புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரத நாட்டியம் - Page 2 Poll_c10பரத நாட்டியம் - Page 2 Poll_m10பரத நாட்டியம் - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பரத நாட்டியம் - Page 2 Poll_c10பரத நாட்டியம் - Page 2 Poll_m10பரத நாட்டியம் - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பரத நாட்டியம் - Page 2 Poll_c10பரத நாட்டியம் - Page 2 Poll_m10பரத நாட்டியம் - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பரத நாட்டியம் - Page 2 Poll_c10பரத நாட்டியம் - Page 2 Poll_m10பரத நாட்டியம் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பரத நாட்டியம் - Page 2 Poll_c10பரத நாட்டியம் - Page 2 Poll_m10பரத நாட்டியம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பரத நாட்டியம் - Page 2 Poll_c10பரத நாட்டியம் - Page 2 Poll_m10பரத நாட்டியம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பரத நாட்டியம் - Page 2 Poll_c10பரத நாட்டியம் - Page 2 Poll_m10பரத நாட்டியம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பரத நாட்டியம் - Page 2 Poll_c10பரத நாட்டியம் - Page 2 Poll_m10பரத நாட்டியம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பரத நாட்டியம் - Page 2 Poll_c10பரத நாட்டியம் - Page 2 Poll_m10பரத நாட்டியம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
பரத நாட்டியம் - Page 2 Poll_c10பரத நாட்டியம் - Page 2 Poll_m10பரத நாட்டியம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரத நாட்டியம்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 10:38 am

First topic message reminder :

பரத(நாட்டியம்) நிருத்தியம்

தற்காலத்தில் காணப்படும் சாஸ்திரீய நடனம், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் என்னும் பெயருடன் விளங்குகிறது. முற்காலத்தில் தமிழகத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். ஏறத்தாழ கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இதற்கு சதிர் என்று பெயர் வழங்கலாயிற்று. பரத நாட்டியம் என்ற பெயர் சுமார் அறுபது ஆண்டுகளாகத் தான் பிரசித்தம் அடைந்துள்ளது.

இந்த பரத நிருத்யத்தின் முக்கியமான அம்சம் அரைமண்டி என்று கொச்சைத் தமிழில் வழங்கி வரும் பதமாகும். அந்த நிலையே இக்கலைக்கு மூலாதார வடிவமாக இருக்கிறது. பாதங்களை பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்து சீராக நிற்கும்நிலை ஆகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. முழங்கால்களும், பக்கவாட்டில் பரப்பப்பட வேண்டும். துடைகள் பூமியிலிருந்து அவரவர் கையினால் மூன்று அல்லது நான்கு சாண் தூரத்தில் இருக்க வேண்டும். அடவுகள் என்று கூறப்படும் பல அசைவுகள், இந்த மண்டல ஸ்தானத்தையே அடிப்படையாகக் கொண்டது. அடவுகளுக்கு பாதத்தைதான் அதிகமாக உபயோகிக்­கிறோம். இவை தட்டடவு, நாட்டடவு, குத்தடவு, மெட்டடவு தவிர அதன் சேர்க்கைகளே ஆகும். இந்த அடவுகள் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். லௌஷ்டம் என்று சொல்லப்படும் நிமிர்ந்த நிலை மார்பிற்கும், முதுகிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். மார்பினை நிமிர்த்தி வயிற்றினை உள்ளே தள்ளி நிற்கவேண்டும். முதுகானது பார்ப்பதற்கு ஒரு வில்போல இருக்க வேண்டும். தோள்களை ஏற்றவோ, இறக்கவோ, கூன்போடவோ கூடாது. தோள்களின் சீரான நிலையிலேயே முழங்கையை வைக்கவேண்டும். கைகளை மார்பின் முன் வைக்கும்போது ஒரு சாண் இடைவெளி விட்டுத்தான் வைக்க வேண்டும். இவைகளே அங்க சுத்தத்திற்கு தேவையான அடிப்படைகள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 10:53 am

ஆங்கிக அபிநயம்

உடலின் அங்க அசைவுகளினால் கருத்துக்கள் வெளியாவது ஆங்கிக அபிநயமாகும். இதில் உடலின் அங்கங்கள் மூன்றாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. இவை அங்கம், பிரத்தியங்கம், உபாங்கம் என்பவையாகும்.

அங்கங்கள்:

தலை, மார்பு, பக்கங்கள், கைகள், இடை, பாதங்கள் ஆகியவையாகும். சிலர் கழுத்தையும் இதனுடன் சேர்த்துக் கொள்கிறார்கள்.

பிரத்யாங்கங்கள்:

தோள்கள், முன்கைகள், முதுகு, வயிறு, தொடைகள், முன்கால்கள் ஆகிய ஆறையும் உணர்த்தும். சிலர் இதனுடன் மணிக்கட்டு, முழங்கைகள், முழந்தாள்கள் ஆகியவற்றையும், கழுத்தையும் சேர்த்துக் கொள்வர்.

உபாங்கங்கள்:

கண்கள், புருவங்கள், கண்மணி, கன்னங்கள், மூக்கு, தாடை, அதரங்கள், பற்கள், நா, நாடி, காது, முகம் ஆகிய 12உம் உபாங்கங்கள் என்று அழைக்கப்படும். இதைத் தவிர மற்ற அங்கங்களான குதிக்கால், கணைக்கால், கால்விரல், கைவிரல் என்பனவும் இந்த வகைக்குள் அடங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 10:53 am

வாச்சிக அபிநயம்

வார்த்தைகளின் வழியாக வெளியிடுதல் வாச்சிகாபிநயமாம். நாட்டியத்திற்கு ஏற்ற கதையாகவோ நல்ல கருத்துப் பொதிந்த பாடலாகவோ அன்றி ஓர் புகழ் பூத்த இசைப் புலவரால் இயற்றப்பட்டதாகவோ இருக்கும் சாஹித்தியத்தை வாச்சிகாபிநயம் என்று கூறுவர். பரத நாட்டியத்தின் பின்னணிப்பாடல், தெளிவான உச்சரிப்பு, பாட்டின் லயம், விதம் விதமான வாத்தியங்களின் சப்தங்கள் என்பனவும் வாச்சிக அபிநயமாகும். நாடகங்களில் வாச்சிகாபிநயம் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 10:54 am

ஆஹார்ய அபிநயம்

புறப்பொருட்களால் கருத்துக்களை உணரச் செய்யும் கலை ஆஹார்ய அபிநயமாகும். ஆஹார்யம் என்ற தலைப்பில் அடங்கும் அம்சங்கள் யாதெனில் அரங்க அலங்காரம், ஒப்பனை, உடை, ஒளி, ஒலி ஆகியவையாகும். ஒரு கதாபாத்திரத்தினுடைய குணம், குலம், பால், தகுதி எந்த சமூகத்தில் எவ்வகையான ஸ்தானத்தை வகிப்பவர் என்பனவற்றை பார்வையாளருக்கு விளக்கும் பொருட்டு எவ்விதம் அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆஹார்ய அபிநயம் விளக்குகின்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 10:54 am

ஸாத்விக அபிநயம்

உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை உடலுறுப்புகளாலும், முகத்தாலும், வாக்கினாலும் வெளிப்படுத்துவது ஸாத்விகாபிநயம் ஆகும். ஸத்வ என்றால் மனம் என்று பொருள். 'ஸத்வ'த்தின் அதிகரிப்பால் உடலில் உண்டாகும் எட்டு நிலைகளை பரதர் ஸாத்விக பாவம் என்று விவரிக்கின்றனர். அவை மெய்சிலிர்த்தல், கண்ணீர் விடுதல், முகத்தின் வண்ணம் மாறுதல், ஸ்தம்பித்தல், வியர்த்தல், நடுங்குதல், குரல் மாறுதல், மயங்கி வீழ்தல் ஆகியவையாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 10:55 am

குரு சிஷ்ய இலக்கணம்

ஓரு மாணவரைப் பொறுத்தமட்டில் பெற்றோரும், குருவுமே அதி உயர்வானவர்கள்.

குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஸ்வரக
குரு சாத்ஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவேநமக


குருவே முக்கடவுளான பிரம்மா, விஷ்ணு, சிவனாக ஒரு மாணவனுக்குத் திகழ்கிறார். இதைத்தான் இந்த ஸ்லோகம் விளக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் தலையாய குருவையே நாம் வணங்குகிறோம்.

இந்தியாவில் ஆச்சாரியார் (பாடம் கற்பிற்பவர் அல்லது பாடம் போதிப்பவர்) என அழைக்கப்பட்ட குருக்கள் பெரிய வித்துவான்களாகக் கணிக்கப்படுவதுமன்றி அவர்கள் தம் சீடருக்கு கலை அறிவைப் புகட்டத் தொடங்கிய நாள்தொட்டு தெய்வத்திற்கும், பெற்றோருக்கும் சமமாக மதிக்கப்படுகிறார்கள். பண்டைய காலத்தில் பெரிய ஞானிகளும், ரிஷிகளுமே குருக்களாக இருந்தனர். இவர்கள் நடைமுறை வாழ்க்கையில் கை தேர்ந்தவராக, வேதாந்தம் நிர்வாகத் திறமை மிகுந்தவராக இருந்தனர். சீடர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குருவின் ஆச்சிரமத்திற்கே சென்று அங்கு சில காலங்கள் தங்கி அவர்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தவர் போலிருந்து மல்யுத்தம், சிலம்பம் போன்ற போர்க்கலைகளையும், நுண்கலைகளையும், சாஸ்திரம் உட்பட எல்லாத் துறைகளிலும் அறிவைச் சம்பாதித்து எதற்கும் தயாரான நிலையில் ஒரு முழு ஆளுமை மிக்கவனாக தம் சொந்த வீட்டிற்குத் திரும்புவார். இதுவே குருகுகுலவாசமெனப் பெயர் பெறலாயிற்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 10:55 am

நடன ஆசான்

நுண்கலைகளில் ஒன்றான நாட்டியம் மாணவர்களுக்கு மேற் கூறிய குருகுலவாச முறையிலேயே பயிற்றுவிக்கப்பட்டது. சீடர்கள் அந்தந்தக் கலைகளில் நிபுணத்துவம் பெற்ற குருக்களின் கிராமத்திற்கோ அல்லது வீட்டிற்கோ சென்று அவருடன் தங்கி தம் கலையறிவைப் பெருக்கிக் கொண்டனர். இதனால்தான் நாட்டியக்கலை மரபுவழியானது என்று அழைக்கப்படுகிறது. சீடர்கள் தம் குருவின் வழிவந்தால் குருவின் கலைப்பாரம்பரியத்தை மரபு வழியாக கடைப்பிடித்து வந்தனர். குரு சிஷ்ய பரம்பரை என்னும் பதத்திற்கு மரபுவழிச் சொத்தான கலையையும் அதன் பாணியையும் அழியாமல் என்றும் பேணிக்காத்தல் என்பதே பொருள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:02 am

குருவிற்கு இருக்க வேண்டிய தகுதிகள்

* ஞாபகசக்தி
* இலட்சியநோக்கு
* ஒரு சிறந்த மாணவரை உருவாக்கும் ஆற்றல்
* அறிவு
* நியாயம்

இவற்றைத் தவிர ஒரு நடன ஆசிரியருக்கு இருக்க வேண்டிய மேலதிகமான தகுதிகள் பின்வருமாறு.

* கடவுள் நம்பிக்கை
* நாட்டிய சாஸ்திரத்துடன் ஏனைய கலைகளையும் முறைப்படி கற்றுக் கொடுக்கக் கூடிய அறிவு
* தூய்மையான வாழ்வு
* புகைத்தல், மது அருந்துதல், கீழ்தரமான செயல்களற்ற நற்பண்புள்ளவராக இருத்தல்.
* பெண் சீடர்களைத் தாயாக, சகோதரியாக முறையுடன் நடத்தும் பாங்கு.
* ஏழையாய் இருப்பினும் திறமை மிக்க சீடனை ஏற்றுக் கொள்ளும் தன்மை.

அத்துடன் தன் சீடர்களுக்கு நல்லது, தீயதை பிரித்தறியும் ஆற்றலை விளக்கி, அவர்கள் நடத்தையில் கரிசனையும், கண்டிப்பும், பொறுமையும், இரக்கமும் உள்ளவராக ஒரு நடன ஆசான் இருப்பார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:03 am

குருவாக வருவதற்குத் தகுதியற்ற தன்மைகள்

1* மது அருந்துதல்
2* நெறி தவறிய நடவடிக்கைகள்
3* வன்மம் சாதிக்கும் குணம்
4* சோம்பேறித்தனம்
5* களவாடும் ஆற்றல், திருட்டுக்குணம்
6* மற்றவர்களை முட்டாளாக்கும் விமர்சிக்கும் குணம்
7* தனக்குப் பரீட்சயம் இல்லாத துறையைத் தனக்குத் தெரியுமென வாதாடுதல்
8* மாணவருக்குக் கற்பிக்க வெட்கப்படுதல்
9* தன் மாணவரின் செய்கையில் அதீத சிரத்தை காட்டுதல்
10* தன் மாணவரின் செய்கையில் அதீத நம்பிக்கை வைத்தல்
11* கற்பிக்கும் போது கோபமடைதல்
12* தக் திறமைகளைப் பற்றித்தானே தற்புகழ்ச்சி அடைதல்
13* மற்றவர்களின் திறமையைப் பார்த்துப் பொறாமைப்படுதல்
14* பணத்திற்காக செல்வந்தரிற்குக் கலையைக் கற்பித்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:04 am

கற்பிக்கும் முறைகள்

1. மத்சிய தந்திரம்
மீன் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிப்பட்ட கணத்தில் தாய் மீனின் பார்வையைத் தொடர்ந்து தாயைப் பின்பற்றிச் செல்வது போல, குருவும் தன் சைகை நடத்தையினால் தன்னிடமுள்ள அறிவு, ஆற்றலைத் தன் சீடருக்கு வழங்கி அவர்கள் தாங்களாக முன்னேற முன்னோடியாகத் திகழ்வார்.

2. கூர்ம தந்திரம்
ஆமையானது முட்டைகளைத் தரையில் இட்ட பின் மீண்டும் நீருக்குள் போன பின்னரும் அதே நினைவாக இருந்து அதே மனோ வலிமையில் குஞ்சுகளை தன்னிடம் வரும்படி செய்யும். அவ்வாறே ஒரு ஆசான் எல்லா நிலைகளையும் தன் சீடருக்கு கற்பித்திருந்தாலும் சற்றுத் தள்ளியிருந்து அவர்களை அவதானித்து, அவர்கள் மீது தனக்கிருக்கும் மிகுந்த அக்கறையை அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்.

3. பிரம்மர தந்திரம்
ஒரு குளவியானது புழுவை எந்நேரமும் கொட்டி தொடர்ச்சியான தூண்டுதலினால் அப் புழுவை குளவியாக உருவெடுக்க வைப்பது போல, ஒரு குருவும் தன் தொடர்ச்சியான கண்காணிப்பினால் தன் சீடருக்கு இருக்கும் ஏனைய திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை வளர்க்க உதவி புரிவார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 11:05 am

4. மார்ஜார தந்திரம்
பூனைகள் எவ்வாறு தாம் ஈன்ற குட்டிகள் சுயேச்சையாக இரை தேடும்வரை அவற்றை வாயால் கவ்வி பல இடங்களிற்கு தூக்கிச் சென்று பாதுகாப்பதுபோல, ஒரு நல்ல ஆசான் தன் சீடர் ஒரு நல்ல பக்குவ நிலையை அடையும் வரை கண்காணித்துக் காப்பாற்றுவான்.

5. மர்க்கட தந்திரம்
குரங்கானது தன் குட்டி தன் வயிற்றுடன் ஒட்டிக் கொண்டிருந்த போதும,; தன் இச்சைப்படி இரை தேடி தான் நினைத்த நேரத்தில் அவறிற்கு உணவளித்துப் பேணிக் காப்பது போல, ஒரு குருவும் தன் சீடரைத் தாயைப்போல பராமரித்து, அவர்கள் எந்நேரமும் தன்னோடு இருந்தாலும், தான் விரும்பும் நேரத்தில் அவர்களிற்குத் தேவையான அளவு உபதேசிப்பார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக