புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
56 Posts - 73%
heezulia
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
221 Posts - 75%
heezulia
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
8 Posts - 3%
prajai
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார்


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 6:53 pm


கடவுள் எங்கே இருக்கிறார்?
- ரிஷிகுமார்


நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"

"நிச்சயமாக ஐயா.."

"கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா."

"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"

"ஆம்."

"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா.."

"சாத்தா‎ன் நல்லவரா?"

"‏இல்லை."

"எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?"

"கடவுளிடமிருந்துதா‎ன்."

"சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?"

"ஆம்."

"அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?"

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"

......

"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"

.......

"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?"

"ஆம் ஐயா.."

"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?"

"ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது."

"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?"

"நிச்சயமாக உள்ளது."

"அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?"

"நிச்சயமாக."

"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை."

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). "வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது."

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"

"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது."

"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?"

"சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?"

"ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது."

"பிழை?? விளக்கிக் கூற முடியுமா?"

"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

"சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?"

"”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்." பேராசிரியர் பதிலுரைத்தார்.

"உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?"

(பேராசிரியர் த‎ன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

"அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?"

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?"

(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

"யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?"

"அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று."

"மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?"

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

"நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!"

"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

நமது மு‎ன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.


*****

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 6:59 pm

கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196

கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 678642 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 678642 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 678642




கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 7:02 pm

பிளேடு பக்கிரி wrote:கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 677196

கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 678642 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 678642 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 678642

சரி...சரி...கைய...ரொம்ப தட்டாத.........கீழ விழுந்திடப் போவுது........சாப்பிட்டாச்சா மச்சி...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Aug 16, 2010 8:21 pm

"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

நன்றி தோழரே...எங்களுடன் பகிர்ந்தமைக்கு கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 10452-72

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 8:22 pm

kalaimoon70 wrote:"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

நன்றி தோழரே...எங்களுடன் பகிர்ந்தமைக்கு கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 10452-72

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

பாராட்டுக்கு நன்றி கலை.......

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 16, 2010 9:42 pm

தைரியமாக பொருட்செறிவுடன் ஆசானுடன் விவாதித்த மரியாதைக்குரிய திரு அப்துல் கலாம் அவர்களுக்கும் ,கட்டுரை வாயிலாக அதை தெரிவித்த திரு குனாஷன் அவர்களுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். பெருமைக்கு பெருமை சேர்த்த செய்தி. கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 154550 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 154550

ரமணீயன்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 10:02 pm

T.N.Balasubramanian wrote:தைரியமாக பொருட்செறிவுடன் ஆசானுடன் விவாதித்த மரியாதைக்குரிய திரு அப்துல் கலாம் அவர்களுக்கும் ,கட்டுரை வாயிலாக அதை தெரிவித்த திரு குனாஷன் அவர்களுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். பெருமைக்கு பெருமை சேர்த்த செய்தி. கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 154550 கடவுள் எங்கே இருக்கிறார்? - ரிஷிகுமார் 154550

ரமணீயன்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா........... நன்றி நன்றி நன்றி

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Tue Aug 17, 2010 6:19 am

சிறு வயதிலேயே திரு அப்துல் கலாம் அவர்கள் தெளிவான அறிவும், வாதாடும் திறமையும், தைரியமும் கொண்டவர் என்பதை தங்களின் கட்டுரை தெளிவாக காட்டுகிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்லுவார்கள். அதற்கு இது சிறந்த உதாரணம். மிக சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 8:57 am

tdrajeswaran wrote:சிறு வயதிலேயே திரு அப்துல் கலாம் அவர்கள் தெளிவான அறிவும், வாதாடும் திறமையும், தைரியமும் கொண்டவர் என்பதை தங்களின் கட்டுரை தெளிவாக காட்டுகிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்லுவார்கள். அதற்கு இது சிறந்த உதாரணம். மிக சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி ராஜேஸ்வரன்......... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக