புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_m10தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 4:35 pm

First topic message reminder :

தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! ரகுவுக்கு வயது 35. கண் மருத்துவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 12 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு அதன் பிறகு 5 ஆண்டுகளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கிளினிக் ஆரம்பித்து, சில மருத்துவமனைகளில் டியூட்டி டாக்டராக வேலை பார்த்துவிட்டவர்.

ஒரு கட்டத்தில் ‘‘இந்தக் காலத்துல எம்.பி.பி.எஸ்க்கு மதிப்பே இல்லை, டாக்டர் வேலைக்குப் போனா ஆயா கூட மதிக்க மாட்டேங்குது. சிறப்புப் பிரிவுல ஒரு டிப்ளமா இருந்தாதான் ஆச்சு...’’ இப்படிப் பல எண்ணக் குழப்பங்களுடன் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, சென்னைக்கு வந்தார். கண் மருத்துவத்தில் டிப்ளமா வாங்கினார்.

கண் மருத்துவராகி 5 ஆண்டுகள் முடிந்தாயிற்று. இந்த 5 ஆண்டுகளில் பிரபல கண் மருத்துவமனையில் 3 மாதங்கள் வேலை பார்த்து விட்டு, பிறகு சொந்த ஊருக்குச் சென்று கிளினிக் ஆரம்பித்து, அதுவும் சரியாக ஓடாததால் 6 மாதங்களில் மூடிவிட்டு, பாண்டிச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

சேர்ந்து 6 மாதங்களாகியும் சம்பளம் வரவில்லை. கேட்டால் ‘இந்த வருடம் எம்.பி.பி.எஸ்க்கு பசங்க அவ்வளவா சேரலை. நிர்வாகமே கஷ்டப்படுது. செட்டில் பண்ணிடுவாங்க’ என ஒவ்வொரு மாதமும் கல்லூரி டீன் ரகுவை சமாதானப்படுத்தி வைத்திருந்தார். 6 மாதங்கள் கடனில் வாழ்க்கை ஓடியது. பிறகு அந்த வேலையையும் ராஜினாமா செய்தார். அங்கேயே ஒரு கிராமத்தில் ஒரு மருந்துக் கடைக்காரர் இலவசமாக ரூம் கொடுத்து, ‘வர்ற ஃபீசை நீங்க எடுத்துக்கோங்க. உங்களால ஏதோ தினம் நூறு, இருநூறுக்கு மருந்து ஓடுச்சுன்னா போதும்’ என வரவேற்க, ஒருவழியாக அதற்கு சம்மதித்தார்.

கண் மருத்துவர் என்றாலும், சின்ன கிராமம் என்பதால், பொது மருத்துவம்தான் பார்த்தார். தினம் 2, 3 நோயாளிகள் வருவார்கள். தான் வைத்திருக்கும் பாட்டிலில் இருந்து மருந்தை எடுத்து ஒரு ஊசியும் போட்டால்தான் 20 ரூபாய் கட்டணம் கிடைக்கும். சென்னையில் அந்தப் பிரபல கண் மருத்துவமனையில் ஏசி அறையில் ஆறு மணி நேரத்தை ஓட்டிவிட்டு, மாதம் 15 ஆயிரம் சம்பளம் வாங்கியது ஞாபகம் வந்தது ரகுவுக்கு. ‘ச்சே... அங்கயே தொடர்ந்து இருந்திருந்தா, இந்நேரம் சம்பளம் டபுள் ஆகியிருக்கும். நிறைய கத்துக்கிட்டும் இருக்கலாம்.

இப்ப பத்துக்கும், இருபதுக்கும் அல்லாட வேண்டியிருக்கே...’ என நொந்து கொண்டார். அந்த நேரம் அவரது அப்பா கிராமத்திலிருந்து ஃபோன் செய்து, அரசாங்க வேலைக்கு ஆர்டர் வந்திருப்பதாகச் சொன்னார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதம் 10 ஆயிரம் சம்பளத்தில் வேலை. 3 ஆண்டுகளில் பணி நிரந்தரமாகும் எனத் தெரிந்து அதில் சேர்ந்தார். ரகு கண் சிறப்பு மருத்துவர் என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு அறிவித்த ஏதோவொரு புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு நாளும், ஒரு ஊர், தினம் பத்து கண்புரை ஆபரேஷன் என 3 மாதங்கள் ஓடியது.

இதற்கிடையில் பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்த, ‘மாசம் 15 ஆயிரம் சம்பளம். பெட்ரோலுக்கே நாலாயிரம் போகுது. செட்டிலான பிறகுதான் கல்யாணம்’ என சாக்கு சொல்லி மறுத்தார். அப்போதுதான் சனி, நண்பன் ரூபத்தில் ரகுவுக்கு வந்தது. ‘டேய்... இன்னிக்கு கவர்மென்ட் வேலை வேஸ்ட்டுடா. எந்த பெனிபிட்டும் கிடையாது. சர்வீஸ் முடியற வரைக்கும் சம்பாதிக்கிறதை மூணு வருஷத்துல சம்பாதிச்சிட்டு செட்டிலாயிடலாம்’ எனச் சொல்லி, மாலத்தீவில் மாதம் 80 ஆயிரம் சம்பள வேலைக்குப் போக மனதை மாற்றினார். போன பிறகு மாதச் சம்பளம் 40 ஆயிரம் என்றும் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகே ஊதிய உயர்வு என்றும், ஒரிஜினல் சான்றிதழ்கள் கொடுக்கப்பட வேண்டும் என ஏகப்பட்ட விதிமுறைகள். ஒரு வார அவகாச யோசிப்பில் ரகுவுக்கு எல்லாமே நெகட்டிவாக தெரிந்தது.

‘ஏண்டா எனக்கு மட்டும் இப்படியாகுது? எம்.பி.பி.எஸ் படிச்சிட்டு என் கிளாஸ்மேட்ஸ் எல்லாம் தனியா ஹாஸ்பிட்டலே கட்டி சம்பாதிக்கிறானுங்க. நான் இவ்ளோ அறிவாளியா இருந்தும் ஏன் இப்படி..’ எனக் குழம்பி, குற்ற உணர்ச்சி அதிகமாகி, தூக்கு போட்டுக் கொள்ளப் போய், காப்பாற்றப் பட்டார். மீண்டும் இந்தியா. என் கல்லூரித் தோழன், ரகுவின் கிளாஸ்மேட் என்பதால் அவன் மூலம் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார் ரகு. ரகுவுக்கு இப்போது இருக்கும் மனநிலையின் பெயர் ‘டபுள் டிப்ரஷன்’. அதாவது ரகுவின் கடந்த 12 ஆண்டுகால வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்க்கையில், எதிலும் முடிவெடுக்க முடியாத, நிலையற்ற தன்மை, திடீர், திடீரென முடிவெடுப்பது, மிதமான மனச்சோர்வு, அடிக்கடி வரும் குழப்ப மனநிலை போன்றவை அவருக்கு டிஸ்தைமியா எனப்படும் நீண்டகால மிதமான மனச்சோர்வு நோய் இருந்திருப்பதைக் காட்டியது. இதுதான் அவரது அடிப்படை நோய்.

அடுத்தடுத்து வரிசையாக தோல்விகள் வர, தீவிர மனச் சோர்வும் சேர்ந்து, தற்கொலை முயற்சி வரை கொண்டு வந்திருக்கிறது. டிஸ்தைமியாவும், தீவிர மனச்சோர்வும் சேர்ந்து வருவதைத்தான் இரட்டை மனச்சோர்வு நோய் என்கிறோம். ரகு இன்னமும் தற்கொலை எண்ணத்திலேயே இருந்ததால் மின் அதிர்வு சிகிச்சை கொடுக்கப்பட, ஒரே வாரத்தில் சரியானார். அடுத்து டிஸ்தைமியாவுக்கான சிகிச்சை. ஒரே ஒரு கோதுமை சைஸ் மாத்திரை மற்றும் சைக்கோதெரபி இரண்டும் சேர்ந்ததுதான் சிகிச்சை. 2 வருடங்களுக்குத் தர வேண்டும். நன்றாக ஆகிவிட்டதாக இடையில் நிறுத்தக் கூடாது. மீண்டும் இரட்டை மனச்சோர்வு வரும் என ரகுவுக்கு அறிவுறுத்தினேன்.

‘‘டாக்டர் எனக்கு மனநல சிகிச்சைலதான் ஆர்வம். என்னவோ கண் மருத்துவம் எடுத்துட்டேன்’’ என நொந்து கொண்டார். இந்தப் புலம்பல்தான் டிஸ்தைமியாவின் முக்கிய அறிகுறி. வெற்றி, தோல்வி என்பது தனி மனிதரின் திறமை, ஆளுமை, விசாலப் பார்வை ஆகியவற்றில்தான் இருக்கிறதே தவிர, படிப்பிலும், பட்டங்களிலும் இல்லை என ரகுவுக்கு சைக்கோதெரபி செஷன்களில் விளக்கப்பட்டன. இன்னும் சில தினங்களில் ரகுவிடம் முழு மாற்றத்தைப் பார்க்க முடியும் என்பது மட்டும் உறுதி.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 5:46 pm

சிவா wrote:இவருக்கு திறமைகள் இருந்தும் ஏனிந்த நிலை.. அதிஷ்டம் என்பது உண்மைதானா?
மன நோய்.......இருப்பதை வைத்து சந்தோசம் கொள்ள தெரியாதவர்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 5:48 pm

சிவா wrote:வெயிலில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்:

வெளியில போகாதீங்க! ஏசியிலேயே இருங்க!
தினமும் பயத்தம் மாவு போட்டு குளிங்க!
தினசரி இளநீர் மற்றும் பார்லி குடிக்க மறந்திடாதீங்க!
ஆட்டிறைச்சி மற்றும் காரம் வேண்டாம்!
இரவு முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு படுக்கவும்.

வெயில் அதிகமா இருக்கு கொஞ்சமா பார்லி தண்ணி குடிசுகிறேன்னு சொன்னேன் என் மனைவி சண்டைக்கு வராங்க ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 5:49 pm

பார்லிக்கு சண்டையா? இருக்கவே இருக்காது. எதோ உள்குத்து இருக்கு!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 5:51 pm

நிலாசகி wrote:
சிவா wrote:இவருக்கு திறமைகள் இருந்தும் ஏனிந்த நிலை.. அதிஷ்டம் என்பது உண்மைதானா?
மன நோய்.......இருப்பதை வைத்து சந்தோசம் கொள்ள தெரியாதவர்கள்

எல்லோரும் அப்படி இருப்பதில்லையே நிலாசகி ,

நான் கூட சென்னையில் இருந்தபோது அப்படி நினைதுருக்கேன் , என் கூட படித்தவர்கள் எல்லாம் நல்ல வேளையில் இருக்கிறார்கள் நான் மட்டும் இவ்வளவு அறிவு இருந்தும் சொற்ப சம்பளத்தில் வேலை செய்கிறேனே என்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 5:52 pm

இவ்வளவு அறிவு இருந்தும்......நோட் தி பாய்ண்ட்!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 5:52 pm

சிவா wrote:பார்லிக்கு சண்டையா? இருக்கவே இருக்காது. எதோ உள்குத்து இருக்கு!!!

அண்ணிக்கு பார்ல தண்ணி அடிக்கிறீங்க என்று புாிஞ்சிருக்கும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 5:54 pm

சிவா wrote:பார்லிக்கு சண்டையா? இருக்கவே இருக்காது. எதோ உள்குத்து இருக்கு!!!

ஆமா தல , பார்லி தண்ணி தான் ,

[You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 5:55 pm

நீங்க அண்ணிகிட்ட அடிவாங்காம தப்பிச்சு வந்ததே பெரிய விஷயம் தல!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 5:55 pm

சிவா wrote:இவ்வளவு அறிவு இருந்தும்......நோட் தி பாய்ண்ட்!

ஐயோ தல
அது சும்மா ஜுஜுபி
ஒரு rhyminga இருக்கட்டுமேன்னு சொன்னேன்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 5:55 pm

Kraja29 wrote:
நிலாசகி wrote:
சிவா wrote:இவருக்கு திறமைகள் இருந்தும் ஏனிந்த நிலை.. அதிஷ்டம் என்பது உண்மைதானா?
மன நோய்.......இருப்பதை வைத்து சந்தோசம் கொள்ள தெரியாதவர்கள்

எல்லோரும் அப்படி இருப்பதில்லையே நிலாசகி ,

நான் கூட சென்னையில் இருந்தபோது அப்படி நினைதுருக்கேன் , என் கூட படித்தவர்கள் எல்லாம் நல்ல வேளையில் இருக்கிறார்கள் நான் மட்டும் இவ்வளவு அறிவு இருந்தும் சொற்ப சம்பளத்தில் வேலை செய்கிறேனே என்று.
உங்களால் அவர்களை விட முன்னேறும் சக்தி இருந்தால் அவர்களுடன் ஒப்பிடுங்கள்...இல்லாவிட்டால் கண்டுகொள்ளாதிங்க ...........உங்களுக்கு ஆண்டவன் கொடுத்த சந்தோஷத்தையும் நிம்மதியையும் அவர்களிடம் குறைவாக இருக்கலாம்........

அறிவுள்ளவர்களுக்கு ஒரு காலம் வரும்........

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக