புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
26 Posts - 39%
prajai
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
2 Posts - 3%
Jenila
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
1 Post - 2%
M. Priya
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
6 Posts - 5%
prajai
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
5 Posts - 4%
Rutu
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
3 Posts - 2%
Jenila
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
2 Posts - 2%
viyasan
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
1 Post - 1%
M. Priya
இயற்கை அழிவு Poll_c10இயற்கை அழிவு Poll_m10இயற்கை அழிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை அழிவு


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 19, 2010 1:06 am

சுனாமி


சுனாமி அல்லது கடற்கோள்அல்லது ஆழிப்பேரலை (யப்பானிய மொழி: ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைக் தொடர்களைக் குறிக்கும். பூமி அதிர்ச்சி, மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.

ஏற்படும் முறை
பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.
2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.

சுனாமி வரும் முறை
1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
2. கடலாழ பூகம்பத்தினால் வரும்.
3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.

சுனாமி எச்சரிக்கை அமைப்பு:
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.
இயற்கை அழிவு 250px-tsunami_comic_book_style
இயற்கை அழிவு 250px-tsunami-kueste.01.vm

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 19, 2010 1:07 am

எரிமலை


எரிமலை (Volcano) எனப்படுவது புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்பு, சாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துவாரம் அல்லது வெடிப்பு ஆகும். மலைகள் அல்லது மலைகள் போன்ற அம்சங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும் மேலாக உருவாக்கும் விதமாக பாறைகளை வெளித்தள்ளும் நிகழ்வோடு எரிமலை நடவடிக்கை சம்பந்தப்பட்டுள்ளது. "வால்கனோ" (volcano) என்ற வார்த்தை இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்ட ரோமானியர்களின் நெருப்புக்கடவுளான வால்கன் என்பவரது பெயராகும்.

பொதுவாக டெக்டோனிக் அடுக்குகள் விலகுகின்ற அல்லது நெருங்குகின்ற இடத்தில் எரிமலைகள் காணப்படுகின்றன. ஒரு மத்திய-கடல் மலைமுகடு, உதாரணத்திற்கு மத்திய அட்லாண்டிக் மலைமுகடு, டெக்டோனிக் அடுக்குகள் விலகிச் சென்றதால் ஏற்பட்ட எரிமலைகளுக்கு உதாரணங்களாக உள்ளன; பசிபிக் நெருப்பு வட்டம் டெக்டோனிக் அடுக்குகள் நெருங்கிவந்து ஒன்று சேர்ந்ததற்கான உதாரணங்களாக உள்ளன. முரண்பாடாக, டெக்டோனிக் அடுக்குகள் ஒன்றின் மேல் ஒன்று சாய்ந்திருக்கும் நிலையில் வழக்கமாக எரிமலைகள் உருவாவதில்லை. பூமி ஓடு நீண்டுசெல்கின்ற அல்லது மெலிதடைகின்ற இடங்களிலும் எரிமலைகள் உருவாகின்றன ("இது வெப்பப் பகுதி அல்லாத இண்ட்ராபிளேட் எரிமலை நிகழ்வு" எனப்படுகிறது), அவை ஆப்ரிக்க ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள "வெல்ஸ்-கிரே கிளியர்வாட்டர் எரிமலைப் பகுதி", வட அமெரிக்காவில் உள்ள ரியோ கிராண்ட் ரிஃப்ட் மற்றும் ஐரோப்பாவில் ஈஃபிள் எரிமலைகளுடன் உள்ள ரைன் கிரெபன் பகுதி போன்றவை.

வெப்பப்பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலைகள் உருவாகின்றன. இத்தகைய வெப்பப்பகுதிகள் எனப்படுபவை, உதாரணத்திற்கு ஹவாயில் உள்ளவை அடுக்கு எல்லையின் அப்பாலிருந்து உருவாகக்கூடியவை. வெப்பப்பகுதி எரிமலைகள் சூரியமண்டலத்திl உள்ள அனைத்திலும் காணப்படுகின்றன, குறிப்பாக பாறை கிரகங்கள் மற்றும் நிலவுகள்.

விலகிச்செல்லும் அடுக்கு எல்லைகள்
மத்திய-கடல் முகடுகளில் இரண்டு டெக்டோனிக் அடுக்குகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகுகின்றன. வெப்பமான உருகிய பாறையால் உருவாகின்ற புதிய கடல் மேல்புறப்பகுதி மெதுவாக குளிர்ந்து கெட்டியாகிறது. டெக்டோனிக் அடுக்குகள் இழுப்பதன் காரணமாக மத்திய-கடல் முகடுகளில் உள்ள மேல்அடுக்கு மிகவும் மெலிதாக இருக்கிறது. மேல்அடுக்கு மெலிதாவதன் காரணமாக வெளிப்படும் அழுத்தம் வெப்பநிலை மாறாத நீட்டிப்பிற்கு வழிவகுக்கிறது, மெல்லிய அடுக்கின் ஒரு பகுதி உருகுவது எரிமலை நிகழ்விற்கும் புதிய கடல் மேல்அடுக்கு உருவாவதற்கும் காரணமாகிறது.

பெரும்பாலான விலகல் அடுக்கு எல்லைகள் கடல்களுக்கு அடிப்பகுதியில் இருக்கின்றன, எனவே பெரும்பாலான எரிமலை நிகழ்வுகளும் கடலுக்கு கீழ்ப்புறம், புதிய கடல்தளத்தை உருவாக்குவதாக இருக்கின்றன. அதிவெப்ப துளைகள் அல்லது ஆழ்கடல் துளைகள் என்பவை இவ்வகையான எரிமலை நிகழ்விற்கான உதாரணமாகும்.மத்திய-கடல் முகடு கடல்மட்டத்திற்கு மேல்பகுதியில் இருக்குமிடத்தில் எரிமலைத் தீவுகள் உருவாகின்றன, உதாரணம்: ஐஸ்லாந்து.

விலகல் அடுக்கு எல்லைகள்
ஒன்றன்மேல் ஒன்றுள்ள அடுக்குகள் என்பவை இரண்டு அடுக்குகள், வழக்கமாக கடல் அடுக்கு மற்றும் கன்ட அடுக்குகள் மோதிக்கொள்ளும் இடங்களாகும். இந்த நிகழ்வில், கடல் அடுக்கு ஒன்றன்மேல் ஒன்று அடுக்கப்படுவது, அல்லது கன்ட அடுக்கிற்கு கீழே ஒன்றோடு ஒன்று கலந்துவிடுவதால் கடற்கரைக்கு அருகாமையில் ஆழ்கடல் அகழி ஒன்றை உருவாக்கிவிடுகின்றன.

ஒன்றன்மேல் ஒன்றுள்ள அடுக்கால் வெளியேற்றப்படும் தண்ணீர் மேல்பகுதியில் இருக்கும் மெல்லிய குறுக்கு அடுக்கின் உருகும் வெப்பநிலையைக் குறைத்து கற்குழம்புகளை (மாக்மா) உருவாக்குகிறது.

இந்த மாக்மாவானது அதனுடைய உச்சபட்ச அளவு சிலிக்கான் காரணமாக தொடர்ந்து மிகவும் பி்சுபிசுப்பாகவே இருப்பதால் மேல்பகுதியை எட்டாமலும் அடிப்பகுதியை குளிர்விக்காமலும் இருந்துவிடுகிறது.

இது மேல்பகுதியை எட்டும்போது எரிமலை உருவாக்கப்படுகிறது.
இந்தவகையான எரிமலைக்கு எட்னா எரிமலை மற்றும் பசிபிக் நெருப்பு வளையத்தில் உள்ள எரிமலைகளே வகைமாதிரி உதாரணங்களாகும்.

வெப்பப் பகுதிகள்
வழக்கமாக வெப்பப் பகுதிகள் டெக்டோனிக் அடுக்குகளில் காணப்படுவதில்லை, ஆனால், பூமியின் மற்ற பகுதிகளைவிட மெலிதாகும் விதமாக மேல்அடுக்குப் பகுதியை எட்டும்வரை பூமியின் மெல்லிய அடுக்கினுடைய வெப்பச் சலனம் உருவாக்குகின்ற ஒரு வெப்பமான தூண் மேல்நோக்கி வரும் இடத்தில் காணப்படுகின்றன.மேல்நோக்கி வரும் பாறைகள் மேல்ஓடு உருக காரணமாவதோடு மாக்மா வெளியேறும் துவாரங்களையும் உருவாக்குகின்றன.

டெக்டோனிக் அடுக்குகள் நகரும்போது மேல்நோக்கி வரும் பாறைகள் அதே இடத்தில் இருக்கும் நிலையில், அதன்பிறகு ஒவ்வொரு எரிமலையும் அப்படியே இருந்துவிடுகிறது, பின்னர் வெப்பப் பகுதிக்கு மேலாக அந்த அடுக்கு நகர நகர புதிய எரிமலை உருவாகிறது.
இந்த வகையில்ஹவாய் தீவுகள் உருவானதாக கருதப்படுகிறது, அதேபோல் தற்போது யெல்லோஸ்டோன் கால்டிராவுடன் உள்ள பாம்பு ஆற்றுப்படுக்கை வெப்பப் பகுதிக்கு மேல்புறமாக உள்ள தென் அமெரிக்க அடுக்கின் பகுதியாக உள்ளது.

இயற்கை அழிவு 180px-volcanic_injection.svg
இயற்கை அழிவு 180px-denglersw-stromboli-20040928-1230x800
இயற்கை அழிவு 200px-volcano_scheme.svg

சுழல்வடிவ எரிமலையின் குறுக்குவெட்டு தோற்றம்
(நெடுகிடை அளவுகோல் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது) :

1. பெரிய மாக்மா அறை
2. அடிநிலப்பாறை
3. கால்வாய் (குழாய்)
4. அடித்தளம்
5. சில்
6. அகழி
7. எரிமலையால் உமிழப்படும் சாம்பல் அடுக்குகள்
8. பக்கவாட்டுப் பகுதி
9. எரிமலையால் உமிழப்படும் எரிமலைக்குழம்பு அடுக்குகள்
10. கழுத்துப்பகுதி
11. சுற்றுப்புறக் கூம்பு
12. எரிமலைக்குழம்பு ஓட்டம்
13. வெளியேறும் பகுதி
14. எரிமலைவாய்
15. சாம்பல் மேகம்
இயற்கை அழிவு 300px-mtcleveland_iss013-e-24184

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக