புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
91 Posts - 67%
heezulia
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
3 Posts - 2%
prajai
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
2 Posts - 1%
Barushree
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
145 Posts - 74%
heezulia
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
8 Posts - 4%
prajai
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
3 Posts - 2%
Barushree
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
1 Post - 1%
nahoor
காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_m10காமன்வெல்த் - யாருடைய சொத்து? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் - யாருடைய சொத்து?

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat Sep 04, 2010 10:30 am

* நூறு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு குட்டி ரெஃப்ரிஜிரேட்டரை வெறும் ஆறாயிரம் ரூபாயில் விலைக்கு வாங்கிவிடுவது இந்தியாவில் சாத்தியம். அதிலும் தரமான, நல்ல பிராண்டட் அயிட்டமே வாங்க முடியும். அதே ரெஃப்ரிஜிரேட்டரை ஒன்றரை மாசத்துக்கு நீங்கள் வாடகைக்கு எடுத்தால், வாடகையாக 42 ஆயிரத்து 202 ரூபாய் கொடுப்பீர்களா?
* உயர்தரமான, நல்ல நிறுவனத்தின் தயாரிப்பான ஆபீஸ் நாற்காலி ஒன்றை ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கே வாங்கிவிடலாம். மொத்தமாக நூற்றுக்கணக்கில் வாங்குவதாக இருந்தால், அடித்து பேரம் பேசி விலையை இன்னும் குறைக்கலாம். அதே நாற்காலியை ஒன்றரை மாசத்துக்கு வாடகைக்கு எடுத்தால், நீங்கள் வாடகையாக எட்டாயிரம் ரூபாய் கொடுப்பீர்களா?
* உடற்பயிற்சி செய்ய உதவும் டிரெட்மில் இயந்திரம் சராசரியாக 60 ஆயிரம் ரூபாய் விலைக்குக் கிடைக்கிறது. மிஞ்சிப் போனால் ஒரு லட்சம் ரூபாய் இருக்கலாம். ஆனால் அதே டிரெட்மில்லை ஒன்றரை மாசத்துக்கு நீங்கள் வாடகைக்கு எடுக்க நேர்ந்தால், வாடகையாக 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்களா?
- என்ன இதெல்லாம் பகல் கொள்ளையாக இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். இந்தப் பட்டியல் இன்னும் நீள்கிறது. 40 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கே கிடைக்கிற தரமான ஏர்கண்டிஷனரை, நான்கு லட்சம் ரூபாய்க்கு 45 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். 500 ரூபாய் பெறாத குடைக்கு, வாடகை 6 ஆயிரத்து 308 ரூபாய்.
இப்படியான கொள்ளையை அடித்துவிட்டு, ‘எல்லாம் நியாயமாக நடந்திருக்கிறதுஎன்று நியாயப்படுத்துகிறார் காமன்வெல்த் போட்டிகளின் அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி. மக்கள் வரிப்பணத்தில் 11 ஆயிரத்து 494 கோடி ரூபாயை செலவிட்டு, டெல்லியில் காமன்வெல்த் போட்டிகளை நடத்துகிறார்கள். இவ்வளவு பெரிய விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்துவது இந்தியாவுக்கு கௌரவம் தரும் விஷயம்என்று ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் சொல்கின்றன. (காமன்வெல்த் என்பது பிரிட்டனின் முன்னாள் அடிமை தேசங்களின் அமைப்புஎன்பதையும், அந்த பழைய அடிமை தேசங்கள்தான் இந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பதையும், பிரிட்டன் மகாராணியின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டுதான் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது!)
இந்தியா போன்ற ஒரு தேசத்தில், இத்தனை கோடிகளை செலவிட்டு நடக்கும் ஒரு மெகா நிகழ்ச்சியில், ஊழலைத் தவிர்க்கமுடியாது என்பது உண்மை. ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரையிலான ஊழலை நாம் சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டோம். ஆனால் எல்லாவற்றையும் தாண்டிய அநியாயமாக, ஒரு பொருளின் விலையைவிட ஏழு மடங்கு முதல் பத்து மடங்கு அதிகத் தொகையை வாடகையாகத் தருவதற்கு டெண்டர் இறுதி செய்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே மிக மோசமான அரசியல்வாதிகூட கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு சாதனையை காமன்வெல்த் அமைப்புக்குழு நிகழ்த்தியிருக்கிறது. போதாக்குறைக்கு இந்த ஊழல் பேர்வழிகள், ‘காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை மத்திய ஊழல் தடுப்பு ஆணையக அதிகாரிகள் அடிக்கடி வந்து பார்வையிட்டு ஆய்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும்என்று வேறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படி கண்காணித்து, தேவையற்ற முட்டுக்கட்டைகளை ஊழல் தடுப்பு ஆணையம் போடுகிறதாம். கண்காணிப்பு அமைப்புகள் இருக்கும்போதே இப்படி; யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லை என்ற நிலை இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது! சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். போட்டி அமைப்புக் குழுவில் பாரதிய ஜனதா தலைவர்கள் சிலரும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதுதவிர, ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகள் சிலர்தான் போட்டி ஏற்பாடுகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பீகார் கால்நடைத் தீவன ஊழல், ராணுவ ஊழல்கள் போல இது அரசியல்வாதிகள் & அதிகாரிகள் கூட்டணியின் அடுத்த இன்னிங்க்ஸ்.
655 கோடி ரூபாயில் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டு, செலவு கிட்டத்தட்ட இரண்டு மடங்கைத் தொடுவது இந்தியாவில் மட்டுமே நடக்கும் விநோதம்.
காமன்வெல்த் போட்டிகளைக் காரணமாக வைத்து, டெல்லியில் பாலங்கள், கட்டிடங்கள் பல கட்டப்பட்டு வருகின்றன. புது ஸ்டேடியங்கள் உருவாகின்றன. சுற்றுலா தலங்களில் நவீன வசதிகள் செய்யப்படுகின்றன. இதற்காக டெல்லி மாநில அரசு தனியாக 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடுகிறது. ஆனால் இவற்றில் பல வேலைகள் திட்டமிட்டபடி முடியாமல் இருப்பதாகவும், முடிந்த வேலைகளும் தரமற்றவையாக இருப்பதாகவும் புகார்கள் இன்னொரு பக்கம் எழுந்துள்ளன. பளு தூக்கம் வீரர்களுக்கான ஸ்டேடியத்தை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கடந்த வாரம் திறந்து வைத்தார். அப்போது மழை பெய்ய, ஸ்டேடியத்தின் கூரையைத் தாண்டி மழைநீர் ஊற்றி, அமைச்சரே நனைந்துவிட்டார். இந்த லட்சணத்தில் இருக்கின்றன பணிகள். காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டுக் குழு, டெல்லி மாநகராட்சி, விளையாட்டு அமைச்சகம், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்... இப்படி போட்டிகளோடு தொடர்புடைய எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக குவிக்கப்படுகின்றன.
இந்த சூழ்நிலையில், போட்டி ஏற்பாடுகளை இப்படி ஊழல் நிழல் சூழ்ந்திருப்பது குறித்து கவலைப்படுவதாக காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகளான வெளிநாட்டினர் பலரும் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இது இந்தியாவுக்கு கௌரவம் தேடித்தரும் விஷயமா?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கேட்கும் அளவுக்கு வல்லரசு நாடாகிவிட்டோம் என்று பெருமைப்படுகிறோம்; சீனாவுக்கு போட்டியான பொருளாதார வல்லமை இருப்பதாக கம்பீரம் காட்டுகிறோம்; ஆனால், ஊழல் விளையாட்டுகளும் அலட்சிய தாமதங்களும் இல்லாமல் ஒரு சர்வதேச நிகழ்ச்சியை நம்மால் நடத்தமுடியாது என்பதை உலகத்துக்கே இப்போது உணர்த்திவிட்டோம்.
தேசத்துக்கு கௌரவம் தேடித் தருகிறோம் என்று செலவிட்ட இந்த 11 ஆயிரத்து 494 கோடியை பொது விநியோகத் திட்டத்துக்கு திருப்பி விட்டிருந்தாலாவது, குடோன்களில் மக்கி மண்ணாகிப்போன அரிசியும் கோதுமையும் ஏழைகள் வயிற்றுக்குப் போய் பட்டினிச் சாவுகளைக் குறைத்திருக்கும். இத்தனை கோடிகளை செலவிட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் ஊழல் பேர்வழிகளுக்கு கொள்ளை லாபம் கிடைத்திருக்கலாம். தேசத்துக்குக் கிடைக்கப்போவது என்ன? வெறும் கௌரவம் மட்டுமே! மாற்று ஜாதியில் காதலிக்கும் இளைஞர்களையும் பெண்களையும், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற கொலை செய்யும் வட மாநில காப்பஞ்சாயத்து ஆசாமிகளுக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என கோர்ட்டுகள் விதிக்கின்றன. காமன்வெல்த் கௌரவ பார்ட்டிகளுக்கு என்ன தண்டனை தருவது?

Nantre thennali

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக