புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
62 Posts - 34%
i6appar
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
62 Posts - 34%
i6appar
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
42 நபிமொழிகள் - Page 3 Poll_c1042 நபிமொழிகள் - Page 3 Poll_m1042 நபிமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

42 நபிமொழிகள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:05 pm

First topic message reminder :

அல்லாஹ்வின் தூதர் உங்களிடம் கொண்டு வந்திருப்பதை
எடுத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்
59:07)

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனே அகிலத்தின்
அதிபதி. ஆகாயம்
, பூமி இவைகளின் நிரந்தர பாதுகாவலன். படைக்கப்பட்டவர்களi பாதுகாப்பவன்.
பராமரிப்பவன். இறக்கச் செய்பவன். இறைவனின் வழிகாட்டுதலை வழங்குவதற்காகவும் இறைச் சட்டத்தை
தாங்கள் வழிகாட்ட வந்த மக்களுக்கு எடுத்துச் சொல்லிடவும்
, தெளிவான
அத்தாட்சிகளைத் தந்திடவும். இறை-தூதர்களை (அலலாஹ்வின் ஆசியும்
, அருளும், சாந்தியும்
சமாதானமும் இறைத்தூதர்கள் அனைவர் மீதும் உண்டாவதாகுக) அனுப்பியவன். அல்லாஹ் அருளிய
கிருபைகளுக்கு அவனையே புகழ்கிறேன். அவன் தனது அருட்கொடைகளை இன்னும் அதிகப்படுத்திட
அவனிடம் இறைஞ்சுகிறேன்.


அல்லாஹ்வைத் தவித வேறு இறைவன் இலi;
என்று நான் சாட்சியம் கூறுகிறேன். அவன் ஒருவனே
, அவனுக்கு
இணையில்லை. அவனே படைத்தவன்
, பரிபாலிப்பவன், பாதுகாப்பவன், போஷிப்பவன், அவன்
அருளாளன்
, மன்னிப்பவன். நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த ஏக இறைவனின் நல்லடியாராவார்கள், அவனது
தூதராவார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அன்புக்கும் அருளுக்கும்
, பாத்திரமானவர்கள்.
படைப்பினங்களிலெ
;லாம் உயர்ந்தவராவார்கள். அவர்கள், வாழும் அற்புதமாகிய திருக்குர்அனால்
பெருமைப்படுத்தப்பட்டவராவார்கள். நமது தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள் சுருக்கமாகவும்
, விளக்கமாகவும்
பேசுபவர்களாக இருந்தார்கள். (இறைவனின் ஆசியும்
, அருளும், சாந்தியும், சமாதானமும்
இறைவனின் தூதர் அவர்கள்மீதும்
, இன்னும் ஏனைய இறைத்தூதர்கள்
மீதும்
, இறைவனின் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!)

அலி இப்னு அபீதாலிப் (ரலி)
, அப்துல்லா
இப்னு மஸ்ஊது (ரலி)
, முஆது இப்னு ஜபல் (ரலி), அபுதர்தா (ரலி), இப்னு
உமர் (ரலி)
, இப்னு அப்பாஸ் (ரலி),
அனஸ் இப்னு மாலிக் (ரலி), அபூஹ{ரைரா
(ரலி)
, அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) ஆகியோரின் ஆதாரங்களோடு பின்வரும் நபிமொழி நமக்குக் கிட்டியுள்ளது.
அதாவது
, பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் :

''என்னுடைய உம்மத்துக்களுக்காக மார்க்கம் சம்பந்தப்பட்ட நாற்பது ஹதீதுகளை எவர் மனனம்
செய்துப் பாதுகாத்து வைக்கின்றாரோ அவரை அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் மார்க்க அறிஞர்கள்
சட்ட வல்லுநர்கள் ஆகியோர்களின் கூட்டத்தில் எழச் செய்வான்"".


பிரிதொரு நபிமொழியில் ''அல்லாஹ்
அவனை மார்க்க அறிஞனாகவும்
,
மார்க்க சட்ட வல்லுநனாகவும் எழச் செய்வான்""
எனச் சொல்லப்பட்டுள்ளது.


அபுத்தர்தா அவர்களின் வார்த்தையில், ''இறுதித்
தீர்ப்பு நாளில் நான் அவருக்கு (நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து ஏனையோருக்கு தெரிவிப்பவர்)
சாட்சியாகவும்
, பரிந்துரை செய்பவராகவும் இருப்பேன்"", இப்னு
மஸ்ஊது (ரலி) அவர்களின் வார்த்தையில்
, நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து
எனது மக்களுக்காக சேகரித்து வைப்பவர்களிடம்
''சுவர்க்கத்தில் நீங்கள் விரும்பும்
வாசல் வழியே நுழையுங்கள் என்றும் சொல்லப்படும்"". இப்னு உமர் (ரலி) அவர்களின்
வார்த்தையில்
, ''அவர் (நாற்பது நபிமொழிகளை மக்களுக்கு சேகரித்து வைப்பவர்) மார்க்க அறிஞர்கள் கூட்டத்தில்
குறித்து வைக்கப்படுவார்
,
மேலும் அவர் இறைவனின் பாதையில் மடிந்த தியாகிகளின்
வரிசையில் எழுப்பப்படுவார்"" என்றும் வருகிறது. (எனினும் இந்த கடைசி ஹதீதுக்கு
ஆதாரங்கள் தரப்பட்டிருப்பினும் அது பலவீனமான ஹதீதுகளின் பட்டியலில் இடம் பெறுவதாக அறிஞர்கள்
ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர்).


நபிமொழிகளை தொகுத்துத் தருவதில் எண்ணற்ற மார்க்க
அறிஞர்கள் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கின்றார்கள். எனினும் எனக்குத் தெரிந்தவரை இந்தப்
புனிதப்பணியை முதன் முதலாகச் செய்தவர்கள் அப்துல்லா இப்னு அல் முபாரக் ஆவார்கள். தொடர்ந்து
இறைஞான அறிஞராக இப்னு அஸ்லாம் அத்-தூஸி
, பின்னர் அல் ஹஸன் இப்னு சுஃப்யான்-அன்
நஸயீ
, அபூபக்ருல் ஆஜுரி,
அபூபக்ரு முஹம்மத் இப்னு இப்ராஹீம் அல் அஸ்ஃபஹானி, அத்-தாரகுத்னீ, அல்
ஹாக்கிம்
, அபூநுஐம், அபூஅப்துற்றஹ்மான் அஸ்சுலமீ, அபூ சயீதுல் மாலீனீ, அபூ
உத்மான் அஸ்-சாபூனி
, அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் அல் அன்சாரி, அபூபக்ரு அல்பைய்ஹக்கீ போன்ற
முற்காலத்தவரும்
, பிற்காலத்தவருமான எண்ணற்றொரும் இப் பணியைச் செய்திருக்கிறார்கள்.

இந்த நாற்பது நபிமொழிகளையும் மார்க்க அறிஞர்கள், இஸ்லாத்தின்
காவலர்கள் ஆகியோர் ஆக்கி வண்ணம்
, தொகுத்திட நான் இறைவனின் துணையைத்
தேடியிருக்கிறேன். நல்லவைகளை செய்வதைப் பொறுத்தவரை பலவீனமான நபிமொழியை செயல்படுத்துவதும்
அனுமதிக்கப்பட்ட ஒன்றேயென்று மார்க்க அறிஞர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள்.


இருந்த போதிலும் நான் மேலே குறிப்பிட்ட பலவீனமாக
நபிமொழிகளில் முற்றாகச் சார்ந்திருக்கவில்லை.


''
உங்களில் எவர் இங்கே என்னுடைய சாட்சியாக இருக்கின்றார்களோ அவர்கள் இங்கே இல்லாதவர்களுகு;கு
எடுத்துச் சொல்வீர்களாக"" என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் மொழியின் மீதும்
, ''நான்
சொன்னவைகளைச் கேட்டு அவைகளை மனனம் செய்து
, அவைகளை அப்படியே அடுத்தவர்களுக்குகம்
சொல்லுகின்றவர்களின் முகத்தை இறைவன் பிரகாசம் மிக்கதாக ஆக்குவானாக!"" எனற
நபிமொழியின் மீதும் ஆதரவு வைத்தே நான் இதனைத் தொகுத்திருக்கிறேன்.


இதைப் போலவே பல மார்க்க அறிஞர்கள் மார்க்கத்தில்
பல்வேறு பொருள்கள் குறித்தும் நாற்பது நபிமொழிகளை தொகுத்துத் தந்துள்ளார்கள். உதாரணமாக
, அறப்போர்
(ஜிஹாத்)
, இறைநம்பிக்கை, நல்லொழுக்கம் இவைகள் ஒவ்வொன்றும் குறித்து நாற்பது நபிமொழிகள் கொண்ட தொகுப்புகள்
வெளிவந்துள்ளதைக் குறிப்பிடலாம். இவைகள் அனைத்தும் இறைவனின் பாதையில் மேற்கொள்ளப்பட்ட
அரிய முயற்சிகளேயாகும். இறைவன் இவர்கள் அனைவருக்கும் நற்கூலியைத் தந்தருள்வானாக.


நான் இவைகளை விட முக்கியமான, இவையனைத்தையும்
பிரதிபலிக்கும் நாற்பது நபிமொழிகளைத் தொகுத்துத் தருவது சிறப்பான செயலாகும் என்று கருதினேன்.
'மார்க்கத்தின் அச்சாணி என்றும், இஸ்லாத்தின் பகுதி"என்றும்
அதில்
'மூன்றிலொரு பகுதி" என்றும் இன்னும் இதுபோல மார்க்க அறிஞர்களால் உயர்ந்தனவாகக்
கருதப்பட்ட நாற்பது நபிமொழிகளையே தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளேன். இந்த நாற்பது நபிமொழிகளையும்
பலமான நல்ல நபிமொழிகள் என்றே கொள்ள வேண்டும்.






இவைகளில் பெரும்பாலானவை ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ்
முஸ்லிம் ஆகிய நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.


மனனம் செய்து கொள்வதற்கு எளிதாக இருக்கவும் நிறைவான
பலன்களை அடைந்திடவும் ஆதாரங்களின் தொடர்ச்சியை சுருக்கமாகவும் தந்திருக்கிறேன்.


இறைவனுக்கு அடிபணிவது குறித்து இந்த நபிமொழிகள்
தரும் வழிகாட்டுதல்களுக்காகவும்
, இந்த நபிமொழிகள் தரும் வழிகாட்டுதல்களின்
முக்கியத்துவத்திற்காகவும் இவைகள் மறுமைப் பேற்றை விரும்பும் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க
வேண்டியது அவசியமாகும்.


இறைவனிடமிருந்தே நான் உதவி தேடுகின்றேன். அவனையே
நான் சார்ந்திருக்கின்றேன். அவனிடமே நான் அடைக்கலம் தேடுகின்றேன். எல்லாப் புகழும்
அவனுக்கே உரியது. வெற்றியும் பாதுகாவலும் அவனிடமே இருக்கின்றது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:38 pm

நபிமொழி - 20
அபூமஸ்ஊத் உக்பா இப்னு அம்ர் அல்-அன்ஸாரீ அல்-பத்ரி
(ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக கூறுகின்றார்கள்.

முந்திய இறைதூதர்களிடமிருந்து1 பெற்ற
வசனங்களில் ஒன்று
, 'உங்களுக்கு வெட்கம் ஏற்படவில்லையென்றால் நீங்கள் விரும்புவது போல் செயல்படலாம்".2 - அல்-புகாரீ
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்த இறைத்தூதர்களைக்குறிக்கும்
இந்த நபிமொழிக்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்
என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

· ஒருவர், தான் வெட்கப்படாதவரை தனது மனசாட்சிப்படி செயல்படலாம்.
· ஒருவர் எதைப் பற்றியும் வெட்கப்படவில்லையென்றால் அவர் மனம் போனபடி தீய செயல்களைச்
செய்வதிலிரந்து அவரைத் தடுப்பது எதுவுமில்லை.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:39 pm

நபிமொழி - 21


அபூ அம்ரு (அபூ அம்ரா என்றும் குறிப்பிடப்படுகிறார்).
சுப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்



''அல்லாஹ்வின் தூதரவர்களே! இனி வேறு யாரிடத்தும் கேட்கத் தேவையில்லாத வகையில் இஸ்லாத்தைப்
பற்றி எனக்குச் சொல்லுங்கள்"" என்று நான் கேட்டேன்.



''அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறேன் என்று மொழிந்து அதன் மீதே நிலைத்திருப்பீராக!""
என அவர்கள் கூறினார்கள். - முஸ்லிம்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:39 pm

நபிமொழி - 22


அப்துல்லா-அல்-அன்ஸாரி (ரலி) அவர்களின் மகன் அபூ
அப்துல்லாஹ் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.



ஒரு மனிதர் இறைவனின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்.


''நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுகின்றேன், ரமலானில்
நோன்பு நோற்கின்றேன்
,
சட்டப்படி அனுமதிக்கப்பட்டவைகளை ஏற்று நடக்கிறேன், சட்டப்படி
தடுக்கப்பட்டவற்றை வெறுத்து ஒதுக்குகின்றேன். இதற்கு மேல் நான் எதுவும் செய்யவில்லை.
இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா
?""


பெருமானார் (ஸல்) அவர்கள் ''ஆம்!""
என்று பதில் தந்தார்கள். - முஸ்லிம்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:40 pm

நபிமொழி - 23


பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றதாக, அபூ
மாலிக் அல் ஹாரித் இப்னு ஆசிம் அல்-அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :



தூய்மை ஈமானின் ஒரு பாதியாகும். 'அல்-ஹம்துலில்லாஹ்"
(எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கே) என்பது மீஸானின் நன்மையின் தட்டை நிறைக்கின்றது.
'சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் குறைகளுக்கு அப்பாற்பட்டவன்) 'அல்ஹம்துலில்லாஹ்"
(எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அலல்
hஹ்வுக்கே) ஆகிய இரண்டுமோ அல்லது ஒவ்வொன்றோ, வானத்திற்கும்
பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகம்
, பொறுமை
வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்.
தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் ஈடுபடுத்துகிறான்.
ஒன்று அதன் விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான் அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்.
- முஸ்லிம்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:40 pm

நபிமொழி - 24


அபூதர் அல்-கிஃபாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மாட்சிமை பொருந்திய இறைவனிடமிருந்து அறியப் பெற்றதாக
1 பெருமானார்
(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.



என்னுடைய அடியார்களே, மக்களுக்கு
அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை
செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள்



என்னுடைய அடியார்களே, நான்
நேர்வழி காட்டியவர்களைத் தவிர
, மற்றுமுள்ள நீங்கள் எல்லோரும்
வழி தவறியவர்களாகவே இருக்கின்றீர்கள். எனவே
, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான்
நேர்வழி காட்டுவேன். என்னுடைய அடியார்களே
, என்னால் உணவளிக்கப்பட்டவர்களைத்
தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்பீர்கள். ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான்
உங்களுக்கு உணவளிக்கின்றேன். என்னுடைய அடியார்களே! என்னால் ஆடை அளிக்கப்பட்டவர்களைத்
தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள்
, நான்
உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். என்னுடைய அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள்.
நானே பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள்
, நான்
உங்களை மன்னிக்கின்றேன்.



என்னுடைய அடியார்களே! நீங்கள் எத்துணை முயன்றாலும்
எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் எய்திட முடியாது. இன்னும் நீங்கள் எத்துணைதான்
முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது.



என்னுடைய அடியார்களே! உங்களுக்கு மன சென்றவர்களும், உங்களுக்குப்
பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்களும்
, ஜின்களும் ஆகிய நீங்கள அனைவரும்
என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும்
, பக்திமிக்கவர்களாகவும்
இருந்து என்னை வணங்கினாலும்
, அது எந்த விதத்திலும் என்னுடைய
ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. என்னுடைய அடியார்களே! உங்களுக்குப் பின்னால்
சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும்
, உங்களுள்
மனிதர்களும் ஜின்களும் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை
விளைவித்தாலும்
, அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது.


என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு
பின்னால் வருபவர்களும் மனிதர்களும்
, ஜின்களும் ஒரே இடத்தில் கூடி
நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டகவும்
, அவ்வாறு
நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை
, ஒரு
ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் ஏற்படும் அளவிற்குக்
2 கூட
குறைத்து விடுவதில்லை.



என்னுடைய அடியார்களே! உங்களுடைய செயல்களைக் கொண்டே
நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி
தருகின்றேன். ஆகவே உங்களில் நல்லதைக் காண்பவர்கள்
3 அல்லாஹ்வைப்
புகழட்டும். நல்லது அலலாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற
வேண்டாம். - முஸ்லிம்



இது 'ஹதீஸ் குத்ஸி" எனப்படும்.
அதாவது இறைவன் சொன்னதாக பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்தது. ஆனால் அவை அப்படியே இறைவனின்
வாக்குகள் ஆக மாட்டா. எனவே தான் ஹதீஸ் குத்ஸி என்பது திருக்குர்ஆனின் ஒரு பகுதியாகாது.



அதாவது, அலல்hஹ்
தன் அருள் கொடைகளிலிருந்து எவ்வளவு தான் அள்ளித் தந்தாலும் அதனால் அவனுக்கு எதுவும்
குறைந்து விடுவதில்லை.



இது மறுமைப் பயன்களைக் குறிக்கும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 7:23 pm

நபிமொழி - 25


அபூதர் (ரலி) அவர்கள் இதையும் அறிவிக்கின்றார்கள்.


இறைவனின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர்1 பெருமானார்
(ஸல்) அவர்களிடம் சொன்னார்கள்.



''இறைவனின் தூதரவர்களே! செல்வச் செழிப்புள்ளவர்கள் இறைவனிடம் மிகுந்த நற்கூலியை சம்பாதித்துக்
கொண்டார்கள். அவர்கள் நாங்கள் தொழுவது போலவே தொழுகிறார்கள். அவர்கள் நாங்கள் நோன்பிருப்பது
போலவே நோன்பிருக்கின்றார்கள். அவர்கள் தங்களது தேவைக்குப் போக மிகுதியாயுள்ள செல்வத்திலிருந்து
தர்மம் செய்கிறார்கள்"".




பெருமானார் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்
உங்களுக்கும்
, தானதர்மங்கள் செய்திட தேவையானவைகளைத் தரவில்லையா? எனக்
கேட்டார்கள். உண்மையிலேயே ஒவ்வொரு
'தஸ்பீஹ{ம்"
ஒரு தர்மமேயாகும். ஒவ்வொரு தக்பீரும்
3 ஒரு தர்மமேயாகும். ஒவ்வொரு தஹ்மீதும்4 ஒரு
தர்மமேயாகும். ஒவ்வொரு தஹ்லீலும்
5 ஒரு தர்மமேயாகும். ஒரு நல்ல செயலைச் செய்யத்
தூண்டுவது ஒரு சிறந்த தர்மமேயாகும். ஒரு தீய செயலைத் தடுப்பது ஒரு தர்மமேயாகும்.



நீங்கள் உங்கள் மனைவியரோடு வீடு கூடுவதும் ஓர்
அறச் செயலே ஆகும்.



தோழர்கள், ''பெருமானார்
(ஸல்) அவர்களே
, எங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தன் இச்சையை நிறைவு செய்து கொள்ளும்போது அதற்காகவும்
அவருக்கு நற்கூலி உண்டா"" எனக் கேட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
:
'இதில் தடுக்கப்பட்டதை செய்பவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீகளா? அதுபோலவே
இதில் ஆகுமான முறையில் நடந்து கொள்பவர்களுக்கு நற்கூலி உண்டு"". - முஸ்லிம்



'சஹாபி" என்ற அரபிச் சொல்லுக்கு நாயகத் தோழர்கள் என்று பொருள். பெருமானார்
(ஸல்) அவர்களைச் சந்தித்து
, நம்பி முஸ்லிம்களாகவே இறந்தவர்களுக்கு
தரப்படும் சிறப்புப் பெயராகும்.



சுபுஹானல்லாஹ். அல்லாஹ் குறைகளுக்கு அப்பாற்பட்டவன்
(தூய்மையானவன்) என்று சொல்வதாகும்.



அல்லாஹ{அக்பர், இறைவன்
மாபெரியோன் என்று சொல்வதாகும்



அல்ஹம்துலில்லாஹ், எல்லாப்
புகழும் இறைவனுக்கே என்று சொல்வதாகும்.



லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன்
இல்லை) என்று கூறுவதாகும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 7:24 pm

நபிமொழி - 26


அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் பெருமானார்
(ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள்.



மனிதர்களின் ஒவ்வொரு மூட்டும் ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒரு தர்மத்தை செய்தாக வேண்டும்.



இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது
ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும்.
அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை
பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு
தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும்
ஒரு தர்மமாகும். - புகாரி
,
முஸ்லிம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 7:26 pm

நபிமொழி - 27


அன் நவ்வாஸ் இப்னு சம்ஆன் (ரலி) அவர்கள் பெருமானார்
(ஸல்) அவர்கள் மொழிந்ததாக அறிவிக்கின்றார்கள் :



நேர்மை ஒரு சிறந்த ஒழுக்கமாகும். இன்ன செயலைச்
செய்யலாமா
, கூடாதா என்று உங்களை அலைக்கழிப்பதும், எதனைச் செய்யும் போது மக்கள்
அதனைத் தெரிந்து கொள்ளக் கூடாது என்று நீங்கள் நினைப்பீர்களோ அதுவும் தவறான செயல்களாகும்.
(இதை அறிவித்தவர் : முஸ்லிம்). வாபிஸா இப்னு மஃபது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்



நான் பெருமானார் (ஸல்) அவர்களின் சமூகம் சென்றேன்.
அவர்கள் என்னிடம்
, ''நேர்மை என்பது என்ன என்று கேட்க வந்திருக்கின்றீரா?"" என்றார்கள். நான் ஆம் என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள், உம்முடைய
இதயத்தை கேட்டுப் பாரும் என்றார்கள்.
''நேர்மையான செயல் என்பது அதனைப்
பற்றி நமது ஆன்மா அமைதி பெறுவதாகும். அதனைக் குறித்து நமது உள்ளம் திருப்தியானது தான்
என்று பிறர் தீர்ப்பளித்து விட்ட பிறகும் கூட உங்கள் ஆன்மாவை அலைக்கழிப்பதும் உள்ளத்தில்
ஊசலாடுவதுமான ஒன்றாகும்.
1""
இந்த ஹதீஸ் சிறப்பான ஒன்று. இமாம் அஹ்மது இப்னு
ஹம்பல்
, இமாம் தாரிமீ ஆகியோரின் தொகுப்புகளிலிருந்து மிகச் சரியான ஆதாரங்களைக் கொண்டதெனக்
கண்டு எடுக்கப்பட்டதாகும் இது.



1.இந்த இரு நபிமொழிகளையும் ஒன்றாகத் தந்திருப்பதன் காரணம், இரண்டு
நபிமொழிகளின் கருத்துக்களும்
, வார்த்தை அமைப்புகளும் ஒன்றாக
இருப்பதால் என்று கருதலாம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 7:26 pm

நபிமொழி - 28


அபூ நஜீஹ் இர்பாள் இப்னு சாரியா (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள் :



இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் பிரசங்கமொன்றை
நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களது இதயங்கள் அச்சத்தினால் நிரம்பின.
எங்களது கண்களில் கண்ணீர் ததும்பியது. நாங்கள்
, ''இறைவனின்
தூதரவர்களே
, இஃது நீங்கள் செய்யும் இறுதி பிரசங்கமாக அல்லவா தென்படுகின்றது. ஆகவே எங்களுக்கு
உபதேசம் செய்யுங்கள்"" என்று கூறினோம். பெருமனா
hர்
(ஸல்) அவர்கள் பின்வருமாறு பகர்ந்தார்கள் :



நான் உங்களுக்கு கூறுகிறேன் : அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
ஒரு அடிமையே உங்களது தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்படுங்கள்.
நிச்சயமாக உங்களில் அதிக நாட்கள் வாழ்பவர்கள் பெரும் வேறுபாடுகளைச் சந்திப்பீர்கள்.
ஆகவே நீங்கள் என்னுடைய நடைமுறைகளையே பின்பற்றுங்கள். அதுபோலவே நேர்வழிகாட்டப்பட்ட
(ராஷிதீன்)
1 கலீபாக்களின் நடைமுறைகளையும் பின்பற்றுங்கள். உறுதியுடன் இவற்றில் நிலைத்திருங்கள்.


மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்படுபவைகள் குறித்து
கவனமாக இருங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்டவைகள் அனைத்தும் நூதன கிரியைகளாகும்.
ஒவ்வொரு நூதன கிரியையும் வழிகேட்டில் ஆழ்த்துவதாகும். வழிகேட்டில் விழுவது நரக நெருப்பில்
தள்ளும். - அபூதாவூத்
,
அத்-திர்மிதி


1. ராஷிதீன் கலீபாக்கள் என்பது முதல் நான்கு கலீபாக்களை (இஸ்லாமிய ஆட்சியாளர்களையும்)
குறிக்கும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 7:27 pm

நபிமொழி - 29


முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
:



அல்லாஹ்வின் தூதரவர்களே, என்னை
நரக நெருப்பலிருந்து காப்பாற்றி
, சுவர்க்கத்தின் பால் இட்டுச்
செல்லும் ஒரு செயல்பற்றி சொல்லித் தாருங்கள் என நான் கேட்டேன். பெருமானார் (ஸல்) அவர்கள்
பின்வருமாறு பதில் தந்தார்கள். நீங்கள் மிகவும் பெரிய விஷயம் ஒன்று குறித்து வினவி
இருக்கின்றீர்கள். இருந்தாலும் அது அல்லாஹ் யாருக்கு எளிதாக ஆக்கி வைத்திருக்கின்றானோ
அவர்களுக்கு மிகவும் எளியதாகும். நீங்கள் அல்லாஹ்வுக்கே அடிமை செய்யுங்கள். அவனுக்கு
இணை எதுவும் வைக்கக் கூடாது. கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நீங்கள் நிலைநாட்ட வேண்டும்.
நீங்கள்
'ஜகாத்" கொடுக்க வேண்டும். ரமளான் மாதத்தில் நோன்பிருக்க வேண்டும். நீங்கள்
இறைஇல்லத்திற்கு புனித பயணம் மேற்கொள்ள வேண்டும். (ஹஜ் செய்ய வேண்டும்).



பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு
நன்மையின் வாசல்களை காண்பிக்க வேண்டாமா
? என வினவி விட்டுச் சொன்னார்கள்.
நோன்பு ஒரு கேடயம்
, நீர் நெருப்பை அணைப்பது போல்; தர்மம் பாவங்களை அழித்தொழிக்கின்றது.
அதுபோலவே இரவின் ஆழத்தில் ஒருரின் தொழுகையும்
, பின்னர்
பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வரும் இறைவசனத்தை ஓதினார்கள்.



''அவர்கள் (இரவில்) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, (எழுந்து
அப்புறப்பட்டு) தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும்
, பயந்தும், (அவனைப்)
பிரார்த்தனை செய்வா
hகள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்த அவர்கள் (தானமாகச) செலவு செய்வார்கள்"".
அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக
, அவர்களுக்காக
(ச் சித்தப்படுத்தி) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிரக் கூடிய (சன்மானத்)தை
எவராலும் அறிந்து கொள்ள முடியாது"" (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்காகச்
சித்தப்படுத்தப்பட்டுள்ளன.) அல்குர்ஆன் (
32:16-17)


பின் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு
இந்த விஷயத்தின் உச்சம் பற்றியும்
, தூண் பற்றியும், தலையாயது
பற்றியும் சொல்ல வேண்டாமா
?""
என்றார்கள். ''இறை
தூதரவர்களே
, ஆம்! சொல்லுங்கள் என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த
விஷயத்தின் உச்சி இஸ்லாம்
,
தூண் என்பது தொழுகை, அதன்
தலையாயது ஜிஹாத்
1 ஆகும் என்றார்கள். பிறகு அவர்கள், இவைகள் எல்லாவற்றையம் கட்டுப்படுத்துவது
குறித்து நான் சொல்ல வேண்டாமா
? என வினவினார்கள். நான் 'இறைவனின்
தூதரவர்களே
, ஆமாம் சொல்லுங்கள்"" என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது நாவை
கரத்தால் பற்றிக் கொண்டு
,
''
இதைக் கட்டுப்படுத்துங்கள்"" என்று
சொன்னார்கள்.



இறைவனின் தூதரவர்களே, நாம்
பேசுவது நமக்கு எதிராகத் திருப்பப்படுமா
? என்று நான் கேட்டேன். அதற்கு
பெருமானார் (ஸல்) அவர்கள்
,
''
உம் தாய் உம்மை காணடித்தார்.2 மனிதர்கள்
தங்கள் நாவால் அறுவடை செய்தவைகளைத் தவிர அவர்களை நரக நெருப்பில் முகங்குப்புற தள்ளக்
கூடியது வெறெதுவும் உண்டா
?""
என்று கேட்டார்கள். - திர்மிதி


1.ஜிஹாத் : ஜிஹாத் என்பதற்கு அறப்போர் அல்லது புனிதப்போர் எனப் பொதுவாக பொருள் கொள்ளப்படுகின்றது.
அதற்கு இன்னும் விரிவான பொருள்கள் உண்டு. இதில் இஸ்லாத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும்
எல்லா முயற்சிகளும் அடங்கும். ஆகவே தான்
'ஜிஹாத்" என்ற அரபிச் சொல்
அப்படியே இங்கு கையாளப்பட்டிருக்கின்றது.



2. ஃதகிலத்க உம்முக. ''தவறான பயனற்ற பேச்சைப் பேச வேண்டாம்!"" என்று கூறுவதற்கு அரபி மொழியில்
இச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக