புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_m10ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியத்தில் கசியும் அரசியல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Sep 05, 2010 3:17 pm

First topic message reminder :

எடுத்த எடுப்பிலேயே எனக்கு ஓவியம் குறித்து எதுவும் தெரியாது என்பதை சொல்லிவிடுவதுதான் சரி என்று படுகிறது. எதற்கு தேவை இல்லாமல் ஒரு எதிர்பார்ப்பை உங்களுக்குள் வளரவிடும் குற்றத்தை செய்துகொண்டு? எதோ நல்ல ஓவியங்களை கொஞ்சம் ரசிக்கத் தெரியும் என்பதோடு சரி. நான் ரசிப்பவை எல்லாம் நல்லவைதானா என்பதும் கூட எனக்குத் தெரியாது. நான் நின்று நேரமெடுத்து ரசிக்காதவை நல்லவைகள் அல்ல என்றும் சொல்ல முடியாது. இப்படி ரசிப்பதற்கும் தள்ளிவிடுவதற்கும் எனக்குள் எந்த அளவு கோளும் இல்லை. ஏதோ என்னளவில் என்னை ஈர்க்கும் எதையும் அவசியம் ரசிக்கவே செய்கிறேன். இந்த அளவிற்கு எனக்கு ஒரு மிக சன்னமான அளவிற்கு ஓவியத்தின் மேல் ஈர்ப்பும் ரசனையும் வருவதற்கு கூட அய்யா வைகரை அவர்களும் யுகமாயினி சித்தன் அவர்களும்தான் காரணம் என்பதையும் அவசியம் பதியா விட்டால் நான் நன்றி கொன்றவனாவேன்.

இவர்கள் இருவரின் அதிலுங்குறிப்பாக வைகரை அவர்களின் தொடர்பு கிடைக்கும் வரை எழுத்திலக்கியத்திற்கான ஒரு துணைக் கருவி என்றும் எழுத்திலக்கியம் மட்டுமே தனித்து நிற்கும் அளவில் உசத்தியானது என்ற திமிர் என்று சொல்ல முடியாவிட்டாலும் அதை ஒட்டிய அளவில் அது போல ஏதோ ஒன்றோடும் இருந்தவன். ஏதோ ஒரு முறை ஏதோ ஒரு வேலையாக சென்னைக்கு வந்திருந்த போது வைகரை அய்யா அவர்கள் என்னை மருதுவின் ஓவியக் கண்காட்சிக்கு அழைத்துப் போனார். அதுதான் நான் பார்த்த முதல் ஓவியக் கண்காட்சி. அதுதான் முதல் என்பதற்காக ஏதோ அதன் பிறகு நிறைய ஓவியக் கண்காட்சிகளைப் பார்த்திருக்கிறேன் என்றும் பொருள் அல்ல. மருதுவின் கண்காட்சிக்குப் பிறகு இதுதான் என்ற வகையில் இரண்டாவது கண்காட்சி இது. என்றாலும் இந்த இரண்டு கண்காட்சிகளுக்கு மிடையில் எனது ஓவியம் குறித்த பார்வை கொஞ்சம் மாறி இருந்தது என்னவோ உண்மைதான். ஓவியம் மற்ற படைப்பிலக்கியங்களப் போலவே தனித்து நின்று இயங்கி உணர்த்தும் என்ற அளவுக்கு இப்போது எனக்கு புரிதல் உண்டு.

இப்போதும் சென்னைக்குத்தான் வந்திருக்கிறேன். இந்த முறை "தமிழ் நாடு பாட நூல் கழகம்" பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் முகாமின் ஒரு ஊழியனாக.
"தமிழ் நாடு பாட நூல் கழகம்" சமச்சீர் கல்விக்கு ஏற்ப நமது பள்ளிக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் பணியினைத் துவக்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப் பட்டு பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள முகாமில் அதிகாலை தொடங்கி பின்னிரவு வரை பணி நீள்வது உடலையும் மனதையும் சற்று பாதிக்கவே செய்கிறது என்ற போதிலும் நண்பர்கள் சரவணன், சிவா, ஏழுமலை, அண்ணன் முத்து, அண்ணன் ஸ்டீபன்ராஜ், தோழர் லட்சுமி, அண்ணன் சேலம் சுப்பிரமணி, அண்ணன் மோனோ காசி, நண்பன் சேகர், தம்பி தேவதாஸ், தம்பி அறச்செல்வன் ஆகியோரோடான பணி என்பது ஒரு சுகமான அனுபவமாகவே உள்ளது.

அதிலும் தம்பி தேவதாஸோடு என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் விழித்திருந்து வேலை பார்க்கலாம். எதை எது விரட்டுகிறது என்றே தெரியாமல் நேரமும் வேலையும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு ஓடும். அதிலும் அந்தத் தம்பியோடு எப்போதும் இணைந்திருக்கவே எனக்கு விருப்பமாய் இருக்கிறது. காரணம் இதுதான். தான் எப்போதும் சாலமோன் பாப்பையாவோடு இருப்பதையே விரும்புவதாக வைரமுத்து ஒரு முறை சொன்னாராம். ஏனென்று கேட்ட போது பாப்பையாவோடு இருந்தால்தான் தான் கொஞ்சம் சிவப்பாகத் தெரிவதாகவும் சொன்னாராம். எனக்கும் தம்பிக்குமான வண்ண இடைவெளி ரொம்ப சன்னம்தான் என்றாலும் அந்த சன்னமான வித்தியாச்திற்காகவே அவரோடு கூட இருக்கச் சொல்லி என் உள் மனது என்னை கட்டாயப் படுத்துகிறது.

ஒரு புதன் மாலை "இன்று இத்தோடு எல்லோரும் வேலையை முடித்துக் கொண்டு ஒரு முக்கியமான இடத்துக்குப் போகலாம்,கிளம்புங்க," என்று அவசரப் படுத்தினார்.

முகாமிற்குள்ளேயே அடைந்து கிடந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கும் எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை. காலார, மனதார வெளியே போய் வந்தால் பரவாயில்லை என்று படவே எங்கே என்று கூட கேட்கவில்லை. குளித்து உடை மாற்றிக் கொண்டு கிளம்பினால் நாங்கள் வெளியே வருவதற்குள் இரண்டு ஆட்டோக்களை ஏற்பாடு செய்திருந்தார். ஆட்டோ நகரத் தொடங்கியதும் கேட்டேன்

"ஆமாம் தேவா எங்க போறோம்?"

"வாங்க சொல்லாமலா போய்டுவேன்?" என்று சமாளித்துக் கொண்டே வந்தவர் ஒரு வழியாய் இரக்கப்பட்டு சொன்னார் " நாம இப்ப ஆழ்வார்பேட்டைல நடக்கிற ஒரு ஓவியக் கண்காட்சிக்கு போகிறோம். போதுமா?"

"ஆஹா!, யாரோடது?"

"நம்ம மேனகா மேடத்தோடது"

பொதுவாகவே ஓவியர்கள் குறித்து ஒன்றும் தெரியாதுதான் ஆனாலும் நமக்குத் தெரிந்த வட்டத்திற்குள் மேனகா அகப்படாமல் போகவே

"எந்த மேனகா?"

"நம்ம நரேஷ் சார் வொய்ஃப்."

புரிந்தது. கல்வித் துறை பெற்றிருந்த ஆகச் சிறந்த, ஆக யோக்கியமான, இரண்டு கை விரல்களின் எண்ணிக்கைக்குள் அகப்படும் அதிகாரிகளுள் நரேஷும் ஒருவர். எங்கு போனாலும் மைதர்களை தரம் பிரிக்கும் சல்லடைகளோடே போகும் எனது நல்ல நண்பர்க்ளில் பலர் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது, நான் என் வாழ்நாளின் பெரும் பயனாக கருதக் கூடிய பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் சார் அவர்களோடு நான் பொருத்திப் பார்க்கிற தகுதி வாய்ந்த இளைஞர். என் ஊர்தான் இவருக்கும். நூலகத் துறைக்குப் போயிருக்கிறார். என்னை விட குறைந்தது பத்து ஆண்டுகளாவது இளையவர். அந்த வகையில் நான் ஓய்வு பெற இருக்கும் இன்னுமொரு பதினோரு ஆண்டு கால இடைவெளிக்குள் மீண்டும் கல்வித் துறைக்குள் வந்து அவருக்கு கீழ் பணியாற்றும் வாய்ப்பினை எனக்குத் தருவார் என்பதேகூட இனிப்பான நம்பிக்கைதான்.

