புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
9 Posts - 82%
heezulia
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
1 Post - 9%
mruthun
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சண்முகம் MBA - Page 2 Poll_c10சண்முகம் MBA - Page 2 Poll_m10சண்முகம் MBA - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்முகம் MBA


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 24, 2010 12:07 pm

First topic message reminder :

சண்முகம் MBA

ஆசிரியர் அறையில் ஏதோ வேளையாக இருந்த போது வணங்கியவாறே வந்தான் அந்தப் பையன். நிமிர்ந்து பார்த்தேன். வெளிர் நீலத்தில் ஜீன்ஸ், வெள்ளை சட்டை, டை, ஷூ, வதைக்காத வாசனை திரவியம் என்று அமர்க்கலமாக இருந்த அவனுக்கு இருபத்தி ஐந்திற்குன் ஒன்றிரண்டு குறைச்சலாக இருக்கலாம். நன்கு பரிச்சயமான முகமாகத்தான் இருந்தது.ஆனாலும் சட்டென யாரென்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. என் தடுமாற்றத்தை ரசித்தவாறே புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவோ வற்புறுத்தியும் அமர மறுத்தான். வற்புறுத்தியும் அமராமல் நிற்கும் அவனது மரியாதை (அமர மறுத்து நிற்பதில் மரியாதை எதுவும் இல்லை என்பதுதான் எனது நிலை) "என்ன வேணும்?" அல்லது " யாரைப் பார்க்கணும்?" என்று முகத்திலடித்துவிடக் கூடாது என்று என்னை பக்குவப் படுத்தியது.

எனவே "என்னப்பா செய்ற? " என்ற வழக்கமான கேள்வியைப் போட்டேன். தான் MBA முடித்து விட்டு ஏதோ ஒரு தனியர் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் மாதம் 26000 ரூபாய் சம்பளம் பெருவதாகவும் கூறினான். " எல்லத்தையும் எறச்சிடாம கொஞ்சம் சேத்து வை. இல்லாட்டி என்ன மாதிரி சிரமப் பட வேண்டி இருக்கும்" முடிப்பதற்குள் ரெண்டு ரூபா சீட்டு ஒன்னு போட்டுடுட்டு வரேன் சார்" என்று சொல்லிக் கொண்டே வந்தவன்"என்னத் தெரியுதுங்களா சார்" என்றவாறே புன்னகைத்தான்.

நிணைவுக் குகைக்குள் மீண்டும் நுழைந்து எவ்வளவோ சிரமப்பட்டு முயன்றும் பயனில்லை. எனவே " வயசாகுதேப்பா, அதுதான் கொஞ்சம் தடுமாறுது. ரொம்ப நல்லா பரிச்சயமான முகமாத்தான் தெரியுது. ஆனா சட்டுன்னு யாருன்னு புடிபட மாடேங்குதுப்பா" என்று சொன்னால் "உங்களால என்ன மறக்கவே முடியாதுங்க சார்" என்று புன்னகைக்கிறான். நமது பலவீனம் கண்டு புன்னகைக்கிறானா, அல்லது புன்னகைக்காமல் அவனால் இருக்கவே இயலாதா தெரியவில்லை. இவனால் சிரிக்காமல் அழக்கூட முடியாது என்றே தோன்றியது.

அப்போது "வாடா சண்முகம், என்ன திடீர்னு பள்ளிக்கூடதத்துப் பக்கம். எட்வின் சாரப் பாக்கனுமா?" என்றவாறே நுழைந்தார் தட்டச்சு ஆசிரியர் தெய்வீகன்.அவன் என்னருகில் நின்று கொண்டிருந்ததால் என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறான் என்று அவர் நிணைத்திருக்கக் கூடும்.

"என்ன யாருன்னே சாருக்கு தெரியலீங்க சார்"

"என்னதிது எட்வின்,நம்ம சண்முகத்த தெரியல?"

ஆமாம் எஸ்.டி, ரொம்பப் பரிச்சயமான முகம், அதைவிட ரொம்பப் பரிச்சயமான புன்னகை. ஆனாலும் யாருன்னு புடிபட மாட்டேங்குது. எந்த செட் இவன்?"

"அடப் போங்க நீங்க எட்வின். ஒரு வருஷம் உங்க பாடத்துக்கு ப்ராக்டிகல்ஸ் இருந்துதே ஞாபகம் இருக்கா? அப்ப ஒரு பையன காணாம வண்டி எடுத்து வண்டி எடுத்துட்டு போய் தெருத் தெருவா சுத்தினோமே. அதுவாவது ஞாபகம் இருக்கா?. .."

" அடப் பாவி, சண்முக சுந்தரமாடா நீ...?. " இப்போது முற்றாய் முழுதாய் எல்லாம் நிணைவுக்கு வந்து விட்டன. பழைய நிணைவுகளை அசை போட அசை போட அவனது புன்னகை என்னைத் தொற்றிக் கொண்டது.

பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களுக்கு செய்முறைத் தேர்விற்கென்று இருபது மதிப்பெண்கள் உண்டு. வழக்கமாக நாங்களே தேர்வு மாதிரி ஏதாவது வைத்து உள் மதிப்பீடு முறையில் மதிப்பெண்களைப் போட்டு விடுவோம். ஒரே ஒரு ஆண்டு மட்டும் புறத் தேர்வர்களைக் கொண்டு நடத்தப் பட்டன.

அந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து புறத் தேர்வராக ஒரு ஆசிரியை வந்திருந்தார். மொத்தம் உள்ள நூற்றி எட்டு மாணவர்களை இருபத்திஏழு மாணவர்கள் வீதம் நான்கு குழுக்களாகப் பிரித்திருந்தோம். ஒரே ஒரு மாணவனை மட்டும் காணோம். அவன் தொழிற் கல்வியில் தட்டச்சு பிரிவில் படிக்கும் மாணவன். எங்கள் பள்ளி கிராமத்துப் பள்ளி என்பதாலும் பெரும்பான்மை மாணவர்கள் முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஆங்கிலத்தைக் கற்பதில் அவர்களுக்கு சிரமம் இருந்தது. அதுமட்டுமல்ல பொதுவாகவே பத்தாம் வகுப்பில் குறைச்சலான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைத்தான் தொழிற் பிரிவில் சேர்ப்பது வழக்கம். எனவே அவர்கள் செய்முறைத் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவது கடினம் என்றுகூட சொல்ல இயலாது. தேர்ச்சி பெறவே இயலாது. எனவேதான் முதல் நாளே ஒவ்வொரு பிரிவாக சென்று அனைத்து மாணவர்களும் அடுத்த நாள் அவசியம் வந்துவிட வேண்டும் என்றும் வராத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அடுத்த நாள் அவசியம் வரச் சொல்லிவிடுமாறும் சொல்லியிருந்தேன்.

இதற்குள் முதல் பேச் மாணவர்கள் அறைக்குள் சென்றிருந்தனர். புறத் தேர்வாளராக வந்திருந்த ஆசிரியை மாணவர்களை அமரச் செய்து தேர்வின் நெறிகள் பற்ரி சொல்லிக் கொண்டிருந்தார். பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரைக்குள் நான்காவது பேச் தொடங்கி விடும்.

" நேத்து அவ்வளவு நேரம் படிச்சு படிச்சு சொன்னேனே. எங்கடா தொலஞ்சான்?"

எல்லோரும் மௌனமாக நின்றார்கள். அதற்குள் விஷயம் கேள்விபட்டு தெய்வீகன் வந்து விட்டர். அவரைக் கண்டதும் தட்டச்சு மாணவர்கள் அவரைச் சுற்றி தனியாக ஒதுங்கினர்.

"உண்மைய சொல்லுங்க. இப்ப எங்கடா இருப்பான்?" கொஞ்சம் அதட்டலாகவே தெறித்தார்.

"ஆதி மாரியம்மன் கொவில்ட்ட சீட்டு விளையாடிட்டு இருப்பான் சார்" என்னிடம் மௌனித்த மாணவர்கள் அவர்கள் ஆசிரியரைப் பார்த்ததும் தயங்கித் தயங்கி மௌனம் கலைத்தனர்.

என்னை நெருங்கினார்." என்ன செய்யலாம் எட்வின்?"

வண்டிய எடுங்க எஸ்.டி முடிப்பதற்குள் வண்டியை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். ஏறி அமர்ந்ததும் விரட்டினார். " அவுங்க அம்மாவ பாத்தீங்கன்னா பாத்த மாத்திரத்துல கண்ணுல தண்ணி வந்துடும் எட்வின். கோவில்ல தட்டேந்தி கண்னடக்கம் வித்து இவன படிக்க வைக்குது இந்தம்மா. இந்த நாயி என்னடான்னா இப்படி பன்னுது பாருங்க எட்வின்" புலம்பிக் கொண்டே வந்தார்.

அது ஒரு பழைய இற்றுப் போன கீற்றுக் கொட்டகை. ரவுண்டு கட்டி சீட்டாடிக் கொண்டிருந்தனர். அழுக்காய் இருந்தான். ஆனால் நல்ல வேளையாக பள்ளிச் சீருடையில் இருந்தான்.

எங்களைக் கண்டதும் எழுந்தான். "வாடாத் தாயோளி வாடா. ஆயி அங்க கஞ்சிக்கு உசிர விக்குது. இங்க சீட்டாட்டம் கேக்குதாடா ஒனக்கு, பொறம்போக்கு" கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போனார். அவரது குரலும் கைகளும் நடுங்குவதைப் பார்த்தேன். இப்ப விழலாமா இன்னுங் கொஞ்ச நேரம் கழித்து விழலாமா? என்பது மாதிரி இரண்டு கண்களிலும் ததும்பி நின்றது கண்ணீர். படிக்கும் மாணவனுக்கான அவரது அக்கறையும் , கண்ணீரும், கோவமும், பதட்டமும் அவர் மீது இருந்த அபிப்ராயத்தையும் மரியாதையையும் கணிசமாக கூட்டியது.

"வாடா இங்க"

வந்தான். ஒரே புகையிலை நெடி. ஒரே அறை. காலரைப் பிடித்து இழுத்து சட்டைப் பையில் கையை நுழைத்தார். "ஹான்ஸ்" பொட்டலம் இருந்தது. "பொழைக்கறப் பொழப்புக்கு இது ஒன்னுதான் கொறச்ச மசுறு." மீண்டும் இரண்டு மூன்று விழுந்தது அவனுக்கு. கையைக் கட்டிக் கொண்டு புள்ளப் பூச்சி மாதிரி நின்றான்.

எனக்கும் அவருக்குமிடையில் அவனைத் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினோம். வழியெல்லாம் வசவிக் கொண்டே வந்தார். இறங்கியதும் கூட்டம் கூடிவிட்டது. ஆசிரியர்களில் பலர் எங்களை கோவித்துக் கொண்டார்கள். இப்படியெலாம் இறங்கி செய்வதனால்தான் பசங்களுக்கு துளிர் விட்டுப் போகிறது என்பது அவர்கள் வாதம். ஒருத்தன் ஒழிந்தால்தான் பசங்களுக்கு புத்தி வந்து ஒழுங்கா இருப்பங்க என்பது சிலரது கருத்து.

இதில் எதிலும் கவனம் செலுத்தாது அவனை முகம் கழுவ வைத்து , பேனாவை கையில் கொடுத்து ஒரு வழியாய் அவனை அறைக்குள் தள்ளிவிட்டு வந்தோம்.

அந்தப் பையன்தான் இபோது என்னெதிரே நிற்கிறான். ஒரே ஆச்சரியம். என்னையுமறியாமல் எழுந்து நின்று கை குலுக்கினேன்.

அன்ன்னைக்கு விட்டுட்டு போயிருந்தீங்கன்னா இன்னைக்கும் அதே கொட்டகையில ஒக்காந்து சீட்டு விளையாட்டுதான் சார் இருந்திருபேன். அவனோடு சேர்ந்து என் கண்களிலும் ஈரம். தோளில் கை போட்டு "வாப்பா போய் ஒரு டீ சாப்ட்டுட்டு வரலாம்" , இருவரும் தெய்வீகனைப் பார்க்க அவரும் கிளம்புகிறார்.

ஆக ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நம் வாழ்க்கையிலும் இருக்கு.


அமுதா
அமுதா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 12/07/2010

Postஅமுதா Thu Aug 05, 2010 10:38 pm

இதுமாதிரி வாதிமாருங்க இந்த காலத்துல கூட இருக்கீங்களா அய்யா?

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Aug 07, 2010 10:56 pm

அமுதா wrote:இதுமாதிரி வாதிமாருங்க இந்த காலத்துல கூட இருக்கீங்களா அய்யா?

அய்யாவா? ஆஹா!!!

புறப்பட்டு எங்கள் பள்ளிக்கு வா. ஆளை நேரிலே பார்க்கலாம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 12:05 am

நல்ல ஆசிரியர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.. என்றும் இருப்பார்கள்.. அப்போது நல் மாணாக்கர் இல்லாமலா போவார்கள்.. எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு.. மலர வைத்த நினைவு மொட்டுகள் நன்றி சொல்கின்றன நல்லாசிரியர் திரு எட்வின் அவர்களுக்கு..

ஒரு கருத்து இவ்வளவு நல்ல கட்டுரையில் அந்த இரு சொற்களைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஒரு கருத்துதான். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்... மீண்டும் நன்றி.. திரு எட்வின்..



சண்முகம் MBA - Page 2 Aசண்முகம் MBA - Page 2 Aசண்முகம் MBA - Page 2 Tசண்முகம் MBA - Page 2 Hசண்முகம் MBA - Page 2 Iசண்முகம் MBA - Page 2 Rசண்முகம் MBA - Page 2 Aசண்முகம் MBA - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 08, 2010 12:18 am

Aathira wrote:நல்ல ஆசிரியர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.. என்றும் இருப்பார்கள்.. அப்போது நல் மாணாக்கர் இல்லாமலா போவார்கள்.. எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு.. மலர வைத்த நினைவு மொட்டுகள் நன்றி சொல்கின்றன நல்லாசிரியர் திரு எட்வின் அவர்களுக்கு..


தங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்ட நல்லாசிரியர்கள் பலர் இந்த பூமியில் உண்டு....

படைத்த பிரம்மனின் தலைவிதியாய் நினைப்பதையும் மதியால் வென்று என் போன்ற பல மாணவர்களை உருவாக்கும் மற்றொரு பிரம்மாக்கள் என்ற பெருமையும் ஆசிரியர்களை சாறும்...

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Aug 08, 2010 12:20 am

Aathira wrote:நல்ல ஆசிரியர்கள் அன்றும் இருந்தார்கள். இன்று இருக்கிறார்கள்.. என்றும் இருப்பார்கள்.. அப்போது நல் மாணாக்கர் இல்லாமலா போவார்கள்.. எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு.. மலர வைத்த நினைவு மொட்டுகள் நன்றி சொல்கின்றன நல்லாசிரியர் திரு எட்வின் அவர்களுக்கு..

ஒரு கருத்து இவ்வளவு நல்ல கட்டுரையில் அந்த இரு சொற்களைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஒரு கருத்துதான். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்... மீண்டும் நன்றி.. திரு எட்வின்..

ரொம்பவே யோசித்தேன் அதிரா. என் மகள் (சகளையின் பெண்) அமுதா (சியாமளா) தான் "இருக்கட்டும் சித்தப்பா , முதல் தலைமுறைப் பையன் வீணாவதைக் காணும் ஆசிரியரின் கோவமும் சத்திய ஆவேசமும் அது. அவர் சொன்ன அந்த வார்த்தைகளே போடுங்கள்" என்றாள். போட்டுவிட்டேன்.

நீங்கள் சொன்னதையும் பரிசீலிக்கிறேன். அக்கறையோடு வந்த உங்கள் கருத்துக்கு நான் கடன் பட்டிருக்கேன். தவறாக நிணைக்க என்ன அதிரா இருக்கிறது?

தவறாகவே நிணைத்தாலும் நாம் சொல்ல வேண்டியதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

அன்பும் நன்றியும் அதிரா

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Aug 08, 2010 12:24 am

srinihasan wrote:
Aathira wrote:நல்ல ஆசிரியர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.. என்றும் இருப்பார்கள்.. அப்போது நல் மாணாக்கர் இல்லாமலா போவார்கள்.. எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு.. மலர வைத்த நினைவு மொட்டுகள் நன்றி சொல்கின்றன நல்லாசிரியர் திரு எட்வின் அவர்களுக்கு..


தங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்ட நல்லாசிரியர்கள் பலர் இந்த பூமியில் உண்டு....

படைத்த பிரம்மனின் தலைவிதியாய் நினைப்பதையும் மதியால் வென்று என் போன்ற பல மாணவர்களை உருவாக்கும் மற்றொரு பிரம்மாக்கள் என்ற பெருமையும் ஆசிரியர்களை சாறும்...

மிக்க நன்றி தோழர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 2:25 am

srinihasan wrote:
Aathira wrote:நல்ல ஆசிரியர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.. என்றும் இருப்பார்கள்.. அப்போது நல் மாணாக்கர் இல்லாமலா போவார்கள்.. எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு.. மலர வைத்த நினைவு மொட்டுகள் நன்றி சொல்கின்றன நல்லாசிரியர் திரு எட்வின் அவர்களுக்கு..


தங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்ட நல்லாசிரியர்கள் பலர் இந்த பூமியில் உண்டு....

படைத்த பிரம்மனின் தலைவிதியாய் நினைப்பதையும் மதியால் வென்று என் போன்ற பல மாணவர்களை உருவாக்கும் மற்றொரு பிரம்மாக்கள் என்ற பெருமையும் ஆசிரியர்களை சாறும்...

அன்பு வாசன்.
உங்களைப்போல மாணவர்களால்தான் ஆசிரியர்களுக்குப் பெருமையே.



சண்முகம் MBA - Page 2 Aசண்முகம் MBA - Page 2 Aசண்முகம் MBA - Page 2 Tசண்முகம் MBA - Page 2 Hசண்முகம் MBA - Page 2 Iசண்முகம் MBA - Page 2 Rசண்முகம் MBA - Page 2 Aசண்முகம் MBA - Page 2 Empty
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Aug 08, 2010 7:58 am

நல்ல ஆசிரியர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.. என்றும் இருப்பார்கள்.. அப்போது நல் மாணாக்கர் இல்லாமலா போவார்கள்.
பதிவுக்கு எட்வின் சாருக்கு நன்றி !!



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Aug 20, 2010 12:22 am

drrajmohan wrote:நல்ல ஆசிரியர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.. என்றும் இருப்பார்கள்.. அப்போது நல் மாணாக்கர் இல்லாமலா போவார்கள்.
பதிவுக்கு எட்வின் சாருக்கு நன்றி !!

இருக்கவே செய்கிறார்கள் தோழர். மிக்க நன்றி

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Aug 20, 2010 8:50 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக