புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
68 Posts - 53%
heezulia
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
Shivanya
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
15 Posts - 3%
prajai
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
9 Posts - 2%
jairam
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_m10மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 25, 2010 10:39 am

ஜெயலலிதா தனது அறிக்கையை முடிக்கும்போது "ஊரார் உடைமைக்கு பேயாய் பறப்பதாக'' என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். சமூகநீதிக் கொள்கை ஊரார் உடைமை அல்ல. திராவிட இயக்கத்தின் கொள்கை. ஆனால் ஊரார் உடைமைக்குப் பேயாய் பறப்பவர்கள் யார் என்பதைப் பற்றி நான் விளக்க வேண்டுமா என்ன? அது ஊரார் அறிந்த ரகசியமாயிற்றே! பேய், பூதம், பிசாசு இந்த மூன்றுக்கும் சொல்லப்படும் இலக்கணத்தின் மொத்த உருவமே! மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

உளறிக் கொட்டுகிறார்

இடஒதுக்கீடு பிரச்சினை பற்றி உச்சநீதிமன்றம் கடந்த 13-7-2010 அன்று வெளியிட்ட தீர்ப்புகள் குறித்தும் அதன் விளைவுகள் என்ன என்பதை விவரித்தும், இந்தப் பிரச்சினையில் கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையெல்லாம் விரிவாகத் தொகுத்தும் இரண்டு கடிதங்களை நான் எழுதியிருந்தேன்.

உச்சநீதிமன்ற வழக்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் தொடர்பானது என்றும், எனவே அந்தத் தீர்ப்பைப் பற்றி எழுதினால் ஜெயலலிதாவுக்கு புகழ் கிடைத்து விடுமோ என்பதற்காக நான் அதை இருட்டடிப்பு செய்யும் வகையில் மவுனமாக இருந்தேன் என்றும், தற்போது அவருக்கு ஏதோ பாராட்டு விழா நடத்த சில பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் முடிவு செய்த செய்தியை ஏடுகளிலே பார்த்துவிட்டு, நான் இந்த இரண்டு கட்டுரைகளில் நஞ்சைக் கக்கியிருப்பதாகவும் ஜெயலலிதா அவருக்கே உரிய பாணியில் உளறிக் கொட்டியிருக்கிறார்.

நஞ்சைக் கக்குவது - கபட நாடகம் என்று கூறுவது - எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது - உதிர்ந்த ரோமம் என்பது - பதிபக்தி இல்லாதவர் என்று விமர்சிப்பது - ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களையெல்லாம் மரியாதை இல்லாமல் பேசுவது - ஆளுநர் கையைப் பிடித்து இழுத்தார் என்று வாய்கூசாமல் புளுகுவது - இவைகள் எல்லாம் ஜெயலலிதா என்ற தனிப்பட்ட ஒரு பெண்மணிக்கே உரிய வாசகங்கள் ஆகும்.

ஜெயலலிதா ஆட்சியில் இயற்றிய சட்டம் என்பதை நான் ஏதோ மறைத்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார். இது உண்மையா? நான் எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது பற்றியும், சட்டம் நிறைவேற்றப்பட்டது பற்றியும், அந்தத் தீர்மானத்தை வடிவமைத்துக் கொடுத்ததே திராவிடர் கழக தலைவர் வீரமணி என்பதை நினைவூட்டியும், ஆனால் அதற்கு அந்த ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றும், அந்தச் சட்டமுன் வடிவு அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகச் சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்டதையும் விரிவாகவே எழுதியிருக்கிறேன். எப்போதும் போல எதையும் ஒழுங்காகப் படிக்காமல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது என்பதை நான் இருட்டடிப்பு செய்து விட்டேன் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறார்.

நான் என்னுடைய கடிதத்தில் ``18-7-1994 அன்று ஜெயலலிதாவும்; இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடஒதுக்கீடு பிரச்சினையில் ஆதரவு கோரி கடிதம் எழுதினார்'' என்றும் அரசியல் நாகரிகத்தோடு வரலாற்றை மறைக்கக் கூடாது என்ற வகையில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் அவர் குதிக்கிறார் என்றால் அதற்கு நான் என்ன செய்வது?

நுனிப்புல் மேய்கிறார்

இடஒதுக்கீடு பிரச்சினையில் ஜெயலலிதா இரட்டைவேடம் போட்டதாக நான் எனது அறிக்கையிலே சொல்லியிருப்பதாகத் தெரிவித்து அதற்கு அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதிலும் அவர் நுனிப்புல்தான் மேய்ந்திருக்கிறார்.

"இடஒதுக்கீடு பிரச்சினையில் ஜெயலலிதா அரசு அப்போது இரட்டைவேடம் போடுவதைப் போல ஒரு கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது. அதற்குக் காரணம் 22-11-1993 அன்று உச்சநீதி மன்றத்தில் அளித்த ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையேற்று தமிழ்நாட்டில் 93-94ம் ஆண்டுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க ஜெயலலிதா அரசின் சார்பில் சம்மதம் கொடுத்ததுதான்'' என்றும்; 15-7-1994 தேதிய "ப்ரண்ட்லைன்'' ஏடு நீண்ட கட்டுரையாக அதைப் பற்றி எழுதியிருந்தது என்றும் நான் தெரிவித்திருந்தேனே தவிர, அவர் இரட்டைவேடம் போட்டதாக நான் கூறவில்லை. "ப்ரண்ட் லைன்'' ஏடு தான் அப்படிக் கூறியது.

குணவதியை மக்கள் தெரிந்து கொள்ளட்டும்

இதிலிருந்து ஜெயலலிதா இரட்டை வேடம் போட்டதாக நான் கூறவில்லை என்பதும், ஏடுகள் தெரிவித்த கருத்தைத்தான் தெரிவித்தேன் என்பதும் தெளிவாகிறது அல்லவா? ஆனால் ஜெயலலிதா என் மீது கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்றால் அந்தக் "குணவதி''யைப் பற்றி மக்கள் புரிந்து கொண்டால் போதும்!

அடுத்து ஒரு இமாலயப் பொய்யை ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடு இடஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடு இடஒதுக்கீடும் தமிழகத்தில் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்தது என்று கூறியிருக்கிறார்.

1969ம் ஆண்டு நான் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றபின், ஏ.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த பரிந்துரையினை ஏற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதுவரை 16 சதவிகிதம் என்றிருந்த இடஒதுக்கீட்டு அளவை 18 சதவிகிதம் என்று உயர்த்தி 7-6-1971 அன்று ஆணை பிறப்பிக்கச் செய்தேன். அதே ஆணையில்தான் அதுவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவிகிதம் என்றிருந்த இடஒதுக்கீட்டை 31 சதவிகிதம் என்று உயர்த்தினேன்.

அதன் பின்னர், அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான சலுகைகளைப் பெற அவர்களது ஆண்டு வருமானம் 9 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று அ.தி.மு.க. ஆட்சி உச்சவரம்பு விதித்து - அதன் காரணமாக அ.தி.மு.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு - 1-2-1980ல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தினார்கள். அதற்குப் பின் 28-3-1989ல் நான் முதல் அமைச்சராக இருந்தபோது டாக்டர் ராமதாசுடன் விவாதித்து, பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதம் தனி ஒதுக்கீடு செய்தேன்.

புளுகுகிறார்

22-6-1990ல் நான் முதல்வராக இருந்தபோதுதான், தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் சேர்த்து 18 சதவிகிதம் இடஒதுக்கீடு என்பதில், தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் 18 சதவிகிதம் என்றும் பழங்குடியினருக்கு தனியாக ஒரு சதவிகிதம் என்றும் ஆக்கினேன். ஆனால் ஜெயலலிதா இதையெல்லாம் மறைத்துவிட்டு, அவருடைய மொழியிலே சொல்ல வேண்டுமானால் அப்படியே இருட்டடிப்பு செய்துவிட்டு, தமிழகத்தில் இந்த இடஒதுக்கீடு காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்தது என்று தனது பாணியில் புளுகியிருக்கிறார்.

ஜெயலலிதா அறிக்கையிலே மற்றொரு பொய்! மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு 13-8-1990 அன்று ஆணை வெளியிட்டதாகவும், 13-8-1990 முதல் 30-1-1991 வரை ஆட்சியிலே இருந்த நான் மண்டல் கமிஷன் பற்றி தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றும், 30-9-1991 அன்றுதான் ஜெயலலிதாவின் தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்றும் ஜெயலலிதாவின் அறிக்கையிலே எழுதிவிட்டு, அவரே 21-8-1990 அன்று மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் ஆணை பிறப்பித்ததற்காக பாராட்டுத் தீர்மானம் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதென்று சொல்லியிருக்கிறார்.

மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசு முன்வர வேண்டுமென்று ஒரு சிறப்புத் தீர்மானத்தை 12-5-1989 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் முன்மொழிந்தவனே நான்தான். 5-2-1990 அன்று நான் டெல்லி சென்றிருந்தபோது, துணைப் பிரதமராக இருந்த தேவிலாலை சந்தித்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். 12-6-1990 அன்று பிரதமர் வி.பி.சிங் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் பற்றி கருத்துக்களைக்கேட்டு, அந்த மாத இறுதியிலேயே அதற்கு நான் பதில் எழுதி - அதைப் பற்றி பின்னர் பிரதமர் வி.பி.சிங் கூறும்போது, மத்திய அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று பாராட்டினார்.

26-5-1990 அன்று தஞ்சையில் சமூகநீதி மாநாடு ஒன்றே நடைபெற்றது. அதிலே முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்கும், தமிழர் தலைவர் வீரமணியும் கலந்து கொண்டார்கள். ஜெயில்சிங் பேசும்போது, "தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் திறமைக்கும், வேகத்திற்கும், அன்புக்கும், அருளுக்கும் நல்ல நிர்வாகத் திறமைக்கும் பிரச்சினைகளை அணுகுவதற்கும் உரிய மகத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தலைவர் காலத்தில் நீங்கள் வாழ்கின்றீர்கள். அந்த அருந்தலைவருடைய பெயர்தான் கலைஞர் கருணாநிதி என்பது. அவரிடம் இப்போது நான் ஒரு விண்ணப்பத்தை வைக்கின்றேன். இன்றைக்கு கருணாநிதியின் ஆட்சி டெல்லியிலே நடந்து கொண்டிருக்கிறது. தேசிய முன்னணியின் ஒரு அங்கம் கருணாநிதி. இந்த நேரத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதை சட்டமாக ஏற்படுத்து வதற்கு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தேசிய முன்னணியின் அங்கம் மட்டும் அல்ல. நீங்கள் இல்லாவிட்டால் தேசிய முன்னணி ஏது? எனவே தேசிய முன்னணியை உருவாக்கியவர் என்ற முறையில் விண்ணப்பிக்கிறேன். மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக அறிவிக்கப்படும் நாளை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது'' என்றெல்லாம் குறிப்பிட்டது இன்றைக்கும் ஏடுகளிலே உள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் மீதான ஆணை மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அடுத்த வாரமே 21-8-1990 அன்று அதனைப் பாராட்டி சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தையும் முன் மொழிந்தவன் நான் தான்.

இடஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேறியதாகவும் - ஆனால் மாநிலங்களவையில் அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது - தி.மு.க. உறுப்பினர்கள் மூன்று பேர் ஓட்டுப்போடவில்லை என்றும் பங்கேற்கவில்லை என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். அவரோடு தோழமை கொண்டுள்ள ஒரு கட்சியின் "பிரகஸ்பதி''யும், ஜெயலலிதாவை முந்திக் கொண்டு கோவையிலே செய்தியாளர்களிடம் அதையே தெரிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டிற்கான தீர்மானம் 9-11-1993 அன்று ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்டது என்றும், 30-12-1993 அன்று சட்டமன்றத்தில் மசோதா ஜெயலலிதா அரசினால் நிறைவேற்றப்பட்டது என்றும் சொல்லியிருக்கிற அவர் யோக்கியராக இருந்தால், அந்த தீர்மானத்தை தி.மு.க. ஆதரித்ததா இல்லையா என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? அதுபோலவே மாநிலங்களவையில் அந்தத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, தி.மு.க.வை சேர்ந்த ஐந்து பேர் அந்த வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களித்ததைச் சொல்லியிருக்க வேண்டுமல்லவா?

இடஒதுக்கீட்டுக்காக தமிழ்நாட்டின் அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற வாக்களிப்போம் என்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் விடுதலைவிரும்பியும் கலந்து கொண்ட தேசிய முன்னணி - இடது சாரிக் கட்சிகள் கூட்டம் 11-8-1994 அன்று டெல்லியில் நடைபெற்றபோது முடிவெடுத்தது.

21-8-1994 அன்று நான் விடுத்த அறிக்கையில் மத்திய அரசு மேலும் காலம்தாழ்த்தினால், சமூகநீதிக்காக போராடுகிற அணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டேன்.

22-8-1994 அன்று மாநிலங்களவையில் தி.மு.க.வின் சார்பில் பேசிய விடுதலைவிரும்பி, பிரச்சினை தாமதப்படுத்தப்படுமானால் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்று எங்கள் தலைவர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டத்திருத்த மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதற்கு அரசு தரப்பில் திட்டவட்டமான உறுதிமொழி அளிக்க வேண்டுமென்றார். தமிழக அரசின் சட்டம் என்றால், அது அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிய சட்டமாயிற்றே என்றெல்லாம் நினைக்காமல் பிரச்சினையின் முக்கியத்துவத்தை கருதி குரல் கொடுத்தார். அவரது பேச்சிலே அ.தி.மு.க. உறுப்பினர் குறுக்கிட்டு, "மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறக்கூடாது'' என்றார்.

திமுக எம.பிக்கள் போகாதது ஏன்?

24-8-1994 அன்று தமிழக இடஒதுக்கீட்டுச் சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்ப்பதற்கான அரசியல் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் விவாதம் இன்றியே நிறைவேறியது. அதற்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் விழுந்தன. எதிராக வாக்களித்த இரண்டு பேர் யார் தெரியுமா? சிமன்பாய் மேத்தா, சத்தீஸ் பிரதான் ஆகியோராகும். கலந்து கொண்டு வாக்களித்த தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ்.விடுதலைவிரும்பி, மிசா ஆர்.கணேசன், பசும்பொன் தா. கிருட்டிணன், முகமது சகி, நாமக்கல் கே.கே.வீரப்பன் ஆகியோராகும். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திண்டிவனம் வெங்கட்ராமன் மகன் திருமணம் அதே நாளில் என் தலைமையிலே நடைபெற்றதால், அவர் டெல்லிக்கு அன்று செல்லவில்லை.

அதைப்பற்றிக் கூட அந்தத் திருமண விழாவிலே பேசிய நான், அந்த மசோதா நிறைவேற ஒரு வாக்கு முக்கியம் என்ற நிலைமை இருந்தால், திருமணத்தை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்று வெங்கட்ராமனை டெல்லிக்கு அனுப்பியிருப்போம் என்று குறிப்பிட்டது இன்றைக்கும் ஏட்டில் உள்ளது. அதுபோலவே தனது உடல்நலக் குறைவு காரணமாக முரசொலி மாறன் டெல்லி செல்லவில்லை.

ஜெ.எஸ்.ராஜு தனது மகனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சற்றுத் தாமதமாகச் சென்று கலந்துகொண்டிருக்கிறார். இதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு தி.மு.க உறுப்பினர்கள் மூவர் கலந்து கொள்ளவில்லை என்று களங்கம் சுமத்த நினைப்பது ஊரை ஏமாற்றுகின்ற செயல் அல்லவா? மக்களவையிலே 26-8-1994 அன்று இந்தத் திருத்தமசோதா கொண்டுவரப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பே இல்லை. 348 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

இறுதியாக ஒரு கேள்வி

இறுதியாக ஒரு கேள்வி. சமூகநீதியைக் காப்பதில் அ.தி.மு.க.விற்கு நிகர் யாருமில்லை என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். 16-11-1993 அன்று தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது என்றும், 26-11-1993 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது என்றும் கூறியிருக்கின்ற ஜெயலலிதா இரண்டுக்கும் இடையில் 22-11-1993 அன்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா அரசின் சார்பாக 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம், 50 சதவிகிதத்தையே அமல்படுத்துகிறோம் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டதா இல்லையா?

இடஒதுக்கீட்டில் சாதி அடிப்படை கூடாது என்றும், பொருளாதார அளவுகோலே வேண்டும் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு ஜெயலலிதா பேட்டி கொடுத்தது உண்டா இல்லையா? அந்தப் பேட்டியில், "பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் சிலர், நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறுவது என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையையே கேலிக் கூத்தாக்கி விடும். எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்குச் சலுகைகள் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அப்போதுதான் அதைச் சமூகநீதி என்று கூறலாம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் முன்னேறிய வகுப்பினரில் கூட பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 5 அல்லது 10 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்வது தவறில்லை'' என்று கூறியது உண்டா? இல்லையா? இலங்கைப் பிரச்சினையில்தான் இரட்டை வேடம் போட்டீர்கள்; இடஒதுக்கீட்டிலுமா?

இறுதியாக ஜெயலலிதா தனது அறிக்கையை முடிக்கும்போது "ஊரார் உடைமைக்கு பேயாய் பறப்பதாக'' என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். சமூகநீதிக் கொள்கை ஊரார் உடைமை அல்ல. திராவிட இயக்கத்தின் கொள்கை. ஆனால் ஊரார் உடைமைக்குப் பேயாய் பறப்பவர்கள் யார் என்பதைப் பற்றி நான் விளக்க வேண்டுமா என்ன? அது ஊரார் அறிந்த ரகசியமாயிற்றே! பேய், பூதம், பிசாசு இந்த மூன்றுக்கும் சொல்லப்படும் இலக்கணத்தின் மொத்த உருவமே! மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக