புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
لسلام عليكم و رحمة الله و بركاته
நஹ்மதுஹூ வநுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்.
முன்னுரை
“என்னைக் குறித்து அறிவியுங்கள். அது சிறியதோர் செய்தியாயினுஞ்சரியே”.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள்,
நூல்: புகாரீ.
அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இத்திரு மொழியின்படி, அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நான் படித்தறிந்த
விஷயங்களைத் தொகுத்து ஒரு சிறிய புத்தகத்தை எழுத நாட்டம் கொண்டேன்.
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா இப் புத்தகத்தை எழுதுவதற்கான ஹிதாயத்தையும்,
அறிவையும், ஆற்றலையும் கொடுத்தான். அதனைக் கொண்டு இச்சிறிய புத்தகத்தை
எழுதியுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.
அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய உம்மத்துகள் மீது நீங்காத
பற்றும் பாசமும், கவலையும் கொண்டவர்களாக இருந்தார்கள். “இறைவனே! என்
சமுகத்தார், என் சமுகத்தார்” எனக் கூறி அழுதவர்களாக இருந்தார்கள்.
இம்மையிலும், மறுமையிலும் அவர்களின் வாட்டம் போக்க நாட்டம் கொண்டவர்களாக
இருந்தார்கள்.
ஆனால்,
உம்மத்துகளில் ஒரு கூட்டத்தார் அன்னாரை கண்ணியப்படுத்துவதில் குற்றம்
காண்கிறார்கள்! அன்னார் மீது ஸலவாத்து ஓதுவதில் குற்றம் காண்கிறார்கள்!
அன்னாரின் நேரிய வழிமுறைகளில் குற்றம் காண்கிறார்கள்!
மனிதர்கள்தான்
இவ்விதம் குற்றம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்! ஆனால், அல்லாஹூ
ஸூப்ஹானஹூ தஆலாவோ தன்னுடைய ஹபீபை ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணியப்படுத்தி
சிறப்பித்திருக்கிறான். யாருக்கும் வழங்காத பல்வேறு அந்தஸ்துகளை வழங்கி
சிறப்பித்திருக்கிறான். அன்னார் மீது தன்னுடைய அருளையும், அன்பையும்
பொழிந்து சிறப்பித்திருக்கிறான். இப்படியாக சிறப்புகளை எல்லாம் சிறப்பாக
வழங்கி சிறப்பித்திருக்கிறான். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கிய சிறப்புகளில் சிலவற்றைத்தான்
இப்புத்தகத்தில் தொகுத்தெழுதியுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.
இந்நூலில்
பல்வேறு ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பல்வேறு ஹதீஸ் நூல்களிலிருந்து
எடுத்து பயன்படுத்தியுள்ளேன். அவ்விதம் இப்புத்தகத்தில் நான்
பயன்படுத்தியுள்ள ஹதீஸ் நூல்களின் மூல ஆசிரியர்களுக்கும், மொழிபெயர்ப்பு
செய்தவர்களுக்கும், பதிப்பித்தவர்களுக்கும் எனது நன்றியினை
காணிக்கையாக்குகிறேன். மேலும், அன்னவர்களின் ஹக்கில் துஆ செய்தவனாகவும்
இருக்கிறேன்.
இப்புத்தகத்தில்
என்னையறியாமல் ஏதேனும் குறைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி,
திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
பொருட்டால், இச்சிறிய புத்தகத்தைக் கொண்டு நம் அனைவருக்கும் பயன்
கிடைக்கும்படி செய்வானாக. மேலும், குறைவின்றி இம்மை மறுமை பேறுகளையும்
தந்தருள்வானாக. ஆமீன்.
சென்னை,
அன்பு சகோதரன்,
(ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி)
14 .6 .1430 ( 8 .6 .2009 ).
பொ௫ளடக்கம்
1 சிறப்பான தலைமுறை
2 பிறப்பு
3 திருப்பெயர்
4 மனிதகுலம் முழுமைக்கும் நபியாக
5 ஐந்து பேறுகள்
6 இறுதி நபி
7 உயிர்களைவிட மேலானவர்
8 நபிமார்களுக்கு இமாம்
9 ஸலவாத்து
10 இறை தரிசனம்
11 புனித மிஃராஜ் பயணம்
12 கவ்ஸர் நதி
13 போர்களில் வானவர்கள்
14 உடுக்கை இழந்தவன் கைபோல
15 ரஹ்மத்தல்லில் ஆலமீன்
16 ஷபாஅத்து
17 திருமதீனாவும் மஸ்ஜிதுந் நபவீயும்
18 தவ்ராத்திலும் இன்ஜீலிலும்
19 மாண்பும் மகிமையும்
20 அற்புதங்கள்
1.சிறப்பான தலைமுறை
அல்லாஹூ
ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்பான
வம்சா வழியிலேயே தேர்ந்தெடுத்திருக்கிறான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் வம்ச பாரம்பரியத்தில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதற்கொண்டு,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய தலைமுறை வரை வந்த அனைவருமே
சிறப்பானவர்களாக இருந்தனர். இது குறித்த விவரம் ஹதீஸ்களில்
கூறப்பட்டுள்ளது.
“ஆதம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி வழி வந்தவர்களில் மிகவும்
மேலானவர்களிலிருந்துதான் நான் அனுப்பப்பட்டேன். நான் இருக்கும் இந்தத்
தலைமுறை வரை ( அனைவரும் சிறப்பானவர்களாகவே இருந்தனர். )” என்று அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹூரைரா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
“இஸ்மாயீல்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல்களில் கனானா குலத்தினரைத்தான் அல்லாஹ்
தேர்ந்தெடுத்தான். கனானா குலத்தினரிடமிருந்து குறைஷி குலத்தினரை அல்லாஹ்
தேர்ந்தெடுத்தான். குறைஷிக் குலத்தினரிடமிருந்து பனூ ஹாஷிம் குலத்தினரை
அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தினரிடமிருந்து அவன் என்னைத்
தேர்ந்தெடுத்தான்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்ம் அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: வாஸிலாதுப்னுல் அஸ்கஃ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ
அவர்கள். நூல்: முஸ்லிம்.
ஒரு
முறை மக்கள் பேசிகொண்ட சில விஷயங்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு எட்டின. அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் உடனே மிம்பரில் ஏறினார்கள். மக்களிடம், “நான் யார்?” என்று
கேட்டார்கள். அதற்கு மக்கள், “தாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்” என
பதிலளித்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,
“நான் அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மது (
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) ஆவேன். நிச்சயமாக அல்லாஹ் படைப்புகளைப்
படைத்தான். என்னை அப்படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஆக்கினான்.
அந்த மக்களை அல்லாஹ் இரண்டு பிரிவினர்களாக ஆக்கினான். அதில் சிறந்த
பிரிவினரில் நின்றும் என்னை ஆக்கினான். அம்மக்களை பல கோத்திரங்களாக அல்லாஹ்
ஆக்கினான். அவற்றில் சிறந்த கோத்திரத்தில் நின்றும் அல்லாஹ் என்னை
ஆக்கினான். அவர்களை அல்லாஹ் பல வீடுகளாக ( குடும்பத்தார்களாக ) ஆக்கினான்.
அவற்றில் சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் உங்களில் சிறந்த
குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறேன். மனத்தாலும் உங்களில் சிறந்தவனாக
இருக்கிறேன். அறிவிப்பவர்: அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ( இமாம்
அஹ்மது ).
மேலும்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வமிசத் தொடரில்
இடம்பெற்றுள்ள அனைவருமே நிக்காஹ் உறவின் மூலமே பிறந்தவர்கள்! அவர்களில்
எவருமே விபச்சாரத்தின் மூலம் பிறந்தவர்கள் அல்லர்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர்களில் ஒருவரான இமாம் முஹம்மதுல் பாகிர்
(ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் நிக்காஹ் மூலமே (
என் பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் நிக்காஹ் உறவின் மூலமே )
வெளிப்படுத்தப்பட்டேன். விபச்சார உறவின் மூலம் அல்ல” என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( அப்துர் ரஜ்ஜாக் )
ஒரு
முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
சொற்பொழிவாற்றினார்கள். அதில் கூறினார்கள்: “நான் அப்துல்லாஹ்வின் மகன்
ஆவேன். அவர் அப்துல் முத்தலிபின் மகனாவார். அவர் ஹாஷிமின் மகனாவார்.
அவர் அப்து முனாஃபின் மகன் ஆவார். அவர் குஸையின் மகன் ஆவார். அவர்
கிலாபின் மகன் ஆவார். அவர் முர்ராவின் மகன் ஆவார். அவர் கஃபின் மகன்
ஆவார். அவர் லுஅய்யின் மகன் ஆவார். அவர் காலிபின் மகன் ஆவார். அவர்
பஃஹரின் மகன் ஆவார். அவர் மாலிகின் மகன் ஆவார். அவர் நள்ரின் மகன்
ஆவார். அவர் கினானாவின் மகன் ஆவார். அவர் குஜைமாவின் மகன் ஆவார். அவர்
முத்ரிகாவின் மகன் ஆவார். அவர் இல்யாஸின் மகன் ஆவார். அவர் முளரின் மகன்
ஆவார். அவர் நிஜாரின் மகன் ஆவார். மக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்தால்,
அதில் சிறந்த பிரிவிலேயே அல்லாஹ் என்னை ஆக்கி வைத்தான். என்
பெற்றோரிலிருந்து அல்லாஹ் என்னை வெளிப்படுத்தினான். அறியாமைக் கால
விபச்சாரத் தொடர்பு என்னைத் தொடவில்லை. நான் நிக்காஹ் மூலம் வெளியானேன்.
விபச்சாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆதம் ( அலைஹிஸ்ஸலாம் )
அவர்களிடமிருந்து என் தாய், தந்தை அளவில் நான் வந்து சேறும் வரை
நிக்காஹ்வின் மூலமே கொண்டுவரப்பட்டேன். நான் உங்களில் சிறந்தவன். நான்
உங்களின் வமிசத்திலும் சிறந்தவன். ( பைஹகீ ).
ஹளரத்
இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் நபித்துவம் பற்றிய தலைப்பில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களின் வம்ச வரலாறு பற்றி கீழ்கண்டபடி
குறிப்பிட்டிருக்கிறார்கள். (1) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள். (2) அப்துல்லாஹ், (3) அப்துல் முத்தலிப், (4) ஹாஷிம், (5)
அப்துமனாப், (6) குஸய்யு, (7) கிலாப், (8) முர்ரா, (9) கஃபு, (10)
லுவய்யு, (11) காலிப், (12) பிஹ்ர், (13) மாலிக், (14) நள்ர்,
(15) கினானா, (16) குஜைமா, (17) முத்ரிக்கா, (18) இல்யாஸ், (19)
முளர், (20) நிஜார், (21) மஅத்து, (22) அத்னான்.
இவர்களில்
கடைசியாக கூறப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
ஆரம்பத் தந்தையான அத்னான் அவர்கள், ஹஜ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்
அவர்களின் பேரப்பிள்ளைகளில் உள்ளவராவார்!
இவ்விதம்
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
சிறப்பான வம்சா வழியிலே தேர்ந்தெடுத்து சிறப்பித்திருக்கிறான்.
2.பிறப்பு
அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் அல்லாஹூ ஸூப்ஹானஹூ
தஆலா சிறப்பாக்கினான்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
பிறந்த பொழுது பல்வேறு அதியங்களும் அற்புதங்களும் வெளிப்பட்டன. அதன் மூலம்
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
உயர்ந்த அந்தஸ்தை வெளிப்படுத்தி சிறப்பித்தான்.
யமன்
நாட்டு மன்னனான அப்ரஹா புனித கஃபாவை இடிக்கும் நோக்கத்துடன் படையெடுத்து
வந்தான். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அவனையும், அவனுடைய யானைப் படையையும்
பொடிக்கற்களைக் கொண்டு அழித்தான்! புனித கஃபாவையும் காத்தருளினான். இந்த
நிகழ்ச்சிக்கு ஐம்பது நாட்கள் கழித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் பிறந்தார்கள். அதன்படி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம், பன்னிரண்டாம் தேதி, திங்கட்கிழமை வைகறைப்
பொழுதில் பிறந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
பிறந்த தேதி குறித்து அறிஞர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம்
பன்னிரண்டாம் தேதி பிறந்தார்கள் என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின்
கருத்தாக உள்ளது.
அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது பல்வேறு
அற்புதங்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் ( ஒளி ) வெளிப்பட்டது! வீடு
ஒளியால் நிரம்பியது! நட்சத்திரங்கள் இறங்கி அன்னாரின் பக்கம் நெருங்கின!
அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தாயார் ஆமினா அவர்கள் கூறியதாக
உம்மு ஸலமா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான்
அண்ணலாரைப் பெற்றெடுத்த இரவில் ஒரு மாபெரும் ஒளியைப் பார்த்தேன். அதன்
ஒளியில் ஷாம் நாட்டின் கோட்டைகள் இலங்குவதை நான் பார்த்தேன். (அபூ நுஅய்ம் )
உஸ்மான்
பின் அபில் ஆஸ் தம்முடைய தாயாரும் ஸஹாபிப் பெண்மணியுமான உம்மு உஸ்மான்
அஸ்ஸகபிய்யா அஸ்ஸஹாபிய்யா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்களின் வாயிலாக
அறிவிக்கிறார்கள்: நபியவர்களின் பிரசவத்தின் பொழுது நான் அவர்களின்
இல்லத்தில் இருந்தேன். அவர்கள் பிறந்ததும் அவர்களின் வீடு ஒளியால்
நிரம்பியது. நட்சத்திரங்கள் இறங்கி அவர்களின் பக்கம் நெருங்கி
வந்துவிட்டன. எந்த அளவெனில் என் மீது அவை விழுந்து விடும் என நான்
எண்ணுகிற அளவுக்கு நெருங்கின! அண்ணலாரை, ஆமினா பெற்றெடுத்ததும்
அவர்களிடமிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. அவ்வொளியில் அந்த அறையும், அந்த
வீடும் பிரகாசித்தது! அதனால் ஒளியைத் தவிர வேறு எதையும் பார்க்காதவளாக
நான் ஆகிவிட்டேன். ( பைஹகீ, திப்ரானி ).
இமாம்
இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “அல்பிதாயா வந்நிஹாயா” என்னும்
நூலில் பின்வரும் அற்புதங்களையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்: அணணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர்
வெளிப்பட்டது. அது பூமியில் இறங்கி மண்டியிட்டு நின்றது! வானத்தின்
பக்கம் தன் தலைப்பாகத்தை உயர்த்தியது. அண்ணலார் பிறந்த இல்லத்தில் ஒளி
பரவியது. வானிலுள்ள நட்சத்திரங்கள் அவர்களை நெருங்கி வந்தன. கிஸ்ரா
மன்னனின் மாடங்கள் அசைந்தாடி இடிந்து விழுந்தன. நெடுங்காலமாக
பாதுகாக்கப்பட்டு வந்த நெருப்பு நூர்ந்துவிட்டது! இவை தவிர மற்றும் பல
அற்புதங்களும் நிகழ்ந்தன.
மக்ஜூம்
பின் ஹானி என்பவர் தம் தந்தை வாயிலாக அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவில் கிஸ்ரா மன்னனின் மாடங்கள்
உடைந்தன. அவற்றில் பதினான்கு மாடங்கள் இடிந்து கீழே விழுந்தன. ஆயிரம்
ஆண்டுகளாக நூர்ந்து விடாது எரிந்துக் கொண்டிருந்த பாரசீக நாட்டின்
நெருப்புக் குண்டம் நூர்ந்தது. “ஸாவா” நகரத்தில் இருந்த சிறிய கடல் போன்ற
ஏரி வற்றிப்போனது. ( பத்ஹூல் பாரி ). இந்த அற்புதங்களை ஹதீஸ்
அறிவிப்பாளர்களான இமாம்கள் பைஹகீ, அபூ நுஅய்ம், கராஇதி, இப்னு அஸாகிர்,
இப்னு ஜரீர் போன்ற மார்க்க மாமேதைகளும் கூறியுள்ளனர்.
இப்படியாக
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் சிறப்பாக்கி,
அன்னாரின் சிறப்பையும், அன்னாரின் தூதுவத்தையும் வெளிப்படுத்தியுள்ளான்.
3.திருப்பெயர்
நபிபெருமானார்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் முஹம்மத் என்பதாகும்.
இத்திருப்பெயரை அன்னாரின் பாட்டனார் ஹளரத் அப்துல் முத்தலிப் அவர்கள்
சூட்டி மகிழ்ந்தார்கள். “இத்திருப்பெயரை சூட்ட காரணமென்ன?” என்று மக்கள்
கேட்டபோது, ” இப்பிள்ளைக்கு முஹம்மத் என்னும் திருப்பெயரையே சூடடும்படி
கனவின் மூலம் அறிவுறுத்தப்பட்டேன். இப்பிள்ளையின் புகழ் உலகின் ஒவ்வொரு
மூலை முடுக்கிலும் எதிரொலிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் ” என பதில்
கூறினார்கள். முஹம்மத் என்னும் திருப்பெயருக்கு ” புகழப்பட்டவர் ” என்பது
பொருளாகும்.
அன்னை
ஆமினா அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘அஹ்மது’
என்னும் திருப்பெயரை சூட்டினார்கள். அன்னை ஆமினா அவர்கள் நபிபெருமானார்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கருவுற்றிருக்கும் போது, அன்னாருக்கு
ஆண் குழந்தை பிறக்கும் என்றும், அக்குழந்தைக்கு அஹ்மது என்னும் திருப்பெயரை
சூட்டும்படியும் கனவின் மூலம் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படியே அன்னை ஆமினா
அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அஹ்மது என்னும்
திருப்பெயரை சூட்டினார்கள். அஹ்மது என்னும் திருப்பெயருக்கு ‘புகழ்பவர்’
என்பது பொருளாகும். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் போல்
புகழப்பட்டவரும் எவருமில்லை. ஒவ்வொரு கணமும் வானவர்களும், மனிதர்களும்
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து என்னும்
புகழ்மொழியை ஓதிக் கொண்டுதானே இருக்கிறார்கள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களைப் போல் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவை புகழ்ந்தவரும்
எவருமில்லை! அதனால்தான் இத்திருப் பெயர்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா சூட்டச்
செய்தான் போலும்!
முஹம்மது,
அஹ்மது என்னும் இவ்விரு திருப்பெயர்களும் திருக்குர்ஆனில் குறிப்பிட்டு
கூறப்பட்டுள்ளன. முஹம்மது என்னும் திருப்பெயர், ஸூரத்துல் ஆலஇம்ரான், வசனம்
– 144, ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 40, ஸூரத்து முஹம்மது, வசனம் – 2,
ஸூரத்துல் பஃத்ஹ், வசனம் – 29 , ஆகிய நான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது.
அஹ்மது என்னும் திருப்பெயர் ஸூரத்துஸ் ஸஃப்பு, வசனம் – 6 ல்
இடம்பெற்றுள்ளது.
நபிபெருமானார்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் தவ்றாத் வேதத்தில்
முஹம்மது என்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஸூரத்துல் பஃத்ஹ், வசனம் –
29 ல் கூறப்பட்டுள்ளது. இன்ஜீலில் (பைபிளில் ) நபிபெருமானார் ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் அஹ்மது என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி, ” மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: ” இஸ்ராயீல் மக்களே! எனக்கு
முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் ; எனக்குப் பின்னர் வரவிருக்கும்
” அஹ்மது ” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும்
இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன் ” என்று
கூறிய வேளையை ( நபியே! நீர் நினைவு கூறுவீராக! ) என்று, ஸூரத்துஸ் ஸஃப்பு,
வசனம் – 6 ல் கூறப்பட்டுள்ளது.
மேலும்,
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
‘முத்தஸ்ஸிர்’ (போர்த்திக் கொண்டு இருப்பவரே! ) என்று அழைத்திருக்கிறான்.
இது குறித்த விவரம் ஸஹீஹூல் புகாரீயில் இடம் பெற்றுள்ளது.
வஹீ
(தெய்வ அறிவிப்பு) நின்றிருந்ததைக் குறித்து ஜாபிறுப்னு அப்தில்லாஹில்
அன்ஸாரி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கூறியபோது, “நான் நடந்துக்
கொண்டிருக்கும் போது வானிலிருந்து ஒரு சப்தத்தைச் செவியேற்று, என் தலையை
உயர்த்தினேன். அப்பொழுது ஹிராவில் என்னிடம் வந்த அதே வானவர், வானுக்கும்
பூமிக்குமிடையில் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே, அவருக்கு நான் பயந்து
திரும்ப (வீட்டுக்கு ) வந்து “எனக்குப் போர்த்துங்கள், எனக்குப்
போர்த்துங்கள்” என்று கூறினேன். ( துப்பட்டியை போர்த்திவிட்டார்கள்.
அப்பொழுது )
“(1)
( போர்வை ) போர்த்திக் கொண்டு இருப்பவரே! (2) நீர் எழுந்து ( மக்களுக்கு
) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. (3) மேலும், உம் இறைவனைப் பெருமைப்
படுத்துவீராக. (4) உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
(5) அன்றியும் அசுத்தத்தை வெறுத்து ( ஒதுக்கி ) விடுவீராக” என்னும்
வசனங்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அருளினான். ( பார்க்க: அத்தியாயம் 74,
ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் – 1 – 5 . ) வஹீ தொடர்ந்து வந்தது” என்று (
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ) கூறியதாக அவர் சொன்னார்.
அறிவிப்பவர்: ஜாபிறுப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
இதன்
காரணமாக முத்தஸ்ஸிர் என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களின் திருப்பெயராக உள்ளது. இதைப் போலவே அத்தியாயம் 73, ஸூரத்துல்
முஸ்ஸம்மில், வசனம் 1 – ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘முஸ்ஸம்மில்’
என்பதும் அண்ணல் நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப் பெயராக
உள்ளது.
“(1)
தாஹா. (2) ( நபியே! ) நீர் துன்பப் படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது
இறக்கவில்லை. ” இவை, அத்தியாயம் 20, ஸூரத்து தாஹாவின் தொடக்க
வசனங்களாகும். இதில், முதல் வசனமாக கூறப்பட்டுள்ள ‘தாஹா’ என்பதும் அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் திருப்பெயரேயாகும் என சில அறிவிப்புகளில்
கூறப்பட்டுள்ளது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 6, பக்கம் – 64 . )
இப்னு
ஜூபைர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், அத்தியாயம் 36, ஸூரத்து யாஸீனில்
குறிப்பிடப்பட்டிருக்கும் ‘யாஸீன்’ என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் திருப்பெயரே என அறிவித்திருக்கிறார்கள். ( மஆரிபுல்
குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 363 . ) ஹூரத்துல் அஃராஃப், 157, 158
வசனங்களில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ( எழுதப் படிக்கத்
தெரியாத ) ‘உம்மி’ நபி என அழைக்கப் பட்டிருக்கிறார்கள்.
நபிபெருமானார்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்களைப் பற்றி ஸஹீஹில்
புகாரி ஷரீபில், கீழ்கண்ட ஹதீஸ் உள்ளது. ” எனக்கு ஐந்து
பெயர்களிருக்கின்றன. நான் முஹம்மது, அஹ்மது ( என்னும் பெயர்களுள்ளவர் ) .
நான்தான் அல்மாஹீ, அதாவது என் மூலமாக அல்லாஹ் குப்ரை அழிக்கிறான.
நான்தான் அல்ஹாஷிர், அதாவது இறுதி நாளில் எனக்குப் பின்னர்தான் மனிதர்
யாவரையும் அல்லாஹ் ( உயிர்த் தெழுப்பி ) ஒன்று சேர்ப்பான். நான்தான் கடைசி
நபி. ( எனக்குப் பின்னர் நபி இல்லை ) ” என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜூபைறுப்னு முத்இம்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். இந்த ஹதீஹில், நபிபெருமானார் ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களின் ஐந்து பெயர்கள் கூறப்பட்டுள்ளன.
இப்படியாக
திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுடைய திருப்பெயர்கள் பலவும் கூறப்பட்டுள்ளன. இத்திருப் பெயர்கள்
யாவும் நபிமார்களால் அறிவிக்கப் பட்டவையும், வேத நூல்களில்
சொல்லப்பட்டவையுமாகும். இவை தவிர இன்னும் பல்வேறு திருப்பெயர்களும் அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உள்ளன. அவை விர்து ( ஜபம் )
நுல்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளன.
அல்லாஹூ
ஸூப்ஹானஹூ தஆலா தன்னுடைய ஹபீபு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களின் திருப்பெயர்களை கண்ணியப் படுத்தியிருக்கிறான். இதற்கு சாட்சியாக
திருக்குர்ஆன் இருக்கிறது. திருக்குர்ஆனில். நபிமார்களை குறிப்பிட்டுக்
கூறும் பொழுது அவர்களுடைய பெயர்களைக் கொண்டே அழைக்க ப்பட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறிப்பிட்டுக் கூறும் பொழுது ‘யா
ஆதமு’ ( ஆதமே! ) என்றே கூறப்பட்டிருக்கிறார்கள். இதைப்போலவே நூஹூ
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா நூஹூ’ ( நூஹே! ) என்றே
அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா
இப்ராஹீமே’ (இப்ராஹீமே! ) என்றும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா மூஸா’
( மூஸாவே! ) என்றும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா ஈஸா’ (ஈஸாவே! )
என்றும் திருக்குர்ஆனில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதமே மற்ற
நபிமார்களும் பெயர்களைக் கொண்டே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா முஹம்மத்’ என்றோ, ‘யா
அஹ்மத்’ என்றோ பெயரைக் கொண்டு அழைக்கப்படவில்லை! இதற்கு மாறாக அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை குறிப்பிட்டுக் கூறும் இடங்களில்
பெரும்பாலும் ‘யா அய்யுஹன் நபியு’ ( நபியே! ) என்றோ, ‘யா அய்யுஹர்
ரஸூலு’ ( தூதரே! ) என்றோ, ‘யா அய்யுஹல் முஸ்ஸம்மிலு’ ( போர்வை
போர்த்திக் கொண்டிருப்பவரே! ) என்றோ, ‘யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்’ ( (
போர்வை ) போர்த்திக் கொண்டு இருப்பவரே! ) என்றோதான்
அழைக்கப்பட்டுள்ளார்கள்! திருக்குர்ஆன் முழுமையிலும் வெறும் நான்கு
இடங்களில் மட்டும்தான் – அதுவும் தேவையைக் கருதி, முஹம்மத் என்னும்
திருப்பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்! இவ்விதமாக அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்கள் திருக்குர்ஆனில்
கண்ணியப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவரங்களை ஹளரத் முஃப்தி முஹம்மத் ஷபீஈ
ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மஆரிபுல் குர்ஆன், பாகம் – 8, பக்கம் – 91 ல்,
ஸூரத்துல் பஃத்ஹூ, வசனம் – 29 க்கான தப்ஸீரில் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள்.
மேலும்,
திருக்கலிமா, பாங்கு, இகாமத் மற்றும் இது போன்ற காரியங்களில் அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலாவை நினைவு கூறும்போதெல்லாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் திருப்பெயரையும் சேர்த்து நினைவுகூறும்படியாக அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலா ஏற்பாடு செய்திருக்கின்றான். இவ்விதமாகவும் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் சிறப்பிக்கப்பட்டுள்ளது. (
மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 222. )
இவ்விதம்
சிறப்பிற்கும், கண்ணியத்திற்கும் உரிய அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் திருப்பெயரை கூறும்போதும், கேட்கும்போதும் அன்னார் மீது
ஸலவாத் ஓதுவது ஈமான் கொண்ட அனைவர் மீதும் வாஜிபு ஆகும். ஏனெனில், “எவர்
முன்னிலையில் என் பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத்துக் கூறவில்லையோ
அவருடைய மூக்கை மண் அரிக்கட்டும்!’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்
அறிவித்துள்ள இந்த ஹதீஸ் திர்மிதீயில் இடம்பெற்றுள்ளது. இன்னொரு
ஹதீஸில், “எவர் முன் என்னைக் குறிப்பிடப்பட்டு, அவர் என் மீது ஸலவாத்துக்
கூறவில்லையோ அவரே ( உண்மையில் ) உலோபியாவார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை ஹளரத் அலி கர்ரமல்லாஹூ
வஜ்ஹஹூ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த ஹதீஸூம் திர்மிதீயில்

16.ஷபாஅத்து
மறுமை நாளில் மனித வர்க்கம் முழுவதற்கும் ஷபாஅத்து (பரிந்துரை)செய்யக்
கூடிய பேறு அண்ணல் நபி ஸ்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே,
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா வழங்குவான்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும், அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் அனுமதியைக் கொண்டு மனித வர்க்கத்தாருக்கு ஷபாஅத்து புரிவார்கள்! அந்நாளில் ஏற்படும் கஷ்டத்திலிருந்து மனித வர்க்கத்தாரை காத்தருள்வார்கள்! அதுவும், ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதற்கொண்டு ஈஸா அலைஹிஸ்ஸலாம் வரை
ஷபாஅத்து புரிய யாரும் இசையாத நிலையில்! இது குறித்த விவரம் வருமாறு:
இறுதி நாளில் இந்த உலகம் முழுவதுமாக அழிவைக் காணும். மனித இனம்
மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் முற்றிலுமாக அழிந்துபோகும்! அதன் பிறகு,
ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதற்கொண்டு இறுதி நாள் வரை வாழ்ந்து மரித்த அனைவரும், அவரவர் வாழ்வில் அவரவர் ஆற்றிய காரியங்களுக்கு பதில் கூறுவதற்காக மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அந்நாளில் தாங்கமுடியாத கஷ்டத்தில் மக்கள் அனைவரும் இருப்பார்கள்! அந்நாளில் "சூரியன் (அவர்களுக்கு)
அருகில் வரும். அப்போது மனிதர்களிடம் அவர்களால் தாங்கிக் கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ
முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும்" என்று அபூஹூரைரா
ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள் அறிவித் திருக்கிறார்கள்.
(நூல்:
புகாரீ, முஸ்லிம்.)
"அகிலத்தாருக்கு ரப்பாக இருப்பவனின் முன்னிலையில் மக்கள்
(விசாரணைக்காக) நிற்கும் (இறுதி) நாளில் அவர்களில்
ஒவ்வொருவரும் தன்னுடைய பாதிக்காதுகள் வரை (வியர்வையால் மூழ்கி இருப்பர்)" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக இப்னு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
( நூல்:
புகாரீ. )
மக்கள் அனைவரும் அவ்விதம் கஷ்டத்தில் தவித்துக் கொண்டிருக்கும்
போது, அவர்களுடைய உள்ளத்தில் 'தமக்காக பரிந்துரைக்கும்படி யாரிடமாவது கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தப்படும். இது குறித்து அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் பின்வருமாறு அறிவித் திருக்கிறார்கள்: "அல்லாஹ் மறுமை
நாளில் இறை நம்பிக்கையாளர்களை ஒன்று கூட்டுவான். அப்போது
அவர்களுடைய உள்ளத்தில் ('பரிந்துரைக்கும்படி யாரையாவது நாம் கேட்டுக் கொண்டால்
நன்றாக இருக்குமே' என்னும்) எண்ணம் ஏற்படுத்தப்படும்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம். )
அப்போது மக்கள் கூட்டம் கூட்டமாக பிரிந்து விடுவார்கள். ஒவ்வொரு
வர்க்கமும் தம்முடைய நபியைப் பின் தொடர்ந்து சென்று தமக்காக இறைவனிடம்
பரிந்து பேசும்படி கேட்டுக் கொள்வார்கள். ஆனால் யாரும் பரிந்துரை
செய்யமாட்டார்கள். கடைசியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம்
வருவார்கள். இது குறித்து, இப்னு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ள
ஹதீஸ் வருமாறு: "மறுமையில் மக்கள் கூட்டம் கூட்டமாக
பிரிந்து விடுவார்கள். ஒவ்வொரு வர்க்கமும் தன்னுடைய நபியை பின்
தொடர்ந்து, "இன்ன நபியே! எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரையுங்கள்"
என்று
கூறுவார்கள். இறுதியாக, பரிந்துரைக்கும் முறையானது என்னிடம் வந்து முடிவுறும்.
இதுவே ' மிகவும் புகழ் பெற்ற இடமாகும்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ.) இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் ' மிகவும் புகழ்
பெற்ற இடம்' பற்றி திருக்குர்ஆனில் அத்தியாயம் - 17, ஸூரத்து பனீ இஸ்ராயீல்,
வசனம் - 79
ல், "இன்னும் இரவில்
(ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையை தொழுது
வருவீராக ; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், ' மகாமம் மஹ்மூதா '
என்னும் (புகழ்
பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்". எனக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபிக்கும் அங்கீகரிக்கக்கூடிய ஒரு சிறப்பு பிரார்த்தனை
உண்டு. எல்லா நபிமார்களும் அந்தப் பிரார்த்தனைகளை இந்த உலகத்திலேயே
கேட்டுவிட்டனர். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்குரிய பிரார்த்தனையை மறுமை நாளில் தம்முடைய உம்மத்துகளுக்காக பரிந்துரை செய்ய பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்த பிரார்த்தனையின் பயன் அல்லாஹ் நாடினால், அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரிக்கக்கூடியவர்களுக்குக் கிடைக்கும். இது குறித்து அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் பின்வருமாறு
அறிவித்திருக்கிறார்கள்: "ஒவ்வொரு நபிக்கும் ஒரு பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்.
அதனை அவர் பிரார்த்திக்கிறார். என்னுடைய (அங்கீகரிக்கப்படுகிற) பிரார்த்தனையை மறுமையில் என்
உம்மத்துக்கு (வர்க்கத்துக்கு) ஷபாஅத்து (பரிந்துரை) செய்வதற்காக நான் ஒதுக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்.) இன்னொரு ஹதீஸில், "ஒவ்வோர் நபிக்கும் (தம் உம்மத்து தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு. எல்லா நபிமார்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே ) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் உம்மத்தாருக்கு பரிந்துரை செய்வதற்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் உம்மத்தாரில் எவர் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
முஸ்லிம்.)
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பிரார்த்தனையைக்
கொண்டு மக்களுக்கு ஷபாஅத்து (பரிந்துரை) புரிவார்கள். இது குறித்த
முழுமையான விவரங்கள் கீழ்காணும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
ஒருநாள் (விருந்தொன்றில்) அண்ணல் நபி ஸலலல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (பக்குவம் செய்த)
இறைச்சி கொண்டு வரப்பட்டது. (அதில்) முன்கால்சப்பை (இறைச்சி) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு பரிமாறப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக
இருந்தது. அதனை அவர்கள் கடித்து (ச் சாப்பிட்டு) விட்டுப் பின்னர், நான் கியாமத்து (இறுதி) நாளில் மனிதர்கள் யாவருக்கும் தலைவன் ஆவேன். எதனால் அது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒரு இடத்தில் அல்லாஹ் முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரு சமவெளியில் ஒன்று சேர்ப்பான். அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை ஊடுருவிச் செல்லும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மக்களுக்கு அவர்கள் தாங்கிக் கொள்ள முடியாத கஷ்டமும், சங்கடமும் ஏற்படும். அவர்கள் சகிக்க மாட்டார்கள். அப்போது மனிதர்களில் சிலர் (சிலரை நோக்கி)
"நீங்கள் (சிக்கிக் கொண்டு)
இருக்கும் (அவல) நிலையைக் கவனிக்கவில்லையா? உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான)
நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
உங்களுக்காக
உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடி)ப் பார்க்க மாட்டீர்களா?"
என்று
கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம்,
"(ஆதி பிதா) ஆதம்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள். (அவர் உங்களுக்காகப்
பரிந்து பேசுவார் )" என்பர்.
பின்னர் மக்கள் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்து,
"நீங்கள்
அபுல்பஷராக (மனித இனத்தின் தந்தையாக) இருக்கிறீர்கள். உங்களை அல்லாஹ்
தன்னுடைய கரத்தால் படைத்தான். தன்னுடைய ஆன்மாவிலிருந்து உங்களில் அவன் ஊதி,
வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும்படி உத்தரவிட்டான். அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு
நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?"
என்று கேட்பார்கள்.
அதற்கு ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், "(நான் செய்த
தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடுங்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்கு
முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன்
இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக்
கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான்.
நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.
என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது" என்று கூறிவிட்டு,
"நீங்கள் வேறு
யாரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம்
செல்லுங்கள்" என்று கூறுவார்.
உடனே மக்கள் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்து,
"நூஹே!
புவியோரில் தூதராக வந்தவர்களில் நீங்கள் முதலாமவர். தங்களை 'நன்றியுள்ள அடியார்' (அப்தன் ஷகூறா) என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும்,
எங்களுக்கு

கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள்,
"என் இறைவன் இன்று
(என் மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்
போன்று கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும்
கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபி மார்களுக்கும் இருப்பதைப் போன்று
விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை
நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டேன். நான் என்னையே
காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது!" என்று கூறிவிட்டு, "நீங்கள் (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள்"
என்று கூறுவார்.
அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று,
"நீங்கள் அல்லாஹ்வின் நபி ஆவீர்கள். புவியோரில் அல்லாஹ்வுடைய கலீல் (தோழர்). எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும்
நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், "என் இறைவன் இன்று (என் மீது) கடுங்கோபம்
கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை.
இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.
நான் மூன்று பொய்களைக் கூறி இருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்
கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.
(ஆகவே) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூஸாவிடம்
செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
உடனே மக்கள் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்து,
"மூஸாவே, தாங்கள் அல்லாஹ்வின் ரஸூல் (தூதர்). தன்னுடைய ரிஸாலத்தையும் (தூதையும்) தன்னுடைய கலாமை(பேச்சை)யும் கொண்டு மக்கள் அனைவரையும் விட உங்களை சிறப்பித்திருக்கிறான்.
( ஆகவே ) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள்
(சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)
நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?" என்று
கேட்பார்கள். அதற்கு மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள், "இன்று என் இறைவன்
(என் மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போன்று அவன்
கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம்
கொள்ளப் போவதுமில்லை. நான் ஒரு உயிரைக் கொலை செய்திருக்கிறேன்.
அதனைக் கொல்லுமாறு நான் கட்டளை யிடப்படவில்லை. நான் என்னையே
காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈஸா
(அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
உடனே மக்கள் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று,
"ஈஸாவே, நீங்கள் அல்லாஹ்வின் ரஸூல் (தூதர்). நீங்கள் (குழந்தையாய்) தொட்டிலில் இருந்தபோதே மக்களிடம் பேசினீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும்
ஆவீர்கள். ஆகவே, எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள்.
நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்துள்ள (துன்ப)
நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு ஈஸா
(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், "என் இறைவன் இன்று (என் மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்
போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன்
ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள
வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள்
வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மத் (ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள். எந்தக்
குற்றத்தையும் தாம் செய்ததாக அவர் கூறமாட்டார்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து, "முஹம்மதே! தாங்கள் அல்லாஹ்வின் ரஸூல்
(தூதர்). காத்தமுல் அன்பியா (நபிமார்களுக்கு முத்திரையாக
உள்ளவர்கள்). தங்களின் பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும்
அல்லாஹ் மன்னித்திருக்கிறான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து
பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும்,
எங்களுக்கு
நேர்ந்துள்ள (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று
கூறுவார்கள்.
அப்பொழுது, அர்ஷூக்கு கீழே நான் வந்து என்னுடைய இறைவனுக்கு (ப் பணிந்து) ஸூஜூது செய்வேன். அல்லாஹ் தன்னை புகழ்வதற்குரிய முறைகளையும், அவனுக்கு சொல்வதற்குரிய
அழகிய பாராட்டு தல்களையும் எனக்கு வெளி யாக்குவான். எனக்கு முன்னர்
எவருக்கும் அதனை வெளியாக்கியதில்லை. (அவற்றைக் கூறி இறைவனைப்
புகழ்ந்து திக்ரு
செய்வேன்.) பின்னர், (என்னிடம்) "முஹம்மதே! உம்முடைய தலையை
உயர்த்துவீராக. கேளுங்கள், அது கொடுக்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்.
உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று கூறப்படும். அப்பொழுது, நான் என் தலையை உயர்த்தி,
"இறைவா!
என் சமுதாயம்,
என்
சமுதாயம்" என்று கூறுவேன். அப்பொழுது, "முஹம்மதே! சுவர்க்கத்தின் தலைவாசல்களில் வலப்புறமுள்ள வாசலில் உம்முடைய சமுதாயத்தாரில் விசாரணை இல்லாதவர்களை பிரவேசிக்கச் செய்வீராக. அது அல்லாததிலும் (இதர தலைவாசல்களிலும் ஏனைய) மக்களுடன் அவர்களும் சேர்ந்து கொள்வார்கள்" என்று கூறப்படும்.
பின்னர், "எவன் கரத்தில் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக(க்
கூறுகிறேன்). சுவர்க்கத்தின் நிலைக்கம்பங்களில் இரண்டு நிலைக்
கம்பங்களுக்கிடையில் ( உள்ள தூரம் ) மக்காவுக்கும்
ஹிம்யருக்கும் இடையிலுள்ளதைப் போலவோ அல்லது மக்காவுக்கும்
புஸ்ராவுக்கும் இடையிலுள்ளதைப் போலவோ (தூரம்) இருக்கும்" என்றும்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
புகாரீ, முஸ்லிம். )
அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் பின்வரும் விஷயத்தையும்
கூடுதலாக அறிவித்திருக்கிறார்கள்: அப்பொழது, ஈஸாவிடத்தில் மக்கள் வருவார்கள்.
"அதற்கு நான்
(தகுதி) இல்லை. எனினும் முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)
அவர்களை(ப்
பற்றிப் பிடித்துக் கொள்வது) உங்களுக்கு அவசியமாகும்" என்று கூறுவார்.அப்பொழுது, என்னிடம் அவர்கள் வருவார்கள். "அதற்கு நான்
(தகுதியுள்ளவன்)"
என்று நான் கூறி
என்னுடைய இறைவனிடம் அனுமதி கோருவேன். எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, எனக்கு (இல்ஹாமில்
அவனைப் புகழ வேண்டிய முறை பற்றிய) புகழ்கள் அறிவிக்கப்படும்.
அவற்றைக் கொண்டு நான் புகழ்வேன். இப்பொழுது, எனக்கு (அவை இன்னவை என்று கூற) வராது.
அப்புகழ்களைக் கொண்டு இறைவனைப் புகழ்ந்து அவனுக்கு ஸூஜூது செய்தவனாக
நான் விழுவேன்.
அப்பொழுது (இறைவன்) "முஹம்மதே! உம்முடைய தலையை உயர்த்துவீராக. நீர்
விரும்புவதைக் கூறுவீராக. உமக்கு செவி கொடுக்கப்படும். கேட்பீராக. (நீர்
கேட்பது) கொடுக்கப்படும். பரிந்துரை செய்வீராக. (உம்முடைய பரிந்துரை)
ஏற்றுக் கொள்ளப்படும்" என்று கூறுவான். அப்பொழுது,
"என்னுடைய
இரட்சகனே! என் உம்மத்து, என் உம்மத்து" என்பேன். "நீர் சென்று எவருடைய
இதயத்தில் தொலிக் கோதுமை அளவு ஈமான் இருக்கிறதோ, அவரை(யும்) அதிலிருந்து (நரகிலிருந்து)
வெளி யேற்றுவீராக" என்று கூறப்படும். நான் சென்று
(அப்படியே) செய்வேன்.
பின்னர், நான் திரும்ப வந்து அந்தப் புகழ்களைக் கொண்டு இறைவனை புகழ்வேன். பின்னர்,
அவனுக்கு ஸூஜூது
செய்தவனாக விழுவேன். அப்பொழுது, "முஹம்மதே! உம்முடைய
தலையை
உயர்த்துவீராக. (நீர் விரும்புவதைக்) கூறுவீராக. உமக்கு செவி
கொடுக்கப்படும்.
கேட்பீராக. (நீர் கேட்பது) கொடுக்கப்படும். பரிந்துரை செய்வீராக.
(உம்முடைய பரிந்துரை) ஏற்றுக் கொள்ளப்படும்" என்று கூறப்படும். அப்பொழுது,
"என் உம்மத்து,
என் உம்மத்து,
என்
உம்மத்து" என்று கூறுவேன். அதற்கு, "நீர் சென்று எவருடைய இதயத்தில் கடுகளவு
இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவரை அதிலிருந்து (நரகிலிருந்து) வெளியேற்று வீராக"
என்று கூறுவான். நான் சென்று (அவ்விதமே) செய்வேன்.
பின்னர், நான் திரும்ப வந்து அந்தப் புகழ்களைக் கொண்டு இறைவனை நான் புகழ்வேன். பிறகு, அவனுக்கு ஸூஜூது செய்தவனாக விழுவேன். அப்பொழுது, "முஹம்மதே!
உம்முடைய தலையை
உயர்த்துவீராக. (நீர் கூற விரும்பியதைக்) கூறுவீராக. (அதற்குச்) செவி கொடுக்கப்படும். (கேட்க
விரும்புவதைக்) கேட்பீராக. (அது உமக்குக்) கொடுக்கப்படும். (பரிந்துரை
செய்ய விரும்புபவருக்கு) பரிந்துரை செய்வீராக. (உம்முடைய பரிந்துரை) ஏற்றுக்
கொள்ளப்படும்" என்று கூறப்படும். அப்பொழுது,
"என்னுடைய
இரட்சகனே! என் உம்மத்து, என் உம்மத்து" என்று கூறுவேன். "நீர் சென்று எவருடைய
இதயத்தில் கடுகு விதையளவினும் மிகக் குறைவான ஈமான் (இறை நம்பிக்கை)
இருக்கிறதோ, அவரை(யும் நரக) நெருப்பை விட்டு வெளியேற்றுவீராக" என்று கூறப்படும்.
நான் சென்று (அவ்விதமே) செய்வேன்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
புகாரீ. )
மற்றோர் அறிவிப்பில், "பின்னர், நான்காவதாக நான் திரும்பி வந்து அந்தப் புகழ்களைக் கொண்டு இறைவனை புகழ்ந்து, அவனுக்கு ஸூஜூது செய்தவனாக நான் விழுவேன்.
அப்பொழுது, "முஹம்மதே! உம்முடைய தலையை உயர்த்திக் கூறுவீராக. (உமக்குச்) செவி
கொடுக்கப்படும். (கேட்க விரும்புவதைக்) கேட்பீராக. அது கொடுக்கப்படும்.
(பரிந்துரை செய்ய விரும்புபவருக்கு) பரிந்துரை செய்வீராக. (உம்முடைய பரிந்துரை) ஏற்றுக்
கொள்ளப்படும்" என்று கூறப்படும். "என்னுடைய இரட்சகனே!
' லாஇலாஹ இல்லல்லாஹூ'
(வணக்கத்திற்
குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யரும் இல்லை) என்று கூறியவருக்கு
(பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி கொடுப்பாயாக" என்று கூறுவேன்.
"என்னுடைய
இஸ்ஸத்தின் (கண்ணியத்தின்) மீதும், என்னுடைய கிப்ரியாவின் (பெருமையின்)
மீதும், என்னுடைய அள்மத்தின் (மகத்துவத்தின்) மீதும் சத்தியமாக. லாஇலாஹ இல்லல்லாஹூ என்று
கூறியவரை அதிலிருந்து (நரகிலிருந்து) நிச்சயமாக நான்
வெளியாக்குவேன்" என்று (அல்லாஹ்) கூறுவான் (என்று மற்றோர் அறிவிப்பில்) இருக்கிறது.
இவ்விதமாக, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமை நாளில் மனித வர்க்கத்தாரின் கஷ்டத்தைப் போக்க முன்வருவார்கள். தமக்குரிய விசேஷ பிரார்த்தனையைப் பயன்படுத்துவார்கள்.மனித வர்க்கத்தாருக்காக அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம் ஷபாஅத்து (பரிந்துரை) செய்வார்கள். அதன் மூலம் மனித வர்க்கத்தாரை கொடிய கஷ்டத்திலிருந்தும், சகிக்க முடியாத துன்பத்திலிருந்தும்
காப்பாற்றுவார்கள். முஃமின்களை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச்
செய்வார்கள். மேலும், பாவிகளையும், அணுவளவு ஈமான் கொண்டிருந்தவர்களையும் கூட நரகத்திலிருந்து மீட்டு
சுவர்க்கத்தில் சுகிக்கச் செய்வார்கள். இத்தகைய பெரும்பேறு அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வழங்கி சிறப்பித்துள்ளான்.
மேலும், ஒவ்வொரு முறையும் பாங்கு சொல்லி முடிந்தவுடன் கீழ்கண்ட துஆவை ஓதுபவருக்கு,
மறுமை நாளில்
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்து கிடைக்கப்பெறும்.
இது குறித்த ஹதீஸூம், துஆவும் வருமாறு: "அல்லாஹூம்ம ரப்(B)ப ஹாZiஹித்(D) தஃவத்தித்
தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் QAஇமத்தி, ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல் FA'ZEEலத்த வப்(B)அஸ்ஹூ மQAமன் மஹ்மூதனில்லZEE வஅத்தஹூ இன்னக
லாதுக்(KH)லிFUல் மீஆத்(D). (பொருள்: நாயனே! நிறப்பமான இந்த அழைபபுக்கும் நிரந்தரமான தொழுகைக்கும்
ரப்பானவனே! முஹம்மதுக்கு வஸீலாவையும் சிறப்பையும் கொடுத்து, அவருக்கு நீ
வாக்களித்துள்ள மக்காமன் மஹ்மூதில் அவரை எழுப்புவாயாக.) என்று
பிரார்த்திப்பவருக்கு கியாமத்து நாளில் எனது ஷபாஅத்து கடமையாகி
விட்டது" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிறுப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ. )
எனவே, மேற்கண்ட துஆவை அதிகம் அதிகம் ஓதி, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
ஷபாஅத்துக்கு தகுதி பெருவோமாக.

17.திரு மதீனாவும், மஸ்ஜிதுந் நபவியும்
"நாயனே! மக்காவில் ஏற்படுத்தியதைவிட இரட்டிப்பு பரக்கத்தை மதீனாவில் ஏற்படுத்துவாயாக" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
புகாரீ, முஸ்லிம், முஅத்தா. )
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்விதம் பிரார்த்தனை
செய்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாகப் பார்க்கப்போனால் அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திரு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த
பிறகுதான் இஸ்லாம் வேகமாக பரவியது! பல்வேறு மக்களுடைய ஆதரவு கிடைத்தது!
போர்களில் வெற்றி கிட்டியது! அண்ணலாரின் புகழும் பரவியது! அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய ஐம்பத்து மூன்றாவது வயதில் திரு
மக்காவை விட்டு திரு மதீனாவுக்கு ஹிஜ்ரத் புரிந்தார்கள். அதுவரை அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திரு மக்காவிலேயே வாசம்
புரிந்தார்கள். அக்கால கட்டத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் பல்வேறு கஷ்டங்களையும், சோதனை களையும் அனுபவித்தார்கள்! அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், தம்முடைய ஆறாம் வயதில் அன்னையை
இழந்தார்கள்! எட்டாம் வயதில் பாட்டனாரை இழந்து தவித்தார்கள்! இருபத்து ஐந்தாம் வயதில் கதீஜா பிராட்டியாரை மணம் முடித்தார்கள்! முப்பத்து ஐந்தாம் வயதில் திருக் கஃபாவை புதுப்பிக்கும் பணியில் பங்கேற்றார்கள்! நாற்பதாம் வயதில் நபித்துவம்
கிடைத்தது! ஹிரா மலைக் குகையில் வஹீ (வேத அறிவிப்பு) அருளப்பட்டது.
அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்!
அதன் காரணமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்தம்
தோழர்களும் பல்வேறு கொடுமைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்தார்கள்! அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நாற்பத்து ஐந்தாம் வயதில், சன்மார்க்க
விரோதிகளின் கொடுமைகளை தாங்க முடியாத நிலையில் தோழர்கள் அபிஸீனியாவிற்கு
ஹிஜ்ரத் செய்தார்கள்! ஐம்பதாம் வயதில் அன்பிற்குரிய துணைவியார் கதீஜா
பிராட்டியாரையும், தம்முடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் அவர்களையும் இழந்து
தவித்தார்கள்! அதே ஆண்டில் தாயிப் நகரத்து வீதயிலே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுமைப் படுத்தப்பட்டார்கள்! ஐம்பத்து ஓராம்
வயதில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தை
மேற்கொண்டார்கள்! ஐங்காலத் தொழுகையும் கடமை ஆக்கப்பட்டது!
ஐம்பத்து மூன்றாம் வயதில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் உத்தரவுப்படி திரு மதீனாவுக்கு ஹிஜ்ரத்
புரிந்தார்கள்! மதீனா வாசிகள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
உற்சாகமாக வரவேற்று உபசரித்தார்கள். மக்கத்து குரைஷிகள் புரிந்த
கொடுமைகளுக்கு மருந்தாக மதீனாவாசிகள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களையும், அவர்தம் தோழர்களையும் கண்ணியப் படுத்தினார்கள்! இவ் உலகத்தில் சகோதரத்துவத்துக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள்! ஐம்பத்து ஐந்தாம் வயதில் கிப்லாவின் திசை மஸ்ஜிதுல் அக்ஸாவின் பக்கத்திலிருந்து மஸ்ஜிதுல் ஹராம்
(புனித கஃபா)
பக்கமாக மாற்றப்பட்டது! ரமலான் மாத நோன்பு கடமையாக்கப்பட்டது! ஜக்காத்து கடமையாக்கப்பட்டது! அதே வருடம் பத்ருப் போரும் நடந்தது! அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் உதவியைக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய படை மாபெரும் வெற்றியைக் கண்டது! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஐம்பத்து ஆறாம் வயதில் உஹதுப் போர் நடைபெற்றது! அதே வருடம் மது ஹராம் ஆக்கப்பட்டது. ஐம்பத்து எட்டாம் வயதில் கந்தக் (அகழ்) போர் உட்பட சில போர்கள் நடந்தன. பர்தா பற்றிய அருள்மறை வசனம் அருளப்பட்டது. ஹஜ்ஜூ கடமை ஆக்கப்பட்டது. ஐம்பத்து ஒன்பதாம் வயதில் ஹூதைபியா உடன்படிக்கை ஏற்பட்டது. அதே வருடத்தில் மன்னர்களை இஸ்லாமியத்துக்கு அழைக்கும் பணியைத் தொடங்கினார்கள்! அறுபதாம் வயதில் கைபர் உட்பட சில போர்கள் நடந்தன! அறுபத்து ஒன்றாம் வயதில் திருமக்கா வெற்றிக் கொள்ளப்பட்டது. ஹூனைன், தாயிப் போர்கள் நடந்தன. அறுபத்து இரண்டாம் வயதில் தபூக் யுத்தம் நடைபெற்றது. அறுபத்து மூன்றாம் வயதில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.
இப்படியாக, திரு மதீனாவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திரு வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. வளர்ச்சிகள் ஏற்பட்டன. வெற்றிகள் கிட்டின. அதனால்தானோ என்னவோ, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
"மக்காவில்
ஏற்படுத்தியதை விட இரட்டிப்பு பரக்கத்தை மதீனாவில் ஏற்படுத்துவாயாக"
என்று
பிரார்த்தித் தார்கள்!
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து
திருமதீனாவுக்கு வந்தபோது திருமதீனா, 'யத்ரிப்' என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. யத்ரிப் என்னும் பெயர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. ஏனெனில், யத்ரிப் என்னும் பெயருக்கு 'இழித்துக் கூறுவதில் மிகவும் கடுமையானது'
என்பது
பொருளாகும்! எனவேதான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் யத்ரிப் என்னும் பெயரை மாற்றி 'மதீனா' என்னும் பெயரை சூட்டினார்கள். மதீனா என்னும் பெயருக்கு 'பட்டணம்' என்று பொருளாகும்!
மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திருமதீனாவிற்கு 'மணம் உள்ளது'
என்னும் பொருள்
கொண்ட 'தையிபா' என்றும், 'மணம் பெற்றது' என்னும் பொருள் கொண்ட 'தாபர்' என்றும் பெயர் சூட்டினார்கள். மேலும், திருமதீனாவைப்
பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் பல்வேறு விளக்கங்களை
அளித்திருக்கிறார்கள். அவற்றில் சில:
"எல்லா நகரங்களையும் மிகைக்கிற ஓர் ஊருக்கு(ச் செல்லுமாறு) நான்
கட்டளையிடப் பட்டிருக்கிறேன். அதற்கு யதுரிபு என்று சொல்லு கிறார்கள் ;
அதுதான் மதீனா. கொல்லுலை இரும்பிலுள்ள துருவை ஒழிப்பது போல தீயோரை அது ஒழித்து விடும்"
என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹூரைரா
ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
"மதீனாவுக்கு 'தாபா' என்று அல்லாஹ் பெயரிட்டான்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா ரலியல்லாஹூதஆலா
அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் தபூக்கிலிருந்து
நாங்கள் திரும்பி வந்துக் கொண்டிருந்தோம். மதீனாவுக்கு பக்கத்தில்
நாங்கள் நெருங்கியபோது, "இது தாபத்துன் (மணமானது)"

அபூஹூமைத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
"திரு மதீனா இன்ன இடத்திலிருந்து இன்ன இடம்வரை ஹரம். அதன் மரம்
வெட்டப் படக்கூடாது. அதில் (மார்க்க விஷயத்தில் புதியது) எதையும்
புதிதாக ஏற்படுத்தக் கூடாது. அங்கு (மார்க்க விஷயத்தில்) புதியதை
உண்டு பண்ணுகிறவரின் மீது அல்லாஹ், மலக்குகள், மக்கள் யாவருடைய முனிவு சாபம் ஏற்படும்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
புகாரீ.
"மதீனாவின் தலை வாசல்களில் மலக்குகள் (காவல் புரிந்துக் கொண்டு)
இருக்கிறார்கள். (அதனால்) அதற்குள் தாஊனும், தஜ்ஜாலும் நுழைய முடியாது" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ.
"மதீனாவாசிகளுக்குத் தீங்கிழைப்போர் நீரில் உப்பு கரைவது போல்
கரைந்து விடுவார்கள்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃது ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
புகாரீ.
"எவருக்கு மதீனாவில் இறக்க முடியுமோ அவர் அங்கு இறக்கவும். ஏனெனில்,
நிச்சயமாக நான் அங்கு இறப்பவருக்கு (அல்லாஹ்விடம்) பரிந்துரைப்பேன்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.
இவ்விதமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த திரு
மதீனாவை, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா 'தாபா (மணமுள்ளது)' என்று பெயரிட்டு சிறப்பித்துள்ளான்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திரு மதீனாவை 'ஹரம் ( கண்ணியமான
இடம் )' என அறிவித்திருக்கிறார்கள். திரு மதீனாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும்
விதமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ரெளலா ஷரீபும் திரு
மதீனாவிலேயே அமைந்துள்ளது. இதுவும் ஒரு சிறப்பாகும்.
திரு மதீனாவிற்கு பெருமை சேர்க்கும் இன்னொரு விஷயம் மஸ்ஜிதுந்
நபவீ ஆகும். மஸ்ஜிதுர் ரஸூல் என போற்றப்படும் இந்த மஸ்ஜிதை
நிர்மாணிக்கும் பணியில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களும் கலந்து கொண்டார்கள். தமது திருக் கரங்களால் கல்லையும், மண்ணையும் சுமந்து
சென்று இப் பள்ளிவாசலைக் கட்டினார்கள். மஸ்ஜிதுந் நபவீ
நிர்மாணிக்கப்பட்ட விவரத்தை கீழ்கண்ட ஹதீஸ் மூலமாக அறியலாம்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
மதீனாவிற்கு வந்த பொழுது, அதன் மேற்புறத்தில் வாழ்ந்து வந்த அம்ருப்னு
அவ்ப்பு என்று சொல்லப்படும் குடும்பத்தினரிடம் தங்கி, அவர்களிடத்தில்
நான்கு இரவு (பகல்கள்) இருந்தனர். பின்னர், பனூ நஜ்ஜாருடைய தலைவர்களை அழைத்து
வருமாறு ஆள் அனுப்பினார்கள். அவர்கள் தங்களின் கழுத்தில் வாள்களை
மாட்டிக் கொண்டு வந்து சேர்ந்தனர். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் தங்களின் வாகனத்தின் மீதும், அன்னாருக்குப்
பின்னால் அபூபக்ர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களும் ஏறி, பனூ நஜ்ஜார்கள்
புடைசூழப் புறப்பட்டு அபூஅய்யூப் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களுடைய (வீட்டு) வாசலில வந்து,
தங்களுடைய பொருள்களை வைத்தனர். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், "பனூ நஜ்ஜார்களே! உங்களுடைய இந்த தோட்டத்தை எனக்கு விற்று விடுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "இல்லை, இறைவன் மீது ஆணையாக, நாங்கள் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் இதற்குரிய விலையைப் பெற விரும்பவில்லை (அதாவது: விலையின்றியே கொடுக்கிறோம்)" என்று
கூறினார்கள். அது பேரீச்ச மரங்களும், இணை வைப்பவர் களுடைய கப்ருகளும், மேடு பள்ளமுடைய தரையை கொண்டதாகவும் இருந்தது. எனவே, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்ச
மரங்களை வெட்டிச் சாய்க்குமாறு கட்டளை யிட்டார்கள். அவ்விதமே மரங்கள்
வெட்டிச் சாய்க்கப்பட்(டு வேரோடு தோண்டி எடுக்கப்பட்)டன. இணை
வைப்பவர்களுடைய கப்ருகள் தோண்டப்(பெற்று அவற்றில் இருந்த எலும்புகள் அப்புறப் படுத்தப்) பட்டன. அதன்பின் தரையும் சரிசமமாக ஆக்கப்பட்டது. aபின்னர், பள்ளியின் கிப்லா
திசையில் பேரீச்ச மரங்கள் வரிசையாக நடப்பட்டு, அதன் ஓரத்தில் மக்கள் பாடிக் கொண்டே
கல்லால் (சுவர்) கட்டி சரிசெய்துக் கொண்டிருந்தனர். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுடன் இருந்தனர். அப்போது அவர்கள்,
"இறைவனே!
மறுமையின்
நன்மையைத் தவிர வேறு எந்த நன்மையும் (நன்மை) இல்லை. எனவே, மதீனாவின் ஆதரவாளர்களுக்கும், மக்காவின அகதிகளுக்கும் உதவி புரிவாயாக!"
என்று கூறிக் கொண்டு (கவித் தோரணையில் பாடிக் கொண்டு) இருந்தனர். அறிவிப்பவர்:
அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ.
மஸ்ஜிதுந் நபவீ விரிவு படுத்தப்பட்டது குறித்து இந்த ஹதீஸில் விவரம் கூறப்பட்டுள்ளது. "அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில், பள்ளிவாயில் பச்சைக் கற்களால் சுவர் எழுப்பப்பட்டும், பேரீச்சம் ஓலையால் முகடு
போடப்பட்டும், பேரீச்ச மரத்துண்டுகளைக் கொண்டு தூண் நிறுத்தப்பட்டும்
இருந்தது. பின்னர் அபூபக்ர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களுடைய
காலத்தில், இவற்றில் யாதொன்றும் அதிகப் படுத்தப்படவில்லை. ஆனால், உமர்
(ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் (தம்முடைய காலத்தில்) சற்று அதிகப்படுத்தி -
ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இருந்த,
அதே கடைக்காலின்
மீது கட்டடம் எழுப்பினார். பின்னர் உஸ்மான் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ)
அவர்களுடைய காலத்தில், அது பெரிதும் விரிவு படுத்தப்பட்டு, சுற்றுச் சுவர்களைப் பூ வேலைப்பாடுகளுடன்
கூடிய கற்களைக் கொண்டும், சுண்ணாம்பைக் கொண்டும் கட்டி, அதன் தூண்களையும் மேற்படி கற்களால் எழுப்பி, அதன் முகட்டுக்குத் தேக்கு மரத்தையும் பயன் படுத்தினார்கள்".
அறிவிப்பவர்:
இப்னு உமர்
ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, அபூதாவூத்.
மஸ்ஜிதுந் நபவீயின் சிறப்புகள் பற்றியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறியிருக் கிறார்கள். அவற்றில் சில ஹதீஸ்கள்
வருமாறு:
"என்னுடைய இந்த மஸ்ஜிதில் ஒரு தொழுகை, மஸ்ஜிதுல் ஹராமைத் தவிரவுள்ள இதர
மஸ்ஜிதில் ஆயிரம் தொழுகைகளை விட சிறந்தது" என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
"அல்மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுர் ரஸூல், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று மஸ்ஜிதுகளைத் தவிர பயணம் செய்யக் கூடாது" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
நூல்:
புகாரீ.
"என் வீட்டுக்கும், என் மின்பருக்கும் இடையில் உள்ளது சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்கா. என்னுடைய மின்பர் என் ஹெளலின் மீதிருக்கிறது"

ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், முஅத்தா.
இவ்விதமாக திரு மதீனாவும், மஸ்ஜிதுந் நபவீயும் சிறப்பிக்கப்பட்டுள்ளன!

18.தவ்ராத்திலும், இன்ஜீலிலும்
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, தவ்ராத் வேதத்தை ஹஜ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளினான். அந்த தவ்ராத் வேதத்திலே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் குண நலன்கள் பற்றி சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. ஹஜ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இன்ஜீல் அருளப்பட்டது. இன்ஜீலிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நற்செய்தி கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து திருக்குர்ஆனிலே, அத்தியாயம் - 7, (ஸூரத்துல் அஃராஃப்), வசனம் - 157 ல் இவ்விதம் சிறப்பித்து
கூறப்பட்டுள்ளது.
அவர்கள் எத்தகையோர் என்றால், அவர்களிடத்திலுள்ள தவ்ராத்திலும்,
இன்ஜீலிலும் அவரைப் பற்றி எழுதப்பட்டவராக காண்கிறார்களே, அத்தகைய எழுதப் படிக்கத் தெரியாத (உம்மி) நபியான (நம்) தூதரை
பின்பற்றுவார்கள். அவர்களை நன்மையான காரியங்களை (செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை
விலக்குவார். இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி வைத்து,
கெட்டவற்றை
அவர்கள் மீது விலக்கி வைப்பார். இன்னும் அவர்களை விட்டும், அவர்களுடைய
சுமையையும், அவர்களின் மீதுள்ள விலங்குகளையும், (அல்லாஹ்வின் பல கடினமான கட்டளைகளை அவன் அனுமதி கொண்டு) அவர் நீக்கிவிடுவார். ஆகவே எவர்கள் அவர் மீது ஈமான் கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கி வைக்கப்பட்ட அந்த
(வேத) ஒளியை பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (
7 : 157 )
தவ்ராத் வேதத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
தன்மையைப் பற்றிக் கூறப்பட்டிருப்பது என்னவென்று அப்துல்லாஹிப்னு
அம்ரிப்னில் ஆஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூமா அவர்கள் வினவப்பட்டார்கள். அதற்கவர்,
"அல்லாஹ்வின் மீது ஆணையாக(க் கூறுகிறேன்). அவர்களுடைய தன்மைகளைப் பற்றி திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் அதே விஷயம் தவ்ராத்திலும் கூறப்பட்டிருக்கிறது. அதாவது,
நபியே! சாட்சி
கூறுபவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும், எழுதப்படிக்கத்
தெரியாதவர்(உம்மீ) களுக்கு பாதுகாப்பாளராகவும் உம்மை நாம்
அனுப்பியிருக்கிறோம். நீர் எமது அடியாராகவும், தூதராகவும் இருக்கிறீர். உமக்கு
"அல்முத்தவக்கில்" என்று பெயரிட்டிருக்கிறேன். (நீர்) தீய குணம்
உள்ளவரல்லர். வன்னெஞ்ச முள்ளவருமல்லர். தீமைக்கு பதில் தீமை
செய்பவரும் அல்லர். எனினும், சகிப்பவர், மன்னிப்பவர், லாஇலாஹ இல்லல்லாஹூ (வணக்கத்துக் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று அவர்கள் கூறுவதன் மூலம் உம்மைக் கொண்டு கோணலான மார்க்கத்தைக் கொண்டு குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், மறந்த இதயங்களையும் திறக்காதவரையிலும் உம்மை அவன் அழைத்துக் கொள்ளவே மாட்டான் என்று கூறப்பட்டிருக்கிறது" என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னில் ஆஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
புகாரீ. )
இன்ஜீலில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து கூறப்பட்டிருக்கும் நற்செய்தி பற்றி திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது:
மேலும், மர்யமின் மகன் ஈஸா "இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் உங்களின்பால்
(அனுப்பப்பட்ட)
அல்லாஹ்வின் ரஸூலாக இருக்கின்றேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்
படுத்துபவனாகவும், எனக்குப் பின்னால் வரப்போகின்ற, அஹ்மது என்னும் பெயரைக் கொண்ட தூதரைப் பற்றி, நற்செய்தி
கூறுபவனாகவும் இருக்கின்றேன் என்று கூறிய நேரத்தை (நபியே நீர் நினைவு
கூர்வீராக). அவர்களிடம் (அத்தூதராகிய) அவர் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு
வந்தபோது, இது தெளிவான சூனியமாகும் என்று அவர்கள் கூறினார்கள். (
அத்தியாயம் - 61 (ஸூரத்துஸ் ஸஃப்பு), வசனம் - 6. )
இவ்விதம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி தவ்ராத்திலும்,

19.மாண்பும் மகிமையும்
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பல்வேறு சிறப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து சிறப்பித் திருக்கிறான். அவற்றில் பலவற்றை, வேறு எந்த நபிமாருக்கும் வழங்காமல் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கி சிறப்பித் திருக்கிறான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியப் படுத்தியுமிருக்கிறான்.
ஒருவர் தொழுது கொண்டிருக்கும் பொழுது பெற்றோர்களில் இருவருமோ
அல்லது அவர்களில் ஒருவரோ அழைத்தால், தொழுகையை சுருக்கித் தொழுதுவிட்டு அவர்களின் அழைப்புக்குப் பதில் அளிப்பது முஸ்தஹப்பு (விரும்பத்தக்கது), என மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். தொழுது கொண்டிருக்கும் பொழுது குருடன் கிணற்றில் விழுந்து விடுவான் என்ற அச்சம் ஏற்படும் பொழுது தொழுகையை முறிப்பது ஆகுமானதாகும். ஆனால், முறித்த தொழுகையை மீண்டும் தொழுது முடிக்கவேண்டும். ஆனால், தொழுது கொண்டிருக்கும் பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்தால், தாமதிக்காமல் உடனே பதிலளிக்க வேண்டும். அவ்விதம் தொழுகையில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பதிலளிப்பதால் தொழுகை பாதிக்காது. இந்த விசேஷ உரிமை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வழங்கி இருக்கிறான். இதுகுறித்து அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா திருக்குர்ஆனிலே, "ஈமான்
கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள் ;"
என்று கூறியுள்ளான். ( அத்தியாயம் - 8 (ஸூரத்துல் அன்பால்), வசனம் - 24. )
தொழும் நிலையிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
அழைப்புக்கு உடனே பதிலளிக்க வேண்டும் என்னும் உண்மையை பின்வரும் ஹதீஸூம்
விளக்குகிறது. 'மஸ்ஜிதில் நான் தொழுது கொண்டிருந்தேன். என்னை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்தார்கள். நான் பதிலளிக்கவில்லை.
(தொழுது முடித்த பின்னர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம்
நான் சென்று) "இறைத்தூதர் அவர்களே! நான் தொழுதுக் கொண்டிருந்தேன்"
என்று கூறினேன்.
"அல்லாஹ்வுக்கும்
இந்த ரஸூலுக்கும் உங்களை அவர்கள் அழைத்தால் (உடனே) பதிலளியுங்கள்
என்று அல்லாஹ் கூறவில்லையா?" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். பின்னர், "இந்த மஸ்ஜிதை விட்டு நீர் செல்வதற்கு முன்னர் (திரு)குர்ஆனிலுள்ள ஸூரத்துகளில் மகத்தான ஒரு ஸூரத்தை உமக்கு நான் நிச்சயமாக அறிவிப்பேன்" என்றும் என்னிடம் கூறினார்கள்.
பின்னர், என் கரத்தைப் பிடித்துக் கொண்டார்கள். (மஸ்ஜிதை விட்டு) அவர்கள் வெளியேற நாடியபோது, "(திரு)குர்ஆனில் மகத்தான ஸூரத்தாக இருக்கும் ஒரு ஸூரத்தை உமக்கு நான்
நிச்சயமாக அறிவிப்பேன் என்று எனக்குத் தாங்கள் கூறவில்லையா?" என்று கேட்டேன்.
"அது, 'அல்ஹம்துலில்லாஹி
ரப்பில் ஆலமீன்' (என்ற ஸூரத்து). அதுதான் அஸ்ஸப் உல்மதானி வல்குர்ஆனில் அளீம். அது எனக்குக் கொடுக்கப்பட்டது" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸஈதப்னுல்
முஅல்லா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.) இந்த ஹதீஸ் மூலமாகவும் தொழுகையிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்புக்கு உடனே பதிலளிக்க வேண்டும் என்னும் உண்மை புலப்படுகிறது. இந்த விசேஷ உரிமை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது!
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முன்பின் பாவங்கள் யாவற்றையும் மன்னித்து அன்னாரை பரிசுத்தமானவராக
ஆக்கியிருக்கிறான்.
அனஸ் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹூதைபியா விலிருந்து திரும்பும் பொழுது,
(1) (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம். (2) உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும்
அல்லாஹ் மன்னித்து, உமக்காகத் தனது அருட் கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில்
நடத்துவதற்காகவும்.
என்னும் அத்தியாயம் - 48 (ஸூரத்துல் பத்ஹ்), 1, 2 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன."
இந்த ஹதீஸ் புகாரீ,
முஸ்லிம், திர்மிதீ ஆகிய
நூல்களில் இடம்பெற்றுள்ளது. அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, இந்த சிறப்பையும்
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கி
சிறப்பித்திருக்கிறான்.
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, ஷைத்தான் மீது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை மிகைக்கச் செய்துள்ளான். இது குறித்த ஹதீஸ்: "நிச்சயமாக,
உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஷைத்தான் அவருடன் இருக்கும் சகாவாகவும், ஒரு வானவரை அவருடன் இருக்கும் சகாவாகவும் சாட்டப் படாமலில்லை" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "நாயகமே!
தங்களுக்குமா?
(அவ்விதம் சாட்டப்
பட்டிருக்கிறது?)" என்று தோழர்கள் கேட்டார்கள். "ஆம்,
எனக்கும்தான்.
ஆனால் நிச்சயமாக, அல்லாஹ் (எனக்குப் பேரருள் புரிந்து) என்னை ஷைத்தான்
மீது மிகைக்கச் செய்துள்ளான். எனவே, அவன் இஸ்லாமாகி நன்மையைத் தவிர வேறு எதையும் எனக்கு
ஏவுவதில்லை" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
நூல்: முஸ்லிம்.
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய
சந்ததிகளில் மிகவும் சிறப்புள்ளவராக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களே இருக்கிறார்கள். இதற்கான காரணத்தை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களே கூறியிருக் கிறார்கள். "(கப்ரு
களிலிருந்து) எழுப்பப்படும் பொழுது நான்தான் மனிதர்களில் முதல்வனாக
வெளிப்படுவேன். அவர்கள் இறைவன் பால் செல்லும் பொழுது நான்தான் அவர்களுக்கு
முன்னோடியாக இருப்பேன். (அவர்கள் மெளனமாக இருக்கும் பொழுது நான்தான்
உரையாடுவேன்) அன்றி, அவர்கள் நம்பிக்கை இழக்கும் பொழுது நான்தான் அவர்களுக்கு நன்மாராயம்
கூறுவேன். அன்று என் கையில் புகழின் கொடி இருக்கும். என் இறைவனிடம் ஆதம்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சந்ததிகளில் மிகவும் சிறப்புள்ளவன் நான்தான்.
(இவ்வாறு கூறுவதன் மூலம்) நான் பெருமை பாராட்ட வில்லை" என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.
இன்னொரு ஹதீஸில், "மறுமை நாளில் நான் நபிமார்களுக் கெல்லாம்
தலைவனாகவும் அவர்களின் பேச்சாளனாகவும் இருப்பேன். அவர்களில் நான்தான்
(முதலில் பிறருக்காகப் பரிந் துரைக்கும் உரிமை) 'ஷஃபாஅத்' உடையவன். (இவ்வாறு கூறுவதன் மூலம்) நான் பெருமை பாராட்ட வில்லை" என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
உபை இப்னு கஃபு ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.
மறுமை நாளில் சுவனத்து வாசல் முதன்முதலாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி அவர்களுக்காகத்தான் திறக்கப்படும். இது குறித்த ஹதீஸ்:
"மறுமை நாளில் நான் சுவனபதியின் வாசலை அடைந்து, அதனைத் திறக்குமாறு கோருவேன். அப்பொழுது அதன் காவலர், "நீங்கள் யார்?" என்று கேட்பார். அதற்கு நான்,
"முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம்)" என்பேன். அப்பொழுது அவர், "தங்களுக்கு முன்னர் எவருக்கும் வாசலைத் திறக்க
வேண்டாமென்றும், தங்களுக்கே அதனைத் திறக்க வேண்டும் என்றும் நான்
கட்டளையிடப் பட்டுள்ளேன்' என்று கூறுவார்" என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம்.
இன்னொரு ஹதீஸில், "நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும்
முதல் மனிதராவேன் ; இறைத் தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்"
என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அனஸ் பின் மாலிக்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம். இப்படியாக,
அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்புகளை எல்லாம் சிறப்பாக
பெற்றிருக்கிறார்கள்.

20.முஃஜிஸா ( அற்புதம் )
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக பல்வேறு முஃஜிஸாக்களை (அற்புதங்களை) வெளிப் படுத்தியுள்ளான். அந்த அற்புதங்கள் பெரும்பாலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகளுக்கு (சமுதாயத்தாருக்கு) நன்மை பயக்கக் கூடியவைகளாகவே அமைந்திருந்தன. அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வான் பொருட்களிலே, பூமியிலே, தாவரங் களிலே, விலங்கினங் களிலே என்று பல்வேறு வகையான அற்புதங்களைப்
புரிந்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் தொகுத்தால் ஒரு தனி புத்தகமே
எழுதலாம்! அந்த அளவிற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
அதிகம் அதிமான அற்புதங்களை புரிந்திருக்கிறார்கள். இதிலும் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பு வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் அனுமதியைக் கொண்டு நபிமார்கள் புரியும் அற்புதங்களுக்கு 'முஃஜிஸா' என்றும், ஒலிமார்கள் புரியும் அற்புதங்களுக்கு 'கராமத்து' என்றும் கூறப்படும். "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில
அற்புதங்கள் வழங்கப் பெற்றே இருந்தன" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி யுள்ளார்கள். உதாரணமாக, ஹஜ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது கைத்தடியால் பாறை மீது அடிக்க, பாறையிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுகள் பீறிட்டு
பொங்கின. மேலும், அன்னார் தம்முடைய கைத்தடியை கீழே எறிந்த போது அது ஒரு பெரிய பாம்பாக
மாறியது! இது குறித்து திருக்குர்ஆனிலே கீழ்கண்டபடி
கூறப்பட்டுள்ளது:
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டி பிரார்த்தித்த போது,
"உமது கைத்தடியால் அடிப்பீராக!" என நாம் கூறினோம் ; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுகள் பொங்கி யெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த் துறையை நன்கு அறிந்து கொண்டனர் ; "அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள் ; பூமியில் குழப்பஞ் செய்து கொண்டு திரியாதீர்கள்" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு
கூருங்கள். ( அத்தியாயம் - 2 ( ஸூரத்துல் பகரா ), வசனம் - 60. )
(107) அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகிவிட்டது. (108) மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது. (அத்தியாயம் - 7
(ஸூரத்துல்
அஃராஃப்), வசனம் - 107, 108. )
அதைப் போலவே, ஹஜ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹூ ஸூப்ஹானஹூ
தஆலாவின் அனுமதியைக் கொண்டு பிறவிக் குருடர் களையும், வெண் குஷ்டரோகி
களையும் குணப் படுத்தினார்கள். இறந்தோரை உயிர்ப் பித்தார்கள். இதுகுறித்து திருக்குர்ஆனிலே பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதுவராகவும் (அவரை ஆக்குவான் ; இவ்வாறு அவர்
ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர் "நான் உங்கள் இறைவனிடமிருந்து
ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன் ; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு
பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன் ; அது அல்லாஹ்வின்
அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும்,
வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன் ; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும்
உயிர்ப்பிப்பேன் ; நீங்கள் உண்பனவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பனவற்றையும்
பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள்
(நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில்
உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" ( என்று கூறினார் ). (அத்தியாயம் - 3
( ஸூரத்துல் ஆல
இம்ரான் ), வசனம் - 49 ). அத்தியாயம் - 5 (ஸூரத்துல் மாயிதா), 110 வது வசனத்திலும் இவ்விவரம் கூறப்பட்டுள்ளது. இவ்விதம் மற்ற எல்லா நபிமார்களும் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் அனுமதியுடன் சிற்சில அற்புதங்களைப் புரிந்திருக்கிறார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களோ ஏராளமான அற்புதங்களை புரிந்திருக்கிறார்கள். அந்த அற்புதங்களில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் குறிப்பிட்டு கூறப்பட்டிருப்பது திருக்குர்ஆன் ஆகும்.
"ஒவ்வோர்
நபிமாருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பெற்றே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு(வஹீ)தான். ஆகவே, நபிமார் களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர்
அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்
கிறேன்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
புகாரீ, முஸ்லிம்.) இந்த ஹதீஸில் வஹீ (திருக்குர்ஆன்) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும்,
திருக்குர்ஆனின் காரணமாக மறுமை நாளில் நபிமார்களிலேயே பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
உண்மையிலேயே திருக்குர்ஆன் ஒரு அற்புதமாக இருக்கிறது. திருக்குர்ஆனில்
உலக மக்கள் யாவருக்கும் பொதுவான மத போதனைகள், வாழ்க்கை உபதேசங்கள் யாவும் பூரணமாக அருளப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, பல்துறை விஷயங்களும் நிறைவாக அருளப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன் ஒரு தேசத்திற்கோ, ஒரு மதத்தினருக்கோ சொந்தம்
என்றில்லாமல் மனித இனம் முழுமைக்கும் வழிகாட்டியாக அருளப் பட்டுள்ளது.
கியாமத்து நாள் வரையிலுள்ள மக்களுக்கு பயன் தரும் வகையில் அருளப்
பட்டுள்ளது. அதனால், திருக்குர்ஆன் மூலம் பயன் பெறுவோரின் எண்ணிக்கையும் மிக
மிக அதிகமாக இருக்கின்றது.
திருக் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் அரேபிய தேசத்திலிருந்த
கற்றோர்களும், கவிஞர்களும் 'திருக் குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது' என்பதில் சந்தேகம் கொண்டார்கள்.
திருக் குர்ஆனின் வசனங் களைப் போல கவி புனைய முயற்சிகளைச் செய்தார்கள்.
தோற்றுப் போனார்கள். அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா திருக்குர்ஆனில் அருளியுள்ளான்:
(23) இன்னும் [முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) என்ற] நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள(வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (எல்லாம் ஒன்றாக) அழைத்து(வைத்து)க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (24) (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் -
அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது - மனிதர்களையும்
கற்களையும் எரி பொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்.
(அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே
அது சித்தப் படுத்தப்பட்டுள்ளது. ( அத்தியாயம் - 2, ஸூரத்துல் பகரா, வசனம் - 23,24. )
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் கூற்றுப்படியே, எந்த ஒரு மனிதனாலும் திருக்குர்ஆனின் வசனம் போல எந்த ஒரு வசனத்தையும் கொண்டு வர முடியவில்லை. தோற்றுப்போன அக்கால கவிஞர்களும், அரபிமொழி வல்லுநர்களும் " இது மனிதனின் வார்த்தை இல்லை" என்று சாட்சியம் கூறினார்கள். இது, திருக்குர்ஆனின் சத்தியத் தன்மைக்கு ஆதாரமாகும்.
திருக்குர்ஆனில் முப்பது பாகங்களும், நூற்று பதினான்கு அத்தியாயங்களும்,
6666 வசனங்களும்,
77943 சொற்களும்,
338606 எழுத்துக்களும்
உள்ளன. பதினான்கு நூற்றாண்டு களுக்கும் மேலாக இதில் ஒரு எழுத்து கூட
மாற்றம் இல்லாமல் உலகம் முழுவதிலும் எழுதப்பட்டு, ஓதப்பட்டு வருகிறது. இது ஒரு
அற்புதமாகும். மேலை நாட்டினர் இந்த அற்புதத்தை கணிணி மூலமாகவும்,
பல்வேறு ஆய்வுகள்
மூலமாகவும் ஆராய்ந் திருக்கிறார்கள். அவ்விதம் ஆராய்ந்தவர்களில் பலர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்.
திருக் குர்ஆன் மக்களுக்கு நேர்வழியைக் காட்டுகிறது. திருக்
குர்ஆனின் வசனங்களை கேட்ட மாத்திரத்திலேயே, அதன் பொருளை உணர்ந்த மாத்திரத்திலேயே
ஏராளமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார்கள். இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்
ஹஜ்ரத் உமர் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கொல்லும் நோக்கத்தோடு வாளெடுத்துக் கிளம்பினார்கள்.(அல்லாஹ் பாதுகாக்கட்டும்). அப்படிப் பட்ட உமர் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) அவர்கள் தமது தங்கையின் வீட்டில் திருக்குர்ஆனை ஓதக் கேட்டார்கள். உடனே அவர்கள் குப்ரை விட்டொழித்து இஸ்லாத்தை ஏற்றார்கள். அன்னாரின் மனமாற்றத்திற்கு காரணம் திருக்குர்ஆனை ஓதக் கேட்டதே ஆகும். திருக் குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டக்கூடியதாக இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
மனிதர்கள் மட்டுமல்ல, ஜின்களும்கூட திருக் குர்ஆனை ஓதக் கேட்டு இஸ்லாத்தை
ஏற்றுள்ளன! இது குறித்து இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ
அவர்களின் அறிவிப்பின் இறுதிப் பகுதியில், 'அவர்கள் திருக்
குர்ஆனைச் செவி யேற்றவுடன் அதற்குச் செவிமடுத்தனர். சத்தியமாக உங்களுக்கும்
வானின் செய்திக்கும் இடையில் தடையாய் இருப்பது இதுதான். (அவர்கள்)
திரும்பச் சென்று "எங்கள் சமூகத்தாரே! நாங்கள்
ஆச்சரியமான ஒரு திருக்குர்ஆனைக் கேட்டோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. அதனை
நாங்கள் விசுவாசித்தோம், எங்களுடைய இறைவனுக்கு ஒருவரையும்
நாங்கள் இணையாக்க மாட்டோம்" என்றனர். அப்பொழுது அல்லாஹூதஆலா தன்னுடைய நபீ (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு "குல் ஊஹிய
இலய்ய" என்ற வசனத்தை அருளினான்' எனக் கூறப்பட்டுள்ளது. ( நூல்:
புகாரீ. )
இப்படியாக திருக்குர்ஆன் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு அருளப்பட்ட அற்புதமாகவே உள்ளது. திருக்குர்ஆன் கியாமத்து
நாள் வரை மக்களுக்கு நேர்வழி காட்டும் என்பதால், மறுமை நாளில்
பின்பற்றுவோர் அதிகம் உள்ள இறைத்தூதராக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் இருப்பார்கள்.
சந்திரன் இரண்டு துண்டுகளாக பிளந்தது: அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் சந்திரன் இரண்டு
துண்டுகளாகப் பிளந்தது. அப்பொழுது, "நீங்கள் சாட்சியாயிருங்கள்"
என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் இப்னு
மஸ்ஊத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ. இந்த அற்புதம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திருமக்காவைத் துறந்து திருமதீனாவில் குடியேறுவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்து! பொதுவாக
நபிமார்கள் நிகழ்த்திய அற்புதங்களை எல்லாம் மக்கள் சூனியம் என்றே கருதினார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களின் அற்புதங்களையும் மக்காவாசிகள் சூனியம் என்றே
கருதினார்கள். சூனியம் பூமியில் மட்டும்தான் செல்லுபடியாகும்.
வானத்திலே செல்லுபடியாகாது. எனவே, மக்காவாசிகள் கூடிப்பேசி இந்த அற்புதத்தை
நிகழ்த்தும்படி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களிடம் கோரினார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார்கள்! ஆயினும் மக்காவாசிகள், "இது அவருடைய சூனியம்தான்! மக்காவுக்கு வருகிற வெளியூர் வாசிகளிடம் இதைப்பற்றி விசாரிப்போம். இந்த அற்புதத்தை பார்த்ததாக அவர்களும் கூறினால், இதை உண்மை என்று நாம் நம்புவோம். இல்லையென்றால் இதை ஒரு சூனியமாக கருதுவோம்" என முடிவு செய்தார்கள். அதன்படி வெளியூரிலிருந்து மக்காவிற்கு வந்தவர்களிடம் விசாரித்தார்கள்! அவர்களும் சந்திரன் இரண்டு துண்டுகளாக பிளந்த அற்புதத்தை பார்த்ததாகக் கூறினார்கள்! வானத்திலே நிகழ்த்தப்பட்ட இந்த அற்புதம், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்களிலே
மிகவும் முக்கியமானதாக அறிஞர்களால் கணிக்கப்படுகிறது.
உயிரற்ற பொருட்கள் உரையாடின, சாட்சியம் கூறின: (1)
அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (ஆரம்பத்தில்) ஒரு மரக்கட்டையின் மீது
நின்று (பிரசங்கம் புரிந்துக்) கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்களுக்கு
மின்பர் (பிரசங்க மேடை) ஏற்படுத்தப்பட்ட போது (பிரசவ வேதனையால் சினை ஒட்டகை
முனங்கும்) சப்தங்கள் போன்று (முன்னர் இருந்த) அம்மரக் கட்டையிலிருந்து
செவியேற்றோம். இறுதியாக, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
(மின்பரிலிருந்து) இறங்கி, அதன் மீது தங்கள் திருக்கரத்தை வைத்தார்கள். (பின்னர்
சப்தம் வரவில்லை). அறிவிப்பவர்: ஜாபிறுப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ. (2) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு
காட்டரபி வந்து, "நான் எவ்விதம் தங்களை அல்லாஹ்வுடைய தூதர் என்று அறிவது?"
என்று கேட்டார்.
(அதற்கு) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், "பேரீச்ச
மரத்திலிருக்கும் இந்தக் கிளையை நான் அழைக்கிறேன். அது (வந்து) மெய்யாகவே நான்
அல்லாஹ்வுடைய தூதர் என்று எனக்குச் சான்று கூறும்" எனக் கூறி
அதனை அழைத்தார்கள். எனவே அது பேரீச்ச மரத்திலிருந்து இறங்கி வந்து அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் விழுந்துவிட்டது. மேலும்,
"அல்லாஹ்வுடைய
தூதரே! தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!" என்றும் கூறியது.
பின்னர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அதனிடம், "நீ உன்னுடைய
இடத்திற்கு திரும்பிப் போ" என்று கூறினார்கள். உடனே அது தன்னுடைய
இடத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. உடனே காட்டரபி இஸ்லாத்தைத் தழுவிவிட்டார்.
அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: திர்மிதீ. (3) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுடன் நான் மக்காவில் இருந்த பொழுது, மக்காவில் ஒரு பக்கமாகப் புறப்பட்டோம்.
வழியில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தென்பட்ட எந்த மரமோ
அல்லது மலையோ, "யா ரஸூலுல்லாஹ்! தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!"
என்று கூறாமல் இருந்ததில்லை! அறிவிப்பவர்: ஹஜ்ரத் அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள்,
நூல்:
திர்மிதீ. (4)
"மக்காவில் ஒரு கல்
இருக்கிறது. நான் தூதராக அனுப்பப்பட்ட நாட்களில் அது எனக்கு 'ஸலாம்' கூறிவந்தது.
நிச்சயமாக, இப்பொழுதும் நான் அதனை நன்கு அறிவேன்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா ரலியல்லாஹூதஆலா
அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம், திர்மிதீ.
மேகமோ திரண்டது, மழையோ பொழிந்தது: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் (வாழ்ந்த) காலத்தில், ஒரு முறை பஞ்சமேற்பட்டது. ஜூம்ஆ நாளன்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (குத்பா) பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு காட்டரபி எழுந்து, "யா ரஸூலல்லாஹ்! முதல்கள் அழிந்து விட்டன. குழந்தைகள் பசித்திருக்கின்றனர். எங்களுக்காக அல்லாஹ்(தஆலா)விடத்தில் பிரார்த்தியுங்கள்" என்றார். உடனே, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் தங்களின் இரு கரங்களையும் உயர்த்தினார்கள்.
அப்பொழுது வானத்தில் ஒரு துண்டு மேகத்தைக் கூட நாங்கள் பார்க்கவில்லை.
என் ஆன்மா எவன் கைவசத்தில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக(க் கூறுகிறேன்),
உயர்த்திய அவ்விரு
கரங்களையும் அவர்கள் கீழே இறக்கவில்லை. அதற்குள் மேகம்
மலைகளைப் போல் திரண்டது. பின்னர், மினபரை விட்டுக் கீழே இறங்குவதற்குள்ளாக
மழைத்துளி அவர்களின் தாடியின் மீது விழுவதை நான் பார்த்தேன்.
அன்றைய தினத்திலும், அதற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் இவ்வாறாக அடுத்த ஜூம்ஆ வரை நாங்கள் மழை
பொழியப் பெற்றோம்.
அதே காட்டரபியோ அல்லது வேறு ஒருவரோ எழுந்து "யா ரஸூலல்லாஹ்!
(வெள்ளத்தால்) கட்டிடங்கள் இடிந்து விட்டன. பொருள்கள் மூழ்கிவிட்டன. எங்களுக்காக அல்லாஹ்(தஆலா)விடத்தில் பிரார்த்திப்பீர்களாக" என்று கேட்டுக் கொண்டார். உடனே, தங்கள் இரு கரங்களையும் உயர்த்தி, "நாயனே! அக்கம் பக்கத்தில் (மழையை) வர்ஷிக்கச்
செய்வாயாக! எங்களுக்கு (அளவுக்கதிகமாக) வேண்டாம்" என்று கூறினார்கள். தங்கள் கரத்தால்
மேகத்தின் எந்த ஓரத்தை(ச் சுட்டிக் காட்டி சமிக்ஞை செய்தார்களோ) அது உடனே
விலகிக் கொண்டிருந்தது. (திரு) மதீனாவில் மேகம் விலகி வானம்
சுத்தமாயிற்று! என்றாலும், மழை நீரால் குளம் போலாகிவிட்டது. கனாத் என்ற ஓடையில் ஒரு
மாதம்வரை நீரோடிக் கொண்டிருந்தது. (திரு மதீனாவுக்கு வெளியில்) எத்திசையிலிருந்து எவர்
வந்தாலும், மழையைப் பற்றி பேசாமல் இருந்ததில்லை. அறிவிப்பவர்: அனஸ்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ.
முன்னறிவிப்புக்கள்: (1) "கிஸ்ரா இறந்துவிட்டார். பின்னர், அவருக்குப் பின்
வேறு கிஸ்ரா வரமாட்டார். கைஸறும் இறந்துவிடுவார். பின்னர், அவருக்குப் பின்
வேறு கைஸர் வரமாட்டார். மேலும், அவ்விருவருடைய பொக்கிஷங்கள் அல்லாஹ்வின் சன்மார்க்கத்தில் பங்கிடப்படும்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ. (அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த முன்னறிவிப்பின்படி கிஸ்ரா, கைஸர் ஆகியவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய வாரிசுகளுக்கு ஆதிக்கம் கிடைக்காமல் போனது! மேலும்,
குலபாயே
ராஷிதீன்களின் ஆட்சிக் காலத்தில் அவ்விரு நாடுகளும் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டன. அவ்விரு நாடுகளிலும் இருந்த பொக்கிஷங்களை முஸ்லிம்கள் கைப்பற்றி தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.)
(2) "ஜைது கொடியை ஏந்தினார். ஷஹீதாகிவிட்டார். பின்னர் அதனை
ஜஃபர் ஏந்தினார். ஷஹீதாகிவிட்டார். பின்னர் அப்துல்லாஹிப்னு ரவாஹா அதனை
ஏந்தினார். ஷஹீதாகிவிட்டார்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இச்சமயத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் இரு கண்களும் (கண்ணீரை) வடித்தன. பின்னர், "காலிதுப்னுல்
வலீத் தளபதி பதவியின்றி அதனை ஏந்தினார். அவருக்கு வெற்றி கிடைத்தது"
என்று (அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்) கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அனஸூப்னு மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்:

(3) ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் புஷ்ரு ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், தங்களின் திருக்கரத்தை என் தலையின் மீது வைத்து, "இந்தச் சிறுவர் ஒரு நூறாண்டு வாழுவார்" எனக் கூறினார்கள். அதன்படியே ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் புஷ்ரு ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்தார்கள். மேலும், அவர்களின்
முகத்தில் ஒரு மரு இருந்தது. அந்த மரு போகும் வரை அவர் மரணிக்க மாட்டார் என்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதைப் போன்றே அந்த மரு போன பிறகுதான் அன்னார் மரணமடைந்தார்கள். ( திப்ரானி, பஜ்ஜார். )
காயத்தின் வலி நீங்கியது: யஜீது பின் அப்திர் ரஹ்மான்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நான் ஸலமா
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்களின் கெண்டங்காலில் அடிபட்ட ஒரு காயத்தின்
அடையாளத்தைப் பார்த்தேன். உடனே நான் அவரிடம் "இதுஎன்ன?"
என்று கேட்டேன்.
அதற்கவர், "கைபர் போரன்று எதிரிகளின் தாக்குதலால் எனக்கு காலில்
அடிபட்டுவிட்டது. 'ஸலமா காயம் பட்டுவிட்டார்' என்று மக்கள் கூறினார்கள். பின்னர், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் என்னை கொண்டு சென்றார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என் மீது மூன்று முறை ஊதினார்கள். அதன் பிறகு இந்த நேரம் வரை அந்தக் காயத்தின் காரணமாக எந்த வலியும் எனக்கு ஏற்படவில்லை" என்று கூறினார்கள். ( அபூ தாவூது ).
விழுந்த கண்ணை பொருத்தினார்கள்: கதாதா பின் நுஃமான் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது: அவர்களின் கண் உஹதுப் போரில் போய்விட்டது. (எதிரிகள் ஈட்டியில் குத்தியதால் அவரின் கண் துண்டித்து கீழே விழுந்து விட்டது) அவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவரின் கண்ணை அதன் இடத்தில் மீண்டும் பொருத்தினார்கள். அது சரியாக பொருந்திவிட்டது!
(திப்ரானி, பைஹகீ). மேலும்
திப்ரானி, இப்னு ஷாஹீன் ஆகியோர் அறிவிக்கிறார்கள்: கதாதா
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்களின் கண்ணில் உஹதுப் போரில் காயம்
ஏற்பட்டது. அந்தக் கண் துண்டித்து அவர்களின் கன்னத்தில் விழுந்தது. அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அக்கண்ணை அதே இடத்தில்
திரும்பப் பொருத்தினார்கள். அக்கண், அவரின் மற்றொரு கண்ணை விட மிகத் தெளிவாகத்
தெரிந்தது! ( அல்இஸாபா ).
நாவின் குளறுபடி நீங்கியது: பேச்சு சரியாக வராத ஒரு பெண்மணி அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தாள். அப்பொழுது
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சுடப்பட்ட இறைச்சியை
சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பெண்மணி, "எனக்கும் சிறிதளவு
உண்ணுவதற்கு அளிக்கக்கூடாதா?" என்று கேட்டார். உடனே அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு முன்னால் இருந்த உணவிலிருந்து
எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு அப்பெண்மணி, "தங்களின் வாயில்
உள்ள உணவைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம்" என்று கூறிவிட்டார். உடனே
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், தங்கள் வாயிலுள்ள உணவை வெளியாக்கி,
அப்பெண்ணிடம்
கொடுத்தார்கள். அப்பெண் அதனை தன் வாயில் போட்டுக் கொண்டார். அதனை சாப்பிட்டு
விட்டார். அப்போதிலிருந்து அவளுடைய நாவின் தடுமாற்றம் போய்விட்டது!
(திப்ரானி ).
கண்வலி குணமானது: கைபர் போரின் பொழுது ஹஜ்ரத் அலீ
கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள் கண் வலியால் பாதிக்கப்பட்டார்கள்.
அவர்கள் பிறரின் கையைப் பிடித்து நடந்தாலே தவிர தனியாக நடந்து செல்ல
இயலாதவராக இருந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் ஹஜ்ரத் அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்களின் இரு கண்களிலும் தங்கள்
எச்சிலை உமிழ்ந்தார்கள். அந்த நேரத்திலேயே ஹஜ்ரத் அலீ கர்ரமல்லாஹூ
வஜ்ஹஹூ அவர்கள் கண்வலியிலிருந்து குணமடைந்தார்கள். ( புகாரீ, முஸ்லிம் )
சினையாகாத ஆடு பால் கறந்தது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரலியல்லாஹூதஆலா
அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நான் (மக்காவில்)
உக்பா பின் அபீ முஅய்த் என்பவரின் ஆடுகளை மேய்த்துக்
கொண்டிருந்தேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும்,
அபூ பக்ரு
(ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களும் என்னிடம் வந்தார்கள். அப்பொழுது
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், "சிறுவரே! பால்
இருக்கிறதா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஆம் உள்ளது. எனினும் நான் நம்பி
ஒப்படைக்கப் பட்டவனாக இருக்கிறேன். (யாருக்கும் நான் இவ்வாடுகளின் பாலை என் விருப்பப்படி வழங்க
முடியாது)" என்றேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள், "சினையாகாத சாதாரண ஆடு எதுவும் உள்ளதா?" என்று கேட்டார்கள். உடனே ஒரு ஆட்டை நான் அவர்களிடத்தில் கொண்டு வந்தேன். உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஆட்டின் மடியை தங்கள் திருக்கரத்தால் தடவினார்கள். உடனே (அதிலிருந்து) பால் வர ஆரம்பித்துவிட்டது! ஒரு பாத்திரத்தில் பாலைக் கறந்து அவர்கள் பருகினார்கள். அபூ பக்ரு (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) அவர்களுக்கும் வழங்கினார்கள். (முஸ்னது அஹ்மது ).
பேரீத்தங்கனிகளில் பறக்கத்து: அப்துல்லாஹிப்னு
அம்ரிப்னி ஹராம் இறந்துவிட்டார். அவர் கடன்பட்டிருந்தார். அவர் கொடுக்க வேண்டிய
கடனில் சிறிதை தள்ளுபடி செய்வதற்காக அவருக்கு கடன்
கொடுத்தவர்களிடம் உதவி தேடினேன். அவர்களிடத்தில் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சிபாரிசு செய்தார்கள். அவர்கள் இணங்க
வில்லை. அப்பொழுது, "நீர் சென்று உம்முடைய பேரீத்தம் பழங்களை (இனவாரியாக)த்
தனித் தனியே பிரித்து அஜ்வாவைத் தனியாகவும், அத்க்கஜைதைத் தனியாகவும்
பிரித்து வைத்துக் கொண்டு, பின்னர் எனக்கு(த் தகவல் சொல்ல ஆள்) அனுப்பு"
என்று என்னிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். நான்
(அவ்விதமே) செய்து விட்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு (ஆள்) அனுப்பினேன். (அவர்கள் அங்கு வந்து) அதன் மீதோ அல்லது அதன் மத்தியிலோ அமர்ந்து கொண்டு, "(கடன் கொடுத்த) மக்களுக்கு அளந்து கொடு" என்றார்கள். அவர்களுக்கு நான் அளந்து கொடுத்தேன். அவர்களுக்குச் சேரவேண்டிய அவ்கியாக்கள் அத்தனையையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டேன். என்னுடைய பழங்களில் எதுவும் குறையாமல் எஞ்சியிருந்தது. அறிவிப்பவர்:
ஜாபிர்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ.
உணவில் பறக்கத்: "நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
மீது பசியின் கொடுமையைக் கண்டேன். எனவே நான் என் மனைவியிடம் திரும்பி வந்து,
'உம்மிடம் ஏதேனும்
இருக்கிறதா? நிச்சயமாக நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கடும் பசியோடு இருக்கக் கண்டேன்' என்று கூறினேன். (அதுகேட்ட) அவர் ஒரு பையை எடுத்தார். அதில் ஒரு ஸாஃ தொலிக் கோதுமை இருந்தது. மேலும் எங்களின் இல்லத்தில் ஒரு சிறிய கடா வளர்ந்து கொண்டிருந்தது. எனவே நான் அதனை 'பிஸ்மி' கூறி அறுத்துவிட்டேன்.
அவர் தொலிக் கோதுமையைத் திரிகையில் அரைத்தார். நான் என் வேலையின்
பொருட்டு சென்று வந்தேன். பின்னர் நான் அக்கடாவைத் துண்டுகளாக்கி
சட்டியிலிட்டு அடுப்பிலேற்றிவிட்டு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களிடம் சென்றேன். அப்பொழுது என் மனைவி (குறைவான உணவைப் பற்றி நாணமுற்று),'
தன்னை அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடமும், அவர்களோடு இருப்பவர்களிடமும்
அவமானத்திற்கு ஆளாக்க வேண்டாம்' என்று கூறினார்.

நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று
இரகசியமாக, 'நான் எங்களின் இல்லத்தில் வளர்த்து வந்த கடா ஒன்றை அறுத்து
(அடுப்பில் ஏற்றி விட்டு) எங்களிடமிருந்த ஒரு ஸாஃ தொலிக் கோதுமையை அரைத்தும் வைத்திருக்கிறேன். எனவே தாங்களும் தங்களுடன் சிலரும் (விருந்துண்ண) வாருங்கள்' என்று கூறினேன். ஆனால், அவர்கள் தங்களின் உயர்ந்த குரலில், 'அகழ்வாசிகளே! நிச்சயமாக ஜாபிர்
(ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் உங்களுக்கு விருந்து
தயாரித்திருக்கிறார். எனவே விருந்துண்ண விரைந்து வாருங்கள்' என்று கூறினார்கள். பின்னர் (என்னை
நோக்கி) 'நான் வரும்வரை உங்களின் சட்டியை அடுப்பை விட்டும் இறக்க
வேண்டாம். அன்றி, உங்களின் மாவை(ப் பிசைந்து) ரொட்டியாகவும் சுடாதீர்கள்'
என்று
கூறினார்கள். உடனே நான் என் மனைவியிடம் வந்து (செய்தியைக் கூறி) விட்டேன்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களின் முன்
வந்தனர். அப்பொழுது என் மனைவி மாவை வெளியில் எடுத்தார். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் அதில் தங்களின் உமிழ் நீரைத் தடவி அபிவிருத்திக்காக
இறைஞ்சி விட்டு, பின்னர் கறிச் சட்டியை நோக்கிச் சென்று அதிலும் உமிழ்
நீரைத் தடவி அபிவிருத்திக்காக இறைஞ்சி விட்டு (என்னை நோக்கி) 'ரொட்டி தயாரிப்பவர்களை அழையும். அவள் உம்முடன் ரொட்டியைத் தயாரிக்கவும். அன்றி நீர் கறிச் சட்டியை அடுப்பிலிருந்து கீழே இறக்கிவிடாமல், அதிலிருந்து பாத்திரத்தில் கறியை எடும்' என்று
கூறினார்கள். எனவே நான் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
அவர்கள் (அனைவரும்) வயிறு நிறைய உண்டு மீதம் வைத்துவிட்டனர்.
நிச்சயமாக,
கறி முன்னர்
இருந்தது போன்றே சட்டியில் கொதித்துக் கொண்டிருந்தது. ரொட்டியும் வெந்துக்
கொண்டுதான் இருந்தது". அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,
நூல்:
புகாரீ, முஸ்லிம்.
விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களை நான் பார்த்தேன். அஸருடைய தொழுகையின் நேரம் வந்தது. (ஒலுச்
செய்யத்) தண்ணீரை மக்கள் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. ஒலுச்
செய்ய ஒரு பாத்திரம் (தண்ணீர்) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்பாத்திரத்தில் தங்கள் கையை வைத்துக்
கொண்டு, அதிலிருந்து ஒலுச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அவர்களுடைய விரல்களுக்கு அடியிலிருந்து தண்ணீர் வெளிவருவதை நான்
பார்த்தேன். அவர்கள் அனைவரும் ஒலுச் செய்தனர். அறிவிப்பவர்: அனஸூப்னு மாலிக்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ.
ஹூதைபிய்யா நாள் அன்று மக்களுக்கு தாகம் ஏற்பட்டு விடவே அவர்கள் அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். அவர்களுக்கு
முன்னால் தண்ணீரப்பை வைக்கப்பட்டிருந்தது. "நாங்கள் ஒலு செய்யவோ
குடிக்கவோ எங்களிடம் தண்ணீர் இல்லை, தங்களுடைய தண்ணீர்ப் பையில் இருப்பதைத் தவிர" என்று தோழர்கள் கூறினார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தண்ணீர்ப் பையில் தங்களின் கையை வைத்தனர். உடனே அவர்களுடைய விரல்களிலிருந்து தண்ணீர் பீரிட்டு வரத் தொடங்கியது - ஊற்றுக் கண் (திறந்தாற்) போல!
எனவே நாங்களும் ஒலுவும் செய்து குடிக்கவும் செய்தோம். "அச்சமயம் நீங்கள் எத்தனைப் பேர்
இருந்தீர்கள்?" என்று ஜாபிர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு) அவர்கள்,
"நாங்கள் ஒரு
லட்சம் பேர் இருந்திருப்பினும் அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும்.
ஆனால் நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர்கள்தாம் இருந்தோம்" என்று
கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்:
புகாரீ, முஸ்லிம்.
துஆ பறக்கத்து: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் தங்களுக்காக ஒரு ஆடு வாங்குமாறு உர்வத்துல் பாரிக்கீ ரலியல்லாஹூதஆலா
அன்ஹூ அவர்களிடம் ஒரு தீனாரை (தங்க நாணயத்தை) கொடுத்தார்கள். அவர் இரண்டு
ஆடுகளை விலைக்கு வாங்கினார். பின்னர் ஒருஆட்டை, ஒரு தீனாருக்கு விற்பனை செய்து விட்டு,
ஒரு ஆட்டையும் ஒரு தீனாரையும் கொண்டு வந்தார். அப்பொழுது, அவருடைய வியாபாரத்தில்
விருத்தியைக் கோரி (இறைவனிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்)
பிரார்த்தித்தார்கள். (இதன் பலனாக) அவர் மண்ணை விலைக்கு வாங்கினாலும்,
அதில் அவர் இலாபம்
அடைவார். அறிவிப்பவர்: உர்வத்துல் பாரிக்கீ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,
நூல்:
புகாரீ.
ஹஜ்ரத் அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு நீதிபதியாக அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது நான், "யா ரஸூலல்லாஹ்! என்னை தாங்கள் யமன் நாட்டிற்கு அனுப்பி வைக்கிறீர்கள். நானோ வாலிபனாக இருக்கிறேன். நான் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கச் செல்கிறேன். (எனினும் எனக்கு அனுபவம் இல்லை) தீர்ப்பு எவ்வாறு என்பதை நான் அறியமாட்டேன்" எனக் கூறினேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் திருக்கரத்தால் என் நெஞ்சில் அடித்து, 'அல்லாஹூம்மஹ்தி கல்பஹூ வஸப்பித் லிஸானஹூ (யா அல்லாஹ்! இவரின் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! இவரின் நாவை உறுதிப்படுத்துவாயாக!)' என்று துஆச் செய்தார்கள். வித்துகளை பிளந்து அதனை முளைக்கச் செய்கிற அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு பிறகு இருவருக்கு மத்தியில் தீர்ப்பளிக்கிற விஷயத்தில் நான் ஒருபொழுதும் சந்தேகம் அடைந்ததில்லை. (பைஹகீ, ஹாகிம், முஸ்னது, ஸூனன் ).
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சுமை சுமக்கும் ஒரு
தோழருக்கு துஆச் செய்தார்கள். "தோழரே! நீர் சுமப்பீராக! நிச்சயமாக நீர்
கப்பலாக உள்ளீர்" என அவரிடம் கூறினார்கள். அந்தத் தோழர்
கூறுகிறார்,நான் அதற்கு பிறகு ஒரு ஒட்டகை அல்லது இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஒட்டகைகளின் சுமைகளை சுமந்தாலும் அது எனக்குக் கனமாக இருக்கவில்லை! ( முஸ்னது அஹ்மது
).
இது போன்ற அற்புதங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. அல்லாஹ் நாடினால்
அவற்றை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அற்புதங்கள் பற்றிய
நூல்களில் படித்தறிக.
நன்றி:- ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி
நன்றி:- http://islammargam.com/NSSBook.html

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2