புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் சிறுகதைகள்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 11:58 am

First topic message reminder :

குதிரைக் கொம்பு

சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரிவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி குதிரைக்கு ஏன் கொம்பில்லை? என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சன்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுனி சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.


கேளீர், ரிவண மஹாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான் என்றார்.


இதைக்கேட்டவுடன் ரிவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும் என்றான்.


வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்-


இலங்கையில் ராவணன் தர்மராஜயம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஒரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடைனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள் தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்கங்களை நடத்தி வந்தார்கள்.ஆட்டுக் கணக்கை மட்டும் தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி இருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜிவர்களும் புண்யத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாட்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.


அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷமணனையும் ராஜயத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷமணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக்குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷமணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டுவரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:34 pm

வயது இருபதுக்கு மேல் ஆகவுமில்லை. நேற்றுக் காலையில் இந்த பையன் என்னைப் பார்க்கும் பொருட்டாக வந்திருந்தான். முதலாவது, தன்னுடைய தொழில்களை எல்லாம் என் வீட்டில் செய்து காட்டினான். நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

பிறகு இவனுடைய புத்தி எந்த நிலையில் இருக்கிறதென்பதைப் பரிசோதனை செய்யும் பொருட்டாக அவனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்து பார்த்தேன். அவன் கையில் ஒரு குறிப்பு புஸ்தகம் (பாக்கெட் நோட்புக்) வைத்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தால் சின்ன பைபிளோ அல்லது டைரி (தினசரி)-யோ என ஐய்யப்படும் படியாக இருந்தது. கையில் என்ன டைரி புஸ்தகமா? என்று கேட்டேன். அந்தப் பையன் ஹூ என்று பல்லைக் காட்டிக் கொண்டு இல்லைங்க, மந்திரவாதப் புஸ்தகங்கள் என்றான்.

நான் வாசிக்கலாமா? என்று கேட்டேன். வாசிக்கலாம் என்று சொல்லி அந்த புஸ்தகத்தை என் கையில் கொடுத்தான். அது அச்சிட்ட புஸ்தகமன்று. அவன் கையால் எழுதியது. பல ஊர்களிலே சஞ்சாரம் பண்ணினேன். பல சாதுக்களிடம் கேட்ட மந்திரங்களை யெல்லாம் இதில் எழுதி வைத்திருக்கிறேன். நான் அவர்களுக்கு (அந்த சாதுக்களுக்கு) பத்திரம் தயார் பண்ணிக் கொடுப்பேன் என்று கலியுக கடோற்கசன் சொன்னான். பத்திரமா? அதென்ன? என்று கேட்டேன்.

அவன் சொல்லுகிறான், அதைப் பாமர ஜனங்கள் கஞ்சா இலை என்று சொல்லுவார்கள். சாதுக்களுக்கு மனதை ஒருநிலையில் நிறுத்திப் பிரம்மத்திலே கொண்டு சேர்க்க அது உபயோகங்க. மைசூரில் நான் போன மாசம் போயிருந்தேனுங்க. அங்கே பெரிய சாமியாருங்க. அவர் தான் எனக்கு ஆஞ்சநேயர் மந்திரம் கற்றுக் கொடுத்தாருங்க. அவர் ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் கஞ்சா வாங்கி புகை குடிப்பாருங்க. அவர் மனதை உள்ளே கொண்டு நிறுத்தினால் பிறகு வெளியே இழுப்பது கஷ்டங்க என்றான்.

இவன் இப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் எனக்கு அந்தப் புஸ்தகத்தைப் பார்க்கவேண்டும் என்ற அவா அதிகப்பட்டது. புஸ்தகத்தைக் கையிலெடுத்துத் திறந்தபோது அதிலிருந்து பொலபொலவென்று இருபது முப்பது துண்டு காகிதங்கள் உதிர்ந்தன. எனக்கு ஆராயச்சியிலே பிரியம் அதிகமானபடியால் முதலாவது அந்த துண்டு காயிதங்களை பரிசோதனை செய்து பார்த்துவிட்டுப் பிறகு புஸ்த்தகத்துக்குள்ளே நுழைவோம் என்று யோசித்து அந்த காயிதங்களைப் பார்த்தேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:35 pm

அவற்றின் விவரம் பின்வருமாறு

முதலாவது- ஹோம் ரூல் ஸ்டாம்ப் மூன்று இருந்தது.

அதில் ஒவ்வொரு ஸ்டாம்புக்கு நடுவிலும் அனிபெஸன்ட் அம்மாள் தலை போட்டிருக்கிறது. சுற்றி தெய்வத்திற்காகவும், தேசத்திற்காகவும்., ராஜாவிற்காகவும் சிறைப்பட்டவர் என்றெழுதியிருந்தது. அதை சூழ நான்கு புறத்திலும் இங்கிலீஷ்,, தெலுங்கு, உர்து, நாகரி, கன்னட லிபிகளில் ஹோம்ரூல் என்றெழுதியிருந்தது.

இரண்டாவது- ஒரு சின்ன டிக்கட். அதில் இங்கிலீஷ் பாஷையில் மிஸ் தாரா இண்டியன் லேடி ஸாண்டோ என்று ஒரு புறத்திலும் வெளிச்சீட்டு (ஓளட்பாஸ்) என்று மற்றொரு புறத்திலும் போட்டிருந்தது.

மூன்றாவது - ஒரு லேசான காகிதத்தை போன்ற செப்புத் தகடு. அதில் ஏதோ சக்கரம் செதுக்கும் பொருட்டு வைத்துக் கொண்டிருப்பதாக கடோற்கசன் சொன்னான்.

நாலாவது - ராமமூர்த்தி சர்க்கஸ் ஆட்ட ஜாப்தா.

ஐந்தாவது - ஒரு கிறிஸ்தவப் பையனுடைய நேர்த்தியான புகைப்படம். அவன் யாரென்று கேட்டதற்குத் தன்னுடைய சினேகிதனென்றும், இரும்பாலையில் வேலை பார்க்கிறானென்றும், அவனுக்கு கலியுக கும்பகர்ணன் என்று பெயர் வைக்கலாமென்றும் கடோற்கசன் சொன்னான்.

ஆறாவது - மறுபடியும் ஒரு டிக்கட். அதில் இங்கிலீஷில் எடிசன் கினேமாடோக்ராப் கம்பெனி ஒரு ஆளை உள்ளே விடு. என்றெழூதியிருந்தது.

ஏழாவது - ஸிகரெட் பெட்டியிலிருந்தெடுத்த துர்கை படம். அதில் தேவி மகிஷாசுரனைக் கொல்லுகிறாள். பக்கத்தில் விநாயகருடைய தலை மாத்திரம் தெரிகிறது. உடம்பெல்லாம் மறைந்திருக்கிறது. சின்ன சுப்பிரமணியன் ஒன்றிருக்கிறது. அம்மனுக்கு பதினாறு கைகள் போடுவதற்குப் பதிலாக எட்டுக்கை போட்டிருந்தது.

எட்டாவது - இரண்டு சிங்கங்களுடன் ஒரு மனிதன் சண்டை போடுவது போல ஒரு படம்.. பத்திரிக்கையிலிருந்து கத்தரித்தது.

ஒன்பதாவது - யேசுகிறிஸ்து மாட்டுக் கொட்டகையில் பிறந்து வைக்கோல் மேலே போடடுக் கிடப்பதாகக் குழந்தையுருவங் காட்டிய படம்.

பத்தாவது - சாதரண வருஷத்து மார்கழி மாதம் 18 ஆம் தேதி முதல் விரோதி கிருது வருஷத்துச் சித்திரை மாதம் 16 ஆம் தேதி வரையில் ஏகாதசி, ஷஷ்டி, பிரதோஷம், கரிநாள், யமகண்டம், ராகுகாலம், குளிகைகாலம், வாரசூலை இவற்றின் அட்டவணை.

பதினோரவது - இனி மேன்மேலும் அடுக்கிகொண்டு போனால் படிப்பவர்களுக்குப் பொறுமையில்லாது போய்விடும் என்ற அச்சத்தால் இங்கு மேற்படி கீழே யுதிர்ந்த துண்டு காயிதங்களைப் பற்றிய முழு விவரங்களை தெரிவிக்காமல் விடுகிறேன். அதில் அநேகம் கடோற்கசனுடைய சிநேகிதர்களுடைய மேல் விலாசம், ஒரு சிறு காகிதத்தில் குங்குமம் சுற்றியிருந்தது. அது கோயிலில் கொடுத்ததென்றும், அம்மன் பிரஸாத மென்றும் கடோற்கசன் விளக்கினான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:36 pm

இனி அவன் மந்திரவாதப் புஸ்தகத்துள் எழுதியிருந்த விநோதங்களில் சிலவற்றை இங்குக் காட்டுகிறேன்.

கணபதி மந்திரம்

ஓம் கணபதி; ஐயும் கணபதி; கிளியும் கணபதி; ஸவ்வும் கணபதி. வா வா சகல ஜனங்களும் போகங்களும் சகல லோகசித்தியும், உனக்கு வசியமானதுபோல் எனக்கும் வசியமாகவும், சுவாஹா

பஞ்சாட்சரம்

ஹரி ஓம் சிவாய நம

அனுமார் மந்திரம்

ஓம் அனுமந்தா, ஆஞ்சனேயா, நமோ நாராயணாய, சிரஞ்சிவியாகக் காத்து ரட்ஷித்து வா. கிளியும், ஸவ்வும், என் எதிரிகளைவென்று என்னைக் கா, கா, கா, ஸ்வாஹா*

புருஷ வசியத்துக்கு மந்திரம்

நிலத்தில் முளைத்தவளே, நீலப்பூ பூத்தவளே, மனத்து கவலை தீர்த்தவளே, மன்னன் சிறை மீட்டவளே, குடத்து தண்ணீர் பாலாக வேண்டும். கோவிந்தராஜு என்னைகண்டா கும்பிட வேண்டும். நான் ஒரு புலியாக வேணும்.. அவன் ஒரு பசுவாக வேணும்.. புலியை கண்ட பசு நடுங்கினாற்போல் நடுங்கி ஒடுங்கி வணங்கி நிற்க ஸ்வாஹா. இந்த மந்திரத்தை ஆயிரம் உரு ஏற்ற வேண்டும். வேளைச் செடியில் வடக்கே போகிற வேரில் ஞாயிற்றுக் கிழமை சூரியன் கிளம்புகிற சமயத்தில் மஞ்சள் துண்டைக் கட்டி பதினாறு விடை மந்திரத்தை ஜபித்து பிறகு வேர் அறாமல் பிடுங்கி வெள்ளித் தாயத்தில் மஞ்சளை நீக்கி வேரைச் செலுத்திக் கட்டிக் கொள்ள வேண்டும்.

சகல வியாதிகளுக்கும் மந்திரம்

ஓம், ரீங் அங்-இந்தப்படிக்கு விபூதியில் எழுதி ஆயிரத்தெட்டு உரு ஜபித்து சூடன் கட்டியை அதன் மேலே வைத்துக் கொடுக்க வியாதி தீரும். இது கைகண்டது.

சிறங்கு கண்டவுடன் செய்கிற மந்திரம்

மசிமா நசி, நசி மா நசி.

சிறங்கு நைய மந்திரம்

கசி., நசி

பழுத்தபின் உடைக்கும் மந்திரம்

நஞ்சு, பிஞ்சு, நாசமதாகிப் பிஞ்சு நஞ்சு போக ஸ்வாஹா

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:37 pm

இராஜாவை வசியம் பண்ண மந்திரம்

வசீகரா, வசீகரா, ராஜ வசீகரா, அச்சிட்டபங்களா தட்ஷிணா மூர்த்தி, துர்க்கா தேவதாயை நம இதற்கு ஆயிரத்தெட்டு செய்யவும்.

மற்றுமொரு இராஜ வசிய மந்திரம்

அய்யும், கிலியும் ஸவ்வும், ஸவ்வும் கிளியும், ஐயும், நவகோடி சித்தர் சாயம் நசி நசி ஸர்வ மூலிகையும் இன்ன ராஜாவும் வசி, வசி.

இந்த மந்திரங்களை தவிர, மேற்படி கலியுக கடோற்கசனுடைய நோட்புக்கில் இன்னும் இதுபோலவே முப்பது நாற்பது மந்திரங்களும், பலவிதமான சக்கரங்களு[ம் இருந்தன. அந்த மந்திரங்களையும் சக்கரங்களையும் இப்போது புஸ்தகத்தில் விஸ்தாரமாகச் சொல்லப் போனால் நெடுந்தூரம் இந்த வியாசம் அளவுக்கு மிஞ்சி நீண்டுவிடும். எனினும் நமது ஹிந்து தர்மத்தையும் மந்திர மகிமையையும், இனடக்காலத்து மூடராஜாக்களும் அயோக்ய பூஜாரி, பண்டார, மந்திரவாதிகளும் எவ்வளவு கேலிக்கிடமாகச் செய்துவிட்டார்களென்பதை விளக்க, மேற்கூறிய திருஷ்டாந்தங்களே போதுமென்று நினைக்கிறேன். இன்னும் அவனுடைய குறிப்பு புஸ்தகத்தில் போகப் போகப் பெருங்கேலியாக இருந்தது. எனக்கு அவற்றையெல்லாம் பார்க்கும் போது சிரிப்பொருபக்கம், வந்தது. தலையொரு பக்கம் கிறுக்கிற்று.

ஹிந்துக்களுடைய மூல பலமாகிய மந்திர சாஸ்திரத்தை இடைக்காலத்து மூடர் இவ்வளவு சீர் கெடுத்து வைத்திருப்பதையும் அதைத் தற்காலத்து மூடர்களிலே பலர் நம்புவதையும் நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று.

அதை நான் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் குள்ளசாமி என்ற ஞானி வந்தார். அவரிடம் அதைக் கொடுத்தேன். அவர் அந்த புஸ்தகத்தை வெளிமுற்றத்துக்குக் கொண்ட போனார். அங்கிருந்து நெடுநேரமாக வரவில்லை. என்ன செய்கிறார் பார்ப்போமென்று சொல்லி நான் எழுந்து வெளி முற்றத்துக்கு வந்தேன். என்னுடன் கலியுக கடோற்கசனும் வந்தான். அங்கு போய் பார்த்தால், குள்ளச்சாமி அந்த புஸ்தகத்தில் மண் எண்ணெயை விட்டு தீயைக் கொளுத்தி எரியவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்தனர். எனக்கு சிரிப்பு வந்தது. கடோற்கசன் கோவென்றழுதான். குள்ளச்சாமி பெரிய ஞானியென்றும், பரமபுருஷனென்றும் அவர் செய்தது பற்றி வருத்தப்படக் கூடாதென்றும் சொல்லி நான் கடோற்கசனைத் தேறுதல் சொல்லி அனுப்பினேன். போகும் போது அவன் பைக்குள் குள்ளச்சாமியார் ஒரு பொற்காசு போட்டார். நான் ஒரு துண்டுக் காயிதத்தில் ஓம் சக்தி என்ற மந்திரத்தை எழுதி அவன் பைக்குள் போட்டேன்.

பொற்காசைக் கண்டவுடன் கடோற்கசன் கொஞ்சம் சந்தோஷமடைந்து புன்சிரிப்புக் கொண்டான். அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்

எல்லாம் தெய்வம் - தர்மமே மகா மந்திரம். உண்மைக்கு ஜயமுண்டு. எல்லாரையும் வசப்படுத்த வேண்டுமானால் எல்லாரையும் தெய்வமாக நினைத்து மனத்தால் வணங்கவேண்டும் இந்த விஷயங்களை யெல்லாம் இந்த தேசத்தில் பரவும்படி செய் என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:39 pm

ஆனைக்கால் உதை


ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதி கொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்த தெருவின் வழியாகச் சில பிள்ளைகள் அடிக்கடி போவது உண்டு. போகும் போதெல்லாம் அவர்களுக்கு அந்தப் பழங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. கிட்டப் போனால் ஆனைக்கால்காரன் தனது பிரம்மாண்டமானக் காலைக் காட்டிப் பயல்களே, கூடையில் கை வைத்தால் உதைப்பேன் ஜாக்கிரதை* என்பான்.

சாதாரணக் காலால் அடித்தால் கூட எவ்வளவோ நோகிறதே, அந்த ஆனைக்காலால் அடிப்பட்டால் நாம் செத்தே போவோம் என்று பயந்து பிள்ளைகள் ஓடி விடுவார்கள்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்காரன் பராக்காக இருக்கும் சமயம் பார்த்து, ஒரு பையன் மெல்லப் போய்க் கடையிலிருந்து ஒரு பழத்தைக் கையிலெடுத்தான். இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரியக் காலைச் சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடிஅடித்தான். பஞ்சுத் தலையணையால் அடித்தது போலே அடி மெத்தென்று விழுந்தது. பையன் கலகலவென்று சிரித்துத் தெரு முனையிலே இருந்த தனது நண்பர்களைக் கூவி, அடே, எல்லோரும் வாருங்களடா* வெறும் சதை எலும்பில்லை என்றான். மனிதர்களெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிறார்கள். வெறும் சதையாக இருக்கும் கஷ்டங்களைத் தூரத்திலிருந்து எலும்புள்ள கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதிப்படுவதை நாம் பார்த்தது இல்லையா? நாம் அங்ஙனம் அவதிப்பட்டதில்லையா?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:41 pm

காக்காய்ப் பார்லிமெண்ட்



நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். உம்முடைய பெயரென்ன? என்று கேட்டேன். நாராயண பரமஹம்ஸர் என்று சொன்னார். நீர் எங்கே வந்தீர்? என்று கேட்டேன். உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார் என்று சொன்னார். சரி, கற்றுக் கொடும் என்றார். அப்படியே கற்றுக் கொடுத்தார்.

காக்கைப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.

கா என்றால் சோறு வேண்டும். என்றர்த்தம். கக்கா என்றால் என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே என்றர்த்தம். காக்கா என்றால் எனக்கு ஒரு முத்தம்தாடி கண்ணே என்றர்த்தம். இது ஆண் காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகின்ற வார்த்தை. காஹகா என்றால் சண்டை போடுவோம் என்றர்த்தம். ஹாகா என்றால் உதைப்பேன் என்றர்த்தம். இப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுவதும் காக்கை பாஷையிலே, கா, ஹா, க்ஹ- முதலிய ஏழெட்டு அக்ஷரங்களைப் பல வேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுவதும் மற்றவருக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை, பிறருக்குச் சொல்லவும் கூடாது. அந்த நாரயண பரமஹம்ஸருக்குத் தமிழ் தெரியாது. ஆதலால் அவர் பத்திரிக்கைகளை வாசிக்க மாட்டார். இல்லாவிட்டால் நான் மேற்படி நாலைந்து வார்த்தைகள் திருஷ்டாந்தத்துக்காக எழுதினதினாலேயே அவருக்கு மிகுந்த கோபமுண்டாய்விடும். ஒரு வார்த்தைகூட மற்றவருக்குச் சொல்லகூடாதென்று என்னிடம் வற்புறுத்திச் சொன்னார். போனால் போகட்டும். ஐயோ பாவம் என்று நாலு வார்த்தை காட்டி வைத்தேன்.

இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீட்சை செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவற்றின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ? என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றன. போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது? என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப் பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:41 pm

அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது, மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாகளுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போய் இருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால் படுகிறதாம்.. ஜார் சக்ரவர்த்தி கட்சி ஒன்று. அவர் அயோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கட்சி. இரண்டு கட்சியாரும் அயோகியர்களாதலால் இரண்டையும் தொலைத்து விட வேண்டுமென்று மூன்றாவது கட்சி. மேற்படி மூன்று கட்சியாரும் திருடரென்று நாலாவது கட்சி. இந்த நாலு கட்சியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிருஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கட்சி. இப்படியே நு}ற்றிருபது கட்சிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம்.

இந்த 120 கட்சியார் பரஸ்பரம் செய்யும் ஹிம்ஸை பொறுக்காமல் இந்தியாவுக்குப் போவோம். அங்குதான் சண்டையில்லாத இடம், இமய மலைப் பொந்தில் வசிப்போம் என்று வந்ததாம். அது சும்மா பட்டிணத்துக்கு வந்து அனிபெஸண்ட் அம்மாளுடைய தியஸாபிகல் சங்கத்துத் தோட்டத்தில் சில காலம் வசிக்க வந்தது. அந்த தோட்டக் காற்று சமாதானமும், வேதாந்த வாசனையுமுடையதாதலால் அங்கே போய் சில காலம் வசித்தால், ருஷியாவில் மனுஷ்யர் பரஸ்பரம் கொலை பண்ணும் பாவத்தைப் பார்த்த தோஷம் நீங்கி விடுமென்று மேற்படி கொக்கு இமயமலையிலேயே கேள்விப்பட்டதாம்.

கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளமாம். இப்போது நம்முடைய தேசத்திலே கூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பெரிய பெரிய ஆஸ்தி வைத்திருக்கிறார்கள்.

நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீரை வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தியஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கேட்க வருகிறீர்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஓர் இழவும் கிடையாது. தண்டத்துக்கு உழைக்கிறேன். எல்லாரையும் போலே நானும் வயிற்றுக்காக நாள் முழுவதும் ஓடி உழன்று பாடுபட்டுத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. அடே காகங்கள், கேளீர்,

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:42 pm

ஒவ்வொரு காக்கைக்கும் நாள்தோறும் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். அதை வைத்துக் கொண்டு நானும் என் பெண்டாட்டியும், என் குழந்தைகளும், என் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என் வைப்பாட்டியார் ஏழுபேர், அவர்களுடைய குடும்பத்தார் இத்தனை பேரும் அரை வயிறு ஆகாரம் கஷ்டமில்லாமல் நடத்துவோம். இபபோது என் குடும்பத்துக் காக்கைக்கும் மற்ற காகங்களுக்கும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை. ஏழெட்டு நாளுக்கு முந்தி ஒரு வீட்டுக் கொலலையிலே கிடந்தது. அது சோறில்லை. கறியில்லை. எலும்பில்லை. ஒன்றுமில்லை. அசுத்த வஸ்து கிடந்தது. அதைத் தின்ன போனேன். அங்கே ஒரு கிழவன் வந்து கல்லை எறிந்தான் என் மேலே. இந்த வலச்சிறகிலே காயம். இது சரிப்படாது. இனிமேல் எனக்குப் பிரiஜகள் ஆறில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லிற்று.

இதைக் கேட்டவுடனே ஒரு கிழக்காகம் சொல்லுகிறது,

மஹாராஜா, தாங்கள் இதுவரையில்லாத புதிய வழக்கம் ஏற்படுத்துவது நியாயமில்லை. இருந்தாலும் அவசரத்தை முன்னிட்டு சொல்லுகிறீர்கள்* அதற்கு நாங்கள் எதிர்த்துப் பேசுவது நியாயமில்லை. ஆனால் தங்களுக்குள்ள அவசரத்தைப் போலவே என்போன்ற மந்திரிமாருக்கும் அவசர முண்டென்பதைத் தாங்கள் மறந்துவிட்டதை நினைக்க எனக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. தங்களுக்கு ஒவ்வொரு காக்கையும் தன் வரும்படியில் பன்னிரண்டில் ஒரு பகுதி கட்ட வேண்டுமென்றும், அதில் மூன்றில் ஒரு பாகம் தாங்கள் மந்திரிமார்ச் செலவுக்குக் கொடுக்க வேண்டுமென்றும், ஏற்படுத்துதல் நியாயமென்று என் புத்தியில் படுகிறது என்று சொல்லிற்று. அப்பொழுது ஒரு அண்டங்காக்கை எழுந்து கக்கஹா, கக்கஹா, நீங்கள் இரண்டு கட்சியாரும் அயோக்கியர்கள், உங்களை உதைப்பேன் என்றது. வேறொரு காகம் எழுந்து சமாதானப்படுத்திற்று. இதற்குள் மற்றொரு காகம் என்னைச் சுட்டிக் காட்டி அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம் என்றது. உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து பேர்விட்டன.

இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:43 pm

பிராத்தனை




கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்சாகமும், குழந்தையின் ஹிருதையமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 1:47 pm

சும்மா 1




நேற்று சாயங்காலம் நான் தனியாக மூன்றாவது மெத்தையில் ஏறி உட்கார்ந்திருந்தேன். நான் இருக்கும் வீட்டில் இரண்டாவது மெத்தையிலிருந்து மூன்றாம் மெத்தைக்கு ஏணி கிடையாது. குடக்கூலி வீடு. அந்த வீட்டுச் செட்டியாரிடம் படி(ஏணி) கட்டும்படி எத்தனையோ தரம் சொன்னேன். அவர் இன்றைக்காகட்டும் நாளைக்காகட்டும் என்று நாளைக் கடத்திக் கொண்டு வருகிறார். ஆதலால் மூன்றாம் மெத்தைக்கு ஏறிப்போவது சிரமம். சிறிய கைச்சுவர் மேல் ஏறிக் கொண்டு அங்கிருந்து ஒரு ஆள் உயரம் உந்த வேண்டும். மூன்றாங் கட்டின் சுவரோரத்தைக் கையால் பிடித்துக் கொண்டு கைச்சுவர் மேலிருந்து உந்தும் போது கொஞ்சம் கை வழுக்கி விட்டால் ஒன்றரை ஆள் உயரம் கீழே விழுந்து மேலே காயம் படும். நான் தனிமையை விரும்புவோன். ஆதலால், சிரமப்பட்டேறி அடிக்கடி மூன்றாங் கட்டிலே போய் உட்கார்ந்திருப்பது வழக்கம். இந்த மார்கழி மாதத்தில் குளிர் அதிகமானப்படியால் வெயில் காய்வதற்கும் அது இதமாம். இங்ஙனம் நேற்று மாலை நான் வெயில் காய்ந்து கொண்டிருக்கையிலே குள்ளச் சாமியாரும், வேணு முதலியும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இரண்டாங்கட்டு வெளி முற்றத்தில் வந்து நின்று கொண்டு என்னைக் கைதட்டிக் கூப்பிட்டார்கள். நான் இறங்கி வரும் பொருட்டாக வேஷ்டியை இடுப்பில் வரிந்து கட்டினேன். அதற்குள் குள்ளச் சாமியார் என்னை நோக்கி நீ அங்கேயே இரு. நாங்கள் வருகிறோம் என்று சொன்னார்.

இந்தக் குள்ளச் சாமியாரைப் பற்றி முன்னொருமுறை எழுதியிருப்பது ஞாபகமிருக்கலாம். இவர் கலியுக ஐடப்பரதர், மகா ஞானி, சர்வ ஜீவ தயாபரன், ராஜ யோகத்தால் மூச்சைக்கட்டி ஆளுகிற மகான். இவர் பார்ப்பதற்குப் பிச்சைக்காரன் போலே கந்தையை உடுத்திக் கொண்டு தெருக்களில் உலாவுவார். இவருடைய மகிமை ஸ்திரிகளுக்கும் குழந்தைகளுக்கும் மாத்திரம் எப்படியோ தெரிந்திருக்கிறது. தெருவில் இவர் நடந்து செல்லுகையில் ஸ்திரிகள் பார்த்து இவரைக் கையெடுத்துக் கும்பிடுவார்கள். குழந்தைகளெல்லாம் அவரைக் கண்டவுடன் தாயை நோக்கி ஓடுவது போல ஓடி இவருடைய முழங்காலை மோர்ந்து பார்க்கும். இவர் பேதைச் சிரிப்புச் சிரித்துக் குழந்தைகளை உச்சி மோர்ந்து பார்ப்பார். ஆனால் சாமானிய ஜனங்களுக்கு அவருடைய உண்மையான மகிமை தெரிய மாட்டாது. கண்மூடித் திறக்கும் முன்னாகவே கைச்சுவர் மேல் ஒரு பாய்ச்சல் பாய்ந்து அங்கிருந்து மேல் மெத்தைக்கு இரண்டாம் பாய்ச்சலில் வந்துவிட்டார். இவரைப் பார்த்து இவரைப் போலவே தானும் செய்ய வேண்டுமென்ற எண்ணங் கொண்டவனாய் வேணு முதலி ஜாக்கிரதையாக ஏறாமல் தானும் பாய்ந்தான். கைப்பிடி சுவர் மேல் சரியாகப் பாய்ந்துவிட்டான். அங்கிருந்து மேல் மெத்தைக்குப் பாய்கையில் எப்படியோ இடறித் தொப்பென்று கீழே விழுந்தான். இடுப்பிலேயும் முழங்காலிலேயும் பலமான அடி. ஊமைக் காயம். என் போன்றவர்களுக்கு அப்படி அடிபட்டால் எட்டு நாள் எழுந்திருக்க முடியாது. ஆனால் வேணு முதலி நல்ல தடியன், கொட்டாப்புளி ஆசாமி. ஆதலால் சில நிமிஷங்களுக்குள்ளே ஒருவாறு நோவைப் பொறுத்துக் கொண்டு மறுபடி ஏறத் தொடங்கினான்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக