புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
9 Posts - 82%
heezulia
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
1 Post - 9%
mruthun
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_m10ஆவியாய் இருந்து காத்த தாய். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவியாய் இருந்து காத்த தாய்.


   
   
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Fri Sep 03, 2010 8:24 pm

நான் மெதுவாக ஓரக்கண்ணால் பார்த்தேன். என்னைப் பெண் பார்க்க வந்தவர் எதிரில் ஒரு சேரில் உட்கார்ந்து இருந்தார். அவருடைய வலது பக்கத்தில் அவருடைய தந்தை உட்கார்ந்து இருந்தார்.

தந்தை மகனைப் பார்த்து "என்ன?" என்று தலை அசைத்ததையும் அதற்கு மகன் "சரி" என்பதை போல தலையாட்டியதையும் நான் பார்த்து விட்டேன். மனம் சந்தோஷத்தால் குதித்தது.

நான் வந்து பாயின் மீது உட்காரும் முன் அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது. "இரண்டாம் தாரம் என்று கவலைப்படாதே, பையன் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கிறான். வயது கூட 26 தான் ஆகிறது.

பையன் நல்ல வேலையில் இருக்கிறான். சொந்த வீடு, வசதி இருக்கிறது. முதல் தாரத்து பெண் குழந்தை 3 வயதே ஆனாலும் மிகவும் சூட்டிகையாக இருக்கிறாள். இந்த வரன் அமைந்தால் பெரிய விஷயம். நமது நிலைமை அப்படியிருக்கிறது. உன்னை அவர்களுக்குப் பிடிக்க வேண்டும் என்று சாமியை வேண்டிக்கொள்" என்று சொன்னாள்.

ஆறு மகன்களையும் ஆறு பெண்களையும் பெற்ற அவளுக்குத் தெரியும், ஒவ்வொரு மகளையும் கரையேற்ற அவள் பட்ட கஷ்டம். நாலாவது மகள் நான், எனக்கு கீழே இரண்டு தங்கைகள் இருந்தார்கள்.

என் குடும்பத்தை மாப்பிள்ளை வீட்டார்க்கு அறிமுகப்படுத்திய என் அத்தை கேட்டாள். "என்னங்க எங்க பெண்ணை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"

"எனக்கு பிடித்திருப்பது அப்புறம். முதலில் பெண்ணுக்கு என்னைப் பிடித்து இருக்கிறதா என்பதை முதலில் சொல்லட்டும். பிறகு நான் சொல்லுகிறேன்" மென்மையான குரலில் மாப்பிள்ளை சொன்னார்.

"என்னடி, உன்னைதான் கேட்கிறார், சொல்லேன்" என்றாள் அத்தை.

"உம்........ சரி, பிடித்திருக்கிறது." என்று சொல்வதற்குள் என்
உடம்பு வியர்த்து போய் விட்டது.

அன்றைக்கே நிச்சயார்த்த தேதி குறிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் கழித்து என் பெரிய அண்ணன் வந்தார். குதி,
குதியென்றுகுதித்தார்.அது எப்படி தங்கையை இரண்டாம் தாரமாகக் கொடுப்பீர்கள்? அதுவும் அந்த ஆள் நடவடிக்கைகள் சரியில்லை
என்று சொல்கிறார்கள். அதனால்தான் முதல் மனைவி தற்கொலை
செய்துக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். நிச்சயார்த்தத்தை
நிறுத்துங்கள். நான் வேறு இடம் பார்க்கிறேன்" என்றார்.

என் தந்தை மன கஷ்டத்துடன் மாப்பிள்ளை வீட்டிற்கு போய் கொஞ்சம் தள்ளி போடலாமா என்று கேட்டுக்கொண்டு வந்தார்.

இப்படியே நான்கு மாதங்கள் போய் விட்டன. என் மனக்கண்ணில்
அன்று அவர் தனது தந்தையை பார்த்து தலையாட்டியதே
மறுபடியும் மறுபடியும் வந்தது.

ஒரு நாள் ஆபிஸுக்கு ஒரு போன் வந்தது. நான் போனை
எடுத்து "ஹலோ" என்றேன்.


"நான் சந்தோஷ் பேசுகிறேன். சாயங்காலம் 5.30 மணிக்கு
உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சங்கீதாஹோட்டலில் சந்திக்க
முடியுமா? உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும்."
என்று அவர் கேட்டார்.

அதேப்போல ஹோட்டலில் உட்கார்ந்த பின் "உங்கள் வீட்டில்
என்ன பிரச்சனை?" என்று கேட்டார்.

"என்னுடைய அண்ணன்மார்கள் நீங்கள் கெட்டவர் என்றும்,
உங்கள் மனைவி தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்றும்
இந்த கல்யாணம் வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்" என்றேன்.

"நான் கெட்ட பழக்கங்கள் கொண்டவன்தான். ஆனால் என்
மனைவியின் சாவுக்கு நான் காரணம் இல்லை. அதுமாமியார்,
மருமகள் சண்டையால் ஏற்பட்டது. நான் உன்னை திருமணம்
செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய
வேண்டும் என்று நீ எதிர் பார்க்கிறாய்?" என்று கேட்டார் அவர்.

"நீங்கள் எல்லவற்றையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். மேலும் எனக்கு ஒருபிராமிஸ் பண்ண வேண்டும் என்னை தவிர வேறு பெண்ணை நீங்கள் தொடக்கூடாது." என்றேன்.

"சரி, அப்படியே ஆகட்டும். எனக்கு அந்தப்பழக்கம் இல்லை.
எனக்கு நீயும் ஒரு பிராமிஸ் பண்ண வேண்டும்.என் பெண்ணை
உன் மகளாக வளர்க்க வேண்டும்" என்றார்.

"இதில் உங்களுக்கு ஏன் சந்தேகம். பிருந்தா என் மகள்தான்.
நான் அப்பாவிடம் என் முடிவில் மாற்றமில்லைஎன்று பிடிவாதமாக சொல்லி விடுகிறேன்" என்று சொல்லி விடைப்பெற்றேன்.

வீட்டிற்கு போய் அப்பாவிடம் எல்லவற்றையும் சொல்லி, நான்
அவரைத்தான் கல்யாணம் செய்துக்கொள்வேன் என்று திட்ட
வட்டமாக சொல்லி விட்டேன்.

அன்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. வயதான ஒரு பெண்மணி
முகம் நிறைய் மஞ்சளும் குங்குமமாக கனவில் வந்தார்கள்.

"நீ சொன்னதை நிறைவேற்றினால், மீதியை நான் பார்த்துக்
கொள்கிறேன். செய்வாயா?"என்று என்னிடம் கேட்டார்கள்.

"நிச்சயம் செய்கிறேன் அம்மா, செய்கிறேன்." என்று நான்
சொல்கிறேன். விழித்துக்கொண்டேன்.

அடுத்த மூன்றாவது மாதம் ஒரு நல்ல நாளில் எங்கள்
திருமணம் நடந்தேறியது. திருமண சடங்குகள் எல்லாம் முடிந்து
நான் என் கணவர் வீட்டிற்கு சென்றேன். பெரிய விசாலமான அந்த
வீட்டில் இருந்த பூஜையறையில் என்னை விளக்கேற்ற
சொன்னார்கள்.

அங்கே அக்கா வேதவள்ளியின் உருவப்படம் பெரிய
மாலையுடன் இருந்தது. எல்லா சாமிகளுக்கும் தீபம்காட்டிவிட்டு
அந்த படத்திடம் வந்தேன்.

"அம்மா, எங்கள் குடும்பம் ஆனந்தமாக, நிம்மதியாக இருக்க
நீதான் உதவி செய்ய வேண்டும்" என்று வேண்டிக்கொண்டேன்.

"நிச்சயம்" என்று யாரோ சொல்லுவது போல இருந்தது.
சட்டென்று திரும்பி பார்த்தேன். பூஜையறையின்ஜன்னல் அருகே
இருந்து நிழல் போன்ற ஒரு உருவம் நகர்ந்து போவது தெரிந்தது.
பின்னால் நீண்டு அடர்த்தியாகஇருந்த பின்னல்தான் என் கண்ணுக்கு தெரிந்தது.

வருடங்கள் இரண்டு ஓடின. நான் கர்ப்பமானேன். கணவருக்கு மிகுந்த ஆனந்தம். "இந்த முறை நமக்கு பையன்தான்" என்றார்.

"ஆமாம். நமக்குத்தான் ஒரு பெண் ஏற்கனவே இருக்கிறாளே"
என்றேன் நான்.

ஒரு நாள் என்னுடைய மூத்த சகோதரி ஞானம் என் வீட்டிற்கு அவளுடைய 6 வயது பையனுடன் வந்தாள். அவள் ஒரு குறுகிய
புத்திக்காரி! வெகு சுலபமாக பொறாமை படக்கூடியவள்.

அவள் உள்ளே வந்ததும் வீட்டை முழுவதுமாக சுற்றிப்
பார்த்தாள். பார்க்கும் போதே "இவளுக்கு இந்தவாழ்வு வந்து
விட்டதே" என்று நினைப்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.
சுமார் மணி 6.30 இருக்கும். வெளியில் இருட்டிக்கொண்டு வந்தது.
நான் வாசல் விளக்கை போட்டு விட்டு வந்து ஞானத்தோடு ஊர்
கதை பேசிக் கொண்டு இருந்தேன்.

அப்போது பிருந்தா "அம்மா" என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடி வந்தாள். வந்த வேகத்தில் பாவாடைதடுக்கி என் மீது பொத்தென்று விழுந்தாள்.

நான் அவளை சரியாக பிடித்திராவிட்டால் அடிப்பட்டு
இருக்கும். என் அக்கா, பிருந்தவின் முதுகில் பட்டென்று அடித்தாள்.

"ஏண்டி சனியனே, அம்மா வயிற்றில் பாப்பா இருக்கிறது என்று உனக்கு தெரியாதா?" என்றாள்.

குழந்தை பிருந்தா ஒரு கணம் கண் கலங்கி விட்டாள். நான்
அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்.

"என்ன அக்கா, குழந்தையை அடித்து விட்டீர்கள்?" என்று
கேட்டேன்.

"நீ என்னடி அவளுக்கு வக்காலத்து வாங்குகிறாய்? உன்
வயிற்றில் பிறந்தகுழந்தை போல தாங்குகிறாயே? மூத்தாள்
குழந்தையை கொஞ்சம் தள்ளி வைத்து வளர்த்து வா. இல்லை
என்றால் பின்னால் உனக்கே வினையாகி விடுவாள்" என்றாள்
ஞானம்.

அப்போது வாசற்படி விளக்கு வெளிச்சத்தில் ஏதோ உருவம்
அசைவது போல நிழலாடியது. திரும்பிபார்த்தேன். எப்படி
சொல்வது என்றே தெரியவில்லை.வெள்ளையாடை அணிந்த
ஒரு பெண் தலையை விரித்து போட்டுக்கொண்டு வாசற்படியை
தாண்டிசென்று ஜன்னல் அருகே நிற்பதை கண்டேன். முதுகை
காட்டியப்படி நின்றுருந்த உருவம் சட்டென்றுதிரும்பி தன் முகத்தை காட்டியது. மிகவும் கோபமாக இருக்கும் ஒரு பெண்ணின் முகம்
தெரிந்தது.

விரலை உதட்டின் மீது வைத்து என்னை எச்சரித்தது. எனக்கு ஒன்றும்புரியவில்லை.

அந்த சமயம் பார்த்து அக்காவின் பையன் மதுசூதனன் 'அம்மா' என்று கூறிக்கொண்டு வெளியில்இருந்து ஓடி வந்தான். வேகமாக ஓடி வந்தவன் யாரோ பின்னால் இருந்து பிடித்து தள்ளினால் எப்படிகுப்புற விழுவானோ அதுபோலவாசற்படியை தாண்டி ஹாலில்
வந்து விழுந்தான். அவனின் தலைஎதிர்பக்கசுவரில் போய் மோதியது.

அக்கா ஓடிப் போய் அவனை தூக்கி நிறுத்தினாள். கை, கால்கள் எல்லாம் தேய்த்துக் கொண்டு இரத்தம் கசிந்தது. தலையிலும்
அடிப்பட்டு இரத்தம் வழிந்தது.

நான் ஜன்னலைப் பார்த்தேன். அந்த உருவம் சிரிப்போடு
என்னை பார்த்து விட்டு நகர்ந்து மறைந்தது.

பிருந்தாவை யாராவது துன்புறுத்தினால் இப்படிதான் நடக்கும் என்று என்னை எச்சரிப்பது போலஇருந்தது அதன் நடவடிக்கை!

அதற்கு பிறகு இரண்டு முறை பிருந்தா வந்து சொன்னாள்
"அம்மா, நம் வீட்டின் பின்னால் இருக்கும் சலவைக்கல் மீது ஒரு
பெண் உட்கார்ந்து தலைவாரிக் கொண்டு இருந்தாள். ஆனால் நான் கிட்டேபோனால் மறைந்து விட்டாள்".

பிருந்தாவின் அம்மாவின் ஆவி அங்கேயே இருந்து அவளை
பாதுகாக்கிறது என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் என்
கண்ணுக்கு மட்டும் மறுபடியும் தென்படவேயில்லை.

எனக்கு நல்லப்படியாக பிரசவம் ஆனது. அழகான ஒரு ஆண்
மகன் பிறந்தான். அவனுக்கு பிரசாந்த் என்று பெயர் வைத்தோம்.
அப்போது பிருந்தாவும் பள்ளிக்கு போய் கொண்டு இருந்தாள். அது
என்னவோ தெரியவில்லை. அக்காவும் தம்பியும் அவ்வளவு
ஒற்றுமையாக இருந்தார்கள். நாங்களும் அவர்கள்
விளையாடுவதை பார்த்து சந்தோஷப்படுவோம்.

இப்படியே வாழ்க்கை நிம்மதியாக ஓடியது. பையனும் வளர்ந்து இரண்டவது பிறந்த நாளையும்கொண்டாடி விட்டான்.

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி இருக்கும்.
பிருந்தாவும் பிரசாந்தும் வாசற்படியின் வெளியே ஏதோ
பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.

நான் மதிய சாப்பாட்டுக்காக காய்கறிகளை நறுக்கிக் கொண்டு இருந்தேன். தக்காளி கூடையை எடுத்துக்கொடுக்க பிருந்தாவை
கூப்பிட்டேன். அவளும் தம்பியை விட்டு விட்டு வந்து தக்காளிக்
கூடையை எடுத்துக்கொடுத்தாள். அப்படியே என் அருகில் அமர்ந்து நான் வெட்டி வைத்திருந்த வெள்ளரி துண்டுகளை எடுத்து
சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

திடீரென்று "அம்மா, என்னை யாரோ வெளியில் வரச்
சொல்லுகிறார்கள்" என்று சொல்லி விட்டு வெளியேஓடினாள்.

சற்று நேரத்தில் "அம்மா" என்ற பிருந்தாவின் அலறல் என்னை அதிர வைத்தது. நான் எழுந்து வெளியேஓடினேன்.

அங்கே கழிவு நீர் தேங்கி நிற்க ஒரு ஆழமான மூடியில்லாத தொட்டி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. பிருந்தாவும், பிரசாந்தும்
அதில் இருந்தார்கள். பிரசாந்தை பிருந்தா தூக்கி உயரப்பிடித்துக்
கொண்டுஇருந்தாள். நல்ல காலம், மூன்றடிதண்ணீரே இருந்ததால்
பிருந்தா மூழ்காமல் நின்றுக் கொண்டிருந்தாள்.

நான் முதலில் பிரசாந்தையும் பின்பு பிருந்தாவையும் தூக்கி வெளியே கொண்டு வந்தேன். இருவரையும் குளியறைக்கு
அழைத்து சென்று துணிகளை கழற்றி குளிப்பாட்டினேன்.

நல்லக்காலம்! யாருக்கும் எந்த விதமான அடியும் படவில்லை.

"என்னம்மா நடந்தது?" என்று பிருந்தாவை கேட்டேன்.

"யாரோ கூப்பிட்டார்கள் என்று ஓடினேனா, வெளியே போய்
பார்த்தால் பிரசாந்த் விளையாடிக் கொண்டிருந்த பந்தை
தொட்டியில் போட்டு விட்டு அதை எட்டி பிடிக்க முயற்சிபண்ணிக்கொண்டு இருந்தான். அப்படியே பொத்தென்றுஉள்ளே விழுந்து
விட்டான். நான் ஓடிப்போய்உள்ளே குதித்து அவனை தூக்கிக்
கொண்டேன். அப்புறம்தான் உங்களை கூப்பிட்டேன்." என்றாள்.

இருவருக்கும் வேறு ஆடை அணிவித்தேன். என் மனதில்
பிருந்தாவின் அம்மாவின் ஆவிதான் தகுந்தநேரத்தில் பிருந்தாவை கூப்பிட்டு என் பையனை காப்பாற்றியது என்பது நிச்சயமாக
தோன்றியது. பிருந்தா தகுந்த சமயத்தில்போய் அவனை தூக்கி
பிடித்திராவிட்டால் அவன் அந்த சாக்கடை நீரில் மூழ்கி
போயிருப்பான். நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது.

பூஜையறையில் ஊது பத்திகளை ஏற்றி வைத்து, இரண்டு
குழந்தைகளையும் வேதவள்ளி அக்காவின் படத்தின் முன்பு
நிற்க வைத்து கண்கள் கலங்க நின்று வணங்கினேன்.

"நீ என் குழந்தையை உன் குழந்தையாக வளர்க்கும் போது, உன் பையன் எனக்கும் பையன் அல்லவா?"என்று அவர்கள் சொல்லுவது போல தோன்றியது.

ஆவிகள் உலகம் - ஜூலை 2010.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக