புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
2 Posts - 1%
சிவா
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
435 Posts - 47%
heezulia
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
30 Posts - 3%
prajai
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பாரதியார் சிறுகதைகள் Poll_c10பாரதியார் சிறுகதைகள் Poll_m10பாரதியார் சிறுகதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் சிறுகதைகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 11:58 am

குதிரைக் கொம்பு

சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரிவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி குதிரைக்கு ஏன் கொம்பில்லை? என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சன்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுனி சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.


கேளீர், ரிவண மஹாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான் என்றார்.


இதைக்கேட்டவுடன் ரிவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும் என்றான்.


வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்-


இலங்கையில் ராவணன் தர்மராஜயம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஒரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடைனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள் தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்கங்களை நடத்தி வந்தார்கள்.ஆட்டுக் கணக்கை மட்டும் தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி இருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜிவர்களும் புண்யத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாட்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.


அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷமணனையும் ராஜயத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷமணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக்குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷமணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டுவரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 11:58 am

அப்படியே ராமலக்ஷமணரைப் படித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னிதியிலே கொண்டு சேர்த்தனர். அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து பலவிதமான கடூர வார்த்தைகள் சொல்லி பயமுறுத்திய பிறகு ராஜபுத்திரராகவும், இளம்பிள்ளைகளாகவும் இருந்தபடியால் இதுவரை செய்த துஷ்ட காரியங்களையெல்லாம் க்ஷம்மிப்பதாகவும், இனிமேல் இவ்வித காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்கும்மென்றும் சொல்லி நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களை சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படி செய்தாள். அப்போது சீதை சூப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள். இதைக் கேட்டு சூர்ப்பநகை மனமிரங்கி, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து மிதிலை கொண்டு சேர்க்கும்படி ராவணனுக்குச் சொல்லியனுப்பினாள். ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே அவளை மிதிலைக்கு அனுப்ப நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் அகப்படவில்லை. மறு வருஷமும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலேயே தங்கிவிட்டுப் போகும்படி ராவணன் ஆக்கினை செய்தான்.


தண்டகாரண்யத்தில் ராமன் சூர்ப்பநகையிடம் சீதை எங்கே? என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பி விட்டதாகச் சூர்ப்பநகை சொன்னாள். எப்படி நீ இந்த காரியம் செய்யலாம்? என்று கோபித்து லக்ஷமணன் சூர்ப்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்ப்பநகை தன் இடுப்பில் பழங்கள் அறுத்துத் தின்னுவதற்காகச் சொருகி வைத்துக் கொண்டிருந்த கத்தியைக் கொண்டு லக்ஷமணனுடைய இரண்டு காதுகளையும், கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள். இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகங் கொண்டு, அட* சீதையைத்தான் மிதிலைக்குகனுப்பி விட்டாய். என்னை நீ விவாகங் செய்து கொள்ளு என்றான். இதைக் கேட்டவுடனே சூர்ப்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு நீ அழகான பிள்ளைதான். உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் அண்ணா கோபித்துக் கொள்வார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும். என்றாள்.


அப்போது ராமன் சீதையை எப்போது மிதிலைக்கு அனுப்பினாய்? யாருடன் அனுப்பினாய்? அவள் இப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்? என்று கேட்டான்.


அதற்கு சூர்ப்பநகை, இனிமேல் சீதையின் நினைப்பை விட்டு விடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவள் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக் கூடும்.. மூன்னுலகத்திற்கும் அவன் அரசன். சீதையை மறந்து விடு. என்றாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:03 pm

இகைக் கேட்டு ராமன் அங்கிருந்து வெள்யேறி எப்படியேனும் சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த கிஷ்கிந்தா நகரத்தில் அப்போது சுக்கிரிவன் என்ற ராஜா அரசு செலுத்தினான். இவனுக்கு முன் இவனுடைய தமையனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சினேகம.. இரண்டு பேருமே ஒரே வகுப்பில் கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகத்திலும் கப்பம் வாங்கின ராவணன் கிஷ்கிந்தா பட்டிணத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லை யென்று சொல்லிவிட்டான். இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்ரிவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரதையை வலிமையால் மணந்துகொண்டு அனுமான் எள்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜஜியத்தை வசப்படுத்திக் கொண்டான். இதைக் கேட்டு ராவணன் மகாகோபத்துடன் சுக்கிரிவனுக்கு பின்வருமாறு ஓலை யெழுதியனுப்பினான்.


கிஷ்கிந்தையின் சுக்கிரிவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகிதனைக் கொன்றாய். உனது அண்ணனைக் கொன்றாய். அரசைத் திருடினாய். இந்த ஓலையைக் கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யா ஸ்திரி மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்ஜியத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜஜியத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும். இந்த உத்தரவுக்கு கீழப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்.


உத்தரவு கண்டவுடன் சுக்ரிவன் பயந்துபோய் அனுமானை நோக்கி என்ன செய்வோம்? என்று கேட்டான். அனுமான் சொன்ன யோசனை என்னவென்றால்,


வாலியிடம் பிடித்துக் கொண்ட தாரையையும் பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரைக் கோடிப் பெண்களையும் ராவணனுக்கு அடிமையாக அனுப்ப வேண்டும். ராவணனாலே ஆதரித்து போற்றப்படும் வைதிக ரிஷிகளின் யாகச் செலவுக்காக நாற்பது கோடி ஐம்பது லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இருநு}ற்று நாற்பது ஆடுமாடுகளும், தோற் பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படிக் கொள்ளக் கூடிய நானு}று கோடிப் பைகள் நிறைய சோமரஸம் என்ற சாறும் அனுப்பி அலனைச் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும். இளவரசுப்பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும், வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் கட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம் என்று அனுமான் சொன்னான். சுக்ரிவன் அப்படியே பெண்களும் ஆடுமாடுகளும், சாறும், முதல் வருஷத்துக் கப்பத் தொகையும் சேகரம் பண்ணி அத்துடன் ஓலையெழுதி தூதர் வசம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடுமாடுகளையும் சாற்றையும், ராவணன் அரண்மனையிலே சேர்த்தார்கள். அடிமைப் பெண்களையும் பணத்தையும் முனிவரிடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தனர். போகிற வழியில் தூதர்கள் தோற்பையிலுள்ள சாற்றைக் குடித்துக் கொண்டு போனபடியால் தாறுமாறாக வேலை செய்தார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:04 pm

ராவணன் தனது நண்பர்களுடன் ஆடுமாடுகளையெவ்வாம் அப்போதே கொன்று திள்று அந்த சாற்றையும் குடித்து முடித்தவுடனே ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் பணமும் ஏன் தன்வசம் வந்து சேரவில்லையென்று விசாரணை செய்தான். முனிவாகளின் மடங்களில் சேர்த்து விட்டதாகவும், அவர்கள் அந்த பணங்களையெல்லாம் யாகத்திலே தக்ஷணையாக்கியெடுத்துக் கொண்டபடியால் இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் பெரும்பாலும் ஓடிப்போய்விட்டதாகவும் செய்தி கிடைத்தது. தூதர்களையெல்லாம் உடனே கொல்லச் சொல்லிவிட்டு அந்த க்ஷணமே சுக்ரிவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான்.


அப்படியே நல்லதென்று சொல்லி சேனாதிபதி போய்ப் படைகளைச் சேகரித்தான். இந்தச் செய்திகளெல்லாம் வேவுகாரர் மூலமாக கிஷ்கிந்தைக்குப் போய் எட்டிவிட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்ரிவன் தனது படைகளைச் சேர்த்தான். ராவணன் படைகள் தயாரன பிறகும், அதை நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தான். இதற்குள்ளே அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்கு படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். இவனுடைய சேனையிலே ராம லக்ஷமணரும் போய்ச் சேர்ந்தனர். இந்தச் சேனையிலே நாற்பத்தொன்பது கோடியே தொண்ணுற்று நாலு லட்சத்து முப்பத்தேழாயிரத்து முந்நு}ற்றைம்பத்தாறு காலாளும், அதற்கிரட்டிக் குதிரைப் படையும், அதில் நான்கு மடங்கு தேரும், அதில் எழுபது மடங்கு யானைகளும் வந்தன.


இவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதித்துக் கொன்று முடித்து விட்டன. ராம லக்ஷமணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகசியமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள். இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது. உடனே ராவணன் ஹா* ஹா* ஹா* நமது நகரத்திற்குள் மனிதர் சேனையை கொண்டு வருவதா* இதென்ன வேடிக்கை* ஹா* ஹா* ஹா* எனறு பேரிரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரிய மண்டலம் தரைமேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:05 pm

மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராமனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லக்ஷமணர் அயோதிக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான ராமாயணக் கதை என்று வக்ரமுகசாஸ்திரி ரிவண நாயக்கன் சபையிலே கதை சொன்னான்.


அப்போது ரிவணன், சாஸ்திரியாரே குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்று கேட்டால் இன்னும் அதற்கு மறுமொழி வரவில்லையே? என்று கேட்டான்.


வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறான்,


ராமன் படையெடுத்து வந்த செய்தி கேட்டு, ராவணன் ஹா* ஹா* ஹா* என்று கூச்சலிட்டபோது, சத்தம் பொறுக்கமாட்டாமல் சூரிய மண்டலம் கீழே விழுந்ததென்று சொன்னேன்னன்றோ? அப்போது சூரியனுடைய குதிரையேழுக்கும் கொம்பு முறிந்து போய்விட்டது. சூரியன் வந்து ராவணனுடைய பாதத்தில் விழுந்து, என் குதிரைகள் சாகவரமுடையன. இவற்றை போல் வேகம் வேறு கிடையாது. இவற்றுக்குக் கொம்பு முறிந்து போய்விட்டது. இனி உலகத்தாரெல்லாம் என்னை நகைப்பார்கள். என்ன செய்வேன் என்று அழுதுமுறையிட்டான். ராவணன் அநத சூரியனிடம் கிருபை கொண்டு பிரம்ம தேவனிடம் இனிமேல் ஒரு குதிரைக்கும் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சூரியனுடைய குதிரைகளை யாரும் நகைக்க இடமிராது. என்று சொன்னான். அது முதலாக இன்றுவரை குதிரைக்குக் கொம்பில்லாமல் பிரம்ம தேவன் படைத்துக் கொண்டு வருகிறான்.


இவ்விதமாக வக்ரமுக சாஸ்திரி சொல்லியதைக் கேட்டு ரிவண நாயக்கன் மகிழ்ச்சி கொண்டு மேற்படி சாஸ்திரிக்கு அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன்னாக அவர் சொல்லிய கதை முழுவதிலும் எழுத்தெண்ணி பரிசு கொடுத்தான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:13 pm

அர்ஜுன சந்தேகம்




ஹஸ்தினாபுரத்தில் துரோணச்சாரியாரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாரஜாவின் பிள்ளைகளும் துரியோதனாதிகளும் படித்து வருகையில், ஒரு நாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக் கொண்டு வரும்போது, அர்ஜுனன் கர்ணனை பார்த்து ஏ கர்ணா, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா? என்று கேட்டான். (இது மகாபாரதத்திலே ஒரு உபக்கதை. சாஸ்திர பிரமாணமுடையது வெறும் கற்பனையன்று.)

சமாதானம் நல்லது என்று கர்ணன் சொன்னான்.

காரணமென்ன? என்று கிரிடி கேட்டான்.

கர்ணன் சொல்லுகிறான் அடே, அர்ஜுனா, சண்டை வந்தால் நான் உன்னை அடிப்பேன். அது உனக்கு கஷ்டம். நானோ இரக்க சித்தமுடையவன். நீ கஷ்டப்படுவதை பார்த்தால் என் மனம் தாங்காது. ஆகவே இரண்டு பேருக்கும் கஷ்டம். ஆதலால் சமாதானம் சிறந்தது என்றான்.

அர்ஜுனன். அடே கர்ணா, நம் இருவரைக் குறித்து நான் கேட்கவில்லை. பொதுப்படையாக உலகத்தில் சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா என்று கேட்டேன் என்றான்.

அதற்குக் கர்ணன் பொது விஷய ஆராய்ச்சிகளில் எனக்கு ருசியில்லை என்றான்.

இந்த பயலைக் கொன்று போட வேண்டும் என்று அர்ஜுனன் தன் மனதுக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டான். பிறகு அர்ஜுனன் துரோனாச்சாரியாரிடம் போய் அதே கேள்வியைக் கேட்டான்.

சண்டை நல்லது என்று துரோணச்சாரியார் சொன்னார்.

எதனாலே? என்று பார்த்தன் கேட்டான்.

அப்போது துரோணச்சாரியார் சொல்லுகிறார்

அடே விஜயா, சண்டையில் பணம் கிடைக்கும் கீர்த்தி கிடைக்கும். இல்லாவிட்டால் மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் சந்தேகம் என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:14 pm

பிறகு அர்ஜுனன் பீஷ்மாச்சாரியாரிடம் போனான். சணடை நல்லதா, தாத்;தா, சமாதானம் நல்லதா? என்று கேட்டான். அப்போது கங்கா புத்திரனாகிய அந்தக் கிழவர் சொல்லுகிறார் குழந்தாய், அர்ஜுன, சமாதானமே நல்லது. சண்டையில் நமது க்ஷத்திரிய குலத்திற்கு மகிமையுண்டு. சமாதானத்தில் லோகத்துக்கே மகிமை என்றார்.

நீர் சொல்லுவது நியாயமில்லை என்று அர்ஜுனன் சொன்னான்.

காரணத்தை முதலாவது சொல்ல வேண்டும். அர்ஜுனா, தீர்மானத்தை பிறகு சொல்ல வேண்டும். என்றார் கிழவர்.

அர்ஜுனன் சொல்லுகிறான் தாத்தாஜி சமாதானத்தில் கர்ணன் மேலாகவும் நான் தாழ்வாகவும் இருக்கிறேhம். சண்டை நடந்தால் உண்மை வெளிப்படும். என்றான்.

அதற்குப் பீஷ்மாச்சாரியார் குழந்தாய், தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும் தர்மம் வெல்லத்தான் செய்யும். ஆதலால் உன் மனத்தில் கோபங்களை நீக்கி, சமாதானத்தை நாடு. மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன்பிறந்தாரைப் போலே. மனுஷ்யர் பரஸ்பரம் அன்போடிருக்க வேண்டும். அன்பே தாரகம். முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம் என்று சொல்லிக் கண்ணீர் ஒரு திவலை உதிர்த்தார்.

சில தினங்களுக்கப்பால் அஸ்த்தினாபுராத்திற்கு வேத வியாஸர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் போய்ச் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா என்று கேட்டான்.

அப்போது வேதவியாஸர் சொல்லுகிறார் இரண்டும் நல்லன. சமயத்திற்குத் தக்கபடி செய்ய வேண்டும் என்றார்.

பல வருஷங்களுக்கப்பால் காட்டில் இருந்து கொண்டு துரியோதனாதிகளுக்குத் தூது விடுக்கும் முன்பு அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனை அழைத்து கிருஷ்ணா, சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா? என்று கேட்டான்.

அதற்கு கிருஷ்ணன் இப்போதைக்கு சமாதானம் நல்வது. அதனாலேதான் சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்படப் போகிறேன் என்றாராம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:16 pm

அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்


சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள் உங்கள் சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது "புருஷன் முகத்தை பார்ப்பது வழக்கமில்லையாமே" மெய்தானா? என்று கேட்டாள்.

அதற்கு அந்த ராஜகுமாரன் உங்கள் தேசத்தில சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தை பார்ப்பது இல்லை யென்று கேள்விப்படுகிறேன.; அது மெய்தானா? என்றான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:18 pm

சாஸ்திரியார் மகன்

ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால் அதைப் பார்த்து அழுது கொண்டு நின்றான். அதைக் கண்ட ஒரு சிப்பாய் குழந்தாய் ஏன் அழுகிறாய்? என்று கேட்டான்.

பையன் - வண்டி ஒடிஞ்சி போச்சி?

சிப்பாய் - இதற்காக அழாதே. வீட்டிற்கு போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார்.

பையன் - எங்கப்பா சாஸ்திரியார் அவராலே வண்டியை நேர்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கி கொண்டு வருவார். வேறே ஒரு இழவும் தெரியாது. என்று விம்மி விம்மியழுதான். சிப்பாய் சிரித்துக் கொண்டே போய் விட்டான்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 12:34 pm

கலியுக கடோற்கசன்




வேதபுரத்தில் கலியுக கடோற்கசன் என்பதாக ஒருவன் கிளம்பி இருக்கிறான். பழைய துவாபர யுகத்துக் கடோற்கசனுடைய சரித்திரம் எலலோருக்கும் தெரியும். அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர் தப்பி ஓடும்போது இடும்ப வனத்தில் தங்கினார்கள். அங்கிருந்த இடும்பாசுரன் என்ற ராஷஸன் அவர்களை பிடித்து தின்ன வந்தான். அந்த இடும்பனை வீமன் கொன்று விட்டான். பிறகு அவன் தங்கையாகிய இடும்பி என்ற ராக்ஷஸி வீமன் மேல் காதல் கொண்டு தன்னை மணந்து கொள்ள சொல்லி வற்புறுத்தினாள். மற்ற சகோதரர்கள் நால்வரும் பிரம்மசாரிகளாக இருக்கையில் தான் முதலாவது ஒரு ராக்ஷஸியைக் போய்க் கல்யாணம் பண்ணிக் கொள்வதில் வீமனுக்கு சம்மதமில்லை. இடும்பி குந்தியிடம் போய் முறையிட்டழுதாள்.

குந்தி வீமனை நோக்கி, மகனே ஒரு ஸ்திரி வந்து காதல் கூறுமிடத்து அவளை மறுப்பது க்ஷத்தரிய தருமமில்லை. ஆண் மகன் அங்ஙனம் செய்யலாகாது. ஆதலால் இந்த ராக்ஷஸியைக் கல்யாணம் பண்ணிக் கொள்க எனறு கட்டளையிட்டாள். தாய் சொல்லுக்கிணங்கி வீமன் இடும்பியை கல்யாணம் பண்ணிக் கொண்டான். இவ்விருவருக்கும் பிறந்த பிள்ளையே துவாபரயுக் கடோற்கசன். இவன் வீமனுக்கு சமமான பலமும் பலாக்கிரமும் உடையவனென்று வேதவியாசர் தெரிவிக்கின்றார்.

இது நிற்க. நமது கலியுக கடோற்கசனைக் கவனிப்போம். இவன் வேதபுரத்தில் ஒரு சாராய கடையிலே பணவசூல் குமாஸ்தாவாக இருக்கும் ராமசாமி நாயக்கர் என்பவருடைய மகன். இவனுக்கு இப்போது வயது சுமார் இருபது இருக்கலாம். சாராயக் கடையில் பிராந்தி, விஸ்கி, ஜான் முதலிய ஐரோப்பிய சாராயங்கள் விற்கிறார்கள். வேதபுரத்தில் குடி மும்முரம். ஆனபடியால் மேற்படி கடைக்கு பற்று வரவு ஜாஸ்தி. அங்குப் பண வசூல்காரனாகிய ராமசாமி நாயக்கருக்கு மாதம் எட்டு ரூபாய் சம்பளம். தெலுங்கு பேசும் நாயக்கர், நல்ல க்ஷத்திரிய வம்சம். தெலுங்கு ராஜ்யம் போன பிறகு கெட்டு போய் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கும் நாயுடு கூட்டத்தைச் சேர்ந்தவர்.

மேற்படி ராமசாமி நாயக்கர் மகனுக்குத் தாய் தந்தையர் வைத்த பெயர் கோவிந்தராஜுலு. அவன் தானாக வைத்துக்கொண்ட பெயர் கலியுக கடோற்கசன்.

அவன் உயரம் ஐந்தேகால் அடியிருக்கலாம். குண்டுருளை போலே வயிரமான உடம்பு. இவன்மேலே மோட்டார் வண்டி ஓட்டலாம.; மாட்டுவண்டி விடலாம். இவன் தலை ரோமத்தில் முந்நு}று ராத்தல் கல் தொங்க விடலாம்.. இவன் தலையிலே நாற்பது பேரடங்கிய பெரிய தொட்டிலை நிறுத்தி வைக்கலாம் இவன் இரண்டு விரல்களைக் கொண்டு மகா பாரத புஸ்தகத்தைக் கிழித்துப் போடுவான். இவன் பல்லினால் கல்லைப் பேர்த்துப் போடுவான். இவன் நகத்தால் கதவைப் பிளப்பான்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக