புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_lcapபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_voting_barபாரதியார் சிறுகதைகள் - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் சிறுகதைகள்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 11:58 am

First topic message reminder :

குதிரைக் கொம்பு

சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரிவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி குதிரைக்கு ஏன் கொம்பில்லை? என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சன்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுனி சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.


கேளீர், ரிவண மஹாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான் என்றார்.


இதைக்கேட்டவுடன் ரிவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும் என்றான்.


வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்-


இலங்கையில் ராவணன் தர்மராஜயம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஒரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடைனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள் தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்கங்களை நடத்தி வந்தார்கள்.ஆட்டுக் கணக்கை மட்டும் தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி இருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜிவர்களும் புண்யத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாட்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.


அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷமணனையும் ராஜயத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷமணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக்குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷமணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டுவரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 5:02 pm

நெடுநேரம் இப்படி என்னைப் புரட்டித் தள்ளிய பிறகு ஒரு சுவர் மேலே கொண்டு மோதிற்று. அந்தச் சுவரில் ஓம் சக்தி என்று ஒளி எழுத்துக்களால் பலவிடங்களில் எழுதப்பட்டிருந்தது. அவற்றுள் மிகவும் ஒளி பொருந்திய எழுத்தின் கீழே ஒரு சிறு பொந்திருந்தது. அந்தப் பொந்துக்குள்ளே போய் விழுந்தேன். ஆரம்பத்தில் இவ்வளவு சிறிய பொந்துக்குள் நாம் எப்படி நுழைய முடியுமென்று நினைத்தேன். பிறகு சொப்பனந்தானே? எவ்விதமாகவோ அந்தப் பொந்துக்குள் என் உடம்பு முழுவதும் நுழைந்திருக்க கண்டேன். அதற்குள்ளே போனவுடன் புகைச்சலுமில்லை. வெடியும் நின்றுவிட்டது. மூச்சுத் திணறவுமில்லை. ஆறுதலுண்டாயிற்று. பிழைத்தோமப்பா என்று நினைத்துக் கொண்டேன். இவ்வளவு தான் கனவு. இந்தக் கனவின் பொருளென்ன? இது என்ன விஷயத்தைக் குறிக்கிறது? என்று கிருஷ்ணய்யங்கார் கேட்டார்.

கனவுக்குப் பொருள் கண்டுபிடித்துச் சொல்லும் சாஸ்திரம் எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.

கிருஷ்ணய்யங்காருக்குத் திருப்தி ஏற்படவில்லை. நான் கனவு சாஸ்திரத்திலேயே ஒரு வேளை நம்பிக்கையில்லாமல் இருக்கலாமென்று நினைத்து அவர் கொஞ்சம் முகத்தைச் சிணுங்கினார். பிறகு சொல்லுகிறார்-

அப்படி நினையாதேயுமயா, கனவுக்குப் பொருளுண்டு. பல முறை கனவிலே கண்டது நனவிலே நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்றார்.

காவைச் சுற்றின பாம்பு கடித்தாலொழியத் தீராது என்று வசனம் சொல்லுகிறது. ஆதலால், நான் இவருக்கு ஏதேனும் விடை சொல்லித்தான் தீர வேண்டுமென்று கண்டு பிடித்துக் கொண்டேன். எனவே பின்வறுமாறு சொன்னேன்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 5:03 pm

அந்த வெடிப்புத்தான் உலகநிலை. அந்த சக்தி மந்திரமே தாரகம். அந்தப் பொந்து விடுதலை. அதற்குள் நுழைவது கஷ்டம். தெய்வ வெடியினாலே தள்ளினாலொழிய மனிதன் ஜீவன் முக்தி நிலையில் நுழைய முடியாது. உள்ளே நுழைந்து விட்டால் பிறகு அது விஸ்தாரமான அரண்மனையாகக் காணப்படும். அதற்குள்ளே நுழைந்தவர்களுக்கு அதன் பிறகு எவ்விதமான அபாயமுமில்லை. அதற்குள்ளே போனவர்கள் உண்மையாகவே பிழைத்தவர்கள் என்று சொன்னேன். கிருஷ்ணய்யங்கார் இதைக் கேட்டு மிகவும் சந்தோஷத்துடன் விடைப் பெற்றுச் சென்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 5:09 pm

பிங்கள வருஷம்




வேதபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தூரத்தில், சித்தாந்தசாமி கோயில் என்றொரு கோயில் இருக்கிறது. அதற்கருகே ஒரு மடம் . அந்த மடத்தில் பல வருஷங்களுக்கு முன்பு சிந்தாந்தாசாமி என்ற பரதேசி ஒருவர் இருந்தார். அவருடைய சமாதியிலே தான் அந்தக் கோயில் கட்டியிருக்கிறது. கோயில் மூலஸ்தானத்துக்கெதிரேயுள்ள மண்டபத்தில், நாளது சித்திரை மாதம் பதினோராந்தேதி திங்கட்கிழமை காலை ஒன்பது மணி நேரத்துக்கு முன்னாகவே நானும் என்னுடன் நாராயணசாமி என்றொரு பிராமணப் பிள்ளையும் வந்து உட்கார்ந்தோம். பகல் முழுவதும் வெளியே தனியிடத்தில் போயிருந்து உல்லாசமாகப் பொழுது கழிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வந்தோம். எப்போதும் வழக்கம் எப்படியென்றால், மடுவில் ஸ்நானம் செய்து விட்டு மாந்தோப்புகளில் பொழுது போக்குவோம்;.

புயற்காற்றடித்த பிறகு மாந்தோப்புகளில் உட்கார நிழல் கிடையாது. ஆதலால் மேற்படி கோயில் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தோம். கோயிலைச் சூழ நான்கு புறத்திலும் கண்ணுக்கெட்டின வரை தென்னை மரங்கள் விழுந்து கிடந்தன, பல வளைந்து நின்றன. சில மரங்கள் தலை தூக்கி நேரே நின்றன. புயற்காற்று சென்ற வருஷம் கார்த்திகை மாதத்தில் அடித்தது. ஐந்தாறு மாதங்களாயும், இன்னும் ஒடிந்து கிடக்கும் மரங்களை யெடுத்து யாதேனும் பயன்படுத்த வழி செய்யாமல் ஜனங்கள் அவற்றை அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்து விட்டு என்னோடிருந்த நாராயணசாமி சொல்லுகிறான்-

கேட்டீரா, காளிதாஸரே, இந்த ஹிந்து ஜனங்களைப் போலே சோம்பேறிகள் மூன்று லோகத்திலுமில்லை. இந்த மரங்களை வெட்டியெடுத்துக் கொண்டு போய் எப்படியேனும் உபயோகப்படுத்தக் கூடாதா? விழுந்தால் விழுந்தது. கிடந்தால் கிடந்தது. ஏனென்று கேட்பவர் இந்தியாவில் இல்லை. பாமர தேசமய்யா பாமர தேசம் * என்றான். நான் அங்கே தனிமையையும் மவுனத்தையும் வேண்டி வந்தவன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 5:09 pm

ஆனபடியினால் அவனை நோக்கி, நாராயணா ஹிந்துக்கள் எப்படியேனும் போகட்டும். தனியிடம்.. இங்கு மனுஷ்ய வாசனை கிடையாது. எவ்விதமான தொந்தரவும் இல்லை. மடத்துப் பரதேசிகள் கூடப் பிச்சைக்குக் கிளம்பியிருக்கிறார்கள். பகல் பன்னிரண்டு மணிக்குத் தான் திரும்பி வருவார்கள். சிவசிவா என்று படுத்துத் தூங்கு என்றேன். அவனும் அப்படியே சரியென்று சொல்லி மேல் உத்திரியத்தை விரித்துப் படுத்தான். உடனே தூங்கிப்போய் விட்டான்.

என் கையில் குருபரம்பரா ப்ரபாவம் என்ற வைஷ்ணவ நூலொன்றை கொண்டு வந் திருந்தேன். சட்டைத்துணிகளையெல்லாம் கழற்றித் தலைக்குயரமாக வைத்துக் கொண்டு நானும் படுக்கை போட்டேன். அந்தப் புஸ்தகத்தில் பிரவேசம் என்ற முகவுரையில் பாதி வாசிக்கும் போதே எனக்கும் நல்ல தூக்கம் வந்தது. ஜில்ஜில்லென்று காற்று சுற்றிச் சுற்றியடித்தது. கண் சொக்கிச் சொக்கித் தூங்கிற்று. விழித்து விழித்துப் பின்பு கடைசியாக எழுந்தபோது பகல் பதினோரு மணியாய் விட்டது. எழுந்தவுடனே கோயிற் கிணற்றில் ஜலமிறைத்து ஸ்நானம் பண்ணினோம். கிணற்று ஜலம் மிகவும் ருசியுள்ளது. நன்றாகத் தெளித்தது.

ஸ்நானத்தினுடைய இன்பம் வர்ணிக்க முடியாது. பிறகு வேதப்புரத்திலிருந்து ஒருவன் ஆகாரம் கொண்டு வந்தான். சாப்பிட்டுத் தாம்புலம் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது கோயிலுக்கெதிரேயுள்ள அல்லிக் குளத்தில் நாலைந்து பேர் வந்துக் குளித்துக் கொண்டிருந்தார்கள். நேர்த்தியான கிணற்று ஜலமிருக்கும்போது, அதை இறைத்துக் குளிக்காமல், அழுக்குக் குளத்திலே குளிக்கின்ற மூடர்களைப் பார்த்தீரா? என்று நாராயணசாமி முணுமுணுத்தான். அந்த நால்வருடைய பெயரெல்லாம் நான் விசாரிக்கவில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 5:09 pm

அவர்கள் அப்போது பிங்கள வருஷத்துப் பலாபலன்களைப் பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய சம்பாஷணையை, இங்கு எழுத வேண்டுமாதலால் அவர்களுக்கு நெட்டையன், கட்டையன், சொரியன், கரியன் என்ற கற்பனைப் பெயர்களை கொடுக்கிறேன்.

சொரியன் சொல்லுகிறான் புது வருஷத்துப் பஞ்சாங்கம் கேட்டீர்களா? இந்த வருஷமெப்படி? ஜனங்களுக்கு நல்லதா, கெட்டதா?

கரியன் - நள வருஷத்திவே நாய் பட்ட கஷ்டம். பிங்கள வருஷத்தில் பின்னுங் கஷ்டம்.. ஜனங்களுக்கு சுகமேது?

கட்டையன் - நேற்று பூமியிலே ஒரு நக்ஷத்திரம் வந்து மோதி பூமி தூள் தூளாகச் சிதறிப் போகுமென்று ஒரு மாசகாலமாக எங்கே பார்த்தாலும் ஒரேப் பேச்சாய்க் கிடந்தது. ஒன்றும் நடக்க வில்லை, பொய் என்கிறேன்.

நெட்டையன் - அட போடா* தூள் தூளாகப் போகுமென்று நம்ம தமிழ் சோசியன் சொல்லவில்லை. சீமைப் புளுகு*

கட்டையன் - சோசிய சாஸ்திரமே பொய்யென்கிறேன்.

அவர்கள் இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையில் நாராயணசாமி ஒரு புறம் கிளம்பிவிட்டான். அவன் சொல்லுகிறான் -

ஏன் காளிதாஸரே, அமெரிக்காவில் பெரிய பெரிய ஸயன்ஸ்கார சாஸ்திரிகள் கண்டுபிடித்துச் சொன்னது கூடப் பொய்யாகிவிட்டதே* இது பெரிய ஆச்சர்யம் * பூமி தூளாகாவிட்டாலும் ஒரு பூகம்பமாவது நடக்குமென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நேற்று ராத்திரி நம்ம தெருவில் அநேகர் தூங்கவேயில்லை. குழந்தை குட்டிகளையெவ்வாம் விழிக்க வைத்துக் கொண்டு கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஸயன்ஸ் பண்டிதர்கள் கூடச் சில சமயங்களில் பொய் சொல்லத்தான் செய்கிறார்கள் என்றான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 5:10 pm

நான் குளத்தில் குளித்தவர்களுடைய சம்பாஷணையில் கவனம் செலுத்தினேன்.

நெட்டயன் சொல்லுகிறான் - வேதபுரத்திலே வெங்காயக் கடைக்குப் பக்கத்து வீட்டிலே பெரியண்ண வாத்தியார் இருக்கிறாரே, தெரியுமா? அவர் சோசியம் தப்பவே செய்யாது. அவர் எங்கள் தாத்தா செத்துப்போன நாள், மணி எல்லாம் துல்லியமாகச் சொன்னார். பூமி வெடிக்காதென்றும் அது சீமைப் புளுகென்றும், அதை நம்பக் கூடாதென்றும் அவர் என்னிடம் பத்து நாளுக்கு முந்தியே சொன்னார். பெரியண்ண வாத்தியார் நாளது பிங்கள வருஷத்துக்குச் சொல்லிய பலன்களை யெல்லாம் அப்படியே சொல்லுகிறேன். கவனமாகக் கேளுங்கள்.

பிங்கள வருஷத்தில் நல்ல மழை பெய்யும். நாடு செழிக்கும். நாட்டு தானியம் வெளியே போகாது. ஏழைகளுக்குச் சோறு கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும். பசு முதலிய நல்ல ஜந்துக்கள் விருத்தியாகும். துஷ்ட ஜந்துக்கள் எல்லாம் செத்துப் போகும். தேள், பாம்பு, நட்டுவாய்க்காலி முதலியவற்றின் பீடை குறையும், பிணி குறையும். துர்மரணமும் அகால மரணமும் குறையும். வெளிதேசங்களில் சண்டை நடக்கும்.

நம்முடைய தேசத்திலே சண்டை நடக்காமலே பலமாறுதல் ஏற்படும். ஜாதி பேதம் குறையும். ஆணுக்கும் பெண்ணுக்கும் படிப்பு விருத்தியாகும். ஜனங்களுக்குள்ளே தைரியமும், பலமும், வீரியமும், தெய்வ பக்தியும் அதிகப்படும். நம்முடைய தேசம் மேன்னையடையும் என்று பெரியண்ண வாத்தியார் சொன்னதாக நெட்டையன் சொன்னான்.

நாராயணசாமி கவனி என்றேன்.

பாமர ஜனங்களுடைய வார்த்தை என்று நாராயணசாமி சொன்னான்.

தெய்வ வாக்கு என்று நான் சொன்னேன்.

பிறகு சிறிது நேரம் அந்தக் கோயிலில் சுகமாகப் பாட்டிலும் பேச்சிலும் பொழுது கழித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டோம்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக