புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%

8 Posts - 2%
prajai
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_lcapஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_voting_barஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:44 am

First topic message reminder :

திலகர், அன்னிபெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான ஹோம்ரூல் இயக்கம் மக்களிடையே எழுச்சிமிகு இயக்கமாக வேகம் பெற்றது. மறுபுறம் காந்திஜி தலைமையிலான போராட்டங்களும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். மக்களிடையே பரவி வளர்ந்து வரும் பேராட்ட உந்துதலை எழுச்சியை ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். ரௌலட் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் மைதானத்தில் திரண்டது பெருங்கூட்டம். மார்ச் 30 அன்று பெரும் ஹார்த்தால் நடத்த முன்னேற்பாடுகள் நடந்தன.

ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் சுயவிழிப்பின் பேரில் கலந்து கொண்டனர். இப்போக்கு ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் ஹர்த்தால் நடந்தது. அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர்.

மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்பு கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன.

ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும்பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டம் தான் ஏப்ரல் 13 ஜலியன்வாலாபாக் படுகொலை. ஜலியன்வாலாபக்கை நினைவுகூறும் வகையில் 1919 ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 1919 எப்ரல்13 வரை நடைபெற்ற சமபவங்களை ஒரு பின்னோக்கிய பயணமாக அந்தந்த தேதிவாரியாக தொகுக்கப்படுகிறது.

ரத்தன் தேவி

13 ஏப்ரல் 1919 மாலை, துப்பாக்கிச்சூடு நடந்து முடிந்த தறுவாயில், ரத்தன் தேவியெனப் பெயருடைய ஒரு பெண்மணி தன் கணவனைத் தேடிக் கொண்டு ஜாலியான்வாலா பாக்கை அடைந்தாள். அவள் அங்கு காணப் பெற்றதென்ன, பின் அவளுக்கு நேர்ந்ததென்ன எனும் விவரம் பின்வருமாறு:

நான் ஜாலியான்வாலா பாக் அருகாமையிலுள்ள என் வீட்டிலிருந்தேன். துப்பாக்கிகள் சுடும் சப்தம் கேட்டது. அஞ்சிப் பதறி எழுந்தேன். ஏனெனில் என் கணவர் அங்குதான் போயிருந்தார். எல்லை கடந்த பயம் கவ்வ, கதறியழுது கொண்டே, இன்னும் இரு பெண்களுடன் அங்கே போய்ச் சேர்ந்தேன். அவ்விடம் பிணங்கள் குவியல் குவியலாயிருக்கக் கண்டேன். ஒரு குவியலைத் தாண்டியவுடன் என் கணவரின் உடல் கிட்டியது. நான் ரத்தக்களறியில் பிணங்கள் நடுவே முன்னேறிச் செல்ல வேண்டியிருந்தது.

சற்றுப் பின் அங்கு லாலா ஸ¤ந்தர் தாஸின் பிள்ளைகள் இருவரும் வந்தனர். என் கணவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஒரு கட்டில் கொண்டு வரும்படி அவர்களை வேண்டினேன். இரு பையன்களும் போய்விட்டனர். அப்போது வேளை மாலை எட்டுமணியடிக்க இருந்தது. ஊரடங்கு சட்டத்துக்கு அஞ்சி ஓர் ஆள்கூட வீட்டுக்கு வெளியே தலைகாட்டவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தேன், எதிர்நோக்கிக் காத்தவாறு, அழுதவாறு.

ஏறத்தாழ எட்டரைமணி. ஒரு சர்தார்ஜி அங்கு வந்து சேர்ந்தார். இன்னும் சில மனிதர்களும் வந்தனர். வந்து பிணக்குவியல்களிடையே ஏதோ தேடியவாறு சென்றனர். அந்த சர்தார்ஜியிடம் நான் வேண்டிக் கொண்டேன் - என் கணவரின் உடலை அப்புறப்படுத்தி ஏதேனும் உலர்ந்த இடத்தில் வைக்க உதவக் கேட்டேன். ஏனெனில் அவர் உடல் கிடந்த இடத்தில் ஒரே ரத்தப் பெருக்காயிருந்தது. அவர் சவத்தின் தலையின் கீழாகக் கை கொடுக்க, நான் கால்மாட்டிலிருந்து தூக்க, மரக்கட்டைகளின் மேல் வைத்தோம்.

இரவு பத்துமணி வரை நான் லால சுந்தர் தாஸின் மகன்களுக்கு காத்திருந்தேன். ஆனால் எவனும் வரவில்லை. நான் எழுந்து கட்ரா ஆப்லோவாவின் திசையில் போகத் தொடங்கினேன். டாக்குர் துவாராவில் வசிக்கும் மாணவர்களிடம் சென்று உதவி கேட்கலாமென்று எண்ணம். சில அடிகள் தான் சென்றிருப்பேன். ஒரு வீட்டில் ஜன்னலருகே அமர்ந்திருந்த ஒரு மனிதர் என்னைப் பார்த்து, இத்தனை இரவில் எங்கே போகிறாயென்று கேட்டார். என் கணவரின் உடலைத் தூக்கிச் செல்ல யாரிடமாவது உதவி கேட்கலாமே என்று செல்வதாகச் சொன்னேன்.அதற்கு அவர், 'மணி எட்டு ஆகிவிட்ட பின் உதவிக்கு யாரும் வர மாட்டார்களே' என்றார். நான் கட்ராவை நோக்கி மேலும் ஒரு சில அடிகள் நகர்ந்தேன். அங்கு ஒரு ஓரத்தில் ஹ¤க்காப்புகை பிடித்தவாறு அமர்ந்திருந்த முதியவர் தென்பட்டார். அவரருகே இரண்டு மூன்று ஆட்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

எனக்கு நேர்ந்திருப்பதை எடுத்துச் சொல்லி அவரிடமும் உதவி கேட்டுக் கை கூப்பி வேண்டினேன். அவரும் அதே பதிலைத்தான் சொன்னார் - மணி பத்தாகிவிட்டது. இங்கு யாரும் குண்டுக்கு இரையாகத் தயாராக இல்லை!

நான் திரும்பிச் சென்று என் கணவரின் சவத்தருகே உட்கார்ந்தேன். அதிருஷ்டவசமாக என் கைக்குக் கிட்டிய ஒரு மூங்கில் பாளச்சைக் கொண்டு இரவு முழுதும் நாய்களை விரட்டியபடி அங்கேயே அமர்ந்திருந்தேன். அவ்விடத்தில் மூன்று பேர் வலி தாங்காமல் அலறி அரற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அருகேயே ஓர் எருமையும் வலியால் துடித்துக் கொண்டிருந்தது. இன்னும் அங்கு பன்னிரண்டு வயது பையனொருவன், வலியின் வேதனையில் 'ஐயோ என்னை விட்டுப் போய்விடாதீர்கள்' என்று அரற்றினான். 'என் புருஷன் உடலைவிட்டு நான் எங்கேடா போகப் போகிறேன்' என்று நான் அவனிடம் குளிர்கிறதா என்று கேட்டேன். என் துப்பட்டா. மார்புத் துணி கொண்டு அவனுக்குப் போர்த்திவிட முடிந்தது. சிறுவன் தண்ணீர் கேட்டான். ஆனால் அங்கு ஏது தண்ணீர்?

மணிக்கொரு முறை பெரிய கடிகாரத்தின் 'டண் டண்' ஒலி கேட்கும். இரவு மணி இரண்டிருக்கும். குண்டுக் காயம்பட்ட ஓர் ஆள் - அவனுடைய ஒரு கால் பிணங்களின் குவியலில் மாட்டிக் கொண்டிருந்தது. அதை விடுவித்துத் தூக்கிவிடும்படி அவன் என்னைக் கெஞ்சி வேண்டினான். ஸ¤ல்தான் எனப்படும் கிராமத்திலிருந்து வந்த ஜாட் வகுப்பு ஆசாமியாம் அவன். நான் எழுந்தேன். இரத்தம் தோய்ந்த அவன் உடையைப் பற்றியபடி அவன் காலை மேலே இழுத்துத் தூக்கிவிட்டேன். அதற்குப் பின் காலை ஐந்தரை மணி வரை அங்கு ஒருவரும் வந்தபாடில்லை. ஆறு மணி சுமாருக்கு லாலா சுந்தர் தாஸ் தன் பையன்களுடன் வந்தார். கூடவே எங்கள் தெருவைச் சேர்ந்த சிலர் ஒரு கட்டில் கொண்டு வந்தார்கள். என் புருஷனின் உடலை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். என் புருஷனின் உடலை வீட்டுக்குக் கொண்டு சேர்த்தேன். திடலில் இன்னும் பலர் தத்தம் உற்றார் உறவினர்களைத் தேடிக் கொண்டிருந்தனர். இரவு முழுதும் நான் அங்கு கழித்திருக்கிறேன். என்னுள் எழுந்த உணர்ச்சிகளை விவரிப்பது இயலாது. குவியக் குவிய பிணஙகள் என்னைச் சுற்றிலும் - அவற்றிடையே ஒரு சில அறியாப் பாலகர்கள். இரவு முழுதும் அந்தத் 'தண்ணியில்லாக் காட்டில்' நாய்கள் குரைப்பதும் கழுதைகள் கத்துவதும் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை.... இதைவிட வேறென்ன சொல்வது - அந்த இரவை நான் எப்படிக் கழித்தேன் என்பது எனக்குத் தெரியும். அந்த பகவானுக்குத் தெரியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:55 am

1919 ஏப்ரல் 13

படுகொலைக் கட்டம்

ஏப்ரல் 13 வைசாகி நாள். அன்றுதான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டினதும், அம்ருத்ஸரில் இந்நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

ஆனால் இந்த வைசாகியன்று நிலவரமே வேறாயிருந்தது. கடந்த நான்கு நாட்களாக ஹர்த்தால். நாள்தோறும், இறந்தவர்களின் பாடைகள் புறப்பாடு - ஏப்ரல் 10 அன்று குண்டடிபட்டவர்களின் இறுதி ஊர்வலம்.

வைசாகியன்று மக்கள் ஆயிரக்கணக்கில் பொற்கோவிலுக்குப் போவார்கள். நிச்சயம் யாவரும் அருகில் உள்ள ஜலியான்வாலா பாக் வந்து சேருவார்கள் என்றும் அதிகாரவர்க்கத்துக்குத் தெரியும்.

ஏப்ரல் 13 அன்று காலை ஜெனரல் டையர் மீண்டும் நகரில் தன் அதிகார பலத்தைக் காட்ட ஒரு படையணி வகுப்பு நடத்தினான். இடத்துக்கு இடம் தண்டோரா போட்டுப் பறையறிவிக்கப்பட்டது:

அமிருத்ஸர் ஊர்க்காரர் ஒருவரும் அனுமதியின்றி ஊரைவிட்டு வெளியே போக்கூடாது. இரவு 8 மணிக்குப் பின் ஒருவரும் தன் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. 8 மணிக்குப் பின் வெளியே செல்பவர்கள் சுடப்படுவார்கள். ஊர்வலம், பேரணி ஒன்றும் நடத்தக்கூடாது. எந்த இடத்திலும் 4 பேருக்கு மேல் கூடினால் அது சட்டவிரோதமாகும். அவசியமென்றால் ராணுவ பலம் பிரயோகிக்கப்படும்.

ஜெனரல் டையரின் படையணி ஊர்வலம் நடந்தவுடனேயே இளைஞர்கள் சிலர் வீடு விட்டு வெளியே வந்து கூடி, தண்டோரா போல காலித் தகரடப்பாக்களைக் கொட்டி முழக்கி இடத்துக்கு இடம் நின்று கோஷம் போட்டவாறு சென்றனர். ''மாலை 4.30 மணிக்கு ஜலியான்வாலா பாக் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.''

நேரம் 12.40 ஆயிற்று. டையர் இன்னும் நகரில் தான் இருந்தான். தண்டோராவுக்கு சரியான பயன் கிடைக்கவில்லையென்றும், அதற்கு பதில் மாலை 4.30 க்கு ஜலியான்வாலா பாகில் பொதுக்கூட்டம் என்று எங்கும் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றும் செய்தி போயிற்று.

அவ்வளவுதான். ஊரில் ஊர் முழுதும் போலீஸ் மற்றும் ராணுவ பந்தோபஸ்து செய்யப்பட்டது. ஜெனரல் டையரின் வசம் இன்னும் 400 படையாட்கள் எஞ்சியிருந்தனர்.

2 மணிக்குப்பின் மக்கள் ஜலியான்வாலா பாகில் திரளத் தொடங்கினர். பெருமளவில் கூட்டம் சேர்ந்து விட்டதாக 4 மணிக்கு டையருக்குச் செய்தி சென்றது.

ஜெனரல் டையர் உடனுக்குடன் ஆயுத்தமாகி படையாட்களுடன் ஜலியான்வாலா நோக்கிப் புறப்பட்டான். முன்னே சென்ற அவனுடைய மோட்டார் காரில் அவனுக்குப் பிடித்த ஆபீசர் கேப்டன் ப்ரிக்ஸ் இருந்தான். காருக்குப் பிந்தி இரண்டு போர்க் கவசவூர்திகள் வந்தன. அவற்றின் பின் போலீஸ்கார். அதில் போலீஸ் சூப்பரின்டென்டென்ட் ரிஹிலும் ப்லோமரும்.

வழியில் மொத்தம் ஐந்து இடங்களில் நாற்பது நாற்பது படையாட்கள் கொண்ட நிறுத்தங்கள் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டன. ஜெனரல் டையருடன் நேரே மைதானம் வரை வந்து நுழைந்த ஒரு படைப்பிரிவில் இந்தியர்கள் 50 பேர் துப்பாக்கி தாங்கினபடி மற்றும் கோர்க்காக்கள் 40 பேர் குறுங்கத்தி மட்டும் ஏந்தியபடி.

முன்பே குறிப்பிட்டுள்ளபடி ஜலியன்வாலா பாக் நாற்புறமும் வீடுகள் கட்டப்பட்டு நடுவில் விசாலமான, ஆனால் மேடு பள்ளமாயிருக்கும் மைதான வெளியாகும். தென்னண்டையில் மட்டும் மனைகள் கட்டப்படாத காலி இடம் கொஞ்சம் இருந்தது. ஆனால் அங்கும் ஓர் ஐந்தடி உயரச் சுவர் இருந்தது. குறுகலான சந்துகள் நான்கைந்து மைதானத்துள் சங்கமமாயின. கடைத் தெருப்பக்கத்திலிந்து வரும் சந்து உள்ளே வந்து சேரும் இடம் சற்று மேட்டு நிலம். மைதானத்துக்குள் ஒரு சமாதி. ஒரு திறந்த கிணறு வேறு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:55 am

தன் படையுடன் டையர் கடைத்தெரு திசையிலிருந்து மைதானத்துக்குள் வந்தான். உள்வரும் சந்து மிகக் குறுகியதானதால் அந்தக் கவச வண்டிகளால் உள்ளே வரமுடியவில்லை. அவற்றை வெளியே விட்டு விட்டு டையர் மைதானத்தில் புகுந்தான்.

நல்ல கூட்டம். ஏறத்தாழ இருபதாயிரம் பேர் குழுமியிருந்தனர். மேடையேறி நின்று ஒருவன் பேசிக் கொண்டிருந்தான். மிக்க அமைதி வாய்ந்த முறையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மைதானத்தில் நுழையும் மேடான சந்தில் டையர் தன் படையுடன் நின்று கொண்டான். நின்றவன் ஒருகணங்கூடக் காத்து நிற்கவில்லை. 25 துப்பாக்கி வீரர்களைத் தன் வலப்புறமும் 25 பேரை இடப்புறமும் அணிநிறுத்தி, கூட்டத்தினர்க்கு ஒரு முன்னெச்சரிக்கையும் கொடுக்காமல், சுட்டுத் தள்ள ஆணையிட்டான்.

மக்கள் அஞ்சி பதறியெழுந்தனர். ஓடி வெளியேற ஒருவழிகூட இல்லை. குண்டு மழையிலிருந்து தப்ப இங்கும் அங்குமாக ஓடினர். ஓட்டம் மிதிபாடு எனப் பெருங்குழப்பம், சண்டைத் தாக்குதல்களில் அனுபவம் பெற்றிருந்த சிலர் கூட்டத்தாரைப் பார்த்து ''ஓடுவதற்கு பதில் தரையில் படுத்து விடுங்கள்'' என்று இரைந்து இரைந்து கத்தினர். ஆனால் அந்தக் கலவரத்தில் இதை யார் கேட்பார்கள்? எந்தப் பக்கம் ஓடினாலும் வழி அடைத்துக் கிடக்கிறது - எதிரே வீடுகளின் பின் சுவர்கள். ஆக, வெளியே செல்லும் அந்தக் குறுகலான சந்துகள் ஒவ்வொன்றையும் நோக்கி நூற்றுக்கணக்கான பேர் ஓட்ட ஓட்டமாக ஓடினர். இதைக் கண்ட டையர் அந்த திசைகளில் பார்த்துச் சுடும்படி படையினருக்கு ஆணையிட்டான். பலர் குண்டுகளுக்கு இரையாயினர். வேறு பலர் பிறர் காலடியில் மிதிபட்டு நசுங்கித் துவைபட்டனர். இன்னும் பலர் அந்த ஐந்தடி உயரச் சுவரைத் தாண்டும் முயற்சியில் குண்டுபட்டுக் கீழே விழுந்தனர். ஓடி ஓடிப் பலர் கிணற்றை அடைந்தவர்களாய் அதனுள் குதித்தனர்.

முதலில் படைவீரர்களை சிலர் துப்பாக்கியால் வானை நோக்கித்தான் சுட்டார்கள். ஆனால் ஜெனரல் டையர் உரத்து கர்ஜித்தான் - கீழே சுடுங்கள் ! இங்கு உங்களைக் கூட்டி வந்தது எதற்காகவாம்!''

மைதானமே ஒரு தீக்குண்டம் போல் தோன்றிற்று. ஆர்தல் ஸ்வின்ஸன் எனும் ஒருவன் நேர்முக வர்ணையாக இவ்வாறு சொல்லியிருக்கிறான்:

வெளியே ஓடப்பார்க்கும் முயற்சியில் மக்கள் இரு வெளி வழிகளையும் ஓடி எட்டினர் - விழுந்து, புரண்டு, ஒருவரை ஒருவர் தள்ளியபடி காலின் கீழே மிதித்து அரைத்தபடி... ப்ரிக்ஸின் பார்வை அந்தப் பக்கம் செல்ல அவன் டையரின் கவனத்தை திருப்பினான். எல்லோரும் தன்னைத் தாக்கத்தான் திரண்டு வருவதாக டையர் நினைத்துவிட்டான். நேரே அவர்களைப் பார்த்துச் சுடும்படி படைக்கு உத்தரவிட்டான். இதன் விளைவு பயங்கரமாயிற்று. அலறிக் கொண்டே விழுந்து காயமுற்றோர் பிறர் காலடியில் மிதிபட்டுப் போயினர். சிலர் மீது மீண்டும் மீண்டும் குண்டுகள் பாய்ந்தன. ஒவ்வோரிடத்தில் குவியல் குவியலாகப் பிணங்கள். குண்டுபட்டு ஒரு ஆள் விழுந்தால் அவன் மீது இன்னும் பத்து இருபது பேர் விழுந்தனர். இன்னும்விடாமல் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தது. மக்கள் பலர், வெளியே ஓட வழி கிடைக்கும் என்று நம்பிக்கை அற்று, சுவரின் பக்கம் ஓடினர், அதை ஏறித்தாண்டி விடலாமென்று. சுவர் ஓரிடத்தில் ஐந்தடியென்றால் வேறாரிடத்தில் இன்னும் உயரம், ஏழடி, பத்தடி உயரங்கூட. ஓடி ஓடிச் சுவரருமே வந்து விடுகிறார்கள். ஆனால் பற்றிக் கொள்ள வாகாக ஓரிடமும் கிடைக்கவில்லை. பிடிப்பு கிடைத்துச் சுவர் மீது ஏறியவர்கள் மறுகணமே பின்னால் வருபவர்களால் கீழே இழுப்பட்டார்கள். சுவரைத் தாண்டியவர்கள் சிலரே. பலப்பல பேர் சுவரைத் தாண்டும் முயற்சியினூடேயே குண்டுக்கு இலக்கு. இன்னும் பலர் சுவர் மீது ஏறி நின்றுவிட்ட கணத்திலே குண்டு பாய்ந்து வீழ்ந்தனர்.

இந்த குண்டு வீச்சில் மாட்டிக் கொண்டவர்கள் இருபதாயிரம் பேர். ஒரு சில கணங்களுக்கு முன்னர் வெகு அமைதியாகக் கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்தில் இப்போது கதறல்கள், கூவல்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:55 am

துப்பாக்கிச் சூடு சுமார் பத்து பதினைந்து நிமிட நேரம் விடாமல் நடைபெற்றது. ரவைகள் தீரும் வரை சுட்டார்கள். ஒவ்வொரு துப்பாக்கிக்காரனும் முப்பத்து மூன்று தோட்டாக்கள் சுட்டானாம். இன்னும் தோட்டாக்கள் இருந்திருந்தால் அவற்றையும் அந்தக் கூட்டத்தின் மேல் செலுத்தியிருப்போம் என்று பின்னொரு சமயம் டையரே ஒப்புக் கொள்கிறான்.

சுமார் 5.30 மணிக்குத் தன் படையுடன் அந்த நரகத் தீக்குண்டத்தை விட்டு ஜலியான்வாலா பாகிலிருந்து புறப்பட்டான் டையர். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர், காயம்பட்டோர், உயிரிழந்தோர் அங்கே கிடந்தனர். பெரும்பாலோர் தண்ணீர் தண்ணீர் என்று கதறிக் கொண்டிருந்தனர். ஆனால் தண்ணீரென்ன, வேறு எந்தவிதமான உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பல இடங்களில் காயம் பட்டுக்கிடந்தோர் கடைசியாக உயிரையும் விட்டனர். அச்சம் காரணமாக ஒரு டாக்டர்கூட உள்ளே நுழையவில்லை. நண்பரோ உறவினரோகூட உள்ளே வர அஞ்சினர். காயமுற்ற பலர் எப்படியோ ஊர்ந்து ஊர்ந்து வெளிச் சந்துகள் வரை அடைந்தும், மேலும் நகர இயலாது உதிரமொழுகத் தெருக்களிலே விழுந்தனர்.

சற்றுச் சென்றபின், அமிருத்ஸர் வாசிகள் தத்தம் உற்றார் உறவினரைத் தேடியவாறு அச்சத்தைப் பொறுத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தனர். ஆனால் விரைவிலேயே இருட்டி விட்டது. இருளில் எப்படி அவர்கள் தேடி முடியும்? அதுவும் இடம் இடமாகப் பிணங்கள் குவியல் குவியலாகக் கிடக்கும் போது? அதுவுமன்றி 8 மணிக்குப் பிறகு ஒருவரும் வெளியே நடமாடக் கூடாதென்ற உத்தரவு வேறு. சில பேருக்கே உறவினர் கிடைத்தனர். ஆனால் 8 மணியடித்தவுடன் வந்தவரெல்லாம் மைதானத்தை விட்டு வெளியேறிவிட, காயமுற்றிருந்தவர்கள், மைதானத்தின் திறந்த வெளியில் அரற்றியபடியே கிடந்தனர். சுமார் ஓராயிரம் பேர், காயமுற்றவர்கள் இரவு முழுதும் ஜலியான்வாலா பாக் மைதானத்திலேயே கிடந்தார்கள். உதிரம் மிகுதியாக வடிய, விடியும் முன் உயிர்விட்டவர்கள் பலர்.

ஆனால் ஜெனரல் டையருக்கு இன்னும் திருப்தி இல்லை போலும். அன்றிரவு பத்து மணிக்குப் படை அணி வகுப்புடன் வலங்கிளம்பினான். எதற்கு? அமிருத்ஸரின் தெருக்களிலே 8 மணிக்குப் பின்னும் எவனாவது நடமாடுகிறானா என்று கண்காணிப்பதற்கு ''என்ன, என் அதிகாரத்தின் படிப்பினையைக் கற்றுக் கொண்டார்களா இல்லையா!'' அவனுடைய வாக்கிலேயே - தெருக்கள் நிசப்தமாயிருந்தன. நாற்புறமும் அரவமற்ற அமைதி. காண ஓர் ஆசாமி கூடக் கிடையாது.''

இந்த பயங்கரச் சம்பவங்கழித்து பல ஆண்டுகளுக்குப் பின், நடந்த உண்மை விவரங்களும் குறிப்புகளும் சேகரிக்கப்பட்டபோது 1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டா·ப் டிவிஷன் எனும் ராணுவத்து மேலதிகார நிலையினர்க்குச் சமர்ப்பிக்கும் வாக்குமூலம் :-

நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் செத்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:56 am

பஞ்சாபில் நடந்தெல்லாம் பற்றி இந்தியாவிலும் இங்கிலாந்திலும் எழுந்த கண்டனங்களும் விசாரணைக் கோரிக்கைகளும் காரணமாக 1919ல் ஹண்ட்டர் கமிஷன் அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தின் முன் ஜெனரல் டையர் சில கேள்விகளுக்கு விடையளித்த விதமாவது "

கேள்வி : நீர் திடலில் புகுந்ததும் என்ன செய்தீர்?

ஜெனரல் டையர் : சுட்டேன்.

கேள்வி : உடனேயே?

ஜெனரல் டையர் : உடனுக்குடன். அரை நிமிடத்தில் யோசித்து என்ன செய்யவேண்டும், என் கடமை என்ன என்று முடிவெடுத் விட்டேன்.

கேள்வி : துப்பாக்கிச்சூடு தொடங்கியவுடனேயே கூட்டம் சிதறிக் கலையத் தொடங்கியதல்லவா?

ஜெனரல் டையர் : ஆம். உடனேயே.

கேள்வி : அப்படியும் நீர் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தீர்?

ஜெனரல் டையர் : ஆம்.

கேள்வி : கூட்டம் திடலை விட்டுச் சில வழிகள் மூலம் வெளியேற முயன்று கொண்டிருந்தது அல்லவா?

ஜெனரல் டையர் : ஆம்.

கேள்வி : நடுநடுவே சில சமயம் நீர் சுடும் திசையை மாற்ற நேராக அந்தக் கூட்டங்கள் மேலேயே குண்டு செலுத்தலானீர் - சரிதானே?

ஜெனரல் டையர் : ஆம் சரிதான்.

கேள்வி : என்ன, உண்மையாகவா?

ஜெனரல் டையர் : ஆம். உண்மையாக.

கேள்வி : கூட்டம் துவங்கப் போகிறதென்று நீர் 12.40க்குக் கேள்விப்பட்ட போதில், மீட்டிங் நடந்தால் அங்கு போய்ச் சுடுவது என்று முடிவு செய்தீர்களா?

ஜெனரல் டையர் : ....ராணுவ நிலைமை என்று ஒன்று ஏற்பட்டிருக்கிறதே அதைப் பிழையாது காக்கவே உடனே சுடத் தொடங்கும் முடிவை எடுத்தேன். இன்னும் காலதாமதம் செய்திருந்தேனானால் கோர்ட் மார்ஷலுக்கு ஆளாயிருப்பேன்.

கேள்வி : திடலுக்குள் வந்து சேரும் வழி போர்க் கவச வண்டிகள் உள்ளே நுழையும் அளவுக்கு அகலமாயிருந்ததென்று வைத்துக் கொள்ளும். அப்போது நீர் யந்திரத் துப்பாக்கிகள் கொண்டு சுட்டிருப்பீரா?

ஜெனரல் டையர் : ஆம். சுட்டிருப்பேன்.

கேள்வி : அப்போது இறப்போர் மற்றும் காயமுறுவோர் எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கும்?

ஜெனரல் டையர் : ஆம் கூடியிருக்கும்.

கேள்வி : ஆக, அந்தக் கவச வண்டிகள் உள்நுழைய இயலாது போனதால்தான் நீர் யந்திரத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை?

ஜெனரல் டையர் : ஏற்கெனவே விடை சொல்லியாகிவிட்டது. நான் சொன்னேனே - கவச வண்டிகள் திடலுக்குள் வந்திருந்தால் நான் யந்திரத் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பேன் என்பது மிக மிகச் சரி.

கேள்வி : யந்திரத் துப்பாக்கிகள் கொண்டு நேரே கூட்டத்தின் மீது குண்டு செலுத்தியிருப்பீர்?

ஜெனரல் டையர் : ஆம், யந்திரத் துப்பாக்கிகள் கொண்டு.

கேள்வி : ஆக, குண்டுகள் செலுத்துவதில் உம் அடிப்படை நோக்கம் நெஞ்சங்களை நடுங்கச் செய்வதே என்று எடுத்துக் கொள்வதா?

ஜெனரல் டையர் : என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் போனது அவர்களை தண்டிக்க. ராணுவ கோணத்தில் சொன்னால், அவர்கள் நெஞ்சங்கள் மீது ஆழமான தாக்கம் உண்டாக்க விழைந்தேன்.

கேள்வி : நெஞ்சில் நடுக்கம் அமிருத்ஸர் நகரில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுவதிலுமே?

ஜெனரல் டையர் : ஆம். பஞ்சாப் முழுதிலுமே. அவர்களுடைய தன்னம்பிக்கையை தகர்க்க விரும்பினேன் - அந்த துரோகக் கலகக்காரர்களின் தன்னம்பிக்கையை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 29, 2013 11:28 am

சிவா wrote:

இதை ஒருமுறை படித்துப் பாருங்கள்! இவ்வாறு இவன் பதிலளிக்கும் பொழுது நீங்கள் அங்கு இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்!

ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 29, 2013 11:48 am

சிவா wrote:இதை ஒருமுறை படித்துப் பாருங்கள்! இவ்வாறு இவன் பதிலளிக்கும் பொழுது நீங்கள் அங்கு இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்!
தன்னுடைய மரணத்தை தவணை முறையில் பார்த்திருப்பான் இந்த நாய் ............
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 29, 2013 11:50 am

ராஜா wrote:
சிவா wrote:இதை ஒருமுறை படித்துப் பாருங்கள்! இவ்வாறு இவன் பதிலளிக்கும் பொழுது நீங்கள் அங்கு இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்!
தன்னுடைய மரணத்தை தவணை முறையில் பார்த்திருப்பான் இந்த நாய் ............

படிக்கும் பொழுதே இரத்தம் சூடாகிறது தல! கோபம் 

ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக