புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
53 Posts - 42%
heezulia
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
304 Posts - 50%
heezulia
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
21 Posts - 3%
prajai
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உண்மையில் எதுதான் காதல்? Poll_c10உண்மையில் எதுதான் காதல்? Poll_m10உண்மையில் எதுதான் காதல்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையில் எதுதான் காதல்?


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 3:05 am

உண்மையில் எதுதான் காதல்? Heart10உண்மையில் எதுதான் காதல்? Heart10உண்மையில் எதுதான் காதல்? Heart10உண்மையில் எதுதான் காதல்? Heart10உண்மையில் எதுதான் காதல்? Heart10

மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் கொத்துக் கொத்தாகப் பறக்க, படபடப்புடன் காத்திருக்கிறார்கள் காதலர்கள். உலகெங்கிலும், காதல் மொழி ததும்பும் வாழ்த்து அட்டைகளை அனுப்புவது, எதிர்பாராத பரிசுகளைத் தந்து அசத்துவது தொடங்கி, பறக்கும் மற்றும் கிறக்கும் முத்தங்களை அள்ளி வழங்குவது வரை அல்லது அதைக் கடந்தும் காதலர் உலகம் பிப்ரவரி 14 ஆம் தேதி அமர்க்களப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா போன்ற வளம் நிறைந்த, ஆண்-பெண் உறவுக்கு எந்தவிதக் கலாசாரத் தடையும் இல்லாத நாடுகளில்தான் நெடுங்காலமாகத் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 90களுக்குப் பிறகு தீவிரமாக தாராளமயப் பொருளாதார நடவடிக்கைகளால், கட்டுக்கோப்பான தோற்றத்துடன் இருந்த (அல்லது இருந்தது போலிருந்த) நாடுகளின் கலாசாரத் தளத்திலும் தாராளமயம் ஊக்குவிக்கப்பட்டது.

இந்நாடுகளின் சந்தையில் தோன்றிய புதிய எழுச்சி, அதுவரை சற்றே இறுகிப் போயிருந்த தனிநபர் சுதந்திரம் பற்றிய கருத்தாக்கத்தை உடைத்து, கொண்டாட்டங்கள், கேளிக்கைகளுக்காகப் புதுப்புது வாய்ப்புக்களை உருவாக்கித் தந்தது. நுகர்வுக் கலாசாரம் சகட்டுமேனிக்கு எகிற ஒவ்வொரு கொண்டாட்டமும் சந்தையின் எல்லையை வேகமாக விரிவாக்கியது. இப்படித்தான் காதலர் தினமும் ஆர்ப்பாட்டமான கொண்டாட்டத்திற்குரிய தினமாக சமீப காலங்களில் மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு இணக்கமான சமூக மனோபாவத்தை உருவாக்குவதில் சந்தைச் சூத்திரங்களே ஆதாரமாகச் செயல்படுகின்றன. இன்றைய உலகியல் விதி அது.

அன்னையர் தினம், தந்தையர் தினம் என்றெல்லாம் கொண்டாடப்படும் பொழுது, காதலர்களுக்கென்று ஒரு தினம் கூடாதா... என்ற ஆதங்கம் பொங்கும் கேள்வியைக் காதலர் வட்டாரம் எழுப்பலாம்.

தாராளமாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த நாள் கொண்டாட்டம் காதல் உலகைப் பலப்படுத்துகிறதா அல்லது பலவீனப்படுத்துகிறதா என்ற கேள்வி சமூகத்தின் இன்னொரு புறமிருந்து எழலாம். அதற்கு விடை...?

எல்லா நாளும் காதலிக்கலாம். பலரும் காதலிக்கிறார்கள். காதலர் தினத்திலிருந்து பலர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அவ்வாறும் நடக்கலாம். தொடர்ந்து மனம் ஒத்த காதலர்களாகவே இருந்து ஓராண்டு... ஈராண்டு... நினைவைச் சிலர் காதலர் தினத்தன்று விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். அப்படியும் கொண்டாடலாம். காதல் புரிந்து கல்யாணம் செய்துகொண்ட தம்பதியர் தங்களின் பரவசமிக்க காதல் தருணங்களைக் காதலர் தினத்தன்று கொண்டாட்டத்துடன் நினைவுகூரலாம்.

இப்படிக் காதலைப் பொறுத்தும் காதலர்களைப் பொறுத்தும் கொண்டாட்டத்தின் தரமும் நிறமும் வேறுபடுகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாகக் காதலர் தினம் ஏற்படுத்தியிருக்கும் பொதுக் கருத்து ஒரு புள்ளியில் குவிமையம் கொள்கிறது. அந்தப் புள்ளி..?

முழு உடன்பாட்டுடன் அல்லது அரைகுறை உடன்பாட்டுடன் காதலர் உலகம் தங்கள் எல்லைகளைத் தாராளமாகத் தளர்த்திக் கொள்ளவோ அன்றி எல்லை மீறவோ சமூக அங்கீகாரம் கோருவதுதான் காதலர் தினமா என்ற கேள்விதான் அந்தப் புள்ளி.

எல்லைகளைத் தளர்த்தினால் என்ன..? மீறினால் என்ன..? காதலர்களின் சுதந்திர உரிமை அது. அதை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது, அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தவிர என்ற கருத்தும் ஒரு பக்கம் முன் வைக்கப்படுகிறது.

இப்படிப் பல்வேறு கேள்வி சூழ் உலகத்தில் தான் காதலை வாழவைத்துக் காதலர்களும் வாழ வேண்டியிருக்கிறது. உண்மையில் காதலர்கள் பாடு பெரும் திண்டாட்டம்தான். பொய்யும் மெய்யும் கலந்தே அவர்கள் சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகமும் அவ்வாறே காதலர்களை எதிர்கொள்கிறது.

காதலர் தினக் கொண்டாட்டங்களின் தீவிரம் இந்தப் பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வருமா...? இல்லை, இன்னும் தீவிரப்படுத்துமா...?

காதல் வல்லுநர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள்தான் கணித்துச் சொல்ல முடியும்.

சரி, அது போகட்டும். உண்மையில் எதுதான் காதல்?

இதுதான் காதல் என்று, அறுதியிட்டுச் சொல்ல முடியாததுதான் காதல். உலகம் ஏகமனத்துடன் ஒப்புக் கொள்ளும் பொதுவான விளக்கத்தை யாரும் காதலுக்குச் சொல்லவில்லை. என்றாலும் காதலை அவரவர் சொந்த உணர்வும் அனுபவமும் சார்ந்தும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அநேகமாக அது தான் சரியாக இருக்கும் என்றே கருத வேண்டியிருக்கிறது.

ஒருவரோ அல்லது ஒருத்தியோ காதல் வயப்படுவதற்கான தகுதிகள் அல்லது படிநிலைகள் என்ன?

காதலிப்பதற்கு மூன்று தகுதிகள் வேண்டும் என்று தன் கோணத்தில் வரையறுக்கிறார் அமெரிக்காவின் முன்னணிக் காதல் உளவியலாளர்களில் ஒருவரான லிண்டா ஒல்சன்.

முதலில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படையில் பாலின் ஈர்ப்பு இருக்க வேண்டும். அடுத்து, ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போகும் தன்மையுடையவர்களாக இருத்தல் வேண்டும். அதையடுத்து, இணைந்து வாழ்வதற்கான உறுதியோடு இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் இருந்தால் இருவர் காதலிக்கலாம் என்கிறார் அவர்.

பொதுவாகக் காதல் என்பது இதயத்தில் மலரும் உணர்வு என்றே பெரிதும் கருதப்படுகிறது. ஆனால், அறிவியல் அது மூளையில் உதிப்பது என்கிறது.

நமது உடலில் குறிப்பாக நரம்பு மண்டலத்தில் நிகழும் இரசாயன மாற்றங்களின் விளைவாகவே காதல் உணர்வு தோன்றுகிறது என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள்.

Phenylethylamine அல்லது PEA, Dopamine, Norepinephrine ஆகிய மூன்று இரசாயனங்களே நம்முள் காதல் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்று சொல்கிறார்கள். இந்த இரசாயனக் கலவையில் நிகழும் ஏற்ற, இறக்கங்களைப் பொறுத்துக் காதல் உணர்வும் ஆளாளுக்கு வேறுபடுகிறது என்கிறார்கள்.

அடிப்படையில் பாலின கவர்ச்சியே காதலுக்கான முதல் அறிகுறி என்று அறிவியல் சொல்கிறது. அப்படியெனில் வெறும் காமம் தான் காதலா...? அல்ல, காமமும் கலந்தது காதல் என்கிறார்கள் சமூகவியலாளர்கள். பாலின ஈர்ப்பு எள்ளளவும் இல்லாத காமம் கடந்த காதல் உண்டா..? இல்லை என்கிறது அறிவியல். இருக்கலாம் என்கிறது சமூகவியல். அதைத்தான் `குணா' கமல் பாணியில் `புனிதக் காதலாக'ப் புரிந்து கொள்கிறது ஒரு பகுதி சமூகம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 3:07 am

காதலின் தொடர்ச்சி மண வாழ்க்கை என்ற கோட்பாட்டை வலியுறுத்திய மரபில் வந்தது நமது சமூகம். இன்று எல்லாக் காதலின் தொடர்ச்சியும் திருமணத்திலா இணைகிறது? திருமணத்துக்குப் பிறகு தோற்ற காதலும் உண்டு. அதேபோல் திருமணத்தில் முடியாமலேயே ஜெயித்த காதலும் உண்டு.

சிலருக்குக் காதல் வயப்பட அழகு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. வேறு சிலருக்கு அழகும் பண்பும் இணைந்திருந்தால் காதல் வருகிறது. இன்னும் சிலருக்கு அழகும் பண்பும் அறிவும் சரி விகிதத்தில் கலந்திருந்தால்தான் காதல் வரும் போலிருக்கிறது. காதலிக்க நினைப்பவர்கள் இப்படிப்பட்ட அளவுகோல்களுடன் தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள். அவரவர் மதிப்பீடுகளில் கிடைக்கும் திருப்தியைப் பொறுத்துக் காதல் வருகிறது வளர்கிறது.

காதல் வயப்பட்டவர்களின் மூளையை `ஸ்கேன்' செய்து ஆராய்ந்து ஹெலன் ஃபிர் என்ற நிபுணர்,


1.காமம்,
2. ரொமாண்டிக் லவ் எனப்படும் காமம் கலந்த காதல்,
3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிறுத்தும் காதல்

ஆகிய மூன்று விதமான உணர்வுகளைக் கண்டறிந்ததாகச் சொல்கிறார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இயல்பான பாலியல் கவர்ச்சிதான் காதலுக்கு முதல் படியாக இருக்கிறது என்பதை அறிவியல் ஆய்வுபூர்வமாகச் சொல்கிறது.

சமீப காலங்களில் மணவிலக்கு கோருபவர்களில் காதலித்து மணம் புரிந்தவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படியெனில் திருமணத்துக்குப் பிறகு தோற்றுவிடக் கூடியதா காதல்?

கடந்த பத்தாண்டுகளில் காதல் திருமணங்களில் எத்தனை முறிந்தன...பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணங்களில் எத்தனை முறிந்தன என்று புள்ளி விபர ரீதியாகக் கணக்கெடுத்துப் பார்த்தால்தான் தெரியும். காதலித்து மணம் புரிந்தவர்களின் வாழ்க்கை நீடித்திருக்காது என்ற பொதுக் கருத்து பரவியிருக்கிறது. மாறாக காதலித்துக் கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்களும் நிறைய உண்டு.

காதல் திருமண வாழ்க்கையின் முறிவு எளிதில் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு விடுகிறது. அதே வேகத்தில் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணங்களின் முறிவு பொது அரங்கத்துக்கு வருவதில்லை. காதல் திருமணத்துக்கு எதிரான சமூக மனோபாவத்துக்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

சட்டரீதியாகப் பாதுகாப்பு அளிக்கும் பந்தமின்றி, உடன்பாடு நீடிக்கும் வரை இணைந்து வாழ்வது இல்லையெனில், பிரிந்து விடுவது என்ற மேலை வாழ்க்கை நோக்கு அறிவுஜீவிகள் வழியாகப் படித்த மேல் தட்டுப் பிரிவினரிடையே ஊடுருவி வருகிறது.

இன்றைய வாழ்வின் சமூக, பொருளாதார நெருக்கடிகளின் விளைவாகத் திருமணம் என்ற ஆயுள் பொறுப்பிலிருந்து பலரும் தப்பிக்கவே நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோராலும் காதலிலிருந்து தப்பிக்க முடிவில்லை.

`வாழ்க்கை என்றால் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உண்டு. அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்' என்பது ஜோர்ஜ் சான்ட்டின் காதல் பொன்மொழி.

இந்த ஒரே ஒரு மகிழ்ச்சியை எல்லா மனிதர்களும் துறக்க விரும்புவார்களா...? அதனால்தான் பெரும்பாலான மனிதர்கள் காதலிக்கிறார்கள்- தெரிந்தும் தெரியாமலும்.

காதல், காமத்தில் உடைந்துபோகலாம். கல்யாணத்துக்குப் பிறகு முறிந்து போகலாம். கல்லறைவரை கூட நீடித்திருக்கலாம். இவை அனைத்தும் காதலிப்பவர்களின் அகமும், புறமும் சார்ந்தது. காமமும் இதர எதிர்பார்ப்புகளும் கடந்து அந்த உறவைத் தக்க வைத்திருப்பதுதான் காதலின் சூட்சுமம்; காதலர்களின்.சவால் எனினும் காதல் என்றாலே ஏதோ.... ஒழுக்கத் தண்டவாளத்திலிருந்து தடம்புரள்தல் என்று உடனடி ஆவேசம் கிளப்புவதுதான் இன்றைய சமூகப் `பண்பாடாக' இருக்கிறது. அது எந்த அளவுக்குப் பொய் கலந்தது என்பதை எல்லாக் காதலர்களும் நெருக்கமாக அறிவார்கள்.

காதல் சார்ந்த குற்றங்களும் வன்முறைகளும் நாளுக்கு நாள் பெருகிவருவதற்குச் சமூக ஒடுக்குமுறை முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

வரலாறு போலவோ அல்லது அறிவியல் போலவோ காதலை யாருக்கும் கற்றுக்கொடுத்துப் புரியவைப்பது சாத்தியமில்லை. அது முற்றிலும் சொந்த அனுபவம் போதிக்கும் பாடம்.

காதலித்தால் கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொண்டு காதலிக்கலாமா...? தெரியவில்லை.

கூட்டிக்கழித்துப் பார்த்தால், காதலை மிகப் புனிதமாகவோ அல்லது வெறும் இச்சைக் கூடலாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. எல்லோருக்கும் இப்படித்தான் தோன்ற வேண்டும் என்பதில்லை.

காதலை, ஓர் உணர்வாக மட்டுமே பார்ப்பதே கடைசி யதார்த்தமாகப்படுகிறது.

இதோ, இன்னொரு காதல் பொன்மொழி:

"காதலுக்கு என்னதான் தீர்வு...? இன்னும் இன்னும் காதலிப்பதுதான்..!

உண்மையில் எதுதான் காதல்? Spin110

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 3:08 am

காதல்


இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புத்தான் காதல்.

அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதும், மனைவி கணவனிடத்தே கொண்டிருப்பதும் காதல்தான்.

ஆனால் அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதை பற்று என்றும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதைப் பரிவு என்றும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதை நட்பு என்றும், கணவன் மனைவியிடத்தோ, மனைவி கணவனிடத்தோ கொண்டிருப்பதை அன்பு என்றும் நாம் வகுத்துக் கொண்டுள்ளோம்.

இந்த அன்பு, நேசம், பிரியம், பற்று, பரிவு, நட்பு எல்லாமே காதலென்ற சொல்லினுள்ளேயே அடங்குகின்றன.
இருந்தும் தற்போது காதல் என்பது ஆண் பெண் இடையேயுள்ள அன்பை மட்டும் குறிப்பதாகி விட்டது.

இந்தக் காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

காதலினாலுயிர் வாழும் - இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் - இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் - பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்........

(காதற்பாட்டு, அந்திப்பொழுது - பாரதியார் பாடல்கள்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 3:09 am

ஆழமான அன்பு நிறைந்த காதல் ஒருவனுக்கு இன்பத்தையும் இனிமையையும் மட்டுமல்லாது வீரத்தையும் துணிவையும் அறிவாற்றலையும் வாழ்வில் பற்றுதலையும் கொடுக்கிறது. இதை இன்றைய ஆராய்சியாளர்களும் மருத்துவர்களும் மட்டுமல்லாது அன்றைய கவிஞர்களும் அனுபவித்து உணர்ந்து சொல்லியுள்ளார்கள்.

காதல் இல்லாத வாழ்வே இல்லையெனக் கூறலாம்.
அப்படியொரு வாழ்வு இருந்தால் அது அர்த்தம் இல்லாததாகவும், சோகம் நிறைந்ததாகவும், தனிமைப் பட்ட உணர்வைத் தருவதாகவும், தாழ்வுச் சிக்கலைத் தோற்றுவிப்பதாகவுமே இருக்கும்.

மனிதர் தோன்றிய காலத்திலிருந்தே காதலும் தோன்றி விட்டது. இதை யாரும் இல்லையென்று சொல்லி விட முடியாது. பண்டைய காலத்திலேயே காதல் ஆதரிக்கப் பட்டுள்ளது. களவியல் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இருந்தும் இடைப்பட்ட காலத்தில் காதல் என்ற வார்த்தையை உச்சரிப்பதே தவறு என்றதொரு தப்பான கருத்து எம்மவரிடையே நிலவியது. இதற்கான முக்கிய காரணம் எம்மவரிடையே தலை விரித்தாடிய சாதி மதம் அந்தஸ்து போன்ற அர்த்தமற்ற காரணங்களே.

இன்றைய போரும் அதனால் ஏற்பட்ட புலம் பெயர் வாழ்வும் எம்மவரிடையே ஆழப்பதிந்து விட்ட இப்படியான சமுதாயச் சீர்கேட்டுச் சம்பிரதாயங்களை முழுமையாக வழக்கொழிய வைக்கா விட்டாலும் ஓரளவுக்குத் திருத்தியுள்ளன.

தற்போது காதலனும் காதலியும் மற்றவர் அறியாமல் ஒருவரை யொருவர் தனியாகச் சந்தித்து மனம் விட்டுப் பேசிக் கொள்ளும் களவியலை பெற்றோர்கள் கண்டும் காணாதவர்கள் போல இருந்து அநுமதிக்கிறார்கள்.

மனம் ஒத்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து மனம் விட்டுப் பேசுவது ஆரோக்கியமானது. அவசியமானது.

மிகமிக நெருக்கமான அன்பின் ஆழ்ந்த வெளிப்பாடே உடல் இணைவு என்றாலும் காதலர்கள் தமக்கென ஒரு வேலி போட்டு அன்பால் மட்டும் தழுவிக் கொள்வது அழகானது.

உடல்களை விடுத்து
உள்ளங்கள் பரிசிக்கும் காதல்
உன்னதமானது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 3:13 am

காதலர்தினம்

ரோஜாவை மட்டுமல்லாமல்
மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி..........
நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்..............
இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள்.


வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப்பட்ட நாள் இது.

அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி.(14.270)

இந்தத் தினம்தான் காதலர்தினம்.

இது ஏன் வந்தது?
எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா?


கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி - 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள்.
அவனது மந்திரி பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் -

திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும் திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எழுதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக் கூடாது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும். இவ் அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள். என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான்.

அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது.

அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார்.

இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார். அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பூத்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான்.

கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான்.

வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த அந்த அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து கண்ணீர்ப் பாக்கள் சொரிந்தன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 3:15 am

அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்

விழி இருந்தும்
வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!


- உன்னுடைய வலண்டைனிடமிருந்து! -


அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரிமாறப் படும் வைரவரிகள் இவை. இதுவே முதல் வலண்டைன் மடல்.

அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்துத் தன்னையே பலி கொடுத்த பாதிரியார் ரோம் மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார்.

ரோமானிய தேவாலயங்கள் ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம் பாகான்(மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது.

ஏறக்குறைய 200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டைன புனிதராக அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் உலகம் முழுவதும் கொண்டாடத் தலைப்பட்டது.

இதுவே காதலர்தினம்.

***********************************

ஒருவர் இன்னொருவரால் காதலிக்கப் படும் போது அவர் படிப்பிலோ அல்லது கலையிலோ ஏன் போராட்டத்திலான தீர்க்கமான ஈடுபாட்டிலோ இன்னும் ஒரு படி மேலே சிறந்து விளங்குகிறார். என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு.

இது அன்றைக்கே தெரிந்திருந்தால் அன்றைய ரோமானியச் சக்கரவர்த்தி வலண்டைனுக்கு இப்படியொரு கொடுமையைச் செய்திருக்க மாட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 3:24 am

காதலர்கள் காதல் கடிதம் அனுப்புவதற்கு உகந்தநாள் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே மிகவும் சிறந்த நாளாக இருக்கும். அதே சமயத்தில் அமாவாசை, அஷ்டமி, நவமி, பவுர்ணமி போன்ற நாட்கள் காதலர்கள் முதன் முதலில் மட்டும் அல்ல எப்போதும் இதுபோன்ற நாட்களில் சந்திக்கக்கூடாது.

ஏன் என்றால் வானில் இருந்து இந்த நாளில் சீர்காந்த அலை கொண்ட கதிர்வீச்சு பூமியை வந்து அடைகின்றது. இதனால் அன்றைய தினங்களில் காதலர்கள் சந்தித்தால் ஒருவரை ஒருவர் பிரிய நேரிடும். இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க மேற் கண்ட தினங்களில் சந்திக்காமல் இருப்பது நல்லது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.



உண்மையில் எதுதான் காதல்? Heartஉண்மையில் எதுதான் காதல்? Spin1உண்மையில் எதுதான் காதல்? Heart

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 8:53 am

இப்பல்லாம் உண்மையான காதல் எங்க இருக்குன்னு எனக்கு தெரியலை

காதலியா இருக்கும்போஅது தும்முனா கூட கைக்குட்டைய கொடுக்குற காதலன்
மனைவியாந பிறகு பெட்ல இருந்தாலும் கண்டுக்ட மாட்டுக்றான்

இன்றைய காதல் மனப்பசியை தீர்க்க பயன்படுவதில்லை.....

காதல் திருமணங்கள் பெரும்பாலும் இனிமையாக இருப்பதில்லை.

அப்படின்னா நிச்சயிக்கப்பட்ட திருமணம்லாம் ரொம்ப இனிசிக்கிட்டு இருக்கான்னு கேக்க கூடாது

........பிறகு என்னை அடிக்க மட்டையோட கெளம்பிருவாங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 10:28 am

சிவா wrote:காதலர்கள் காதல் கடிதம் அனுப்புவதற்கு உகந்தநாள் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே மிகவும் சிறந்த நாளாக இருக்கும். அதே சமயத்தில் அமாவாசை, அஷ்டமி, நவமி, பவுர்ணமி போன்ற நாட்கள் காதலர்கள் முதன் முதலில் மட்டும் அல்ல எப்போதும் இதுபோன்ற நாட்களில் சந்திக்கக்கூடாது.

ஏன் என்றால் வானில் இருந்து இந்த நாளில் சீர்காந்த அலை கொண்ட கதிர்வீச்சு பூமியை வந்து அடைகின்றது. இதனால் அன்றைய தினங்களில் காதலர்கள் சந்தித்தால் ஒருவரை ஒருவர் பிரிய நேரிடும். இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க மேற் கண்ட தினங்களில் சந்திக்காமல் இருப்பது நல்லது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.



உண்மையில் எதுதான் காதல்? Heartஉண்மையில் எதுதான் காதல்? Spin1உண்மையில் எதுதான் காதல்? Heart


சிவா சார் மனசைப் பார்த்து வர்ரது தான் காதல்.......... அதுல கூட ஜோசியமா முடியல சார்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 10:31 am

manekan2000 wrote:
சிவா wrote:காதலர்கள் காதல் கடிதம் அனுப்புவதற்கு உகந்தநாள் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே மிகவும் சிறந்த நாளாக இருக்கும். அதே சமயத்தில் அமாவாசை, அஷ்டமி, நவமி, பவுர்ணமி போன்ற நாட்கள் காதலர்கள் முதன் முதலில் மட்டும் அல்ல எப்போதும் இதுபோன்ற நாட்களில் சந்திக்கக்கூடாது.

ஏன் என்றால் வானில் இருந்து இந்த நாளில் சீர்காந்த அலை கொண்ட கதிர்வீச்சு பூமியை வந்து அடைகின்றது. இதனால் அன்றைய தினங்களில் காதலர்கள் சந்தித்தால் ஒருவரை ஒருவர் பிரிய நேரிடும். இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க மேற் கண்ட தினங்களில் சந்திக்காமல் இருப்பது நல்லது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

உண்மையில் எதுதான் காதல்? Heartஉண்மையில் எதுதான் காதல்? Spin1உண்மையில் எதுதான் காதல்? Heart


சிவா சார் மனசைப் பார்த்து வர்ரது தான் காதல்.......... அதுல கூட ஜோசியமா முடியல சார்

சே அப்டி சொல்லாதீங்க ஒன்பது கோள்களும் மனிதனோடு தொடர்புடையது

Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக