புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
61 Posts - 46%
heezulia
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
5 Posts - 4%
Raji@123
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
4 Posts - 3%
prajai
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
9 Posts - 2%
prajai
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
6 Posts - 1%
Guna.D
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஆசை என்றொரு அழிவு Poll_c10ஆசை என்றொரு அழிவு Poll_m10ஆசை என்றொரு அழிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை என்றொரு அழிவு


   
   
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Mon Jun 28, 2010 10:43 pm

"ஆசையே அழிவுக்கு காரணம்". - இதை சொல்லாத ஆத்மஞானிகளே கிடையாது. பகவான் கிருஷ்ணரில் இருந்து, இயேசு, புத்தர், மஹாவீரர் என எல்லா பரமாத்மாக்களும், இந்த கருத்தை வலியுறுத்த தவறவில்லை.
ஆசை என்றொரு அழிவு Aasai

ஆடம்பரமான உடைகள் அணிவதில் இருந்து, ருசியான உணவுகள், சொகுசு கார்கள், நகைகள், பதவி, பணம், பங்களா, அழகான பெண்கள், புகழ், ஏன் நல்ல பெயற்கும் கூட ஆசை படுபவர்களை, நம்மை சுற்றியும் பார்க்க முடிகிறது. எதற்கும் ஆசை படாதவர்கள் யாரேனையும் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட நடை முறையில் சாத்தியபடாத ஒன்று என்றே கூறலாம்.

அப்படி "ஆசை" இருந்தால் தான் என்ன? ஆசை தானே, மனிதனை ஒரு இலக்கை நோக்கி அடைய செய்யும் கருவி!. ஆம், ஆசை என்பது ஒரு நல்ல கருவி தான், நம் இலக்குகள் சரியாக இருக்கும் போது மட்டும்... "அத்தனைக்கும் ஆசைப்படு" என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால் ஆசைகள் பரிசுத்தமாய் இருக்கட்டும் என்றும் ஒரு நிபந்தனை!. பள்ளியில் படிக்கும் மாணவன், தான் படித்து பெரிய டாக்டர் ஆக வேண்டும் என்று எண்ணுகிறான் என கொள்வோம். எதற்கு என்று கேட்டால், பொருளிள்ளதவர்களுக்கு, இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு என்று கூறுகிறான். இந்த உயர்ந்த லட்சியம், அவன் மருத்தவன் ஆன பின்பும் தொடர்ந்தால், அவன் படிக்கும் போது கொண்ட "ஆசை", உண்மையிலேயே உயர்ந்தது எனலாம். ஆனால் எத்தனை ஆசைகள் இப்படி ஆரம்பித்த படியே நீடிக்கின்றன?.

"உயர்ந்த ஆசைகள்" என்பதை எப்படி வரையறுக்க முடியும்? பகவத் கீதை, புலன் இன்பங்களில், உயர்ந்த யோகி, பற்று (ஆசை) வைக்க மாட்டான் என்று கூறுகிறது. புலன் இன்பங்கள், மனதுடன் தொடர்பு உடையவை. மனதை கட்டுப்படுத்த முடியாதவனே, புலன் இன்பங்களில் ஆசை வைக்கிறான். இந்த ஐம்புலன்களை மகிழ்ச்சி படுத்தும் செயல்கள் ஆகிய பார்த்தல், கேட்டல், ருசித்தல், நுகர்தல் மற்றும் தொடுஇன்பம் ஆகியவைகளை பொறுத்த ஆசை, தாழ்ந்தவைகள் என்று கூறப்படுகிறது. இந்த புலன் இன்ப ஆசைகள், எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என பகவத் கீதை கீழ் படி கூறுகிறது.

"த்யாயதோ விஷயான்பும்ஸ: ஸங்கஸ்தேக்ஷுபஜாயதே
ஸங்காத்ஸஞ்சயாதே காம: காமாத்க்ரோதோபிஜாயதே" (2.62 )

"க்ரோதாத்பவதி ஸம்மோஹா: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்சாத் புத்திநாசோ புத்திநாசாத்ப்ர்ணச்யதி" (2.63)

சதா உலக விசயங்களை யோசித்து கொண்டு இருக்கும் மனிதனுக்கு அதில் பற்று உண்டாகிறது. பற்றினால் ஆசை ( காம: ) உண்டாகிறது. ஆசையினால் கோபம் உண்டாகிறது. கோபத்தால் மனக்குழப்பம் ஏற்படுகிறது. மனக்குழப்பத்தால் நாம் பெற்ற "புத்தி" யில் நாசம் உண்டாகிறது. புத்திநாசம் (அறிவு அகன்ற நிலை) ஏற்பட்டவனுக்கு நன்மை எனபது ஏது?

இவ்வாறு, இந்த இரண்டு ஸ்லோகங்கள் பொருள் தருகின்றன. எத்தனை ஆழமான ஆராய்ச்சி!!!. அடிப்படையை ஆராய்ந்து அதன் முடிவு வரை விளக்குகிறது, இந்த ஸ்லோகங்கள். அக ஆராய்ச்சியில் நிலை கொண்டவன், உலக விஷயங்களுக்காக பெரிதாக அலட்டி கொள்வதில்லை. மேலும் அவன் தன் ஆத்ம சுகம் ஒன்றையே உயர்வென கருதுகிறான், போன்ற விளக்கங்கள் உண்மையில் உலக பொருட்களுக்கான ஆசைகள் துச்சமானவைகள் தான் என ஆணித்தரமாய் கூறுகிறது.

ஆசைகள், உண்மையில் எதிர்பார்ப்புகளை தூண்டி விடுகிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது, கோபம் வருகிறது. பின் அதன் வழியாக அனைத்து கெட்ட எண்ணங்களும், நம் உள் புக ஆரம்பிக்கின்றன. உலகெல்லாம் ஒளி விடும் சூரியனை, கையாலோ, பிற பொருட்களாலோ மறைக்க நினைப்பதை விட, நம் கண்களை மட்டும் மூடி கொள்வது புத்திசாலி தனம் அல்லவா. அது போல, ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட துடிப்பதை விட, ஆசைகளையே அடக்குவது தான் மிகவும் சிறந்தது என நினைக்கிறேன்.

தன் வாழ்நாளில் எப்படியாவது ஒரு சைக்கிள் மட்டும் வாங்கி விட்டால் போதும் என்ற ஒருவனது ஆசை, அடுத்து அவன் சைக்கிள் வாங்கிய பின், மோட்டார் சைக்கிள், கார் என அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. உண்மையில் அவனுக்கு மோட்டார் சைக்கிள் அல்லது கார்களுக்கான தேவை இல்லாவிடினும் அவற்றை அடைய நினைக்கும் ஆசையில், அவனே தன்னை துன்பத்தில் ஆட்படுத்தி கொள்ள விழைகிறான். இவ்வாறு தேவைக்கு மேல் உள்ள ஆசைகளின் பிடியில் சிக்காதவர்கள் உண்மையில் எத்தனை பேர்? ஆசைக்கு அளவு தான் ஏது?

வாழ்க்கையில் துன்பம் அற்று வாழ்வதற்கு, புத்தர் நான்கு உண்மை கோட்பாடுகளை குறிப்பிடுகிறார். அவை,
எல்லா உயிர்களும் துன்பத்தை உள்ளடக்கியவை.
எல்லா துன்பங்களும், ஆசைகளில் இருந்து உண்டானவை.
எல்லா துன்பங்களும், ஆசைகளை அகற்றும் போது முடிகின்றன.
அதனால் எல்லா துன்பங்களுக்கும் முடிவு காண வழி (ஆசைகளை அகற்றுதல்) உள்ளது.
எத்தனை சிறந்த கருத்துகள்.

"ஆசையே அழிவு" என்று பரமாத்மா மகாவீரரும் குறிப்பிடுகிறார். அவர் ஒரு நாள், காட்டில் தவம் செய்து கொண்டு இருக்கும் போது, குளிரால் நடுங்கி கொண்டு இருந்த ஒரு ஏழையை பார்த்தார். தான் அணிந்து இருந்த வஸ்திரத்தின் பாதியை கிழித்து கொடுத்து அந்த எளியவனுக்கு உதவி செய்தார். அந்த ஏழை, மகாவீரர் அளித்த அந்த துணி மிகவும் விலை உயர்ந்தது என தெரிந்த கொண்ட படியால், மீதி பாதியையும் அவரிடம் இருந்து பெற்று விட வேண்டும் என ஆசை கொண்டான். மீதி பாதியை, அவரிடம் கேட்டு பெற்று விடலாம் என, மகாவீரர் இருக்கும் இடத்திற்கு சென்றான். அப்போது அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதிர்ஷ்ட வசமாக, மீதி பாதி துணியும் கீழே விழுந்து கிடந்தது. "கேட்டு பெற வேண்டும்" என்று கிளம்பியவன், ஆசை மிகுதியால், அவருக்கு தெரியாமலேயே அதை அடைந்து விட எண்ணினான். இங்கே, "அகங்காரம்", அல்லது "நற்பெயருக்கான ஆசை" புதிதாக அவனிடம் எட்டி பார்த்து விட்டது. அதாவது, "நான் இவரிடம் கேட்டு பெற வேண்டுமா?" என்ற அகங்காரமோ, அல்லது, "மறுபடியும் இவரிடம், மீதி துணியை கேட்டால், இவர் என்னை தப்பாக நினைக்க கூடும். எனவே தெரியாமல் எடுத்து சென்றால் அவர் என்னை தப்பாக நினைக்க மாட்டார்" என்ற "நற்பெயருக்கான" ஆசையோ அவனிடத்தில் புதிதாக தோன்றியது. எனவே, திருட துணிந்தான். திருடிய பின், காலில் முள் குத்தியதால் சத்தம் போட மகாவீரர் விழித்து கொண்டார். இந்நிலையில் சிறிதும் கோப படாத மகாவீரர், "இந்த மீதி பாதி துணியில் நான் கொண்ட ஆசை அல்லவா, இவனை திருடனாக மாற்றியது" என்று நினைத்து வருந்தினாராம். எத்தனை பெரிய ஞான நிலை!!!.

உண்மையில் ஆசைகளை, நாம் நமக்காக மட்டுமே உருவாக்கி கொள்வதில்லை. அவைகள் நம்மில் இருந்து நம் பரம்பரைகள், அல்லது நம்மை சார்ந்தவர்கள் என எல்லோரிடமும் விதைத்து கொண்டும் தான் இருக்கிறோம். நான் மருத்துவன் ஆக முடியவில்லை என்பவன், தன் மகனை எப்படியும் டாக்டர் ஆக்கி விட வேண்டும் என்ற முனைப்பில், சில தவறேனும் (பணம் கொடுத்து) செய்து தன் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்த்து விடுகிறான். ஆனால் உண்மையாக அந்த படிப்பை பெற வேண்டிய ஒரு மாணவனது ஆசைகள் அடக்கப்பட்டு, அங்கே அடுத்த ஆசைக்கான விதை விதைக்கப்படுகிறது. அந்த ஆசைகள் நிறைவேறாத மாணவன், அடுத்து தன் வாரிசு மூலம் விட்டதை அடைய நினைக்கிறான். அல்லது தன் நிலைக்கு மாற்றான ஒரு தவறான வழியை கையில் எடுத்து ஆசைகள் அடங்காத கோபத்தை பிறர் இடத்தில் காட்டுகிறான். எனவே ஆசை எந்த வகையிலும் நம்மை மட்டும் பாதிப்பவை அல்ல. அவைகள் பிறரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்க வல்லது. "கோபம், வக்கிரம் போன்ற புதல்வர்களை பெற்ற அன்னை - ஆசை" என்று ஒரு சொல்லும் உண்டு.

ஆசையை உண்மையில் அடக்குவது என்பது ஒரு மிக பெரிய கலை. இதை நம்மால் தனியே நின்று சாதிப்பது என்பது மிகவும் கடினம். "கடவுள் பக்தி" என்ற ஒரு நண்பனின் உதவி கொண்டே அதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். நண்பர்களே, ஆசை என்பதே இல்லாத வாழ்க்கை வாழ முடியா விடினும், முடிந்த வரை தேவைகளுக்கு மட்டுமே ஆசை கொள்ள முயலுவோம். படிப்பதையும், நினைப்பதையும் செயல்முறை படுத்தும் சக்தியை, எல்லாம் வல்ல இறைவன் நமக்கு கொடுத்து துணை புரிவாராக ("தெய்வ பக்தி" இல்லாத நண்பர்கள் எனின் மன உறுதியை, இறைவன் என பொருள் கொள்க).

"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்" (கிருஷ்ணா - கிருஷ்+ந. "கிருஷ்"- சுழற்சியான பிறப்புகள். "ந" - நிறுத்துபவன்)

* இந்த செய்தியை ஆன்மீகவாதியாக பார்க்காவிட்டாலும் நம்முள் நாம் நினைத்து பார்த்தல் நன்றாக தெரியும் ஆசை எவ்வளவு துன்பத்தை தரும் என்று, எனக்கு கிடைத்த செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி.

* எந்த இடத்திலும் மதரீதியாக எதையும் பாராமல் மன மற்றும் மனித ரீதியாக பார்த்து, துன்பம் அளிக்காத வகையில் பதில் அளிப்பதே மனித நேயம்
தொகுப்பு கிடைத்த இடம்: http://spiritual-messages.blogspot.com/

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jun 28, 2010 11:16 pm

ஆசை என்றொரு அழிவு 677196 ஆசை இல்லாதவன் முன்னேற முடியாதுனு சொல்றாங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆசை என்றொரு அழிவு Ila
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue Jun 29, 2010 8:17 am

நண்பரே நீங்கள் சொல்வதும் சரி தான். உங்கள் கேள்விக்கு பதில் கடைசி நான்கு
வரிகள் தான்
" ஆசையை உண்மையில் அடக்குவது என்பது ஒரு மிக பெரிய கலை. இதை நம்மால் தனியே
நின்று சாதிப்பது என்பது மிகவும் கடினம். "கடவுள் பக்தி" என்ற ஒரு நண்பனின்
உதவி கொண்டே அதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். நண்பர்களே, ஆசை
என்பதே இல்லாத வாழ்க்கை வாழ முடியா விடினும், முடிந்த வரை தேவைகளுக்கு
மட்டுமே ஆசை கொள்ள முயலுவோம். படிப்பதையும், நினைப்பதையும் செயல்முறை
படுத்தும் சக்தியை, எல்லாம் வல்ல இறைவன் நமக்கு கொடுத்து துணை புரிவாராக
("தெய்வ பக்தி" இல்லாத நண்பர்கள் எனின் மன உறுதியை, இறைவன் என பொருள்
கொள்க). "

ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue Jun 29, 2010 8:22 am

நம்மை நாமே செதுக்கி கொள்ளுதல் தான் இதற்க்கு சரியான தீர்வு, சுவாமி
விவேகனந்தரின் புத்தகங்களை ஒரு முறை படித்து உணர்த்தல் போதும் அணைத்து
அன்பு, பண்பு, தியாக குணம், பயமின்மை, இது போன்ற பல கேள்விக்கு நம்மிடமே
பதில் உள்ளது, நேரம் கிட்டினால் எமது நண்பர்கள் சுவாமிஜி புத்தகத்தை
புரட்டி பார்க்கவும். நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக