புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்மாவட்டங்களை இன்றும் ஆட்டிப்படைக்கும் நாட்டாண்மை தீ்ர்ப்புகள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 22, 2010 5:52 pm

தேசம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து மாறி ஜனாநாயக கட்டமைப்புகளுக்கு வந்து 60 ஆண்டுகளை தாண்டி கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விஞ்ஞான வளர்ச்சி என மனிதன பல்வேறு புதிய பாதைகளை நோக்கி புத்துணர்ச்சியோடு பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தாலும் இன்றும் இத்தேசத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நாட்டாண்மை தனம் குறைந்தபாடில்லை.

சொம்பு, வெள்ளைத் துண்டு, வாயில் வெற்றிலை குதப்பல், எகத்தாளப் பேச்சு, கனல் கக்கும் பார்வை சகிதம் ஆலமரத்தடியின் கீழோ, ஊர் பொது இடத்தில் உட்கார்நதோ, கோவில் வளாகத்திலோ உட்கார்ந்து, இவர்களாக ஒரு தீர்ப்பெழுதி அதை உத்தரவாக்கி, நிறைவேற்றாதவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் சண்டித்தனம் இன்றும் இருந்து கொண்டுதான் உள்ளது.

காவல்துறை, நீதிமன்றம், தகவல் அறியும் உரிமை சட்டம் என்று எத்தனை சட்டங்கள் வந்தாலும் பழசுகளின் மூறுக்கு மீசை தீர்ப்புகள் இன்றும் நம் தமிழக கிராமங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நாட்டாமை தீர்ப்புகள் படிக்காத பாமரன் முதல் படித்து பட்டம் பெற்று உயர்ந்த அந்தஸ்தில் உள்ள அரசு பதவிகளில் இருப்பவர்களையும் ஆட்டி படைக்கிறது. இதே ஸ்டைலில்தான் கந்து வட்டி சம்பவங்களும், அதனால் ஏற்படும் கற்பழிப்பு சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பண்ட, பாத்திரங்கள், அலங்கார பொருட்களும் அபேய் செய்யப்படுவதும், தொடர்கதையாகவே இருக்கிறது.

தமிழகத்தின் சில வடமாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் நாட்டாண்மை தீர்ப்புகள், நடமாட முடியாத ஊரடங்கு சட்ட உத்திரவுகள் போல் உள்ளூர் கிராமங்களில் பல்வேறு தண்டனைகளும், கட்டுபாடுகளும் கலியுகத்திலும் கண்முன்னே நடந்து வருகின்றன.

மெஜாரி்ட்டியான சமூக மக்கள் வசிக்கும் பல்வேறு கிராமங்களில் அந்தந்த ஜாதியினம் தங்களது சமுதாய மண்டபங்களில் (சமுதாய மடம்) அல்லது கோயில்களில் வைத்து மாதத்திற்கொரு முறை நல்லது, கெட்டது குறித்து கூட்டம் நடத்துவது, வாடிக்கை. இந்த சமுதாய கூட்டங்கள் பலமுறை கட்டபஞ்சாயத்து கூட்டமாகவும், மாறி வருகிறது.

உதாரணத்திற்கு ஒரே சமூக மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் ஒரே குடும்பத்தினர் பெரும்பான்மையாகவும், சில குடும்பத்தினர் குறைவாகவும் இருக்கும்போது பெரும்பான்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும், அவர்களுக்கு சாதகமாக அங்கு தீர்ப்பு வழங்கப்படும். மேலும் ஊர் சமுதாய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் காவல்துறைக்கு சென்றால் அந்த குடும்பம் அங்கு தனி மரமாக தண்ணீர் கூட குடிக்க தெருக்குழாய் பக்கமோ, கிணற்று பக்கமோ போக முடியாத அளவுக்கும் கொடூரமான தீர்ப்புகள் வழங்கப்படுவதும், இன்றும் தொடர்கிறது.

பொரும்பான்மை சமூக மக்கள் வசிக்கும் கிராமத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த சில குடும்பங்கள் குடியிருந்தால் பெரும்பான்மை சமூக இளைஞர்கள் வேறு சமூக பெண்களிடம் செய்யும் தவறுகளும் கண்டு கொள்ளப்படாமல் அது இருக்கும். ஒருவேளை பாதிக்கப்படுபவர்கள் கோபம் கொண்டு சண்டை சச்சரவுகள் உருவானால் அக்குடும்பம் அனைத்தையும் இழந்து வேறு இடத்திற்கு இடம் பெயரும் நிலையும் இங்கு அரங்கேற்றம் காணுகிறது. இதுபோன்ற நாட்டாண்மை தீர்ப்புகள் சில கிராமங்களில் நியாயமாகவும், பல கிராமங்களில் அநியாயமாகவும் நடந்தேறி வருகின்றன.

ஒரு தலைமை ஆசிரியை சமூகத்திறகு கட்டுப்படவில்லை என்பதால் அவர் பணிபுரியும் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அனுப்பாமல் அந்த ஆசிரியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், மாணவர்களின் மாற்று சான்றிதழை ஓட்டு மொத்தமாக வாங்கியதும், ஒருரி குடும்பம் மட்டும் ஒரு பெரும்பான்மை சமூக மக்கள் வசித்த கிராமத்தில் ஒரிரு குடும்பத்தினர்களிடம் மெஜிராட்டி இன இளைஞர் தொடர்ந்து காதல் தொந்தரவு கொடுக்க அது கொலையில் போய் முடிந்து இன்று அக்குடும்பமே அனைத்தையும் இழந்து ஊரை விட்டு போனதும், குறிப்பிடத்தக்கது.

இளம்பெண் மொட்டையடிக்கப்பட்ட சம்பவங்களும், தற்கொலையை கூட உடல் நலக்குறைவு மரணமாக மாறியதும், தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற சம்பவத்தில் காவல்துறையினர் பாதிக்கப்படுவதும் நடக்கிறது. காவல்துறை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடி பிடித்து விசாரித்தாலும் உண்மைகள் கிராமங்களில் மறைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் ஒரு கொலை தற்கொலையாகி எஸ்ஐ ஒருவர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.

இதே போல் ஜாதி சமுதாயங்களில் வட்டிக்கு விடும் தொழிலிலும் ஜாரூராக நடக்கிறது. சமுதாய பணத்தை வட்டிக்கு வாங்கிய சமுதாய நபர் அதனை +கட்டவில்லை என்றால் அவரது வீட்டிலுள்ள பொருட்கள் சமுதாய கூடங்களை அலங்கரித்து விடும் நிலையும் தென்மாவட்டங்களில் அதிகமாக அரங்கேறி வருகிறது.

அரசு சட்ட உதவி முகாம்களும், காவல்துறையும், தகவல் அறியும் உரிமை சட்டம், கிராமங்களை தேடி எந்த சட்டம் வந்தாலும் நம் நாட்டாண்மை தீர்ப்புகளை மீறி எதுவும் எடுபடுவதாக இல்லை. அந்த அளவுக்கு நாட்டாண்மை தீர்ப்பு மக்களிடம் தாக்கத்தையல்ல...நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காத்திருப்போம் சமூக கட்ட பஞ்சாயத்துக்கள் ஓழிக்கப்படும் நாட்களை எண்ணி....



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 22, 2010 5:55 pm

தென்மாவட்டங்களை இன்றும் ஆட்டிப்படைக்கும் நாட்டாண்மை தீ்ர்ப்புகள் Icon_eek தென்மாவட்டங்களை இன்றும் ஆட்டிப்படைக்கும் நாட்டாண்மை தீ்ர்ப்புகள் 678642




தென்மாவட்டங்களை இன்றும் ஆட்டிப்படைக்கும் நாட்டாண்மை தீ்ர்ப்புகள் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக