புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
1 Post - 13%
Barushree
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
2 Posts - 3%
prajai
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
2 Posts - 3%
Barushree
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
1 Post - 1%
Shivanya
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_m10நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா..


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 12, 2010 7:26 pm

நாடித் துடிக்குது துடிக்குது...உன்னை நாடித் துடிக்குது துடிக்குது...என்று பாடல் கேட்டிருப்போம். இப்பாடலைக் கேட்கும் போது நாடி, எதை நாடித் துடிக்கிறது? எப்படி துடிக்கிறது? ஏன் துடிக்கிறது? அது துடிக்காவிட்டால் என்ன நடக்கும்? அதன் துடிப்பைக் கண்டறிவது எப்படி? இது போன்ற ஆயிரம் கேள்விகள். இறைவனின் படைப்பில் மனித உடலில் உள்ள உறுப்புகளில் மனிதனின் நல வாழ்வைக் கருதி துடித்துக்கொண்டு இருக்கின்ற நாடிகளை நோயறியும் கருவிகள் எனலாம். ஆங்கில மருத்துவர்கள் நோய்களைக் கண்டறிய பயன் படுத்தும் ஸ்டெத்தாஸ்கோப், தர்மாமீட்டர் போன்று நம் உடல் பொருத்திக் கொண்டுள்ள நரம்பால் ஆன நோயறி கருவியே நாடிகள். நம் முன்னோர்களாகிய ஆதிமருத்துவ மேதைகள் கண்டறிந்த, கண்கண்ட
நோயறி கருவி இவை என்று கூறுவதில் சிறிதளவும் தடையிருக்காது ஒருவருக்கும்.


மருத்துவத்திற்கு நான்கு முக்கிய படிநிலைகள் உள்ளன. மருத்துவம் தொடங்குமுன் 1. மருத்துவர் நோய் இன்னது என்று நன்கு ஆராய்ந்து கண்டறிய வேண்டும். 2. அதன் பின் நோய் வந்த காரணம் என்ன என்று ஆயாய வேண்டும். 3. பிறகு நோயைத் தணிக்கும் (குறைக்கும்) மார்க்கம் எது என்று அறிந்து கொள்ள வேண்டும். 4. அதன் பின்னே தேவையான மருத்துவத்தைச் செய்யத்தொடங்க வேண்டும். .
.
அவற்றுள் நோய் இன்னது என்று கண்டறிவதுவே முதல் படிநிலை என்பர். உடல் நோய்க்கும், உள்ள நோய்க்கும் ஈரடியில் மருந்து சொன்ன தமிழ்ப்பேராசான் திருவள்ளுவரும்,


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்


என்று கூறி நோய் அறிவதையே முன் வைத்தார். தமிழ் மருத்துவத்தில் நோய் தேர்வு, அதாவது நோய் என்ன என்று கண்டறிவது எட்டு முறைகளில் காணப்படும்.. நாடி, தொடுதல், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், சிறுநீர் ஆகிய எட்டும் நோய் தேர்வுக்குப் பயன் படுத்தும் முறைகளாக இருந்து வந்துள்ளன.இன்னும் இருக்கின்றன. ஆயினும் நாடித் துடிப்பின் வழி நோயை அறிவதே முதன்மையாக இருந்து வந்துள்ளது.. இதன் காரணத்தாலே வள்ளுவரும் நோய் அறிதலை முன்வைத்ததுடன் நாடி என்ற சொல்லை எடுத்தாண்டார்.. உயிர்களின் நலம் நாடுவது மட்டுமின்றி, நோய் இன்னது என்று நாடிக் கூறுவதும் இதன் தலையாய பணி என்பதால் நாடி ஆயிற்று எனலாம். இன்றும் பல மருத்துவ முறைகளிலும் தொட்டுப் பார்ப்பது, நாக்கை .நீட்டச்சொல்லிப் பார்ப்பது, விழியைத் திறக்கச்சொல்லிப் பார்ப்பதும், மலம், சிறுநீர் ஆகியவற்றை சோதித்துப்பார்ப்பதும் வழக்கில் உள்ளன. என்றாலும் நாடிச்சோதனை எல்லா மருத்துவத்திலும் முதன்மையாகக் கருதபடுவதே உண்மை.. இதனையே ஆங்கிலத்தில் Pulls என்ற சொல்லால் கூறுகின்றனர். இந்த நாடிகளின் எண்ணிக்கையை 72,000 எனச்சுட்டும் சித்த மருத்துவம்..

இருப்பன நாடி எழுபத்தோடீரா
யிரமான தேகத்தில் ஏலப் பெருநாடி
ஒக்கதசமத்தொழிலை ஊக்கதச வாயுக்கள்
தக்கபடி என்றே சாரும்

என்ற பாடல் வழி உணரலாம். அவற்றுள்ளும் கரு உருவாகும் போதே தோன்றும் நாடிகள் பத்து. அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அசனி, அலம்பருடன், ச்ங்குனி, குரு என்பன. இவற்றுள்ளும் முதன்மையானவையும், முக்கியமானவையும் மூன்று. அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை. இவையே. வாதம், பித்தம், கபம் என்ற பெயர்ப்படும் நாடிகள். இதனை விளக்கும் கண்ணுசாமியம்பாடல் பின்வருவது.

வந்தகலை மூன்றில் வாயுவாமபானனுடன்
தந்த பிராணனைச் சமானனுக்குஞ் சந்தமறக்
கூட்டுறவு ரேசித்தல் கூறும் வாதம் பித்தம்
நாட்டுங்கபமேயாம் நாடு

நாடியைச் சிறை என்று சுட்டும் சீவக சிந்தாமணி. சிறையைந்தும் விடுதும் என்பர் சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத் தேவர்என்று
கூறும் சீவகசிந்தாமணி நாடிகள் ஐந்து என்று எடுத்துரைக்கும். இவை
கையிரண்டு, காலிரண்டு, நெற்றி ஒன்று ஆகிய ஐந்து இடங்களில் இருப்பவை.
என்றுரைக்கும்.
இலக்கியங்கள் பலபடச் சுட்டினும் நாடி என்றழைக்கப்படும் அதி முக்க்யமான தாதுக்கள் மூன்றே என்று உரைக்கும் தமிழ் மருத்துவம்.

சரி, நாடியைச் சோதிக்கும் முறையை அறிய வேண்டாமா? பெருவிரல் பக்கமாக மணிக்கட்டிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி தெரியும் இரத்தக் குழாயையே நாடி நரம்பு என்பர். இதன் மேல் ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல் ஆகிய மூன்று விரல்களையும் வைத்துப் பார்க்கும் போது, ஆள்காட்டி விரல் உணர்வது வாத நாடி. நடுவிரல் உணர்வது பித்தநாடி, மோதிர விரல் உணர்வது கப நாடி. இதனை,

கரிமுகனடியை வாழ்த்திக்
கைதனில் நாடி பார்க்கில்,
பெருவிர லங்குலத்தில்
பிடித்தபடி நடுவே தொட்டால்
ஒரு விரலோடில் வாதம்,
உயர்நடுவிரலிற் பித்தம்,
திருவிரல் மூன்றிலோடில்
சிலோத்தும நாடிதானே

என்று அகத்தியர் நாடி உரைக்கும், வழி வந்த திருமூலரும்,

“குறியாய் வலக்கரங்குவித்த பெருவிரல்,
வறியாயதன் கீழ் வைத்திடு மூவிரல்
பிரிவாய் மேலேறிப் பெலத்ததுவாதமாம்
அறிவாய் ந்டுவிரலமர்ந்தது பித்தமே

என்று உரைப்பார்.
இந்த நாடிகள் முறையே 1, 1/2 , 1/4 என்ற மாத்திரையளவில் துடிக்குமாயின் நல்ல ஆரோக்கியமான் உடல்நிலை உள்ளவர்கள் என்று சித்தர்கள் கணக்கிட்டு உள்ளனர். அந்த நாடிகளைப் பிடித்துப் பார்க்கும் போது அவற்றின் துடிப்புகளின் (அதிர்வுகளின்) வேறுபாட்டைக் உணரக்கூடியதாக இருக்கும். அதாவது ஆள்காட்டி விரலுக்கு நேராக உள்ள நாடி 1/4 ஆகவும் நடு விரல் உணரக்கூடிய நாடி 1/2 ஆகவும் மோதிர விரல் உணரும் நாடி 1 ஆகவும் அதிர்வுகள் இருக்க வேண்டும். இந்தெ அதிர்வு எண்ணிக்கை வீதம் மாறி வருமாயின் குறைபாடு இருக்கும் மனிதன் என்று உணரலாம். அல்லது குறைபாடு வரும் அறிகுறி என்றும் உணரலாம்.


அலோபதி முறையிலும் நாடி பார்க்கும் முறை உள்ளது என்பது நாம் அறிந்ததே..ஒரு வேறுபாடு என்னவென்றால் அம்முறையில் ஒரே எண்ணிக்கை, ஒரே நாடி. ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வு ஏற்படுகின்றன என்று கணக்கிட்டு சராசரியாக 75 முதல் 80 அதிர்வுகள் என்றால் அம்மனிதன் சாதாரணமாக உள்ளார் எனக் கொள்ளலாம் என்பர்.


இந்த நாடித்துடிப்புகள் சற்று கூடினாலும் குறைந்தாலும் நோய் என்பதை நாம் அறிய வேண்டும். இதனையே திருக்குறள் தந்த தெய்வ மருத்துவனும் முக்கியமாக வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளும் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் என்பதை பின்வரும் குறட்பாவால் விளக்குவார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

இந்த மூன்று நாடிகளைத் தவிர `பூத நாடி என்று ஒன்று உண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல என்பர். இதில் என்ன ஒரு குறை என்றால் நாடி நூலகள் பலவும் இந்த நாடியைக் குறிப்பிடவே இல்லை என்பதே.ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறியுள்ளன. இது வாத, பித்த, கப
நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக இருக்கும் என்பர். அதாவது ஐந்து
விரல்களாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலும்
சிறுவிரலும் உணரும் நாடியே பூத நாடியாம். இந்த நாடியின் சிறப்பு, இந்த
நாடி சரியானபடி துடிக்குமானால் சாமாதி நிலை என்று கூறப்படும் பேருறக்க
நிலையை எளிதாக அடையலாமாம். சரி அது இருக்கட்டும்... இந்த நாடிகள்
நடக்கும் முறையை அல்லது அதிரும் முறையை நம் முன்னோர்கள் எவ்வெவற்றோடு ஒப்பிட்டுள்ளனர் என்று அறிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதனை அடுத்த பதிவில் பார்ப்போமா....உங்களுக்காக இந்த நாடி அடுத்த பதிவிலும் துடிக்கும்...


ஆதிரா...




நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Tநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Hநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Iநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Rநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 7:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon Jul 12, 2010 7:36 pm

நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 678642



நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 18, 2010 7:10 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி ரபீக்.. அன்பு மலர்



நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Tநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Hநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Iநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Rநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jul 18, 2010 7:16 pm

நாடிக்குள் இதனை சிறப்பா?
நாடி,நம்மை தேடி சொல்லும் சொன்ன இந்த கட்டுரை ,நல்ல பயன் தரும்.................அறிய தந்த இந்த கட்டுரைக்கு நன்றி தோழியே ..........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sun Jul 18, 2010 7:27 pm

நாடி ய பற்றி தெளிவான கருத்தை சொன்ன தோழி கு மிக்க நன்றி......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 18, 2010 7:30 pm

நாடி பிடித்து கதை சொல்வார்கள்
ஆனால் நாடிக்குள் இத்தனை விடயமா என வியக்கவைக்கிறது
தகவலுக்கு நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 18, 2010 7:51 pm

எஸ்.அஸ்லி wrote:நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 678642
நன்றி அஸ்லி... அன்பு மலர்



நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Tநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Hநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Iநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Rநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Aநாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 18, 2010 9:34 pm

kalaimoon70 wrote:நாடிக்குள் இதனை சிறப்பா?
நாடி,நம்மை தேடி சொல்லும் சொன்ன இந்த கட்டுரை ,நல்ல பயன் தரும்.................அறிய தந்த இந்த கட்டுரைக்கு நன்றி தோழியே ..........
நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 359383 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 359383 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 359383 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 677196 நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 19, 2010 5:22 am

நாடியின் சிறப்பை அழகாக நாடிபிடித்து பார்த்துக் கூறியுள்ளீர்கள் அக்கா!



நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக