புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
25 Posts - 39%
heezulia
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
1 Post - 2%
Barushree
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
7 Posts - 2%
prajai
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_m10டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 12, 2010 1:11 pm

நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பசியால் வாடுவதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கின்றன. நாட்டில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 46 சதவீத குழந்தைகள், போதிய ஊட்டச் சத்தின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது, போனஸ் அதிர்ச்சி தகவல். பீகார், உ.பி., போன்ற மாநிலங்களில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆதரவற்றோர் காப்பக நிர்வாகிகள், அங்கு தங்கியுள்ளோரின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, உணவுப் பொருட்கள் வேண்டி, உருக்கமான கோரிக்கை விடுகின்றனர். நடைபாதை, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் வசிப்போரின் எண்ணிக்கையை கணக்கிட்டால், கோடிகளைத் தொடும். இவர்களுக்கும் ஒருவேளை உணவுக்கு கூட உத்தரவாதம் இல்லை.

குப்பையான உணவு : ஆனால், சேமித்து வைக்க போதிய இடவசதியின்றி, 13 லட்சம் டன் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அழுகி, வீணாகி விட்டதாகவும், அவற்றை எலிகள் வேட்டையாடி வருவதாகவும் பகீர் தகவல்கள் மீடியாக்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. உ.பி., பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்குகளின் வெளியில் நூற்றுக்கணக்கான டன் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள், குப்பையைப் போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தியா போன்ற பரந்து விரிந்த நிலப் பரப்பு கொண்ட ஒரு நாட்டில், அத்தியாவசியப் பொருளான உணவுப் பொருட்கள் டன் கணக்கில் வீணடிக்கப்படுவது, மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரின் நெஞ்சையும் கனக்கச் செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் குட்டு : உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படும் விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்று விட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவிட்டிருந்தது. அதில்,"உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலை தருகின்றன. சேமித்து வைக்க இடமில்லாமல், உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை அனுமதிப்பதற்கு பதிலாக, அவற்றை வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கலாம்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அலட்சியம் : இருந்தாலும், இந்த விவகாரத்தை மத்திய அரசு அலட்சியமாகவே கையாண்டது. இதுகுறித்து பார்லிமென்டில் பேசிய மத்திய விவசாய மற்றும் உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் கூறுகையில்,"ஏழை மக்களுக்காக, ஏற்கனவே சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, சுப்ரீம் கோர்ட் கூறியது போல், அளவுக்கு அதிகமான உணவுப் பொருட்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை' என, சர்வ சாதாரணமாக தெரிவித்தார்.

கண்டிப்பு : இது சுப்ரீம் கோர்ட்டுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு, கடந்த வாரம் கண்டிப்பான ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில்"உணவுப் பொருட்கள் வீணாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமான உணவுப் பொருட்களை வீணாக்குவதற்கு பதிலாக, அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என, நாங்கள் ஏற்கனவே கூறியது உத்தரவு தானே தவிர, ஆலோசனை அல்ல. இதை உங்கள் அமைச்சருக்கு தெரியப்படுத்துங்கள்' என, அதிரடியாக அறிவித்தது.

பார்லியில் அமளி : சுப்ரீம் கோர்ட்டின் இந்த கண்டிப்பான உத்தரவு, லோக்சபாவில் கடந்த வாரம் புயலை கிளப்பியது. பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு அடுக்கடுக்கான, கேள்விகளை எழுப்பின. இதுகுறித்து மத்திய உணவு அமைச்சர் சரத் பவார், சபையில் விளக்கம் அளிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ்,"என் சொந்த மாநிலமான பீகாரில் ஏராளமான மக்கள் பசியால் வாடுகின்றனர். இந்திய உணவுக் கழக கிடங்குகளில் வீணாகும் உணவுப் பொருட்களை அவர்களுக்கு இலவசமாக வழங்குங்கள்' என, கெஞ்சலாகவே கேட்டார்.

அசரவில்லை பவார் : இருந்தாலும், இந்த விவகாரத்தில் பவார் அசைந்து கொடுக்கவில்லை. அவர் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மத்திய அரசு மதிக்கிறது. கோர்ட்டின் உத்தரவுகளை அரசு செயல்படுத்தும். அதேநேரத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் இறுதி நகல் கிடைத்த பின்னரே, இந்த விஷயம் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க முடியும்'என, கூறிவிட்டு, இந்த பிரச்னையை தற்போதைக்கு கைகழுவி விட்டார்.

நிபுணர்கள் கவலை : மத்திய அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டாலும், சமூக ஆர்வலர்களும், விவசாய துறை வல்லுனர்களும் கவலை தெரிவித்துள்ளனர். பிரபல விவசாய அறிவியல் வல்லுனர்கள் கூறியதாவது:உணவுப் பொருட்கள் வீணாவதாக கூறப்படுவது வெட்கக்கேடான விஷயம். உணவுப் பொருட்களை சேமித்து வைக்க முடியாத அரசு, உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டம் குறித்து பேச முடியாது. உணவுப் பொருட்களை வினியோகிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காமன்வெல்த் போட்டி, விமான நிலையம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உணவுப் பொருள் விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்ட விவகாரம் குறித்து, பார்லிமென்ட் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவுக் கழக கிடங்குகளில் என்ன பிரச்னை : சுப்ரீம் கோர்ட்டே கண்டிக்கும் அளவுக்கு இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததற்கு "இந்திய உணவுக் கழக கிடங்குகளில், உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதற்கு போதிய இட வசதி இல்லை' என, அரசு கூறுவது தான் முக்கிய காரணம். நாடு முழுவதும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக உள்ளன. ஆனால், இந்திய உணவுக் கழக கிடங்குகளில் இவற்றை சேமித்து வைக்கும் அளவுக்கு இட வசதிகள் இல்லை. இதனால், கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது போக, மற்றவை, உணவுக் கழக கிடங்குகளின் வெளியில் குப்பையைப் போல் குவித்து வைக்கப்பட்டு, வீணாகின்றன. நாளடைவில் மழை, வெயில் போன்ற பிரச்னைகளால், இந்த உணவுப் பொருட்கள் அழுகி, யாரும் பயன்படுத்த முடியாதபடி வீணாகின்றன.கடந்த 2006-07ல், குறைவான விளைச்சல் காரணமாக, இந்திய உணவுக் கழகம், மிகவும் குறைவான உணவுப் பொருட்களையே கொள்முதல் செய்தது. இதன் காரணமாக, ஏற்கனவே இயங்கி வந்த பல கிடங்குகள் மூடப்பட்டு விட்டன. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் விளைச்சல் அதிகரித்து, அதிகமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இந்திய உணவுக் கழக சேமிப்பு கிடங்குகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் 40 ஆண்டு பழமையானது என்றும் கூறப்படுகிறது.

மிகைப்படுத்தப்பட்ட தகவலா? : ஏராளமான உணவுப் பொருட்கள் வீணாவதாக தகவல் வெளியானாலும், இந்திய உணவுக் கழகம் அதை மறுத்துள்ளது. உணவுக் கழக அதிகாரிகள் கூறுகையில் இதுகுறித்து "வீணாகிய உணவுப் பொருட்கள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்த கொள்முதலில் வெறும் 0.4 சதவீத அளவிலான உணவுப் பொருட்களே வீணாகியுள்ளன. சர்வதேச அளவில் வீணாகும் உணவுப் பொருட்களை ஒப்பிட்டால், இது மிகவும் குறைவான அளவே'என்கின்றனர்.

தீர்வு என்ன? உணவுப் பொருட்கள் வீணாவதை தவிர்க்க, அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தினாலே, உணவுப் பொருள் வீணாகும் பிரச்னையை எளிதில் சமாளித்து விடலாம்.விளைச்சல் அதிகம் உள்ள பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இந்திய உணவுக் கழக கிடங்குகளின் சேமிப்பு வசதியை அதிகரிக்க வேண்டும். சேமிப்பு கிடங்குகளில் பின்பற்றப்படும் பழமையான நடைமுறைகளை மாற்றி, தற்காலத்துக்கு ஏற்ற புதிய முறைகளை செயல்படுத்த வேண்டும். இதற்கு உள்ள இடையூறுகள் நீக்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியவில்லை என்றால், இந்த பணிகளில் தனியார் துறையையும் அனுமதிப்பதில் தவறு எதுவும் இல்லை. முழுக்க, முழுக்க தனியார் வசம் இந்த பொறுப்புகளை ஒப்படைக்காமல், அரசும், தனியாரும் சேர்ந்து, கூட்டாக இந்த பணிகளை கவனிக்கலாம்.வட்டிக்கு கடன் வாங்கி, வயல்வெளிகளிலும், வரப்பு மேடுகளிலும் பாடுபட்டு வியர்வை சிந்திய இந்திய விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுவது சரியா. ஒட்டிய வயிறுடனும், வறண்டுபோன நாவுடனும், பசியால் முடங்கிக் கிடக்கும், அப்பாவி மக்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு. களத்தில் இறங்குமா அரசு?

இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.,) : இந்திய உணவுக் கழகம், இந்திய உணவுக் கழக சட்டத்தின் கீழ், கடந்த 1964ல் ஏற்படுத்தப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்வது, அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பது, கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை சேமித்து வைப்பது, அவற்றை பொது வினியோக திட்டங்களுக்கு வினியோகிப்பது உள்ளிட்ட மத்திய அரசின் உணவுக் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவது இந்திய உணவுக் கழகம் தான். நாடு முழுவதும் இதற்கு ஐந்து மண்டல அலுவலகங்களும், 26 பிராந்திய அலுவலகங்களும் செயல்படுகின்றன. இவற்றில் 38 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை அலுவலகம் டில்லியில் உள்ளது. ஆண்டு தோறும் மொத்த விளைச்சலில் 15 முதல் 20 சதவீதம் வரையிலான கோதுமையையும், 12 முதல் 15 சதவீதம் வரையிலான அரிசியையும் விவசாயிகளிடம் இருந்து, இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழக சேமிப்பு கிடங்குகளில் 256.64 லட்சம் டன் உணவுப் பெருட்களை சேமித்து வைக்கும் வசதி உள்ளது. அதிக அளவாக வடக்கு மண்டலத்தில் மட்டும் 127.48 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க முடியும்.

இது எப்படி இருக்கு? உணவுப் பொருள் வீணாகிய விவகாரம் குறித்து பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, சமீபத்தில் ஒரு யோசனை தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது:
அளவுக்கு அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை, வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக வழங்க, அரசுக்கு விருப்பம் இல்லை என்றால், அவற்றை மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம். குறிப்பிட்ட சில மதுபானங்கள், உணவுப் பொருட்களின் தான் தயாராகின்றன. எனவே, அரசு இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான கிடங்குகளுக்கு எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆய்வு செய்து, வீணாகிய உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்தனர். அவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை மீடியாக்களிடம் காட்டுவதற்காக டில்லிக்கு எடுத்துவர திட்டமிட்டோம். ஆனால், அவற்றில் இருந்து வந்த மிக மோசமான வீச்சம் காரணமாக, அதிகாரிகள் விமானத்தில் அதை எடுத்து வர அனுமதி மறுத்து விட்டனர்.இவ்வாறு நிதின் கட்காரி கூறியுள்ளார்.

வீணாவது எவ்வளவு? *கடந்த பத்தாண்டுகளில் மட்டும், 13 லட்சம் டன் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள், சேமித்து வைக்க இடவசதியின்றி வீணடிக்கப்பட்டுள்ளதாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
* வீணாகிய இந்த உணவுப் பொருட்களை கொண்டு, ஒரு கோடி பேருக்கு, ஒரு ஆண்டு முழுவதற்கும் மூன்று வேளைக்கும் உணவளிக்க முடியும்.
*உணவுப் பொருள் விளைச்சல் அதிகம் உள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்களில் மட்டும், 61 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப் பட்டுள்ளன.
*இந்த உணவுப் பொருட்களை கொண்டு, 1.2 கோடி பேருக்கு, ஒரு மாதத்துக்கு உணவளிக்க முடியும்.
*கடந்த 1997-2007 முதல், வட மாநிலங்களில் மட்டும் 1.83 லட்சம் டன் கோதுமை, 3.93, லட்சம் டன் அரிசி, 22 ஆயிரம் டன் நெல், 110 டன் சோளம் ஆகியவை, சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாமல், சேதமாகியுள்ளதாக இந்திய உணவுக் கழகமே தெரிவித்துள்ளது.
* நாட்டின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களிலும் இதே அளவு உணவுப் பொருட்கள் சேதமாகியுள்ளன.
*சேதமான உணவுப் பொருட்களை அகற்றுவதற்கு, அல்லது அப்புறப்படுத்துவதற்காக மட்டும், 2.59 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
*ஒரு டன் கோதுமையை கொள்முதல் செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் இந்திய உணவுக் கழகம் சார்பில் 15ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. இந்திய
உணவுக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு பத்து லட்சம் டன் கோதுமை சேதமடைந்தால், இதனால் அரசுக்கு 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
*ஒரு டன் அரிசியை கொள்முதல் செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் இந்திய உணவுக் கழகம் சார்பில் 19 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக