புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
59 Posts - 46%
ayyasamy ram
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
2 Posts - 2%
prajai
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
418 Posts - 48%
heezulia
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
295 Posts - 34%
Dr.S.Soundarapandian
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
28 Posts - 3%
prajai
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_m10  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 12:54 am



நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமமாய்
நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய்த் துரமுமாய்த் சமீபமுமாய்த் துரிய
நிறை சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக்கெட்டாச்
சித்துருவாய் நின்ற ஒன்றைச் சுகாரம்பப்பெரு
வெளியைச் சிந்தை செய்வாம்

-தாயுமான சுவாமிகள்



ஆவியுலகத்தாரோடு என் அனுபவம்

மிகப்பழமையான காலம் தொடக்கம் இந்தியாவின் பல்வேறு மதங்களும் மறுப்பிறப்புப்பற்றியும் மரணத்தின்பின் மனிதர்நிலையைப்பற்றியும் எவ்வளவோ கூறியுள்ளன. கர்மம் மறுபிறப்பு என்பன இந்துமதம் மனிதகுலத்துக்கு அளித்துள்ள மாபெரும் கொள்கைகளாம். ஆத்மீகத் துறையில் ஆழ்ந்த அறிவு படைத்த பாரதநாட்டின் பழம் பெரும் ரிஷிகள், ஒரு கிருகஸ்தன் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மைபயக்கவல்ல ஒரு சில சடங்குகளை ஒழுங்குறச் செய்யவேண்டுமென ஆணையிட்டுச் சென்றனர். ஐந்து வகையான கடமைகளைப்புரியும்படி அவர்கள் பணித்தனர். அவையாவன கடவுள், ரிஷிகள், பிதுர்கள், மனிதர்கள், இதர உயிர்வாழ் பிராணிகள் என்ற வகுப்பாருக்கு செய்யத்தக்க கடமைகளாம். இந்து மதத்திலே சமுகம் என்னும் போது, அதனுள் மறைந்த ஆன்மாக்களும், அஃறிணை உயிர்களும் கூட அடங்கும்; எனவே மனிதன் ஏனைய மனிதன் ஏனைய மனிதர்களுக்கு மட்டுமல்ல, மேற்கூறிய எல்லோருக்கும் தனது கடமைகளைப்புரிய வேண்டும். இந்துக்களின் கொள்கை எப்பொழுதும் அகன்ற ஆத்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே விளங்கி வந்திருக்கிறது. வெறும் சமூக உலோகாயதத்தைத், தளமாகக் கொண்டு விளங்கவில்லை. புரரதன இந்து ரிஷிகளுக்கு உள்ளொளி அதிகமாக இருந்ததின் பயனாக (அதன் துணையால்) இவ்வுலக மர்மங்களையும் இதர உலக மார்மங்களையும் விளக்கினார்கள். அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இத்தகைய உள்ளொளியே (ஞான உணர்வே) பல உண்மைகளை நமக்கு வெளியாக்குகிறது. இந்து நூல்களில் கூறப்பட்டுள்ள கொள்கைகளும் தத்துவங்களும் தற்கால விஞ்ஞான ஆராய்ச்சியின் பலனாக மேலும் மேலும் தெளிவாகி வருதல் கண்கூடு.

ஆவியுலகத்தைப்பற்றி நாம் அறிந்து கொள்வதற்குத் தூய்மையும் மேன்மையும் வாய்ந்த எங்கள் புராணங்கள் உதவுகின்றன. ஏனெனில், அவற்றின் நுண் பொருள்கள் யாவும், தெய்வத்தால் (அசரீரி, வாக்கு முதலியனவாக) அளிக்கப்பட்டவை. உதாரணமாக, ஆவியுலகத்தைப்பற்றி ஆராய விரும்புவோர்க்குப் பெரிய புராணம் போதிய விஷயங்களை உதவும் ஒரு பொக்கிஷசாலையாக விளங்குகின்றது. லௌகீகக் கொள்கை நிறைந்தவர்க்கு அதிற் கூறப்படும் தெய்வீக உண்மை இலகுவிற் புலப்படுவதில்லை.

உற்பத்திச் சக்தி வாய்ந்த பிராத்தனையால் எதுவுஞ் சிந்திக்கும். இவ்வுலகத்துக்கும் அவ்வுலகத்துக்குமிடையே இணை பாலமாக விளங்குவது பிராத்தனையே யாம். இது காறும் மக்கள் உலகத்தை நீளம், அகலம், உயரம், என்னும் முக்கோல் கொண்டு போசிவந்தனர். இப்போதோ ஐன்ஸ்ரின் (Einstein) கொள்கைப்படி உலகத்தை இம் முக்கோலோடு காலம், இடம் என்னும் இரண்டுங் கொண்ட ஒரு கோலையுஞ் சேர்த்து நாற்கோல் கொண்டு அளக்கும் உலகங்களாம். முக்கோல் கொண்டு அளக்கும் எம் உலகங்களுக்கும் நாற்கோல் கொண்டு அளக்கும் ஆவியுலகுக்கும் இடையே இணை பாலமாக விளங்குவது. பிராத்தனையே யாம். நாயன்மார்கள் சரிதங்களைப்படிக்கும் போது அந்நாயன்மார்கள் இப் பிரார்த்தனையாகிய ஆயுதத்தை எவ்வளவு திறம்பட உபயோகித்திருக்கின்றார்கள் என்பது நமக்கு நன்கு புலப்படும். பிரார்த்தனை பூரண சித்தி பெற்றது என்பதற்கு அடையாளம் அப்பிராத்தனை கருதியதைப் பெறுவதேயாம். எம் சமயாசாரியர்கள் செய்த அற்புதங்களெல்லாம் சித்திகரமான பிராத்தனைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. ஒவ்வொரு மனிதனும் ஒரு செய்தித்தலமென்றும், அந்தச் செய்தித் தலத்தில் ஆவியுலகச் செய்திகள் வந்து படியுமாறு செய்யவல்ல ஆற்றல் உண்டென்றும் புராணங்கள் வாயிலாக எமக்கு நம்பிக்கை பிறக்கிறது. அன்பின் அதிசயக் கோலங்களையும் உயர்ந்த அன்பே பேரறிவு பயக்க வல்லது என்பதையும் நாம் உணர்த்தப்படுகின்றோம். அன்பை விரியச் செய்வதால் ஒருவன் தெய்வீகத் தன்மை பெற்று வீடு பேறு மெய்துகின்றான் என்பர். சுய நலமின்மை அந்த ஆவியுலகத்தின் ஓர் இயற்கை சட்டமாகத் தெரிகிறது. ஆகவே, சுயநலமுள்ளோர் அந்த உலகத்திற்குச் செல்லார் போலும். சுயநலமுடையோர்க்குச் சூக்கும் தேகம் பாரமிக்கதாய் அவர்களை இருளுலகத்திற்கு தள்ளுகின்றது போலும்.

மரணத்தின் பின்னும் மனிதன் வாழ்கின்றான் என்னும் இயல்பைக் காட்டுவதிலும் பார்க்கச் சிறந்த லட்சியம் வேறிருக்க முடியாது. எம் மூதாதையர் அறிய முடியாத பல காரியங்களை மிக ஆழத்திற்குச் சென்று கண்டு கூறியிறுக்கிறார்கள். இக்கால விஞ்ஞான வசதிகளையுடைய எமக்கும் மரணத்தின் பின் மனிதன் நிலையை ஆராய முடியுமென்பது கூறாதேயமையும். இயற்கை உலகம் எப்படி நமக்குப் பல காரியங்களைக் காட்டுவதற்கு உரிமையுடையதோ, ஆது போலவே நுண்மையான ஆவியுலகமும் தன்னுடைய காரியங்களைப் பலவற்றை எமக்கு காட்டுவதற்கு உரிமையுடையது என்பதிற் சந்தேகமில்லை.

உடம்பாகிய பந்தத்தில் இருக்கும் போதே ஆன்மா தன் விவேகத்தைக் காட்டுமானால் தூலதேக பந்தமற்ற ஆவியுலகத்தில் அஃது இன்னும் மேலான விவேகத்தைக் காட்ட மாட்டாதா? அனுபவத்தில் செய்து பார்க்கும் இரசாயனம், உள நூல் முதலியவற்றைப் போல, அனுபவத்திற் செய்து பார்க்கும் சமயக்கொள்கைகளும் இருந்தே தீர வேண்டுமன்றோ?

துரதிர்ஷ்டவசமாக, இன்று மனிதன் புற விஞ்ஞான சாஸ்திரங்களையே வளர்கிறானன்றி அகஞான உண்மைகளை வளர்க்கிறானில்லை. புறவுலகினிலுள்ள இரகசியங்களை கண்டு படிப்பதில் முயல்கின்றானன்றி அகவுலக ஆராய்ச்சியில் இறங்குகிறானில்லை. இதன் பலனாக நிறை கோல் போல நின்று அகமும் புறமும் ஆகிய இரண்டையும் சரிவர ஆராயும் அறிவின்றி ஒரு பக்க அறிவே வளர்வதாயிற்று. இந்த ஒரு பக்க அறிவாகிய புறவுலக விஞ்ஞான அறிவே உலக அமைதியீனத்துக்குக் காரணமாயிற்று. எதிர்காலத்தில் மனிதனுக்கு விமோசனம் வேண்டுமாயின், மனிதன், தன் அறிவின்மையையும் ஆத்மீகசக்தியையும் உணர்தல் வேண்டும்.

விஞ்ஞானம் மட்டுமல்ல நம்பிக்கையும் நம்பிக்கையும் பல வெற்றிகளை உலகில் ஈட்டுகிறது. நாமறிய உலகுகளின் தன்மையை அறிவதற்கு ஆத்மீகம் உறுதுணையாகிறது. நான் ஆத்மீகத்தின் நம்பிக்கை கொண்டவன் எனக்கு அவ்வப்போது ஏற்பட்ட அனுபவங்களைக் கீழே சுருக்கமாகத் தருகிறேன். முதலில் இது சம்பந்தமான பரீட்சைகளை என்னுடைய குடும்ப வட்டாரத்திலேயே நடாத்தினேன். ஆனால் பின்னர் எனது அத்தியந்த நண்பர் சிலரும் அவர்களுடைய இறந்து போன உறவினர்களுடன் தொடர்பு கொள்ள நான் உதவி செய்தேன்.

ஓர் இரகசியச் செய்தியை விட்டுச் சென்ற சேர் ஒலியர் லொட்ஐ; என்பவருடன் தொடர்பு கொள்ள ஒரு முறை முயற்சித்தேன் ஆனால் எனது ஆவியுலகத் தொடர்பில் எனக்கு உதவிபுரிந்து வந்த ஆவி இது விஷயத்தில் மறுத்தது. இந்தியா இலங்கைப் பகுதி சம்பந்தமாக செயலாற்றாவே தனக்கு உரிமை உண்டென்று அது கூரிமையை எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.

1943. ம் ஆண்டில் பிற்பகுதியில் ஆரம்பித்து நானும் எனது புதல்வனும்காலஞ் சென்று போன எமது குடும்பத்தினர் சிலரும் தொடர்பு கொள்ள முயற்சித்தோம் அவர்களிற் சிலர் மறு பிறவிகளை எடுத்து விட்டனர். இன்னும் சிலர் ஆகாய மண்டலத்தில் சஞ்சரித்து நின்றனர். முடிவில் 1944, தை மாதம் என் மனைவியின் ஆவியோடு தொடர்பு கிடைத்தது. ஆங்கில அட்சரங்களே அவர் பேச்சை நமக்கு அறிவுறுத்தியன. சொற்கள் தமிழ்ச் சொற்களே எவ்வித மெனில் “என்னடா தம்பி கூப்பிட்டனி” “யுயெனய வுhயஅடில முழழினையni” என்று ஆங்கில அட்சரங்களால் எழுதிக் காண்பிக்கப்பட்டது. எனது மனைவியின் முதலாவது வினா? “அம்மா எங்கே?” என்பதே ஆகும். எனது மாமியார் உடனே அவ்வறைக்கு வரவழைக்கப்பட்டார். இந்நிலையில் நாம் எல்லோர் உள்ளமும் உணர்ச்சி மயமாகவே அழுதுவிட்டோம். அப்போது ஆவி “எல்லோரும் அழுகின்றார்கள்” என்று கூறிவிட்டு “எனது சகோதரிகள் சுகம் எப்படி?” எனக் கேட்டது. அதன் பின் அவரது புதல்விகள் அழைத்து வரப்பட்டு அச்செய்தி ஆவிக்கு அறிவிக்கப்பட்டதும் ஆவி “ சந்தோசம்” என்று தன் திருப்தியைத் தெரிவித்துக் கொண்டது. எனது முதற் புதல்வி தாயார் இறக்கும் பொழுது ஈராண்டுப் பருவத்தையே அடைந்து இருந்தாள். இரண்டாவது புதல்வி பிறந்து இரண்டு நாட்களிலே அஃதவது கார்த்திகை மாதம் 1925 ம் ஆண்டிலியே இச் சம்பவம் நடைபெற்றது. “நீ எங்கே இருக்கிறாய்?” என்று ஆவியிடம் கேட்டபோது “கோகத்தில் இருக்கிறேன்” என்று பதில் வந்தது. அங்கு சிவபெருமானுக்கு மலர்மாலை தொடுப்பதே தனது பணி என்றும் கூறியது. எனக்கு கிடைத்துள்ள செய்திகளின் பிரகாரம் கோகமே மிக உயர்ந்த நிலையாகும்.

வெறிறகரமாக நடத்தப்பட்ட மற்றொரு ஆவியுலக சம்பாஷணை, 1932. ல் மரணமான என் தந்தையாருடன் பேசியதாகும். இவரும் சிவபெருமானுக்கு மலர்மாலை தொடுக்கும் பணியையே புரிந்து வந்ததாகவும் அவர் எனக்கு கூறினார். “கோகத்தில்” இரவென்பது கிடையாது. எங்கும் பேரொளி நிறைந்துள்ளதால் எந்நேரமும் ஆனந்த மயமாகவே அவர்கள் உள்ளனராம். நித்திரை என்பது அவர்களுக்குக் கிடையாது. ஆனால், தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது அவர்கள் வழக்கமாம். அவர்கள் உண்பதுங்கிடையாது, கோகம் என்னும் இவ்வந்தர மண்டல வாசிகளான ஆத்மாக்கள் அதற்கு கீழ் நிலையில் உள்ள மண்டங்களுக்குப் போய்வரும் சுதந்திரத்தைப் பெற்றிருந்த போதும் நரகத்துக்கு மட்டும் போய் வர முடியாது. தாங்கள் வரும்பிய நேரத்தில் முக்கியமாக அவர்களுக்கு நிவேதனங்கள் செய்யப்படும் நேரத்தில், அவர்கள் பூவுலகுக்கு வந்து போவர். தந்தையார் இறந்த பின்னர் எனது இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளை அவர் கண்டதும் பேரு வகை கொண்டார். இதன் காரணமாக அவர் விடைபெறும் பொழுது “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்” என்று மும்முறை கூறினார்.

1944 தை மாதந் தொடக்கம் 1948 ஆனி வரைக்கும் குறைந்தது நான்கு மாதங்களுக்கு ஒரு தடைவையாவது எனது தந்தையாரை ஆவி ரூபத்திற் கண்டு பேசி வந்தேன். எனது கிராமத்துக்கு ஐந்து மைலுக்கப்பால் எனது சகோதரி வசித்து வந்தார். அவரது கணவர் 1944 ம் ஆண்டின் முற்பகுதியில் காலமானார். இதை நான் எனது தந்தையாருக்குத் தெரிவித்ததும் அவர் மிகுந்த கவலையுடன் :எப்போபுது?” எக் காரணத்தால்? என்று கேட்டார். கேள்விகள் எல்லாம் சிறியவையே ஆனாலும் அவை அவரது அளவிறந்த உணர்ச்சியை வெளியிட்டன. அதன் பின்னர் எப்பொழுது பேசினாலும் சகோதரியைப் பற்றி விசாரியாமல் விடமாட்டார். பேச்சுக்கள் இயற்கையாய் விளங்கியதோடு சகோதரியை அவரது வீட்டுப் பெயரைக் கொண்டே அவர் குறிப்பிட்டு வந்தார். “அந்த வீட்டிலே அவள் எவ்விதம் தனியே இருப்பாள்?” உணக்கு ஒரு பாரம், இவை போன்றவையாக விருக்கும் அவர் பேச்சு.

எனது மைத்துனரின் 31 ஆவது சிராத்ததினத்துக்கு எமது உறவினர் யாவரும் எனது சகோதரி வீட்டில் எதிர்பார்க்கப்பட்டனர். இத்தினத்திற்குச் சில நாட்களுக்கு முன்பாக எனது தந்தையார் சகோதரி வீட்டில் இருந்து கொண்டு இத்தினத்தில் தம்மை அழைக்க வேண்டு மென என்னையும் சகோதரரையும் வேண்டிக்கொண்டார். ஏதற்காக அவர் இவ்விதம் விரும்பினபரென்பதையும் என்ன பேச எண்ணியுள்ளார் என்பதையும் அவர் தெரிவிக்க வில்லை. சிராத்ததினத்தன்று வேலை அதிகமா இருந்தபடியால் ஆறுதலாக அவருடன் பேசுஞ் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. எனவே சில நாட்கழித்து அவருக்கு சில செய்திகளை அறிவிப்பதற்காக நான் அவரை அழைத்தேன். ஆப்பொhழுது அவர் தம்மை அதிக நேரம் சிராத்த தினத்தன்று காத்துக் கொண்டிருக்கும்படி நான் செய்து விட்டதாக என்னை ஏசியதை எப்பொழுதுமே மறக்க முடியாது. கடுமையான அவர் ஏச்சு அவருக்குரிய விசேஷ பாணியிலேயே அமைந்திருந்தது.

1946 ம் ஆண்டு எனது மகளுக்கு மாப்பிள்ளை நிர்ணயித்த பின்னர் அம்மாப்பிள்ளை இன்னாரின் மகன் எனத் தந்தையாருக்குக் கூறினேன். விபரம் தெரிந்ததும் மலாயாவில் டைபிங் என்னும் பிரதேசத்தில் தாம் அவருடன் பழக்கமாக இருந்ததாக தெரிவித்தார். எனது தந்தையார் மலாயாவில் அரசாங்க ஊழியத்தில் அமர்ந்திருந்தார். 1925 ம் ஆண்டு அவர் அந்நாட்டை விட்டு மீண்டார். இவ்வுண்மைகள் பின்னால் எனது மருமகன் தனது தந்தையாரை அழைத்துப் பேசிய பொழுது ஊர்ஜீதம் செய்யப்பட்டன. அவரோ இரண்டாம் அல்லது மூன்றாம் மண்டலத்திற் சஞ்சரித்து வந்ததாக அறிந்தோம். அவருக்குந் திருமணச் செய்தி அறிவிக்கப்பட்டது.

1947 ம் ஆண்டு எனது மகளிடம் தாய்மைக் குறிகள் தோன்றிய காலத்தில், அந்தத் தகவலை எனது தந்தையாருக்கு நான் அறிவித்தேன். ஆனால் அவருக்கு கற்பச் சிதைவு ஏற்பட்டது. எனவே இவ்விஷயத்தை நாம் தந்தையாருக்கு அறிவிக்க வில்லை. எனினும் அவரை பல மாதங்களின் பின் அழைத்த காலத்தில் அவர் ஞாபகமாக “எப்படி மகளின் சுகம்?” என்று கேட்க மறக்கவில்லை.

1947 ம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் எனது சகோதரி தனது வீட்டை ஒரு வேலையால் காவலில் வைத்துவிட்டு வெளியூருக்கு செல்லும்படி எற்பட்டது. அவர் இல்லாத சமயத்தில் 1000 ரூபா பொருட்கள் அங்கிருந்து திருடப்பட்டன. கார்த்திகை மாதத்தில் இதை நான் தந்தையாருக்கு அறிவித்தேன். அவரோ, சகோதரியை வெளியூர் செல்ல அனுமதித்ததற்காக என்னைக் கடுமையாகக் கண்டித்தார். “உங்களுக்கு முகத்தில் இரண்டு புண்முகங்கள் இருக்கின்றன. அவை கண்களல்ல. ஆனால் நாங்கள் ஆத்மீகக் கண்ணால் விஷயங்களைபட பார்க்கிறோம்: எனக்குறிப்பிட்டார்.

அதன் பின்னர் 1948 ம் வருடம் வைகாசி மாதம் 20 ம் திகதி நான் அவருடன் பேசினேன். அவர் கேட்ட முதலாவது கேள்வி “எப்படி சகோதரியின் விஷயங்கள்” என்பதுதானாகும். நான் காணமல் போன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட வில்லையென்றும் கள்வர்களும் தப்பிவிட்டார்கள் என்றும் தெரிவித்தேன். அவ்வருடன் தை மாதத்தில் 63 வயதான ஒரு மைத்துனரை நான் இழந்தேன். அவர் சந்ததியற்று மறைந்தார். எனது தந்தையார் என்னிடம் “இரண்டு விதவைகளையும் என்ன செய்யப்போகிறாய்” எனக் கேட்டார். இரண்டு விதவைகளும் வேறு யாருமல்லர். ஒருவர் மைத்துனர் மனைவி. மற்றவர் என் சகோதரியாவார். அவர்களைப் பற்றி அவரிடம் என்ன செய்ய வேண்டுமென்று நான் கேட்டேன். “அவர்கள் தத்தம் வீடுகளில் இருக்கட்டும்” என்று பதில் வந்தது. இந்துப் பஞ்சாங்கத்தின் பிரகாரம் எனது தந்தையாரின் சிராத்தம் வைகாசி மாதத்தில் நிகழ்வது. அவர் இத்தினத்தில் தான் கொழும்புக்கு எனது சகோதரைக் காணச் சென்றதாகவும் அச்சமயம் என் மூத்த புதல்வியை அங்கு கண்டதாகவும் குறிப்பிட்டார். எனது மகள் அப்பொழுது கொழும்பில் தான் இருந்தார். நேரம் ஒன்பது மணியாகவே பூசைக்கு நேரமாகிவிட்டதெனக் கூறி எம்மிடம் விடைபெற்றுக் கொண்டார். போகும்பொழுது “சந்சிதானந்தா!! சந்சிதானந்தா!! சந்சிதானந்தா!!” என்று அவர் மும்முறை கூறினார்.

எனது தந்தையாரைப்பற்றி இம்மட்டே கூறவிருக்கிறது. எனது குடும்பத்திலிருந்து “கோகம்” போயிருக்கும் மற்றவர் எனது தந்தையாரின் மூத்த சகோதரியாவார். “கோகமே” ஆவி மண்டலங்களில் மிகச் சிறந்தது. இந்த அம்மையார் 1938 ம் ஆண்டு காலமானார். தனது வாழ்நாளில் அவர் எனது பிள்ளைகள் மீது வெகு அன்பாய் இருந்து வந்தார். இறந்த பின்னர் ஆவியுலகிலும் அவர் இந்தப் பேரன்பை தொடர்ந்து காட்டினார். என்னுடன் பேசும் பொழுது எனது பிராயம் வந்த புத்திரிகளுக்கு விரைவில் மணஞ்செய்து வைக்கும் ப டிவற்புறுத்துவார். மேலும் எனது தந்தையார் எனது மைத்துகர் மரணத்தைப்பற்றி தாம் கேள்விப்பட்டதாகவும் கூறினார். ஒரு நாள் நான் அவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரது மரணத்தின் பின் எனக்கொரு புத்திரன் பிறந்ததாகக் குறிப்பிட்டேன். அவர் தான் nயைனைப் பார்க்க வேண்டுமெனக் குறிப்பிட்டார். அவன் தூங்கிக் கொண்டிருந்தான். இருந்த போதிலும் அவருக்கு காட்ட அவகைத் தூக்கி வந்தோம். அப்பொழுது அவர் “அவனைப் பார்த்தால் சரியாக உன் தகப்பனார் சின்ன வயதில் இருந்தது போலவே இருக்கிறான்” எனக் குறிப்பிட்டார். நான் அவர் செய்து வரும் கடமைகள் என்ன வென வினாவியதற்குச் சிவபிரான் முன் தேவாரம் ஓதுவதே தந்தொழில் எனக் குறிப்பிட்டார். எந்நேரமும் பேரின்பமும், பேரொலியும் நிறைந்த சிவபிரான் சந்நிதியில் தாம் வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.



  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 12:54 am

இவர் என்னுடன் உரையாடும் பொழுதெல்லாம், எனது வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தன் ஓரே மைந்தன் வீட்டுக்குப் பொய்வருவது வழக்கம். ஓர் ஐந்து நிமிடங்களுக்கு அமைதி நிலவும். அதன் பின் பேசுவார். மகன் அங்கே வராந்தாவில் இருப்பதாக அல்லது வேறு இடத்தில் இருப்பதாகவோ எமக்கு அறிவிப்பார். இக் கனவான் எம்முடன் சில சமயங்களில் ஆவியுலகப் பேச்சுவார்த்தைகளைக் கேட்பதுண்டு. பிரிந்தோரின் வார்த்தைகளைக் கேட்கும் பொழுது அவர் கண்ணீர் சிந்தி அழுவதும் உண்டு. இந்தக் கனவான் தான் நான் முன் கூறியபடி 1948 ம் வருடம் தை மாதத்தில் இவ்வுலக வாழ்க்கையை நீத்துச் சென்ற 63 வயதான எனது மைத்துனர்.

அவரது மனைவியார் விதவையாகி சில காலத்தின் பின்னர் தனது கணவன் ஆவியுலகில் எந்நிலையில் உள்ளார் என்பதை அறிந்து சொல்லும் படி என்னிடம் கேட்டுக் கொண்டார். இதற்கிணங்கி நானும் எனது மகனுமாக அவரை வரழைத்தோம். அப்போது தாம் “லோம்” என்னும் மூன்றாம் பிரிவில் இருப்பதாகவும், அதி சீக்கிரத்தில் உலகிற் பிறப்பெடுக்க நேரிடுமெனவும் தெரிவித்தார். நாங்கள் அவரிடம் அவரது மனைவியாரின் துக்கத்தைப்பற்றி பிரஸ்தாபித்த பொழுது அவர் “மனிதன் இறக்காமலிருக்க முடியுமா?” என்று கூறியதொடு தமது மனையாளின் ஏழ்மைக் குணத்தைத் தாமறிவர் என்றுங் கூறினார். எனது தந்தையார் எமக்கு காட்சியளித்த பொழுது தாம் “கோகம்” போகும் வழியில் “லோமில்” எனது மைத்துனரைச் சந்திப்பதாகக் கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது.

1950 ம் கார்த்திகை மாதம் 17 ந் திகதியில் எனது இம்மைத்துனருடன் நான் சமபாஷணை செய்த பொழுது எனது மாமியாரும் சகலனும் இறந்து விட்டார்களென்பததை நான் தெரிவித்தேன். அப்பொழுது அதற்கு “அடே இதென்ன குஞ்சி எனடனென்று?” (குஞ்சி யென்பது அவர் வழக்கத்தில் என் மாமியாரை விளிக்கும் பெயர்) அதற்கு நாங்கள் வெசுவாதத்தில் இறந்தவென்று விடையளித்தோம். பின் அவர், “இங்கே வருகின்றார்களோ தெரியாது, ஆனந்தம்” என்று சொல்லித் பிறவி எடுக்க இருக்கிறதென்றும் தனது மனைவியையும் இறந்த கசலனுடைய மகைவியையும் கவனமாகப் பார்க்கும்படியும் எனக்குச் சொன்னார். இப்படியாக நாங்கள் இவருடன் சம்பாசணை செய்யும் பொழுது எங்களுடன் அடுத்த கிராமத்து உறவினர் ஒருவர் இவைகளைகட கேட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது அவ் ஆவி “நீர் நாகலிங்கமோ?” என்று கேட்டது. அதற்கு அவ்வுறவினர் “ஓம்” என்று விடையளித்தார். அப்பொழுது அவ்வாவியின் மனைவியாரும் சகோதரியும் அழுதார்கள். அதற்குப் “பெட்டைகள் என்ன செய்கிறது” என்று கூறினார். பின்பு தான் பிறவி எடுப்பாரென்றும், ஆனால் முருகனை விட மனமில்லை “என் பாவம்” என்று கூறி ஆனந்தம் என்று சொல்லி எங்களிடமிருந்து பிரிந்தார்.

எனது முதலாவது மருமகன் தனது தந்தையாரை ஆவியுலகில் இருந்து வரவழைத்துப் பேசினார், அப்பொழுது அவர் எனது மருமகனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கேய் இருக்கிறாய்?” என்பதுதான். அதற்கு அவர் மனையாள் இல்லத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு எங்களையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் ஆவி சில மைலுக்கப்பால் வசித்து வந்த மகளைக்காண எம்மிடமிருந்து சில நேரம் பிரிந்து சென்றது. அதக் பின் அது எம்மிடம் வந்த பொழுது “ஏன் தங்கச்சி மிகவும் மெலிந்து போய்யிருக்கிறாள்?” என என் மருமகனிடம் கேட்டது.

மேலே கூறியதெல்லாம் இறந்து போன எனது சுற்றதத்தினரைப் பற்றியது. சில நண்பர்களும் எங்கள் உதவியால் தங்கள் இறந்து போன சுற்றத்தாரோடு பேசினர், ஆனால் வேறு சலரைப் பொருத்தவரையில் அவர்கள் புனர்ஜன்மம் எடுத்து விட்டனர். இன்னும் சிலர் நரகத்திலிருந்தனர். மற்றுஞ் சிலர் வௌ;வேறு மண்டலங்களில் இருந்தனர். கொழும்பிலுள்ள பிரபல வழக்கறிஞர் ஒருவரின் சகோதரர் தமது தந்தையாரோடு பேச முடிந்தது. இன்னொருவர் சில வருடங்களின் முன் இறந்த ஒரு பிரபல அரஙாங்க குமாஸ்தாவை அழைத்துப் பேசினார். ஒரு கல்வி நிலையத்தின் அதிபர் தமது அன்னையாருடன் பேசினார்.

1944ல் எனது நண்பரொருவர் தமது இறந்து போன தகப்பனாருடன் பேச வரும்பினார். அவரது உறவினர் பலரும் அவ்வரையில் இருந்தனர். அவர்கள் யாரும் தங்கள் உறவினருடன் பேச முடியவில்லை ஏனெனில் அவர்கள், எல்லோரும் நரகத்தில் இருந்தனர். எனது சினெகிதர் மிகவும் ஏமாற்றம் அடைந்து விட்டனர். இருந்த போதிலும் தமது தெய்வபக்தி மிகுந்த மாமனார் ஒருவரை அவர் அழைத்துப் பார்த்தார். அதிஷ்டவசமாக அவர் ஆவியுலகின் நல்லபடி ஒன்றில் இருந்ததால், அவருடன் பேசுவதற்கு முடிந்தது. அவரிடம் “நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வெண்டும்” என்று கேட்டபொழுது “மாளயம்” செய்யும்படி கூறப்பட்டது. (மாளயம் எனபது சிராத்தத்திற்கு இன்னொரு வார்த்தையாகும்.) எனது சினேகிதரின் தாயார் அப்பொழுது அவர் பக்கத்தில் இருந்தார். சிராத்தத்தை ஒழுங்காக செய்யாதற்காக அவர் மகனை மிகவும் நொந்து கொண்டார்.

ஓரு சினேகிதரின் மனைவி தனது இறந்து போன தந்தையார் நிலைமைபற்றி அறிய ஆசை கொண்டார். எனவே சினேகிதர் தன் மாமனாரை வரவழைத்தார். மாமனார் தோன்றியதும் மருமகனை அவரது வீட்டுப் பெயரால் அழைத்தார். இம் மாமனார் அவரது தாயரொடு உடன் பிறந்த உரிமை கொண்டே அவ்வாறழைத்தார். அவர் ஜீவாந்தராயிருக்கும் பொழுது தகது மகளை இம் மருமகனுக்கே மணஞ்செய்து வைக்க விரும்பினார். ஆனால் அவர் இறந்து போன பின்னரெ இந்த ஆசை பூர்த்தியாயிற்று. இந்த விபரத்தை நண்பர் அறிவித்ததும் ஆவி ஆனந்தமெய்தி, அவரை ஆசிர் வதித்தது. அதன் பின் தமது மகளைக்காண ஆவி எம்மைவிட்டுச் சென்றது. அவர்கள் வீடு எமதில்லத்திலிருந்து ஆறுமைலுக்கப்பால் அமைந்திருந்தது. சில நிமிடத்தில் ஆவி அங்கிருந்து திரும்பி, இரவு அதிக நேரமாகிவிட்டதால் நண்பரின் மனைவி அவரை எதிர்பார்த்துக் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தது. பின்னால் விசாரித்ததில் இது உண்மையென்று தெரியவந்தது.

ஒரு இந்தியத் தோழர் தமது இறந்து போன தந்தையைக் கண்டு பேச விரும்பினார். அவர் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு கணவான். தந்தை உயிரோடு இருக்கும் பொழுது அவர் இந்தியாவை விட்டு புறப்பட்டதில்லை ஆனால் இவருடைய சகோதரர் தங்கியிருந்தார். ஆதலால் இவரும் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். தந்தை ஆவிரூபத்தில் சந்தித்தபொழுது “நீ இங்கு எப்படிடா வந்தாய் ராசா” எனத் தென்னிந்தியப் பேச்சு முறையிற் கெட்டார். ராசா என்பது இவரது வீட்டுப் பெயர். அவர் தான் யாழ்ப்பாணம் வர நேரிட்டதன் காரணத்தை விளக்கினார். நாம் இவருடைய தகப்பனாரிடம் கொழும்பிலுள்ள அவரது புதல்வரை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஐந்து நிமிடத்தில் கழித்து அவர் திரும்பி வந்தார். தனது புதல்வர் பத்திரிகை வாசிப்பதில் ஆழ்ந்த கருத்துச் செலுத்தியிருப்பதாகவும் அவருக்குப்பக்கத்தில் மற்றொரு கனவான் உட்கார்ந்திருப்பதாகவும், பத்திரிகை படித்துக்கொண்டிருந்த அவரைத் தம்மைக் கவனிப்பதற்காக, மதில் மேல் இருந்த பல்லியைத் தான் சத்தமிட செய்ததாகவும் அவர் கூறினார். மறு நாள் எனது நண்பர் தனது சகோதரருக்கு எழுதிய கடிதமொன்றில் முன்தினத்தில் அவர் உட்காந்திருப்பதைப் பற்றி முழு விபரங்களையும் தெரிவித்தார். இதிற் தவரில்லையென்பதை அவரது சகோதரரும் ஊர்சிதப்படுத்தினார். இந்தப் பேச்சு வார்த்தைகள் ஆவியுலக்கத்தில் நாம் நடத்திய பரிசோதணைகளில் மிகச்சிறந்தொன்றாகும்.

1948, வைகாசி 24ல் மற்றொரு நண்பர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன தனது மைந்தனோடு தொடர்பு கொள்ள விரும்பினார். உடனே பதில் கிடைத்தது. “நாம் பூசை செய்து கொண்டிருக்கிறோம், ஆதலால் இப்பொழுது ச்திக்கமுடியாதிருப்பதற்கு வருந்துகிறேன் இந்துப் பஞ்சாங்கப்படி அது ஒரு விஷேச தினமல்லவே என நான் யோசித்தேன் “விசாகத்தை முன்னிட்டு நாம் மூன்று நாட் பூசை நடத்துகிறோம்” எனப் பறகு பதில் கிடைத்தது. வைகாசி 22ந் திகதியே விசாகதினமாகும். பின் வைகாசி 27ல் சம்பாஷணைகள் நடைபெற்றன. அவருடைய மகன் ஜனமமெத்திருப்பதாக பதில் கிடைத்தது. ஆகவே எனது நண்பர் தனது இறந்து போன மாமனாருடன் தொடர்பு கொள்ள முற்பட்டார். அவர் ஆவியுலகின் இரண்டாவது படியான “ஜேமில்” இருந்தார். தன்னை இனங்கண்டு கொள்ள முடியுமா என்று எனது நண்பர் அவரைக் கேட்டார். அதற்கு “ஓ இதென்ன?” என உடனடியாக பதில் கிடைத்தது. இந்த இறந்து போன கனவான் கொழும்பு நகரின் ஒரு பகுதியான் வெள்ளவத்தையிலிருக்கும் தகது புதல்வர்களையும் புதல்வியையும், பேரப்பிள்ளைகளையும் சந்திக்க விரும்பினார். பின் ஐந்து நிமிடங்கழித்துத் திரும்பி வந்து அவர்களைனவரும் எதைப்பற்றியோ சம்பாவித்துக் கொண்டிருப்பதாக கூறினார். அவர் தனது மருமகனோடு கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாகப் பேசிக்கொண்டிருந்து விட்டு பூசைக்கு நேரமாகவே விடைபெற்றுக் கொண்டார்.

1950 ம் ஆண்டு சித்திரை மாதம் 22ந் திகதி நான் கொழும்பில் இருந்த பொழுது ஒரு நண்பனுடன் சம்பாஷணை செய்யும் பொழுது இறந்த ஆன்மாக்களையும் பற்றியும் பேசினோம். நண்பர் ஆத்மீகத்தில் நம்பிக்கையில்லாதவர். இருந்தும் அவர் இவற்றைப்பற்றி அறிய வேண்டுமென வரும்பினார். அவர் தம்முடைய காலஞ்சென்ற மைத்துனர் தம்முடன் பெசவேண்டு மென விரும்பினார். முதல் இவர் ஒரு கலாசாலை ஆசிரியராக இருந்த மைத்துனர் ஒருவரைக் கேட்டார். கேட்கும் பொழுது கேட்டவருடைய மனைவியாரும் ஆசிரியர்களுடைய நண்பர்களும் அருகில் இருந்தார்கள். முதல் எங்களுக்கு துணைபுரியும் ஆவி அவர் கோகத்தில் பூசையில் இருக்கிறார் என்றும் அவரை அரை மணி நெரத்தின் பின் அழைக்கலாம் என்று பதில் விடைதந்தது. சற்று நேரத்தின் பின் ஐந்து நிமிடம் இருக்கிறதென்று விடைதந்தது. ஐந்து நிமிடத்தின் பின் அவ்வாசிரியரின் ஆவி வந்தது. வந்தவுடன் “உங்களுக்கு என்ன தேவை? உங்கள் எல்லாரையும் கண்டது மிகவும் சந்தோஷம்” என்று ஆங்கிலத்தில் கூறியது. அதற்கு நாங்கள் “நீங்கள் உவ்விடத்தில் எப்படி?” என்று கேட்டோம். அதற்கு அவ்வாவி “நான் பிள்ளைகளுக்கு செய்த புண்ணியத்தின் பயனாக இப்பதவியில் இருக்கிறேன்” என்று கூறிற்று. நாங்கள் பின் அவருக்கு “உங்கள் பாடசாலை நன்றாக நடக்கிறது” என்று சொன்னோம். அதற்கு அவர் அடிக்கடி அப்பாடசாலைக்கு சென்று பார்க்கிறதுண்டு என்று கூறினார். பின் எங்களில் ஒருவர் தாங்கள் யார் என்று சொல்லும்படி கேட்டார். அதற்கு “நீங்கள் பார்ப்பதற்கு கண்கள் இறுக்கின்றது. ஆனால் நாங்கள் இதழலிருந்து உலகம் முழுவதையும் பார்க்கலாம்” என்று கூறியது. பின், “நீங்கள் உங்கள் மனைவி மக்களுக்கு ஏதேனும் அறிவிக்க வேண்டியிருக்கிறதா?” என்று கேட்டோம் அதற்கு அவர் தங்களுக்கு இவ்வுலகில் பற்று இல்லை. என்று விடைதந்தார். பின் “ஆனந்தம்” என்று கூறி உத்தரவு பெற்றுப் பிரிந்தார்.

அடுத்த மைத்துனர் ஓர் ஆங்கில மருத்துவர் அவரை அழைத்தவுடன் “ஹல்லோ” என்று விளித்தார். (இவர் வழக்கத்தில் அந்நண்பனை அழைக்கும் முறை இதுவாகும்) பின்கு அந்த நண்பன் உங்களுக்கு என்ன செய்ய வேனும் என்று கேட்டார். அதற்கு அந்த ஆவி “எனக்கு மாளயம் வேண்டும்” என்று விடை தந்தது. நாங்கள் உங்களுக்கு அதனால் என்ன பயன் என்று கேட்டோம். அதற்கு அவ்வாவி, “ஆண்டவனுக்குக் கிட்டப்போகலாம்.” என்று விடை அளித்தது.

மேற்கூறிய விசயம், நாம் நடத்திய பேச்சு வார்த்தைகளில் ஒரு சில பகுதியாகும். ஒவ்வொரு பேச்சு வார்த்தையும் இரண்டு மணிநேரம் நடைபெற்றிருக்குமாதலால் அவற்றை விரிவாக எழுத முடியவில்லை. கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளிலும் இத்தகைய பேச்சு வார்த்தைகளில் நாம் பல மணி நேரம் செலவிட்டிருக்கிறோம். இறந்து போன ஒவ்வொருவரையும் சந்திப்பது என்பது முடியாத காரியம். இறந்தவர்கள் நரகத்தில் இருந்தால், அவர்களை அழைத்துப் பேச முடியாது. சிலர் நல்ல படியில் இருக்கலாம். ஆனால் தங்களை அழைப்பவர்களைக் கண்டு பேசுவதில் அக்கறை இல்லாதிருக்கும் பட்சத்தில் வர மறுத்து விடுவார்கள். 1912ல் எம்மைப்பிரிந்த எனது பாட்டனார் ஒருவரை நாம் சந்தித்துப் பேச முற்பட்டோம். அவர் உயிரோடிருக்கும் பொழுது என் மீது அதிக அன்பு பாரட்டி இருந்தாலும் என்னை சந்திக்க மறுத்து விட்டார். ஆவி உலகின் மூன்று படிகளான “கோகம், Nஐhம், லோம்” ஆகியவற்றில் இருப்பவர்கள் வர விரும்பினால் அவர்களை அழைத்துப் பேசலாம். அவர்களுடைய உரையாடலானது, உயிரோடு இருந்த காலத்து, உங்கள் பால் அவர்கள் பாராட்டியஅ ன்பிலேயே தங்கியிருக்கிறது.

ஆவியுலகின் உயர்படியான “கோகத்துக்குத் தலமைதாங்கும் கடவுளாக சிவபெருமான் இருக்கிறார். இரண்டாவது படியான ‘ஜேமின்’ தலமைக்கடவுளாக அம்மன் இருக்கிறார். மூன்றாவது படியான ‘லோமின்’ தவமைக்கடவுளாக முருகப் பெருமான் விளங்குகிறார். இந்த மூன்று தெய்வங்களும் வௌ;வேறானவை போன்று காணப்படினும், அவர்களனைவரும் சிவனுக்குள்ளேயே அடங்கியவர்களாயிருக்கின்றனர். “கோகத்தில் உள்ளவர்கள் சிவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்று கூறுகின்றனர். “ஜோமில் இருப்பவர்கள் ஆச்சி உனக்கு உதவி செய்வாள்” எனக் கூறிகின்றனர். ஆச்சியென்பது அம்மன். “லோமில் இருப்பவர்கள் “முருகப் பெருமானின் கிருபை உனக்கு கிடைப்பதாக.” முருகப் பெருமானின் பாதத்தை நீ அடைவாயாக எனக் கூறுகின்றனர். “உங்களுக்காக நாம் செய்ய வேண்டியதென்ன?” என்பதே இறந்தவர் பால் கேட்கப்படும் பொதுவான கேள்வியாகும். அதற்கு “மாளயம்” செய்யுமாறு அவர்கலெல்லோரும் கேட்டிருக்கிறார்கள். “மாளயம்” என்பது இறந்தவர்கள் பெயரால் இந்துக்கள் செய்யும் ஒரு கிரியையாகும். மாளயத்தாள் அவர்களடையும் நன்மை என்ன என்று கெட்ட பொழுது, அது தாங்களிருக்குமிடத்தில் தங்களுடைய நிலைமைகளை சீர்படுத்துவதாக அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்திகள் கிடைத்த சமயத்தில் இந்துமதக் கோட்பாடுகளின் பெறுமதி எனது சிந்தனையில் பெரிதும் புலப்பட்டது. ஆதிகாலம் தொடக்கம் இருந்து வரும் பலக்பவழக்கங்களையும், சாஸ்திரங்களோடு சம்பந்தப்பட்ட கிரியைகளையும் நவ நாகரீக இந்துக்கள் பலர் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இறந்து போன ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில் இருப்பதாக தெரியவருகிறது. தோத்திரப் பாடல்கள் பாடுவது, சிவபெருமானுக்கு பூமாலைகள் தொடுப்பது, சாமரை வீசுவது முதலியவை பிரஸ்தாப கடமைகளைச் சேர்ந்த கைங்காரியங்கள் என்பதை அவர்கள் பெச்சுக்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன். அவர்களனைவரும் தெய்வீகப் பரவசத்தில் ஆழ்ந்தவர்களாயிருக்கின்றனர். அவர்களுக்கு கவலையே கிடையாது. கோகத்தில் உள்ளவர்களே அதிக சுகம் அனுபவிப்பதாக அறிய முடிகிறது. ஏனெனில் கோகத்தில் இருப்பதே ஒரு பெருமை வாய்ந்த விசயம் ஆவியுலகின் இரண்டாவது படியிலுள்ள ஒரு மாது விடுத்த செய்தியை நான் படிக்கிறேன். கீழ்படிகளில் உள்ளோர் மேல்படிகளுக்குப் பொக முடியாது. இறந்து போனவர்கள் எல்லோரும் தங்களுடைய ஆத்மீக வாழ்வின் ஜீவாதார நோக்கங்களை அறிந்துள்ளனர். நரகத்திலுள்ளவர்களைப் பற்றிய விசயங்களெல்லாம் மூடு மந்திரங்களாயிருக்கின்றன.



  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 12:55 am

ஆவியுலகின் ஓரேபடியில் எனது உறவினர் சிலர் இருந்தபோதிலும் நமது ஆத்மீகப் பேச்சு வார்த்தைகள் தெரிந்து கொண்டாவால்லாது, அவர்கள் ஒருவரையொருவர் அறிய மாட்டார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவர்களிலொருவருக்கு தெரிவிப்பதன் மூலம் மற்ற சுற்றத்தாரும் அறிந்து கொள்கின்றனர். சில சமயங்களில் என் தந்தை என்னோடு தொடர்பு கொண்டு ஒரு செய்தியையும் விட்டுச் சென்றிருக்கையில் எனது நண்பர்களை அவர்களுடைய இறந்து போன சுற்றத்தாரோடு பேசச் செய்வதற்கு உதவி செய்வதில் நான் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுது “உனது தந்தை உன்னோடு பேச விரும்புகிறார்” என்ற செய்தி வந்தது. ஒரு முறை ஒரு ஆவியினுடைய பேச்சில் வந்தது அதைநாங்கள் “அறிஞ்சு நடப்பர்” என்று வாசித்தோம். உடனே ஆங்கிலத்தில் “ழே” என்று சொல்லி, அதன் பின் “வுhழசழற” என்று சொன்னது. அதையே நாங்கள் “எறிஞ்சு நடப்பர்” என்று வாசித்தோம். இதிலிருந்து அவர்களின் விவேகத்தை நாங்கள் நன்கு அறியலாம்.

இந்துக்களின் திருவிழா நாடகளில் அவர்கள் வெளிப்படாமல் இருப்பது மற்றொரு கறிப்பிடத்தக்கதொரு விசயமாகும். “சிவராத்திரி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்தசட்டி, பங்குனிக் கடைசித்திங்கள்; ஆகிய நாட்களில் தமக்கு விசேட பூசை இருப்பதன் காரணமாக அவர்கள் வெளிவர மறுத்து விட்டனர். இது போன்ற இதர நாட்களைப் பற்றி பரிபூரணமாக எனக்குத் தெரியவில்லை.

இந்தப் பரிசோதணைகளைப் பரிசுததமற்ற முறையில் ஒருவரால் மெற்கொள்ள முடியாது. மேலும் பரிசுத்தமற்ற பேர்வழிகள் சமீபத்திலிருந்தாலும் பரிசுத்தமற்ற சுற்றாடல்களிலும் இவை வெற்றியலிப்பதில்லை. மதத்தோடொட்டிய ஒரு சூழ்நிலையில் ஆத்மீக மனோபாவத்துடனேயே இம் முயற்சியைக் கைக்கொள்ள வேண்டும்.

1948. ஆனி 11ம் திகதி யன்று இரு சினேகிதர்கள் ஆவியுலக சம்பாசணைக்காக வந்தனர் அவர்களில் ஒருவர் சங்கீத உபாத்தியாயர். மற்றவர் ஆங்கிலப் பாடசாலை ஆசிரியர். அப்பொழுது எமக்கு கிடைத்த பதில் பின்வருமாறு:- சாம்பசிவம்! பரமானந்தம்! எனது ஐந்து நாட்கடமை முடிந்தது. இனி நான் கடவுளோடு ஒன்றாகுவேன் இனிமேல் என்னை அழைக்க வேண்டாம்.

இதற்கு பதிலாக ஐந்து நாட்களென்பது எமக்கு விளங்கவில்லையே எனக் குறிப்பிட்டோம். இதற்கு “நமது ஐந்து நாட்கள் உங்களுக்கு ஐந்து வருடங்களே. ஒரு வருடத்திற்குப் பின்னர் என்னை அழைக்கலாம்” என்ற பதில் கிடைத்தது. அப்பொழுது இந்து இதியாசங்களிற் குறிக்கப்படும் “முத்தி” (விடுதலை) “ஆத்மன்” “பரமாத்மன்” முதலியவற்றின் நினைவு எனது ஞாபகத்துக்கு வந்தது.

இறந்து போனவர்களோடு எனக்குள்ள அனுபவத்தை இங்கு நான் கூறியிருக்கிறேன், இந்து மத சித்தாங்களை ஒருவர் வாசித்தறிந்து தம்முடைய முடிவுக்கு வருமாறு நான் விட்டு விடுகிறேன். இந்தியாவின் தூய்மையான கலாசாரத்தைச் சிறந்த முறையில் விளக்குவதற்கும், அதைப்பற்றி நன்கறியச் செய்வதற்கும், இத்தகைய விசாணைகளை தொடர்ந்து நடத்திவர வேண்டுமென்பதே எனது நோக்காகும். உண்மையைவிடப் பெரியதொன்றுமில்லை.


தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கு மிறைவா போற்றி.

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !





Scientists of international caliber in our day belive in life after death.

Sir Oliver Lodge to the British:

“I tell you with all the strength of the conviction which I can muster that we do persist …I say it on distinct scientific grounds. I say it because I Know that certain friends of mine who have died stiil exit because I have talked with them.”

Dr. William Brown, M, D., D. SC., F. R, C. P. one of the most advanced psychologists of our time, declaring in a London lecture:

“Nevertheless I think I rane myself with our President…….. in claiming for the evidence that has been brought forward by the Society for Phychical Research during the last fifty years that it is sufficient to make survival of bodily death, scientifically speaking, extremely probanble.”

Other scientists in this category are Crookes, Lombroso, Alfred Russel Wallace, Camille Flamarion, Professors Bozzano, Morselli and Passini of Italy and Professor Larkin of America.

Dr. Swedenborg one of the foremost thinkers of Europe was a man of great wisdom. In his book “HEAVEN AND HELL” he writes about heaven.

“To show what those things are presented to the sight of the angles according to correspondences, I will mention one single indtance for the sake of illusteration. To those who are in intelligence there are presented gardens and paradises, full of trees and flowers of every kind. The trees are planted ih most beautiful order, and so interwoven as to form arbours, with arched entrances and walks around, all with such beauty as words cannot describe. They who are in intelligence walk in these paradises and gather flowers and weave garlands with which they adorn little children” (176)




  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Mon Aug 09, 2010 6:01 am

அன்புள்ள நண்பர்களே, இது ஒரு அற்புதமான கட்டுரை. மிகவும் அருமையாக, தெளிவாக எழுதப்பட்டுள்ளது. வெளியிட்ட்மைக்கு மிகுந்த நன்றி.
தமிழகத்தில் திரு. விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன் "ஆவியுலக ஆராய்ச்சி மையம்" ஒன்றை நடத்தி வருகிறார். கூடவே "ஆவிகள் உலகம்" என்ற மாதப் பத்திரிகையும் நடத்தி வருகிறார். இப்பத்திரிகையில் பல உண்மை நிகழ்ச்சிகள் சொல்லப்படுகின்றன. நானும் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அவற்றில் ஒன்றை அனுப்ப முயன்ற போது இந்த தளம் நான் டைப் அடித்து வைத்து இருந்த எழுத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது இத்தளத்தின் "தமிழ் எழுதி" மூலம் மறுபடியும் டைப் அடித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 09, 2010 10:11 am

என்னாப்பா இது எதுவுமே நம்புற மாதிர்யே இல்லையே




  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் U  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் D  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் A  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் Y  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் A  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் S  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் U  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் D  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் H  ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் - நவரத்தினம் A
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Mon Aug 09, 2010 10:17 am

உதயசுதா wrote:என்னாப்பா இது எதுவுமே நம்புற மாதிர்யே இல்லையே

தங்களின் கருத்து தவறானது. உங்களுக்கு இதில் சுயமான அனுபவம் இல்லை என்பதால் மற்றவர் அனுபவத்தை நம்ப முடியவில்லை என்று சொல்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக