புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
48 Posts - 43%
heezulia
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
414 Posts - 49%
heezulia
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_m10ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 4:40 pm

மார்க்க விடயங்களில் மிகவும் பேணுதலாக நடக்கும் ஒவ்வொரு கொள்கைவாதிகளும் சறுக்கி விழுகின்ற, தோற்றுப்போகின்ற ஒரு சம்பவம் தான் இந்தத்திருமணம் ஆகும். மார்க்க சட்டதிட்டங்களை பேசுவார்கள் பேணுவார்கள்.ஆனால் இந்த ஒரு விடயத்தில் மட்டும் மௌனியாவார்கள்.ஒரு சுன்னத்தைப் பேணுவதற்காக பல ஹராமான காரியங்கள் அரங்கேறுவதை இன்றைய திருமணங்களில் காணலாம்.நிக்காஹ்வை பள்ளிவாசல்களில் மிகவும் எளிமையான முறையில் நடாத்தி ஒரு பயானையும் நிகழ்த்தி விட்டு அதற்குப் பிறகு நடப்பதுவோ முழுக்க முழுக்க அநாச்சாரமும், ஆடம்பரமும், அநியாயமுமாகும்.

திருமணத்தில் நடக்கின்ற ஆடம்பரங்கள்

• ஹோட்டல் (Hotel) அல்லது மண்டபத்துக்கான செலவுகள்

• மணமக்களின் ஆடை அலங்காரத்துக்கான செலவுகள்

• மணமக்கள் அமரும் மேடை அலங்காரம்

• வீடியோ போட்டோவுக்கான செலவுகள்

• அழைப்பிதலுக்கான செலவுகள்

• பெண் வீட்டாரிடம் சுமத்துகின்ற செலவுகள்

• இன்னும் பல அநாச்சார, அந்நிய கலாச்சார செலவுகள்

• இறுதியில் விரயமாகின்ற குப்பையில் தஞ்சமாகின்ற சாப்பாடு

இவையனைத்திற்கும் பல லட்ச ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோசனமும் நன்மையும் கிடையாது.மாறாக இத்தகைய திருமணத்தின் மூலம் கடன்காரன் என்ற அந்தஸ்து மட்டுமே எஞ்சுகிறது.இந்த ஆடம்பரங்களும் அநாச்சாரங்களும் நாமே நம் மீது திணித்துக் கொண்டவை.இந்தப்பல லட்ச ரூபாய்களைக் கொண்டு எத்தனையோ வாழ வழியற்ற குடும்பங்களை வாழ வைக்க முடியும் என்பதை எவரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா? இதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளலாம்.ஏழை எளியவர்களும் நமக்கு துஆ செய்வார்கள்.பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும் சற்று கவனித்துப் பாருங்கள்.

வீண்விரையம் செய்யாதீர்கள்! வீண்விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன்
6:141)

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
(அல்குர்ஆன்
7:31)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண்விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்
17:26,27)

மணமகனுக்கு இவ்வநியாயத்தை எதிர்த்து போராட முடியாதா?

பெற்றோரையும் உற்றாரையும் எதிர்த்து நின்று தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கத் துடிக்கும் இளைஞர்கள் அதனை சாதித்துக் கொள்வதைப் போல் இந்த அநியாயத்தையும், ஆடம்பரத்தையும், அக்கிரமத்தையும் எதிர்க்க, போராட ஏன் அவர்களுக்கு தைரியமில்லை? மணமகன் மட்டும் ஒற்றைக்காலில் நின்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து இவ்வநியாயத்தை எதிர்த்துப் போராடினால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் பல லட்ச ரூபாய்கள் வீணாவதிலிருந்தும், கொடிய நரகிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

திருமண விருந்து எப்படி அமைய வேண்டும்?

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் திருமணங்களையும் அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்த திருமணங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.ஸஹாபாக்களின் திருமணத்தின் போது அவர்கள் நபியைக் கூட அழைக்கவில்லை என்பதை பின்வரும் சம்பவம் மூலம் அறியலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தம் மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.அப்போது (அது குறித்து) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வினவிய போது தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டதாக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் தெரிவித்தார்கள்.நபி (ஸல்) அவர்கள் “அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹர் (விவாகக் கொடை) செலுத்தினீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் “ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை” என்று பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா மணவிருந்து அளிப்பீராக!” என்று கூறினார்கள்.

நூல்: ஸஹீஹுல் புகாரி
5153

செல்வந்தராக இருந்த நபித்தோழருக்கே அல்லாஹ்வின் தூதர் ஒரு ஆட்டை அறுத்து வலீமா கொடுக்க சொல்லியிருக்கும் போது நாம் ஏன் நம்மை வருத்திக் கொண்டு விரலுக்கு மிஞ்சிய வீக்கமாக வீண் விரையம் செய்ய வேண்டும்?

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த 'சுன்னத்' நிறைவேறிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே 'வலீமா' விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி )
நூல்: புகாரி
371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு 'முத்து' (சுமார்
1 டீ லிட்டர்) கோதுமையையே 'வலீமா' விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: சபிய்யா (ர லி)
நூல்: புகாரி
5172

ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விருந்தளித்ததில்லை. ஸைனப் (ரலி) அவர்களை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள்
நூல்: புகாரி
5168,5171,7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய 'வலீமா' விருந்தில் ஒரு ஆட்டை 'வலீமா'வாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும். எனவே விருந்தின் பெயரால் செய்யப்படும் ஆடம்பரங்களையும் தவிர்க்க வேண்டும்.

வலீமா விருந்துக்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது.

செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி )
நூல்: புகாரி
5177

வலீமா விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அதை மறுக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸின் தொடரில் 'யார் வலீமா விருந்தை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

விருந்தை ஏற்பது அவசியமானாலும் விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடந்தால், அல்லது தீய நடத்தை உடையவரால் விருந்து வழங்கப்பட்டால் அதைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும்.

நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ர லி)
நூல்: நஸயீ
5256

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழியைப் பின்பற்றி நபித்தோழர்களும் இந்த விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொண்டுள்ளனர்.

அபூமஸ்வூத்(ரலி ) அவர்களை ஒருவர் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்கள் ''வீட்டில் உருவச் சிலைகள் உள்ளனவா?'' எனக் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அதை உடைத்து எறியும் வரை வர மாட்டேன் என்று கூறி விட்டு, உடைத்து எறிந்த பின்னர் தான் சென்றார்கள்.

நூல்: பைஹகீ பாகம்:
7,
பக்கம் :
268

என் தந்தை காலத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். என் தந்தை மக்களை அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் அபூ அய்யூப் (ரலி ) அவர்களும் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த போது பட்டுத் துணியால் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டதைக் கண்டார்கள். என்னைக் கண்டதும் ''அப்துல்லாஹ்வே! நீங்கள் சுவர்களுக்கு பட்டால் அலங்காரம் செய்கிறீர்களா?'' எனக் கேட்டார்கள். பெண்கள் எங்களை மிகைத்து விட்டனர்'' என்று என் தந்தை கூறினார். அதற்கு அபூ அய்யூப் (ர ) அவர்கள் ''உம்மை பெண்கள் மிஞ்சி விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லை'' என்றார்கள். மேலும் ''உங்கள் உணவைச் சாப்பிடவும் மாட்டேன். உங்கள் வீட்டிற்குள் வரவும் மாட்டேன்'' என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றார்கள்.

தப்ரானியின் கபீர் பாகம்:
4, பக்கம்:
118

மிகச் சாதாரணமாக நாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதை விட பல நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வீண் விரயங்களும் ம லிந்து காணப்படும் விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் நாம் கலந்து கொள்கிறோம். இது சரி தானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

“குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல்: அஹ்மத்
23388

எனவே மிக மிக குறைந்த செலவில் நபி வழியில் நம் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளின் முலம் அறிந்து கொள்ளலாம்.ஒரு ஊரில் குறைந்தது பத்துப்பேராவது திருமணங்களை மிக மிக எளிமையாக குறைந்த செலவுடன் கூடியது பத்துப்பேரைக் கொண்டாவது நடாத்தினால் அடுத்தவர்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் முன் மாதிரியாக இருக்குமல்லவா?

விருந்தில் மார்க்கத்துக்கு முரணாண காரியங்கள் இடம்பெறல்

நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தேன்.அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படத்தைக் கண்ட போது திரும்பிச் சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலி (ரலி) அவர்கள்
நூல்: நஸயீ
5256

தன் சொந்த மகளின் வீட்டிலேயே மார்க்கத்திக்கு முரணான ஒரு காரியத்தைக் கண்டு அந்த விருந்தை ஏற்காமல் நபியவர்கள் சென்று விட்டார்கள் என்றால், இன்று நடக்கின்ற திருமண விருந்தில் எத்தனை தீமையான காரியங்கள் நடக்கின்றன? இத்தகைய விருந்துக்கு சமூகமளிப்பதை நாம் புறக்கணிக்கின்றோமா?

அல்லாஹ்வுக்காக இத்தகைய விருந்துக்கு சமூகமளிப்பதை நாம் புறக்கணித்தால் அது ஒரு போதும் பாவமாகாது.ஊருலகத்தின் திருப்தியை நாம் விரும்பினால் அது ஒரு போதும் முடியாது.அதனால் எந்தவித நன்மையும் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தமே மிக மிக மேலானது.எனவே அல்லாஹ்வின் திருப்தியையும் அருளையும் பெற இவ்வநாச்சாரங்களையும், ஆடம்பரங்களையும் விட்டொழித்து எளிமையான முறையில் நபி வழியில் திருமணங்களை நடாத்தவும் ஆடம்பரமான விருந்து வைபவங்களுக்கு சமூகமளிப்பதை புறக்ககணிக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

நன்றி : ஷாஹினா ஷாபிஃ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sun Aug 01, 2010 5:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 01, 2010 5:23 pm

ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் 677196 ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் 678642
அதெல்லாம் சரிதான்...நீங்க சொல்ற மாதிரி.
மேடை அலங்காரம், வீடியோ,ஆடை, ஹோட்டல்,மண்டபம்....ETC .இந்த தொழிலை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கிறது...அவர்களது பிழைப்பு? ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் 440806

பணம் இருக்குறவன் செலவு செய்றான்...இல்லாதவன் பாத்து நோக வேண்டியதுதான்.... ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Icon_smile ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 01, 2010 6:20 pm

பிச்ச wrote:ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் 677196 ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் 678642
அதெல்லாம் சரிதான்...நீங்க சொல்ற மாதிரி.
மேடை அலங்காரம், வீடியோ,ஆடை, ஹோட்டல்,மண்டபம்....ETC .இந்த தொழிலை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கிறது...அவர்களது பிழைப்பு? ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் 440806

பணம் இருக்குறவன் செலவு செய்றான்...இல்லாதவன் பாத்து நோக வேண்டியதுதான்.... ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Icon_smile ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் 230655

இப்படியே சொல்லிக்கிட்டிருங்க வாழ்நாள் முழுதும்

நேசமுடன் ஹாசிம்
ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக