புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
3 Posts - 2%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
420 Posts - 48%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
28 Posts - 3%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:35 am

நிலவரியில் மாற்றம்

நிலவரியில் சர்.சி.பி., என்ன மாற்றம் கொண்டு வந்தார் என்பதை டி.வி.ஆரே தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.

குமரி மாவட்ட விவசாயிகளுக்கு நிலவரி ஒரு பயங்கரமான சுமையாய் இருந்தது. அன்றைக்குச் சில நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 35 ரூபாய் வரை வரி இருந்தது. பெரும்பான்மையான நிலங்களுக்கு 28 ரூபாய்க்குக் குறைவில்லை. 1929ம் வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால், 75 படி கொண்ட கோட்டை நெல் 3 ரூபாய்க்கு வந்து விட்டது. விவசாயிகள் தாங்களாகவே பயிரிட்டு மீதம் உள்ள நெல்லை அப்படியே விலைக்குக் கொடுத்துவிட்டாலும் நிலவரி கட்ட முடியாத அளவு வரி உயர்ந்து இருந்தது. அப்படியும் விவசாயிகள் வரியைக் கட்டிக் கொண்டு தான் இருந்தனர்.

"இந்த நிலையில் திருவிதாங்கூர் ராஜ்யத்திற்குச் சர்.சி.பி., திவானாக வந்தார். நிலவரிச் சுமையால் தவித்துக் கொண்டிருந்த மக்கள் அவரிடம் முறையிட்டனர்.

உழவர்களின் உண்மையான கஷ்டத்தைப் புரிந்து கொண்ட அவர், இந்தியாவில் எந்த ராஜ்யத்திலும், மாகாணத்திலும் செய்யாத ஒரு புதுமையாக, நிலத்தின் அடிப்படை வரியில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

"அதுதான் நிலத்தின் அடிப்படை வரி. ஒரேயடியாக நிலம் சம்பந்தப்பட்ட எல்லா வரிகளையும் நீக்கிவிட்டு, ஏக்கர் ஒன்றுக்குச் சராசரி ஒரு ரூபாய் வரி என்றும், தண்ணீர் வரி தனியாக ஒரு ரூபாய் என்றும் ஆணையிட்டார். அத்தோடு, பெரும் நிலக்கிழார்களுக்கு ஒரு சிறு தொகையை விவசாய வருமான வரியாக கொண்டு வந்தார். 25 ஏக்கர் உள்ள ஒருவர் முன்பு 700 ரூபாய் வரி செலுத்திக் கொண்டிருந்தால், இந்த மாற்றத்திற்குப் பிறகு 50 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்றாயிற்று. இதனால் குமரி மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:37 am

"இந்தப் பெரும் செயலைச் செய்ததற்காக அவருக்கு நாகர்கோவிலிலோ, கன்னியாகுமரியிலோ முழு உருவச்சிலை வைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து உருவாகி, முக்கியஸ்தர்கள் ஒரு கூட்டம் போட்டு, அதைச் செயல்படுத்த ஒரு கமிட்டி அமைத்து, அந்தக் கமிட்டிக்குச் செயலாளராக என்னைத் தேர்ந்தெடுத்தனர்.

"குமரி மாவட்ட மக்கள் இவ்வாறு ஒரு முடிவெடுக்க, அது அன்றைக்கு ஒரு புயலைக் கிளப்பி விட்டது. அது என்ன தெரியுமா... கொச்சியில் அப்போது திவானாக இருந்த சண்முகம் செட்டியாருக்கும் கடற்கரையில் ஒரு சிலை வைக்க முயற்சி நடைபெற்றது. சண்முகம் செட்டியார் கொச்சி மக்களுக்கு செய்த நன்மைகளுக்காக அம்முயற்சி எடுக்கப்பட்டதா அல்லது திவானால் நன்மைகள் பெற்ற சிலரால் அம்முயற்சி தொடங்கப்பட்டதா என்பதைப் பற்றி என்னால் கூற முடியாது.

"இந்த இரண்டு திவான்களுக்கும் இப்படி சிலைகள் வைக்கப்பட்டால், இந்தியாவில் உள்ள 600 சமஸ்தானங்களிலும் அங்குள்ள திவான்கள் தங்களுக்கும் சிலை வைக்கத் தொடங்கி விடுவர் என்று அஞ்சி, அப்போது வைசிராயாக இருந்த லார்டு வெல்லிங்டன், "பதவியில் இருக்கும் போது யாருக்கும் சிலை வைக்கக்கூடாது' என்று கண்டிப்பாக ஒரு உத்தரவைப் போட்டார்.

"இதன் காரணமாக நாங்கள் சிலை வைக்கும் முயற்சியைக் கைவிட்டதாக நினைக்கக் கூடாது. இவ்வாறு ஒரு சட்டம் வருவதற்கு முன்பே தனக்கு சிலை வேண்டாம் என்றும், வேறு பயனுள்ள காரியம் ஏதாவது செய்யலாமே என்றும் சர்.சி.பி.,யே கருத்து வெளியிட்டு விட்டார்.

"பின்னர் பூங்கா அமைக்க முடிவு செய்தோம். அதற்குப் பல அரசியல் போட்டிகள். இதையெல்லாம் வெற்றிகரமாகச் சமாளித்து, கமிட்டியினரின் ஒத்துழைப்போடு பூங்காவை அமைத்தேன். பூங்காவை நகரசபையிடம் ஒப்படைக்க இருந்தோம். ஆனால், அன்றைய நகரசபை தலைவர் இதற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தார். அவர் அன்றைக்கு எம்.எல். ஏ., வாகவும் இருந்தார்.

"அவருடைய எதிர்ப்பைச் சமாளிக்க எங்களுக்கு இரண்டு பேர் உதவினர். ஒருவர் ஆர்.சங்கரநாராயண ஐயர், அப்போது நாகர்கோவிலில் துணை நீதிபதியாகவும், பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர். மற்றொருவர் எம்.கே.நீலகண்ட ஐயர். அன்றைய திருவிதாங்கூர் அரசாங்க தலைமைச் செயலாளர். இவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறாமல் என்னால் இருக்க முடியாது'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:37 am

மணியகரம் தீர்வை

திருவிதாங்கூர் ராஜாங்க காலத்தில் நாஞ்சில் நாட்டில் விதிக்கப்பட்ட நிலவரிகளில் ஒன்றின் பெயர் "மணியகரம்' என்பதாகும். இந்த நில வரி காரணமாக நாஞ்சில் நாட்டு விவசாயிகள் பெரும் சுமையில் சிக்கித் தவித்தனர். இந்தக் கொடுமையான வரியை நீக்கக் கோரி நாஞ்சில் நாட்டு விவசாயிகள் 18 ஆண்டு காலமாகப் போராடி வெற்றி கண்டனர். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய கடுக்கரை மகாதேவன் பிள்ளை கூறுகிறார்:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:38 am

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளி

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை நவ., 16, 1914ல் பிறந்தவர். விவசாயிகளின் உற்ற நண்பர். மணியரகம் நிலவரியில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை விடுவிக்க 18 ஆண்டு போராடி வெற்றி கண்டவர். கடுக்கரை உயர் நிலைப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். குமரி மாவட்ட விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 PHOTO_05f


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:38 am

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை

அப்போது அரசாங்கத்தின் நிலம், மகாராஜாவின் நிலம், மகாராஜா குடும்பத்தாரின் நிலம், பத்மநாப சுவாமிக்கான நிலம் எனப் பாகுபாடு செய்யப்பட்டு, அதற்குத் தனித்தனியான நில வரிகள் விதிக்கப்பட்டன. பண்டாரவகை, ஸ்ரீ பண்டாரவகை, ஸ்ரீபாதவகை, கண்டு கிரிஷி இப்படி வரிகளுக்குப் பெயர்.

"நாஞ்சில் நாட்டின் பெரும் நிலங்கள் பத்மநாப சுவாமிக்கு என ஒதுக்கப்பட்டு அதற்கு "மணியகரம்' வரி என மிக அதிகப்படியாக வரி வசூலிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஏப்., 3, 1949ல் "மணியகரம் கண்டன மாநாடு' ஒன்றை கடுக்கரையில், நீதிபதி சத்யநேசன் தலைமையில் நடத்தினோம். மாநாட்டைக் கவிமணி திறந்து வைத்தார். பெரும் அளவில் விவசாயிகள் தங்கள் சொந்தப் பிரச்னைக்காக கூடிய முதல் மாநாடு அது.

வரிப் பாக்கிக்காக உழவர்களது நிலங்களை ஏலம் விட அரசு உத்தரவிட்டது. அரசின் உத்தரவை எதிர்த்து நடைபெற்ற விவசாய இயக்கத்திற்குப் பெரும் ஆதரவு தந்தவர் டி.வி.ஆர்.,

இதெல்லாம் "தினமலர்' ஆரம்பமாவதற்கு முந்திய கட்டம். இந்தப் பிரச்னைக்காக விவசாயிகளைச் சந்தித்து, பிரச்னையைத் தெளிவாக்க, ஒன்று திரட்ட, கவிமணியுடன் டி.வி.ஆர்., பல தடவை எங்கள் கிராமத்திற்கு வருவது உண்டு.

வரிப் பாக்கிக்காக நிலத்தை ஏலம் விட அரசு உத்தரவிட்டபோது, "தினமலர்' திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டு விட்டது. இந்த ஏலத்தை விவசாயிகள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று எங்கள் குரலாகத் "தினமலர்' தனது செய்திகள், தலையங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் தொடர்பு கொண்டது. ஜப்தி என்று அரசு முடிவு எடுத்தபோது, டிச., 13, 1952ல் "மணியகரம் பிரச்னை' என்றே "தினமலர்' விரிவாகத் தலையங்கம் எழுதியது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு, நில ஜப்தி என்பது சரியான நடவடிக்கையாகாது. விவசாயிகளால் இந்த வரியைக் கொடுக்க முடியாத நிலை. இதை எதிர்த்து விவசாயிகள் பல இடங்களில் சத்தியாகிரக போராட்டம் நடத்துகின்றனர். எந்த ஒரு நபரும் ஏலம் எடுக்க முன் வரவில்லை, என்பதை அரசுக்கு, "தினமலர்' சுட்டிக் காட்டியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:39 am

அப்போது சிதம்பரநாதன் மந்திரி. இதை பற்றி விசாரிக்க ஒரு கமிட்டி அமைத்தார். அவர் இதை அமல் படுத்துவதற்குள் அந்த மந்திரிசபை கவிழ்ந்தது. பின்னர் பட்டம் தாணுப்பிள்ளை ஆட்சி செய்தார். பி.எஸ். நடராஜப்பிள்ளை "ரெவின்யு' மந்திரியாயிருந்தார். பட்டம் தாணுப்பிள்ளைக்கும் நாஞ்சில் நாட்டு மக்களுக்கும் உள்ள உறவு பற்றித்தான் எல்லாருக்கும் தெரியுமே. போராட்டம் தொடர்ந்தது. விவசாயிகள் கொஞ்சமும் சோர்ந்து விடாமல் "தினமலர்' பார்த்துக் கொண்டது. "பிரச்னை இங்கு மட்டும் எழுந்தால் போதாது; தலைநகரமான திருவனந்தபுரத்திலேயே எழுப்பப்பட வேண்டும். அங்கே ஒரு மாநாடு கூட்டுங்கள்' என்று டி.வி.ஆர்., கூறியதோடு, ஒரு மாநாட்டிற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அந்த மாநாட்டில் டி.வி.ஆரும் கலந்து கொண்டார். 1953 அக்டோபரில் பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் "தினமலர்' எட்டுக் கால பேனர் செய்திகளாக வெளியிட்டது. இவை பட்டத்தின் மனதை மாற்றுவதற்குப் பதில், எதிர் உணர்வை ஊட்டியது.

வரித்தள்ளுபடி இயலாத ஒன்று என அரசு அறிவித்து விட்டது. திருவனந்தபுரம் மாநாட்டிற்குப் பின் வரி கொடா இயக்கம் நடத்துவது பற்றி நாங்கள் டி.வி.ஆரிடம் கலந்து ஆலோசித்தோம். கடுக்கரை, பூதப்பாண்டி, திருப்பதிசாரம், ஆனூர் இங்கெல்லாம் நிலத்தை ஏலம் எடுக்க யாரும் முன் வரவே இல்லை.

பின்னர் குமரி மாவட்டம் பிரிந்தது. 18 ஆண்டுகளாக விவசாயிகள் தொடர்ந்து நடத்திய இந்த எழுச்சி மிக்க போராட்டம் ஒரு சாதனை. இதைச் செய்து முடிக்க எங்களுக்கு ஒரே துணை "தினமலர்' தான்.

"தமிழ்நாட்டுடன் சேர்ந்த' பின்னர் "ரயத் வாரி' வரிக்குட்பட்டோம். அது முந்திய வரிகளை விடக் கொடுமையானது.

"பின்னர் "வரி கொடுப்போர் மாநாடு' நாகர்கோவிலில் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்றது. பிரச்னைகளை விளக்கித் "தினமலர்' ஒரு முழுப்பக்கக் கட்டுரை வெளியிட்டது.

"தமிழக அரசு 1963ல் ஒரு முடிவுக்கு வந்தது. ஜூலை 1, 1964 முதல், ஜூலை 1, 1971 வரையுள்ள நிலவரி 31.5 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. "மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 164 விவசாயிகள் பயன் அடைகின்றனர்' என்ற செய்தியோடு பிரச்னைக்கு "தினமலர்' முற்றுப்புள்ளி வைத்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:39 am

"ஒரு பத்திரிக்கை விவசாயிகளின் செய்திகளைப் பிரசுரிப்பதோடு, தனது பரிவைக்காட்டி விட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீண்டகாலப் போராட்டத்தில் விவசாயிகள் மிகவும் சோர்ந்து விடுவது இயல்பு. அவர்களுக்கான தொழிற்சங்க இயக்கங்கள் எதுவும் கிடையாது.

"எந்த ஒரு அரசியல் கட்சியும் முழுநேரம் 18 ஆண்டுகள் விவசாயிகளுடன் போராட முன்வரப் போவதில்லை. அவர்களுக்குத் தக்க ஆலோசனைகள் கூறவும் யாரும் கிடையாது. ஆலோசனை கூறினால் போதாது. அதைச் செயல்படுத்தவும், உதவி செய்யவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

"இந்த "மணியகரம்' பிரச்னையை டி.வி.ஆர்., அணுகிய முறை மிகவும் வியப்பைத் தருகிறது.

என்.எஸ்.கே.,
நெகிழ்ந்து போனார்

நாகர்கோவிலில் "டவுன் கிளப்' 1889ல் நிறுவப் பட்டது. இங்குள்ள ஸ்ரீ மூலம் ராமவர்மாவின் பெயரிலான வாசகசாலை மிகவும் பெரியது. அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலேயே மிகப் பெரிய வாசகசாலை இதுதான்.

"கிளப்' என்றால் இன்றுள்ள "கிளப்புகளை" போல் இதை எண்ணிவிடக்கூடாது. அன்றைய அரசியல் தலைவர்களில் பிரபலமானவர்கள் இங்கு விஜயம் செய்து தேசபக்தக் குரல்களை எழுப்பி உள்ளனர். இந்தக் "கிளப்' பிற்குப் பல்வந்தராய் தேசாய், பண்டிட் ஜவஹர்லால் நேரு முதலானோர் கூட வந்துள்ளனர். இந்தக் "கிளப்' பின் ஆயுட்கால உறுப்பினர்கள் 58 பேர். இதில் டி.வி.ஆர்., தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் இதன் செயலாளர். அப்போது அவர் உருவாக்கிய டென்னிஸ் கிரவுண்ட், தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் மிகவும் புகழ் பெற்றதாகக் கருதப்பட்டது. ஆயுட்கால "மெம்பர்'களுக்குச் சந்தா 100 ரூபாய். அதுமட்டும் போதாது. அவருக்குப் பல தகுதிகள் வேண்டும். யார் வேண்டுமானாலும் ஆயுட்கால மெம்பராக இங்கு சேர, "கிளப் ' சட்டத்தில் இடமில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:39 am

குமரி மாவட்டத்திற்கு ரயில் மற்றும் பொதுப் பிரச்னைக்கு அகில இந்தியத் தலைவர்களையும், தமிழகத் தலைவர்களையும், இங்கு அழைத்து விழா எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார் டி.வி.ஆர்., இதனால் பல காரியங்களைச் சாதித்துள்ளார். இந்தக் "கிளப்'பின் பணிக்குள் நுழைந்த வரலாற்றை டி.வி.ஆர்., விவரிக்கையில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மனம் நெகிழ்ந்து உணர்ச்சிவசப்பட்ட ஒரு சம்பவத்தையும் கூறினார். அந்தச் சம்பவம் என்.எஸ்.கே.,யை மட்டுமல்ல டி.வி.ஆரையும் நமக்கு இனம் காட்டக் கூடியது. டி.வி.ஆர்., கூறுகிறார்:

நாகர்கோவில் நகரில் ஒழுகினசேரி என்ற இடத்தில் ஒரு "கிளப்' இருக்கிறது. அதில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், மற்றும் பல அதிகாரிகளுமே பெரும்பாலான உறுப்பினர்கள். அதில் நான் என் 21வது வயதில் உறுப்பினரானேன். ஏனைய உறுப்பினர்கள் "கிளப்' பின் மரபிற்கு விரோதமாக ஒரு இளம் வாலிபனை உறுப்பினராகச் சேர்த்தது சரிதானா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

"நான் அங்கத்தினரான அடுத்த வருடமே அந்தக் "கிளப்' பிற்கு ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டது. அதைச் சமாளிக்க முடியாமல் நிர்வாகத்தினர் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினர். அந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது என்று ஒரு வழியும் தெரியாமல் திகைத்து விவாதித்துக் கொண்டிருக்கும் போது நான் எழுந்து, "இதை நான் சமாளித்துக் தருகிறேன். ஆனால், காரியங்கள் விரைவாக நடப்பதற்காக என்னைச் செயலாளராக்கினால் நலம்' என்று சொன்னேன். பெரியவர்கள் நாம் இருக்கும் போது இந்தச் சிறு பையனிடம் எப்படிப் பொறுப்பைக் கொடுப்பது என்ற திகைப்பேற்பட்ட போதிலும், வேறு வழியின்றி என்னையே செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். ஒரு மாதத்திற்குள் சிக்கல் எல்லாவற்றையும் நீக்கிக் "கிளப்' பின் நிதிநிலையைச் செவ்வனே செய்து விட்டேன். அது முதல் 10 ஆண்டுக் காலம், ஒவ்வொரு ஆண்டும் ஏகமனதாக என்னையே செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். அந்தக் "கிளப்' பில் பத்து ஆண்டு காலம் சிறிதும், பெரிதுமாகப் பல காரியங்களைச் செய்து, பொதுமக்களின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறேன். சொல்லப்போனால், இதுதான் என் பொது வாழ்க்கையின் ஆரம்பம் என்று கூறலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:40 am

என்.எஸ்.கிருஷ்ணன்

"கலைவாணர்' என்று தமிழகம் பெருமையுடன் அழைக்கும் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் ஒழுகினசேரியில் நவ.,29, 1908ல் பிறந்தார். நான்காம் வகுப்புடன் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வறுமையில் வாடிய இவர், நாடகக் கொட்டகைகளில் சோடா கலர் பானம் விற்றுப் பிழைத்தார்.


அப்போது அவரைக் கவர்ந்தது நாடகக் கலை. 1925ல் டி.கே.எஸ்., சகோதரர்கள் நாடகக் குழுவில், 17வது வயதில் சேர்ந்தார். 1935ல் டி.கே.எஸ்., சகோதரர்களின், "மேனகா' திரைப்படம், இவரது புகழை மேலும் வலுவடையச் செய்தது.

சிறந்த சிந்தனையாளர், மனிதாபிமானி, கொடைவள்ளல், நகைச்சுவை அரசு என்றெல்லாம் பாராட்டப்பட்டவர். 1955ல் தென்னிந்திய நடிகர் சங்கம் இவருக்கு "கலைவாணர்' என்ற பட்டம் அளித்து பாராட்டியது. தமிழக மக்களைக் குலுங்க குலுங்க சிரிப்பில் ஆழ்த்திய நகைச்சுவை மன்னர் ஆக., 30, 1957ல் காலமானார்.


தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 10 PHOTO_05g


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:41 am

அந்த "கிளப்'பின் நிதி நிலையைப் பெருக்குவதற்கான முயற்சி எடுத்த நேரத்தில் நடை பெற்ற ஒரு சிறு சம்பவத்தைக் கூற ஆசைப்படுகிறேன். அப்பொழுது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாத் தொழிலில் அமோகமான புகழும், பணமும் சம்பாதித்துக் கொடிகட்டிப் பறக்கிற காலம். நமது "கிளப்' பிலிருந்து 2 பர்லாங்கு தூரத்தில், அவரது புதிய பங்களா இருக்கிறது. நான் அங்குப் போய் அவரை அணுகி , "கிளப்'பின் ஒரு ஆயுள் சந்தாதாரராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர் என் வரவு கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து, உபசரித்து மிக்க மகிழ்ச்சியுடன் தன் செக் புத்தகத்தை எடுத்து ஆயுள் சந்தாவிற்கு உள்ள தொகைக்கு எழுதி கொடுத்து விட்டுச் சிரித்துக் கொண்டே கூறினார்:

ஐயா நான் உங்கள் "கிளப்' பில் உறுப்பினராவதில் சந்தோஷப்படுகிறேன் என்பது மட்டுமல்லாமல், மிகவும் பெருமைப்படுகிறேன் என்று சொல்ல ஆசைப்படுகிறேன். ஏனெனில், நான் மிகச் சிறு பையனாக இருக்கும் போது, "கிளப்' பைச் சேர்ந்த டென்னிஸ் மைதானத்தில் பந்து எடுத்துப் போடும் பையனாக மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்திற்குக் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அப்படி இருந்த எனக்குக் "கிளப்'பின் அங்கத்தினர்களில் நானும் ஒருவன் என்று உள்ளம் பூரிக்கிறது' என்றார். புகழுச்சியில் மனிதன் இருக்கும் போதும் தன் பழைய வாழ்க்கையை மறக்காமல் அதைக் கூறுவது இன்று தனது கவுரவத்தையும் குறைத்து விடுமோ என்ற கவலை இல்லாமல் அப்படியே வெளியில் சொல்ல யாருக்குத் தைரியம் வருகிறது. என்.எஸ்.கே., அப்படிப்பட்ட ஓர் அபூர்வமான கலைஞர்.

நான் செயலாளராக இருக்கும் போது டாக்டர் பட்டாபி சீதாராமையா, சீனிவாச சாஸ்திரிகள், சர்.சி.பி.ராமசாமி ஐயர் போன்ற பெரியவர்கள் எல்லாம் வந்து உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

Sponsored content

PostSponsored content



Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக