புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
2 Posts - 1%
prajai
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
435 Posts - 47%
heezulia
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
30 Posts - 3%
prajai
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
காஸா என்கிற சிறை! Poll_c10காஸா என்கிற சிறை! Poll_m10காஸா என்கிற சிறை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஸா என்கிற சிறை!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 07, 2010 10:52 am

பூமியின் புனிதமான பகுதி பாலஸ்தீனம் என்பார்கள். அந்தப் பகுதி இன்றைக்கு உணவுக்காகக் கையேந்தும் நிலையில் இருக்கிறது. ஓயாத போர்களும், அரசியலும் சேர்ந்து மக்களை முடக்கிப் போட்டிருக்கிறது. சர்வதேசச் சட்டங்கள் அனைத்தும் வல்லரசுகளுக்கு ஆதரவாக வளைக்கப்பட்டிருக்கின்றன. மத ரீதியாகப் பொது முத்திரை குத்தப்பட்டு, அப்பாவிகள்கூட பயங்கரவாதிகளாகப் புனையப்பட்டிருக்கிறார்கள். யார் உரிமையாளர், யார் ஆக்கிரமிப்பாளர் என்ற உண்மைகள் திரிந்திருக்கின்றன. ஒடுக்கப்பட்ட மற்ற இனங்களைப் போல பாலஸ்தீனர்கள் ஆதரவற்றவர்களாக இல்லை என்பது மட்டும் கொஞ்சம் ஆறுதல்.


பாலஸ்தீனத்தைப் பற்றிச் சொல்லும்போது, 2006-ம் ஆண்டுத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட முடியாது. பாலஸ்தீனத்தின் இரு பகுதிகளான மேற்குக் கரை மற்றும் காஸô துண்டுப் பகுதி ஆகிய இரண்டுக்கும் சேர்த்து நடந்த தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது.


ஃபதா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஹமாஸின் வெற்றியை இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஹமாஸ் தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்த முடியாது எனப் பின்வாங்கின.


கூட்டணி அரசில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,மேற்குக் கரையை விட்டு ஹமாஸ் வெளியேற்றப்பட்டது. இப்போது காஸô பகுதியில் மட்டும் ஹமாஸ் ஆட்சி செய்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதால், காஸô துண்டுப் பகுதியை சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவித்துவிட்டது. அத்தோடு நில்லாமல், கடல்வழியான போக்குவரத்துத் தடையும் விதித்திருக்கிறது.


இஸ்ரேலின் இந்தக் கட்டுப்பாட்டால், உணவு மற்றும் மருந்துப் பொருள்களைத் தவிர வேறெதையும் கடல்வழியாக காஸôவுக்குள் கொண்டு செல்ல முடியாது. கட்டுமானத்துக்குப் பயன்படும் சிமென்ட் மற்றும் இரும்புச் சட்டங்கள்கூட தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது நடக்கும் ராக்கெட் தாக்குதலுக்கு சிமென்டும் இரும்புச் சட்டங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது இஸ்ரேலின் குற்றச்சாட்டு.


அது சரி, காஸôவுக்குள் இதைக் கொண்டு செல்லலாம், இதைக் கொண்டு செல்லக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்க இஸ்ரேலுக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழலாம். அதற்கும் இஸ்ரேல் தரப்பில் பதில் இருக்கிறது. அதாவது, போர் தொடுப்பதற்காக எதிரிக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சர்வதேசச் சட்டங்கள் அனுமதி வழங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறிக் கொள்கிறது.


இஸ்ரேலின் தடைகளால், காஸô மிகப்பெரிய சிறை போல மாறியிருக்கிறது. உணவுப் பொருளும் எரிபொருளும் போதிய அளவு இல்லை. தேவையான அளவு மின்சாரம் தயாரிக்கவும் வழியில்லை. கடந்த ஆண்டில் எகிப்தின் ரஃபா எல்லையை மக்கள் ஆவேசமாகக் கடந்து சென்றதே காஸôவின் நிலைமைக்குச் சாட்சி. மண்ணெண்ணெய் மற்றும் ரொட்டியைத் தேடி பெண்களும் குழந்தைகளும் நாடு கடந்து போனதை அவ்வளவு எளிதாக நினைவிலிருந்து அகற்றவிட முடியாது.


கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் கடல் போக்குவரத்துத் தடைகளை மீறி உதவிப் பொருள்களைக் கொண்டு செல்ல பல்வேறு அமைப்புகளும் பல முறை முயற்சி செய்திருக்கின்றன. காஸô விடுதலை இயக்கம் என்கிற அமைப்பு இதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், இதுவரையில் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை.


இந்தச் சூழ்நிலையில்தான் சர்வதேசக் குழுவினரை ஏற்றிக்கொண்டு 8 கப்பல்கள் காஸô நோக்கி கடந்தமாத இறுதியில் புறப்பட்டன. இஸ்ரேலால் தடைசெய்யப்பட்ட சிமென்ட் போன்ற பல்வேறு பொருள்களும் இந்தக் கப்பல்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர், பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த அணியில் சென்றனர். துருக்கியிலிருந்து செயல்படும் ஐஎச்எச் என்கிற அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் அதிகமானோர் இதில் அடங்குவர்.


இந்தக் கப்பல்களில் காஸôவை மறுநிர்மாணம் செய்வதற்கான பொருள்கள் இருப்பதாக பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூறினர். சர்வதேச கடல் பரப்பு வழியாக காஸôவை அடைவதை யாரும் தடுக்க முடியாது எனவும் அவர்கள் வாதிட்டனர். ஆனால், வழக்கம்போல இஸ்ரேல் தரப்பிலிருந்து எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டது.

இஸ்ரேலில் உள்ள ஆஸ்தோத் துறைமுகத்தை நோக்கி வருமாறு கப்பல்கள் அறிவுறுத்தப்பட்டன. கப்பல்களில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் ஆய்வுக்குப் பிறகு காஸôவுக்குள் அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.


ஆனால், "எங்கள் இலக்கு காஸôதான்' என்ற கோஷத்துடன் கப்பல்கள் தொடர்ந்து முன்னேறியதால், உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேல் கப்பல்கள் சுற்றி வளைத்தன. சண்டை மூண்டது. அப்போது மவி மர்மரா என்கிற கப்பலில் இஸ்ரேலிய வீரர்கள் ஏறி அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 8 பேர் துருக்கியைச் சேர்ந்தவர்கள். கப்பல்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்படியாக, இஸ்ரேலின் தடையை மீறி காஸôவுக்குள் நுழைவதற்கான இன்னொரு முயற்சியும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.


ஆனால், இஸ்ரேலுக்கு எதிரான இரண்டு விளைவுகள் இந்தச் சம்பவத்தால் ஏற்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் என்கிற நாட்டை அங்கீகரித்த முதல் பெரிய இஸ்லாமிய நாடான துருக்கியுடனான உறவில் இப்போது விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இது இஸ்ரேலின் வருங்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக அமையக்கூடும்.


அடுத்ததாக, காஸôவின் விடுதலைக்கு ஆதரவாக உலகின் பல நாடுகளிலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடப்பதற்கு இந்தச் சம்பவம் காரணமாக அமைந்திருக்கிறது. இஸ்ரேலுக்கு நெருக்கமான நாடுகளாகக் கருதப்படும் பிரிட்டன், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.


இஸ்ரேலிய கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஸ்வீடன் துறைமுக ஊழியர்கள் அறிவித்திருக்கிறார்கள். இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கலந்து கொள்ள இருந்த பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கை நார்வே ரத்து செய்திருக்கிறது.


ஆனால், அமெரிக்க ஆதரவு என்கிற பெரும் பலம் இருக்கும்வரை இஸ்ரேல் எதற்கும் கவலைப்படப் போவதில்லை. எல்லா நாடுகளையும் விட கூடுதல் ராணுவ பலத்தை இஸ்ரேலுக்கு அளித்திருப்பது அமெரிக்காதான். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைக் காப்பதும் அந்த நாடுதான்.


ஒபாமா அதிபரான பிறகு, இஸ்லாமிய நாடுகளை அரவணைத்துச் செல்லும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரது முடிவுப்படி, இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன; ஆப்கனிலிருந்து கூட்டுப் படைகள் அடுத்த ஆண்டில் வெளியேறத் தொடங்கும். அந்த வரிசையில், காஸôவுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமானால், இஸ்ரேல் பற்றியும் முடிவெடுப்பாரோ என்னவோ?

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jun 07, 2010 11:28 am

மேயர மாட்ட நக்கர மாடு கெடுத்தா மாதிரி சும்மா இருன்தவன சொரிஞ்சு விட்டாங்க ?ஹமாஸ் பயன்கரவாத இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.அதனால்தான் மற்ற நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.1980 கலில் இருந்து ஒவ்வொரு முரை ஹமாஸ் பயன்கரவாதீகள் இஸ்ரெல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி ஒரு சிலர் பலி ஆவர்.பதிலுக்கு 40,50 பேரை கொல்லுவது இஸ்ரெலின் வழக்கம்.இஸ்ரெலில் பேருந்தில் வெடிகுன்டு வெடித்து 10 பேர் இறந்தால் பதிலுக்கு காசா பகுதியில் நுழைந்து 100 பேரை கொல்லுவதை வழக்கமாக கொன்டுள்ளது.60 வருடமாக நீடிக்கும் இப்பிரசினைக்கு ஒரே தீர்வு பேச்சுவார்தை வார்த்தையும் இஸ்ரெலை ஒரு நாடாக அரபு நாடுகள் அங்கீகரிப்பதும்தான்.
ராம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 07, 2010 11:42 am

எல்லாம் ஊகம் தான் .முழுக்க , முழுக்க,அமெரிக்காதான் பக்கத் துணை.அனைத்துக்கும் மூலக்காரணம்............இஸ்ரேலியின்,பாலஸ்த்தீன பகையை பயன் படுத்திக்கொள்கிறது.......

களமும் காலமும் விரைவில் பதில் சொல்லும் ...
இறைவன் போதுமானவன்.......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Jun 07, 2010 11:46 am

இதைப்பற்றி நான் பெரிதாக எழுத விரம்பவில்லை கோபம் பொத்துக்கிட்டு வருது, கை கால் நடுங்குது கோபத்தால்,1940 களின் உலகப் படத்தைப் பாருங்கள். அதில் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்காது. வாழ்வதற்கு இடம் இல்லாது அலைந்து கொண்டு இருந்த பொறம்போக்குகளுக்கு மனிதாபிமானம் பார்த்து விருந்தினராக ஏற்றுக்கொண்டது குற்றமா??



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Jun 07, 2010 11:48 am

kalaimoon70 wrote:எல்லாம் ஊகம் தான் .முழுக்க , முழுக்க,அமெரிக்காதான் பக்கத் துணை.அனைத்துக்கும் மூலக்காரணம்............இஸ்ரேலியின்,பாலஸ்த்தீன பகையை பயன் படுத்திக்கொள்கிறது.......

களமும் காலமும் விரைவில் பதில் சொல்லும் ...
இறைவன் போதுமானவன்.......

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 07, 2010 11:50 am

ரமீஸ் wrote:
kalaimoon70 wrote:எல்லாம் ஊகம் தான் .முழுக்க , முழுக்க,அமெரிக்காதான் பக்கத் துணை.அனைத்துக்கும் மூலக்காரணம்............இஸ்ரேலியின்,பாலஸ்த்தீன பகையை பயன் படுத்திக்கொள்கிறது.......

களமும் காலமும் விரைவில் பதில் சொல்லும் ...
இறைவன் போதுமானவன்.......

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் இறைவன் மிகப்பெரியவன்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jun 07, 2010 12:20 pm

1948ல் இஸ்ரெல் உதயமானதாகவும் (ஐ.நா உதவிஉடன் )அப்பொது அரபு நாடுகள் ஐ.நா வை பொருட்படித்தாமல் இஸ்ரெல் மீது படையெடுத்ததாக வரலாறில் படித்ததாக நினைவு.அன்று முதல் பிரசனைதான்.காஷ்மீருக்கு 2 வருடம் முன்னதாகவே?
ராம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 07, 2010 12:21 pm

சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காஸா என்கிற சிறை! 47
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 07, 2010 12:23 pm

காஸா என்கிற சிறை! 440806 காஸா என்கிற சிறை! Icon_eek

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 07, 2010 1:38 pm

ரமீஸ் wrote:இதைப்பற்றி நான் பெரிதாக எழுத விரம்பவில்லை கோபம் பொத்துக்கிட்டு வருது, கை கால் நடுங்குது கோபத்தால்,1940 களின் உலகப் படத்தைப் பாருங்கள். அதில் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்காது. வாழ்வதற்கு இடம் இல்லாது அலைந்து கொண்டு இருந்த பொறம்போக்குகளுக்கு மனிதாபிமானம் பார்த்து விருந்தினராக ஏற்றுக்கொண்டது குற்றமா??

மிக சரியாய் சொன்னீர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக