புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_m10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10 
87 Posts - 64%
heezulia
பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_m10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_m10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Shivanya

2 Posts - 1%
sram_1977

prajai

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_m10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10 
423 Posts - 76%
heezulia
பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_m10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_m10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_m10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_m10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%
Anthony raj
பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_m10பட்டினிக்கு வயது பத்து - Page 4 Poll_c10 
3 Posts - 1%

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினிக்கு வயது பத்து

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 1:25 am

First topic message reminder :

பட்டினிக்கு வயது பத்து

யாருக்காகவோ அவர்கள் நீண்ட நேரமாய் காத்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் கசிந்த விடுதலை வேட்கையும், கொந்தளித்துப் பொங்கிய உணர்வு நிலையும் களம் நுழையும் முன்னால் தங்களது தலைவனின் கட்டளைக்காக காத்திருக்கும் போராளிகளின் நிலையை ஒத்திருந்தது.

ஆனால் அவர்கள் காத்திருந்தது அவர்களது கவிஞனுக்காக. தங்களது விடுதலைப் போருக்கான வெறியை, ஆவேசத்தை, வேட்கையை அவனது நான்கைந்து வரிகளால் சானை பிடித்து கூர் தீட்டிக்கொள்ளவே அவர்கள் காத்துக் கிடந்தார்கள்.

அவர்கள் அந்தக் கவிஞனின் ஜனங்கள்: அவனோ அந்த ஜனங்களின் கவிஞன்.

அவன் மாயோகோவஸ்கி

"தோழர்களே..."

அவனது ஒற்றை வார்த்தையில் கொந்தளித்து, ஆர்ப்பரித்து அடங்கியது கூட்டம்.

தொடர்ந்தான்

"தோழர்களே !
லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும் ஏந்தி..."

அவனை முடிக்க விடவில்லை கூட்டம். ஒரே குரலெடுத்து உரக்க முழங்கினார்கள்

" லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும்
எங்கள் மாயோகோவஸ்கியை
இதயங்களிலும் ஏந்தி
களத்திற்கு போகிறோம்"

உயிரோடு இருக்கும் போதே மாயோகோவஸ்கிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் நமது பாரதி மற்றும் பாரதி தாசன் இருவருக்கும் கிடைக்காத அங்கீகாரம். இன்குலாப் உள்ளிட்ட நமது சம கால மக்கள் கவிகளுக்கும் இதுதான் கதி. என்ன செய்வது உயிரோடு இருக்கும் வரை நல்லவர்களை கொண்டாடு வதில்லை என்று நாம்தான் யாருக்கோ சத்தியம் செய்து கொடுத்து விட்டோமே.

அதனால்தான் பெரும்பான்மை ஆசு கவிகள் காசு கவிகளாய் மாறி சொகுசாகிப் போனார்கள்.

எழுதுவது, பதிப்பிப்பது, பேட்டிகளை அளிப்பது, வாழ்வை சொகுசாக்கிக் கொள்வது என்று சுருங்கிப் போகாமல் மக்களோடு மக்களாய் பசியில், அவலத்தில், போராட்டத்தில் அவர்களோடு நிற்பது என்பதாக தனது எழுத்துக்கு வாழ்க்கையை பொழிப்புரையாக தந்தவன் மாயோகோவஸ்கி. அவனது நேர்மைக்கும் தியாகத்திற்கும் கொஞ்சமும் குறையாத அங்கீகாரத்தை மக்கள் அவனுக்கு வழங்கினார்கள் என்பதும் சேர்த்தே கொள்ளத் தக்கது.

" பேனாதான் இருக்கும்
எப்போதும்
என் கைகளில்
என்று சொல்ல
நான் ஒன்றும் நீஅல்ல
நண்பனே

தேவைப் படுமெனில்
என் கைகள் காலம் தரும்
கருவி ஏந்தும்"

என்று வண்ணை வளவன் ஒரு முறை எழுதியாதாய் ஞாபகம். இந்த வரிகளில் பெருகி வழியும் மாயோகோவஸ்கியின் தாக்கத்தை யாரு இல்லை என்று சொல்லிவிட முடியாது.

பரவசமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் தம்பி சுபாஷ் (கன்னகன்) அவர்களின் "பறவைக்குள் அடையும் கூடு" நூலை வெளியிட்டு பேசும் போது மனதைப் பிசையும் ஒரு காட்சியை ஏதோ ஒரு வேற்று மொழிப் படத்திலிருந்தோ சிறு கதையிலிருந்தோ சொன்னார் எஸ். ராமகிருஷ்ணன்.

குழந்தைகளையும் கூடைகளையும் முதுகுகளிலும் ரணங்களையும் வலியையும் தங்கள் உடல் முழுமையும் சுமந்தபடி தேயிலை கிள்ளிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.

முதுகிலே சுமக்கும் தங்களது குழந்தைகளுக்கு பசியெடுத்து அலறினாலும் அவர்களுக்கு தாய்ப் பால் கொடுக்க அனுமதித்ததில்லை ஆண்டைகள். பசியால் அலறி அலறியே செத்துப் போன குழந்தைகள்

ஏராளம்: மாரிலே பால் கட்டி இறந்துபோன தாய்மார்களும் ஏராளம்.

கீழத் தஞ்சையில் நம் அம்மாயி மற்றும் அப்பாயிகளுக்கும் கிடைத்த அதே அனுபவம். உலகம் முழுவதும் ஆண்டைகள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.

ஒரே வித்தியாசம் அவர்கள் குழந்தைகளை முதுகிலே சுமந்தபடி வேலை பார்த்தார்கள். நம் தாய்மார்கள் வரப்போரத்தில் இருக்கும் மரங்களின் கிளைகளில் தொட்டில் கட்டிப் போட்டிருப்பார்கள்.

இந்த வேதனையிலிருந்து தப்பிக்க நமது தாய்மார்கள் ஒரு மார்க்கம் கண்டனர். மார்கட்டி வலி எடுக்கும் பெண்ணை மற்ற பெண்கள் மறைத்தபடி சுற்றி நின்று கொள்வார்கள். அந்தப் பெண் தனது முலைப் பாலை வயலிலே பீய்ச்சி தன்னைத் தற்காத்துக் கொள்வாள். இதிலுங்கூட தாய்மார்களை காப்பாற்ற முடிந்ததே தவிர குழந்தைகளின் இழப்பை மட்டுப் படுத்த முடியவில்லை.

இப்படி காவேரித் தண்ணீரோடு எங்கள் தாய்மார்களின் தாய்ப் பாலையும் சேர்த்தே குடித்து வளர்ந்த நெல் சோறு சாப்பிட்டு வளர்ந்த ஒரு பெரியவர் தான் சொன்னார் "வேலைக்குப் போகும் பெண்களில் பெரும்பகுதி பேர் அவுசாரிகள்" என்று.

அவரிடம் போய் வந்த பத்துப் பன்னிரண்டு பேரைத் தவிர மற்றவர்களை அவருக்கு அப்படித்தான் தெரியும் பெருந்தன்மயோ என்னவோ " உழைக்கும் பெண்களில் பெரும் பகுதி பேர் அவுசாரிகள் என்று உனக்கு எப்படி ஐயா? " என்றுகூட கேட்காமல் இன்று வரை நீண்ட மௌனம் காக்கிறது தமிழ்ச் சமூகம்.

அந்தக் கதைக்கு வருவோம் .

தேயிலைக் கிள்ளிக்கொண்டிருக்கும் பெண்களை நோக்கி வருகிறான் அவர்களின் கவிஞன். அவர்களது அவலத்தில், வாழ்வில், வலியில், கண்ணீரில், புன்னகையில் அவர்களோடு ஒருவனாய், அவர்களில் ஒருவனாய் அவர்களிடமிருந்து ஒரு அங்குளம் கூட அந்நியப் படாதவனாய் வாழ்பவன். அந்த ஜனங்கள் தங்கள் கவிஞனது வாக்கு பலிக்கும் என்று நம்பினார்கள்.

புன்னகைத்தவாரே அந்தப் பெண்களின் அருகே வந்தான் கவிஞன். அவனைக் கண்டதும் அவர்களது கவலைகளும் வலியும் பறந்தே போனது. மலர்ந்த முகத்தோடு அவனை வரவேற்றார்கள்.

"நலமா?"

நலமென்று எப்படி சொல்ல முடியும் அவர்களால்.

"நலமென்று கூட சொல்ல முடியாமல் என் ஜனங்களை மௌனக் கடலுக்குள் தள்ளியது எது?"

"உம்மால் எமக் கொன்று ஆக வேண்டும் கவியே!"

" என்னிடம் கேட்க என்ன தயக்கம். எது வேண்டும், கேள் தாயே!"

"முன் பக்கம் தொங்கும் எங்கள் முலைகளை முதுகுப் பக்கமாய் நகர்த்திவிடு கவியே! . மார் கட்டாது நாங்களும் பசியாறி குழந்தைகளும் பிளைத்துக் கொள்வோம்."

அவர்களது சோகத்தில் கறைந்து நெகிழ்ந்து போன கவிஞன் சொன்னான் "அப்படியே ஆகட்டும்"

முதுகுக்கு நகர்ந்தன முலைகள்.

நடக்குமா? மூடத்தனமல்லவா? அதுபற்றியெல்லாம் நாம் கவலைப் படப் போவதில்லை. தங்களுக்காகவும் தங்களோடும் வாழ்ந்த கவிஞன் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் காட்டவே மேற்சொன்ன காட்சியை ஞாபகம் கொண்டோம்.

சமீபத்தில் "பெண்ணியம்" இணையதளம் வழியே ஒரு மாபெரும் மக்கள் கவியைக் கண்டேன். வாசித்து முடிந்ததும் கண்ணீரைக் கட்டுப் படுத்த படாத கஷ்டம் பட்டேன்.

"ஐரோம் ஷர்மிளா" மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கவிஞர். 1958ஆம் ஆண்டு "ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்" கொண்டு வரப் பட்டது. இதன்படி சந்தேகப் படும் யாரையும் விசாரனையின்றி கைது செய்யலாம், சுட்டும் கொல்லலாம். இந்த சட்டம் காவு கொண்ட எண்ணிக்கை மிக அதிகம்.

"பாலியல் இம்சைகள்" பற்றி எழுதினால் நீளும் , நீளும் , நீண்டுகொண்டே போகும்.

இதைக் கண்டித்து 02.11.2000 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிளா. பல் துலக்கினால் வாய் வழியே நீர் போய்விடும் என்பதால் பல் துலக்குவதை தவிர்க்கிறார். ஒரு பருத்தித் துணியால் பற்களைத் துடைத்துக் கொள்கிறார்.

அவரைக் கைது செய்த அரசாங்கம் கட்டாயப் படுத்தி மூக்கு வழியே அவருக்கு திரவ உணவை செலுத்திக் கொண்டிருக்கிறது.

எனக்கு இருக்கிற கேள்வி ஒன்றுதான். தங்களோடும் தங்களுக்காகவும் வாழ்ந்த கவிகளை அந்தந்த சமூகங்கள் அங்கீகரித்து கொண்டாடியிருக்கின்றன.

"கல்வி பாஷை" யில் சொன்னால் இரண்டு பிரிவேளைகளுக்கும் சற்று குறைவான நேரமே நடைபெற்ற , மிகச் சரியாய் சொல்வதெனில் "காலை சாப்பாட்டிற்கும் மதிய சாப்பாட்டிற்கும் இடைப் பட்ட நேரத்தில்" நடந்த ஒரு கூத்தினை "உண்ணா விரதம்" என்றும் "தியாகத்தின் உச்சம்" என்றும் கூத்தாடிக் கொண்டாடிய நாம், தனது உடலை, இளமையை, வாழ்க்கையை தியாகித்துப் போராடும் இந்தப் போராளிக்கு என்ன செய்யப் போகிறோம்?

பின் குறிப்பு

இந்தக் கட்டுரையை முடிக்கிற தருவாயில் ஐரினா ஷர்மிளா விடுதலை செய்யப்பட்ட செய்தி வந்தது. இந்த தகவலை பத்துப் பேரிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்னமே சுகன் சொன்னார் "திரும்பவும் அந்த அம்மாவ கைது பண்ணீட்டாங்களாம் எட்வின்"

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Aug 06, 2010 10:08 pm

இரா.எட்வின் wrote:

மாயோகோவஸ்கியின் கவிதை கம்பீரம் பாரதி, பாரதி தாசனின் கவிஞர்களின் நிலை, தேயிலைப்பெண்களின் அவஸ்தைகள் ஆண்டையின் கட்டுக்கடங்கா அக்கிரமங்கள், பாலில்லாது இறந்த குழந்தைகளின் அவலங்கள், ஐரினா ஷர்மிளா இருந்த 2000 முதல் உண்ணாவிரதம், அவரின் விடுதலை சோகம் அந்த சந்தோஷம் அனுபவிக்குமுன் திரும்பவும் அந்த அம்மாவ கைது பண்ணிட்டாங்களாம் எட்வின் இப்படி முடிக்கும்போது கலையின் பரிதவிப்பு இதோ என்னையும் தொற்றிக்கொண்டது எட்வின் சோகம் அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.... பொக்கிஷங்களாய் பாதுகாக்கப்படவேண்டிய நிறைய படைப்புகள் நீங்கள் கொடுத்துட்டு இருக்கீங்க... ஈகரை காக்கும் உங்கள் அற்புதமான படைப்பு பொக்கிஷங்களை....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பட்டினிக்கு வயது பத்து - Page 4 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Aug 07, 2010 5:04 pm

மஞ்சுபாஷிணி wrote:
இரா.எட்வின் wrote:
பட்டினிக்கு வயது பத்து

யாருக்காகவோ அவர்கள் நீண்ட நேரமாய் காத்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் கசிந்த விடுதலை வேட்கையும், கொந்தளித்துப் பொங்கிய உணர்வு நிலையும் களம் நுழையும் முன்னால் தங்களது தலைவனின் கட்டளைக்காக காத்திருக்கும் போராளிகளின் நிலையை ஒத்திருந்தது.

ஆனால் அவர்கள் காத்திருந்தது அவர்களது கவிஞனுக்காக. தங்களது விடுதலைப் போருக்கான வெறியை, ஆவேசத்தை, வேட்கையை அவனது நான்கைந்து வரிகளால் சானை பிடித்து கூர் தீட்டிக்கொள்ளவே அவர்கள் காத்துக் கிடந்தார்கள்.

அவர்கள் அந்தக் கவிஞனின் ஜனங்கள்: அவனோ அந்த ஜனங்களின் கவிஞன்.

அவன் மாயோகோவஸ்கி

"தோழர்களே..."

அவனது ஒற்றை வார்த்தையில் கொந்தளித்து, ஆர்ப்பரித்து அடங்கியது கூட்டம்.

தொடர்ந்தான்

"தோழர்களே !
லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும் ஏந்தி..."

அவனை முடிக்க விடவில்லை கூட்டம். ஒரே குரலெடுத்து உரக்க முழங்கினார்கள்

" லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும்
எங்கள் மாயோகோவஸ்கியை
இதயங்களிலும் ஏந்தி
களத்திற்கு போகிறோம்"

உயிரோடு இருக்கும் போதே மாயோகோவஸ்கிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் நமது பாரதி மற்றும் பாரதி தாசன் இருவருக்கும் கிடைக்காத அங்கீகாரம். இன்குலாப் உள்ளிட்ட நமது சம கால மக்கள் கவிகளுக்கும் இதுதான் கதி. என்ன செய்வது உயிரோடு இருக்கும் வரை நல்லவர்களை கொண்டாடு வதில்லை என்று நாம்தான் யாருக்கோ சத்தியம் செய்து கொடுத்து விட்டோமே.

அதனால்தான் பெரும்பான்மை ஆசு கவிகள் காசு கவிகளாய் மாறி சொகுசாகிப் போனார்கள்.

எழுதுவது, பதிப்பிப்பது, பேட்டிகளை அளிப்பது, வாழ்வை சொகுசாக்கிக் கொள்வது என்று சுருங்கிப் போகாமல் மக்களோடு மக்களாய் பசியில், அவலத்தில், போராட்டத்தில் அவர்களோடு நிற்பது என்பதாக தனது எழுத்துக்கு வாழ்க்கையை பொழிப்புரையாக தந்தவன் மாயோகோவஸ்கி. அவனது நேர்மைக்கும் தியாகத்திற்கும் கொஞ்சமும் குறையாத அங்கீகாரத்தை மக்கள் அவனுக்கு வழங்கினார்கள் என்பதும் சேர்த்தே கொள்ளத் தக்கது.

" பேனாதான் இருக்கும்
எப்போதும்
என் கைகளில்
என்று சொல்ல
நான் ஒன்றும் நீஅல்ல
நண்பனே

தேவைப் படுமெனில்
என் கைகள் காலம் தரும்
கருவி ஏந்தும்"

என்று வண்ணை வளவன் ஒரு முறை எழுதியாதாய் ஞாபகம். இந்த வரிகளில் பெருகி வழியும் மாயோகோவஸ்கியின் தாக்கத்தை யாரு இல்லை என்று சொல்லிவிட முடியாது.

பரவசமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் தம்பி சுபாஷ் (கன்னகன்) அவர்களின் "பறவைக்குள் அடையும் கூடு" நூலை வெளியிட்டு பேசும் போது மனதைப் பிசையும் ஒரு காட்சியை ஏதோ ஒரு வேற்று மொழிப் படத்திலிருந்தோ சிறு கதையிலிருந்தோ சொன்னார் எஸ். ராமகிருஷ்ணன்.

குழந்தைகளையும் கூடைகளையும் முதுகுகளிலும் ரணங்களையும் வலியையும் தங்கள் உடல் முழுமையும் சுமந்தபடி தேயிலை கிள்ளிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.

முதுகிலே சுமக்கும் தங்களது குழந்தைகளுக்கு பசியெடுத்து அலறினாலும் அவர்களுக்கு தாய்ப் பால் கொடுக்க அனுமதித்ததில்லை ஆண்டைகள். பசியால் அலறி அலறியே செத்துப் போன குழந்தைகள்

ஏராளம்: மாரிலே பால் கட்டி இறந்துபோன தாய்மார்களும் ஏராளம்.

கீழத் தஞ்சையில் நம் அம்மாயி மற்றும் அப்பாயிகளுக்கும் கிடைத்த அதே அனுபவம். உலகம் முழுவதும் ஆண்டைகள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.

ஒரே வித்தியாசம் அவர்கள் குழந்தைகளை முதுகிலே சுமந்தபடி வேலை பார்த்தார்கள். நம் தாய்மார்கள் வரப்போரத்தில் இருக்கும் மரங்களின் கிளைகளில் தொட்டில் கட்டிப் போட்டிருப்பார்கள்.

இந்த வேதனையிலிருந்து தப்பிக்க நமது தாய்மார்கள் ஒரு மார்க்கம் கண்டனர். மார்கட்டி வலி எடுக்கும் பெண்ணை மற்ற பெண்கள் மறைத்தபடி சுற்றி நின்று கொள்வார்கள். அந்தப் பெண் தனது முலைப் பாலை வயலிலே பீய்ச்சி தன்னைத் தற்காத்துக் கொள்வாள். இதிலுங்கூட தாய்மார்களை காப்பாற்ற முடிந்ததே தவிர குழந்தைகளின் இழப்பை மட்டுப் படுத்த முடியவில்லை.

இப்படி காவேரித் தண்ணீரோடு எங்கள் தாய்மார்களின் தாய்ப் பாலையும் சேர்த்தே குடித்து வளர்ந்த நெல் சோறு சாப்பிட்டு வளர்ந்த ஒரு பெரியவர் தான் சொன்னார் "வேலைக்குப் போகும் பெண்களில் பெரும்பகுதி பேர் அவுசாரிகள்" என்று.

அவரிடம் போய் வந்த பத்துப் பன்னிரண்டு பேரைத் தவிர மற்றவர்களை அவருக்கு அப்படித்தான் தெரியும் பெருந்தன்மயோ என்னவோ " உழைக்கும் பெண்களில் பெரும் பகுதி பேர் அவுசாரிகள் என்று உனக்கு எப்படி ஐயா? " என்றுகூட கேட்காமல் இன்று வரை நீண்ட மௌனம் காக்கிறது தமிழ்ச் சமூகம்.

அந்தக் கதைக்கு வருவோம் .

தேயிலைக் கிள்ளிக்கொண்டிருக்கும் பெண்களை நோக்கி வருகிறான் அவர்களின் கவிஞன். அவர்களது அவலத்தில், வாழ்வில், வலியில், கண்ணீரில், புன்னகையில் அவர்களோடு ஒருவனாய், அவர்களில் ஒருவனாய் அவர்களிடமிருந்து ஒரு அங்குளம் கூட அந்நியப் படாதவனாய் வாழ்பவன். அந்த ஜனங்கள் தங்கள் கவிஞனது வாக்கு பலிக்கும் என்று நம்பினார்கள்.

புன்னகைத்தவாரே அந்தப் பெண்களின் அருகே வந்தான் கவிஞன். அவனைக் கண்டதும் அவர்களது கவலைகளும் வலியும் பறந்தே போனது. மலர்ந்த முகத்தோடு அவனை வரவேற்றார்கள்.

"நலமா?"

நலமென்று எப்படி சொல்ல முடியும் அவர்களால்.

"நலமென்று கூட சொல்ல முடியாமல் என் ஜனங்களை மௌனக் கடலுக்குள் தள்ளியது எது?"

"உம்மால் எமக் கொன்று ஆக வேண்டும் கவியே!"

" என்னிடம் கேட்க என்ன தயக்கம். எது வேண்டும், கேள் தாயே!"

"முன் பக்கம் தொங்கும் எங்கள் முலைகளை முதுகுப் பக்கமாய் நகர்த்திவிடு கவியே! . மார் கட்டாது நாங்களும் பசியாறி குழந்தைகளும் பிளைத்துக் கொள்வோம்."

அவர்களது சோகத்தில் கறைந்து நெகிழ்ந்து போன கவிஞன் சொன்னான் "அப்படியே ஆகட்டும்"

முதுகுக்கு நகர்ந்தன முலைகள்.

நடக்குமா? மூடத்தனமல்லவா? அதுபற்றியெல்லாம் நாம் கவலைப் படப் போவதில்லை. தங்களுக்காகவும் தங்களோடும் வாழ்ந்த கவிஞன் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் காட்டவே மேற்சொன்ன காட்சியை ஞாபகம் கொண்டோம்.

சமீபத்தில் "பெண்ணியம்" இணையதளம் வழியே ஒரு மாபெரும் மக்கள் கவியைக் கண்டேன். வாசித்து முடிந்ததும் கண்ணீரைக் கட்டுப் படுத்த படாத கஷ்டம் பட்டேன்.

"ஐரோம் ஷர்மிளா" மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கவிஞர். 1958ஆம் ஆண்டு "ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்" கொண்டு வரப் பட்டது. இதன்படி சந்தேகப் படும் யாரையும் விசாரனையின்றி கைது செய்யலாம், சுட்டும் கொல்லலாம். இந்த சட்டம் காவு கொண்ட எண்ணிக்கை மிக அதிகம்.

"பாலியல் இம்சைகள்" பற்றி எழுதினால் நீளும் , நீளும் , நீண்டுகொண்டே போகும்.

இதைக் கண்டித்து 02.11.2000 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிளா. பல் துலக்கினால் வாய் வழியே நீர் போய்விடும் என்பதால் பல் துலக்குவதை தவிர்க்கிறார். ஒரு பருத்தித் துணியால் பற்களைத் துடைத்துக் கொள்கிறார்.

அவரைக் கைது செய்த அரசாங்கம் கட்டாயப் படுத்தி மூக்கு வழியே அவருக்கு திரவ உணவை செலுத்திக் கொண்டிருக்கிறது.

எனக்கு இருக்கிற கேள்வி ஒன்றுதான். தங்களோடும் தங்களுக்காகவும் வாழ்ந்த கவிகளை அந்தந்த சமூகங்கள் அங்கீகரித்து கொண்டாடியிருக்கின்றன.

"கல்வி பாஷை" யில் சொன்னால் இரண்டு பிரிவேளைகளுக்கும் சற்று குறைவான நேரமே நடைபெற்ற , மிகச் சரியாய் சொல்வதெனில் "காலை சாப்பாட்டிற்கும் மதிய சாப்பாட்டிற்கும் இடைப் பட்ட நேரத்தில்" நடந்த ஒரு கூத்தினை "உண்ணா விரதம்" என்றும் "தியாகத்தின் உச்சம்" என்றும் கூத்தாடிக் கொண்டாடிய நாம், தனது உடலை, இளமையை, வாழ்க்கையை தியாகித்துப் போராடும் இந்தப் போராளிக்கு என்ன செய்யப் போகிறோம்?

பின் குறிப்பு

இந்தக் கட்டுரையை முடிக்கிற தருவாயில் ஐரினா ஷர்மிளா விடுதலை செய்யப்பட்ட செய்தி வந்தது. இந்த தகவலை பத்துப் பேரிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்னமே சுகன் சொன்னார் "திரும்பவும் அந்த அம்மாவ கைது பண்ணீட்டாங்களாம் எட்வின்"

மாயோகோவஸ்கியின் கவிதை கம்பீரம் பாரதி, பாரதி தாசனின் கவிஞர்களின் நிலை, தேயிலைப்பெண்களின் அவஸ்தைகள் ஆண்டையின் கட்டுக்கடங்கா அக்கிரமங்கள், பாலில்லாது இறந்த குழந்தைகளின் அவலங்கள், ஐரினா ஷர்மிளா இருந்த 2000 முதல் உண்ணாவிரதம், அவரின் விடுதலை பட்டினிக்கு வயது பத்து - Page 4 440806 அந்த சந்தோஷம் அனுபவிக்குமுன் திரும்பவும் அந்த அம்மாவ கைது பண்ணிட்டாங்களாம் எட்வின் இப்படி முடிக்கும்போது கலையின் பரிதவிப்பு இதோ என்னையும் தொற்றிக்கொண்டது எட்வின் பட்டினிக்கு வயது பத்து - Page 4 440806 அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.... பொக்கிஷங்களாய் பாதுகாக்கப்படவேண்டிய நிறைய படைப்புகள் நீங்கள் கொடுத்துட்டு இருக்கீங்க... ஈகரை காக்கும் உங்கள் அற்புதமான படைப்பு பொக்கிஷங்களை....

நன்றி சுபா,

நான் ரொம்ப சாதாரண ஆளுப்பா

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக