புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
25 Posts - 3%
prajai
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பென்னிங்டன் நூலகம் Poll_c10பென்னிங்டன் நூலகம் Poll_m10பென்னிங்டன் நூலகம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பென்னிங்டன் நூலகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 11:39 pm

பென்னிங்டன் நூலகம் Front-view

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், பெரியகோபுரம், பெரியதேர் என்பது போலவே ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இன்னொரு தனியானதொரு சிறப்பு தமிழகத்தின் மிகச்சிறந்த, மிகப்பெரிய நூலகத்தில் ஒன்றான பென்னிங்டன் நூலகம் அமைந்திருப்பது.

அழகான கட்டிட அமைப்பு, அமைதியான சூழ்நிலை வசதியான இருக்கை வசதி , காற்றோட்டமான படிக்கும் அறைகள் நன்றாக தனித்தனியாய் பிரித்து , வைக்கபட்டுள்ள நூல்கள் புத்தகங்களை நகல் எடுக்க வசதியாக நூலகத்திற்குள் "ஜெராக்ஸ்" வசதி நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்க உதவும் தடையில்லா மின்சார வசதி , சுத்தமான குடிநீர் வசதி , சுகாதரமான கழிப்பிட வசதி , நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள், இன்முகத்தோடு சேவைபுரியும் நூலக உதவியாளர்கள் என ஞானக் கருவூலமாய் அறிவுக்களஞ்சியமாய் அனைவரையும் அரவணைக்கும் பென்னிங்டன் நூலகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுகிற வகையில் நூலகம் 132 ஆண்டுகளாய் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது . பெண்களுக்கென தனிப்பிரிவு அவர்களுக்கு பயன்படும் புத்தகங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள பெரிய நூலகங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள 134 ஆண்டு பழமைவாய்ந்த பென்னிங்டன் பொதுநூலகம் 2-வது இடத்தை வகிக்கிறது.

இங்கு, 1953-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

1875-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் ஆசியுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமசந்திரராவ், டி. ராமஸ்வாமி ஐயர், டி.கிருஷ்ணராவ், முத்துஐயங்கார் மற்றும் முத்துச்சாமி பிள்ளை ஆகியோர் இணைந்து, இந்த நூலகத்தை ஆரம்பித்தனர்.

மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும் நகரில் தர்மசிந்தனை உள்ளவர்களையும், நூலக வளர்ச்சிக்கு பாடுபடும் மனப் பக்குவம் கொண்டவர்களையும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்களில் துணைத் தலைவர், செயலர், பொருளாளர் கொண்ட குழு இந்நூலகத்தை நிர்வகித்து வருகிறது. தற்போது மாவட்ட ஆட்சியரையும் சேர்த்து 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

நூலகத்தில் தமிழில் 20,113 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 21,277 புத்தகங்கள் என மொத்தம் 41,390 புத்தகங்கள் உள்ளன.

நூலகத்தின் அரிய தமிழ்ப் புத்தகங்களில், கலித்தொகை (1887), த்ருவ சரித்திர கீர்த்தனை (1890), இங்கித மாலை மூலமும் உரையும் (1904), தியாகராசலீலை (1905), வள்ளலார் சாஸ்திரம் (1907), திருமந்திரம் (1912) ஆகியன. இதுபோக, பல அபூர்வமான தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.

தினசரி சராசரியாக 360 வாசகர்கள் நூலகத்துக்கு வந்து பயனடைந்து செல்கின்றனர். நூலகத்துக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 17 நாளிதழ்களும், மாத மற்றும் வார இதழ்கள் தமிழில் 69-ம் வருகின்றன. ஆங்கிலத்தில் மாத மற்றும் வார இதழ்கள் 47-ம், ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்புடைய இதழ்கள் 46-ம் வருகின்றன.

1,344 சதுர அடியில் சொந்தக் கட்டடத்தில் இயங்கிவரும் இந்த நூலகம், ஆங்கிலப் பிரிவும், அரிய புத்தகங்கள் அடங்கிய பிரிவும், பழைய இலக்கியங்களைத் தேடுபவர்களுக்கும், போட்டித் தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கும் வேடந்தாங்கலாக அமைந்துள்ளது.

வாசகர்களின் உபயோகத்துக்காக, பழமையான அரிய புத்தகங்கள் சிடியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சிறுவர்களுக்கென தனிப்பகுதி அமைத்து அவர்களே நூல்களை எடுத்து படிக்கும் விதத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்கு நல்லறிவையும், ஒருமைப்பாட்டினையும் வளர்க்கும் பொருட்டு வாரந்தோறும் நீதிக்கதைகள், ஆன்மீகக்கதைகள், சுதந்திரப் போராட்டக் கால கதைகள் ஆகியன தொலைக்காட்சியில் படமாகக் காட்டப்படுகின்றன.

குடியரசு தலைவராக இருந்தபோது டாக்டர்.அப்துல்கலாம் நூலகத்தைப் பார்வையிட்டு, பார்வையாளர்கள் பதிவேட்டில் நூலகத்தின் செயல்பாடுகள் மிக நன்றாக இருப்பதாக பதிந்துள்ளார். மேலும், இந்த் நூலகத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் வருகின்றனர்.

பாவேந்தர் பாரதிதாசனது கவிதை "" புத்தகசாலை "" என்னும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

“புத்தகங்கள் தருமுதவி பெரிது! மிகப்பெரியது கண்டீர் !
மனிதரெலாம் அன்பு நெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனி மனிதத் தத்வமாம் இருளைப்போக்கிச்
சக மக்கள் ஒன்றென் பதுணர்வதற்கும்
இனிதினிதாய் எழந்த உயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர் தரூ சுவடிச்சாலை
புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்
புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்
தமிழர்க்கு தமிழ் மொழியிற் சுவடிச் சாலை
சர்வகலா சாலையைப் போல் எங்கும் வேண்டும்
தமிழிலிலாப் பிறமொழி நூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்
அமுதம் போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்
அழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,
சுமை சுமையாய் சேகரித்துப் பல்கலை சேர்
துறைதுறையாயப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்”

என்றும்.

“நூலெல்லாம் முறையாக ஆங்கைமத்து
நொடிக்கு நொடி ஆசிரியர் உதவுகின்ற
கோலமுறும் செய்திதாள் அனைத்தும் ஆங்கே
குவிந்திருக்க வகை செய்து தருதல் வேண்டும்
மூலையிலோர் சிறு நூலும் புது நூலாயின்
முடிதனிலே சுமந்து வந்து தருதல் வேண்டும்”.

-வாசகர் திரு இராஜாராம்

நான் திருவில்லிபுத்தூரில் வசித்து வருகிறேன். நான் பி.எஸ்.ஸி. முடித்துள்ளேன். எனக்கு ஐ.ஏ.எஸ். படிக்க விருப்பம். அதற்க்கென coaching class/centre ன்று படிக்கும் அளவுக்கு எங்களிடம் பணவசதி இல்லை. ஆனால் தன்னம்பிக்கை உள்ளது. அந்த தன்னம்பிக்கையை மெல்ல என்னுள் விதைத்தது இந்த நூலகம். இந்த நூலகத்தில் என் தேர்வுக்குத் தேவையான புத்தகங்கள் அனைத்தும் உள்ளன. என் தோழி Chennai -ல் Coaching centre-ல் படித்து வருகிறாள். அந்த centre -ல் படிக்கக் கூறிய பாடபுத்தகங்களனைத்தும் விலையுயர்ந்தவை. அந்த புத்தக விலையைக் கேட்டதில் அவளின் கனவு வெறும் பகல்கனவானது. அவ்வாறில்லாமல் இந்த நூலகத்தில் விலையுயர்ந்த புத்தகங்களும் கிடைப்பதற்கு அறியதென உள்ள புத்தகங்களும் இங்கு உள்ளன என்பதில் பெருமகிழ்ச்சி . அதுமட்டுமில்லாமல் இங்கு வரும் வாசகர்களுக்கு எளிதில் அறியும் வகையில் ஒவ்வொரு ரேக்கின் முன்புறமும் Index அமைத்திருப்பது மிகவும் வசதியாக உள்ளது. தேடுவதற்கு முடியாத புத்தகங்களையும் எங்களது நூலகப்பணியாளர்களின் உதவியுடன் உடனடியாக பூர்த்தி செய்ய முடிகிறது.

அத்யாவசிய தேவைகளுக்கென பாத்ரூம் மற்றும் குடிநீர் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு மாணவன் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த பாட ஆசிரியரிடம் ஒரு அன்யோன்யம் இருக்க வேண்டும். அதுபோலதான் வாசகர்களின் மனநிலையை அறியும் வகையில பல அரிய வகை புத்தகங்களும் இங்கிருப்பது இந்த நூலகத்தின் சிறப்பு.

-வாசகி செல்வி. சத்யா

நாட்டின் வருங்கால தூண்களாக கருதப்படும் குழந்தைகளை மனதிற்கொண்டு குழந்தைகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது . இந்தப்பிரிவு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரமான நூல்கள் காணப்படுகின்றன . தினமும் சிறுவர்கள் வந்து செல்கின்றனர் . சனி ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் . முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் வீடியோ படம் காண்பிக்கபடுவது இதன் சிறப்பாகும் . இது தான் நூலகத்தின் கருவறையாகும் .

இந்நூலகத்தில் வாரம் ஒரு முறை "தி எம்பிளாய்மெண்ட் நியூஸ்" மற்றும் "எம்பிளாய்மெண்ட் சர்வீஸ்" இரண்டு பிரதிகளாக வாங்கப்படுகின்றன . வட்டார மாநில தேசிய உலக செய்திகளை அறிந்து கொள்ள தினமும் 300க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வதாக வருகைப் பதிவேடு சான்று பகர்கிறது. தமிழ் பிரிவு எளிதாக அடையாளம் காணும் வண்ணம் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பல ஆசிரியர்கள் எழுதிய நாவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ராஜம் கிருஷ்ணன, பிரபஞ்சன், சு.சமுத்திரம, எம்.எஸ் உதயமூர்த்தி, ஜெயகாந்தன், திலகவதி ஐ.பி.எஸ். அகிலன் ,சோ, தி.ஜானகிராமன, மேத்தா, சுந்தரராமசாமி, கல்கி, ஜி, முதலியவர்களும் மற்றும் திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் பிரபலமானவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன, கவிஞர் வைரமுத்து, ஆகிவர்களின் நூல்களும் இடம் பெறுகின்றன. பெண்ணியம் சம்பந்தமான நூல்களும் பல ஆய்வு நூல்களும் மற்றும் மனோவியல், பொருளாதாரம்,சமயம், ஜோதிடம் போன்ற பிற துறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் காணப்படுகின்றன.

வரலாற்றில் பழங்காலம், இடைக்காலம், நவீனகாலம் என பிரிக்கப்பட்டு பல புத்தகங்கள் உள்ளன. R.C.Majumdhar, Romila Thapar, Nilakanda Sastri, K.M. Panikarஆகியோர் எழுதிய நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அரசியல், பொருளாதாரம், சமூகவியல் நூல்களும் நிறைய உள்ளன.

மொத்தத்தில் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளுக்கு தேவையான குறிப்புகள் எடுப்பதற்கு அதிக அளவிலான தொகுப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இயற்பியல், வேதியல் , உயிரியல், கம்யூட்டர், எஞ்சினியரிங் தகவல் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளுக்கும் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் வெளியாகும் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. கிடைப்பதற்கு அரிய புத்தகங்கள் கண்ணாடி அலமாரியில் பூட்டி வைத்து பாதுகாக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வாசகர் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களின் கருத்துக்கள் ஆலோசனைக்குட்படுத்தப்பட்டு பின் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்வடிவம் பெறுகின்றன.

-வாசகர் திரு இராஜேந்திரன்


வணக்கம் என் அன்பு பென்னிங்டன் நூலகமே!
உன்னை நினைக்குந் தோறும் பொங்கும்…
நன்றியுணர்ச்சியில் என் உள்ளம் கரைந்துருகிறது.
நூற்றிமுப்பத்திரண்டு ஆண்டுகள்


அடேயப்பா….

உன்னிலிருந்து இந்த நூற்றாண்டின் இப்புவியின்
உன்னதங்களையெல்லாம் தெரிந்து கொண்டேன்
பல நூற்றாண்டு வையக வரலாறுகளையும்
புரிந்து கொண்டேன்.


என் அன்பு பல்கலையே!
உன்னிடம் படித்துத் தேறியவர்கள்
இன்று எத்தனை துறைகளில்! எத்தனை பதவிகளில்!


அமைதிப் பூங்காவே!
நீ ஆத்திகர்களுக்கு ஞான வயல்
நாத்திகர்களுக்கு ஞானப்புதுநூல்
இலக்கிய நெஞ்சங்களுக்கு இன்பக் கவியேடு
மாணவர்களுக்குப் பயிற்சிப் பட்டறை
அறிவியலாற்கு ஊற்றுக்கேணி
பெண்களுக்குப் பண்புப்பள்ளி
எழுத்தாளர்களுக்கு இன்பச்சிறை
எல்லோர்க்கும் மலர்ச்சிப் பொய்கை
நூலக நதியே !
பழமையும் புதுமையும்
உன் இரு கரைகள்!


நாள் கதிரே!
நூன் கடந்த முப்பதாண்டுகள் உன்னில் பணியாற்றிய
எத்தனை எத்தனை பணியாளர்கள்
அவர்கள் அன்பும் பண்பும் கனிவும் பரிவும்
அவர்களோடு கொண்ட இனிய அனுபவங்கள்
என் கருவிழிக்குள் நிழலாடுகின்றன.


காலங்கள் யுகங்களான போதும்
அதில் அழியாத காவியம் நீ!
இதோ உன்னருகே அதன் அடையாளக்
கவிஞன் நான்!

-வாசகர் திரு. கவிதா தாசன்



பென்னிங்டன் நூலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக