புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
171 Posts - 80%
heezulia
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
336 Posts - 79%
heezulia
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%
prajai
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Tue Aug 10, 2010 1:19 pm

First topic message reminder :

நன்றி:http://mathavaraj.blogspot.com/2010/08/blog-post_08.html
மொத்த தமிழ்ச்சினிமாவையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வைக்கும் ஏகபோகமாக தன் நிறுவனம் உருவெடுக்க வேண்டும் என்கிற வெறியும், வேட்கையும் கொண்டவராக கலாநிதி மாறன் சமீப காலங்களில் தனக்கான அரசியல் அதிகாரம் பயன்படுத்தி முன்னுக்கு வந்திருக்கிறார். சினிமா, அதன் கலை அழகு, வடிவம், மொழி எல்லாவற்றையும் சிதைத்து, தன் பண வேட்டைக்கான களமாக அதனை மாற்றிடும் அகோரப்பசியோடு சன்நிறுவனம் இன்று காட்சியளிக்கிறது.
அபூர்வ ராகங்களில் துளிர்த்து, முள்ளும் மலரில் வளர்ந்த ரஜினிகாந்த் என்னும் நடிகர், தான் வந்த பாதையை மறந்து இன்று திசைமாறி எங்கோ போய்விட்டார். தன் ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் அவரிடம் இப்போது தென்படவில்லை.
இளையராஜாவுக்கு எதிராக அல்லது மாற்றாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும், தன் திறமையின் மூலம் இசையுலகில் தனக்கென்று அல்லது தனக்குரிய ஒரு இடத்தை அடைந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். நல்ல படங்கள் என்றால், தன் சன்மானத்தை பொருட்படுத்தாமல் இசையமைக்கும் இளையராஜா போன்றோரின் முன்னால், பெரும் நிறுவனங்களின் பேனர்களில் மட்டுமே தன் இசையை வெளிக்காட்டும் ஏ.ஆர்.ரகுமானின் ‘சர்வதேசக் கலைத்தாகம்’ யாருக்கானது எனச் சொல்லத் தேவையில்லை.
இந்த தில்லாலங்கடிகளின் கூட்டுத் தொழிலில் (உழைப்பில் என்று சத்தியமாய்ச் சொல்ல மாட்டேன்), உருவாக்கிய சினிமாவான எந்திரன் குறித்து எகிறி எகிறிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான் தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.
“இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது.
“இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன்” என்று அதிரடியாய் அறிவிக்கிறார்கள். என்னா தெனாவெட்டு! “சயின்ஸ்னா என்ன? ஃபிக்‌ஷன் என்ன?” என்று யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற தைரியம்தானே இப்படியெல்லாம் பேச வைக்கிறது. “வித்தியாசமான ரஜினியை பார்க்கப் போகிறீர்கள்” என்று நெஞ்சு விம்மிப் போகிறார் ஷங்கர். தமிழ்ச்சினிமா ரசிகர்களை இந்த ‘வித்தியாசம்’ எனும் வார்த்தை சொல்லி எத்தனை காலம், எத்தனை பேர், எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவை ஏமாந்தபோதும், திரும்பவும் ஏமாறத் தயாராய் இருக்கிறார்கள் என்னும் கொழுப்பில்தானே இப்படியெல்லாம் பேச முடிகிறது.
பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்று கதைக்கிறவர்களுக்கும், வித்தியாசம் என மார்தட்டுபவர்களுக்கும் நடிகர் விவேக் பேசியதைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். ”ஆமையும் முயலும் கதையினை ஷங்கர் எடுக்க வேண்டும். அதனை ஜெர்மனியில் உள்ள பெரும் மைதானத்தை வாடகை எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ படம் எடுக்க வேண்டும். மேலே நான்கு ஹெலிகாப்டரில் வைத்து அந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும்” என்று அவர் நகைச்சுவையாக பேசியதில் உண்மைகளும் இருக்கின்றன.
எந்திரன் படப்பிடிப்பின் கடைசி நாளன்று பெரிய கேக் வெட்டி விழா. அதுகுறித்துச் செய்திகள். அப்புறம் அதன் பாடல்கள் வெளியீட்டு விழா. அது குறித்து தொலைக் காட்சியில் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள். அதன் வெளியீடு நடப்பதற்குள், என்ன திகிடுதத்தங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ! அதையெல்லாம் அவரவர் புத்திசாலித்தனத்துக்கேற்ப கலர் கலராய் வாந்தியெடுத்து, பிரமாதப்படுத்துவதற்கு என்று பலரும் இருக்கிறார்கள். சமூகப் பார்வையும், சினிமா குறித்து அக்கறையும் அற்ற இந்த ஜென்மங்களை என்ன செய்வது?
“ஜஸ்ட் 150 கோடி செலவு செய்து..” என்று பெருமிதமாய்ப் பேசுகிறார் ரஜினிகாந்த். நாளைய வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்று அறியாத பெரும் கூட்டம் அதைக்கேட்டு இறுமாந்து போகிறது. இந்த “ஜஸ்ட்டில்” என்னவெல்லாம் இந்த தேசத்தில் செய்ய முடியும் என நினைத்தால் கொதிப்பாய் இருக்கிறது. காசு கொடுத்துப் பார்க்கிற யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாமல், ஒரு படம் எடுத்து, அதற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற இந்த வியாபார உத்திகளின் மீது நமது கோபத்தைக் காட்டாமல், வேடிக்கைப் பார்க்கிற அல்லது ரசிக்கிற மனோபாவமே சமூகக் கேடு. அதைத் தகர்க்கிற மூர்க்கம் பொறுப்புள்ள பிரஜைக்கு வந்தாக வேண்டும்.
எத்தனை எத்தனையோ கனவுகளுடன், சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் இங்கு பல இளைஞர்கள் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தனது பிரம்மாண்ட கால் சுண்டு விரலால் நசுக்கிப் போட்டு விடும் இந்த ‘எந்திரன்’கள். சினிமா மொழி அறிந்த, அதன் நுட்பங்கள் தெரிந்த, நல்ல கதை சொல்லத் தெரிந்த புதிய இயக்குனர்கள் இப்போது முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனது சூறாவளி வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் இந்த ‘எந்திரன்’கள். யதார்த்தங்களை விட்டு சினிமாவை வெற்று பிம்பங்கள் நிறைந்ததாக, மாய உலகமாக, கைக்கு எட்டாத பிரதேசமாக தள்ளி நிறுத்தும் காரியமே ‘எந்திரனின்’ வருகையாய் இருக்கப் போகிறது. கதைகளுக்குத்தான் தொழில்நுட்பமே தவிர, தொழில்நுட்பத்திற்கு கதைகள் அல்ல! பணத்தை மட்டுமே முன்னிறுத்தும் எதுவும், சமூகத்திற்கு உருப்படியாய் எதையும் தந்துவிட முடியாது.
சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டு தந்த அற்புத கலைச்சாதனம். மகத்தான கலைஞர்கள் அதனைக் கையாண்டு சமூகத்தோடு எவ்வளவோ உரையாடல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காலங்களைத் தாண்டி அவர்கள் தந்த காட்சிகள் இன்றும் உயிர்த்துடிப்போடு வலம் வருகின்றன. அப்படிப்பட்டவர்களை களங்கப்படுத்துவதோடு, சினிமா என்னும் அரிய பொக்கிஷத்தை கபளீகரமாக்க முயற்சிக்கும் ’எந்திரன்’கள் குறித்து எச்சரிக்கை தேவைப்படுகிறது.

”இது மக்களுக்கான சினிமா அல்ல, வியாபாரிகளுக்கான சினிமா!”

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Aug 10, 2010 8:56 pm

ஹாஹாஹா இல்ல ஹாப்மூன் நான் சிங்கம்புணரில தான் இருக்கேன் கொஞ்சம் வேலை அதிகம் அதனால வர முடியல ஈகரைக்கு. நீங்க எப்படி இருக்கீங்க எங்க இருக்கீங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Tue Aug 10, 2010 9:01 pm

அவ்ளோ கூட்டத்திலேயும் கரெக்டா கண்டு பிடிச்சென்ன்ல.. அதான் ஸ்பெசல். நான் நல்லா இருக்கேன். இப்போ ரியாத்ல இருக்கேன். வேலை எல்லாம் எப்படி போகுது? எங்கே வொர்க் பன்றீங்க?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Aug 10, 2010 9:05 pm

வேலை எல்லாம் ரொம்ப நல்லாவே போகுது. அடுத்து எப்ப ஊருக்கு வர்ரீங்க என்னது நீங்க 7-8-2010 ல தான் சேந்தீங்களா ஈகரைல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Tue Aug 10, 2010 9:10 pm

இல்ல இல்ல.. வேற ஒரு பெயர்ல இருந்தேன்.. ஆனா இடுகைகள் எதுவும் இல்ல.. சும்மா.. வந்து வாசிச்சிட்டு போறதோட சரி.. இப்போதான் பதிவுகள் இட ஆரம்பிச்சிருக்கேன். அதன் பேரை மாத்திட்டேன். உங்கள மாதிரிதான். ஆமா எங்கே வேலை? சிங்கைலதானா? சிங்கம்புணரி எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட ஊருங்க.. 12 வரை அங்கதான் படிச்சேன்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 10, 2010 9:34 pm

திரைப்படத்தை திரைப்படமாக பார்த்தல் போதும் .....!

எல்லாம் வியாபாரம்தான்.....!லாபத்தோடு எதிர்நோக்கும் படத்தில் இதுவும் ஒன்று .அவ்வளவு தான் ...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 11, 2010 10:18 am

சிங்கம்புணரில படிச்சீங்களா நீங்க எப்ப +2 முடிச்சீங்க. நான் சிங்கைல தான் பிசினஸ் பன்னிட்டு இருக்கேன் நண்பரே.

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 10:22 am

98 -99 லதான் +2 முடிச்சேன்...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 11, 2010 10:24 am

ஓ அப்படியா நம்ம அரட்டைக்களத்துல பேசுவோம் இனி இது பொது பதிவு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Aug 12, 2010 6:39 pm

gunashan wrote:நீங்க பேசினது தப்புமில்லை தவருமில்லை மானிக் பாட்சா......அது என்னது ரஜினி சம்பாதிக்கிறார் ரஜினி சம்பாதிக்கிறார்ன்னு பெருமயடிக்கிறீங்க. அவரு என்ன வேல செஞ்சு சமபாதிச்சார்..

ஒட்டு கடை வெச்சா. துணிக்கடை வெச்சா, வடை வித்தா, காப்பி வித்தா, இல்ல சொந்த பந்தங்கள எல்லாம் விட்டுட்டு வெளிநாட்டுல போயி கஷ்டப்பட்டு சம்பாதிக்க முடியாம தவிக்கிறாங்களே..
அவங்க மாதிரியா.....கூத்தடிப்பெல்லாம் ஒரு வேலையா.. அவரோட பணமெல்லாம் யாரோட பணம்.. நீங்கள் வியர்வை சிந்தி சம்பாதித்தது......

ஒரு படத்துக்கு 50௦ கோடி கொடுக்குறீங்க...அதுல ஒரு கோடிய உங்களுக்கு பிச்சை போடுவது என்ன பெருமையா..? உங்கள்பணத்தில் கொஞ்சம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கிறார்..அவ்வளவுதானே......
அதோ ரோபோ வந்து விட்டான் ..உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரோபோவுக்கு 850௦ கோடி கொடுக்க மாட்டீர்கள். மானிக் வாழ்க,,....ரோபோ வாழ்க....... எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 56667 எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 56667 எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 56667 எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!  - Page 4 56667

ஏன் இது நடிப்பு என்பது ஒரு வேலையாக இருக்க கூடாதா.வடை சுடுபவனைவிட,பெட்டிகடைகாரனைவிட ஏன் ஒறு விவசாயியைவிட சினிமாகாரன் மிக கடினப்பட்டு மிக அக்கரையொடு,மிக அதிக உடல் உழைப்பையும்,மூலை உழைப்பையும் செய்து வேலை செய்கிரார்கள்.
பணம் ஒன்னும் சுமா கிடைக்காது.இங்கே பொள்ளாச்சியில் பட்பபிடிப்பு நடக்கும் இடங்கலில் வந்து பாருங்கள்.அவர்களது மெனக்கெடல் தெரியும்.
அப்புறம் அதென்ன சினிமாகாரன் பணம் மட்டும் பொதுமக்கள் கொடுத்தது?அப்படி பார்த்தால் எல்லாருமெ பொதுமக்கள் பணத்தில்தான் வாழ்கிரார்கள்.இதில் அன்னைத்து அரசி ஊழியர்கள்,எல்லா கடைகாரர்கள்,எல்லா உனவகத்தினர் என ஒட்டு மொத்த உலகமே பொது மக்கள் பணத்தில்தான் வாழ்கிறது.எப்படி மக்கள் ப்டம் பார்க்காவிடால் பட உலகம் நோடித்து போகுமோ அதெ போல் மக்கள் டி சாப்பிடாவிட்டால் எல்லா டீ கடைகலும்தான் நோடித்து போகும்.

எனவே எந்த வேலையையும் குறை சொல்லாதீர்கள்

ராம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக