புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
2007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
2007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
2007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
2007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
2007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
2007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
2007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
2007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
2007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2007 ஒரு கண்ணோட்டம்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:28 am

First topic message reminder :

தமிழகம்



ஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது.



ஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு.


ஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ்.


*இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு.


ஜன.12: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் மறு தேர்தல் நடத்த ஒரு நீதிபதியும், வழக்கை தள்ளுபடி செய்து மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு.


ஜன.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட வட சென்னை மீனவர்கள் வறுமைக்காக கிட்னியை விற்ற தகவல் வெளியானது.



ஜன.14: முன்னாள் அமைச்சர் செம்மலையின் மனைவி, மகன் மீது அவரது மருமகள் வரதட்சணை புகார்.
*இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை சென்னை தி.நகரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.



ஜன.18: சென்னை மாநகராட்சியில் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக மேயர் உட்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமா.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:40 am

சிறப்பு தகவல்கள்


1. பிரிந்த சகோதரர்கள்

சட்டீஸ் கரை சேர்ந்த ஒட்டி பிறந்த சகோதரர்கள் ராம், லட்சுமணன். பத்துமாதங்கள் ஆன நிலையில் மே 29ல் ரெய்ப்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவர்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.


2. அரசியல் சோதனை

கோயம்பேட்டில் பாலம் அமைப்பதற்காக நெடுஞ்சாலை துறையால் விஜயகாந்தின் திருமண மண்டபம் கையகப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியை நெடுஞ்சாலை துறையினர் மே.17ல் இடித்து தள்ளினர். இந்த மண்டபத்தில் விஜயகாந்தின் கட்சி அலுவலகமும் இயங்கி வந்தது.



3. கலவர குரு

சீக்கிய மத குரு கோவிந்த் சிங் போல் உடையணிந்து விளம்பரம் கொடுத்த, தேரா சச்சா சவுதாவின் பாபா குர்தீம் சிங் ராம் ரகீமுக்கு எதிராக பஞ்சாப் முழுவதும் கலவரம் வெடித்தது. மே 22ல் குர்தீம் சிங்கின் செய்கையை கண்டித்து பஞ்சாபில் "பந்த்' நடத்தப்பட்டது.


4. நிறைவேறும் கனவு

சென்னை மக்களின் தாகம் தணிப்பதற்காக தொடங்கப்பட்ட தெலுங்கு கங்கை திட்டத்தின் கால்வாய்கள் சீர்குலைந்த நிலையில் இருந்தன. இந்த திட்டத்துக்கு சாய்பாபா, 200 கோடி ரூபாய் செலவிட்டு கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரை சீரமைத்து கொடுத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:41 am

தமிழகம்

ஜூன் 1: கூட்டுறவு சங்க தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஜெயலலிதா அறிவிப்பு.


ஜூன் 2: அ.தி.மு.க., தலைமை அலுவலகம் விதிமுறைகளை மீறி கட்டப் பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் நோட்டீஸ்.


ஜூன் 3: அ.தி.மு.க., தலைமைச் செயலகத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பியதாக தமிழக அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு.



ஜூன் 5: கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்கள் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி.


ஜூன் 6: கோவையில் இறந்து போன தம்பியின் உடலை ஜெபம் செய்து உயிர்ப்பிக்க முயன்ற சார்லஸ் என்ற மத போதகர் கைது.


ஜூன் 9: தனியார் பள்ளிகள் நடத்தும் பிளஸ் 1 நுழைவுத்தேர்வுக்கு சென்னை ஐகோர்ட் தடை.


ஜூன் 10: 2,500 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்காக தமிழகத்தில் 6 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.


ஜூன் 12: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயல்வழி கற்கும் திட்டம் அமலுக்கு வந்தது.


ஜூன் 13: நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.


ஜூன் 17: மதுரை மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒருவர் மீது ஒருவர் புகார்.
* தமிழக மீனவர் படகை நடுக்கடலில் மூழ்கடித்த இலங்கை மீனவர்கள் அதிலிருந்த மீனவர்களையும் கடத்திச் சென்றனர்.


ஜூன் 20: மணப்பாறையில் பத்தாம் வகுப்பு மாணவன் சிசேரியன் ஆபரேசன் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.


ஜூன் 22: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் தாக்கப்பட்டார்.


ஜூன் 24: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவராக ராதிகா தேர்வு.


ஜூன் 25: மூன்று பேரை கொலை செய்த இலங்கையை சேர்ந்த ராஜனுக்கு தூக்கு தண்டனை விதித்தது திருவண்ணாமலை கோர்ட்.


ஜூன் 26: மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 75.34 சதவீதம் ஓட்டுப்பதிவு.


ஜூன் 29: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் வெற்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:41 am

இந்தியா


ஜூன் 1: சஞ்சய் தத்துக்கு துப்பாக்கி வாங்கித்தந்த பாலிவுட் தயாரிப்பாளர் சமீர் ஹிங்கோராவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.


ஜூன் 2: கோவா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 66 சதவீதம் ஓட்டுப்பதிவு.


ஜூன் 5: டில்லி "பந்த்'க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.


ஜூன் 6: சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அ.தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட எட்டு மாநில கட்சிகள் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்தனர்.


ஜூன் 7: உ.பி., விவசாய நில ஒதுக்கீடு விவகாரத்தில், நடிகர் அமிதாப் போலி முகவரி கொடுத்ததாக அலகாபாத் ஐகோர்ட்டில் தகவல்.


ஜூன் 8: கோவா முதல்வராக திகாம்பர் காமத் பதவியேற்றார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மந்திரிசபை அமைப்பு.
* ஐ.நா.,வில் பணியாற்றிய இந்திய அதிகாரி சஞ்சய் பாலுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான ஊழல் வழக்கில் 30 ஆண்டு சிறை தண்டனை.


ஜூன் 9: குட்ரோச்சியை நாடு கடத்த கோரும் சி.பி.ஐ., மனுவை அர்ஜென்டினா கோர்ட் நிராகரிப்பு.


ஜூன் 10: ஓடும் ரயிலில் "சினிமா' சண்டைக் காட்சிகளை படம் பிடிக்க ரயில்வே துறை அனுமதி மறுப்பு.


ஜூன் 11: குட்ரோச் சியின் வழக்கு செலவுகளை சி.பி.ஐ., வழங்க வேண்டும் என அர்ஜென் டினா நீதிமன்றம் உத்தரவு.


ஜூன் 14: ஐ.மு., கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னாள் ராஜஸ்தான் கவர்னர் பிரதிபா பாட்டீல் அறிவிப்பு.


ஜூன் 15: மகனுக்கு வேலை கேட்டு வந்த விதவையை பீகார் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் முரட்டுத்தனமாக கீழே தள்ளியதால் சர்ச்சை.


ஜூன் 21: பிரமோஸ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.


ஜூன் 22: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற மூன்றாவது அணியின் கோரிக்கையை நிராகரித்தார் கலாம்.


ஜூன் 25: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக ஷெகாவத் மனு தாக்கல்.


ஜூன் 28: முத்திரைத்தாள் மோசடி வழக்கில் அப்துல் கரீம் தெல்கிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை: மகாராஷ்டிரா கோர்ட் தீர்ப்பு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:42 am

உலகம்



ஜூன் 6: ஓமனை தாக்கிய "கோனு' சூறாவளியில் 2 இந்தியர்கள் உட்பட 32க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.


ஜூன் 7: கொழும்பில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெளியேற்றம். வவுனியாவுக்கு மாற்றப்பட்டதாக இலங்கை அரசு தகவல்.


ஜூன் 14: மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு.


ஜூன் 16: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பிரிட்டிஷ் அரசு "சர்' பட்டம்.


ஜூன் 19: சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்திலிருந்து சுனிதா வில்லியம்சுடன் புறப்பட்டது அட்லாண்டிஸ் விண்கலம்.


ஜூன் 24: சதாம் உசேனின் உறவினர் கெமிக்கல் அலி, முன்னாள் ராணுவ தலைவர் உசேன் ரஷீத் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து ஈராக் கோர்ட் தீர்ப்பு.


ஜூன் 27: பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் பதவி விலகல்.

ஜூன் 30: இந்தியாவை சேர்ந்த சுருதி வதேரா, பிரிட்டன் அரசில் சர்வதேச மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக நியமனம்.


* கிளாஸ்கோ விமான நிலையத்தில் குண்டுடன் சென்ற கார் வெடித்தது.


* சர்ச்சைக்குரிய உலகவங்கி தலைவர் பால் உல்போவிச் ராஜினாமா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:42 am

சிறப்பு தகவல்கள்


1. சர்ச்சை வழக்கு

வரதட்சணை வழக்கு போட்ட தனது மனைவிக்கும் வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது என அதிர்ச்சி பேட்டியளித்தார் நடிகர் பிரசாந்த். வேணுபிரசாத் ஒத்துக்கொண்ட போதும், பிரசாந்த் மனைவி கிரகலட்சுமி தொடர்ந்து மறுத்து வருகிறார்.


2. குஜ்ஜார்களின் கோபம்

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் தங்களை பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி சாலை மறியல், ரயில் மறியல் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 4ம் தேதி டில்லியில் "பந்த்' நடத்தினர். பேச்சு வார்த்தை மூலம் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.


3. தமிழகத்தில் நக்சலைட்?

தேனி மாவட்டம் முருகமலையில் பயிற்சிக்கு வந்த 10 தீவிரவாதிகள் பிடிபட்டதை தொடர்ந்து தமிழகத்தில் நக்சல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி., விஜயகுமார் தலைமையில் இதற்காக புதிய போலீஸ் படை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த அச்சம் ஏற்பட்டது.



4. அதிர்ச்சி கொலை

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கார் குண்டு வெடிப்பால் கொல்லப்பட்டார். இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தி.மு.க., வில் நிலவிவரும் கோஷ்டி மோதலே இந்த கோர சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:43 am

தமிழகம்

ஜூலை 1: திருநின்றவூர் பேரூராட்சியின் நான்காவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முருகன் கொலை.


*சென்னையில் தனது பிரசாரத்தை தொடங்கினார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதிபா பாட்டீல்.


ஜூலை 2: கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.


ஜூலை 4: சிசேரியன் சிறுவன் திலீபன் ராஜ் திருச்சி சிறுவர் நீதி குழுமத்தில் சரண். ஜாமீனில் விடுவிப்பு.


* ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு.


ஜூலை 5: கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனுவை ஏற்க மறுத்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் பாலபாரதி எம்.எல்.ஏ., கைது.


ஜூலை 7: பரவலான முறைகேடு களுடன் தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் தொடங்கின.


ஜூலை 9: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஜெயலலிதா மீது சிதம்பரம், புதுக்கோட்டை நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்.


ஜூலை 10: தமிழகத்தில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 நக்சல்கள் கைது.


* ஓமலூர் கூட்டுறவு தேர்தல் மோதல் தொடர்பாக பா.ம.க., எம்.எல்.ஏ., தமிழரசுவை கைது செய்யும்படி தி.மு.க., ஆர்ப்பாட்டம்.


ஜூலை 11: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு.


ஜூலை 15: இந்து திருமணங்களை பதிவு செய்யாவிட்டால் தண்டனை விதிக்க வகை செய்யும் வரைவு சட்டம் வெளியிடப்பட்டது.

* காமராஜர் பிறந்தநாளையொட்டி சத்துணவுடன் வாரம் மூன்று முட்டை வழங்கும் திட்டம் அமல்.


ஜூலை 21: கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் அமைக்க தமிழக அரசு உறுதி.


ஜூலை 22: பாலக்காடு கோட்டத்தை பிரித்து சேலம் ரயில்வே கோட்டம் சுப்ரீம் கோர்ட்டில் கேரளா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.


ஜூலை 23: சென்னை அருகே பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு 50 ஏக்கர் நிலம் வழங்க தமிழக அரசு முடிவு.


ஜூலை 27: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை.


ஜூலை 30: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒப்பந்தம் செய்திருந்த டைட்டானியம் தொழிற்சாலை பொதுமக்கள் கருத்தறிந்த பின்னரே அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
*சேலம் ரயில்வே கோட்ட துவக்க விழாவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:45 am

இந்தியா


ஜூலை 9: பி.எஸ்.என்.எல்., டெண்டரில் முறைகேடு நடந்ததாக தகவல். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராஜா குற்றச்சாட்டு.


ஜூலை 14: ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க மூன்றாவது அணி முடிவு.


ஜூலை 16: மூன்றாவது அணி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., மனு.


ஜூலை 18: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்துல் கனி இஸ்மாயில் துர்க், பர்வேஸ் ஷேக் மற்றும் முஷ்டாக் தரானி ஆகிய மூவருக்கும் தூக்கு.


ஜூலை 19: ஜனாதிபதி தேர்தல் நடந்தது.


* மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அஷ்கர் முகாடம், ஷானவாஸ் குரேஷி, முகமது சோயப் கான்சருக்கு தூக்கு தண்டனை விதித்தது தடா கோர்ட்.


ஜூலை 20: மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புள்ள முகமது இக்பாலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


*ஆந்திர சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாயார் குறித்து முதல்வர் ராஜசேகர ரெட்டி குறிப்பிட்டதால் அமளி.


ஜூலை 24: ஜனாதிபதி பதவியிலிருந்து அப்துல் கலாம் விடைபெற்றார். 2020க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என உறுதி.


*மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஜாகீர் உசேன் ஷாயிக், அப்துல் அக்தர் கான், பெரோஸ் மாலிக் ஆகிய மூவருக்கும் தூக்கு.


ஜூலை 25: போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்த நடிகை மோனிகா பேடி ஜாமீனில் விடுதலை.



ஜூலை 27: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமனுக்கு தூக்கு.


ஜூலை 28: ஆந்திராவில் ஏழைகளுக்கு நிலம் வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலவரமானது. போலீசார் துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் பலி.


ஜூலை 30: மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், அவரது மனைவி, மகன், பேரன் உட்பட ஏழு பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு.


ஜூலை 31: சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த குற்றச் சாட்டில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை: மும்பை தடா கோர்ட் தீர்ப்பு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:45 am

உலகம்



ஜூலை 6: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பயணம் செய்த விமானம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது.


ஜூலை 14: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போனதாக ஆஸ்திரேலிய போலீசார் முகமது அனீப் மீது வழக்கு.


ஜூலை 16: ஜப்பான் பூகம்பத்தில் 5 பேர் பலி. 350க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம்.


ஜூலை 19: பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் பலி.


ஜூலை 20: பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை பதவி நீக்கம் செய்தது செல்லாது என பாக்., நீதிபதி கவுன்சில் தீர்ப்பு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:46 am

சிறப்பு தகவல்கள்


1. அரசியல் மொழி

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ராஜ்யசாபா எம்.பி.,யாக ஜூலை 26ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதுவரை கவிஞராகவே அறியப்பட்ட கனிமொழி, இனி பொறுப்புகள் வழங்கப்பட்டால் ஓடி, ஒளியப்போவதில்லை என அறிவித்தார்.



2. ஆபரேஷன் சைலன்ஸ்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மீது மேற்கொள்ளப் பட்ட கொலைமுயற்சியால் அதிர்ச்சியடைந்தது அந்நாட்டு ராணுவம். பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த லால் மசூதிக்குள் ஆபரேஷன் சைலன்ஸ் என்ற பெயரில் நுழைந்து தாக்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.



3. சஞ்சு பாபாவுக்கு சிறை

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார் சஞ்சய்தத். இவருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி ஜூலை 31ல் தீர்ப்பளித்தது மும்பை தடா கோர்ட். இதனால் இவர் நடிப்பில் தயாராகிவந்த படங்கள் முடங்கின.



. அரசியல் கைது

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராணுவ ஆட்சியாளர்களால் ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக விமர்சிக்கப் பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:46 am

தமிழகம்

ஆக. 1: ஓசூர் அருகே பதுங்கியிருந்த ரவுடி வெள்ளை ரவி போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் சுட்டுக்கொலை.


ஆக. 3: டாடா ஆலை விவகாரத்தின் ஜெயா "டிவி' பங்குதாரர் வைகுண்ட ராஜன் தம்பி ஜெகதீசன் கைது.


ஆக. 6: சீரியல் கில்லர் பில்லூர் ரமேஷூக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.


ஆக.7: சீரியல் கில்லர் ரமேஷுக்கு மற்றொரு வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.


ஆக.9: மேட்டூரிலிருந்து நீர் திறக்கப் பட்டதால் ஈரோடு காவிரி மறுகரையில் இருக்கும் நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.


ஆக.12: மானாமதுரை-ராமேஸ்வரம் புதிய அகல ரயில் பாதை திறப்பு விழா மதுரையில் நடைபெற்றது.


ஆக.13: தமிழகத்தில் கேபிள் "டிவி' சேவையை நடத்த "அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் எனும் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது.


ஆக.14: தென்காசியில் இருதரப்பினருக்கு இடையேயான மோதலில் 6 பேர் வெட்டிக்கொலை.


ஆக.18: சென்னையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.


ஆக.19: ஜெயா "டிவி' பங்குதாரர் வைகுண்டராஜன் மணல் ஆலையில் போலீசார் சோதனை.


ஆக.20: ராஜிவ் பிறந்தநாளை ஒட்டி பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜிவ் பெயர் சூட்டப்பட்டது.


ஆக.24: போயஸ் கார்டனில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த வந்த காங்கிர சாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் எழுந்தது.


ஆக.26: சென்னை மாணவன் பாபுராஜ், வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் வாள் பாய்ந்து பலி. மற்றொரு மாணவன் நாகராஜ் கைது.


*பழநி மலையில் ரோப்கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி.


ஆக.27: தி.மு.க., அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை கோர்ட்டிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.


ஆக.28: இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சியுடனும் தி.மு.க., கூட்டணி வைத்துக்கொள்ளாது என அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவிப்பு.


*அ.தி.மு.க.,வில் பொருளாளர் பதவியிலிருந்து தினகரன் நீக்கம்.


ஆக.29: முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வளர்மதி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக