புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?		 Poll_c10"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?		 Poll_m10"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?		 Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?		 Poll_c10"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?		 Poll_m10"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?		 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?

msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Sat Jun 26, 2010 8:20 am

"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?
ஐயமும்-தெளிவும் -

பதில்:

“அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு, எந்த ஆயுதம் இரத்தத்தை ஓட்டச் செய்யுமோ அதன் மூலம் அறுக்கப்பட்டதைப் புசியுங்கள். பல்லாகவோ, நகமாகவோ அந்த ஆயுதம் இருக்கக் கூடாது” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ராஃபிவு பின் கதீஜ் (ரலி), நூல் : புகாரி 2488, 2507, 3075, 5498, 5503, 5506, 5509, 5543, 5544

பல், நகம் தவிர கருவி எதுவானாலும் பிரச்சினையில்லை. இரத்தத்தை ஓட்டச் செய்யவேண்டும் என்பதும், அறுக்கப்படும் பிராணியைச் சித்திரவதை செய்யாமல் அறுக்க வேண்டும் என்பதும் தான் நிபந்தனையாகும்.

அதேபோல அறுபடும் பிராணியின் இரத்தம் முழுமையாக அதன் உடலில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முக்கியமான நிபந்தனை தலை துண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதும் ஆகும். எல்லா உயிரினங்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதற்கான ஆதாரமாக பின்வரும் ஹதீஸைக்காணலாம்.

.... நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹிதாத் இப்னு அவ்ஸ்(ரலி) ஆதார நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா (3170))

மேலும்,

ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

அறுக்கும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறப்படுவதும், இரத்தம் ஓட்டப்படுவதும் தான் நிபந்தனை. இந்த இரண்டு நிபந்தனைகளும் பேணப்பட்டு பல், நகம் தவிர வேறு எவ்விதமான கருவிகளை உபயோகித்து அறுக்கப்படும் பிராணிகளையும் உண்ணலாம்.

அம்பு எய்து வேட்டையாடும் போது அம்பு பிராணியைக் கொன்றால் அந்த அம்பு பிஸ்மில்லாஹ் கூறி விடப்பட்டிருக்குமானால் அதை உண்ணலாம் என நபிகள்
நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல் : புகாரி 5478, 5488, ௫௪௯௬

"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?		 Restrainer"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?		 Restrainer

ஆனால் கில்லட்டின் (படம் காண்க) கருவி மூலம் வெட்டப் படும் பிராணியின் தலை ஒரே வெட்டில் துண்டாக்கப்படும் என்பதாலும், இரத்தம் முழுமையாக ஓட்டப்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லாத காரணத்தாலும் இது போன்ற கருவிகளால் வெட்டப்படும் பிராணிகளைச் சாப்பிடுதல் கூடாது.

தற்போதைய அறிவியல் வளர்ச்சியினால், ஹலாலான முறையிலும் மேற்கண்ட கருவிகள் மூலம் பிராணிகளை அறுப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, சில வழிமுறைகள் பேணப் படுகின்றன. இவ்வகை வழிமுறைகள் பேணப் படுவது உறுதியாகத் தெரியும் பட்சத்தில் மட்டுமே இவ்வகைக் கருவிகளால் அறுக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சியை உண்ணலாம்.

இறைவன் மிக்க அறிந்தவன்.

மேலதிக விபரங்கள் வேண்டுவோருக்காக, மருத்துவரும் பிரபல இஸ்லாமியப் பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கத்தை இங்கே தருகிறோம்.

"ஸபிஹா" என்றழைக்கப்படும் - இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பெரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் - மேற்படி பொருள் குறித்து - ஒரு சீக்கியருக்கும் - ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த ஒரு நகைச்சுவையான கற்பனை உரையாடலை கீழே காணலாம்.

சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார் - நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது - அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு - கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் - நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து - சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்?.

மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்லர். நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று.

மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் - "ஷாபிஹா" என்றழைக்கப்படும் - இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம்தான் மனிதத்தன்மை உள்ளது மற்றும் அறிவியல் ரீதியாகச் சிறந்த முறை என்பதை கீழ்க்காணும் விபரங்கள் நமக்கு தெரிவிக்கும்.

இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.

அரபிமொழியில் "ஸக்காத்" என்றால் "தூய்மை" என்ற பொருள். மேற்படி சொல்லிலிருந்து "ஸக்கய்தும்" (தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுப்பதற்கு கீழக்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும். கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு - மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

B. "ஸபிஹா" என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று பொருள்படும். மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம், அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடம் துண்டிக்கப்படுவதால் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இதயம் திடீரென நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள்ள இரத்தம் இரத்த நாளங்களிலேயே தங்கிவிடக் கூடும்.

D. இறைச்சியில் நோய்க்கிருமிகள் உருவாகக் காரணமாக அமைவது ஓட்டப்படாத இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது, கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு பெருமளவு குறைக்கப்படுகிறது.

E. கால்நடைகளின் கழுத்திலிருக்கும் இரத்ததக்குழாயும், சுவாசக்குழாயும் மிக வேகமாக அறுக்கப்படுவதால், இரத்தம் அனிச்சைச் செயலாக அப்பகுதிக்கு விரைவாக அனுப்பப்படுகிறது. இதனால் வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்புமண்டலம் இச்செயலுக்கான கட்டளைப் பொதியைச் சுமப்பதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

F. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது, கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால், உடலில் உள்ள சதைப்பாகங்கள் இரத்த இழப்பால் சுருங்கி விரிவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் துள்ளுவதாகவும், துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதே தவிர வலியால் அல்ல.

அல்லாஹ் மிக அறிந்தவன்.
நன்றி: சத்திய மார்க்கம்http://www.satyamargam.com/120

"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?		 Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 26, 2010 10:54 am

மிகவு்ம் பயனுள்ள அருமையான தகவல் நன்றி.

"கில்லட்டின்" கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?		 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக