புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
32 Posts - 42%
heezulia
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
1 Post - 1%
jothi64
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
398 Posts - 49%
heezulia
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
26 Posts - 3%
prajai
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திருமண நடைமுறைகள் Poll_c10திருமண நடைமுறைகள் Poll_m10திருமண நடைமுறைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண நடைமுறைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 15, 2009 7:59 pm

திருமணம் என்பது பெண் வீட்டாரும், ஆண் வீட்டாரும் பொருத்தம் பார்த்து நடைபெறுகின்றது. சிலர் மனப்பொருத்த முறையிலும் திருமணஞ்செய்து கொள்ளுகின்றனர். திருமண நாள் நிச்சயிக்கப்படும்போது பொன் உருக்கவும் நாள் குறிக்கப்படும்.

பொன் உருக்கும் நிகழ்வு பிள்ளையார் பூசையுடன் மாப்பிள்ளை வீட்டில் ஆரம்பமாகும். ஆசாரியார் நல்லமுறையில் பொன் உருக்குவார். அதன்பின் முள் முருக்கந்தடி கிழக்கு முகமாகப் பந்தற் காலாக நாட்டப்படும். அங்கு நவதானியம் முறைக்கப் போடப்படும். இதே போன்று பெண் வீட்டிலும் பந்தற்கால் போடப்பட்டு நவதானியம் முளைக்கப் போடப்படும். இதன் பின்னர் சுப வேளையில் அடுப்பிலே தாச்சியை வைத்து முதலிலே கல்யாணத்துக்கான இனிப்பு பலகாரங்கள் செய்யப்படும்.

திருமண தினத்தின் முன்தினம் பெண் வீட்டில் சுமங்கலி பூஜை, மணப்பெண்ணின் மங்கள வாழ்வக்காக நடைபெறும். அதே போன்று, மணமகன் வீட்டிலே பிதிர்களின் நல்லாசியை வேண்டி புரோகிதரை அழைத்து வழிபாடுகளை செய்வது வழக்கம்.திருமணம் என்பது சிவ, பார்வதி அம்சங்கொண்ட ஒருபக்தி மயமான நிகழ்ச்சியாகும். இதன்போது விக்னேஸ்வர பஞ்சகவ்ய, கும்பபூஜை, பெண் மாப்பிள்ளைக்குக் காப்புக் கட்டுதல், சிவன் அம்மன் வழிபாடு, நவக்கிரக வழிபாடு, அக்னிகாரியம் முதலானவை கிரமமாக வழிபாட்டுடன் நடைபெறும். முகூர்த்ததோஷம், கிரக தோஷம் நீங்க வழிபாடுகள், தானங்கள் கொடுக்கப்படும்.

மணப்பெண்ணின் இரு கைகளிலும் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சைப் பழம், மஞ்சள், பொற்காசு என்பன வைத்துப் பெண்ணின் இரு கைகளையும் தகப்பன் தாங்க பெண்ணின் தாயார் வெற்றிலையில் தாரையாக நீரை ஊற்றிய பின் மணமகனுக்கு மங்களகரமாக மணப்பெண்ணைத் தகப்பனார் கன்னிகாதானமாகக் கொடுப்பார். உடனே மணமகன் பக்திபூர்வமாக மணப்பெண்ணைத் தமது இரு கைகளாலும் ஏற்று மணமகள் கொடுக்கும் பொற்காசுடனான மங்கலப் பொருட்களைத் தனது தந்தையிடங் கொடுப்பார்.

மாப்பிள்ளை கொடுக்கும் கூறைப்புடவையை மணப்பெண் அணிந்து வந்ததன் பின்னர் மணமகன் வடக்கு முகமாக நின்று மணப்பெண்ணின் கழுத்தில் தாலிகட்டி, மங்கலப் பொருட்களைக் கொடுப்பார். ~சப்தபதி| எனும் ஏழு அடி வைத்து நடந்து, அம்மி மிதித்து, மெட்டி அணிவித்து, அருந்ததி காட்டிய பின்னர் ஆசீர்வாதம், சபையோரின் ஆசீர்வாதம் அன்பளிப்புப் பொருட்களை வழங்குதல் முதலானவை நிகழும். அதன்பின் மங்களகரமாக ஆராத்தி எடுத்து திருமண நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறும்.

பின்னர் குல தெய்வ வழிபாட்டுக்காக மணமக்களை எல்லோரும் அழைத்துச் சென்று எல்லோருமாகக் குல தெய்வத்தை வணங்கி நிற்பர். குருக்கள் விபூதி பிரசாதம்கொடுத்த பின் பூசைக்காளாஞ்சியை மணமகனிடம் கொடுப்பார். மணமகன் அதனைத் தமது இரு கண்களிலும் ஒற்றிப் பின்னர் அதனை மணமகளிடம் கொடுப்பார். மணப்பெண்ணும் தனது இரு கண்களிலும் அதனை ஒற்றிய பின் அதனை இல்லத்திற்கு எடுத்துச் செல்வது மரபு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 15, 2009 7:59 pm

திருமணப் பொருத்தங்கள்

ஒரு இல்லறம் நல்லறமாகத் திகழ வேண்டுமெனில் கணவன், மனைவி இருவரும் குணநலன்கள், பண்புகள் என்பவற்றால் ஒத்திசைந்து ஒருவருக்கொருவர் இணக்கமாக மனமொப்பி வாழவேண்டும். அவ்வாறு அவர்கள் வாழ்வதற்குச் சில பொருத்தங்கள் அவர்களிடையே இருப்பது அவசியமாகிறது.பண்டைய காலத்திலே ஆண், பெண் இருவரையும் நேரில் பார்த்து திருமணப் பொருத்தங்கள் கணிக்கப்பட்டன. அறிவியல் ரீதியான அந்த பத்துப்பொருத்தங்களும் வருமாறு:

1. குடிமை: பிறந்த குடும்பத்தின் நிலை

2. பிறப்பு: பிறந்த குடிக்குத் தகுந்தாற்போல் ஒழுகும் ஒழுக்கம்

3. ஆண்மை: மேற்கொண்ட செயலை நிறைவேற்றும் ஆற்றல்.

4. ஆண்டு: பொருத்தமான வயது

5. உருவம்: ஒருவருக்கொருவர் பொருத்தமான உருவம்

6. நிறுத்த காமவாயில்: நிலையான காதல்

7. நிறை: மன அடக்கம்

8. அருள்: அனத்துயிர்களிடத்திலும் பரிவுணர்வு

9. உணர்வு: எதைப் பற்றியும் உணரும் அறிவு

10. திரு: செல்வ வளம்


பிற்காலத்தில் ஏட்டில் எழுதியவற்றைப் பொருத்தம் பார்க்கும் நிலை வழக்கத்திற்கு வந்தது. இம்முறையில் ஆண், பெண் இருவரையும் நேரில் பார்க்காமலே அவர்களுடைய ஜாதகங்களை வைத்துக்கொண்டு ஜோதிடர் அவர்களின் பொருத்தங்களைக் கணித்தறிவார். இம்முறையே இப்போது வழக்கத்திலிருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 15, 2009 8:00 pm

ஜோதிடத்தில் கணிப்பிடப்படும் பத்துப்பொருத்தங்கள் வருமாறு:

** தினப்பொருத்தம்

** மகேந்திரப் பொருத்தம்

** கணப் பொருத்தம்

** யோனிப் பொருத்தம்

** ஸ்திரிதீர்க்கப் பொருத்தம்

** இராசிப் பொருத்தம்

** இராசி அதிபதிப் பொருத்தம்

** வசியப் பொருத்தம்

** ரஜ்ஜுப் பொருத்தம்

** வேதைப் பொருத்தம்

இந்த பத்துப் பொருத்தங்களில் ஐந்துக்கு மேல் பொருத்தங்கள் காணப்படின் திருமணம் செய்யலாம் என்பது தற்போதைய நடைமுறையாகவுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 15, 2009 8:01 pm


தாலிக்கு பொன் உருக்கும் வைபவம்!


ஒரு நல்ல நாளில் தாலிக்குப் பொன் வாங்குகிறார்கள். பெத்துப் பெருகி மங்களமாக வாழ்கின்ற குடும்பத் தலைவர் ஒருவர்தான் முன்னின்று இந்தச் சுபகாரியத்தைச் செய்வார். பஞ்சாங்கம் பார்த்து தாலிக்குப் பொன் உருக்குவதற்கு நாள் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நாளில், சுமங்கலிப் பெண்கள் சூழ்ந்திருக்க பொன் உருக்குதல் நடைபெறும். மாப்பிள்ளை பொன்னை வெற்றிலையில் வைத்து, கடவுளை வணங்கி பொற்கொல்லர் கையில் கொடுக்க, அவர் அதனை எடுத்து, மங்கள வார்த்தைகள் சொல்லி, சூழவிருக்கும் பெரியோருக்குக் காட்டுவார். மாப்பிள்ளை அதனைப் பெற்று பூசையறையில் வைத்து, கடவுளை வணங்குவார். அதன் பின்பு அதிலிருந்து தாலி வார்த்தெடுக்கப்படும்.

தாலிக்குப் பெரும்பாலும் ஒரு சவரன் தங்கமே உருக்கப்படுகிறது. ஆனால், தாலி ஒரு சவரன் தங்கத்தில் தான் செய்ய வேண்டும் என்னும் நியதி இல்லை. ஒரு சவரனிலும் குறைவான தங்கத்திலே தாலி செய்யப்படுவதையே மக்கள் விரும்புகிறார்கள்.தாலி பல்வேறு வகையான உருவத்தில் இருக்கின்றது. அது போல, தாலிகளில் பதிக்கப்படும் உருவங்களும் பல வகைப்பட்டனவாக உள்ளன. என்ன வடிவத்தில் தாலி அமைய வேண்டும் என்பதை மணமகன் தீர்மானிக்கின்றான். சிலபோது மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து தெரிவு செய்வதும் உண்டு.

-வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் திருமணம் -

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் களையவே ~திருமண கலாசாரம்| உருவாக்கப்பட்டது.திருமணம் என்பது இன்று அனைத்து மனித சமூகத்தினரின் வாழ்விலும் மகத்துவமிக்க புனிதமானதோர் சடங்காகத் திகழ்கிறது. ஆனால், திரமண சடங்கை நிறைவேற்றும் முறைதான் சமூகத்திற்குச் சமூகம் வேறுபடுகிறது.

சமூகங்களில் நாகரிக வளர்ச்சி தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தை எடுத்துக் கொண்டால், ~திருமணம்| என்பது தொடர்பான எண்ணக்கருவோ, சம்பிரதாயங்களோ காணப்படவில்லை. வேடுவனாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் நாகரிக வளர்ச்சியின் பிற்பாடு ஓரிடத்தில் நிலையாக தன் வாழ்க்கையை ** ்திரப்படுத்திக் கொண்ட காலகட்டத்தில் தான் திருமணம் பற்றிய சிந்தனை மனித சமுதாயத்தில் தோற்றமெடுத்தது.

அந்த வகையில் தொன்மையான காலத் தமிழர்களின் வாழ்க்கையில் திருமணம் என்ற சடங்கே இருக்கவில்லை. ~களவு| வாழ்க்கையே நடைமுறையில் இருந்தது. களவு வாழ்க்கை என்பது அன்பு, அறிவு, அழகு முதலியவற்றில் ஒத்திருக்கும். ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டு உலகத்தார் அறியாத வண்ணம் மனமொப்பி வாழும் வாழ்க்கையாகும்.காலப்போக்கில் இக்களவு வாழ்க்கையில் ஆண்மகன் தன்னை நம்பி வந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு மாற்றாள் ஒருத்தியுடன் வாழ்க்கை நடது;தும் நிலை தோன்றியது. இவ்வாறு களவு வாழ்க்கையில் பொய்யும் பித்தலாட்டமும் தோன்றிவிட்டமையால் அறிவில் சிறந்த பெரியவர்கள் ஒன்று கூடி திருமணம் என்ற சடங்கை உருவாக்கினார்கள்.

பெண்கள் தொடர்பான சமூகப் பாதுகாப்பு, உடமைகள், சொத்துக்கள் சம்பந்தமான பேணுகையை உறுதிப்படுத்தல், குடும்ப கட்டுக்கோப்பை சீர்குலையாமல் கட்டிக்காத்தல் போன்ற தேவைப்பாடுகள் திருமணம் பற்றிய எண்ணக்கரு தோற்றமிட்டன எனலாம்.ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்தல், ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்தல், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையிலான திருமணம், வௌ;வேறு சமூகங்களில் தோற்றமெடுத்தன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 15, 2009 8:02 pm

இற்றைக்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் தான் இயற்றிய தொல்காப்பியத்தில் எண் வகைத் திருமணங்கள் பற்றிக் கூறுகிறார்.

* பிரம்ம விவாகம் : நாற்பத்தெட்டாண்டு பிரமச்சரியம் காத்த ஆண்மகனுக்கு பன்னிரெண்டு வயதுடைய கன்னியை ஆடை அணிகலன்களால் நன்கு அலங்கரித்துக் கொடுப்பது.

* பிரசாபத்திய விவாகம் : மைத்துனன் உறவுடையவனுக்கு பெண்ணின் விருப்பத்திற்கமைய புனித சடங்குகள் மூலம் கொடுப்பது.

* ஆரிட விவாகம் : தகுதியுடைய ஒருவனுக்கு பொன்னாற் பசுவும், காளையும் செய்து அவற்றின் நடுவே பெண்ணையும் நிறுத்தி அணிகலன்கள

அணிவித்து ~நீங்களும் இவைபோல வளமுடன் ஒற்றுமையாக வாழ்வீர்களாக!| என்று வாழ்த்தி நீர் வார்த்துக்கொடுப்பது.

* தெய்வ விவாகம் : வேள்வி நிகழ்த்தும் குருவுக்கு, வேள்வித் தீயின் முன்வைத்து கன்னிப் பெண்ணைக் குருதட்சணையாகக் கொடுத்தல்.

* காந்தர்வ விவாகம் : ஆண்மகனும் கன்னியும் யாரும் அறியா வண்ணம் சந்தித்து கணவன் மனைவியாக உறவாடுவது.

* அசுரா விவாகம் : மணமகனிடம் ஏராளமான பெற்றுக்கொண்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது.

* இராட்சஸா விவாகம் : தான் விரும்பிய் பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக பலவந்தமாக கடத்திச் சென்று அடைவது.

* பைசாக விவாகம் : தன்னை விடவும் வயதில் வுத்தவளிடமும் உறங்குகிறவளிடமும், கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவளிடமும் கூடி மகிழ்வது.

தமிழர் வரலாற்றில் திருமணச் சடங்கு உருவாக்கப்பட்ட காலத்தில் அது மூவேந்தர்களுக்கு மட்டுமே உரியதாய் இருந்தது. பின்னர் அனைவருக்கும் இச்சடங்கு பொருத்தமானதாக எற்றுக்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கும் உரிய சடங்காய் மாறியது.

பண்டைய காலந்தொட்டு இன்று வரையிலான காலப்பகுதியை எடுத்து நோக்கினால், மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினரால் கலந்துபேசி ஒழுங்கு செய்யப்படும் திருமணங்களே செல்வாக்குச் செலுத்தி வருகின்றமையை அவதானிக்க முடியும். பெரும்பாலான திருமணங்கள் காதல் அடிப்படையிலன்றி, பொருளாதாரம், குடும்பக் கௌரவம் போன்ற இதர புறக்காரணிகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.

மேலைத்தேய பாரம்பரிய திருமணங்களிலே திருமண மோதிரம் அணிவது கட்டாயமானதாகவுள்ளது. மோதிரத்தின் வட்ட அமைப்பானது திருமணத்தால் ஏற்பட்ட பந்தம் என்றென்றும் முடிவுறாமல் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும் மோதிர விரலிலுள்ள நரம்பு ஒன்று இதயத்துடன் நேரடியாக தொடர்புறுவதால் திருமணமானது இரு இதயங்கள் சம்பந்தப்பட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் நம்பிக்கை நிலவுகிறது.

1500 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்பாலான திருமணங்கள் வைபரீதியாகவோ, சாட்சியாளர்களை சாட்சி வைத்தோ நடாத்தப்படவில்லை. 1563 ஆம் ஆண்டுப் பகுதியில் குறைந்தது இரண்டு சாட்சிகளுடன் வைபவரீதியாக திருமணம் நடத்தப்பட வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்தது.தம்மி ** ்பிறோட் என்ற மதபோதகர் திருமணமானது ஆண்களையும் பெண்களையும் பாவங்களிலிருந்து தடுக்கிறது எனக்கூறியுள்ளார்.லௌரா றெனோல்ட்** ் என்பவர் 8-14 நூற்றாண்டு காலப்பகுதியிலான திருமணம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

திருமணம் என்பது ஆண், பெண் ஆகிய இருவரையும் இணைத்து வைக்கின்ற புனித சடங்காகும். ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலாலோ அன்றி வேறேதும் காரணங்களாலோ ஒரு ஆணும், பெண்ணும் திருமணத்தில் இணையும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இருவரும் தனித்தனியாக பாரியளவிலான திருமணப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய கடப்பாடுடையவர்களாகின்றார்கள். பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள நிலைமையிலும் இடையிடையே மகிழ்ச்சிகரமான பொழுதுகள் அத்தம்பதிகளுக்கு கிடைக்கவே செய்கின்றன. அவ்வினிய பொழுதுகள் திருமண வாழ்வின் உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்ப உதவுவனவாக உள்ளன.

திருமணம் என்பது காலங்காலமாக பல்வேறு பரிணாம நிலைகளைத் தொட்டு வளர்ச்சி கண்ட போதும் அதன் உள்ளார்ந்த தத்துவங்கள் பாரம்பரியமானவை. ஒவ்வொரு சமூகத்தினது திருமண முறையும் வேறுபட்ட நிலைமையிலும் அத்திருமண சடங்குகளில் பொதிந்திருக்கும். உட்கருத்துக்கள் அர்த்தம் நிறைந்தவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 15, 2009 8:15 pm

ஆகா திருமணம் பற்றிய அனைத்து தகவல்களும் அருமையிலும் அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக