புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண் - Anatomy  I_vote_lcapகண் - Anatomy  I_voting_barகண் - Anatomy  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் - Anatomy


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 2:32 am

கண் என்பது நம் பார்வைக்கான உறுப்பு. இது மண்டையோட்டில் கருக்கோளக் குழிக்குள் அமைந்துள்ளது. கண் புருவங்கள் கண்ணிற்கு நிழலை அளிக்கின்றன. மேலும் இவை வியர்வை கண்ணுக்குள் சென்று எரிச்சலை ஏற்படுத்தாதவாறு தடுக்கின்றன. கண் இமைகளும், இமை முடிகளும் கண்ணுக்குள் தூசி எதுவும் விழாமல் தடுக்கின்றன. கண் இமைக்கு செயலால் கண்ணீர் கண்ணின் மேல் பகுதியில் பரவி உராய்வு தடுக்கப்படுகிறது. இந்த கண்ணீர் உராய்வினை மட்டும் தடுக்கவில்லை, இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளை கொள்ளும் நொதிகளும் உப்புகளும் உள்ளன.

கண் - Anatomy  Eye-anatormy

கண் என்பது இரண்டு திரவங்கள் நிரப்பட்ட ஒரு கோளம் ஆகும். ஆறுதசைகள் அதை இயக்குகின்றன. அவை குறுக்கும் சாய்வுமான தசைகள். கண்ணின் சுவர் மூன்று அடுக்குகளால் ஆனது. வெளிப்பகுதி விழிவெண்படலம்(ஸ்கிளீரா) என அழைக்கப்படுகிறது. இது வெள்ளை நிறத்தினால் ஆனது. இதனாலேயே நம் கண் வெண்மையாக காணப்படுகிறது. கார்னியா அல்லது கருவிழி எனப்படுவது இதன் ஒளி ஊடுருவும் தன்மையுள்ள முன்பகுதியாகும். இரண்டாவது அடுக்கு காராய்டு ஆகும். இதில் பல இரத்தக் குழாய்களும் நிறமிகளும் அடங்கியுள்ளன. இது கருப்பு நிறத்தில் ஒளி ஊடுருவாத தன்மையுடன் இருக்கும். மூன்றாவது மற்றும் உள்பக்க அடுக்கான சிலியரி தசை பகுதியில் பல மென் தசைகள் லென்சை ஒரு நிலையில் தாங்கி பிடித்துள்ளன. விழித்திரைப் படலம் என்பது பாவையை சுற்றி அமைந்துள்ள நிறமுள்ள தசையாகும். இது பாவைக்குள் நுழையும் ஒளியின் விட்ட அளவை கட்டுப்படுத்தும். நாம் இருட்டறைக்குள் செல்லும்போது இது திறந்து அதிக வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கிறது. பலமான சூரிய ஒளியில் நாம் இருக்கும்போது சுருங்கி வெளிச்சத்த குறைக்கிறது.

கண்ணின் உள்பக்கம் இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முன்பக்க அறையில் அக்யூவஸ் ஹியூமர் என்னும் திரவம் உள்ளது. இது ஒளியை விலகச் செய்கிறது, கண்ணுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது, மேலும் கண்ணுக்குள் உள்ள அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இது சிலியரி தசையால் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்பக்க அறையில் விட்ரியஸ் ஹியூமர் என்னும் திரவம் உள்ளது. இதுவும் கண்ணுக்குள் உள்ள அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, ஒளியை விலகச் செய்கிறது, மேலும் ரெடினாவையும் லென்சையும் தாங்குகிறது. ரெடினா என்பது கண்ணின் உட்பக்க அடுக்காகும் இதில் ஒளி உணர் செல்கள் உள்ளன. இதில் உள்ள நிறமிகள் அடுக்கு ஒளி திரும்ப பிரதிபலிக்காதவாறு பார்த்துக்கொள்கின்றன.

இந்த ரெடினாவில் கூம்புகள் மற்றும் குச்சிகள் எனப்படும் நரம்பு செல்களின் அடுக்கு உள்ளது. குச்சிகள் மங்கால வெளிச்சத்திற்கும், கூம்புகள் நிறங்களை கண்டறியவும் பயன்படுகின்றன. இந்த கூம்புகளின் கலவையாலேயே நம்மால் அனைத்து நிறங்களையும் கண்டறிய முடிகிறது. இந்த செல்கள் இணைந்து ஆப்டிக் எனப்படும் பார்வை நரம்பை உண்டாக்குகின்றன. இந்நரம்பு மண்டையோட்டின் கருக்கோள குழியில் பின்புறத்தில் உள்ள ஒரு துளைவழியாக மூளையின் பின் பக்கமாக சென்று மூளையுடன் இணைகின்றன.ரெடினாவின் மையத்தில் ஒரு மஞ்சள் நிறப் புள்ளி உள்ளது. அதன் மையத்தில் உள்ள பள்ளம் ஃபோவியா செண்ட்ராலிஸ் என அழைக்கப்படுகிறது இந்த இடமே கூர்மையான பார்வையை உண்டாக்கும் இடமாகும். அதற்கு பக்த்தில் ஆப்டிக் நரம்பு செல்கிறது. ரெடினாவை உற்பத்தி செய்ய விட்டமின் ஏ தேவை. இதனாலேயே விட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. அவர்களால் வெளிச்சம் குறைவான நேரத்தில் பார்க்க முடியாது.



கண் - Anatomy  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 2:35 am

கண்ணின்றன்னமைவு - Accommodation

இளைஞர்களுக்கு லென்ஸ் உறுதியான ஒளி ஊடுருவும் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். லென்ஸ் தளர்ந்த நிலையில் இருக்கும்போது அது ஏறக்குறைய கோளவடிவில் இருக்கும். படத்தில் காண்பித்துள்ளவாரூ சுமார் 70 நிலைநிறுத்தும் தசைநார்கள் லென்சை கருக்கோளத்திற்க்கு சற்று வெளியே நிற்கும்படி பிடித்துக் கொள்கின்றன. மேலும் பல தசைநார்களும் சிலியரி தசைகளும் லென்சை சரியான நிலையில் நிலைநிறுத்துகின்றன.

கண் - Anatomy  Accomadation

கண்பார்வை:

கண் - Anatomy  Mechanism-of-vision

ஒரு பொருளின் மீது படும் ஒளி பிரபதிலிக்கப்படுகிறது. இந்த ஒளி கண்ணில் லென்ஸ் வழியே ஊடுருவிச் சென்று ரெடினாவில் (விழித்திரை) தலைகீழ் பிம்பமாக விழுகிறது. பின் அது நரம்பு வழியே செய்திகளாக மூளைக்கு செல்கிறது. மூளை அந்த பொருளை பார்த்து உணர்கிறது.



கண் - Anatomy  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 2:45 am

கண் ஒரு கேமரா:

கண் - Anatomy  Iris
கண் ஒரு ஒளிப்படக்கலை கேமரா போலவே செயல்படுகிறது. இதில் ஒரு லென்ஸ் அமைப்பு உள்ளது. துளை (பாவை) உள்ளது. மேலும் ஃபிலிமாக ரெடினா செயல்படுகிறது.

மேலே படத்தில் படம் 1-ல் பாவை துளை சிறியதாக உள்ளது படம் 2-ல் பாவை துளை பெரியதாக உள்ளது. இரண்டு படங்களிலும் கண்களுக்கு முன்னால் இரண்டு சிறிய ஒளி மூலங்கள் உள்ளன. அந்த ஒளி பாவை துளை வழியே சென்று ரெடினாவில் விழுகிறது. இரண்டு படங்களிலும் ரெடினா மிகச்சரியான குவியத்தில் பார்க்கிறது. படம் 1ல் ரெடினா முன்னே அல்லது பின்னே நகர்ந்தால் அளவில் பெரிதான மாறுபாடு ஏற்படாது. ஆனால் படம் 2ல் ரெடினா நகர்ந்தால், அளவு அதிகரித்து ஒரு மங்கலான வட்டமாகி விடும். அதாவது முதல் படத்தில் இரண்டாவது படத்தை விட ஆழமான குவியம் உள்ளது. இதன் காரணத்திலாயே படம் 1ல் பாவைத் துளை சிறியதாகவும் படம் 2ல் பாவைத் துளை பெரியதாகவும் உள்ளது.


பார்வைக் கூர்மை



மனித கண்ணிற்கான சாதாரண பார்வை திறனை கண்டறிய ஸ்னெல்லன் சார்ட் (படத்தை பார்க்க) பயன்படுகிறது.


கண் - Anatomy  Snellen_chart

இதில் ஒரே அளவிலான எழுத்துக்கள் 20 அடி தூரத்தில் உள்ள நபரிடம் காண்பிக்கப்படுகின்றன. 20/20 பார்வை உள்ளவரே சாதாரண பார்வை உடையவராக க்ருதப்படுவார். அவர் அந்த எழுத்துக்களை 200 அடி தூரத்தில் பார்த்தால் அவரின் பார்வை 20/200 ஆகும். இதை காணவே 20 அடி தூரத்தில் வெவ்வேறு அளவிலுள்ள எழுத்துக்களை காண்பிக்கின்றனர்.


மெட்ரிக்
ஸ்னெல்லன்
6/3
20/10
6/4.5
20/15
6/6
20/20
6/7.5
20/25
6/9
20/30
6/12
20/40
6/15
20/50
6/30
20/100
6/60
20/200

இது ஸ்னெல்லன் சார்டின் பார்த்தப்டி ஒவ்வொரு அளவிற்கு தேவையான தோராயமான லென்ஸ் திருத்தம் ஆகும்:

ஸ்னெல்லன்கணக்கிடப்பட்ட அளவு
20/10ப்ளேனோ (பூச்சியம்)
20/15ப்ளேனோ
20/20ப்ளேனோ முதல் -0.25 வரை
20/30-0.50
20/40-0.75
20/50
-1.00 முதல் -1.25 வரை
20/100
-1.75 முதல் -2.00 வரை
20/200
-2.00 முதல் -2.50 வரை




கண் - Anatomy  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 2:46 am

Depth perception

ஒரு பொருளின் பரிமாணத்தை கண்டறிவது கண் செய்யும் மற்றொரு வேலையாகும். ஒரு நபர் சாதாரணமாக பொருளின் தூரத்தை மூன்று வழிகளில் கண்டறிகிறார். 1. தெரிந்த பொருள்களின் அளவு. 2. இணையாக நகரும் அமப்பு 3. ஸ்டிரியோப்சிஸ். இந்த திறன் டெப்த் பெர்சப்சன் என அறியப்படுகிறது.

கண் - Anatomy  KallDepth2

தெரிந்த பொருள்களின் அளவுகள் மூலம் தூரத்தை அறிதல்

6 அடி உயரமுள்ள ஒருவரை காணும்போது, அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதை கணக்கிட முடியும். ஏனெனில் ரெடினாவில் பதியும் நபரின் உருவத்தின் அளவை வைத்து மூளை மற்ற பரிமாணங்களை கணக்கிடும்.
இணையாக நகர்தல் மூலம் தூரத்தை அறிதல்

ஒருவர் 1 அங்குலம் தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்க்கிறாஎ பின் தன் தலையை 1 அங்குலம் பக்கவாட்டி நகர்த்தினால் பொருளும் அவ்வளவு தூரம் ரெடினாவில் நகரும். ஆனால் 200 அடி தூரத்தில் உள்ள பொருள் அதே அளவில் நகராது. இந்த முறையில் ஒரு கண்ணை மூடிக் கொண்டும் நாம் பொருளின் தூரத்தை கணக்கிடலாம்.

ஸ்டிரியோப்சிஸ் மூலம் தூரத்தை அறிதல்


மற்றொரு முறை பைனாகுலர் விஷன் ஆகும். ஒரு கண் மற்றொரு கண்ணின் ஒரு பக்கத்தை விட 2 அங்குலங்கள் அதிகமாக உள்லது. எனவே இரண்டு ரெடினாக்களிலும் விழும் பிம்பம் மாறுபடலாம். உதாரணமாக, மூக்கிற்கு 1 அங்குலம் முன்னால் உள்ள ஒரு பொருளை பார்க்கும் போது அதன் பிம்பம் இடது கண்ணின் இடது பக்கத்திலும் வலது கண்ணின் வலது பக்கத்திலும் விழும் (படத்தை பார்க்க). ஆனால் 20 அடி தூரத்திலுள்ள ஒரு சிறிய பொருளின் பிம்பம் ரெடினாவின் நடுப்பகுயில் விழும். இதன் மூலமாக ஒரு இரு பொருள்களை சார்பு படுத்தி அவற்றிற்கு இடையே உள்ள தூரத்தை அறிகிறார். ஆனால் ஸ்டிரியோப்சிஸ் 50 முதல் 200 அடிக்கு மேல் உதவாது.


கண் - Anatomy  Depth



கண் - Anatomy  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 2:48 am

சாதாரண பார்வை

படத்தில் காட்டியுள்ளபடி, இணையான திசையில் தொலைவிலுள்ள பொருள்களிலிருந்து செல்லும் ஒளி சிலியரி தசை முழுவதுமாக தளர்ந்த நிலையில் இருக்கும்போது, ரெட்டினாவில் குவிக்கப்படுகிறது. அதாவது சாதாரண கண்ணால் தொலைவிலுள்ள அனைத்து பொருட்களையும் அதன் சிலியரி தசைகள் தளர்வாக இருக்கும்போது, தெளிவாக காண முடியும். இருப்பினும் அருகிலுள்ள பொருட்களை பார்க்க சிலியரி தசை சுருங்குகிறது.

கண் - Anatomy  Eye+light


கண்ணில் ஏற்படும் நோய்கள்


கண் - Anatomy  Refractive+errors2

கண் - Anatomy  Refractive+errors


தூரப்பார்வை:

இந்நோய் உள்ளவர்களால் தூரத்தில் உள்ளவைகளை தெளிவாக காண முடியும்; ஆனால் அருகில் உள்ளவைகளை தெளிவாக பார்க்க முடியாது. இந்த நிலையில் படத்தில் காட்டியுள்ளபடி, இணையான ஒளிக்கதிர்களை தளர்ந்துள்ள லென்ஸ் அமைப்பால் போதுமான அளவு வளைக்க முடியவில்லை. இதை சரி செய்ய சிலியரி தசை லென்சின் பலத்தை அதிகரிக்க கட்டாயம் சுருங்க வேண்டும். அகோமொடேசன் செயல்முறையை பயன்படுத்தி, ஒரு தூரப்பார்வை உள்ள நபர்தூரத்திலுள்ள பொருட்களை பார்க்க முடியும். நபருக்கு சிலியரி தசையின் சிறிய அளவு பலத்தை மட்டும் பயன்படுத்தினாலும், அவரால் தூரத்திலுள்ள பொருட்களை காண முடியும். சிலியரி த்சையால் சுருங்க முடிந்த வரை அவரால் கண்ணுக்கு நெருக்கமான பொருட்களை காண முடியும். ஆனால் வயதாகும்போது லென்ஸ் மிகவும் பலவீனமாவதால், ஒரு தூரப்பார்வை உள்ளவரால் தூரத்தில் உள்ள பொருட்களையும் போதுமான அளவு தெளிவாக காண முடியவில்லை.

கிட்டப்பார்வை:

கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு படத்தில் உள்ளபடி சிலியரி தசை ஓய்வாக இருக்கும்போது ஒளிக்கதிர்கள் ரெடினாவில் குவிகின்றன. இதற்கு காரணம் பெரியதாக இருக்கும் கண்ணாக இருக்கலாம் ஆனால் ஒளி அதிகமாக விலக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். இதை சரி செய்ய கண்ணால் எந்த செயல்பாட்டை தூரப்பார்வையை போல் செய்ய முடியாது. ஆனால் கிட்டப்பார்வை உள்ளவரால் நெருங்கிய பொருட்களை அகோமெடேசன் முறையை பயன்படுத்தி பார்க்க முடிகிறது.

கிட்டப்பார்வை வாழ்க்கை முறையாலும் (நெருக்கமாக: தொலைக்காட்சி பார்த்தல், கணிப்பொறியில் வேலை செய்தல், புத்தகம் படித்தல் போன்றவை) தூரப்பார்வை மரபியல் ரீதியாகவும் ஏற்படலாம்.

லென்ஸ்களை பயன்படுத்தி கிட்டாபார்வை மற்றும் தூரப்பார்வையை சரி செய்தல்.

சாதாரண கண்ணில் ஒளிக்கதிர்கள் ஒரு குழி லென்ஸ் மூலம் செல்வதை நாம் அறிவோம். எனவே கிட்டப்பாரவையில் போன்று, அதிகமாக ஒளிவிலகல் தன்மை இருந்தால் அதை சரி செய்ய படத்தில் உள்ளது போல் ஒரு குழி லென்சை முன்னால் வைத்து சரி செய்யப்படுகிறது. அதேபோல் தூரப்பார்வையில் உள்ளது போல பலவீனமான லென்ஸ் அமைப்பை சரி செய்ய படத்தில் உள்ளது போல் ஒரு குவி லென்ஸ் முன்னால் வைக்கப்படுகிறது.



கண் - Anatomy  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 2:52 am

சிதறல் பார்வை

கண் - Anatomy  Astigmatism

சிதறல் பார்வை என்பது முட்டை வடிவ லென்ஸ் மற்றும் கார்னியா அமைப்பினால் ஏற்படுகிறது. இதனால் ஒளி ஒரு பக்கம் அதிகமாக விலக்கப்படுகிறது. படத்தில் காண்பித்துள்ளபடி ஒளி பல இடங்களில் குவிக்கப்படுவதால் பார்ப்பவருக்கு பார்வை பல இடங்களில் கூவிக்கப்படுவதால் பார்வை தெளிவற்று ஏற்படுகிறது. சாதாரணமாக எல்லோருக்கும் கொஞ்சம் சிதறல் பார்வை இருக்கிறது. ஆனால் கொஞ்சம் உள்ள சிதறல் பார்வையால் பார்வைக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அகோமடேசன் முறையால் இப்பிரச்சினையை கண்ணால் எப்போது சரி செய்ய முடியாது ஏனெனில் ஒளி ஒவ்வொரு தளங்களிலும் வெவ்வேறு கோணத்தில் குவிக்கப்படுகிறது


கண் - Anatomy  Astigmatism1

சிதறல் பார்வை உள்ளவருக்கு கண்பார்வை மங்கலாகம், கண்வலி, தலைவலி போன்றவையும் ஏற்படுகிறது.

சிதறல் பார்வை ஏற்படுவதற்கான காரணம் இதுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் கண்ணில் ஏற்படும் அடிகள், அறுவை சிகிச்சைகளால் ஏற்படலாம். சிதறல் பார்வையை உருளைவடிவ லென்ஸ்கள் மூலம் சரி செய்யலாம்.

கண்புரை

கண் - Anatomy  Cataract-1

கண்புரை எனபது மிக பரவலான கண் நோய் ஆகும் கண்ணின் லென்சின் மேல் பகுதியில் ஏற்படும் மெல்லிய படல தொகுப்புகள் ஆகும். உடல் வழக்கமாக ஒரு இடத்தில் காயம் ஏற்படும்போது அந்த இடத்தை ஆற வைக்கிறது. அப்போது அந்த இடத்தில் தழும்புகள் ஏற்படுகிறது. இப்படித்தான் கண்ணில் ஏற்படும் காயங்கள் ஆரி த்ழும்பாகி கண்புரை ஆகின்றது. இதனால் கண்பார்வை பிரச்சினை உண்டாக்கிறது. இது கண்ணில் அறுவைசிகிச்சை மூலம் லென்சை எடுப்பதால் சரி செய்யப்படுகிறது. சிலசமயம் அறுவைசிகிச்சைக்கு பின் லென்ஸ் அணிய வேண்டியிருக்கலாம்.


கிளாக்கோமா


கண் - Anatomy  Glaucoma1

ஆப்டிக் டிஸ்க் என்பது பார்வை நரம்பின் முனை ஆகும். கிளாக்கோமா பார்வை இழப்பின் மிக பரவலான காரணங்களில் ஒன்றாகும். இந்நோய் கண் உட்பகுதியில் அழுத்தம் மிக அதிகமாவதால் குறிப்பாக 60 முதல் 70 mm Hg வரை அதிகமாவதால் ஏற்படுகிறது. 25 முதல் 30 mm Hg அழுத்தம் நீண்ட காலம் இருந்தாலும் பார்வை இழப்பு ஏற்படலாம். மிக அதிகமான அழுத்தம் சில நாட்கள் அல்லது சில மணி நேரங்களுக்குள்ளே கூட பார்வை இழப்பை உண்டாக்கலாம். அழுத்தம் அதிகரிக்கும்போது, பார்வை நரம்பின் கண்ணிலிருந்து வெளியேறும் இடமான ஆப்டிக் டிஸ்க் பகுதியில் அழுத்தப்படுகிறது. இந்த அழுத்தம் நரம்பு ஓட்டத்தை தடை செய்கிறது. இது அந்த நரம்பு இழைகள் இறப்பதற்கும் காரணமாகலாம். மேலும் இந்த அழுத்தம் கண் இரத்தக் குழாயை அழுத்தலாம்(இதுவும் ஆப்டிக் டிஸ்க் வழியாக நுழைகிறது).

கிளாக்கோமா நீரிழிவு நோய், ஹைப்போதைராடிசம், லுக்கிமியா, சிக்கிள் செல் அனீமியா, ஆர்த்ரைடிஸ் போன்ற நோய் உள்ளவர்களுக்கு ஏற்படலாம். மேலும் ஸ்டீராய்டு பயன்படுத்துபவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கண்ணில் அடிபட்டவர்கள் போன்றவர்களுக்கு கிளாக்கோமா ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். மரபியல் ரீதியாகவும் கிளாக்கோமா ஏற்படலாம்.



கண் - Anatomy  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 2:54 am

ரெடினல் துண்டிப்பு

ரெட்டினா சில சமயம் துண்டிக்கபடலாம். சில சமயங்களில் இந்த துண்டிப்பு கண்ணில் ஏற்படும் அடியால் அதிகமான திரவம் அல்லது இரத்தம் ரெட்டினா மற்று எபிதீலிய செல்களுக்கு இடையே நிரம்புவதால் ஏற்படலாம். சில சமயம் விட்ரஸ் ஹியூமரில் உள்ள மெல்லிய கொலாஜன் இழைகள் சுருங்கும்போதும் ரெடினா உள்பக்கமாக இழுக்கப்பட்டும் துண்டிக்கப்படலாம்.

ரெடினல் துண்டிப்பு ஏற்பட்டால் ரெடினாவிற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து செயலிழக்க நேரிடலாம். ரெடினல் துண்டிப்பு ஏற்பட்ட சில நாட்களுக்கு அது இந்த செயலிழப்பை தடுத்து நிறுத்தும். அதற்கு அறுவைசிகிச்சை மூலம் சரி செய்தால் பார்வை இழப்பு தடுக்கப்படும்.

மேக்குலார் டீஜெனரேசன் எனப்படும் நோய் வயதாகும்போது ரெடினாவின் ஒரு பகுதியான மேக்குலாவில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படுகிறது இதுவும் பார்வை இழப்பை உண்டாக்குகிறது. தற்போது பார்வை இழப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. உடல் பருமன், புகைபிடிக்கும் பழக்கங்கள் போன்றவையால் இந்நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது. இதன் அறிகுறி நேர்கோடுகள் வளைந்தவை போல் தோன்றுதல், மங்கலான உருவங்கள் போன்றவையாகும்.

மாலைக்கண் நோய்

மாலைக்கண் நோய் விட்டமின் ஏ குறைபாடு உள்ளவருக்கு ஏற்படும். ஏனெனில் விட்டமின் ஏ இல்லாமல், உருவாகும் ரெடினா மற்றும் ருடாப்சின்(குச்சிகள்) நலமில்லாமல் இருக்கும். இந்த நிலை மாலைக்கண் என அழைக்கப்படுவதற்கான காரணம், விட்டமின் ஏ குறைவாக உள்ளவகளுக்கு இரவில் வரும் வெளிச்சம் போதுஆனதாக இருக்காது. மாலைக்கண் உடனே ஏற்பட்டு விடாது. மாதக்கணக்கில் விட்டமின் ஏ உடலுக்கு கிடைக்காவிட்டால்தான் அது ஏற்படும். ஏனெனில் வழக்கமாக கல்லீரலில் விட்டமின் ஏ சேகரமாகி இருக்கும். மாலைக்கண் நோய் உள்ளவருக்கு சிலசமயங்களில் விட்டமின் ஏ ஊசி போடும்போது அது 1 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கூட சரியாகலாம்.

நிறக்குருடு

கண் - Anatomy  Eye+test+1
கண் - Anatomy  Eye+test+2

நிறக்குருடு முழுமையானதாகவும் ஏற்படலாம், பகுதியாகவும் ஏற்படலாம். நிறக்குருடு பெரும்பாலும் மரபுவழியாக ஏற்பட்டாலும், சிலசமயம் வயதாகும்போது, ரெட்டினா மற்றும் பார்வை நரம்பில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஏற்படலாம். சிலசமயம் சில மருந்துகள் கூட நிறக்குருடை ஏற்படுத்தலாம். குடிப்பழக்கம், புகைபிடித்தல் போன்றவையும் நிறக்குருடை ஏற்படுத்தலாம். கண்புரை கூட நிறங்களை மங்கலாக காட்டும்.

முழுமையான நிறக்குருடு உள்ளவருக்கு எந்த நிறங்களும் தெரியாது கருப்பு-வெள்ளை மட்டுமே தெரியும். இது மிகவும் அரிதானது.



கண் - Anatomy  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 2:55 am

சிவப்பு-பச்சை நிறக்குருடு.

கண்ணில் கூம்புகள் நிறங்களை அறிய காரணமாகிறது. இதில் மூன்று வகை கூம்புகள் உள்ளன, அதாவது சிவப்பு, பச்சை மற்றும் நீலம். மற்ற நிறங்கள் இவைகளின் கலவையால் தோன்றுகின்றன. மேலே உள்ள படத்தில் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்கள் உள்ளன. இந்த நிறங்களை அறிய சிவப்பு மற்றும் பச்சை கூம்புகள் உதவுகின்றன. இவை இரண்டு கூம்புகள் அல்லது ஏதாவது ஒன்று இல்லாவிட்டால், ஒருவரா; மேற்கண்ட நான்கு நிறங்களை பிரித்தறிய முடியாது. நிறக்குருடு ஆண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஏனெனில் எக்ஸ்(x) குரோமோசோம் தான் இந்த கூம்புகள் உருவாக காரணம். எனவே பெண்களில் உள்ள இரண்டு எக்ஸ் குரோமோசோம்களில் ஏதாவது ஒன்றில் நல்ல ஜீன் இருக்கும். ஆனால் ஆண்களுக்கு ஒரே ஒரு எக்ஸ் குரோமோசோம் உள்ளதால் அதில் கூம்புகளுக்கான ஜீன் சேதமாகி இருந்தால் அவருக்கு நிச்சயம் நிறக்குருடு ஏற்படும். மேலும் எக்ஸ் குரோமோசோம் தாயிலிருந்து பெறப்படுவதால் நிறக்குருடு தாயிலிருந்து மகனுக்கு பரிமாற்றப்படுகிறது.

நீல நிறக்குருடு.

மிக அரிதாகவே நீல நிற கூம்புகள் இல்லாமல் இருக்கின்றன. இதுவும் மரவழியாக பரிமாற்றப்படுகிறது.

நிறங்கள் சோதனை.

மேலே உள்ள முதல் படத்தில் நிறக்குருடு இல்லாதவரால் “74” என்ற எண்ணை படிக்க முடியும். ஆனால் சிவப்பு-பச்சை நிறக்குருடு உள்ளவருக்கு “21” என்ற எண்ணே தெரியும். அதேபோல் இரண்டாவது படத்தில் சாதாரணமானவருக்கு “42” என்பது தெரியும். ஆனால் சிவப்பு நிறக்குருடு உள்ளவருக்கு “2” ஆகவும் பச்சை நிறக்குருடுள்ளவருக்கு “4” என்பது மட்டும் தெரியும்.

ஹார்னர் சிண்ட்ரோம்

சிலசமயம் கண்ணுக்கு செல்லும் சிம்பதடிக் நரம்புகளில்(தானியங்கி நரம்பு மண்டத்தின் ஒரு பிரிவு) இடையூறு ஏற்படலாம். இந்த இடையூறு கழுத்து பக்க சிம்பதடிக் நரம்பு இணைப்புகளில் அடிக்கடி ஏற்படும். இது ஹார்னர் சிண்ட்ரோம் எனப்படும் நிலையை உண்டாக்குகிறது. பாவைக்கு செல்லும் சிம்பதடிக் நரம்பின் இடையூறால், பாவை சிறியதாக சுருங்கிய நிலையிலேயே இருக்கும். இரண்டாவதாக மேல் கண் இமை தளர்ந்து விடும். இதனால் மேல் இமையை விரிவாக திறக்க முடியாது. மூன்றாவதாக பாதிப்பு கண்ணின் பக்கமாக முகம் மற்றும் தலை பகுதியில் உள்ள இரத்த குழாய்கள் விரிவடைந்த நிலையில் இருக்கும். நான்காவதாக அந்த பகுதியில் வியர்வை ஏற்படாது.

கழுத்து பகுதியில் ஏற்படும் விபத்துகளால் இந்நோய் ஏற்படலாம். மூளையில் ஏற்படும் சில பிரச்சினைகளாலும் இந்நோய் ஏற்படுகிறது.

மூலம்: எஸ்.கே
http://manamplus.blogspot.com




கண் - Anatomy  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 5:34 am

அப்பா ரொம்ப கண்ணக்கட்டுதே....

பயனும் தேவையும் நிறைந்த பதிவு..மிக்க நன்றி சிவா... கண் - Anatomy  678642 கண் - Anatomy  154550



கண் - Anatomy  Aகண் - Anatomy  Aகண் - Anatomy  Tகண் - Anatomy  Hகண் - Anatomy  Iகண் - Anatomy  Rகண் - Anatomy  Aகண் - Anatomy  Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 22, 2010 9:28 am

அருமையான படைப்பு தல நன்றி



நேசமுடன் ஹாசிம்
கண் - Anatomy  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக