புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sanji
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் சிறுகதைகள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 11:58 am

First topic message reminder :

குதிரைக் கொம்பு

சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரிவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி குதிரைக்கு ஏன் கொம்பில்லை? என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சன்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுனி சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.


கேளீர், ரிவண மஹாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான் என்றார்.


இதைக்கேட்டவுடன் ரிவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும் என்றான்.


வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்-


இலங்கையில் ராவணன் தர்மராஜயம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஒரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடைனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள் தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்கங்களை நடத்தி வந்தார்கள்.ஆட்டுக் கணக்கை மட்டும் தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி இருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜிவர்களும் புண்யத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாட்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.


அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷமணனையும் ராஜயத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷமணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக்குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷமணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டுவரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:47 pm

குள்ளச் சாமி அப்போது என்னை நோக்கி, நாமும் கீழே இறங்கிப் போகலாம் என்று சொன்னார். சரியென்று நாங்கள் வேணு முதலியை ஏற வேண்டாமென்று தடுத்து விட்டுக் கீழே இறங்கி வந்தோம். இரண்டாங் கட்டு வெளி முற்றத்திலேயே மூன்று நாற்காலிகள் கொண்டு போட்டு உட்கார்ந்து கொண்டோம்.

அப்போது லேணு முதலி என்னை நோக்கி அங்கே தனியாக ஹனுமாரைப் போலே போய்த் தொத்திக் கொண்டு என்ன செய்தீர்? என்று கேட்டான்.

சும்மா தான் இருந்தேன் என்றேன்,

வந்து விட்டதையா வேணு முதலிக்குப் பெரிய கோபம்.. பெரிய கூச்சல் தொடங்கி விட்டான்.

சும்மா, சும்மா, சும்மா, சும்மா இருந்து சும்மா இருந்து தான் ஹிந்து தேசம் பாழாய்க் குட்டிச் சுவராய்ப் போய் விட்டதே? இன்னம் என்ன சும்மா? எவனைப் பார்த்தாலும் இந்த நாட்டில் சும்மாதான் இருக்கிறான். லக்ஷலக்ஷலக்ஷமாகப் பரதேசி, பண்டாரம், ஸந்நியாசி, சாமியார் என்று கூட்டம் கூட்டமாகச் சோம்பேறிப் பயல்கள். கஞ்சா அடிக்கிறதும், பிச்சை வாங்கித் தின்கிறதும், சும்மா உலவுகிறதும் தான் அந்தப் பயல்களுக்கு வேலை. இரண்டு வேளை ஆகாரம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தொழில் செய்யும் வழக்கம் இந்த தேசத்திலே கிடையாது. ஜமீன்தார், ஜாகீர்தார், மடாதிபதிகள், ராஜாக்கள் எல்லோருக்கும் சும்மா இருப்பது தான் வேலை. சோம்பேறிப் பயல்களுடைய தேசம் என்று பலவிதமாக வேணு முதலி ஜமாய்கிற சமயத்தில் குள்ளச் சாமி மேற்கு முகமாகச் சூரியனை நோக்கி திரும்பிக் கொண்டு, சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என்றெம்மால் அறிதற்கரிதோ பராபரமே* என்ற தாயுமானவர் கண்ணியைப் பாடினார். வேணு முதலி அவரை நோக்கி சாமியாரே, நீர் ஏதோ ராஜயோகி என்று காளிதாஸர் சொல்லக் கேள்விப் பட்டேன். உம்முடன் நான் பேசவில்லை. காளிதாஸரிடம் நான் சொல்லுகிறேன். நீர் சந்நியாசி யென்று சொல்லி ஜன்மத்தையே மரத்தின் ஜன்மம் போலே யாதொரு பயனுமில்லாமல் வீணாகச் செலவிடும் கூட்டத்தைச் சேர்ந்தவர். மரமாவது பிறருக்கு பழங்கள் கொடுக்கும், இலை கொடுக்கும், விறகு கொடுக்கும். உங்களை மரத்துக் கொப்பாகச் சொல்லியது பிழை. உங்களாலே பிறருக்கு நஷ்டம். மரத்தால் பிறருக்கு எத்தனையோ லாபம் என்றான். இங்ஙனம் வேணு முதலி சொல்லிக் கொண்டிருக்கும் போதே குள்ளச் சாமியார்,

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:48 pm

சும்மா இருக்கச் சுகம் சுகமென்று கருதியெல்லாம்
அம்மா நிரந்தரம் சொல்லவுங் கேட்டு அறிவின்றியே
பெம்மான் மவுனி மொழியையுங் தப்பிஎன் பேதமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோஎன் விதிவசமே.

என்ற தாயுமானவருடைய பாட்டொன்றைச் சொன்னார்.

வேணு முதலிக்கு கீழே விழுந்த நோவு பொறுக்க முடியவில்லை. அந்தக் கோபம் மனதில் பொங்குகிறது. அத்துடன் சாமியார் சிரித்துச் சிரித்துப் பாட்டுச் சொல்வதைக் கேட்டு அதிகக் கோபம் பொங்கி விட்டது. வேணு முதலி சொல்லுகிறான்,

ஓய் சாமியாரே, நீர் பழய காலத்து மனுஷ்யன். உம்முடன் நான் தர்கம் செய்ய விரும்பவில்லை. என்னுடைய சாமத்தியம் உமக்குத் தெரியாது. நான் பன்னிரெண்டு பாஷைகளிலே தேர்ச்சியுடையவன். உமக்கு தமிழ் மாத்திரம் தெரியும். நான் இந்த யுத்தம் முடிந்தவுடன் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் போய் அங்கெல்லாம் இந்து மதத்தை ஸ்தாபனம் செய்யப் போகிறேன். நீ தெருவிலே பிச்சை வாங்கித் தின்று திண்ணை தூங்குகிற பேர்விழி. உமக்கும் எனக்கும் பேச்சில்லை. தேசத்திற்காகப் பாடுபடுவதாக ஹம்பக் பண்ணிக் கொண்டிருக்கிற காளி தாஸர்- இந்த விதமான சோம்பேறிச் சாமியார்களுடன் கூடிப் பொழுது கழிப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை விளைவிக்கிறது. உங்களிடமிருந்து தான் அவர் இந்த சும்மா இருக்கும் தொழில் கற்றுக் கொண்டார் போலும்* என்று வேணு முதலி இலக்கணப் பிரயோகங்களுடன் பேசத் தொடங்கினான்.

மறுபடியும் சாமியார்,

சும்மா இருக்கச் சுகம் உதய மாகுமே
இம்மாயா யோகம் இனி ஏனடா- தம்மறிவின்
சுட்டாலே யாகுமோ சொல்ல வேண்டாம் கர்ம
நிஷ்டா சிறு பிள்ளாய் நீ


என்ற தாயுமானவருடைய வெண்பாவைப் பாடினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:48 pm

அப்போது வேணு முதலி என்னை நோக்கி ஏனையா* காளிதாஸரே, இந்தச் சாமியார் உனக்கு எத்தனை நாட் பழக்கம்? என்று கேட்டான்.

நான் ஜவாப் சொல்லாமல் சும்மா இருந்து விட்டேன். அபபோது குள்ளச் சாமியார் சொல்லத் தொடங்கினார்.

அத்துடன் இந்தக் கதையே வெகு நீளம். அது சுருக்கிச் சொன்னாலும் இரண்டு பாகங்களுக்குள்ளே தான் சொல்ல முடியும். நாலைந்து பாகம் ஆனாலும் ஆகக் கூடும்.

அவ்வளவு நீண்ட கதையை இத்தனை காயிதப் பஞ்சமான காலத்தில் ஏன் சொல்லப் புறப்பட்டீர் என்றாலோ அதுப் போகப் போக ஆச்சரியமானக் கதை. அற்புதமானக் கதை* இதைப் போலே கதை நான் இதுவரை எழுதினது கிடையாது. நான் வேறு புத்தகங்களிலே படித்ததும் கிடையாது. நீங்கள் கேட்டால் ஆச்சரியப் படுவீர்கள். எழுந்து கூ கூ கூ என்று கூவி ஆடிப்பாடி குதிக்கத் தொடங்குவீர்கள். நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன். காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன். ஆதலால் உலகத்தில் இதற்கு முன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமானக் கதையை உங்களுக்குச் சொல்லப் புறப்பட்டேன். ஆனால் இந்த வியாசம் நீண்டு போய்விட்டதே* அடுத்த பாகத்தில்தானே சொல்ல முடியும். நான் வாக்குத் தவற மாட்டேன்,

இரண்டாம் பாகம் சீக்கிரம் உங்களுக்குச் சொல்லுகிறேன். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:57 pm

சும்மா 2




அப்போது குள்ளச் சாமியார் சொல்லுகிறார், கேள் தம்பி * நான் சும்மா இருக்கும் கக்ஷpயைச் சேர்ந்தவன். நீ சொல்லியபடி சந்நியாஸிகள் சும்மா இருந்ததினால் இந்த தேசம் கெட்டுப் போக வில்லை. அதர்மம் செய்ததினால் நாடு சீர்கெட்டது. சந்நியாஸிகள் மாத்திரம் அதர்மம் செய்ய வில்லை. இல்லறத்தார் அதர்மம் தொடங்கியது துறவறத்தாரையும் சூழ்ந்தது. உண்மையான யோகிகள் இன்னும் இந்தத் தேசத்தில் இருக்கிறார்கள். அவர்களாலே தான் இந்த தேசம் சர்வநாசமடைந்து போகாமல் இன்னும் தப்பிப் பிழைத்திருக்கிறது. இப்போது பூ மண்டலம் குலுங்கிப் பல ராஜ்ஜீயங்களும் சாpந்து கொண்டிருக்கையிலே ஹிந்து தேசம் ஊர்த்துவமுகமாக மேன்மை நிலையை நோக்கிச் செல்லுகிறது. தானும் பிழைத்தது. உலகத்தையும் உஜ்ஜீவிக்கும் படி செய்யலாம் என்ற iதாpயம் ஹிந்து தேசத்தின் மனதில் உண்டாயிருக்கிறது. இதற்கு முன் இப்படி எத்ததையோ பிரளயங்களில் இருந்து தப்பிற்று. சில தினங்களுக்கு முன்பு ஜகதீச சந்திரவஸு கல்கத்தாவில் தம்முடைய நவீன சாஸ்திராலயத்தை பிரதிஷ்டை செய்யும் போது என்ன சொன்னார் - வாசித்துப் பார்த்தாயா? பாபிலோனிலும், நீலநதிக்கரையிலும் இருந்த நாகரிகங்கள. செத்து மறுஜன்மமடைந்து விட்டன. ஹிந்துஸ்தானம் அன்று போலவே இன்றும் உயிரோடிருக்கிறது. ஏனென்றால் எல்லா தர்மங்களிலும் பொpய தர்மமாகிய ஆத்ம பரித்தியாகம் இந்த தேசத்தில் சாகாதபடி இன்னும் சிலரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது என்று ஜகதீச சந்திரவஸு சொன்னார்.

இங்ஙனம் குள்ளச் சாமியார் சொல்லி வருகையில் வேணு முதலி, சாமியாரே* உனக்கு இங்கிலீஷ் தெரியுமா? நீர் பத்திரிக்கை வேறு வாசிக்கிறீரா? ஜகதிச சந்திரவஸு பேசிய விஷயம் உமக்கெப்படி தெரிந்தது? என்று கேட்டான். அப்போது குள்ளச் சாமியார் சொல்லுகிறார், அநாவசியக் கேள்விகள் கேட்காதே. நான் சொல்லுவதைக் கவனி. ஹிந்து தேசத்தினுடைய ஜீவனை யுக யுகாந்திரங்களாக அழியாதபடி பாதுகாத்து வருவோர் அந்த யோகிகளே. கடூரமான கலியில் உலகம் தலைக்கீழாகக் கவிழந்து போகும் சமயத்தில் கூட ஹிந்துஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து மற்றவர்களையிம் காக்ககூடிய ஜீவசகதி இந்த நாட்டிற்கு இருப்பது அந்த யோகிகளின் தபோபலத்தாலன்றி வேறில்லை. ஹா, ஹா, ஹா, ஹா* பலவிதமான லேகியங்களைத் தின்று தலைக்கு நூறு, நூற்றைம்பது பெண்டாட்டிகளை வைத்துக் கொண்டு தடுமாறி, நாள் தவறாமல் ஒருவருக்கொருவர் நாய்களைப் போலே அடித்துக் கொண்டு, இமயமலைக்கு வடபுறத்திலிருந்து அந்நியர் வந்தவுடனே எல்லோரும் போது விடிந்தால் எவன் செத்துப் போவான், ஸபண்டீகரணம், பிராமணார்த்த போஜனங்கள் பண்ணலாம் என்று சுற்றிக் கொண்டு, வேத மந்திரங்களை பொருள் தெரியாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த உங்கள் பிராமணர்களால் இந்த தேசம் சாகாதவரம் பெற்று வாழ்கிறதென்று நினைக்கிறாயா? உங்கள் வைசியருடைய லோபத் தன்னையால் இந்த நாடு அமரத்தன்மை கொண்டதா? சூத்திரருடைய மௌட்டியத்தாலா? பஞ்சமருடைய நிலைமையாலா? எதனால் ஹிந்துஸ்தானத்துக்கு அமரத் தன்னை கிடைத்ததென்று நீ நினைக்கிறாய்?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:57 pm

அடா, வேணு முதலி, கவனி. நீ யுத்தம் முடிந்த பிறகு அமொpக்காவுக்கும், ஐரோப்பாவிற்கும் போய் ஹிந்து தர்மத்தை நிலைநாட்டப் போவதாகச் சொல்லுகிறாய். நீ ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமை தெரியாமல் ஹிந்து மதத்தையெப்படி நிலைநிறுத்தப் போகிறாய்- அதை நினைக்கும் போதே எனக்கு நகைப்புண்டாகிறது.

அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகாயோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ள வரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்* பார்* பார்*

இங்ஙனம் குள்ளச் சாமி சொன்னவுடன் நானும் வேணு முதலியும் அவரை உற்றுப் பார்த்தோம்.

குள்ளச்சாமி நெடிய சாமி ஆய்விட்டார்.

நாலே முக்கால் அடிபோல் தோன்றய குள்ளச்சாமியார் ஏழே முக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார்.

ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப் போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன் போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப் போலவே இருந்தது. குனிந்தால் பிள்ளையார் போலிருந்தது. நிமிர்ந்து பார்க்கும் போது விஷ்ணுவின் முகத்தைப் போலவே தோன்றியது. அப்போது குள்ளச்சாமியார் சொல்லுகிறார்,

அடா, வேணு முதலி, கேள். நான் ஹிந்துஸ்தானத்து யோகிகளுக்கெல்லாம் தலைவன். நான் ரிஷிகளுக்குள்ளே முதலாவது ரிஷி. நான் தேவர்களுக்கெல்லாம் அதிபதி. நானே பிரம்மா, நானே விஷ்ணு, நானே சிவன், நான் ஹிந்துஸ்தானத்தை அழியாமல் காப்பாற்றுவேன். நான் இந்த பூமண்டலத்தில் தர்மத்தை நிலை நிறுத்தவேன்.

நான் கிருதயுகத்தை ஸ்தாபனம் செய்வேன். நானே பரம புருஷன். இதற்கு முன் ஆச்சாரியார்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்? எல்லா உயிரும் ஒன்று. ஆதலால் காக்கை, புழு முதலிய ஜந்துக்களிடம் குரூரமில்லாமல் கருணை பாராட்டுங்கள் என்றனர்.

அடா, வேணு முதலி, கவனி.

சைவாச்சாரியர் வைஷ்ணவத்தை விலக்கினர். வைஷ்ணவாசாரியர் சைவத்தை விலக்கினர்.

நான் ஒன்று செய்வேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:58 pm

காக்கையை கண்டால் இரக்கப்படாதே, கும்பிடு. கை கூப்பி நமஸ்காரம் பண்ணு* பூச்சியைக் கும்பிடு* மண்ணையும் காற்றையும் விழுந்து கும்பிடு* என்று நான் சொல்லுகிறேன்.

நான் வேதத்திலே முன் சொன்ன வாக்கை இப்போது அனுபவத்திலே செய்து காட்டப் போகிறேன். ஹிந்து தர்மத்தைக் கூட்டப் போகிறேன். அடா, வேணு முதலி கேள், மண்ணும் காற்றும், சூரியனும் சந்திரனும், உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்று வேதம் சொல்லிற்று. இவை தான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வமில்லை. நம்முன்னே காண்பது நாராயணன். இதை நம்முள்ளே நாட்டி இதை வணங்கி இதன் தொழுகைக் கனியில் மூழ்கி, அங்கு மானிடன் தன்னை முழுவதும் மறந்து விடுக.

அப்போது தன்னிடத்து நாராயணன் நிற்பான். இந்த வழியை நான் தழுவியபடியால் மனுஷ்யத் தன்னை நீங்கி அமரத் தன்னை பெற்றேன். ஆதலால் நான் தேவனாய் விட்டேன். இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வமில்லை. தேவர்களுக்குள்ளே நான் அதிபதி. என் பெயர் விஷ்ணு. நானே சிவன் மகன் குமாரன். நானே கணபதி. நான் அல்லா, யேஹோவான். நானே பரிசுத்த ஆவி, நானே யேசு கிருஸ்து, நானே கந்தர்வன், நானே அசுரன், நானே புருஷோத்தமன், நானே ஸமஸ்த ஜீவராசிகளும்.

நானே பஞ்ச பூதம் * அஹம் ஸத்*. நான் கிருதயுகத்தை ஆகாஞபிக்கிறேன்* ஆதலால் கிருதயுகம் வருகிறது. எந்த ஜந்துவும், வேறு எந்த ஜந்துவையும் ஹிம்சை பண்ணாமலும் எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துகளையும் தேவரூபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதியுண்டானால் அதுதான் கிருதயுகம்-அதை நான் செய்வேன். அடா வேணு முதலி* நான் உன் முன்னே நிற்கிறேன், என்னை அறி என்று குள்ளச்சாமியார் சொன்னார். நான் அத்தனைக்குள்ளே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டேன்.

சுமார் அரைமணி நேரத்திற்குப் பின்பு எனக்கு மறுபடி பிரக்கினை ஏற்பட்டது. அப்போது பார்க்கிறேன், வேணு முதலி என் பக்கத்தில் மூர்ச்சை போட்டுக் கிடக்கிறான். பிறகு அவனுக்குச் சிகிச்சை செய்து எழுப்பினேன்.

குள்ளச்சாமியார் எங்கேயென்று வேணு முதலி என் பத்தினியிடம் கேட்டான்.

அவள் சொன்னாள், குள்ளச் சாமியார் இப்படித்தான் கீழே இறங்கி வந்தார். கொஞ்சம் பாயாசமும் ஒரு வாழைப் பழமும் கொடுத்தேன். வாங்கித் தின்றார். குழந்தைகளுக்கும் எனக்கும் விபூதி பூசி வாழத்தி விட்டுப் போனார். நீங்கள் மெத்தையிலே என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு, இரட்டை பாஷையென்றால் அர்த்தமென்ன? என்பதைப் பற்றி அந்த வேணு முதலி மடையன், தர்க்கம் பண்ணுகிறான் என்றுச் சொல்லிச் சிரித்து விட்டுப் போனார் என்று சொன்னாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 2:04 pm

உஜ்ஜயினி




கண்ணே, நாம் சக்தி தர்மத்தைக் கைக்கொண்டோம். நமக்கு நீ சக்தி. நீ இறந்தால் நான் உடன் கட்டை ஏறுவேன் என்று விக்கிரமாதித்த ராஜன் தன்னுடைய பிரியதனமாகிய ஸ்ரீமுகியினிடம் சொன்னான். அப்போது அவள் உஜ்ஜயினிபுரத்து மாகாளி அருளாலே உனக்கு ஆயிரம் வயதுண்டு. அப்படி ஆயிரத்தில் ஒன்று குறைய நானும் இருப்பேன் என்றாள்.

எனக்கு வயது தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது தான் போலும்* என்று விக்கிரமாதித்தன் பெருமூச்சு விட்டான். அப்போது ஸ்ரீமுகி சொல்லுகிறாள்,

காந்தா, நீ எனக்கு குமாரன். என் சொற்படி கேள். தர்மம் பெண்னால் ஏற்படுத்தப்பட்டது, விரதம், தவம், பூஜை, ஆகாரம், வீடு, பள்ளிக்கூடம் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுத்தது பெண். தர்மம் பெண்ணால் உண்டானது. பெண் தாய். பெண்ணைத் தன்னில் பாதியென்று கருதாமல், தனக்கு அது பகுதிப்பட்டிருக்கவும் வேண்டும், ஆனால் தான் அதைத் தன் பகுதியாகத் தானாக, நேசிக்கவும் மாட்டேன் என்று ஆண் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறது. அதற்காகப் பெண் பழி வாங்குகிறது. ஆணைப் பழி வாங்கி அந்தத் துயரத்தில் தானும் மடிகிறது.

சிவன் பாதி, சக்தி பாதி போலச் சரி பாதியாக எப்போது ஆண் பெண்ணை ஒப்புக் கொள்ளுகிறதோ, அப்போது ஆணுக்குப் பெரிய வலிமை சித்திக்கிறது. கலியுக முடிவில் இது முற்றிலும் பரிபூரணமாக நிகழும் என்றாள்.

அப்போது நமது மகாகாளிக்கு நாமமென்ன? என்று விக்கிரமாதித்தன் கேட்டான்.

அப்போது மகாகாளிக்கு நித்திய கல்யாணி உஜ்ஜயினி என்று பெயர்.

இதற்கு யாரெல்லாம் சாட்சி? என்று விக்கிரமாதித்தன் கேட்டான்.

இதற்கு தேவர் சாட்சி. பஞ்ச பூதங்கள் சாட்சி. மனுஷ்ய, மிருக, பட்சி, கீடாதி ஜந்து கணங்கள் சாட்சி. இதற்கு அந்த மகா காளியே சாட்சி. என்று ஸ்ரீமுகி சொன்னாள். சரி என்று சொல்லி விக்கிரமாதித்தன் இருந்து விட்டான்.

மறுநாள் காலையில் இருவரும் ஆலையத்திற்குச் சென்றனர். அங்கே தேவியின் முடிமீது நித்திய கல்யாணி உஜ்ஜயினி என்று வயிர எழுத்துக்களால் எழுதியிருந்தது. அதனைக் கண்டு இருவரும் தொழுது மகிழ்ச்சியுற்றனர். மற்றை நாள் விக்கிரமாதித்தன் தனது அரண்மனையில் ஒரு பொற்று}ண் நாட்டி அதில், பெண்ணைப் பேணுவோர் கண்ணைப் பேணுவார். பெண்ணுக்குக் கண் உண்டு. பெண் தாய். வந்தே மாதரம் என்று எழுதி வைத்தான். மேற்படி கதை சாக்த சாத்திரத்திலே கூறப்பட்டது. அதை லோகோபகாரமாக வெளிப்படுத்துகிறேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 2:09 pm

மிளகாய்ப் பழச் சாமியார்




வேதபுரத்திற்கு வடக்கே முத்துப் பேட்டையில் பெரும் பாலும் தெலுங்கு நெசவுத் தொழிலாளரும், தமிழ்க் கைக்கோளாரும் வாசம் செய்கிறார்கள். அந்த ஊரில் நெசவுத் தொழிலே பிரதானம். லுங்கிகள் என்றும் கைலிகள் என்றும் சொல்லப்படும் மகமதியருக்கு அவசியமான கெட்டிச் சாயத்துணிகள் இங்கு முகுதியாக நெய்யப்பட்டு, சிங்கப்பூர், பினாங்கு முதலிய வெளித் தீவாந்திரங்களுக்கு எற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நெசவுத் தொழிலாளர் அத்தனை பேரும் அங்காளியம்மனுடைய அவதாரமென்பதாக ஒரு ஸ்திரியை வணங்குகிறார்கள். அந்த ஸ்திரி சுமார் நாற்பத்தைந்து வயதுடையவள். சரிரத்தில் நல்ல பலமும், வீரதீர பராக்கிரமங்களும் உடையவள். அவளுடைய புருஷன் இறந்து போய் இருபத்தைந்து வருஷங்களாயின.

இவள் காவி வஸ்திரமும் சடை முடியும் தரிக்கிறாள். இவளுடைய முகம் முதிர்ந்த, பெரிய, வலிய. உறுதியான ஆண் முகம் போல இருக்கிறது. அத்தடன் பெண்ணொளி கலந்திருக்கிறது. இவளுடைய கண்கள் பெரிய மான் விழிகளைப் போல இருந்தன.

இவள் ஒரு சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டிக் கொண்டிருக்கிறாள். கோயில் கட்டிடம் பெரும்பாலும் முடிந்துபோய் விட்டது. இன்னும் சிகரம் மாத்திரம் தான் வைக்கவில்லை.

இவள் தன்னுடைய வீட்டில் ஒரு வேல் வைத்துப் பூஜை பண்ணுகிறாள் அதன் பக்கத்தில் இரவும் பகலும் அவியாத வாடா விளக்கு எரிகிறது.

கோயிலும் இவள் வீட்டுக்குச் சமீபத்திலே தான் கட்டியாகிறது. இவளுடைய வீடு வேதபுரத்துக்கும் முத்துப் பேட்டைக்கும் இடையே ரஸ்தாவின் நடு மத்தியில் சுமை தாங்கிகளுக்குச் சமீபத்தில் இருக்கிறது.

திருகார்த்திகையன்று, பிரதி வருஷமும் அடியார்கள் சேர்ந்து இவளுக்கு மிளகாய்ப் பழத்தை அரைத்து உடம்பெல்லாம் தேய்து ஸ்நானம் செய்விக்கிறார்கள். அதனாலேதான் இவளுக்கு மிளகாய்ப் பழச் சாமியார் என்ற நாமம் ஏற்பட்டது.

நான் இந்த மிளகாய்ப் பழச் சாமியாருடைய கோயிலுக்குப் பலமுறை போய் வேலைக் கும்பிட்டிருக்கிறேன். இன்று காலை இந்த ஸ்திரி என்னைப் பார்க்கும் பொருட்டு வந்தாள். வந்து கும்பிட்டாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 2:09 pm

எதன் பொருட்டாக கும்பிடுகிறீர்? என்று கேட்டேன்.

எனக்கு தங்களால் ஓர் உதவியாக வேண்டும் என்றாள்.

என்ன உதவி? என்று கேட்டேன்.

பெண் விடுதலை முயற்சியில் எனக்குத் தங்களால் இயன்ற சகாயம் செய்ய வேண்டும் என்றாள்.

செய்கிறேன் என்று வாக்குக் கொடுத்தேன்.

அப்போது அந்த மிளகாய்ப் பழச் சாமியார் பின்வருமாறு உபந்நியாசம் புரிந்தாள்

ஹ, ஹா, பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் போதுமடா, போதுமடா, போதும்*

உலகத்திலே நியாயக் காலம் திரும்புவதாம்

ருஷியாவிலே கொடுங்கோல் சிதறிப் போய் விட்டதாம்

ஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டுமென்று, கத்துகிறார்களாம்..

உலகம் முழுமைக்கும் நான் சொல்லுகிறேன்

ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 2:10 pm

பறையனுக்குப் பார்ப்பானும், கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.

பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதையெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்லுகிறேன்.

எவனும் தனது சொந்த ஸ்திரியை அலக்ஷ;யம் பண்ணுகிறான். தெருவிலே வண்டி தள்ளி நாலணா கொண்டு வருவது மேல் தொழில் என்றும், அந்த நாலணாவைக் கொண்டு நாலு வயிற்றை நிரப்பி வீடு காப்பது தாழ்ந்த தொழிலென்றும் நினைக்கிறான். பெண்கள் உண்மையாக உழைத்து ஜீவிக்கிறார்கள். ஆண் மக்கள் பிழைப்புக்காகச் செய்யும் தொழில்களில் பெரும்பாலும் பொய், சூது, களவு, ஏமாற்று, வெளிமயக்கு, வீண் சத்தம், படாடோபம், துரோகம், கொலை, யுத்தம்*

இந்த தொழில்கள் உயர்வென்றும், சோற்றுக்குத் துணி தோய்த்துக் கோயில் செய்து கும்பிட்டு வீடு பெருக்கிக் குழந்தைகளைக் காப்பாற்றும் தொழில் தாழ்வென்றும் ஆண் மக்கள் நினைக்கிறார்கள்

வியபசாரிக்குத் தண்டனை இகலோக நரகம்.

ஆண் மக்கள் வியபிசாரம் பண்ணுவதற்குச் சரியான தண்டனையைக் காணோம்

பர ஸ்திரிகளை இச்சிக்கும் புருஷர்களின் தொகைக்கு எல்லையில்லையென்று நான் சற்றே மறைவிடமாகச் செல்லுகிறேன். ஆனால் அவர்கள் பத்தினிகளை, நேரே அவர்கள் நோக்க யோக்கிதையில்லாமல் இருக்கிறார்கள்

பூமண்டலத்தின் துக்கம் ஆரம்பமாகிறது. ஆணும் பெண்ணும் சமானம். பெண் சக்தி. பெண்ணுக்கு ஆன் தலைகுனிய வேண்டும். பெண்ணை ஆண் அடித்து நசுக்கக் கூடாது. இந்த நியாயத்தை உலகத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்.

உங்களுக்குப் பராசக்தி நீண்ட ஆயுளும் இஷ்டகாம்ய சித்திகளும் தருவாள் என்று மிளகாய்ப் பழச் சாமியார் சொன்னாள். சரி என்று சொல்லி நான் அந்த தேவிக்கு வந்தனம் செய்தேன். அவள் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக