புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
87 Posts - 67%
heezulia
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
423 Posts - 76%
heezulia
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
6 Posts - 1%
prajai
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சொரிமுத்து அய்யனார் Poll_c10சொரிமுத்து அய்யனார் Poll_m10சொரிமுத்து அய்யனார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொரிமுத்து அய்யனார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 11:21 am

உயர்ந்துவிட்ட தென்பகுதியை சமன்படுத்த ஈசனின் ஆணைப்படி பொதிகைகிடந்து நீராடினார். அங்கு ஈசன் அவருக்குத் தன் திருமணக் காட்சியை காட்டினார். அந்தப் பகுதி தற்போது கல்யாணி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பாறை மீதமர்ந்து யோக நித்திரையில் ஆழ்ந்தார்.

அவர் அகத்திற்குள் ஒரு ஜோதி பரவிற்று. அந்த ஒளியினூடே பிரம்ம ராட்சசி, பேச்சி, சாஸ்தா முதலிய எல்லா தெய்வங்களும் மகாலிங்கம் எனும் பெயர் தாங்கிய பரமனை பூஜிப்பதைக் கண்டார். சட்டென்று தன் அக ஒளிக்குள் கண்ட அந்த திவ்ய காட்சி புற உலகிலும் நடைபெறுவதைப் பார்த்து தன்னை மறந்து நெக்குருகிப் போனார். தீர்த்தத்தின் விசேஷமும், தலத்தின் சாந்நித்தியமும் இத்தனை மகாசக்தி வாய்ந்ததாக உள்ளதே என்று ஆச்சரியப்பட்டார். உடனே அகத்தியர் இந்த தீர்த்த கட்டத்தில் யார் நீராடி, இங்குள்ள மூர்த்திகளை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா இன்னல்களும் நெருப்பு பட்ட பஞ்சு போல சாம்பலாக வேண்டும். புத்திர பாக்கியத்துடன் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைத்து அவர்கள் நல்வாழ்வு பெற வேண்டுமென்று ஈசனை வணங்கி நின்றார். ஈசனும் இசைந்து அந்த வரத்தை அருளினார். தேவர்கள் அனைவரும் இத்திருக் காட்சியை கண்டனர். மெய்சிலிர்த்தனர். மலர்களை மழையாகப் பொழிந்தனர். இவ்வாறு பூக்களை தேவர்கள் சொரிந்ததால் அத்தலத்தில் உறைந்து ஈசனையும் பூஜித்து வரும் அய்யனாரையும் (மலர்ச்)சொரி முத்து அய்யனார் என்று பிற்காலத்தில் அழைத்தனர். அவரின் அருள் விலைமதிக்க முடியாத முத்தாக இருப்பதால் சொரி என்பதோடு முத்தையும் சேர்த்து ஏற்றம் கொடுத்து வணங்கினர். அகத்தியரால் வணங்கப்பட்ட புகழ்பெற்ற இந்த ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு மெல்ல பூமிக்குள் மறைந்தது.

மக்கள் பண்டமாற்று முறை மூலம் பொருட்களை வாங்கி, கொடுத்து வாழ்க்கை நடத்திய காலம். பாண்டிய நாட்டிலிருந்து மாட்டு வண்டியில் சுமை ஏற்றி வந்து பொதிகை மலை உச்சியில் சேரநாட்டவர்களுடன் பண்ட மாற்றம் செய்து வந்தனர். திருடர்கள் பயம் மிக அதிகமாக இருந்தது. எனவே மாட்டு வண்டிகள் கூட்டம் கூட்டமாகத்தான் வரும். அப்படி வந்த வண்டிகளில் முதல் வண்டி சொரிமுத்து அய்யனார் இருப்பிடம் வந்தபோது அந்த அற்புதம் நடந்தது. வண்டியின் சக்கரம் ஒரு கல் மீது மோதியது. கல்லிலிருந்து ரத்தம் வடிந்தது. வண்டியோட்டி அதிர்ச்சியில் அலறினார். அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். செய்வதறியாது திகைத்தனர்.

வானத்தில் மின்னல் வெட்டியது. கூடவே அசரீரி ஒலித்தது. ‘‘இந்த இடம் அகத்திய மாமுனிவர் ஞானதிருஷ்டி மூலம் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் புடை சூழ இருந்ததை தரிசித்த இடம். ஆகவே இங்கு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும். வருங்காலத்தில் இவ்விடம் மிகச் சிறப்பான புண்ணிய தலமாக விளங்கும்’’ என்று ஓங்கி ஒலித்தது. அன்றே கோயில் அமைத்தனர். சிவநேச செல்வர்களும், பக்தர்களும் இன்றுவரை பல திருப்பணிகளை செய்து அய்யனார் கோயிலை செப்பனிட்டு வருகின்றனர்.

பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட தாமிரபரணி சதங்கைகள் ஒலிப்பதுபோல சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் அந்த மொத்த அழகின் மையத்தே சொரிமுத்து அய்யனார் ஆலயம் அழகுற அமைந் துள்ளது. அகத்தியர் அனுபவித்த அதே உணர்வை நாமும் அடைய முடிகிறது. காட்டு பகுதியான இவ்விடத்தில் கொடிய விலங்குகள் இருந்தும், அவை எதுவும் பக்தர்களைச் சிறிதும் துன்புறுத்தியதாக தகவலே இல்லை. இக் கோயிலில் மகாலிங்கம், சொரி முத்து அய்யனார், பூதத்தார், பிரம்ம ராட்சசி, தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர் ஆகியோருக்குத் தனித்தனியே சந்நதிகள் உள்ளன. நாககன்னியரும், கிருஷ்ணரும் கூட்டு சாஸ்தா என்ற பெயரில் இங்கு உள்ளனர். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு அம்சமாகும். பேச்சியம்மன் துஷ்ட அவதானி கோலத்திலும் காட்சி தருகிறார். இந்த கோயிலில் காத்தவராயர், மேலவாசல் பூதம், மேலவாசல் வினாயகர், தட்சிணாமூர்த்தி, கும்ப மாமுனி, பெரியசாமி, பாதாள பூதம், கரடிமாடன், பிரம்ம ராட்சசி, பேச்சி, சுடலைமாடன், கருப்பன், கருப்பி, தளவாய் மாடன், தூண்டில் மாடன் மற்றும் பட்டவராயர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

இந்த கோயிலில் குழந்தை வரம் தரும் தெய்வமாக பிரம்ம ராட்சசி அம்மன் திகழ்கிறார். இவள் மகிஷாசுரமர்த்தினியின் அம்சமாகும். இவளுக்கு பூஜை முதலான நியமங்களைச் செய்பவர்கள் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பொதுமக்களுக்கு அருள் வாக்கு வழங்குகின்றனர். இந்த கோயிலில் வீற்றிருக்கும் தெய்வமான முத்து பட்டனை பக்தர்கள் பட்டவராயர் என அழைக்கிறார்கள். பக்தர்கள் இவருக்கு காலணிகளை காணிக்கையாக அளிக்கின்றனர். அந்த செருப்புகள் கோயில் சுவரில் தொங்கவிடப்பட்டுள்ளன. அதை யாரும் தொடுவதில்லை. ஆனால் இந்த செருப்புகள் தேய்வதும், அவற்றில் சகதி, மண், புல், மிருகங்களின் கழிவு என்று ஒட்டிக்கொண்டிருப்பது காண வியப்பாக இருக்கும். அந்த செருப்புகளை பட்டவராயர் அணிந்துகொண்டு வேட்டைக்கு சென்று வருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. பட்டவராயர் சந்நதியில் பொம்மக்கா, திம்மக்கா ஆகியோரும் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 11:21 am

இக்கோயிலில் தை, மாசி, ஆடி மாத அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமான நாட்களாகும். இக்கோயிலுக்கு அருகே உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்தார்கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஓர் ஐதீகம் நிலவுகிறது.

இந்த பாணதீர்த்தத்திற்கும், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கும் இடையே முன்பு சாலை வசதி இருந்தது. 1992ல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் இந்த பாதை தூர்ந்து போய் விட்டது. ஆகவே தற்போது இந்த இடத்திற்கு பாபநாசம் மேலணை வழியாக படகில்தான் செல்ல முடியும்.

ஆடி அமாவாசையில் தம் ஈஸ்வர பக்தியை நிரூபிக்க, பக்தர்கள் பூக்குழி இறங்குவர். பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயர் ஆகிய சந்நதிகள் முன்பு மூன்று கட்டமாக பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். பிரம்மராட்சசி, பூதத்தார், பேச்சியம்மன் சந்நதி முன்பு பக்தர்கள் பொங்கலிட்டும், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர் சந்நதிகள் முன்பு பக்தர்கள் மாமிச உணவுகளை படைத்தும் வழிபடுவார்கள். சங்கிலி பூதத்தார், தளவாய் மாடன், தூசி மாடன் தெய்வங்கள் முன்பு பக்தர்கள் தங்களது மார்பில் சங்கிலியால் அடித்துக்கொண்டு வழிபடுகிறார்கள்.

மழை முறையாக பெய்யவில்லை என்றால் இந்த கோயிலுக்கு வந்து சொரிமுத்து அய்யனாருக்கு சிறப்பு யாகம் செய்து பின் தாமிபரணி தாயை விவசாயிகள் வணங்குகின்றனர். பூஜை முடிந்த உடனேயே மழை பொழியும் அதிசயத்தை இப்போதும் காணலாம்.


ஒரு காலத்தில் இந்த பகுதியை ஆண்ட பாளையக்காரர்களான சிங்கம்பட்டி ஜமீன் சேர மன்னருக்கு உதவியாக போர் புரிய சென்ற போது தனது மூத்த வாரிசை இழக்க நேரிட்டது. சேர மன்னன் இளவரசரின் இழப்புக்கு ஈடாக என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஜமீன் அந்தக் காட்டில் குச்சி ஒடிக்க அனுமதி கேட்டார். உடனடியாக சேர மன்னன் சுமார் 2500 ஏக்கர் நிலத்தை சிங்கம்பட்டி ஜமீனுக்கு அளித்தார். இந்த இடத்துக்கு ஜமீன் சொந்தக்காரர் ஆகிவிட்டார். மேலும் இந்த இடத்தில் தாமிரபரணி தீர்த்தம் நிறைந்து இருப்பதாலும், அதற்கு அதிபதியாக சிங்கம்பட்டி ஜமீனே இருப்பதாலும் அவருடைய வாரிசுகள் தீர்த்தபதி என்றழைக்கப்பட்டனர். சொரிமுத்து அய்யனார் கோயில் விழாக் காலங்களில் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி ராஜ உடையில் கம்பீரமாய் காட்சியளிப்பதும் இங்கு விசேஷமான ஒன்றாகும்.
இந்த கோயிலில் உள்ள ஒரு மரத்தில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மணிகளைக் கட்டிவைக்கிறார்கள். அந்த மணியை மரமே விழுங்கி விடுமாம். இதனால் அந்த மரத்தை மணி விழுங்கி மரம் என்று அழைக்கிறார்கள்.

ஆடி அமாவாசையன்று இக்கோவிலில் ஆண்களும், பெண்களும் பாணதீர்த்தம் சென்று அங்கு நீராடிவிட்டு வந்து சொரிமுத்து அய்யனாரை வணங்குகின்றனர். தோளிலும் இடுப்பிலும் சிறு குழுந்தைகளை தூக்கிக்கொண்டு ஆடி அமாவாசையில் பொழியும் மழையில் நனைந்து ஐயனை வணங்கி அருள் பெற, பக்தர்கள் லட்சக்கணக்கில் இங்கு கூடுகிறார்கள். பாபநாசத்தில் இருந்து பொதிகை மலையை பார்த்தால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது கண்கொள்ளா காட்சியாகும். ஐயப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால் கார்த்திகை மாதங்களில் பக்தர்கள் இங்கு வந்து மாலை அணிந்து சபரிமலை செல்கின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக எந்த காலமும் இரண்டு பூசாரிகள் இங்கே உள்ளனர். தினமும் மூன்று வேளை பூஜை நடத்தப்படுகிறது. காது குத்துதல், முடி காணிக்கை செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தங்கும் விடுதி மற்றும் சமையல் பாத்திரங்களும் கிடைக்கும். இந்த வசதியை செய்து தர அலுவலகத்தில் எப்போதும் ஊழியர்கள் இருப்பார்கள்.

காரையாறு என்று அழைக்கப்படும் இத்தலத்திற்கு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து பாபநாசம் வழியாக பொதிகை மலை செல்ல வேண்டும். பின் லோயர் கேம்பில் இருந்து அப்பர் கேம்ப் செல்லும் வழியில் இடது புறம் செல்லும் சாலையில் சென்று ஆற்றை கடந்தால் கோயிலை அடையலாம். ஆடி அமாவாசையில் இந்த கோயிலுக்கு செல்ல அம்பாசமுத்திரத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேன் மற்றும் ஆட்டோ வசதியும் உண்டு.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 20, 2009 12:03 pm

அருமையான தகவல் சிவா , இதுபோல் அனைத்து பழமையான கோவில்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 12:23 pm

நேரம் கிடைக்கும்பொழுது தகவல்களை தொகுத்து வழங்குகிறேன் ராஜா! நம் களஞ்சியத்தில் இல்லாத தகவல்களே இல்லை என்ற அளவிற்கு அனைத்து விதமான தகவல்களும் பதிவேற்றப்படுகிறது!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 20, 2009 12:28 pm

மிக்க மகிழ்ச்சி

ஹரிஹர04
ஹரிஹர04
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011

Postஹரிஹர04 Thu May 12, 2011 3:17 pm

சொரிமுத்து அய்யனார் 677196 நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 3:54 am

சிவா wrote:நேரம் கிடைக்கும்பொழுது தகவல்களை தொகுத்து வழங்குகிறேன் ராஜா! நம் களஞ்சியத்தில் இல்லாத தகவல்களே இல்லை என்ற அளவிற்கு அனைத்து விதமான தகவல்களும் பதிவேற்றப்படுகிறது!

இன்னும் பதிவேற்றப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது!  பாடகன் 



சொரிமுத்து அய்யனார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 23, 2014 1:06 pm

சொரிமுத்து அய்யனார் 103459460 சொரிமுத்து அய்யனார் 1571444738 :நல்வரவு: மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக