புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_m10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10 
92 Posts - 74%
heezulia
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_m10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_m10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_m10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10 
3 Posts - 2%
prajai
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_m10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10 
3 Posts - 2%
gayathrichokkalingam
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_m10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_m10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_m10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_m10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10 
1 Post - 1%
mruthun
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_m10மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 1:28 pm

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கோவில் அமைப்பு:

இவ்வாலயத்திற்கு கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம், அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன. மேற்கு கோபுரம் மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருப்பதால் இந்த வாயில் பிரதானமாக உள்ளது. கிழக்கிலுள்ள இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான திறந்த வெளியும் வலது புறத்தில் தியாகராஜ மண்டபமும் இடது பறத்தில் கோவில் தீர்த்தமும் உள்ளது. நேரே சென்று 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கிழக்கு வெளிப் பிரகாரம் அடையலாம். அதில் வலது புறம் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகை, முருகன் சந்நிதிகளுன் காணப்படுகின்றன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இவற்றையடுத்து உள்ள சிறிய வாயில் வழியாக இறைவன் மருந்தீஸ்வரர் கருவறையை அடையலாம். மருந்தீஸ்வரர் கருவறைக்குள் செல்வதற்கு தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தியாகராஜர் மண்டபத்தின் வழியாக உள்ள தெற்கு வாயில் வழியாகவும் வர வசதி உள்ளது. கருவறையில் மூலவர் மருந்தீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் மேற்கு நோக்கி காட்சி கொடுக்கிறார்.

பால்வண்ண நாதர், மருந்தீஸ்வர் ஆகிய பெயர்களால் இத்தலத்து ஈசன் அழைக்கப் பெறுவதற்குக் காரணங்கள் உள்ளன. ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், "நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய்" என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, "வான்மியூ ரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்" என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றார். அதுபோலவே, இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அதைப் போக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளினார். அதன் காரணமாகவே மருந்தீஸ்வரர், ஔஷதநாதர் (ஔஷதம்- மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்.

மேற்கில் உள்ள சிறிய வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் கருவறை உட்பிரகாரம் மேற்குச் சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமாரசாமி சந்நிதிகளும், வலதுபுறம் விநாயகர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவையும் உள்ளன. வடக்குச் சுற்றில் உற்சவ மூர்த்திகள் மண்டபம், அடுத்து நடராஜர் சந்நிதியும் அதையடுத்து 108 சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம். வடக்குச் சுற்றின் முடிவில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் வரிசையாக உள்ள கேதாரீஸ்வரர், இராமநாதேஸ்வரர், சுந்தரேஸ்வரர், அருணாசலேஸ்வரர் மற்றும் ஜம்புகேஸ்வரர் சந்நிதிகளைக் காணலாம். தெற்குச் சுற்றில் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகள் உள்ளன.

கருவறை சுவற்றின் வெளிப்புறம் வடக்கில் பிரம்மா, துர்க்கை, கிழக்கில் மஹாவிஷ்ணு, தெற்கில் தட்சினாமூர்த்தி, கணபதி ஆகியோர் கோஷ்ட மூர்த்தங்களாக அழகுடன் காட்சி தருகின்றனர்.

தல வரலாறு:

கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.

ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம். வான்மீகி ருனிவரும் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன. அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார். இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இவ்வாலயம் காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Tiruvanmiyur1
மேற்கிலுள்ள 5 நிலை கோபுரம்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Tiruvanmiyur4
மேற்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலீபீடம், நந்தி
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Tiruvanmiyur6
தல விருட்சம் வன்னி மரம்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Tiruvanmiyur7
வடக்கு வெளிப் பிரகாரம்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Tiruvanmiyur8
கிழக்கிலுள்ள 5 நிலை கோபுரம்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Tiruvanmiyur9
கிழக்கு வெளிப் பிரகாரம்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Tiruvanmiyur13
கிழக்கு வெளிப் பிரகாரம் - மற்றொரு தோற்றம்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Tiruvanmiyur11
தெற்கு வெளிப் பிரகாரம் - தியாகராஜ மண்டபம்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Tiruvanmiyur12
தெற்கு வெளிப் பிரகாரம்
மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Tiruvanmiyur10
திரிபுரசுந்தரி அம்மன் சந்நிதி நழைவு வாயில்
http://www.shivatemples.com



மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 14, 2010 2:04 pm

அருமையான தகவல் சிவா

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Sep 14, 2010 2:19 pm

மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் 677196 மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் 677196 மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் 677196



மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Mமருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Oமருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Hமருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் Aமருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக