புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரத நாட்டியம் - Page 4 I_vote_lcapபரத நாட்டியம் - Page 4 I_voting_barபரத நாட்டியம் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரத நாட்டியம்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 10:38 am

First topic message reminder :

பரத(நாட்டியம்) நிருத்தியம்

தற்காலத்தில் காணப்படும் சாஸ்திரீய நடனம், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் என்னும் பெயருடன் விளங்குகிறது. முற்காலத்தில் தமிழகத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். ஏறத்தாழ கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இதற்கு சதிர் என்று பெயர் வழங்கலாயிற்று. பரத நாட்டியம் என்ற பெயர் சுமார் அறுபது ஆண்டுகளாகத் தான் பிரசித்தம் அடைந்துள்ளது.

இந்த பரத நிருத்யத்தின் முக்கியமான அம்சம் அரைமண்டி என்று கொச்சைத் தமிழில் வழங்கி வரும் பதமாகும். அந்த நிலையே இக்கலைக்கு மூலாதார வடிவமாக இருக்கிறது. பாதங்களை பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்து சீராக நிற்கும்நிலை ஆகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. முழங்கால்களும், பக்கவாட்டில் பரப்பப்பட வேண்டும். துடைகள் பூமியிலிருந்து அவரவர் கையினால் மூன்று அல்லது நான்கு சாண் தூரத்தில் இருக்க வேண்டும். அடவுகள் என்று கூறப்படும் பல அசைவுகள், இந்த மண்டல ஸ்தானத்தையே அடிப்படையாகக் கொண்டது. அடவுகளுக்கு பாதத்தைதான் அதிகமாக உபயோகிக்­கிறோம். இவை தட்டடவு, நாட்டடவு, குத்தடவு, மெட்டடவு தவிர அதன் சேர்க்கைகளே ஆகும். இந்த அடவுகள் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். லௌஷ்டம் என்று சொல்லப்படும் நிமிர்ந்த நிலை மார்பிற்கும், முதுகிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். மார்பினை நிமிர்த்தி வயிற்றினை உள்ளே தள்ளி நிற்கவேண்டும். முதுகானது பார்ப்பதற்கு ஒரு வில்போல இருக்க வேண்டும். தோள்களை ஏற்றவோ, இறக்கவோ, கூன்போடவோ கூடாது. தோள்களின் சீரான நிலையிலேயே முழங்கையை வைக்கவேண்டும். கைகளை மார்பின் முன் வைக்கும்போது ஒரு சாண் இடைவெளி விட்டுத்தான் வைக்க வேண்டும். இவைகளே அங்க சுத்தத்திற்கு தேவையான அடிப்படைகள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:14 am

கருத்து:

இங்கே அஷ்ரமஹ என்னும் சொல் ஆயாசமின்மைகளைப் பின்மையைக் குறிக்கிறது. களைப்பின்றி ஆடுதல் ஒரு இலட்சணம். அதாவது களைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாது ஆடுதல் என்பதே இதன் கருத்தாகும்.

மற்றைய ஒன்பது இயல்புகளான ஜவஹ-- வேகமாக ஆடும் ஆற்றல், ஸ்திரத்வம் -- உறுதி. ரேக்கா-(நிலைகள்). ப்றமரீ சுற்றி ஆடும் திறமை த்ருஷ்டி-கண்பார்வை . மேதா-புத்திசாலித்தனம்: சிரத்தா-ஆர்வம், வசோ-தெளிவான உச்சரிப்பு: கீதம்-- பாடும் ஆற்றல்: இவை அனைத்தையும் பரத நாட்டியம் கற்கும் ஒருவன் அடைகிறான்: அதனால் அவனது ஆளுமை மென்மேலும் வளர்ச்சியடைகிறது.

தவிர மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் நடனம் அவனுடைய ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள உதவி புரிகிறது. மொத்தத்தில் ஆளுமை என்பது ஒரு கட்டத்தில் நிலைத்து நிற்கின்ற செயல்முறையன்று அது தொடர்ந்தும் வளர்ந்து கொண்டு செல்லும் ஓர் செயல்பாடாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:18 am

நடனமும் கல்வியும்

நடனமும் கல்வியும் தொடர்பான இணைப்பினை அறிந்து கொள்வதற்கு மனித "நிலை மாற்றத்தில்" உழைப்பின் பங்கினை விளங்கிக் கொள்ளல் வேண்டும். சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஜாவா மனிதன் நெருப்பினை உருவாக்கவும், கருவிகளைக் கையாளும் திறனுடைவனாகவும் இருந்தான் என்பதை ஆய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஜோன்லுவிஸ், 1978) மனித உழைப்பானது பற்களுக்கு வழங்கிய முக்கியத்துவத்தைக் கைகளுக்குப் படிப்படியாக மாற்றத் தொடங்கியது. இந்த மாற்றமானது விலங்குகளில் இருந்து மனிதனை "நிலைமாறச் செய்வதற்கு" உதவியது.

கைகளின் முக்கியத்துவம் படிமலர்ச்சி கொள்ள "முகர்தல்" என்ற மூக்கின் புலன் உணர்வு படிப்படியாக முதன்மை குன்றத் தொடங்கியவேளை, "கட்புலன் உணர்வு" ஒப்பீட்டளவில் மேலோங்கத் தொடங்கியது. இந்த மாற்றங்களின் வழியாகவே நடனம் முகிழ்ந்தெழுந்தது.

உழைப்பினால் நிகழ்ந்த பண்பு நிலைப்பட்ட மாற்றத்தில் "குறியீட்டாக்கம்" ஒரு பிரதான தோற்றப்படாகக் கருதப்பட்டது. விலங்குகளினால் குறியீட்டு ஆக்கத் தொழிற்பாடு வினைத்திறனுடன் நிகழ்த்தப்படவில்லை. குறியீட்டாக்கம், கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் வலிமை தந்தது.

அது பொதுமையாக்கலுக்குரிய தொடர்புச் செயல்முறையாக அமைந்தது. ஹோமோ எறெக்ரஸ், ஹோமோ சப்பியான்ஸ் முதலிய மனித மூதாதையர்களின் விருத்தியில் உழைப்பு, கைகளின் தொழிற்பாடுகள், கருவிகளின் கையாட்சி, தொடர்புச் செயல்முறைகள், மேலும் முன்னேற்றகரமாக வளர்ச்சியடையத் தொடங்கின.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:19 am

இவற்றின் பின்புலத்தில் நடன வளர்ச்சியில் மூன்று பிரதான செயற்பாடுகள் இடம் பெறலாயின, அவை :

அ) சிந்தனை

ஆ) பேச்சு

இ) கருவிகள்

அருவமாக்கல், எண்ணக்கருவாக்கம், பொதுமையாக்கல், மனக்கருத்துருவாக்கம், எதிர்ப்பாhப்பு, தெறித்தல், முதலிய உளச் செயற்பாடுகள் சிந்தனையோடிணைந்திருந்தன. உழைப்போடு இணைந்த ஒலிக்குறியீடுகளைத் தழுவிய பேச்சும் இசையும் வளரலாயிற்று. மனித உழைப்பிலும், உற்பத்தியிலும் கைகளின் செயற்பாடுகள் மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. கைகள் உழைப்புக்குரிய உறுப்பாக மட்டுமல்ல உழைப்பின் விளைவாகவும் (Product of Labour) வளர்ச்சி பெறலாயிற்று. கைகளில் அமைந்துள்ள தசைநார்கள் மிக நுண்ணியதான செயற்பாடுகளைப் புரியும் திறன் படைத்தவையாக மாறின. மிக நுட்பமான செயல்பர்டுகளைப் புரிகின்ற கைகள் கலையழகு தரும் காட்சிகளைப் புனையும் திறன்களைப் படைக்கலாயின.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:19 am

கைகளின் தொழிற்பாடுகளோடு இணைந்ததாக "மூளை மேலும் வளரலாயிற்று. உழைப்போடு சார்ந்த நடைமுறைப் பிரச்சினைகளின் அழுத்தங்களுடன் 'சிந்தனை" வளரலாயிற்று. உடலும், சிந்தனையும் இணைந்த சமாந்தரப் பண்புகளை எடுத்துக் காட்டும் கலைவடிவங்களில் நடனம் சிறப்படைந்து மானுடவியல் ஆய்வுகளில் மனித அசைவுகள் மேலும் விதந்துரைக்கப்படுகின்றன. சூழ்நிலைக்குப் பொருந்தி வாழ்வதில் இந்த அசைவுகள் மனிதருக்குப் பெருமளவில் உதவின. விலங்குகள் தமக்குரிய யாதாயினும் ஓர் உடல் இயக்கத்தையே சிறப்பாகக் கொண்டிருக்கும். ஆனால் மனிதரின் உடலில் உள்ள இயக்கங்கள் பன்முகப்பட்டவை. இவ்வாறான அனுகூலம் மனிதரின் நடன ஆக்கத்துக்கும் துணை செய்வதாக அமைந்தது.

மொழியும் கலைகளும் சமூக இருப்பிலிருந்தே தோன்றின. தனிமனித ஆற்றலைப் பன்மடங்காகப் பெருக்குவதற்குச் சமூகச் செயற்பாடுகள் துணை செய்தன. ஒவ்வொருவரதும் அனுபவங்களைத் திரட்டி ஆற்றலைப் பாதுகாப்பதற்கும், பெருக்குவதற்கும் கல்விச் செயற்பாடுகள் வழிவகுத்தன. அனுபவங்களை ஒன்றுதிரட்டிக் குவித்துப் பயன்படுத்தும் பொழுது, மேலும் விசையுடனும் வினைத்திறனும் தொழிற்பட முடிந்தது.

ஒரு விலங்கினத்தை மற்றைய விலங்கினம் அழிப்பதால் விலங்கின வளர்ச்சி மேலோங்கியது. ஆனால் மனிதரின் வளர்ச்சி பழைய கருவிகளையும், தொழில் நுட்பவியலையும் கைவிடுவதன் வாயிலாக மேம்படத் தொடங்கியது. புதிய கருவிகள் தொழில்நுட்பவியல் ஆகியவற்றின் பயன்பாடு சமூக ஆக்கத்துடன் நெருங்கிய இணைப்புக் கொண்டிருந்தது.

புராதன எகிப்திய நடனங்களிலும், தமிழ் நடனங்களிலும் கைகளிலே கருவிகளை ஏந்திய ஆடல்கள் காணப்படுகின்றன. கருவிக் கையாட்சியின் இன்னொரு பரிமாணம் அற ஒழுக்க வற்புறுத்தலாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:19 am

நடனத்திலே மூன்று பெரிய பண்புகளின் உள்ளடக்கம் காணப்படுகின்றது.

அ. கருத்தியல்

ஆ. சமூகவியல்

இ. தொழில்நுட்பவியல்

அ) நம்பிக்கைகள், விழுமியங்கள், சமயம், மந்திரம், சடங்கு, ஐதிகம் என்பவற்றுடன் கருத்தியற் பண்புகள் இணைந்திருந்தன.

ஆ) சமூக நிரலமைப்பு, தொழிற்பிரிவுகள், சிறக்குமியல்பு, கூட்டுறவு முதலியவை, சமூகவியற் பண்பிலே உள்ளடக்கியிருந்தன.

இ) கருவிகள், கருவிகளின் கையாட்சி, முதலியவை நுட்பவியற் பண்பில் இடம் பெறும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:20 am

உழைப்பினால் உற்பத்தியில் ஏற்பட்ட மிகையான பகுதியின் ஒரு கூறினைக் கலைகளில் நடனங்களும் உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தூண்டும் விசைகளாக அமைந்தன. காற்று, நீர், தாவரம், விலங்குகள் முதலியவற்றின் வலுவைப் பயன்படுத்தும் ஆற்றலை வளர்ப்பதற்குக் கல்வியும் கலைகளும் தூண்டுதல் தந்தன.

இயற்கை வழியாக ஏற்பட்ட அழிவுகளும், அபாயங்களும், எதிர்பார்ப்புக்களும் மனிதரிடத்தே அச்சத்தை ஏற்படுத்தின. அவற்றைப் பாவனை செய்வதன் வாயிலாக அச்சத்தைத் தவிர்க்கலாம் என்ற உளவியல் நம்பிக்கை பிறந்தது. காற்றாகவும் மழையாகவும், புயலாகவும், புனலாகவும் மனிதன் பாவனை செய்தான். பலமுள்ள விலங்குகளைப் பாவனை செய்வதன் வாயிலாக அவற்றுக்குரிய பலம் தமக்கும் கிடைக்கும் என்ற எண்ணமும் வலிமையடைந்தது என மானுடவியலாளர் கூறுவர்.

சடங்குகளிலும், மந்திரங்களிலும் குறியீட்டுப் பண்புகள் மேலோங்கியிருந்தன. மழையையும், காற்றையும், புனலையும், தமக்கியைந்த குறியீடுகளாக்கிக் கையாள்வதன் வாயிலாக அவற்றைக் கட்டுப்படுத்த முடியுமென எண்ணினார்கள். குறியீடுகளாக்கிக் கையாள முயன்ற பொழுது ஏற்பட்ட வெற்றிகள் அவர்களுக்கு உறசாகமூட்டின. மீண்டும் மீண்டும் அவற்றைச் செய்ய முயன்றனர். இவ்வாறான மீளவலியுறுத்தல்கள் நடன வளர்ச்சிக்கு அனுசரணையாக விளங்கின.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:20 am

கருத்தையும் உணர்ச்சியையும் விருப்பங்களையும், எதிர்பார்ப்புக்களையும் மனோபாவங்களையும், குறியீடுகளாற் காட்டலாம். நடனம் விருத்தியடையத் தொடங்கியது. மந்திரம், சடங்கு, ஐதிகம், சமயம் என்பவற்றுடன் இணைந்ததாக நடன ஆக்கம் இடம் பெறலாயிற்று. விவசாய உற்பத்தியின் போது "அறியாக்காரணிகளை" மனிதன் உணரலானான். பாடுபட்டு பயிர் செய்த பொழுதும், எதிர்பாராக இயற்கைத் தாக்கங்கள் நிகழ்ந்தன.

பூர்வீகப் பொதுவுடமையின் போது காணப்பட்ட க்டங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நெகிழ்ச்சியான நிலை, நிலமானியச் சமூகத்திலே காணப்படவில்லை. உற்பத்தி வீழ்ச்சியடைந்த வேளை நிலச் சொந்தக்காரரே சுமையைத் தனித்துத் தாங்கவேண்டியிருந்தது. இந்நிலையில் அறியாக்காரணிகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தமையால், அதற்காக இரங்கும் மந்திரமும், சடங்குகளும், கலை வடிவங்களும் விருத்தியடையத் தொடங்கின.

விவசாய வாழ்க்கையில் நீரும், மழையும் சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றிருந்தமையால், அவற்றோடிணைந்த பல சடங்குகள் பண்டைய உலகம் முழுவதும் விரவியிருந்ததாக மானுடவியலாளர் சுட்டிக்காட்டுகின்றனர். பூர்வீகப் பொதுவுடமைச் சமூகத்திலே கூட்டு நிலைப்பட்ட சடங்குகளும் நடனங்களும் மேலோங்கத் தொடங்கின. கருவளம் பெருக்கம் தொடர்பான சடங்குகளிலும் நடனங்களிலும் தனி மனிதப் பண்புகளின் மேலோங்குகையைக் காணலாம். கூட்டு நடனங்கள் தனி நடனங்களாக மாறிய பெயர்ச்சியை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்ட முடியும்.

தொழிற் பிரிவுகளில் வளர்ச்சியானது நடன வளர்ச்சிக்குத் தூண்டுதல் அளிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு தொழில்களுக்கு உரியவாறு வேறுபட்ட வகையிலே கால், கை அசைவுகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. வேலைகளை இலகுவாக்க, ஒத்திசைவு பேணப்பட வேண்டியிருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:21 am

மனவெழுச்சி பூர்வமான அசைவுகளாற் புலப்படுத்தப்படும் கல்விச்சார்ந்த இயக்கத்தை நடனம் கொண்டது. இயல் பூக்கம் சார்ந்த உந்தல்களின் போது எழும் மிகையான வலுவின் அதிர்வுகளைச் சீராக்கம் செய்வதற்கு உயிரினங்களின் நடத்தையிலும் நிகழும் ஒழுங்கு படுத்தப்பட்ட அசைவாக நடனத்தைக் கொள்ள முடியும்.

மனவெழுச்சி பூர்வமான அசைவுகள் மனவெழுச்சி சார்ந்த உடல், உளக் குலைவுகளிலே சமநிலைகளை வருவிக்கின்றன. இந்நிலையில் நடனங்களின் "இரு நிலைப்பட்ட" பண்புகளைக் கல்வி உளவியலாளர் சுட்டிக் காட்டுவர். அவையாவன :

அ) மனவெழுச்சிகளுக்கேற்ப உடலசைவுகள் நிகழ்த்தப்படும் பொழுது "உளச்சீராக்கல்" ஏற்படுத்தப்படும்.

ஆ) மனவெழுச்சிகளைத் தூண்டுவதற்காக உடலசைவுகளை ஏற்படுத்தி நடனத்தைக் கோலங்களில் மாற்றங்களை வருவிப்பதற்கும் நடனங்கள் பயன்படும்.

மனித வளர்ச்சியின் ஆரம்பகால நடனங்களில் மேற்கூறிய இரண்டு பண்புகளும் விரவியிருந்தன. இவற்றால் நடனத்தின் "கருத்தேற்றப்பண்பு" தெளிவாகப் புலப்படும். வேட்டையாடப் போவதற்குரிய வீராவேசத்தைத் தூண்டும் நடனங்கள் ஆப்பிரிக்காவின் பழங்குடிகளிடத்து இன்றும் காணப்படுகின்றன. நோய்வாய்பட்டவர்களுக்கு நடனங்கள் வாயிலாக உளப்பிணி நீக்கும் உபாயங்களும் பழங்குடிகளிடத்துக் காணப்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:21 am

சமூகத்துக்குரிய கருவளப் பெருக்கம், உற்பத்திப் பெருக்கம், இயற்கைக்கு எதிரான போராட்டத்தை நெறிப்படுத்தல் என்பவற்றின் மீது மனித ஆற்றல் ஆழ்ந்து திசை திரும்ப வேண்டிய முரண்பாடுகள் முனைப்படைந்த வேளை பிறப்பின் பொழுதும், இறப்பின் பொழுதும் உற்பத்திப் பெருக்கின் பொழுதும், இயற்கை முரண்பாடுகளின் பொழுதும் நடனங்கள் இயற்றப்பட்டன.

உற்பத்திப் பெருக்கத்துக்கு மனித உழைப்பின் மகத்துவம் வாழ்க்கை நடப்பியலில் உணரப்பட, மனித விருத்தியன் ஒவ்வொரு கட்டமும் அழகியலால் ஆரவாரப்படுத்தப்பட்டன. இந்நிலையிலும் குழந்தைகள் பிறக்கும் போது நடனம் ஆடுதல், பூப்பு திருமணம், இறப்பு என்பவற்றின் போது நடனம் ஆடுதல் முதலியவை, வளர்ச்சியடையத் தொடங்கின. மனித உடல் உழைப்பை வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டிய நேரங்களில் நடனத்தின் முக்கியத்துவம் உணரப்படலாயிற்று. இந்நிலையிற் போர்க்கால நடனங்களும் முகிழ்த்தெழலாயின.

நடன வளர்ச்சியில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட தொழிற்பிரிவுகளும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியது. கிரேக்க நடனங்களை ஆராய்ந்தவர்கள் இதனை தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

கல்வியியலைப் பொறுத்தவரை உடல்திறன், உளத்திறன், மனவெழுச்சித்திறன், சமூகத்திறன், என்பவற்றை புரிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் நடனங்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனாலும் இவை தொடர்பான சில அடிப்படையான வினாக்கள் கல்வியியலிலே எழுப்பப்படுதல் உண்டு. தற்கால நடனங்கள் "பாவனையின் பாவணையாக" மேற்க்கொள்ளப்படும் திசை திரும்பல்களும் காணப்படுகின்றன. அதாவது வாழ்க்கை உணர்வுகளுடன் அவை ஒன்றிக்காது "பின்பற்றி" ஆடும் ஆட்டங்களாக மாறிவிடுகின்றன. இயற்கையாகக் கிளர்ந்தெழும் உணர்வுகளுடன் நடனங்கள் ஒன்றிணைக்கப்படுதலும், "உற்பத்தி செய்யப்படும்" உணர்வுகளில் இருந்து விடுவிக்கப்படுதலும் நடனக் கல்வியிற் கருத்தூண்றி நோக்கப்பட வேண்டியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:22 am

கல்வியியல் நோக்கில் நடனம் மூன்று பிரதான நிபந்தனைகளை உள்ளடக்கியது. அவை :

அ) வெளி (Space)

ஆ) காலம் ஃ நேரம் (Time)

இ) பங்குபற்றுவோர் (Actant)

இந்த மூன்றிலும் ஒன்றிணைவில் நடனம் இயக்கப்பெறுவதும், அவற்றின் சிதைவில் நடனம் உருக்குலைந்து விடுவதாகவும் அமையும்.

நடனம் ஆடப்படும் வெளி மூன்று வகையாகப் பாகுப்படுத்தப்படும். எந்த இடத்திலும் நடனத்தை நிகழ்த்துதல் "பொதுவெளி" என்று கூறப்படும். மக்கள் கூடும் பொதுவிடங்களில் நடனத்தை நிகழ்த்துதல் வெளியின் இன்னொரு பிரிவாகும். சிறப்பார்ந்த மேடைகளில் நடனத்தை நிகழ்த்துதல் "குறித்துரைக்கப்படும் வெளி" என்று கருதப்படும். ஆடுவோரதும், பார்ப்போரதும் புலன் உணர்வுகளுடன் நடனம் இணைந்துள்ளமையால் வெளிபற்றிய விளக்கம் நடனக் கல்வியில் வற்புறுத்தப்படுகின்றது.

காலத்தைப் பொறுத்தவரை நடனத்தில் "வாழ்க்கையோடிணைந்த நேரம்" "நடனநேரம்" என்ற பாகுபாடுகள் உள்ளன. நடனத்தின் போது உருவாக்கப்படும் அனுபவ வீசும் மனவெளிச்சிக் கோலங்களும் நடனத்தின் நேரத்தை உருவாக்குகின்றன.

வெளியையும் நேரத்தையும் ஒன்றிணைத்து பங்கு பற்றுவோரது நடன இயக்கங்கள் இடம்பெறும். ஆடுவோர் ஆடலை நிகழ்த்துவர், அவர்களின் உடல், உள்ளம் மனவெழுச்சித் தழுவிய பரிமாணங்கள் முதலியவை அழகியல் அனுபவங்களாக வெளியிடப்படுகின்றன.

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக