புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
24 Posts - 69%
heezulia
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
7 Posts - 20%
mohamed nizamudeen
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
1 Post - 3%
Balaurushya
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
1 Post - 3%
Barushree
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
1 Post - 3%
kavithasankar
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
78 Posts - 80%
heezulia
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
2 Posts - 2%
prajai
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
1 Post - 1%
Barushree
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_m10ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 24, 2010 9:24 am

பெயருக்குப் பொருத்தமாகவே அணைப்பட்டி என்ற அக்கிராமத்தில் ஒரு சிற்றணை உள்ளது. இயற்கை எழிலுக்கு மேலும் வனப்பூட்டும் பச்சை வயல்வெளிகள் மதுரையை அடுத்த அவ்வூருக்கு செழிப்பான பூமி என்று சான்றளித்தது. ஆனால் உண்மையில் பலர் அங்கே போதிய எழுத்தறிவின்றி வறுமையில் உழன்று கொண்டிருந்தனர். 1989ம் ஆண்டில் அங்கோர் புதுமையான நிகழ்ச்சி. தாய்மார்கள் ஒரு மழைலையர் பள்ளி முன்பு அணியணியாக அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்பு ஒரு வானொலிப்பெட்டி. அதுதான் அந்நிகழ்ச்சியில் முக்கிய நபர். டிவிக்களின் படையெடுப்பு கிராமங்களை எட்டிப்பார்க்காத காலமது. ``போலியோ நோய்க்கு பெரிதும் காரணம் பெற்றோரே’’ என்ற தலைப்பில் வழக்காடுமன்ற நிகழ்ச்சி அதில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று அந்நிகழ்ச்சியில் வார்த்தைகளை அம்பாகத் தொடுத்துக் கொண்டிருந்தது. "என் அப்பா அம்மா எனக்கு உரிய நேரத்தில் சொட்டு மருந்து கொடுத்திருந்தால் நான் இன்று இப்படி முடமாகிப் போயிருப்பேனா?" என்று நடுவரைக்கேட்டு, எதிர் வழக்காடுபவரைத் திக்குமுக்காடச் செய்தது. கேட்டுக்கொண்டிருந்த அணைப்பட்டித் தாய்மார்கள் மத்தியில் முழு நிசப்தம். நடுவரின் முடிவு என்னவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரின் முகத்திலும் தெரிந்தது. தாம் எந்தப் பக்கத்திற்குச் சாதகமாக இருக்கிறோம் என்பதை அதுவரை எள்ளளவும் வெளிப்படுத்தாமலேயே நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்திக் கொண்டிருந்த நடுவர், இறுதியில் ``பெற்றோரின் அலட்சியமே போலியோவுக்குக் காரணம்’’ என்று தீர்ப்பளித்தார். தாய்மார்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். ஆனால், ஒரேயரு தாய்மட்டும் விசும்பியவாறு அமர்ந்திருந்தார். அணையுடைத்த வெள்ளமாக அவர் கண்களில் கண்ணீர். தாரைதாரையாக வடியும் அக்கண்ணீரை காரணம் புரியாமல் ஒருவிதக் கலவரத்துடன் உற்று நோக்கியது அவர் கையிலிருந்த இரண்டு வயது பிஞ்சுக் குழந்தை. அதனைக் கண்டதும் தாயின் அழுகைக்குக் காரணம் புரிந்தது. போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமாகிப்போன குழந்தையது.

சோகம்தான். தன் குழந்தையின் வயதையத்த இதர மழலையர் குதூகலத்துடன் ஓடியாடி விளையாடும்போது, தனது குழந்தை மட்டும் எட்டி நின்று வேடிக்கை பார்ப்பது என்றால் வேதனைதானே. தடுக்கக்கூடிய நோய்தான் அது. ஆனால், பாதிக்கப்பட்டு விட்டால் பின்னர் மீள்வதற்கு வழியில்லை. வருமுன் காப்பது மட்டுமே தற்போது இருக்கும் ஒரேவழி. போலியோ என்னும் இளம்பிள்ளை வாதநோயின் விளைவுகள் மிகவும் கொடுமையானவை. ஆனால், அதனை சொட்டு மருந்திட்டுத் தடுப்பது சுலபம். அதனைப் பயன்படுத்தி பல நாடுகளில் இந்நோயே கிடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். இந்தியா உட்பட ஏழு நாடுகளில் மட்டும்தான் போலியோ நோயின் தாக்கம் தற்போது உள்ளது. நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து, நைஜர், சோமாலியா ஆகியவை இந்நோய்த்தொற்று காணப்படும் இதர நாடுகளாகும்.

போலியோ நோய்க்கான சொட்டு மருந்து முதன் முதலில் ஜோனாஸ் சால்க் என்னும் அறிவியலாளரால் 1955ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதுவரை உலகம் முழுவதும் சுமார் 50 இலட்சம் குழந்தைகளின் ஊனத்திற்கும் உயிரிழப்புக்கும் போலியோ மையலிடிஸ் வைரஸ் காரணியாக இருந்து வந்தது. ஊசிமூலம் செலுத்தப்படும் ஜோனாஸ் சால்க்கின் இந்த தடுப்பு மருந்தைவிட சக்தி வாய்ந்த சொட்டு மருந்து 1962ம் ஆண்டு ஆல்பர்ட் சாபின் என்பவரால் உருவாக்கப்பட்டது. அதன்பின்பு இந்நோயின் தாக்கம் வேகவேகமாகக் குறைந்துகொண்டே வந்தது.

1988ம் ஆண்டில் போலியோவை ஒழிப்பதற்கு உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இந்நோய் அமெரிக்கக் கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக 1994ஆம் ஆண்டிலும், ஐரோப்பாவில் 2002லும் சான்றளிக்கப்பட்டது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்புவரை இந்நோய்க்கிருமிகள் சீனாவில் ஆண்டுக்கு பத்தாயிரத்துக்கும் மேல் குழந்தைகளை முடக்கிப்போட்டு வந்தது. ஆனால் இன்று சீனாவிலும் போலியோவுக்கு விடைகொடுத்தாயிற்று. ஆப்பிரிக்க கண்டத்தில்கூட பல நாடுகளில் போலியோ கிடையாது. பொதுவாக ஒரு ஆண்டில் முதன் முறையாக எந்தக் குழந்தைக்கும் போலியோ பாதிப்பு ஏற்படாதிருந்தால், அதைத்தொடர்ந்து வரும் மூன்றாண்டுகளுக்கு கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அம்மூன்றாண்டுகளிலும் எந்தக்குழந்தைக்கும் இந்நோய் தொற்றாத நிலை ஏற்பட்டால், அந்நாடு அக்கிருமிகள் இல்லாத நாடாக சான்றளிக்கப்படுகிறது.

இதனை உருவாக்கும் வைரஸ் கிருமிகள் குழந்தைகளின் வாய்வழியாக உடலில் புகுகிறது. குழந்தைகளின் குடலில் அமர்ந்து கொண்டு அவை வேகவேகமாகப் பெருகுகின்றன. பின்னர் அவர்களின் மலத்துடன் அக்கிருமிகள் வெளியேறி, மண்ணிலோ நீரிலோ கலந்து, பிற குழந்தைகளை சென்று சேர்கின்றன. சில குழந்தைகளிடம் அவை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமலேயே வெளியேறி விடுகின்றன. ஆனால் சில குழந்தைகளின் உடலில் அவை இரத்தத்துடன் கலந்து, பின்பு நரம்பு மண்டலத்தை அடைகின்றன. அதைத்தொடர்ந்து மூளை, தண்டுவடம் போன்ற முக்கியமான உறுப்புகளைத் தாக்கி, அவர்களின் கால் கைகளை முடக்கி விடுகின்றன. இந்நோய்க்கு அறிகுறிகளாக மருத்துவர்கள் காய்ச்சல், வாந்தி, சோர்வு, தலைவலி போன்றவற்றை குறிப்பிடுகிறார்கள். ஆனால் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொண்ட குழந்தைகள் இந்நோய் குறித்து பயமடையத் தேவையில்லை. ஏனெனில் அச்சொட்டு மருந்து அக்குழந்தையின் குடலில் போலியோ வைரசை தங்கவிடாமல் மொத்தமாக வெளியேற்றிவிடுகின்றன.

ஆனால் ஒரு ஊரில் சில குழந்தைகள் மட்டும் போலியோ சொட்டு மருந்து எடுத்து, பிற குழந்தைகள் எடுக்காமலிருந்தால், மருந்து எடுத்துக்கொள்ளாத குழந்தைகளுக்கு அந்நோய்க் கிருமியின் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். குறிப்பாக, சுகாதார வசதிகள் இல்லாத நெரிசலான கிராமங்களிலும் குடிசைப்பகுதிகளிலும் இதற்கான அபாயம் மிகவும் அதிகம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். நாடுமுழுவதும் குழந்தைகள் ஒரேநாளில் சொட்டு மருந்து எடுத்துக்கொண்டால் அக்கிருமிகள் அனைவரின் உடலிலிருந்தும் ஒரே நேரத்தில் மடிந்து வெளியேறிவிடும். ஆனால் அப்பகுதியில் சொட்டு மருந்து எடுக்காத குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களின் உடலில் காணப்படும் உயிருள்ள போலியோ வைரஸ் வெளியேறி, மீண்டும் பிற குழந்தைகளையும் வந்தடைந்துவிடும். எனவே ஒரு குழந்தைகூட விடுபடாமல் ஒரே நாளில் நாட்டின் அனைத்துக் குழந்தைகளும் சொட்டு மருந்து எடுப்பது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே 60 இலட்சம் குழந்தைகள் பிறக்கும் இந்தியாவில் இவ்வாறு எந்தக்குழந்தையும் விடுபடாமல் சொட்டு மருந்து எடுக்கச் செய்வது அத்தனை எளிதல்ல என்று சிலர் கூறினாலும், இப்போதைய நிலையைவிட எழுத்தறிவிலும் பொருளாதாரத்திலும் குன்றியிருந்த காலத்திலேயே பெரியம்மை நோயை ஒழித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அந்நோயைப் போலவே போலியோவுக்கும் விடை கொடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக போலியோ பாதிப்பே இல்லாத நிலை பலமாதங்களாக இருந்தபோதிலும் திடீரென 2003 டிசம்பரில் திருச்சி, சென்னை நகரங்களில் தலா ஒரு குழந்தைக்கு இப்பாதிப்பு தொற்றிக்கொண்டது. போலியோவின் தாக்கம் உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களிலேயே அதிகம் காணப்படுகிறது. எனவே இம்மாநிலங்களிலும், தில்லி, அரியானா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் ஆண்டுக்கு நான்கு முறை சொட்டுமருந்து தரப்படுகிறது. இதர மாநிலங்களில் இருமுறை தரப்பட்டு வருகிறது. இந்நோய் ஒழிக்கப்பட்டதாக சான்றளிக்கப்படும் வரை தேசிய அளவில் சொட்டு மருந்து ஒரேநாளில் அளிப்பது தொடர வேண்டியுள்ளது.

1995-96ஆம் ஆண்டு தேசிய போலியோ சொட்டு மருந்து இயக்கம் துவக்கப்பட்டது. முதலில் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து ஐந்து வயது வரையிலான குழந்தைகளும் இச்சொட்டு மருந்து இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இது நல்ல பயனைத் தந்தது. 2001இல் நாடு முழுவதும் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 268 ஆகக் குறைந்தது. அதனைத் தொடர்ந்து சொட்டு மருந்திடும் நாட்களின் எண்ணிக்கை பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மூன்றாகக் குறைக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 2008இல் பாதிப்பு மளமளவென உயர்ந்து, 3600 குழந்தைகளை முடக்கி விட்டது. எனவே, மாநில அரசுகளும் மத்திய அரசும் இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் மேலும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

போலியோ எளிதில் தவிர்க்கப்படக் கூடிய நோயாகும். ஆனால், ஒருமுறை அந்நோய் தாக்கிவிட்டால், அதன் பின்னர், அதன் தீய விளைவுகளிலிருந்து மீள்வது கடினம். நன்றாக இருந்த குழந்தைகள், பெற்றோர் கண்களுக்கு முன்பாக ஏன் திடீரென்று ஊனமாக வேண்டும். வாழ்நாள் முழுவதும் ஊனத்தால் விளையும் கண்ணீர்த் துளிகளைத் தவிர்க்க, போலியோ சொட்டு மருந்திடும் நாட்களில் குழந்தைகளுக்கு அவற்றை அளிப்பதும், அளிக்க வைப்பதும் அவசியமாகும்.



ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:23 am

//இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து, நைஜர், சோமாலியா ஆகியவை இந்நோய்த்தொற்று காணப்படும் இதர நாடுகளாகும்//.
முழுமையான போலியோ அற்ற நாடாக விரைவில் இவையும் மாறும் என எதிர்பார்ப்போம்....
நல்ல பகிர்வுக்கு மிக்க நன்ரி சிவா. ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி 678642 ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி 154550



ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Aஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Aஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Tஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Hஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Iஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Rஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Aஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:35 pm

Aathira wrote://இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து, நைஜர், சோமாலியா ஆகியவை இந்நோய்த்தொற்று காணப்படும் இதர நாடுகளாகும்//.
முழுமையான போலியோ அற்ற நாடாக விரைவில் இவையும் மாறும் என எதிர்பார்ப்போம்....
நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சிவா அண்ணா. ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி 678642 ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி 154550
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக