிதை வரை உள்ளவை, கல்லறை வாசகங்கள், கழிவறைப் பாட்டுக்கள் (பொதுக் குளியலறைச் சுவர்களில் காணப்படும் எழுத்துகள் இவை), வெற்று வேடிக்கைப் பாட்டு, பந்தடி ஒலிப்பாடல்கள், கயிறு குதிப்பாடல்கள், ஒலிப்பாடல்கள், கால் தூக்கி ஆட்டுப் பாடல்கள், குழந்தைகளை முழங்காலில் வைத்துத் தூக்கித் தூக்கிப் போட்டுப் பாடும் ஒலிப்பாடல்கள், எண்ணிக்கை ஒலிப்பாடல்கள் (விளையாட்டில் யார் அந்த ஒருவராக இருப்பது எனத் தேர்ந்தெடுக்கப் பாடப்படுபவை), குழந்தை ஒலிப்பாடல்கள் என இவை அனைத்தும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். விளையாட்டுகள், சைகைகள், குறியீடுகள், செபங்கள், நடைமுறை நகைப்புகள், நாட்டுப்புறச் சொற்பிறப்பியல்கள், உணவுப் பட்டியல்கள், மெத்தை உருவரைகள், பின்னல் உருவரைகள், வீடுகள், களஞ்சியங்கள், வேலிகளின் வகைகள், கூவி விற்போர் குரலொலிகள், விலங்குகளை அழைப்பதற்கு அல்லது அவற்றிற்குக் கட்டளையிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் மரபொலிகள் போன்றவை நாட்டுப்புற மக்களின் வழக்காறுகளின் பட்டியலுக்குள் அடங்கும். நினைவில் நிறுத்தும் வழிமுறைகள், கடித உறை முத்திரைகள், தும்மியபின் பயன்படுத்தும் மரபுச் சொற்கள் எல்லாம் சிறு வடிவங்கள் எனப்படும். திருவிழாக்கள், சிறப்புமிகு நாட்கள் குறித்த வழக்கங்கள் போன்றவை பெரும் வடிவங்களாம்.
இந்தப் பட்டியல் நாட்டுப்புற வழக்காற்று வடிவங்களின் மாதிரிகளையே கொண்டுள்ளது. எல்லா வடிவங்களும் இதற்குள் அடங்கி விடவில்லை. இந்த வழக்காறுகளும் இவற்றைப் பற்றிய படிப்பும் நாட்டுப்புறவியல் எனப்படும் என்று குறிப்பிடுகிறார் டண்டிஸ். இப்பட்டியல் முழுமையானது அல்ல என்றும் அவர் குறிப்பிடுகின்றார். (லூர்து, எஸ்.டி., பிலவேந்திரன், ச.; 2003, 18-19)
முன்வைக்கப்படும் வரையறை
இதுவரை கண்ட விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டுப்புறவியலுக்குப் பின்வருமாறு பொருள் வரையறை கூறலாம்:
ஒரு மக்கட் குழுவினரிடையே வழங்கி வரும் அல்லது வழங்கி வந்த பாடல்கள், கதைகள், பழமரபுக்கதைகள், தொன்மங்கள், பழமொழிகள், புதிர்கள், நகைப்புகள் முதலான இலக்கியங்கள்
கரகாட்டம், காவடியாட்டம், தெருக்கூத்து முதலான நிகழ்த்து கலைகள்
ஓவியம், மரச் சிற்பம், சுதைச் சிற்பம் முதலான பொருட்கலைகள்
பாய்முடைதல், பொம்மை செய்தல் முதலான கைவினைப் பொருட்கள்
வழிபாடு, நம்பிக்கைகள், மந்திரம், சடங்குகள் உள்ளிட்ட சமயப் பழக்க வழக்கங்கள்
வானியல், வானிலையியல், நிலவியல், கடலியல், வேளாண்மை, கட்டடம் கட்டுதல், படகுகள் கட்டுதல், மருத்துவம் முதலான அறிவியல் தொழில் நுட்பம்
போன்ற வழக்காறுகளை முறைப்படி சேகரித்து, வகைப்படுத்தி, அறிவியல் பூர்வமாக ஆராயும் ஆய்வுத்துறையை நாட்டுப்புறவியல் துறை எனலாம்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நாட்டுப்புறவியலின் வகைப்பாடு
சேகரித்தல், வகைப்படுத்துதல், ஆய்வு செய்தல் என்பன நாட்டுப்புறவியல் ஆய்வுகளின் மூன்று நிலைகள் ஆகும். இதில் ஆய்வு செய்தல் என்னும் நிலை சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் அவற்றை வகைப்படுத்துதல் ஆகியனவற்றைப் பொறுத்தே அமைகின்றது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் சேகரிக்கப்பட்ட தரவுகளை வகைப் படுத்துவது எளிதானது. அது ஒரு சில விதிகளின் படி அமைவதால் ஆய்வு செய்வதற்கும் எளிதானதாக ஆகின்றது. ஆனால் தற்போது நாட்டுப்புறவியல் ஒரு பரந்துபட்ட சமூக அறிவியலாக வளர்ந்து விட்டதனால் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியன ஒருவரால் மட்டுமே செய்யப்படுவதில்லை. தரவுகளைச் சேகரிப்பவர் ஒருவராகவும், அவற்றை வகைப்படுத்துபவர் வேறொருவராகவும், ஆய்வு செய்பவர் இன்னொருவராகவும் இருக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆவணக் காப்பகங்களிலும் அருங்காட்சியகங்களிலும் இத்தகைய நிலையைக் காணலாம். இந்தப் பணிப் பகிர்வின் விளைவாகத் தரவுகளைச் சேகரிப்பவர்களும், அவற்றை வகைப்படுத்துபவர்களும் இந்தப் பணிகளை யாருக்காகச் செய்கிறோம் என அறியாமலேயே செய்கின்றனர். இவர்கள் எந்த ஆய்விற்கும் பொருத்தமானதாக இருக்குமாறு இவற்றைச் செய்ய வேண்டியதுள்ளது. இதற்கெனப் பல்துறை நோக்கில் அறிவு பூர்வமாகத் தரவுகளின் வகைப்பாட்டை அமைக்க வேண்டியதுள்ளது. இதன் காரணமாகவே அருங்காட்சியகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் நாட்டுப்புற வழக்காறுகளை வகைப்படுத்துவது சிக்கலாக உள்ளது. இதுவே நாட்டுப்புற வழக்காறுகளை வகைப்படுத்துவதில் இருக்கும் பெருந்தடையாகும்.
இருப்பினும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் தமக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் வகைப்பாடுகளைச் செய்து கொண்டுதான் வருகின்றனர். இதுவரை நாட்டுப்புற வழக்காறுகள் இரு விதத்தில் வகைப்படுத்தப்பட்டு வந்துள்ளன.
1. நாட்டுப்புற வழக்காறுகள் அவற்றின் வடிவத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.
2. நாட்டுப்புற வழக்காறுகள் நூலக வகைப்பாட்டு முறைமையை ஒட்டி வகைப்படுத்தப்பட்டன.
டார்சனின் வகைப்பாடு
வடிவத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு வகைப்பாடுகள் இருந்த போதிலும் ரிச்சர்டு எம். டார்சனின் (Richard M. Dorson) வகைப்பாடு குறிப்பிடத் தக்கது. இவர் நாட்டுப்புற வழக்காறுகளை நான்கு வகைகளாகக் குறிப்பிடுகிறார்.
இவரது வகைப்பாடு பின்வருமாறு:
1. வாய்மொழி வழக்காறுகள்
1. நாட்டுப்புறக்கதைகள் (Folk Narrative)
2. கதைப்பாடல்கள் (Narrative Folk Poetry)
3. நாட்டுப்புறக் காப்பியம் (Folk Epic)
4. பழமொழிகள் (Proverbs)
5. விடுகதைகள் (Riddles)
6. நாட்டுப்புறப் பேச்சு வழக்கு (Folk Speech)
2. சமூகப் பழக்க வழக்கங்கள்
1. விழாக்களும் பண்டிகைகளும்
2. பொழுதுபோக்கும் விளையாட்டும்
3. நாட்டுப்புற மருத்துவம்
4. நாட்டுப்புறச் சமயம்
3. பொருள்சார் பண்பாடு
1. நாட்டுப்புறக் கைவினைப் பொருள்கள்
2. நாட்டுப்புறக் கலைகள்
3. நாட்டுப்புறக் கட்டடக் கலை
4. நாட்டுப்புற ஆடைகள்
5. நாட்டுப்புற உணவு முறைகள்
4. நாட்டுப்புற நிகழ்த்து கலைகள்
1. நாட்டுப்புற நாடகம்
2. நாட்டுப்புற இசை
3. நாட்டுப்புற நடனம்
இந்த நான்கு வகைகளும் எல்லாவிதமான நாட்டுப்புற வழக்காறுகளையும் உள்ளடக்கியவை என்று ரிச்சர்டு எம். டார்சன் குறிப்பிடவில்லை. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றையொன்று மேவி நிற்பன.

வடிவங்களை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய வகைப்பாடுகளில் நாட்டுப்புற வழக்காறுகளின் செயற்பாடுகள் மற்றும் கருப்பொருட்கள் போன்ற பிற இன்றியமையாத கூறுகள் விலக்கப்பட்டுள்ளன.
போக்ஸின் வகைப்பாடு
நூலக வகைப்பாட்டு முறைமையை ஒட்டி அமைக்கப்படும் வகைப்பாட்டில் குறிப்பிடத்தக்கது ஆர்.எஸ். போக்ஸின் (R.S.Boggs) வகைப்பாடாகும். இவ்வகைப்பாட்டில் ஒவ்வோர் ஆங்கில எழுத்தும் ஒரு நாட்டுப்புற வகையைக் குறிக்கிறது. அதன் உட்பிரிவுகள் ஒன்று முதல் நூறு வரை அமைந்துள்ளன. உட்பிரிவுகளுக்குள்ளும் உள்வகைப்பாடு வருகையில் புள்ளி வைத்து ஒன்று முதலான எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனுடைய விளக்கங்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.
1. A to Z குழுக்கள் (Groups)
2. 000 - 900 பிரிவுகள் (Categories)
3. 00 - 90 வகைகள் (Types)
4. 00 - 90 உட்பிரிவுகள் (Sub Divisions)
1. குழுக்கள்
A. பொது நாட்டுப்புற வழக்காறுகள்
B. உரைநடைக் கதைகள் (Narrative Prose)
C. கதைப்பாடல்கள், பாடல்கள், நடனம், இசை
D. நாடகம்
F. பழக்கவழக்கங்களும், விழாக்களும்
G. புவியியல்
L. மொழி
M. கலைகள், கைவினைப் பொருட்கள், சிற்பங்கள்
N. உணவு, பானங்கள்
P. நம்பிக்கைகள்
S. பேச்சுமொழி
V. பழமொழிகள்
W. விடுகதைகள்
B. உரைநடைக் கதைகள்
B 200 - தொன்மம்
B 400 - பழமரபுக் கதைகள்
B 600 - கதைகள்
B 220 - படைப்பாளர்
B 230 - தெய்வங்கள்
C 200 - கதைப்பாடல்கள்
C 300 - பாடல்கள்
C 320 - உணர்வுகள்
C 322 - காதல்
C 323 - பகைமை
N 222 - உணவு வகைகள்
N 222.2 - காலை உணவு
N 222.4 - நண்பகலுணவு
N 222.6 - இரவு உணவு
இந்த வகைப்பாட்டின் சிறப்பு என்னவெனில் இனிப் புதிதாகக் கண்டுபிடிக்கப்படவுள்ள நாட்டுப்புற வழக்காறுகளைக் கூட இதில் இணைத்துக் கொள்ளலாம். ஆனாலும் இவ்வகைப்பாட்டின் பெருங்குறை என்னவென்றால் இது எவ்வகையான குறிப்பிட்ட தரத்தையும் பெற்றிருக்கவில்லை.
இராகவன் பையநாடின் வகைப்பாடு
நாட்டுப்புறவியலின் வகைப்பாடுகள் குறித்து ஆய்வு செய்த இராகவன் பையநாடு, வகைப்பாட்டிலுள்ள சிக்கல்களைக் கூறி அவற்றிற்குத் தீர்வு காணும் முகமாக ஒரு மாதிரி வகைப்பாட்டை முன் வைக்கின்றார். இது பற்றிய அவரது கருத்துகள் பின்வருமாறு:
1. நாட்டுப்புறவியல் எதிர்கால ஆய்வுகளுக்குப் பொருந்துமாறு வகைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
2. நாட்டுப்புறவியல் ஆய்வுகளின் மூல நோக்கம் ஒரு குழுவின் சிறப்பைக் கண்டு பிடிப்பதாகும். எனவே வகைப்பாடும் அந்நோக்கத்திற்கு உதவி செய்யும் வகையில் அமைய வேண்டும்.

3. தற்போதுள்ள வகைப்பாட்டின்படி ஒரே வழக்காறு பல்வேறு வகைமைகளில் வருகிறது. ஆகவே வகைப்படுத்துதல் சிக்கலாகிறது.
4. ஆய்வாளர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பல்வேறு நிலைகளில் பிரிக்கின்றனர்.
வடிவம், கருத்து, செயல்பாடு, சூழல் ஆகிய நான்கு அடிப்படைகளில் ஆய்வுகள் அமையலாம் (நிகழ்த்துதல் என்பது இங்குக் கருத்தில் கொள்ளப்படவில்லை). அவற்றில் வடிவம் மற்றும் கருத்தியல் ஆய்வுகள் ஒரு தலைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால் செயல்பாடு மற்றும் சூழல் ஆய்வுகள் தலைப்புக்கு அப்பாற்பட்ட கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆகவே எதிர்கால ஆய்வுகளுக்கு உதவும் வகைப்பாடு தலைப்பை உள்ளடக்கிய கூறுகளையும் தலைப்புக்கு அப்பாற்பட்ட கூறுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரே வழக்காறு பல்வேறு வகைகளில் அடங்குவதற்கான காரணம், வகைப்பாட்டின் போது வெவ்வேறு தரங்களைப் பயன்படுத்துவது தான். ஒரே பாடல் பல்வேறு வகைகளில் அடங்கும்போது அந்த வகைகளின் அடிப்படைக் குணங்கள் அந்தப் பாட்டில் இருக்கின்றன என்று பொருளாகிறது. ஒரு வகைப்பாடு அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றால் எல்லாவிதமான குணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்கையில் வகைப்பாட்டில் குழு - உட்குழு போன்று பிரிக்கும் தற்போதைய நுட்பம் பலவகையான வகைப்பாடுகளுக்கு வழிவகுக்க வேண்டும். நாட்டுப்புற வழக்காறுகளின் சிறப்புக் கூறுகளை வெளிப்படுத்தும் வண்ணம் ஓர் எழுத்தையோ அல்லது ஓர் எண்ணையோ கணினியில் பதிவு செய்யுமாறு அமைத்தல் வேண்டும். கேரளத்தில் வழக்கத்திலுள்ள தோட்டம் பாட்டு என்னும் வழக்காறு, வடிவத்தின் அடிப்படையில் கதைப்பாடல் என்பது தெளிவு. அதே நேரத்தில் தோட்டம் பாட்டு மற்ற தன்மைகளையும் கொண்டுள்ளது. கருத்தின் அடிப்படையில் இது தெய்வத்தோடு தொடர்புள்ளது. அல்லது இது ஒரு தொன்மம். செயற்பாட்டின் அடிப்படையில் இது ஒரு சடங்கு. சூழலும் இதைச் சடங்கிற்குள் வகைப்படுத்துகின்றது. பொதுவான வகைப்பாட்டில் இத்தகைய உண்மைகள் ஒவ்வொன்றையும் சமமாகப் பாவித்து ஆராய வேண்டும். சான்றாக A என்பதை வடிவநிலை என்றும் B என்பதைக் கருத்து நிலை என்றும் C என்பதைச் செயல்பாட்டுநிலை என்றும் D என்பதைச் சூழ்நிலை என்றும் கொள்வோம்.
இதன் ஒவ்வொன்றின் அடிப்படையில் மேலும் வகைப்பாடுகள் செய்ய முடியாது. உதாரணமாகத் தோட்டம் பாட்டை எடுத்துக் கொண்டால் வடிவநிலையில் இது ஒரு கதைப்பாடல், இதற்கு 10 என்று எண்ணிட்டுக் கொள்வோம். அப்படியானால் தோட்டம் பாட்டு வடிவ அடிப்படையில் A10 ஆகும். இதன் கருத்து ஒரு நாட்டுப்புறத் தெய்வத்தின் கதை என்றால் இது ஒரு தொன்மம். தொன்மத்திற்கு கொடுக்கப்பட்ட எண் 50 என்றால் கருத்து அடிப்படையில் தோட்டம் பாட்டு B50 ஆகும். செயல்பாட்டு அடிப்படையில் 40 என்பது சடங்கிற்குக் கொடுக்கப்பட்ட எண் என்றால் தோட்டம் பாட்டு C40 எண்ணைக் கொண்டிருக்கும். இது சடங்காக இருப்பதால் சூழல் அடிப்படையில் D40. அவ்வாறெனில் தோட்டம் பாட்டு A10, B50, C40, D40. இவ்வாறாக எந்தவொரு பாடலும் எண்ணாகவும் எழுத்தாகவும் மாற்றப்படக் கூடும்.
மேற்கூறிய விளக்கம் ஆய்வுச் சமூகத்திற்கு மட்டுமே உரித்தானது. ஒவ்வொரு மக்கள் குழுவும் அவர்களுக்கே உரித்தான வகைப்பாட்டைக் கொண்டுள்ளன. இவ்வகைப்பாடு மிக இன்றியமையாதது. ஒரு குழுவினரின் எல்லாப் பாடல்களும் சேகரிக்கப்பட்டால் அவற்றில் நாட்டுப்புறப் பாடல்களைக் கண்டு கொள்ள முடியும். இங்கு மேற்கண்ட வகைப்பாடு போன்று ஒரே பாடல் வெவ்வேறு வகைப்பாட்டில் வராது. ஒரு குறிப்பிட்ட பாடலை ஒரே வழியில்தான் இனம் காண்கின்றனர். பல்வேறு வகையில் இனம் காண்பதில்லை. (இராகவன் பையநாடு, சண்முகம். ஆ; 2003, 47-49)
இவ்வாறாக நாட்டுப்புறவியலில் வகைப்பாடுகள் இந்தத் துறையின் வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு மாறுதல்களை அடைந்து வந்துள்ளன. ஆய்வின் போக்குகள் மாற மாற ஆய்வாளர்களின் தேவை கருதி வகைப்பாடுகளும் மாறி வந்துள்ளன. நாட்டுப்புறவியலில் அடியெடுத்து வைக்கும் ஒருவருக்கு இத்தகைய மாறுதல்கள் ஒரு வகையான குழப்பத்தையும் தெளிவின்மையையும் தரலாம். எனினும் நாட்டுப்புறவியலில் பயிற்சி பெறப் பெற இத்தகைய குழப்பங்கள் மறைந்து விடும். தொடக்கநிலை நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களுக்கு நாட்டுப்புறவியல் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ரிச்சர்டு எம். டார்சன் போன்றோரின் வகைப்பாடுகள் உறுதுணையாக இருக்கும். இவை வடிவங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பகால வகைப்பாடுகள்.

நாட்டுப்புறவியல் - வகைகள் - அறிமுகம்
நாட்டுப்புறவியல் வகைப்படுத்தப்படும் முறைகள் பற்றி மேலே கண்டோம். நாட்டுப்புறவியலின் வகைகளாகிய நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், கதைகள், விடுகதைகள், நாட்டுப்புற மருத்துவம் ஆகியவற்றை இனிவரும் இயல்களில் தனித்தனியே விரிவாகக் காணவிருக்கிறோம். அவை பற்றிய சுருக்கமான அறிமுகத்தை இங்குக் காண்போம்.
நாட்டுப்புற இலக்கியம் என்னும் பிரிவில் பல்வேறு பொருள்களில் அமைந்த தனித்தனி நாட்டுப்புறப் பாடல்கள், கதைப்பாடல்கள், கதைகள், விடுகதைகள், பழமொழி என்னும் ஐந்து வகைகளை உள்ளடக்கிக் கூறுகின்றார் கோ. கேசவன். நாட்டுப்புறக்கலைகளை இசை, கூத்து, ஆட்டம் போன்று பலவகைகளாகப் பிரிப்பர். இவை நிகழ்த்து கலைகளாகும். நாட்டுப்புற மரபுகள் என்னும் தலைப்பில் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், மருத்துவமுறை, பழக்க வழக்கங்கள் எனப் பலவற்றை உள்ளடக்குவர். இந்தப் பிரிவுகள் முழுமையும் சரியானவை என்று சொல்ல முடியாது எனக் கூறும் சண்முக சுந்தரம் அடிப்படையாக நாட்டுப்புறவியலைக் கலைகள் என்றும் மரபுகள் என்றும் இரண்டு பெரும் பிரிவில் அடக்கிக் கூறலாம் என முடிவுரைக்கிறார் (சு.சண்முக சுந்தரம், 1975, ப. 21-22). ஆக நாட்டுப்புற மக்களின் வாழ்வில் இடம் பெறும் பண்பாட்டுக் கூறுகளும், வாழ்வோடு பலவகைகளிலும் பிணைந்து வெளிப்படும் கலைகளும்தாம் நாட்டுப் புறவியலாக அமைகின்றன எனப் புரிந்து கொள்ளலாம்.
நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி அவற்றைத் தொகுத்த செ. அன்னகாமு கூறியிருக்கும் விளக்கம் கவனிக்கத்தக்கது. 'நாட்டுப்புறப் பாடல்கள் எளியவை - பகட்டில்லாதவை - பரிசுத்தமானவை - பொய்க்கலப்பற்றவை - நேரானவை - இனிமையும் இசைப் பொலிவும் நிறைந்தவை. தீங்கற்ற கலைக் கருவூலங்கள்' . (சு. சண்முகசுந்தரம், 1975, ப.22) போலித்தனமோ, புனைவோ இல்லாமல் நாட்டுப்புறத்து எளிய மக்களின் உடனடி உணர்வு வெளிப்பாடுகளாகவும் உண்மைக் குரலாகவும் நாட்டுப்புறப் பாடல்கள் விளங்குகின்றன.
மணந்துகொள்வதாக வாக்களித்த மாமன் மகன் காலம் நீட்டிப்பது பற்றி அத்தை மகள் வெளிப்படையாகக் கேட்பதைப் பாருங்கள்:
சோளம் விதைக்கையிலே
சொல்லிவிட்டுப் போன மச்சான்
சோளமும் பயிராச்சே -
நீ சொன்ன சொல்லும்
பொய்யாச்சே
(நா.வானமாமலை, 1964, ப. 205)
நாட்டுப்புற மக்களிடையே வழங்கும் கதைப் பாடல்கள் பல. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்து குறிப்பிட்ட சில கதைத் துணுக்குகளை அடிப்படையாகக் கொண்ட கதைப்பாடல்கள், புராணக் கதைப்பாடல்கள், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள் என இவற்றை நான்கு வகையாகப் பகுக்கிறார் நா. வானமாமலை (நா. வானமாமலை, 1964, ப. 15) உரைநடையில், பேச்சு வழக்கில் ஏராளமான நாட்டுப்புறக் கதைகள் வழங்குகின்றன. செவிவழியாக நீண்டு வளரும் வாழ்வுடையவை இவை. கதை சொல்லிகள் எனக் கிராமங்களில் சிலர் இருந்தனர். இப்படிப் பேச்சு வடிவில் இருந்த பலகதைகள் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளில் ஈடுபாடுள்ளவரும், இக்கதைகளின் சாயல்களைத் தமது படைப்புகளில் படைத்தவருமான எழுத்தாளர் கி. ராஜநாராயணன் இக்கதைகள் சிலவற்றைத் தொகுத்திருக்கிறார். அவற்றைப் பற்றிய விளக்கங்களையும் தந்திருக்கிறார்.
நிகழ்த்து கலைகளான கூத்துக்கள் திறந்த வெளிகளில் மேடையின்றி, திரைகளின்றி, அதிக ஒப்பனைகளின்றி நடத்தப்படுவன. சிறிது காலத்திற்கு முன்பு வரையிலும் தெருக்கூத்து என்பது கோவில் திருவிழாக்களின் சிறப்பான கூறாக இருந்து வந்துள்ளது. புராணங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும் கருப்பொருளை எடுத்து அமைக்கப்பெற்றவை இந்தக் கூத்துகள். கூத்துக்கெனத் தனியே கலைஞர்கள் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர். சில கூத்துக்களில் கிராமம் முழுவதும் ஏதோ ஒருவகையில் பங்கு பெற்று, நாள் முழுதும் கிராமத்து நிகழ்ச்சியாகவே கூத்து நிகழ்ச்சி அமைவதும் உண்டு. இன்றைய நிலையில், நாட்டுப்புறக் கலைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும் எனும் உணர்வு, கலை இலக்கிய அறிஞர்களிடையே தோன்றியுள்ளது. கிராமியக் கூத்து மரபைக் காக்க எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான ந. முத்துசாமி 'கூத்துப்பட்டறை' என்ற அமைப்பை நிறுவிச் சிறப்பாகப் பயிற்சியளித்து வருகிறார். இன்றைய நவீன நாடகங்களில் கூத்துக்கலை மரபின் அம்சங்கள் கலந்து வருகின்றன. ஒரு காலத்தில் நாட்டுப்புற நாடகங்களில் இன்றியமையாத கருவாக இருந்த புராணக் கதைக்குப் பதிலாக இன்றைய தெருநாடகங்களில் அரசியலும், சமூகவியலும், இன்றைய வாழ்வியல் கூறுகளும் தலைமை பெறுகின்றன. இவ்வாறு நாட்டுப்புறக் கூத்துக் கலை வேறு ஓர் வடிவெடுத்துத் தன் வாழ்வை நீட்டித்து வருவதைக் காணலாம்.
சொலவடை எனப்படும் பழமொழிகள் நாட்டுப்புறப் பேச்சின் முக்கியமான பகுதி. நிறுவுதல், தீர்ப்புரைத்தல், சரியான வழிகாட்டல், எச்சரிக்கை செய்தல் போன்ற நோக்கங்கள் வரும்போது பேச்சில் தவறாமல் பழமொழிகள் இடம் பெறுகின்றன.
இலக்கியம் போன்ற அழகு பழமொழிகளில் இருப்பினும் அவை அவர்களின் பண்பாட்டுக் கூறாகவே நீடிக்கின்றன. ‘அழிப்பான் கதை’ எனப்படும் விடுகதைகளும் பொழுதுபோக்கு முறையில் ஒருவருக்கொருவர் சிந்தனைத் தூண்டலாக அமைபவை. ஏனைய நாட்டுப்புறக் கலை, இலக்கியங்கள் போலவே பலமொழிகளும் விடுகதைகளும் உடனடிச் சமூகத் தொடர்புச் சாதனங்களாகவே பயன்பட்டு வந்திருக்கின்றன. மரபின் முத்திரை இவற்றின் மீது படிந்திருப்பதன் காரணமாக இவை உருவாக்கும் சமூகப் பயன் என்னும் நோக்கம் மக்களால் எதிர்ப்பற்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பழமொழிகளை ‘முதுசொல்’ எனவும் விடுகதைகளைப் ‘பிசி’ எனவும் தொல்காப்பியர் வகைப்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது இவற்றின் பழைமை நமக்குப் புலனாகிறது.
கிராமப்புற நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், மக்களது பண்பாடுகள், அவர்களது கைத்தொழில்கள், சடங்குகள், அவர்களிடையே வழிவழியாக வழக்கத்திலிருந்து வரும் மருத்துவ முறைகள் போன்ற அனைத்தும் நாட்டுப்புறப் பண்பாடு சார்ந்தவை. இவ்வெல்லாக் கூறுகளையும் பற்றிய விரிவான விளக்கங்களை அடுத்தடுத்து வரும் பாடங்களில் நீங்கள் காணலாம்.

நாட்டுப்புறவியலின் பரப்பு
தொடக்க காலகட்டத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் பழைய பண்பாட்டு மரபுகள் மீது அதிக கவனம் செலுத்தின. பின்னர்ப் பண்பாட்டு மானிடவியலாளர்களின் இடையீட்டின் காரணமாகப் பழமரபுகள் மீது கொண்ட கவனம் வெகுவாகக் குறைந்து விட்டது. தொடக்க காலத்தில் நாட்டுப்புறவியலின் வரையறையை எழுத முற்பட்டோர் அனைவருமே பண்பாட்டு மானிடவியலர்களே. இவர்கள் நாட்டுப்புறவியலை வாய்மொழி மரபாக வரையறை செய்வதில் காட்டிய ஆர்வமே நாட்டுப்புறவியலைப் பண்பாட்டு மானிடவியலின் எல்லைக்குள் நுழைய விடாமல் விலக்கி வைத்திருந்தது எனக் கருத இடமுள்ளது. மரியா லீச் தொகுத்த நாட்டுப்புறவியலின் 21 வரையறைகளுள் பெரும்பாலானவை நாட்டுப்புறவியலை வாய்மொழி மரபு சார்ந்தது என்றும் பழமரபு சார்ந்தது என்றும் வலியுறுத்தின. வில்லியம் ஜான் தாம்ஸ் ‘Folklore’ எனும் பதத்தை உருவாக்கிய போது அவருக்கு ‘Folklore’ என்பது வாய்மொழி மரபு என்ற கருத்தாக்கம் இருந்ததில்லை. அவர் பழமரபுகள் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் படிப்பாகவே இதைக் கருதினார்.
‘நாட்டுப்புறவியல்’ என்பதன் விரிந்த தளம் அல்லது பரப்பு எவ்வாறு ‘வாய்மொழிமரபு’ என்பதாகச் சுருக்கப்பட்டது எனும் கேள்வி முக்கியமானதாகும். ஒரு புதிய கல்விப்புலம் உருவாகின்றபோது அது பழைய புலங்களோடு கொள்கின்ற முரண்பாடுகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். வில்லியம் ஜான் தாம்ஸ் ‘Folklore’ என்பதன் மூலம் எவற்றையெல்லாம் ஆய்வு செய்ய இயலும் என்று கருதினாரோ அவை எல்லாம் பண்பாட்டு மானிடவியலின் பரப்பில் அடங்குவனவே. நாட்டுப்புறவியலின் விரிந்த பரப்பு மானிடவியலை மலைக்கச் செய்தது. இதனாலேயே நாட்டுப்புறவியல் என்பது வாய்மொழி மரபை மட்டுமே அர்த்தப்படுத்துவதாகக் கொள்ளப்பட்டது. நாட்டுப்புறவியல் அதன் வளர்ச்சிப் போக்கில் நீண்டகாலம் வரை வாய்மொழிமரபு என்னும் வட்டத்துக்குள்ளேயே அடக்கி வைக்கப்பட்டிருந்தது. சமீப காலத்தில் கூட நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள், புராணங்கள் போன்றவை மட்டும் நாட்டுப்புறவியலுக்குள் அடக்கப்பட்டிருந்தன. இந்தக் காலகட்டத்தில் நாட்டுப்புறவியலில் உருவான கோட்பாடுகள் அனைத்துமே வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டன.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாட்டுப்புறவியலின் தளம் மிக விரிந்ததாகவும் பல மாற்றங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்தது. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சமூகத்தில் மரபு வழியாகக் கருதப்படும் அனைத்தும் நாட்டுப்புற வழக்காறுகள் எனக் கருதப்பட்டன.
நாட்டுப்புறவியல் என்பதை வரையறுப்பதில் ஏற்பட்ட கருத்து மாறுபாடுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டுப்புற மக்கள் (Folk) என்பது எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்பதைப் பொறுத்ததாக அமைந்தது. தொடக்கத்தில் மனிதப் பண்பாட்டுப் பரிணாம நிலைகளில் முதலாவதான விலங்காண்டி நிலையோடு தொடர்புடையதாக நாட்டுப்புற மக்கள் என்பது வரையறுக்கப்பட்டது. பின்னர் நாட்டுப்புற மக்கள் என்பவர் கிராமப்புறத்தினர், குடியானவர்கள் என்ற கருத்து உருவாகி இன்றுவரை நிலவி வருகின்றது. இதன் விளைவாகவே பழங்குடியினர் கலைகள் (Tribal Arts), நாட்டுப் புறத்தினர் கலைகள் (Folk Arts) என்ற பிரிவுகளாகப் பாகுபடுத்தும் போக்கு தோன்றியது. இந்த வரையறை நாட்டுப்புற மக்கள், நாட்டுப்புற வழக்காறு என்பனவற்றின் பரந்த எல்லையினைக் குறுக்கி விட்டது. எனவே, கிராமப்புறங்களில் காணப்படுபவையே நாட்டுப்புற வழக்காறு என்ற பொதுவான கருத்து எழுந்தது.
இதன் அடுத்த கட்டமாக கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற எதிர்நிலையிலான கருத்தும், நகர்ப்புறம் கிராமப்புற வழக்காறுகளை முழுமையாக அழித்து விடும் என்னும் கருத்தும் உருவானது. இதுவும் வழக்காறுகள் கிராமப்புறத்திற்கானவை என்ற எண்ணத்தினாலேயே எழுந்தது. தற்போது மனிதன் ஒரு குழுவுக்குள்ளேயே இயங்குகின்றான். குழுவே பொதுவான ஒரு அடிப்படைப் பண்பு என்னும் நிலையில் ‘தனி மனிதர்கள் தமது குழுவுக்குள் பொதுவானதாகக் கொண்டிருக்கும் பண்புக் கூறுகளே வழக்காறுகள்’ எனப்படுகின்றன. இதில் குழு என்பது வெவ்வேறானது. பழங்குடியினரிடமும், கிராமப்புறத்தினரிடமும், நகர்ப் புறத்தினரிடமும் வழக்காறுகள் இருக்கின்றன. இதனால்தான் இன்று நகர்சார் வழக்காறுகள் நாட்டுப்புறவியல் ஆய்வில் இடம் பெறுகின்றன. கோசங்கள் (Slogans), வரவேற்பு / உபசரிப்பு உரைகள் (Invitations), ஓலங்கள், முணுமுணுப்புகள், ஒப்பாரிகள் (Mournings) ஆகியன கூட நகர்சார் வழக்காறுகள் ஆகின்றன. நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் கிராமப்புற வழக்காறுகள் போலவே நகர்சார் வழக்காறுகளும் முக்கியத்துவம் பெறுபவை என நிரூபணமாகின்றன. (Alan Dundes & Carl R. Pagter; 1975)

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2