அவரது மனைவிதான் மேனகா எனில் இன்னும் இளைய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். எனில் முப்பதை நெருங்கிய அல்லது முப்பதை சற்றே தாண்டிய, ஓவியக் களத்தில் இன்னும் குறைந்த பட்சம் நாற்பது ஆண்டுகளையாவது சேமிப்பில் வைத்திருக்கிற ஒரு குட்டிப் பெண்ணின் ஓவியக் கண்காட்சிக்குப் போகிறோம் என்ற உணர்வே ஏற்கனவே செலவு செய்திருந்த காலண்டர்களில் ஒரு நான்கைந்தையாவது என்னிடம் திருப்பிக் கொண்டு வந்து விட்டது.ஆட்டோவிலிருந்து இறங்குவதற்குள் நான் நான்கைந்து ஆண்டுகள் குறைந்து போனேன்.

உள்ளுக்குள் நுழைந்தோம். அப்போதுதான் நடிகர் சிவக்குமார் அங்கிருந்து கிளம்பிப் போனதாக சொன்னார்கள். நுனி நாக்கு ஆங்கிலமும் அடிக்கப் பட்ட திரவத்தின் நறு மணமும் கம கமக்க அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த மேல் மட்டத்து சனங்களும் திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே ஊடாடி, நான் பெரிதும் ரசித்து மதிக்கிற மொழியைப் பேசுகிற, எளிமையயும் ஈரத்தையும் மட்டுமே தங்களது முகவரியாயும் இதயமாகவும் கொண்டிருக்கிற என் சனங்களையும் பார்க்க முடிந்தது.

நூறுக்கு சற்று ஒட்டிய எண்ணிக்கையில், சிறிதாய், பெரிதாய், வண்ண வண்ணமாய் ஓவியங்கள் ஒரு அழகான, நேர்த்தியான வரிசையில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. மரபு சார்ந்த, நவீன ,இன்னும் என்னென்ன வகைகள் உண்டோ அத்தனை வகை ஓவியங்களையும் அங்கே பார்க்க முடிந்தது. ஒரு சின்ன இலையிலிருந்து ஒரு மிகப் பிருமாண்டமான மரம் வரைக்கும், ஒரு எளிய ஓலைக் குடிசையிலிருந்து அதி நவீன மாட மாளிகைகள் வரைக்கும், ஒரு சிரிய தோப்பிலிருந்து ஒரு பெரிய காட்சி வரைக்கும் என்று வாழ்வின் சகல நிலைகளிலும் உள்ள இரண்டு முனைகளையும் சரியாய் உள்வாங்கி சரியாய் வெளிப்படுத்தும் பாங்கு நிசத்துக்குமே அலாதியானதுதான்

நவீன ஓவியங்களைப் பார்த்து வாயைப் பிளந்தவாறு நின்றுகொண்டிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. பொதுவாகவே நவீன ஓவியங்களின் மீது ஏகத்துக்கும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் வறட்டுத் தனமாக நவீன ஓவியங்களின் புரியாமயைக் காரணம் காட்டி அவற்றை நிராகரிப்பதை ஏற்க இயலாது.அதை அப்படித்தான் ஏற்க வேண்டுமெனில் பின் நவீனப் படைப்புகளையும், இருன்மை மற்றும் படிமம் சார்ந்து புனையப்படும் படைப்புகளையும் நாம் நிராகரித்து இழக்க வேண்டி வரும். நல்லது கெட்டது என்ற வகையில் வரும் விமர்சனங்களை மட்டுமே எதிர் கொண்டு மற்றவற்றை நிராகரிப்பதே சரியெனப் படுகிறது.

நுண்கலை வகையை சார்ந்த ஓவியங்களையும் ரசிக்க ஒரு திரள் இருந்தது. இரண்டையும் ரசிக்கும் திரள்தான் அந்த அரங்கில் பெரும்பான்மை என்பதுதான் மிகுந்த ஆரோக்கியமான விஷயமே. நம்மைப் பொறுத்தவரை புனைவும் பின் நவீனத்துவமும் கைவரப் பெற்றவரால் மட்டுமே நவீன ஓவியங்களை படைக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

ஆங்காங்கே கொத்துக் கொத்தாக நின்று சிலாகித்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருந்தார்கள்.சிலரோ அங்கு வைக்கப் பட்டிருந்த குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டுக்குமே நமக்கு ஞானம் போதாது என்பதால் அதற்குள் நான் நுழைய வில்லை. நானும் கொஞ்சம் சொக்கித்தான் போயிருந்தேன். மருதுவின் கண்காட்சியின் போது நான் முற்றிலுமாக அதனோடு ஒட்ட இயலாமல் கொஞ்சம் அந்நியப்பட்டுக் கிடந்தேன். காரணம் அப்போது வந்திருந்தவர்களில் பெரும்பான்மையோர் ஒவியத்தில் அதிகம் புலமை பெற்றிருந்தவர்கள். அதில் அதிகமானோர் ஓவியம் குறித்து பல கருத்தரங்குகளில் மணிக் கணக்காக பேசிக் கொண்டிருப்பவர்கள். ரப்பர் பந்து கிரிக்கெட்டைக்கூட தூர இருந்தே ரசித்துப் பழக்கப் பட்டிருந்த எனக்கு தெண்டுல்கர் மற்றும் தோனியின் அருகிருந்து பாக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது ஏற்படும் படபடப்பும் அந்நியத் தன்மையுமே எனக்கன்று இருந்தது. அன்றிருந்த மிரட்சி இல்லை என்பதால் இந்த ஓவியங்களுக்கு நெருங்கிப் போவது ஒன்றும் கடினமாக இல்லை.

முடிந்து ஏறத்தாழ மூன்று வாரங்கள் ஆன நிலையிலும் அதிலிரண்டு படங்கள் வழக்கமாக எடுத்தக் காரியத்தில் குவிந்துவிடும் என் கவனத்தை சலனப் படுத்திக் கொண்டே இருக்கின்றன.

அதிலொன்று, ஒரு ஓலைக் குடிசைக்கு முன்னால் சகல சக்திகளாலும் சக்கையாய் சுரண்டப் பட்டு எலும்பும், ஏதோ அரைக் கிலோ சதையும், கொஞ்சம் தோளும் என்று இருக்கும் நிலையிலும் நம்பிக்கையின் கங்கை இன்னமும் கண்களில் தேக்கி வைத்து குதிக் காலிட்டு குந்தியிருக்கும் கிழவியின் படம். "காட்டம்மா" என்று கத்த இருந்தவன் படாத பாடு பட்டு அடக்கிக் கொண்டேன். யாருக்கும் தெரியாமல் கசிவை துடைத்துக் கொண்டேன். வெளிப்படையாய் அழுவதுகூட சகிக்கமுடியாத பெருங்குற்றம் என்பதைதான் இந்த பாழாய்ப் போன நாகரீகமும் படிப்பும் கற்றுத் தந்திருக்கிறதே.

களை வெட்டி, நாற்று நட்டு, சித்தாள் வேலை பார்த்து, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எருமை மேய்த்து என்பதாய் உழைத்து உழைத்தே தேய்ந்து போன நிலையிலும், எண்பதுகளின் மத்தியிலும் யார் தயவும் இன்றி மைல் கணக்காய் நடக்கும் என் அம்மாயி "காட்டம்மா " குதிக் காலிட்டு குந்தியிருப்பதாகவே பட்டது எனக்கு. அவ்வளவு தத்ரூபம். இருபது நிமிடங்களாவது அந்தப் படத்தின் முன் நின்றிருப்பேன். கொஞ்சம் கட்டுப் படுத்த முடியாதபோது கழிப்பறைக்குள் சென்று ஒரு ஏழெட்டு சொட்டு அழுதுவிட்டுத்தான் வந்தேன் மேனகா.

ஒன்று சொல்ல வேண்டும் மேனகா, அந்தக் கிழவியின் சோகத்தில், முற்றாய் முழுதாய் சுரண்டப்பட்ட எங்கள் கிழவியின் வாழ்க்கையில் ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, அதுதான் உண்மை மேனகா. அது வர்ணமாய், வர்க்கமாய் விரிந்து பரந்து கிடக்கிறது . இந்த உண்மையும் அதற்குள் மிகக் கவனமாக தன்னை ஒளித்துக் கொண்டு தன்னைப் பாதுகாத்து வரும் அரசியலும் உங்களுக்குள் பிடிபட்டு உங்கள் விரல் வழி கசியும் போது மேனகாவின் படைப்புகள் இன்னுமும் மெருகு பெரும்.

அடுத்ததாய் ஒரு இரண்டு மைல் தொலைவை மிகத் தத்ரூபமாக வரைந்திருந்தார். மலைகளும், மரங்களும், கசியும் வெளிச்சமும் , மக்களும் , பறவைகளும் என்று மிகச் சரியான ஓவியம்.வெளிச்சத்தை சரியானபடி வித்தியாசப் படுத்தி காட்டி இருந்தது சொக்க வைத்தது. அதே போல கல்லை வெட்டி, சுமந்து, செதுக்கி சிலையாக்கியவனெல்லாம் இன்னமும் இரண்டு மூன்று மைல்களுக்கப்பால் நின்றுதான் தரிசனம் பெற முடியும் என்ற உண்மை தரும் கோவமும் மேனகா விரல் வழி ஓவியமாய் கசிய வேண்டும். இது நடக்கும் என்றே நம்புகிறேன்.

என் அம்மாயி பார்த்தால் இப்படித்தான் சொல்லும் "அச்சு அசலா என்ன மாதிரியே வரஞ்சிருக்காளே. என்ன எங்கடா பாத்தா இந்தக் குட்டி?" இதுதான் உங்கள் வெற்றி மேனகா


இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Sep 13, 2010 5:50 am

சிவா wrote:மிகவும் அருமையான கட்டுரையை வழங்கியுள்ளீர்கள் எட்வின்! ஓவியங்களை நீங்கள் வர்ணித்துள்ளதைப் படித்ததும் அந்த ஓவியங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டுள்ளது!
. வணக்கம் சிவா. வாங்கி வைத்து விடலாம் சிவா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 6:08 am

அன்பின் எட்வின்,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடன் அளவளாவியது போல் ஒரு அருமையான பகிர்வுப்பா.....

ஓவியத்தை ரசிக்கும் திறன் இருந்தாலே போதுமே.....

ஓவியம் வரை அறியனும் என்பது அவசியமே இல்லை.....

ஓவியத்தின் மேல் இருந்த ஈடுபாடும்... மேனகா மேடத்தின் ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றதும் காட்டம்மா அம்மாயின் உருவ அமைப்பைப்போலவே வரண்ட நிலத்தில் ஒரு நம்பிக்கையின் நிழலாய் அம்மாயியின் ஓவியம் யாரோ ஒருவரை மாடலாய் வைத்து வரைந்தாலும் பார்ப்போரின் மனதை உலுக்கும் விதமாய் ஒரு தாக்கம் ஏற்படுத்தும் விதமாய் அமையும் ஓவியம் அமைந்தது தான் நீங்க விட்ட சொட்டு கண்ணீர் விலைமதிக்க முடியாத பாராட்டு மேனகா மேடத்திற்கு கிடைத்த பாராட்டு....

அன்பு நன்றிகள் எட்வின் பகிர்வுக்கு....

எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? அசலு உன்னாரா மீரு இந்தியாலோ?





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓவியத்தில் கசியும் அரசியல் - Page 2 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Sep 13, 2010 6:24 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பின் எட்வின்,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடன் அளவளாவியது போல் ஒரு அருமையான பகிர்வுப்பா.....

ஓவியத்தை ரசிக்கும் திறன் இருந்தாலே போதுமே.....

ஓவியம் வரை அறியனும் என்பது அவசியமே இல்லை.....

ஓவியத்தின் மேல் இருந்த ஈடுபாடும்... மேனகா மேடத்தின் ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றதும் காட்டம்மா அம்மாயின் உருவ அமைப்பைப்போலவே வரண்ட நிலத்தில் ஒரு நம்பிக்கையின் நிழலாய் அம்மாயியின் ஓவியம் யாரோ ஒருவரை மாடலாய் வைத்து வரைந்தாலும் பார்ப்போரின் மனதை உலுக்கும் விதமாய் ஒரு தாக்கம் ஏற்படுத்தும் விதமாய் அமையும் ஓவியம் அமைந்தது தான் நீங்க விட்ட சொட்டு கண்ணீர் விலைமதிக்க முடியாத பாராட்டு மேனகா மேடத்திற்கு கிடைத்த பாராட்டு....

அன்பு நன்றிகள் எட்வின் பகிர்வுக்கு....

எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? அசலு உன்னாரா மீரு இந்தியாலோ?

. மிக்க நன்றி மஞ்சு.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக