உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Yesterday at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Wed Aug 17, 2022 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'
+3
சபீர்
ஹனி
krishnaamma
7 posters
பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'
சாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.
இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக்கள், கார்போஹைட்ரேட், கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
கால்ஷியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.
'பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்க லாம்' என்பார்கள்.
இதில் வைட்டமின் 'ஏ' மிகுந்து இருப்பதால், அந்த அளவுக்குக் கண் பார்வையைக் கூர்மையாக்கும்;என்பதால் வந்த சொல்வடை இது.
அந்த அளவு வல்லமையைக் கொண்ட கீரை இது.
இதை வெவ்வேறு விதமாக உட்கொள்வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும்.
ஆம். இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
மாறாக, துவரம் பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.
இதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும்.
உடல் உஷ்ணம் குறையும்.
ரத்தம் விருத்தியாகும்.
இதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு.
இவ்வளவு மகத்துவங்கள் அடங்கிய இந்தக் கீரையை, 'கீரைகளின் ராஜா' என்று தயங்காமல் சொல்லலாம்.

Last edited by krishnaamma on Fri Mar 18, 2022 9:30 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'
நல்ல தகவல் நன்றி

ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112
Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'
நன்றி நண்பர்களே

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
பொன்னாங்கண்ணி கீரை
பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி கீரை, அனைவரும் அறிந்தது தான். ஆனால், அதிலே பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி, தன்னுள் தேக்கி வைத்திருக்கிறது. அதுபோலவே, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையும், பொன் சத்தை பெற்றிருக்கிறது.
* பொன்னாங்கண்ணி கீரை, ஓர் அற்புதமான உடல் தேற்றி. இன்று, பெரிய செல்வந்தர்களுக்கு கூட எட்டாத ஒரு மருந்தாகிப் போனது தங்கபஸ்பம். ஆனாலும், அதை ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருக்கிறார், இறைவன்
* நவீன மருத்துவத்தில், 'கோல்ட் குளோரைடு' என்று, தங்கத்தை, உப்பு நிலையில் மாற்றி மருந்தாகக் கொடுப்பர். இது, உடல் வலியைப் போக்குவது மட்டுமின்றி, உடலுக்கு பலத்தையும் தரவல்லது
* பொன்னாங்கண்ணி கீரை, தாய்ப்பாலை பெருக்கும். பித்தப்பை சீராக இயங்கச் செய்யும் மற்றும் தூக்கத்தை தூண்ட கூடியது
* நரம்புக் மண்டலத்தை சீர் செய்து, சாந்தப்படுத்தக் கூடியது. எனவே, பல்வேறு நரம்பு நோய்கள் வராமல் தடுக்கிறது
* ஞாபக சக்தியைத் தூண்ட கூடியது. உடல் உஷ்ணம் நீங்கி, கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. இதன் சாறு, பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது
* ரத்த வாந்தியை நிறுத்தக் கூடியது
* பொன்னாங்கண்ணி கீரை விழுதை, எண்ணெயில் இட்டு காய்ச்சி, தலைக்கு தடவினால், தலைமுடி செழுமையாக வளரும்
* இக்கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால், ரத்த அழுத்த குறைவு கட்டுப்படும். இரைப்பை கோளாறுகள் இல்லாமல் போகும். 'கொனேரியா' எனும் பால்வினை நோய் குணமாகும்
* ஆண்களின் மலட்டு தன்மையையும், இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்து
* பொன்னாங்கண்ணி கீரையை, அரைத்து, முகத்தில் பூசி வந்தால், முகப்பருக்கள் போவதோடு, கரும்புள்ளிகளும் காணாமல் போகும்; முகம் பொலிவு பெறும்
* இக்கீரை, சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது. பேதி மற்றும் சீதபேதியை கட்டுப்படுத்த வல்லது.
* குடலிறக்க நோய் வராமல் இருக்கவும், நெஞ்சு சளியை கரைக்கவும், மார்பு இறுக்கத்தை போக்கவும் வல்லது. ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்றுகிறது. நுண்கிருமிகளை அழிக்க வல்லது
* புண்களை ஆற்றக் கூடியது. ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை போக்கி, புற்று நோய் வரா வண்ணம் தடுக்க கூடியது. உடலுக்கு உற்சாகம் தரவும் வல்லது
* ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தை குறைக்க வல்லது. பூஞ்சைக் காளான்களை துரத்த வல்லது
* பொன்னாங்கண்ணி கீரையை வேக வைத்து, உப்பு சேர்க்காமல் இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர, கண் பார்வை தெளிவு பெறும்; கண் நோய்கள் விலகும்
* கீரையை நன்கு மைய அரைத்து, நீர் நிரப்பிய மண்பானை மீது அப்பி, மறு நாள் காலையில் எடுத்து கண்களின்மேல் சிறிது நேரம் கட்டி வைத்து அவிழ்க்க, கண் நோய் குணமாகும்
* பொன்னாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு, பசுவின் பால் மற்றும் கரிசலாங்கண்ணிச் சாறு, இவைகளை சம அளவு எடுத்து, இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி, மெழுகு பதத்தில் வந்ததும், வடிகட்டி, தலைக்கு தேய்த்து குளித்து வர, 96 வகையான கண் நோய்களும் தொலைந்து போகும்
* இக்கீரையை வதக்கி, மிளகு, போதிய அளவு உப்பு சேர்த்து, ஒரு மண்டலம் உண்ண, உடலுக்கு வனப்பு, பொன் நிறம், கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும்
* ஒரு பிடி பொன்னாங்கண்ணி கீரையை, காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று, பசும்பால் அருந்தி வர, உடல் குளிர்ச்சி பெற்று, ஈரல் நோய் இல்லாது போகும். கண் நோய்கள் நீங்கி, பார்வையும் தெளிவு பெறும்
பொன்னாங்கண்ணி கீரை, பொன்மேனி தருவதோடு, கண்களுக்கு நன்மையும், தலைமுடிக்கு வளத்தையும், ரத்தப் பெருக்கையும், உடல் குளிர்ச்சியையும் தரக் கூடியது என்பதை நினைவில் நிறுத்தி, நித்தமும் பயன்படுத்துவோர், நூறாண்டு வாழ்வர்.
- கைலாஷ்
தினமலர் வாரமலர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'
ஐயா , ஏற்கனவே நான் ஒரு திரி துவங்கி இருக்கிறேன் ஐயா, அத்துடன் இணைத்து விடுகிறேன்
...
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

அன்புடன்,
கிருஷ்ணாம்மா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'
பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம்.
இது இருந்தால் வேறு எதுவும் வேண்டாம்.
நன்றி அம்மா
எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம்.
இது இருந்தால் வேறு எதுவும் வேண்டாம்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'
மேனி பொன்னாக பொன்னாங்கன்னி கீரையை பயன்படுத்தலாம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'
எனக்கும் ஐயா.....அதுவும் சீமை பொன்னாங்கண்ணியைவிட, நாட்டுப்பொன்னாங்கண்ணி தான் மிகவும் சுவையாக இருக்கும்....ஆனால் அதை 'ஆய்வது' / சுத்தப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம்....பழ.முத்துராமலிங்கம் wrote:பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம்.
இது இருந்தால் வேறு எதுவும் வேண்டாம்.
நன்றி அம்மா

.
.
.
இந்த கீரை இந்த பெருமை ஒன்று உண்டு ஐயா, உங்களுக்குத்தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை.... இந்த கீரையை, பயத்தம் பருப்பு தேங்காய் அரைத்து பொரித்த கூட்டு போல் செய்தால் உடல் பலம் பெறும், வெயிட் ஏறும்.....
.
.
.
.அதுவே, துவரம் பருப்பு போட்டு மிளகு சீரகம் சேர்த்து சாப்பிட்டால் எடை குறையும்.... ஆனால் ஒருமண்டலம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்....எங்க அப்பா சொல்வார் இதை

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'
- Code:
இந்த கீரை இந்த பெருமை ஒன்று உண்டு ஐயா, உங்களுக்குத்தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை.... இந்த கீரையை, பயத்தம் பருப்பு தேங்காய் அரைத்து பொரித்த கூட்டு போல் செய்தால் உடல் பலம் பெறும், வெயிட் ஏறும்.....
பதார்த்தம் சொல்லியுள்ளீர்கள்.
நான் தற்போது வெறும் 57 கிலோவே உள்ளேன்.
என் உயரத்திற்கு 63 கிலோ இருக்க வேண்டும்.
இதை உடன் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'
மேற்கோள் செய்த பதிவு: 1287178பழ.முத்துராமலிங்கம் wrote:அம்மா உடம்பு எடை கூட அருமையான
- Code:
இந்த கீரை இந்த பெருமை ஒன்று உண்டு ஐயா, உங்களுக்குத்தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை.... இந்த கீரையை, பயத்தம் பருப்பு தேங்காய் அரைத்து பொரித்த கூட்டு போல் செய்தால் உடல் பலம் பெறும், வெயிட் ஏறும்.....
பதார்த்தம் சொல்லியுள்ளீர்கள்.
நான் தற்போது வெறும் 57 கிலோவே உள்ளேன்.
என் உயரத்திற்கு 63 கிலோ இருக்க வேண்டும்.
இதை உடன் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
நன்றி அம்மா
ஆஹா... உங்களுக்கு எடை கூட வேண்டுமா....கைவசம் நிறைய குறிப்புகள் உள்ளன ஐயா...ஆனால் நான் எடை குறைக்கவேண்டும் ...வெகு வருடங்களாக முயல்கிறேன்...ஹுஹும்....முடியவில்லை

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|