புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_c10 
42 Posts - 63%
heezulia
2007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
2007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
2007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2007 ஒரு கண்ணோட்டம்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:28 am

First topic message reminder :

தமிழகம்



ஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது.



ஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு.


ஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ்.


*இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு.


ஜன.12: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் மறு தேர்தல் நடத்த ஒரு நீதிபதியும், வழக்கை தள்ளுபடி செய்து மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு.


ஜன.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட வட சென்னை மீனவர்கள் வறுமைக்காக கிட்னியை விற்ற தகவல் வெளியானது.



ஜன.14: முன்னாள் அமைச்சர் செம்மலையின் மனைவி, மகன் மீது அவரது மருமகள் வரதட்சணை புகார்.
*இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை சென்னை தி.நகரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.



ஜன.18: சென்னை மாநகராட்சியில் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக மேயர் உட்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமா.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 7:00 am

சிறப்பு தகவல்கள்


1. புதிய முகம்

உலகிலேயே இரண்டாவது பெரிய தரைப்படைராணு வத்தின் புதிய தளபதியாக ஜெனரல் தீபக் கபூர் அக். 1ல் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தரைப்படை ராணுவத்தின் 23வது தளபதியான இவர் பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கை தொடரும் என உறுதியளித்தார்.


2. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

எம்.பி.,க்களை "தலையில்லாத கோழிகள்' என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ரோனன் சென் விமர்சித்ததால் சர்ச்சை எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்.30ம் தேதி லோக்சபா உரிமைக்குழு முன் ஆஜரானர். அப்போது தனது விமர்சனத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார்.


3. "பந்த்' குழப்பம்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழகத்தில் அக்.1ம் தேதி தி.மு.க., கூட்டணி "பந்த்' அறிவித்தது. இது சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது. எனினும் அன்றைய தினம் அறிவிக்கப்படாத "பந்த்' நடந்ததால் தமிழகம் முடங்கியது.


4. வன்முறை மர்மம்

அக்.29ல் முதுகுளத்தூரில் ஒரு விழாவில் காங்., தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்க சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை வேல்கம்பால் குத்தியது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்த மர்மம் நீடிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 7:05 am

தமிழகம்

நவ. 1: இன்ஜினியரிங் படிக்கும் பெண்கள், ஏழை மாணவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு கல்வி கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு.


நவ. 5: தமிழகத்தில் புதிய தொழில்கொள்கை அறிவித்தார் முதல்வர் கருணாநிதி. 2011க்குள் 20 லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க திட்டம்.


* திருக்கோவிலூரை அடுத்த கொல்லூர் கிராமத்தில் கிருஷ்ணவேணி என்ற சிறுமிக்கு பொட்டு கட்டி விடப்பட்டதால் பரபரப்பு.


நவ. 6: போலீஸ் தடையை மீறி ராமநாதபுரம் செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது.


நவ. 11: சென்னை சத்தியமூர்த்திபவனில் ரவுடிகள் நுழைந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலரை கத்தியால் வெட்டினர்.


நவ. 12: போலீஸ் தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க பேரணி நடத்திய வைகோ கைது.


நவ. 13: கும்மிடிபூண்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயகுமார் வீட்டில் கொள்ளை.


நவ. 15: சென்னையில் திடீர் கடல் சீற்றத்தால் 12 வீடுகள் கடலுக்குள் மூழ்கின.


நவ. 17: திருப்பூர், ஈரோடு நகராட்சி களுக்கு மாநகராட்சி அந்தஸ்து அளித்து தமிழக அரசு அவசரச்சட்டம்.


*திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைச்செல்வன் பட்டப்பகலில் வீட்டு வாசலில் வெட்டிக்கொலை.


* செங்கல்பட்டு அ.தி.மு.க., நகராட்சி துணைத்தலைவர் குமார் உட்பட இருவர் வெட்டிக்கொலை.


நவ. 20: வாள் சண்டை மையம் அமைக்க விரும்பும் பள்ளிகளும் தனியார் அமைப்புகளும் காவல்துறை முன்அனுமதி பெற தமிழக அரசு உத்தரவு.


* கிராமப்புற மருத்துவசேவையை கட்டாயமாக்குவதை எதிர்த்து சென்னையில் மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.


நவ. 23: உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தை துவக்கிவைத்தார்.


நவ. 25: மரக்காணத்தில் பணத்துக்காக கடத்தப்பட்ட பள்ளி மாணவன் மணிகண்டன், கழுத்தை நெறித்து கொலை.


நவ. 28: இந்து தெய்வங்களை அவ மதித்ததாக நடிகை குஷ்பு மீது வழக்கு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 7:05 am

இந்தியா


நவ. 6: பெண்ணை கடத்திச்சென்று கொலை செய்த விவகாரத்தில் சிக்கிய உ.பி., அமைச்சர் ஆனந்த் சென் யாதவ் ராஜினாமா

.
நவ. 7: நான்கு கால்கள், நான்கு கைகளுடன் பிறந்த பீகாரை சேர்ந்த சிறுமி லட்சுமிக்கு பெங்களூருவில் ஆபரேஷன்.


நவ. 10: நந்திகிராமில் மீண்டும் நடந்த வன்முறையில் ஒருவர் பலி. நந்திகிராம் வன்முறைகளை கண்டித்து எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் மம்தா.


நவ. 15: இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிலையம் தயாரித்த "கிரயோஜெனிக்' இன்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது.


* நந்திகிராம் வன் முறையை கண்டித்து மேற்கு வங்கத்தில் 24 மணிநேர பந்த்.


நவ. 16: காங்., பொதுச்செயலர் ராகுலை கடத்த சதி செய்த மூன்று பயங்கரவாதிகள் உ.பி.,யில் கைது.


நவ. 20: கவர்னரின் பரிந்துரையை ஏற்று கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரவிட்டார் பிரதிபா பாட்டீல்.


* டில்லி தியேட்டரில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த தீவிபத்தில் அதன் உரிமையாளர்கள் 2 பேர் குற்றவாளிகள் என டில்லி கோர்ட் தீர்ப்பு.


நவ. 23: உ.பி., யிலுள்ள லக்னோ, வாரணாசி, பைசாபாத் நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் வக்கீல்கள் உட்பட 14 பேர் பலி.


* கோல்கட்டாவில் எழுந்த எதிர்ப்பு காரணமாக ஜெய்ப்பூர் சென்ற தஸ்லிமா நஸ்ரீன், அங்கும் எதிர்ப்பு எழுந்ததால் டில்லியில் தஞ்சம்.


நவ. 25: அசாமில் பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் உள்ளூர்வாசிகளால் ஆதிவாசி பெண் நிர்வாணப்படுத்தப் பட்டதால் பரபரப்பு.


நவ.27: பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அசாமில் "பந்த்'. மூன்று பேர் பலி.


நவ. 28: சுப்ரீம் கோர்ட்டின் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வரும் பரிந்துரைக்கு தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்டில் எதிர்ப்பு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 7:05 am

உலகம்



நவ. 2: விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக லண்டனில் கைது.


நவ. 7: பின்லாந்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மாணவன் கைத்துப்பாக்கியால் எட்டுப்பேரை சரமாரியாக சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை.


நவ. 8: துபாயில் புதிதாக கட்டப்பட்டுவந்த பாலம் இடிந்ததில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஐந்து தமிழர்கள் உட்பட ஏழு இந்தியர்கள் பலி.


நவ. 9: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசிர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சிலமணி நேரத்தில் விடுதலை.


நவ. 11: பெரு நாட்டில் புதைந்திருந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் கண்டுபிடிப்பு.


நவ. 13: பாகிஸ்தான் அதிபர் பெனசிர் புட்டோவுக்கு மீண்டும் வீட்டுக்காவல்.


நவ. 14: பாகிஸ்தானில் இம்ரான்கான் கைது.


நவ. 23: பாகிஸ்தானின் எமர்ஜென் சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காமன்வெல்த்திலிருந்து பாகிஸ்தான் நீக்கம்.


நவ. 25: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சவுதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பினார்.


* மலேசியாவில் உரிமை கேட்டு பேரணி செல்ல முயன்ற இந்துக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தண்ணீரை பீச்சி அடித்தனர்.


நவ. 27: கிளிநொச்சியில் விடுதலை புலிகள் ரேடியோ நிலையம் இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் தகர்ப்பு.


நவ. 30: பயணிகள் விமானம்துருக்கியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 56 பேர் பலி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 7:06 am

சிறப்பு தகவல்கள்


1. "புலி' பலி

இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் அந்நாட்டு விமானப்படை நவ. 2ல் தாக்குதல் நடத்தியது. இதில் விடுதலைபுலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறுபேர் பலியானார்கள். இவரின் திடீர் மறைவு புலிகளுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியது.



2. பற்றி எரியும் மாநிலம்

நந்திகிராம் பிரச்னையை கண்டித்தும், வங்க தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை வெளியேற்ற கோரியும் கோல்கட்டாவில் சிறுபான்மை அமைப்பினர் நவ. 21ல் போராட்டம் நடத்தினர். இது கலவரமாக முடிந்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் கோல்கட்டாவிலிருந்து தஸ்லிமா வெளியேறினார்.



3. சிதார் துயரம்

வங்கதேசத்தை செப். 16ல் சிதார் புயல் தாக்கியது. சுமார் 240 கி.மீ., வேகத்தில் வீசிய புயலால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசம் சந்தித்த மிக மோசமான புயலாக இது கருதப்படுகிறது.


4.பதவி படுத்தும் பாடு

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பல்வேறு நிபந்தனைகளிடையே நவ. 12ம் தேதி முதல்வர் பதவியேற்றார் எடியூரப்பா. இருப்பினும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் அவரை எதிர்த்து ஓட்டளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவெடுத்ததை அடுத்து நவ.19ல் பதவியை ராஜினாமா செய்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 7:06 am

தமிழகம்



டிச. 3: விவசாயத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோரி விவசாய கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்.


டிச. 4: சென்னையில் சி.பி.சி.எல்., தொழிற்சாலையில் இருந்து மர்மவாயு கசிந்ததால் பொதுமக்கள் பீதி.


டிச. 6: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தூக்குதண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்.
டிச. 7: தமிழகத்தில் வாகன கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட தடை.


டிச. 8: சென்னையில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழாவில் வன்முறை. தி.மு.க., தே.மு.தி.க., மோதல்.


டிச. 9: இலங்கைக்கு இயந்திர படகுகள் கடத்த முயன்ற இருவர் சென்னையில் கைது.


டிச. 12: நெல்லை கல்லூரிகளின் அதிபர் எஸ்.ஏ. ராஜா மீது மர்ம கும்பல் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்.


டிச. 16: சென்னை மெரீனாவில் இந்திய கடற்படையினர் சாகச நிகழ்ச்சி.


டிச. 17: சென்னை அருகே கெரும்பாக்கத்தில் ஒரே வீட்டில் 80 லட்ச ரூபாய் பணமும், 250 சவரன் நகையும் கொள்ளை.
* மதுரையில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட தொடங்கியது.


டிச. 19: வருஷநாடு பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம். 2 பேர் சரண்.


டிச. 20: விவசாய கல்லூரி மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை ஜன. 10ல் தூக்கிலிடும்படி சேலம் கோர்ட் உத்தரவு.


* தமிழகத்தில் பெய்த தொடர் மழையில் 37 பேர் பலி.


டிச. 23: இளம்பெண்ணை மயக்கிய சென்னையை சேர்ந்த போலிச்சாமியார் பழனிச்சாமி கைது.


டிச. 24: ராமநாதபுரம் உச்சிபுளி அருகே புதைத்து வைக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.


* மதுரையில் எம்.ஜி.ஆர்., சிலையில் கொடி கட்டும் பிரச்னையில் அ.தி.மு.க., தே.மு.தி.க., மோதல்.


டிச. 26: அதிக கட்டணம் வசூல் செய்ததாக தமிழகத்தில் உள்ள 33 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 7:07 am

இந்தியா


டிச. 3: டாக்டரை தாக்கிய எம்.ஐ.எம்., கட்சி எம்.எல்.ஏ.,வை கைது செய்யக் கோரி ஆந்திராவில் டாக்டர்கள் <<உதவி டாக்டர்கள் போராட்டம்.


டிச. 6: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் சொராபுதீன் கொல்லப் பட்டதை மோடி நியாயப்படுத்தி பேசியதால் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.


டிச. 9: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை "சாவு வியாபாரி' என விமர்சித் ததற்காக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் சோனியாவுக்கு நோட்டீஸ்.


டிச. 10: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி என கட்சியின் உயர்மட்ட குழு அறிவிப்பு.


* "நீதித்துறை வரம்பு மீறி செயல்படக்கூடாது' என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு.


டிச. 11: குர்கானில் உள்ள யூரோ பள்ளியில் மாணவன் அபிஷேக் தியாகியை சக மாணவன் ஆகாஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.


* குஜராத் சட்டசபைக்கு முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. முன்னாள் முதல்வர் கேசுபாய் ஓட்டுப்போடாமல் புறக்கணித்தார்.


டிச. 12: ஒரு கொலைவழக்கில் பீகார் முன்னாள் அமைச்சர் ஆதித்யா சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து நவடா விரைவு கோர்ட் தீர்ப்பு.


* சொராபுதீன் என்கவுன்டரை ஆதரித்தற்காக மோடிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்.


டிச. 13: அசாம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டியில் குண்டுவெடித்ததில் ஐந்து பேர் பலி.


டிச. 14: பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜனிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி மனு தாக்கல்.


* பழங்குடி இனத்தை சேர்ந்தவரா என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து ஜாதி சான்றிதழை ஒப்படைக்கும் படி அஜீத் ஜோகிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.


* பஞ்சாபில் ரயில்வே லெவல் கிராசிங்கில் நுழைந்து செல்ல முயன்ற மினிபஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 18 பேர் பலி.


டிச. 16: சட்டீஸ்கர் மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 110 நக்சலைட் உட்பட 299 பேர் தப்பி ஓட்டம்.


டிச. 18: பிரமோத் மகாஜன் சுடப்பட்ட வழக்கில், அவரது தம்பி பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் கோர்ட் உத்தரவு.


* டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஜகதீஷ் டைட்லரின் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்கும்படி சி.பி.ஐ.,க்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு.


டிச. 21: பெங்களூரு டாக்டர் முகமது அனீப்பின் விசாவை புதுப்பிக்க ஆஸ்திரேலிய கோர்ட் அனுமதி.


டிச. 23: குஜராத் தேர்தலில் பா.ஜ., 117 சீட்களை கைப்பற்றி மீண்டும் வெற்றி.


டிச. 25: குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார்.


* கிரன் பேடியின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை அரசு ஏற்றது.


டிச. 26: நந்திகிராம் சென்ற மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 7:07 am

உலகம்


டிச. 3: பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட நவாஸ்ஷெரீப் தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி.


* ரஷ்ய தேர்தலில் புடினின் "யுனைட்டெட் ரஷ்யா' கட்சி வெற்றி.


டிச. 9: மலேசியாவில் நடந்த மனித உரிமை பேரணி தடை செய்யப்பட்டது. நான்கு பேர் கைது.


டிச. 13: அல்ஜீரியாவின் அல்ஜயர்ஸ் நகரில் அகதிகளுக்கான ஐ.நா., அலுவலகம் அருகே குண்டுகள் வெடித்ததில் 52 பேர் பலி.


டிச. 13: மலேசியாவில் ஆள்தூக்கி சட்டம் அமல்.


டிச. 14: அமெரிக்காவில் லூசியானா பல்கலைகழகத்தில் படித்த இரண்டு இந்திய மாணவர்கள் சுட்டுக்கொலை.



டிச. 15: பாகிஸ்தானில் எமர்ஜென்சி வாபஸ்.


டிச. 19: பாகிஸ்தானில் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து. 54 பேர் பலி.


டிச. 21: பாகிஸ்தானின் சார்சத்தா பகுதியில் மசூதி வளாகத்தில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில் 54 பேர் பலி.


டிச. 25: பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்திலிருந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.


டிச. 26: மழை காரணமாக இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 61 பேர் பலி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 7:08 am

சிறப்பு தகவல்கள்


1. உரிமை போர்
2007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Dec-A-1
மலேசியாவில் சமஉரிமை கேட்டு போராடி வரும் தலைவர்களை ஒடுக்க ஆள்தூக்கி சட்டத்தை அமல்செய்தது அந்நாட்டு அரசு. இதன் மூலம் இந்த்ராப் தலைவர் உதயகுமார் உட்பட ஐந்து பேர் டிச. 15ல் கைது செய்யப்பட்டனர்.






2. பிரமாண்ட மாநாடு

தி.மு.க., இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் டிச. 15, 16 தேதிகளில் நடந்தது. ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடந்து முடிந்தது. இளைஞர்களின் பார்வையை தி.மு.க., பக்கமாக திருப்ப இந்த மாநாடு உதவும் என நம்பப்படுகிறது. கல்வியையும் வேலை வாய்ப்பையும் அடிப்படை உரிமையாக்க கோரி தீர்மானம்




3. போராடிய டாக்டர்கள்

டாக்டரை தாக்கிய எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி ஐதராபாத்தில் டிச.3ல் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் உயிரிழந்த எட்டுமாத குழந்தையை வைத்துக்கொண்டு நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி டாக்டர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.




4.கடற்படை வாண வேடிக்கை

கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், கடற்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. டிச. 16ல் நடந்த இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கனோர் கடற்கரையில் குவிந்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 7:09 am

சிறப்பு தகவல்கள்


1. உரிமை போர்
2007 ஒரு கண்ணோட்டம் - Page 5 Dec-A-1
மலேசியாவில் சமஉரிமை கேட்டு போராடி வரும் தலைவர்களை ஒடுக்க ஆள்தூக்கி சட்டத்தை அமல்செய்தது அந்நாட்டு அரசு. இதன் மூலம் இந்த்ராப் தலைவர் உதயகுமார் உட்பட ஐந்து பேர் டிச. 15ல் கைது செய்யப்பட்டனர்.






2. பிரமாண்ட மாநாடு

தி.மு.க., இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் டிச. 15, 16 தேதிகளில் நடந்தது. ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடந்து முடிந்தது. இளைஞர்களின் பார்வையை தி.மு.க., பக்கமாக திருப்ப இந்த மாநாடு உதவும் என நம்பப்படுகிறது. கல்வியையும் வேலை வாய்ப்பையும் அடிப்படை உரிமையாக்க கோரி தீர்மானம்




3. போராடிய டாக்டர்கள்

டாக்டரை தாக்கிய எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி ஐதராபாத்தில் டிச.3ல் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் உயிரிழந்த எட்டுமாத குழந்தையை வைத்துக்கொண்டு நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி டாக்டர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.




4.கடற்படை வாண வேடிக்கை

கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், கடற்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. டிச. 16ல் நடந்த இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கனோர் கடற்கரையில் குவிந்தனர்.







நன்றி: தினமலர் நாளிதழ்

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக