புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
96 Posts - 69%
heezulia
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 4%
viyasan
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
18 Posts - 3%
prajai
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_m10வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 4:19 am

வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் 163Priview_vedigundu

தினமலர் விமர்சனம்

ராஜபாளையம் கடைத்தெருவில் கைவண்டி வைத்துக் கொண்டு கடைக்கு கடை குடிதண்ணீர் பிடித்து சப்ளை செய்யும் பசுபதி, அவ்வப்போது பொதுமக்களுக்கு சேவை செய்கிறேன் பேர்வழி... என போலீசில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்குகிறார். அவருக்கும் அந்த ஊர் ‌போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிதாக வரும் பெண் காவலர் ஜோதிர்மயிக்கும் இடையில் காதல்! இந்த காதலையும், அது சார்பான கலாட்டாக்களையும் எவ்வளவு கலகலப்பாக சொல்ல முடியுமோ அவ்வளவு கலகலப்பாகவும், காமெடியாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மூர்த்தி!

வெடிகுண்டு முருகேசனாக பசுபதி வெளுத்து வாங்கி இருக்கிறார். அவர் அவரது பெயர் காரணம் கூறுவதில் ஆரம்பித்து படம் முழுக்க காலை தாங்கி தாங்கி நடந்தபடி செய்யும் சேட்டைகள் சுவாரஸ்யம். மேக்கப் இல்லாத பசுபதி ஜோதிர்மயியுடன் ஆட்டம் - பாட்டம் என படம் முழுக்க கலாட்டா செய்திருப்பது மேலும் காமெடி.

பெண் காவலர் நாச்சியாராக பந்தோபஸ்துக்கும், பசுபதியுடன் பாதுகாப்பாக கோர்ட்டுக்கும் வரும் போதெல்லாம் அழும் பெண் காவலராக ஜோதிர்மயி, சும்மா தூள் ஆயி1

வில்லன் லோசுகர் கணேசனாக வீராவும், அவரது தம்பி கொடாஞ்சானாக ரனீஷூம், உஷ்ஷ் ஆக ஜார்ஜ்.. இவர்களுடன் டி.பி.கஜேந்திரன், பாவா லெட்சுமணன் ஆகியோரும் காமெடி கலாட்டா புரிந்திருக்கின்றனர் என்றாலும் அலாட் ஆறுமுகமாக வந்து அலறடிக்கும் வடிவேலு காமெடி காட்சிகள் முன் பசுபதி முதல் பாவா லெட்சுமணன் வரை சகலரும் ஜகா வாங்கி காணாமல் போகின்றனர் என்றால் மிகையல்ல! சபாஷ் ‌வெடி சாரி.. வடிவேலு!

பசுபதியின் பள்ளித் தோழி பொன்னியாக படம் முழுக்க மனநிலை பாதிக்கப்பட்ட கேரக்டரில் வரும் தீபா சில இடங்களில் ஐயோ பாவம் எனும் எண்ணத்தை கிளப்பினாலும், பல இடங்களில் செம கோபத்தையும் கிளப்புகிறார். இயக்குனர் மூர்த்தியும், படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்தும் நினைத்திருந்தால் இந்த அவர்ஷனை குறைத்திருக்கலாம்!.

எம்.எஸ்.பாலபரணியின் ஒளிப்பதிவும், தினாவின் இசையும் படத்தை நம் மனதில் பசை போட்டு ஒட்ட வைக்கிறது. கருப்பசாமி குத்தகைதாரர் படம் மூலம் நடிகர் கரணுக்கு ஒரு இடத்தை பிடித்துக் கொடுத்த இயக்குனர் மூர்த்தி, தனது இரண்டாவது படமான வெடிகுண்டு முருகேசன் மூலம் பசுபதிக்காக பாடுபட்டிருக்கிறார். அதில் பாதி வெற்றி.. மீதி...?!

வெடிகுண்டு முருகேசன் : காமெடி கதிரேசன்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 4:20 am

விகடன் விமர்சனம்

சிறு வயதில் குண்டாக இருந்ததால் குண்டு முருகேசன் என்று எல்லோரும் கூப்பிட அவமானமாகிவிடுகிறது முருகேசனுக்கு. குண்டுக்கு முன்னால் ஏதாவது சேர்த்தால் கெத்தாக இருக்குமே என தானாக சேர்த்துக் கொண்ட அடைமொழிதான் வெடிகுண்டு முருகேசன். கடைகளுக்கு தள்ளுவண்டியில் தண்ணீர் சப்ளை செய்யும் முருசேன். குடித்து விட்டு வண்டி ஓட்டுவது தொடங்கி கவர்ன்மென்ட் பஸ்ஸை கடத்துவது வரை அடிக்கும் லூட்டிகளால் அவ்வப்போது போலீஸின் சிறப்பு விருந்தாளியாகிறார். அலப்பறை முருகேசனுக்குள் இருக்கும் ஈர மனசுக்கு சாட்சியாக வருகிறாள் பொன்னி. சிறு வயது பள்ளி தோழியாகிய பொன்னி ஒரு மன நோயாளி. அவளை அவளது குடும்பமே கொன்றுவிட தீர்மானிக்கும் சூழலில், பொன்னியை காப்பாற்றி தன்னுடனேயே அழைத்துக்கொண்டு திரிகிறார். பொன்னியை வில்லன் குறிவைக்க.... பசுபதி அவரை துரத்த... அதன் பிறகு நடக்கும் சேஸிங் எபிசோட்... மீதி குண்டு.

எந்த ஹீரோயிசமும் இல்லாமல் மடித்து கட்டிய கைலியோடு கடைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் பாத்திரத்தில் இயல்பாக பொருந்துகிறார் பசுபதி. இப்பப் பாட்டு போடுவாய்ங்க... டான்ஸ் வேற ஆடணுமா? என்று அப்பாவியாக யோசிக்கும்போது கிளாப்ஸ் அள்ளுகிறார். இவர் வழக்குகளில் மாட்டும் போதெல்லாம் அதை வைத்து குழப்ப குத்து குத்துவதெல்லாம் ஓ.கே.,தான். ஆனால், படத்தின் முன்பாதி முழுக்க பசுபதி பேசுகிறார். பேசுகிறார், பேசிக்கொண்டே இருக்கிறார்.

லூஸூப் பொண்ணு கான்ஸ்டபிளாக ஜோதிர்மயி பல காட்சிகளில் அப்படியே லைலாவை இமிடேட் செய்திருக்கிறார். பசுபதி சிறைக்கு போன பிறகு மனநோயாளியான பொன்னியை வைத்து காப்பாற்றும் காட்சியில் நெகிழ வைக்கிறார். ஆனால், சில சமயங்களில் லூஸூப்பொண்ணாகவும், சில சமயங்களில் முதிர்ச்சியாகவும் வருவதால் ஜோதிர்மயியின் பாத்திரம் நம்மை குழப்புகிறது. பசுபதியை கை விலங்குடன் அழைத்து செல்லும்போது, பாத்ரூம் போவதற்காக கைவிலங்கோடு பசுபதியை டிரான்ஸ்பார்மரில் கட்டிவிட்டு போக அந்த நேரம் பார்த்து பசுபதிக்கு வலிப்பு வர, கூட்டமே ஜோதிர்மயியை வசைபாடும்போது ஜோர் மயி.

நீண்ட நாட்களுக்கு பிறகு காமெடியில் கலக்கி இருக்கிறார் வடிவேலு. காணாமல் போன மாட்டை கண்டுபிடிக்க முத்துக்காளை பீப்பி ஊத, பக்கத்தில் துண்டு விரித்து கல்லா கட்டும் அறிமுகக் காட்சியே அசத்தல். ஹோட்டலில் சாப்பிடும்போது மொத்தக் கண்களும் வடிவேலுவை கண்காணிக்க, அசால்ட்டாக லைட்டை ஆப் செய்து எஸ்கேப் ஆகும் காட்சி, பசுபதியோடு ஹோட்டலுக்கு போய் முறைத்து கொண்டே சாப்பிடும் காட்சி என எல்லாமே கைத்தட்டல் ரகம்.

வில்லன்னா என்டர்டெயின்மென்ட் இருக்கக்கூடாதா? என்று எப்.எம்.மில் நேயர் விருப்பம் கேட்கும் வில்லன் வீரா அசத்தல் அறிமுகம். ஆனால் இவர் வில்லனா, காமெடியனா என புரியாத அளவுக்கு எதிர்பாராத நேரங்களில் எல்லாம் காமெடி குருமா ஊத்துக்கிறார்கள். மனநோயாளி பெண்ணாக வரும் தீபாவும் பெரிதாக ஈர்க்கவில்லை. இரண்டே காட்சிகளில் வந்தாலும் நீ கொடுக்கிற சம்பளத்துக்கு பில்டப்தான் கொடுக்க முடியும் என்று காலை வாரும் காமெடி அடியாள் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் சூப்பர்குட் லட்சுமணன்.

தினாவின் இசையில் ரோட்டோரம் வீட்டுக்காரி ஆட வைக்கிறது என்றால், நீண்ட ‌தூரம் செல்லும் பாதை மயிலிறகு மெலடி. சின்னச் சின்னதாக சினிமாத் தனங்களை கலாய்க்கும் காட்சியில் இயக்குனர் ஏ.ஜி.மூர்த்தியின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் திருந்துவதை இன்னும் நக்கல் அடித்திருக்கலாம். மொத்த படத்திலும் கைத்தட்டல் வாங்கும் காட்சிகளில் கூட ஒரு பெர்பெக்ஷன் இல்லை. அவ்வப்போது பசுபதி இலக்கிய, அரசியல் சிறுபத்திரிகைகளை வைத்துக்கொண்டு திரிவது ஏன் என்றும் தெரியவில்லை.

சினிமாத் தனங்களை கிண்டலடிக்கும் இயக்குனர் மனநோயாளி பெண்ணை பசுபதி அழைத்து செல்லும் காட்சியில் முழு சினிமாத் தனத்தை அனுமதித்தது ஏனோ? சில லாஜிக் மீறல்கள். வளவள வசனங்கள், கருத்துக் குத்துகள், அழுவாச்சி செண்டிமென்ட்கள், சீரற்ற திரைக்கதை இவற்றையெல்லாம் சரி செய்திருந்தால், வெடிகுண்டு முருகேசன் இன்னும் கொஞ்சம் வீரியமாக வெடித்திருப்பான்.

விகடன் மார்க் : 39/100

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 4:21 am

வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Vedigundu-Murugesan-3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 4:22 am

வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Pasupathi_jyothirmayi_0016-300x298

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 4:23 am

வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் 2h5o4xs

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 4:23 am

வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் 83491fb2-f505-43d6-95dc-24a2bdf700311

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 4:24 am

வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் Vedigundu_murugesan_1_44200860805123

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 4:24 am

வெடிகுண்டு முருகேசன் - திரை விமர்சனம் 6271B_vedi04

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக